உணவகங்களை முறைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அனைத்து கடைகளிலும் உரிமையாளர்கள் தங்களின் பெயர்களை எழுதி கடை முன்னே தொங்கவிட வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சஹாரன்பூரில் ஒரு இளம்பெண் ரொட்டியில் எச்சில் துப்பி விற்பனை செய்ததாகக் கூறி கடை உரிமையாளர் ஆசிப்பை ஷாம்லி போலீசு கைது செய்துள்ளது. அதேபோல், காஜியாபாத்தில் பழரச கடை நடத்தும் சிறுவன் வாடிக்கையாளர்களுக்குப் பழரசத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாகப் பொய்யான குற்றாச்சாட்டின்பேரில் போலீசு அவரைக் கைது செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீப காலமாக சாறு, பருப்பு, ரொட்டி போன்றவற்றில் மனிதக் கழிவுகளைக் கலப்படம் செய்வது என்பது நாட்டின் பல பகுதிகளில் அதிகமாக்கியுள்ளது. இந்த செயல்கள் கொடூரமானவை பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் உணவகங்களை முறைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் உ. பி யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறிய மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், உணவகத்தில் வேலை செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையினை கடைகளின் முன்பாக தொங்கவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
படிக்க: கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்
ஏற்கெனவே கன்வார் யாத்திரையின் போது கடைகளின் முன்னே கடை உரிமையாளர்கள் தங்களின் பெயர்களைத் தொங்கவிட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டிருந்தது. ஏனென்றால் இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டால் மத உணர்வுகள் புண்பட்டு விடுமாம்.
இந்த உத்தரவானது மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி உச்சநீதிமன்றம் யோகி அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போன்றதொரு உத்தரவை உ.பி அரசு பிறப்பித்துள்ளது.
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் கடைகளின் முன்பு கடை உரிமையாளர் பெயர்களை எழுதி வைக்கும்படி உத்தரவிட்டு அதன் அடிப்படையில் யூதர்களின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தினான். அதேபோன்று உ. பி யில் கடைகளின் முன்பு உரிமையாளர்களின் பெயர்களை எழுதி வைப்பதென்பது முஸ்லீம் மக்களின் கடைகளின் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவதற்கே. அதனால் தான் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளது உ. பி யின் யோகி அரசு.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram