ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை அக்டோபர் 22 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

மக்கள் போராட்டத்தையடுத்து 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆலை நிர்வாகம்.

மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு என்பது மக்களின் உறுதியான, ஒற்றுமையான போராட்டத்தின் விளைவாகவே கிடைத்துள்ளது என்பது முக்கியமானது.

ஆனால் இன்னமும் மக்களின் முக்கியமான மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

  1. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும்.
  2. துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான போலீஸ் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.
  3. தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

மக்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் போது மட்டுமே போராடிய மக்களுக்கு நீதி கிடைத்ததாக அர்த்தமாகும். உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படும். இதற்கு உழைக்கும் மக்களாகிய நாம் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது‌. அந்தப் போராட்டத்தில் இன்னும் ஒற்றுமையுடனும், தீரத்துடனும் பயணிப்போம்.

வேண்டாம் ஸ்டெர்லைட்!
வேண்டும் ஜனநாயகம்!


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க