பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். முழுமையாகப் பாலஸ்தீனத்தைப் பாசிச இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்ததால், இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் மேற்குக் கரைக்கும் காசா முனைக்கும் சுருக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களில் இன அழிப்பு போரைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் காசா முனையிலும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில், பெண்கள் குழந்தைகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காசா முனையிலும் பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்திருக்கும் வெளி மிகவும் சுருங்கியுள்ளது. உணவு, தண்ணீர் எதுவுமின்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் தொற்று நோய்களாலும் குழந்தைகள் இறக்கின்றனர்.
தற்போது காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பாலாஹ் (Deir el-Balah) பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் மக்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது பாசிச இஸ்ரேல் இராணுவம். இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சிறிய பைகள், போர்வைகள், படுக்கைகள், சிறிதளவு உணவு என்று சில அடிப்படை பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
***
இஸ்ரேலின் உத்தரவுக்கு பிறவு, டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்
***
பல பாலஸ்தீன குடும்பங்கள் டெய்ர் எல்-பாலாவின் மேற்குப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
***
பாலஸ்தீனிய பெண்களும் குழந்தைகளும் மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேறும் வாகனங்களில் அமர்ந்துள்ளனர்.
***
தங்கள் தற்காலிக கூடாரங்களை அமைக்கும் காலி நிலத்தை தேடுகின்றனர் பாலஸ்தீனியர்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளும் கிடைக்கவில்லை
***
காசாவின் 2.3 மில்லியன் மக்களில் குறைந்தது 90 சதவீதம் பேர் அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து ஒரு முறையாவது இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
***
டெய்ர் எல்-பாலா மற்றும் கான் யூனிஸ் ஆகியோருக்கான சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் கிரேன்ஜர், “இஸ்ரேல் தொடர்ந்து மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது மனிதாபிமானமற்றது” என்றார்.
***
டெய்ர் எல்-பாலாவில் உள்ள அபு அரீப் மற்றும் அல்-மஸ்ரா பகுதிகளை காலி செய்யுமாறு இஸ்ரேல் ராணுவம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் மீண்டும் இடம்பெயருகின்றனர்.
***
டெய்ர் எல்-பாலாவில் இருந்து கான் யூனிஸுடன் நகரத்தை இணைக்கும் சாலைகளை இஸ்ரேல் இராணுவம் தடுப்பதாக இடம்பெயரும் பாலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர்.
***
இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவால் காசாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலைத்தெரிவித்துள்ளனர்.
***
கடந்த வாரம் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் (UNRWA) காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதிகளை வெறும் 11 சதவீத நிலப்பரப்பாக இஸ்ரேல் குறைத்துள்ளது. இது இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியது.
காசா அரசின் கூற்றுப்படி, கடந்த 2023 அக்டோபர் முதல் தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
கல்பனா
நன்றி: அல் ஜசீரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube