விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!

விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும் பணி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பலமுறை அனுமதி கோரியும் போலீசு அனுமதி தர மறுத்துவிட்டது. அதனால் இன்று (30/11/24) தடையை மீறி விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தோழர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அனைத்து தோழர்களையும் போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
7200112838.

***

தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைத்த விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன்!

இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா முதல்வரே?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க