திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் வேப்பத்தாங்குடி ஊராட்சி வஞ்சியூர் கிராமம் வடக்கு தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் மக்கள் வேலையிழந்துள்ளனர். இவர்களுக்கு விவசாயம் தான் முதன்மையான வேலையாக உள்ளது. இந்த கனமழையால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. படுக்கக் கூட இடம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
அதேபோல் அங்குள்ள வீடுகள் அனைத்தும் 30 வருடத்திற்கு முன்பு இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY) திட்டத்தின் மூலமாகக் கட்டப்பட்ட காலனி வீடுகள். அனைத்து வீடுகளிலும் கசிவு ஏற்பட்டு தூங்குவதற்கு இடம் கூட இல்லாமல் குழந்தைகளுடன் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகளினால் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் இந்த கன மழையால் பாதிக்கப்பட்ட வஞ்சியூர் கிராம மக்களுக்கு உடனடியாக அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குவதற்கு இடமும் தேவைப்படுகிறது. ஆகையால் அரசு இதை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கு. லெனின்,
இணை ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்.
6383461270
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram