விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று இரண்டு நாட்களில் கைது செய்து வரும் காவல்துறைக்கு 15 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடப்பதை பற்றி தெரியாதா?
இதற்கு பொறுப்பான கலெக்டர் தாசில்தார் விஏஓ உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே...
பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது.
மேலும்..
https://www.youtube.com/watch?v=wH4mUrIfvck
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை கற்போம்! | Communist Manifesto | தோழர் ஆ.கா.சிவா
வினவு செய்திப் பிரிவு - 0
பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் விடுதலைக்கான ஒரு கலங்கரை விளக்கம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.
மேலும்
https://www.youtube.com/watch?v=2SMv5VaGF-Y
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்!
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=lniEZL_SWZY&t=6s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்!
தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது.
அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள்.
மேலும்..
https://www.youtube.com/watch?v=Yy9ARdr96U0
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது.
https://www.youtube.com/watch?v=fU2c6vg5ZVM&t=9s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தமிழ்நாட்டின் எதிரி யார்? சீமானா? வடக்கனா? | தோழர் வெற்றிவேல்செழியன் வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
வட மாநில தொழிலாளர்கள் யார்? நமது தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்டுமானங்களிலும் அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரத்தமும் சதையும் அதில ஒட்டி இருக்கிறது. ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றார்கள். ஒரு சகமனிதன் அதைப் பார்த்துக் கொண்டு இனவாதம் பிடிவாதம் பேச முடியுமா? அதை பேசுபவன் தான் இந்த இன வெறி பிடித்த சீமான். ஒரு சக தொழிலாளி இப்படி ஆடு மாடுகளைப் போல மோசமாக நடத்தப்படுகிறானே என்ற கோபம் ஏன் அவருக்கு வரவில்லை என்றால், அவர்...
சிவராத்திரி விழாவிற்கு முர்மு: பாஜகவின் அடையாள அரசியல்! | தோழர் ரவி | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
குடியரசு தலைவர் பழங்குடியின பெண் என்று கூறி அடையாள அரசியல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. காடுகளை அழித்து மிக பிரம்மாண்டமான கோவிலை கட்டி இருக்கிறார் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். காடுகளை பாதுகாக்கும் பழங்குடி மக்களின் இருந்து வந்த முர்மு காடழிப்பு செய்த கார்ப்பரேட் சாமியார் நடத்தும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். இதுதான் பாசிச பாஜகவின் அரசியல். இதனை பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் சாமியார் ஜக்கி இன்னும் பல்வேறு காடுகளை அழித்து கோவில்களை கட்டுவார்.
https://www.youtube.com/watch?v=jiJNnofyTrU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
தோழர் ரவி
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.
சீமானும் நெடுமாறனும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் தான். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் அஜண்டாவைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலே யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எப்போதெல்லாம் இந்த ஆளும்வர்க்கம்(ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிஸ்டுகள்) அம்மனமாகி நிர்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களை பாதுகாக்க வருகிறார்கள் இவர்கள்.
மேலும்
https://www.youtube.com/watch?v=OLvDFhTU3po
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காவி...
அயலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்த பல சாஸ்திர, சம்பிரதாயங்களை திணித்து வருகின்றனர். அண்மையில் கேரள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இன்றுவரை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போகமுடியாத சூழ்நிலையே உள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியது அது கடவுளால் உருவாக்கப்பட்டது இல்லை; ஆண் பெண்...
மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி என்ன என்று மாற்றி பேசுவது,...
ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
அன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது.
எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள்...
பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே!
திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
https://www.youtube.com/watch?v=6o7nsXh9RtQ&t=10s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!