க்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அதானி குழுமத்தினுடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கென்யா நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், அதானி எண்டர் பிரைசஸ் லிமிடெட் (Adani Enterprises Ltd) நிறுவனம், கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் கூடுதல் ஓடுபாதையை உருவாக்குவது, பயணிகள் முனையத்தை மேம்படுத்துவது மற்றும் விமான நிலையத்தை விரிவாக்குவது போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதற்குப் பதிலாக, விமான நிலையத்தை அதானி குழுமம் 30 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Ltd) நிறுவனமானது, கென்யா எலக்ட்ரிசிட்டி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (Kenya Electrisity Transmission Ltd) நிறுவனத்துடன் இணைந்து 736 மில்லியன் டாலர் செலவில் மூன்று டிரான்ஸ்மிஷன் லைன்கள் மற்றும் இரண்டு துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் மாதத்தில் அந்நாட்டில் உள்ள விமான நிலையப் பணியாளர்கள், விமான நிலையத் தொழிலாளர்களுடன் இணைந்து அதானி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக, அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தால் தங்கள் வேலைகள் பறிபோவதுடன், விமான நிலையம் தனியார்மயமாக்கப்படும் என்று தொழிலாளர்களும் மக்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களைக் கென்ய அரசுக்கும், அதானி நிறுவனத்திற்கும் எதிராக முன்னெடுத்து வந்தனர்.


படிக்க: “அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்


இந்நிலையில் கடந்த வியாழன் அன்று (நவம்பர் 21 ஆம் தேதி) அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான எஸ்.இ.சி.ஐ (Solar Energy Corporation of India Limited) சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய மின்வாரிய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (சுமார் 2,100 கோடி ரூபாய்) லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 20,000 கோடி முதலீடு பெற்றுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதானி உள்பட 7 பேருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.

அதன் விளைவாக நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அதிபர் வில்லியம் ரூட்டோ, நாட்டின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு எங்கள் அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது என்று தெரிவித்துள்ளார். எனவே பொது- தனியார் கூட்டின் கீழ் அதானி குழுமத்துடன் 736 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட இருந்த விமான விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

மக்களின் தொடர் போராட்டங்கள் அதிபர் வில்லியம் ரூட்டோவை பணிய வைத்ததோடு கார்ப்பரேட் கொள்ளையன் அதானியையும் நாட்டை விட்டே விரட்டி அடித்துள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க