தோழர் சிங்காரவேலர் 165ஆவது பிறந்தநாள் கூட்டம் | வேண்டும் ஜனநாயகம் | நெல்லை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே !

தோழர் சிங்காரவேலர் அவர்களின் 165ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18 அன்று தூத்துக்குடி சிலுவைபட்டியில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக ”வேண்டும் ஜனநாயகம்” பிரச்சார இயக்கத்தைத் தெருமுனைப் பிரச்சார வடிவத்தில் பகுதி வாழ் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றோம்.

இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் செயலாளர் தோழர் தாளமுத்துசெல்வா சிங்காரவேலர் பற்றியும், இன்றைய பாசிச சூழல் பற்றியும் தனது தலைமை உரையில் பேசினார். நெல்லை மண்டல துணைச் செயலாளர் தோழர் தமிழ் வேந்தன் வேண்டும் ஜனநாயகம் என்று ஏன் சொல்கிறோம் என்கிற கருத்தை முன்வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை மண்டலம் பொருளாளர் தோழர் சந்துரு கூட்டத்தை ஒழுங்கமைத்து எடுத்துச் சென்றார்.

இக்கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சுஜித், AICCTU மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜித், திராவிடர் கழகம், வழக்குரைஞர் அணி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் திரவியம் ஆகியோர் பாசிசத்தை வீழ்த்த வேண்டியதன் நோக்கம் குறித்து உரையாற்றினர். மே17 இயக்க மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அருண், தூய்மை பாரத ஓட்டுநர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர் பொன்ராஜ் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டு பாசிச எதிர்ப்பில் தமது பங்களிப்பை முன்னகர்த்தி சென்றனர்.

பேச வேண்டிய மக்கள் பிரச்சனைகள் பல்லாயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்க, பேசாமல் அனைவரும் மௌனமாய் கடந்த வேளையில் நமது மக்கள் அதிகாரம் அமைப்பு ”வேண்டும் ஜனநாயகம்” என்று மக்களுக்கான அதிகாரத்தை முன்வைத்து, பாசிசத்தை வீழ்த்துகின்ற வழியை மக்கள் முன் எடுத்துச் சென்றது. சுற்றிலும் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பகுதி வாழ் உழைக்கும் மக்கள், சிறுகடை வியாபாரிகள் ஆகியோர் தோழர்கள் பேசிய கருத்தை உள்வாங்கி கூட்டம் முடிந்ததும் தங்களுக்குள் இது பற்றிப் பேசிக் கொண்டதும், தோழர்களிடம் இது பற்றி உரையாடியதும் சிறப்பானதாக அமைந்தது. இதன் வழியாகக் கூட்டத்தின் நோக்கம் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது.

கூட்டத்தின் தொடக்கத்தில் புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டதும், ”வேண்டும் ஜனநாயகம்” பிரசுரம் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டதும், முகநூலில் நேரலை செய்ததும் இக்கூட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

பதிவு
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க