டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம்

டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் 09/12/202 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் பல்லுயிர் பாரம்பரிய தலமான அறிவித்துள்ள பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அரிட்டாபட்டி சுற்றியுள்ள பகுதிகளின் நிலங்களை நவம்பர் 7 ஆம் தேதி வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது ஒன்றிய அரசு. டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் ஜனநாயக சக்திகள் அரசியல் கட்சிகள் அனைவரும் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் கிராம சபைக்‌ கூட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

நவம்பர் 22 ஆம் தேதி டங்ஸ்டன் எதிர்ப்பு தெரிவித்து முதலில் கூடிய அரிட்டாபட்டி கிராம மக்கள். நவம்பர் 26 ஆம் தேதி டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக மக்கள் அழகர் கோயிலில் 48 கிராம மக்கள் ஒன்று கூடினர். நவம்பர் 28 ஆம் தேதி அ.வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு ஒன்று கூடிய மக்கள் கூட்டம். நவம்பர் 29 ஆம் தேதி மேலூர் பென்னி குயிக் பேருந்து நிலையம் அருகில் முல்லை பெரியார் ஒரு போகப் பாசன விவசாயச் சங்கம் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம். தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று கடிதம் எழுதி உள்ளார். அதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு கருத்துக்கள் கூறினார்கள்‌. டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரக்கூடாது என்று தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் 09/12/202 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி ஒருவர் எங்களைக் கொன்றாலும் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தைக் கொண்டு வர விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறியது கூடியிருந்த மக்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் கலந்து கொண்டு பாசிச மோடி அரசைக் கண்டித்து குரல் எழுப்பினார்கள்.

மதுரை மக்கள் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக உறுதியான மக்கள் போராட்டம், அரசியல் கட்சிகள், இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் முதல் கட்டமாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியாகப் போராடி டங்ஸ்டன் கனிம சுரங்கத்தைத் தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்போம்.

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்.


இவண்:
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
மதுரை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க