16.02.2025

அமெரிக்காவின் அடிமை;
ஆனந்த விகடனுக்கு அரசனா?

கண்டன அறிக்கை

புலம் பெயர்ந்தவர்களுக்கு எவ்வித உரிமையும் அளிக்காமல் கைகள் மற்றும் கால்களில் விலங்கிட்டு இராணுவ விமானத்தில் அந்தந்த நாடுகளில் வீசி எறிகிறார் அமெரிக்காவின் பாசிஸ்ட் ட்ரம்ப். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன தென் அமெரிக்க நாடுகள்.

நூற்றுக்கு மேற்பட்ட இந்தியர்களை ராணுவ விமானத்தில் கொண்டு வந்து குப்பைகளைப் போல கொட்டியது மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் கை கால்களை கட்டி இராணுவ விமானத்தில் அனுப்புவது தான் அமெரிக்காவின் பழக்கம் என்று நாட்டு மக்களுக்கு வேடிக்கை சொல்கிறது பாசிச மோடி – அமித் சா கும்பல்.

உலக நாடுகளில் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது.

இதை வெளிக்காட்டும் விதமாக விகடன்  இதழில் நரேந்திர மோடியின் கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டது போல ஓவியம் இடம்பெற்றிருந்தது. அது தொடர்பாக அண்ணாமலை எல் முருகனிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் 10 மணி நேரத்தில் ஆனந்த விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின்  அடிமையாக கெஞ்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆனந்த விகடனுக்கு அரசனாக இருந்து தடை விதித்து இருக்கிறார். ஆர் எஸ் எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் ஊடகங்கள் தொடர்ந்து அடக்கு முறையை சந்திக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே ஆனந்த விகடன் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது.

இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக ஆனந்த விகடன் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க