25.01.2025
வேங்கை வயல்:
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கை
உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடத்துக!
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும்
சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
பத்திரிகை செய்தி
வேங்கை வயல் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவினை கலந்த குற்றவாளிகளை போலீசு ஈராண்டுகள் ஆகியும் ஏன் கைது செய்யவில்லை என்று தொடர்ந்து நீதிமன்றம் கண்டித்து வந்தது.
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது தொடர்பாக கடந்த 20-ஆம் தேதியன்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு எதிராக பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே தலித் இளைஞர்கள் குற்றத்தை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்குற்றவழக்கு தொடர்பாக ஆதிக்க சாதியினரை விசாரிக்காத சிபிசிஐடி, தலித் மக்களை குற்றவாளியாக்க முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து நாம் பதிவு செய்திருக்கிறோம்.
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது. சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளின் மேற்கண்ட நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே தமிழ்நாடு அரசு, இவ்வழக்கை சிபிசிஐடி போலீசிடம் இருந்து திரும்ப பெற்று உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram