ஜனவரி 15 அன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த மக்களில் சிலர் “அரிட்டாபட்டியை காப்போம்” (SAVE ARITTAPATTI) என்ற பதாகையை ஏந்தியிருந்தனர். அவர்கள் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மத்திய அரசு அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பைக் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சார்பில் மேலூரில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. போலீசு அனுமதி மறுத்த நிலையிலும் இப்பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
பேரணியைத் தொடர்ந்து தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகையை வைத்து மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
#VIDEO || டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு: பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு போஸ்டருடன் வந்த கிராம மக்கள்!
#Tungsten | #Arittapatti | #PalameduJallikattu2025 | #Madurai | #Pongal2025 pic.twitter.com/ftPr9YfKYG
— Indian Express Tamil (@IeTamil) January 15, 2025
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram