திருப்பரங்குன்றம்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்கா வழிபாட்டுரிமையை திமுக அரசின் போலீஸ் தடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

19.01.2025

திமுக அரசே! தமிழ்நாட்டை ஆர்எஸ்எஸ் – இடம் அடகு வைக்காதே !

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுப்போம்!

கண்டன அறிக்கை

திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில், ஆடு, கோழி சமைத்துக் கந்திரி கொடுக்கும் வழக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றது.

சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டுரிமை கொடுக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.

நேற்றைய தினம் வழக்கம்போல சிக்கந்தர் தர்காவுக்கு உணவு சமைத்து சாப்பிட சென்ற இசுலாமிய மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு,  மக்களின் உணவு அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய மக்களை மட்டும் போலீசு கடும் சோதனைக்கு பிறகு தர்காவிற்கு அனுப்பியுள்ளது

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்கா வழிபாட்டுரிமையை திமுக அரசின் போலீஸ் தடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுரிமையை உடனடியாக தமிழ்நாடு அரசு நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் அருகருகே இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல் போலீசின் உதவியுடன் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்த போலீசு அதிகாரிகள் அத்தனை பேரும் உடனடியாக நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இசுலாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டு அவர்கள் சிறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. இஸ்லாம் தோன்றியது கி.பி.8ம் நூற்றாண்டில். சேயோன் முருகன் கடவுளாக தமிழர்கள் வழிபாடு சங்க காலந்தொட்டு உள்ளது. இதில் முருகன் மலையை அபகரிக்க நினைப்பது யார்? சிக்கந்தர் தமிழரா? பாண்டிய மன்னரால் கொல்லப்பட்ட தீவிரவாதி அவன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க