டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு நாள் | வேண்டும் ஜனநாயகம்!

கடலூர்

டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளில் கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கடலூர் பகுதி நகர இணை செயலாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மனவளம் குன்றிய – தாழ்த்தப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் தடயங்களை கலைத்த விருதாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகன் இருவரையும் கைது செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

***

உசிலம்பட்டி

டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினம் தமிழ்த் தேச மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதில் ஜனநாயக சக்திகளோடு மக்கள் அதிகாரத் தோழர்கள் சிவகாமு, ஆண்டவர், ரவி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

***

நெல்லை

அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளில்..

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்க களத்தில் இறங்கி போராடுவோம்..

***

காஞ்சிபுரம்

டிசம்பர் – 6 அண்ணல் Dr அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் சார்பாக மாணவர்கள், இளைஞர்களை திரட்டி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் முழக்கமிடப்பட்டது.

இன்றைய சூழலில் ஆர்.எஸ்.எஸ் – பா. ஜ.க பாசிசத்தை நிலை நாட்டும் நோக்கில் செயல்படுவதை எதிர்த்து முறியடிக்க அம்பேத்கரின் கருத்துக்களை நாம் பயில வேண்டும் என்ற உணர்வோடு கருத்துகள் பகிரப்பட்டது.

மாணவர்கள் – இளைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பாசிசத்தை முறியடிக்க உறுதியெடுத்துக் கொண்டனர்.

தகவல்
புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
ஆக்சில்ஸ் இந்தியா கிளை,
காஞ்சிபுரம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க