ஜூலை 9, 2025: அகில இந்திய வேலை நிறுத்தம்!
தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!
ஒன்றிய அரசே!
- 44 தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு விதிகளை வாபஸ் வாங்கு. திணிக்காதே!
- நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம், பணி நிரந்தர உரிமைகள் வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்!
- அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், F.T.E , NAPS என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் நிறுவன CEO முதல் HR வரையிலான கும்பலை சிறையில் தள்ளு!
- கசக்கி பிழியும் OT – யை ரத்து செய்து விட்டு, தினசரி 8 மணி நேர வேலையை உத்திரவாதம் செய்!
- காண்ட்ராக்ட், CL தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 35 ஆயிரமாக உயர்த்து, மாதந்தோரும் அகவிலைப்படி (DA) உயர்வை வழங்கிடாத HR களை சிறையில் தள்ளு!
- கேன்டீன் முதல் பஸ், சீருடை, பாதுகாப்பு சூ வரை பாகுபாடு காட்டி பிரிக்கும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடு!
- இலாப வெறியால் சட்டவிரோதமாக, கண்மூடித்தனமான வேலைப்பளுவை திணிக்கும் கம்பெனி HR , காண்ட்ராக்ட் ஓனர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளு!
- கார்ப்பரேட் உற்பத்தி முறைக்கு ஏற்ற சரிவிகித சத்தான உணவு, உடல் – மன நலன் உத்திரவாதம் செய்!
- மாத சம்பளம் 15 ஆயிரம் மட்டும் என காண்ராக்ட், CL தொழிலாளர்களை ஏமாற்றி சொத்து குவிக்கும் கம்பெனி, காண்ராக்ட் ஓனர், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
- ESI மருத்துவ வசதிகளை மேம்படுத்தி, விரிவுபடுத்து!
- PF சேமிப்பான 15 லட்சம் கோடியை முதலீடாகக் கொண்டு, தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வசதியை அறிமுகப்படுத்து!
- அரசியல் – பொருளாதாரம், அரசமைப்பு சாசனம் – சட்டம் குறித்த புரிதல் இல்லாத நிரந்தரத் தொழிலாளர்களை பிரிவு 18/1 , பிரிவு 12/3 ஒப்பந்தங்கள் என்ற பெயரில் ஏமாற்றி சுரண்டும் CEO-HR, தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்கங்க தலைவர்களை சிறையில் தள்ளு!
- தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் அரசு முதல் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு. சொத்துக்களை பறிமுதல் செய்!
- கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியால் ஆண்டுதோரும் உயர்த்தப்படும் 10-15% விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து!
- DA கணக்கீட்டை கட்டுப்படுத்தும் 2021 ஆண்டு சட்ட திருத்தத்தை வாபஸ்வாங்கு!
- பலமுனை வரித்தாக்குதலை நிறுத்து. மேலும், வருமான வரி வரம்பு 10 லட்சமாக உயர்த்து!
- ஜனவரி 2021 – ல் விவசாயிகளிடம் ஒப்புக் கொண்டபடி வேளாண் விளைபொருளுக்கு விலையை பேசி நிர்ணயம் செய்!
- கார்ப்பரேட்கள் மட்டும் கொழுக்கும் தனியார் மயக் (WTO) கொள்கையை வாபஸ் வாங்கு. அரசின் தோல்வி ஒப்புக் கொள்!
- கடந்த 2014 மே மாதத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக் குவிப்பு, வளர்ச்சியை கணக்கெடுப்பு நடத்து!
- சிறு – குறுந்தொழிலை சூறையாடும் GST வரி – கட்டுப்பாடுகளை நீக்கு !
- மக்களின் கழுத்தை நெரிக்கும் பெட்ரோல் – டீசல் வரிக் கொள்கை மாற்று!
- காடு, மலை இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்களை வெளியேற்று!
- மொத்த மக்கள் – தொழிலாளர்கள் சிந்திக்கவோ, நலமுடன் வாழ்ந்திடவோ கூடாது என்பதற்காகவே திணிக்கப்படும் புதிய (WTO)கல்விக் கொள்கை – மருத்துவம் – தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்களை வாபஸ் வாங்கு!
- ஒரே நாடு – ஒரே தேர்தல் என மக்களின் கவனத்தை திருப்பி விட்டு, கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதை நிறுத்து!
- மொத்தத்தில் நாட்டின் 150 கோடி மக்களின் நல்வாழ்வு – பாதுகாப்பு – வளர்ச்சி மீது கொஞ்சமாவது கவனம் செலுத்து!
– தொழிலாளர் விழிப்புணர்வு சிந்தனைகள்