மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு குழு (JAAC) மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டி 01.07.2024 முதல் தொடங்கி நடைபெற்று வரும் தொடர் போராட்ட ஒருங்கிணைப்பி‌ற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 05-10-2024 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மதுரை, Poppys ஹோட்டலில் நடைபெற்றது அதில் தலைவ‌ர் திரு.P.நந்தகுமார் அவர்கள் தலைமையிலும், பொதுச்செயலாளர் திரு.K.பன்னீர்செல்வன், பொருளாளர் திரு.D.ரவி, போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு.V.T சின்னராஜ் மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:

  1. கடந்த 28-09-2024 தேதி அன்று வள்ளியூரில் நடைபெற்ற பொதுக்குழுவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டி நடைபெற்று வரும் தொடர் போராட்டதின் அடுத்த கட்ட நகர்வாக சென்னையில் வருகின்ற 09-11-2024 அ‌ன்று தென் மாநில வழக்கறிஞர்களை திரட்டி போராட்ட கருத்தரங்கு கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட தேதியில் பெரிய மண்டபங்கள் கிடைக்காததால் தேதியை மாற்றி வரும் 17-11-2024 ஆம் தேதியன்று தென் மாநில வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கில் தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக்கூட்டம் நடத்துவது எ‌ன்று‌ம், அகில இந்திய அளவில் அடுத்த கட்ட பேராட்டத்தை விரிவுபடுத்தி ஒருங்கிணைக்க தற்போது நடைபெறவுள்ள தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக் கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், JAAC பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கூட்டத்தை வெற்றியடைய செய்யவேண்டும் என்று JAAC கூட்டுக் குழு அனைவரையும் அன்புடன் கே‌ட்டு‌க் கொள்கிறது.
  2. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டி வரும் 17-11-2024 ஆம் தேதியன்று நடைபெற உள்ள தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக் கூட்டத்தை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்த கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி செய்யப்படும் செலவினங்களுக்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்ட நிதியை அ‌ந்த அ‌ந்த சங்க நிர்வாகிகள் தங்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களிடம் நிதியை பெற்று நமது JAAC பொருளாளரிடம் வழங்குமாறு JAAC கூட்டுக் குழு அனைத்து சங்க நிர்வாகிகளையும் அன்புடன் கே‌ட்டு‌க் கொள்கிறது.
  3. மாண்புமிகு நீதிமன்றங்களிடமும், நீதியின்பாலும் கற்றறிந்த வழக்கறிஞர்கள் எப்போதும் மதிப்பும், மரியாதையும், நம்பிக்கை கொண்டு உள்ளார்கள். மாண்புமிகு நீதிமன்றங்களுடன் நல்லுறவு பேணும் வகையிலும், வழக்கு விசாரணைக்கு உதவிடும் வகையிலும் வழக்கு நடத்தவே வழக்கறிஞர்கள் விரும்புகிறார்கள் என்பதை JAAC கூட்டு குழு கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.வில்சன் அவர்கள் தனது வழக்கு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி அவர்கள் வழக்கு விசாரணையில் நடந்து கொண்ட விதம் கற்றறிந்த வழக்கறிஞர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
  4. ஈரோடு மாவட்டம் பவானி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு.குணசேகரன் அவர்களை சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு கொடுங்காயங்கள் அடைந்துள்ளார் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது இது போன்று வழக்கறிஞர்கள் மீது நிகழ்த்தப்படும் சமூக விரோதச் செயல்களை JAAC கூட்டுக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் தொழில் புரியும் இடங்களில், தொழில் சார்ந்த வழக்காடிகள், எதிர் வழக்காடிகளிடம் இருந்தும் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்தும் வழக்கறிஞர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை தடுக்கும் வண்ணம் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று JACC கூட்டுக் குழு வலியுறுத்துகிறது.

P.நந்தகுமார், தலைவர்.

K.பன்னீர்செல்வன்,
பொதுச்செயலாளர்

D.ரவி, பொருளாளர்.

V.T சின்னராஜ்,
ஒருங்கிணைப்புக் குழு தலைவர்.
(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு-JAAC).


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க