மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை

"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.

காராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி அஷ்ரப் என்பவர் கல்யாண் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இகத்புரி அருகே ரயில் சென்ற போது, அவர் பசு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி, அங்கு வந்த பஜ்ரங் தள் ஆதரவு கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

பின்னர் அதனை விடியோ பதிவு செய்து அவரை மிரட்டியுள்ளனர். அந்த முதியவரைக் காலால் உதைத்துள்ளனர். “நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!” என்றெல்லாம் மிரட்டி உள்ளனர்.

இது தொடர்பாக மஜ்லிஸ் கட்சி (AIMIM) மூத்த தலைவர் இம்தியாஸ் ஜலீல் தனது எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் எப்போதும் வாய் மூடி பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியாது. இந்த சக்திகளை முறியடிக்க மதச் சார்பற்ற இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இவர்களுக்குள் எவ்வளவு விஷம் பரவியிருக்கிறது. தனது தாத்தாவின் வயதில் இருக்கும் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெரியவரை அடித்து மிரட்டி, வீடியோ எடுத்த கும்பல் போலீசுப் பணித் தேர்வு எழுதப் போய்க் கொண்டிருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சட்டத்தின் அதிகாரம் நிறுவப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், அரசாங்க இயந்திரம் வாய்மூடிப் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சி செயலற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.


படிக்க: உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்


மோடி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி உட்பட, சங்கப் பரிவார கும்பலைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து பக்ரித் பண்டிகையின் போது கலவரம், இஸ்லாமிய வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது எனப் பல வகையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மத அடிப்படையிலான கும்பல் படுகொலை, அதாவது முஸ்லீம்களுக்கு எதிரான கும்பல் படுகொலை, புதிய குற்றவியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கும்பல் படுகொலையின் வரம்பில் வராத வகையில் சட்டத்தை இயற்றி உள்ளது மோடி கும்பல்.

ஆனால் தற்போது எதிர்க்கட்சி தலைவர் சட்டத்தின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார். எந்த சட்டத்தின் ஆட்சியை நிறுவச் சொல்கிறார் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கூறுகிறபடி இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை இனிமேலும் இந்த சட்டத்தின் படியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும் வீழ்த்துவது என்பதெல்லாம் மக்களை இந்த பாசிச கும்பலிடம் அடகு வைப்பதாகும்.


மாறன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க