வினவு
மீனவர்கள் துயர் துடைப்போம் ! – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்
அப்பா எங்கே? என கேட்கும் குழந்தைகளோடு தாய்மார்கள் கண்ணீரில் கதறுகிறார்கள். பிற மக்களின் மீன் தேவைகளை கடலோர கிராம மீனவ மக்கள் தான் நிறைவு செய்கிறார்கள். மீன்பிடித் தொழில் கம்பெனிகள் கையில் சென்றால் நமக்கு மீன் இல்லை. மீனவர்கள் துயரம் நமது துயரம்.
மீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள் !
ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.
Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !
மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.
இன்று PRPC – 14வது ஆண்டுவிழா ! அனைவரும் வருக !
மொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்கள் எங்கு செல்வது? மாற்று என்ன?
உடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் – தூத்தூர் மக்கள் – வீடியோ
30 -ம் தேதி சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. கேடுகெட்ட மத்திய மாநில அரசுகள்.
குமரி : நிவாரணம் வேண்டாம் உயிர்களைக் கொடு ! – காணொளி
குமரி மாவட்டம் பூத்துறை கிராமம், உள்ளிட்ட 8 கிராமங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன. அங்கிருந்து பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திரும்பவில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரின் கதியும் என்னவெனத் தெரியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள் மக்கள்.
Live: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை !
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம்.
சென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு!
"நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்?"
ஆற்று மணலோடு கடல் மணல் கலப்படம் – கண்டன ஆர்ப்பாட்டம் !
மணல் மாபியா கும்பலின் இலக்கு நடுத்தர மக்கள் கட்டுகின்ற வீடுகள் தான். அவசரம் எனக் கேட்கின்றவர்களையும், மணலுக்கு பணம் தவணை முறையில் தந்தால் போதும் என ஆசை வார்த்தை கூறி இந்த நாசகர மணலை சப்ளை செய்து கொள்ளையடிக்கிறார்கள்.
அம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !
மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 06.12.2017 அன்று நடைபெற்றது.
அஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! – குடும்பத்தினர் கதறல்
“அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர்.
ராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !
இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி “லவ் ஜிகாத்” எனும் பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
பேரிடர்மீட்புக் குழுக்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் வரியில் கொழுத்த கடலோரக் காவல் படை கடற்கரை எங்கும் குவிந்துள்ளது இருப்பினும் இவை எவையும் மீனவர்களை மீட்க செல்லாதது தற்செயலானதா?
ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !
அன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.
சோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் – முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !
ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது.