அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு

முதலாளித்துவ சுரண்டல்கள் – அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!

ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?

* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!

* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு… இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!

கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!

* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70% செல்வத்தை குவித்து வைத்துள்ளனர். 90% உழைக்கும் மக்களது குடும்பங்கள் சர்வதேச வாழ்க்கைத்தரத்துக்கும் கீழாக இருக்கின்றன!

* முதலாளிகள் தொழில் தொடங்க 29 தொழிலாளர் சட்டங்கள் ஒழிப்பப்பட்டு அவை வெறும் 4 சட்ட நடைமுறைத் தொகுப்புகளாக ( 4 Labour Codes ) மாற்றப்பட்டுள்ளன!

* சட்டம் என்றிருந்தால் உரிமைக்காகப் போராட முடியும்.ஆனால், நடைமுறைத் தொகுப்பு என்பது முதலாளிகள் விரும்பினால் மட்டுமே அமலாக்க முடியும்!

* தொழிற்சங்கப்பதிவு, அதை நடத்தும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகியவற்றை முதலாளிகள் நினைத்தால் ரத்து செய்ய முடியும்.முதலாளிகளை தட்டிக் கேட்க தான் அரசாங்கத்துக்கு ‘அதிகாரம்’ இல்லை!

* பணியிடப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு – இவற்றை முதலாளிகள் மதிக்க வேண்டியதில்லை!

* நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலை என்பதை நாளொன்றுக்கு 12 மணிநேரம் ஆக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

* 12 மணிநேர வேலை என்பது தொழிலாளியின் ஓய்வை பறிப்பதோடு தொழிலாளியை அற்ப வயதில் சாகடிப்பதாகும்!

* ஆலை சார்ந்த தொழிலாளர்கள் 10% என்றால், எஞ்சிய 90% உழைப்பாளிகள் அமைப்புசாராத் தொழிலாளர்கள். இவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிது. வேலைக்கேற்ப கூலி கிடைப்பது அரிதிலும் அரிது. சமூகப்பாதுகாப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை!

* உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை என பல இலட்சம் கோடிகளை வாரி இறைக்கும் அரசுகள், அந்த முதலாளிகள் வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என்று சோதிப்பதில்லை! எல்லா பணமும் நமது வரிப்பணம்!

* சில ஆயிரம் கடனுக்காக விவசாயிகளின் அற்ப உடமைமைகளை ஜப்தி செய்யும் அரசு வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகளுக்கும் மேலாக கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதுவும் நமது பணம்!

* கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக தொழிலாளர் நலச்சட்டங்கள் மட்டுமின்றி வனச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்டவை மாற்றப்படுகின்றன – நீர்த்து போக வைக்கப்படுகின்றன!

* இது வரை குற்றமாக அறிவிக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் குற்றமல்லாத; வெறும் அபராதத்துடன் அனுமதிக்கக்கூடிய பிழைகளாக்கப்படுகின்றன!

* மறுபுறத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கங்க முன்னோடிகள் மீதான அடக்குமுறைகள் தீவிரமாகின்றன.ஏற்கனவே இருக்கும் ஊ….பா போன்ற கொடிய சட்டங்களோடு இந்திய தண்டனைச் சட்டம் (BNS) பிரிவு 111 மூலம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டுள்ளன!

* 3 விவசாய சட்டங்களை கைவிடுவதாகச் சொன்ன ஒன்றி அரசின் வாக்குறுதியும், குறைந்தபட்ச ஆதாரவிலை தீர்மானித்தலும் காற்றோடு போய்விட்டன!

* நாட்டின் இயற்கை/ கனிம வளம், மனித வளம், தொழில்வளம் ஆகிய எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுத்த அரசு, பொதுத்துறை நிறுவனங்களை முற்றும் முழுதாக அழிக்கத்துடிக்கிறது!

* ஏற்கனவே தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றில் தனியாரை அனுமதித்து பொதுத்துறை நிறுவனங்களை அழித்த அரசு, ரயில்வே, இராணுவ தளவாட உற்பத்தி போன்ற கேந்திரமான சேவைகளை கார்ப்பரேட்டுகளுக்கு பலிகொடுக்க கையாளும் புதிய உத்திக்குப் பெயர் கார்ப்பரேசன்களாக்குதல்!

* முன்னொரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பொதுத்துறைகள் இன்று செயற்கையான நட்டக்கணக்கில் தள்ளப்படுகின்றன!

* ரூ.200 இலட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்தியாவின் வங்கித்துறை ஊழியர் பற்றாக்குறை, வாராக்கடன்கள் அதிகரிப்பால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.இவை வீழ்ந்தால் இந்தியா திவாலாகி விடும்!

* வேலைவாய்ப்பை உருவாக்காத அரசும்,கார்ப்பரேட்டுகளும் கல்வித்துறையை கபளீகரம் செய்து காயடிக்கப்பட்ட பட்டதாரிகளையே உருவாக்குகின்றன!

* விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சலம் என்று பெயர் வைத்தது போல, மாணவர்களின் சுயத்தைப் பறிக்கும் கல்விக்கொள்கைக்கு தேசிய கல்விக் கொள்கை என்று பெயர் சூட்டி திணிக்கின்றனர்!

என்ன செய்ய வேண்டும்?

* ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத செயல்களது பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது…இதற்கு காரணமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளை அடித்து நொறுக்குவோம்!

* ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை பாட்டாளி வர்க்கமாக ஒன்றிணைப்போம்!

ஜூலை 9 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு: ஆ.கா. சிவா, ஒருங்கிணைப்பாளர்.

முகவரி: நெ.1, குமரன் தெரு, சோழன் நகர், பட்டாபிராம்,
சென்னை-72 செல் : 7397404242

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க