திருப்பரங்குன்றம்: இந்து முன்னணியைத் தடை செய்! | மனு அளித்த ஜனநாயக சக்திகள்

தமிழ் மக்களை இழிவுபடுத்தி மதக் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியின் பாடலை தடை செய்!

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பேசிய எச். ராஜாவைக் கைது செய்!

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடு! கைது செய்!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மக்களை மிரட்டும் பி.ஜே.பி கும்பல் மற்றும் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் ஆகியோரை கைது செய்!

என்ற முழக்கங்களின் அடிப்படையில் நேற்று (பிப்ரவரி 10) காலை 10.30 மணியளவில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகள் வழக்கறிஞர்கள் சார்பாக மதுரை போலீசு ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

இதில் திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேச மக்கள் முன்னணி, பெண்கள் எழுச்சி இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்து கூட்டாகப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்த நிகழ்வும் இணைந்து நடந்தது. இந்த ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளும் வழக்கறிஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிறகு ஜனநாயக சக்திகள் இணைந்து புகார் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக போலீசு ஆணையர் தெரிவித்தார். வந்திருந்த இயக்கங்களும் தோழமைகளும் நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிப்படக் கூறியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க