திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் ஏலங்குடி, ஆலங்குடி, தென்கால், ஆனைவடபாதி, ஓச்சேரி கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஊர் ஜனவரி 7 அன்று பொதுமக்கள் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையாக இலங்குடி கலியமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஒக்கக்குடி சேகர், அக்கரை நடுத்தெரு கபிர்தாஸ், ஏலங்குடி வீராச்சாமி, தென்கால் வீரப்பன், மோகன், புனிதா, ராமச்சந்திரன், பன்னீர், அரசு, ஆலங்குடி ரவி, வடபாதி பக்கிரி சாமி மாதவன், தென்பாதி மோகன், காளியம்மன் கோவில் தெரு நடராஜன், மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத், மக்கள் அதிகார மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின், மாவட்ட பொருளாளர் தோழர் முரளி, தோழர் அஜித் மற்றும் அனைத்து கிராம பெண்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசாத் அவர்கள் நகராட்சியுடன் அம்மையப்பன் கிராமத்தை இணைத்தால் அங்கு இருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை இழப்பார்கள். இதனால், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறிவிடும் என்றும் குறைந்த ஊதியத்திற்காக 100 நாள் வேலைகள் கிராமம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள் அதுவும் அழிக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.
மேலும் நகராட்சியுடன் இணைப்பதனால் மக்கள் மீது அதிக வரிகள் சுமத்தப்படும் என்ற சூழலை விளக்கிப் பேசினார். “ஏற்கெனவே நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மோசமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் அருகே உள்ள நகராட்சியைச் சேர்ந்த அழகிரி காலனி போன்ற பகுதிகளில் இன்னும் பாதாளச் சாக்கடை கூட அமைக்கவில்லை” என்றும் ”இருக்க கூடிய நகராட்சியை மேம்படுத்தாமல் அதை விட்டுவிட்டு இந்த அரசாங்கமானது மேலும் இருக்கக்கூடிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைச் செய்கிறது. ஏதோ ஒரு குறைந்தபட்சமாக விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை அழித்துவிட்டு அதையும் நகராட்சியுடன் இணைக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த நாசகர திட்டத்தைக் கைவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி போராட்டத்தை வலுவாகக் கட்டியமைப்போம் “என்று பேசினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram