ஃபெஞ்சல் புயலின் தீவிரம்: காலநிலை நெருக்கடியின் விளைவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களும், புயல் கரையைக் கடந்த பின்பு கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களும் பெருவெள்ளத்தில் (flash floods) சிக்கித் தத்தளித்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முந்தைய நாள் இரவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும் தமிழ்நாடு அரசு (புதுச்சேரியைப் பார்த்த பின்னரும்) போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

புயல்களின் போக்குகள் கணிக்க முடியாததாக அதிக அளவில் மாறிவருவதற்கு காலநிலை மாற்றத்தின் பங்கு முக்கியமானது. காலநிலை மாற்றம் பருவநிலையின் இயல்புத் தன்மையையே மாற்றி வருகிறது.

கார்ப்பரேட்டுகள் லாபவெறியால் இயற்கையை வேகமாக அழித்து வருவதால் புவி வெப்பமடைந்து கடல் நீரின் வெப்பமும் அதிகரித்துள்ளது. குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்து பெருவெள்ளங்கள் ஏற்படுவதற்கு இது முக்கியக் காரணமாக அமைகிறது.

இது குறித்து “பூவுலகின் நண்பர்கள்” சுற்றுச்சூழல் அமைப்பினர் கூறியுள்ள கருத்துகள் இடம்பெற்றுள்ள காணொளிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க