மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9385353605

மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு

னிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது” என்ற மாமேதை மார்க்சின் பொன்மொழிக்கேற்ப, நமது நாட்டை பீடித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கு தன் 64 ஆண்டுகால வாழ்நாளில் பல்வேறு  தியாகங்களை புரிந்துள்ள வ.உ.சி அவர்களின் நெஞ்சுறுதிமிக்க போராட்ட‌க் குணத்தையும், வ.உ.சி என்றவுடன் நம் எண்ணத்தில் எழும் அடைமொழிகளான கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்றவற்றை தாண்டி  ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், பார்ப்பன எதிர்ப்புப் போராளி , பெண்ணுரிமையை தன் சொந்த வாழ்வில் நிலைநாட்டியவர் என இந்த மாபெரும் மக்கள் தலைவர் பற்றி நாம்‌ அறிந்திராத பக்கங்களை‌ எளிய நடையில் இந்நூல் எடுத்துக் காட்டுகிறது .

தொடக்கக் காலத்தில் வழக்குரைஞராக இருந்த அவரது வாதங்கள் பல வழக்குகளை புரட்டியது. அதன்பின் அவரது களப்பணி இந்த சமூகத்தை புரட்டிப்போட்டது ‌. உழைக்கும் மக்களின் இரத்தம் குடித்த அந்நிய ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி ஆளும் கும்பலை நடுங்க வைத்தவர் அவர்.  பிரிட்டிஷிடமிருந்து இந்தியா விடுதலை பெறும்நோக்குடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அரசியல் அடிக்கட்டுமானத்தை நொறுக்குவதற்காக பகத்சிங் போன்ற புரட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், ஏகாதிபத்தியத்தை வீழ்த்த ஆங்கிலேயரின்  பொருளாதார அடிக்கட்டுமானத்தை வேரறுக்க வேண்டும் என்று தென்தமிழகத்தில் இருந்து ஒரு புயல் வீசத் தொடங்கியது . அதில் சிக்கிக்கொண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் திக்கற்றுபோய் அப்புயலை ஒடுக்கமுற்பட்டு கொடூர தண்டனைகளைக் கொடுத்தது.

உயிர்நீத்ததால் மட்டுமல்ல , உரிமைக் குரல் எழுப்பி இறுதி வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தூங்கவிடாமல் துரத்தியடிக்க எண்ணி தனது செல்வம் அனைத்தையும் இழந்தும் உறுதியுடன் நின்றதால் தான் அவர் ஒப்பற்ற மாபெருந்தலைவர் ஆனார் .

இன்று சாதி சங்கங்கள் அனைத்தும் வ.உ.சி யை சாதித் தலைவர் எனும் போர்வைக்குள் சுருக்கிவிட எத்தனிப்பதை தகர்த்தெறிய வேண்டிய‌ கடமை ஜனநாயக சக்திகளாகிய நம் அனைவருக்கும் உண்டு.

மக்கள்விரோத கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் கும்பல்கள் நமது நாட்டின் அனைத்து கட்டமைப்புகளிலும் ஊடுருவி பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. நாட்டு மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை புறக்கணித்து  கார்ப்பரேட்மயமாக்கமும் தீவிரமடைந்துவரும் இன்றைய சூழலில், பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி எதிரியை எதிர்த்த வ.உ.சிதம்பரனாரின் உறுதிமிக்க போராட்டக்குணத்தை நாம் அனைவரும் வரித்துக்கொண்டு இன்று அம்பானி – அதானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் அவர்களுக்கு துணை போகும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி பாசிச கும்பல்களையும் எதிர்த்து வ உ சி யின் வழியில் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதையும், பாசிசத்திற்கு எதிராக இன்னொரு விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரளவும் இந்த நூல் நம்மை அழைக்கிறது!

வெளியீடு : மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936)

வெளியிடுவோர் : மக்கள் அதிகாரம் – நெல்லை மண்டலம்

முதல் பதிப்பு : செப்டம்பர் 2024

நன்கொடை : ₹ 10

தொடர்புக்கு :
தோழர் செல்வம்,
நெல்லை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
9385353605.

வாங்கிப் படியுங்கள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க