Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 15

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15-30 ஏப்ரல், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 11 | 1989 ஏப்ரல் 15-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நேபாளத்துக்கு எதிராக இந்தியப் பொருளாதார முற்றுகை – இன்னொரு பிராந்திய ஆதிக்க – விரிவாக்க நடவடிக்கை
  • இலங்கை: தொடரும் வெகுஜனப் படுகொலை
    திசை திருப்ப சமாதான நாடகம்
  • சாதிவெறிக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடும் கலப்புமணத் தம்பதிகளின் கதை!
  • கீழ்வெண்மணி வழியில் கரம்சேடு: ‘அரிஜன’ங்களைக் கொன்ற நிலப்பிரபு அழித்தொழிக்கப்பட்டான்!
  • இந்திய – சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    சீனா பதிலடி தந்தது; இந்தியா சீண்டியது: படைகளைப் பலியிட்டு தளபதி தப்பி ஓட்டம்!
  • ’ஐயா! என்னைக் கொல்ல சதி!’ கொலைகாரர்கள் சதிகாரர்கள் அலறல்!
  • பழிவாங்குதல், மிரட்டல், பொய் வழக்கு, கொத்தடிமைத்தனம்!
    டி.வி.எஸ். நிர்வாகத்தின் அட்டூழியம்!
  • கட்டணக் கழிப்பிட ஊழல்: பினாமிகள் மூலம் அதிகார வர்க்கம் அடிக்கும் கொள்ளை!
  • குழந்தைகளுக்கு ‘முட்டை’! அமைப்பாளருக்கு சத்துணவு!
  • மின்வெட்டு ஏன்?
  • பனிமலையில் தொடரும் இன உரிமைப் போர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்

சூழலியல் நெருக்கடி, சூழலியல் சீர்கேடுகள் குறித்து தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் வெளிவந்துள்ள நூல்கள் மிக அரிதே .அந்த வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ,விடியல் பதிப்பகம் கொண்டுவந்த “மார்க்சும் சூழலியலும்” என்ற நூல் மிகவும் முக்கியமானது. ஏறக்குறைய அதற்குப் பிறகு சூழலியல் பிரச்சினையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் கையாளும் வகையில் வெளி வருகின்ற ஒரே நூல் “சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்” என்ற இந்த நூலகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரையான “சூழலியல் நெருக்கடி: ஏகாதிபத்தியக் கட்டமைப்பைத் தகர்த்து சோசலிசத்தை நிறுவுவதே தீர்வு”, சூழலியல் நெருக்கடியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிறது.

முதலாளித்து உற்பத்தி முறைதான் இயற்கையிலிருந்து பிரிந்த பொருளுற்பத்திக்கு அடிப்படையானதாகும். இதுதான் சூழலியல் நெருக்கடியின் ஊற்றுக்கண்ணாகும்.

அந்த வகையில், சமகால சுற்றுச்சூழல் நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மனித குலத்தை பாதுகாக்கவுமான அடிப்படையை இக்கட்டுரை விளக்குகிறது.

இத்துடன் சூழலில் நெருக்கடி தொடர்பாக சமகால நிகழ்வுகள் சிலவற்றையொட்டி புதிய ஜனநாயகம் இதழிலும் வினவு இணையதளத்திலும் வெளிவந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக நெருக்கடிக்கு காரணமான முதலாளித்துவமும் அதன் அரசுகளும் மக்களை பாதுகாப்பதில் சிறிதும் பொறுப்பும் அக்கறையும் இன்றி இருப்பதை இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சூழலியல் நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தாமே சுமக்க வேண்டிய நிர்கதியான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதையும் இக்கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளின் தலைமையில் நடைபெறும் சி.ஓ.பி எனப்படும் “கிளாஸ்கோ பருவநிலை மாநாடு” என்ற ஏகாதிபத்திய அரட்டை மடத்தின் உண்மை முகத்தை இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.

முதலாளித்துவத்தாலும் சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்தியங்களாலும் அவற்றின் அடிவருடி அரசுகளாலும் எந்தவகையிலும் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வைத் தரமுடியாது. சோசலிசத்தாலும் அதனால் வழிநடத்தப்படுகின்ற உழைக்கும் மக்கள் அரசுகளாலும்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

சூழலியல் நெருக்கடிக்கு எதிராகவும் இயற்கையைப் பாதுகாப்பதற்காகவும் போராடுபவர்களுக்கு இந்நூல் சிறந்த தொடக்கநிலை நூலாக அமையும்.

நூலின் பெயர்: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049

தொலைபேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை: ரூ. 100

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | நூல்

1990-களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற நாசகரக் கொள்கையின் விளைவாக தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை வளர்ந்து, ரிசர்வ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் பெருகியுள்ளது. நவீனமயமாக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவாக இந்தியத் தொழிலாளர்களின் ஊதிய சராசரி தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ.) டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (ஐ.ஹெச்.டி.) இணைந்து வெளியிட்டுள்ள “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை” தெரிவித்துள்ளது.

இந்த புதிய நிலைமைகளில், மேலும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கும் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து வர இருக்கின்ற தாக்குதல்களுக்கும் பரந்த அடித்தளத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.

2002-ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றுதான் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு அல்லது ஐந்து சட்டங்களாக சுருக்குவதாகும். அன்றைக்கு பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரசு அரசு அதனை நிறைவேற்றுவதில் மந்தப் போக்கைக் காட்டியது; மோடி தலைமையிலான அரசுதான், இதில் தீவிரம் காட்டியிருக்கிறது என்று தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மெச்சிக்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, கிக் வேலைமுறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆகப் பெரும்பான்மையினர், தங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற அவலநிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவது இயல்பானதே. ஆனால், பழைய 44 சட்டங்களைப் போல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அல்ல, புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்.

நூலின் பெயர்: 2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049

தொலைபேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை: ரூ. 130

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஏப்ரல், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 10 | 1989 ஏப்ரல் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தாக்கர் கமிஷன் அறிக்கை: அரசியல் மிரட்டலுக்கான ஆயுதம்!
  • வாசகர் கடிதம்
  • கேரளத்தில் தியாகி ராஜன் சிலை உடைப்பு
  • ரஷியாவில் உணவுப் பஞ்சம்: கோர்ப்பசேவின் சீர்திருத்தங்கள் சாயம் வெளுக்கிறது!
  • சட்டமன்ற ரௌடித்தனங்கள்: அவமானமாகக் கருதவில்லை; அவசியமெனச் செய்கிறார்கள்!
  • மேலைநாகரிகத்தின் பாசாங்கு அம்பலமானது
  • ஒரு விடியலை நோக்கி…
  • இந்திய – சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    இந்திய அரசின் வெற்றிக் கனவுகள், இமாலயத் தவறுகள், ஆத்திர மூட்டல்கள்
  • கொத்தடிமைத்தனம் குழந்தை உழைப்பாளிகள்
  • ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் (IRPD): பலமுனை, பலகோடி மோசடிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 9 | 1989 மார்ச் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விசுவாசிகள் நியமனம் | கவர்ச்சி பட்ஜெட் | பஞ்சாப்: பாசாங்கு செய்யும் தீர்வுகள்
  • வை.கோ.வின் ஈழப் பயணம் மீண்டும் “ரா”வின் கைவரிசை!
  • செகந்திராபாத் சதி வழக்கு: புரட்சியாளர்கள் விடுதலை புதிய அடக்குமுறை தொடர்கிறது
  • ”அமைதிப் படை”யின் அக்கிரமங்கள்…. குமுறுகிறது யாழ் பல்கலைக்கழகம்!
  • ”சாத்தானின் கவிதைகள்” தடையும் தண்டனையும்
  • சட்டசபைக்குள் கட்டிப்புரண்டு சண்டை! கவர்னர் கெரோ செய்யப்பட்டார்! மே.வங்க சட்டமன்ற ரௌடித்தனங்கள்!
  • மேடைக்கு மார்க்சியம்! பிழைப்புக்கு வட்டித்தொழில்!
  • கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா?
  • சாராய ஆறு பொங்குகிறது!
  • இந்திய – சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    இந்தியாவில் போர்க்கூச்சல்கள்! இராணுவத்துக்குள் பதவிச் சண்டைகள்!
  • சிறைக் கைதிகளின் உரிமைக்கான போராட்டம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஜாகீர் உசேன் கொலை: வக்ஃப் வாரிய சொத்திற்காக அரங்கேறிய கொடூரம் | தோழர் வெற்றிவேல் செழியன்

ஜாகீர் உசேன் கொலை:
வக்ஃப் வாரிய சொத்திற்காக அரங்கேறிய கொடூரம் | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன்

தேவேந்திர ராஜா மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் தேவேந்திரராஜா-வை மார்ச் 10 ஆம் தேதி ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொடூரமாக வெட்டிய நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்ச் 24 அன்று அவரை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாகவும் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாகவும் பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் சந்திக்கச் சென்றிருந்தோம்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அனைத்து தோழர்களையும் அனுமதிக்காத நிலையில் நானும் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல துணை செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் அவர்களும் தேவேந்திர ராஜாவை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.

மேலும் தேவேந்திரராஜாவின் தந்தையைச் சந்தித்தும் ஆறுதல் கூறினோம்.

தேவேந்திர ராஜாவின் தலையில் ஆறு இடத்தில் வெட்டி இருக்கிறார்கள் இரண்டு கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள் அதில் ஒரு கையில் மூன்று விரல்கள் மற்றும் கட்டை விரல் இல்லாமல் இருக்கிறது. தேவேந்திரராஜா சாதி வெறியர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசே! இன்னும் எத்தனை காலம் மௌனம் சாதிக்கப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட கொடூரங்களை அனுமதித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்?

சாதிய தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களைத் தடை செய்!

மேலும் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை உடனடியாக பள்ளிகளில் நடைமுறை படுத்திடு!

தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

போராடும் பொட்டலூரணி மக்களைச் சந்தித்த பு.மா.இ.மு தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்று அக்கிராம மக்கள் 2021 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்கள்.

ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறது தமிழ்நாடு அரசு. மேலும் போராடும் மக்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது.

இந்நிலையில் மார்ச் 23 அன்று நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி ”2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக கலந்துகொண்டு பாடல் பாடினோம்.

இந்நிகழ்வை முடித்துவிட்டு இரவு தூத்துக்குடியில் தங்கிவிட்டோம்.

மார்ச் 24 காலை மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்று போராடி வருகின்ற பொட்டலூரணி மக்களைச் சந்திக்கச் சென்றோம்.

அப்பொழுது மீன் கழிவு எதிர்ப்பு போராட்டக் குழு தோழர்களைச் சந்தித்தோம்.

அவர்கள் இந்த மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களையும் அதில் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் அவற்றை கிராம மக்கள் எதிர்கொண்டதையும் விரிவாக விளக்கினார்கள்.

உண்மையில் அதைக் கேட்கும் போது வியப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் அவ்வளவு ஒற்றுமையாக நின்று துணிச்சலாக எதிர்த்திருக்கிறார்கள். பிரச்சினையைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளும் வர்க்கங்கள் பணம் கொடுத்து அம்மக்களை விலைக்கு வாங்க பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் வென்றிருக்கிறார்கள்; அவர்கள் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார்கள்.

உண்மையில் பொட்டலூரணி கிராம மக்கள் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்தில் உறுதியாக நின்று அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதை எங்களால் நன்கு உணர முடிந்தது.

குறிப்பாக பொட்டலூரணி மக்கள் மற்றும் தோழர்கள் நாங்கள் சென்றிருந்த போது அன்பாக அரவணைத்தார்கள். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் என் அப்பா வயது கொண்டவர்கள்; அதைவிடவும் வயது முதிர்ந்தவர்கள்தான்.

நாங்கள் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என்று தெரிந்த பின்பும் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் தோழர்கள் என்றே பேசினார்கள்.

இன்னொரு முக்கியமான விசயம் மாணவர்கள் படிப்பதற்காக படிப்பகம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்வையிட்டோம்; வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.

தொகுப்பாகச் சொல்லப்போனால் பொட்டலூரணி மக்களிடமிருந்து புதிய விஷயங்களை நிறைய கற்றுக்கொண்டோம். நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.

மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்ற பொட்டலூரணி மக்களின் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டக் களத்தில் மக்களோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15-28 பிப்ரவரி, 1-15 மார்ச், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 7-8 | 1989 பிப்ரவரி 15-28, மார்ச் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போபால் விஷவாயுப் படுகொலை! இந்திய அரசு – யூனியன் கார்பைடு சமரசம்: தேசிய அவமானம்! தேசிய துரோகம்
  • துரோகிகள் ஆக்கிரமப்பாளர் முகத்திலே கரிபூசினார்கள் ஈழமக்கள்
  • குருதிச் சேற்றில் ஆஃப்கான்
  • பகுத்தறிவுத் திராவிடத்துக்கு திவசம்! ஆன்மீக திராவிடத்துக்கு பிறந்தவிழா!
    கருணாநிதி கற்றுக் கொண்ட படிப்பினை: “ஆட்சி என்பது பொன்முட்டையிடும் கோழி!”
  • எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ராஜீவின் ஐந்தாம்படை
  • போலீசு அதிகாரிகளின் ஒழுக்கக்கேடு! ஐ.ஜி. தேவாரம் உதாரணம்!
  • தொழிற்சங்க சுல்தான்களின் துரோகம்!
  • திருச்சி வரதட்சிணைப் படுகொலை: குற்றவாளிக்கு ஆதரவாக ஓட்டுக் கட்சிகள் – போலீசு!
  • கவர்ச்சித் திட்டங்கள்! ஊதாரிச் செலவுகள்! தேசம் திவாலாகிறது!
  • இந்திய – சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்றூ உண்மைகள்:
    திபேத்தில் நேரு – சி.ஐ.ஏ. சதிகள்! இந்தியாவின் முதல் இராணுவ மோதல்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகள்!

மார்ச் 17 ஆம் தேதி அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பதும் பைஜாமாவை கழற்றுவதும் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியாகாது என்று மிகவும் மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அன்று உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு அம்மாவும் மகளும் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் இடைமறித்த அவர்களது கிராமத்தைச் சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மகளை தாங்கள் வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அம்மாவும் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையில் தன் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் இரண்டு இளைஞர்களும் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர் பவன் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள ஆகாஷ் சிறுமியின் மார்பகங்களைப் பிடித்தும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தும் அருகிலிருந்த பாலத்திற்கு அடியில் இழுத்துச் சென்றுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே டிராக்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் ஓடி வந்துள்ளனர். உடனே இரண்டு இளைஞர்களும் துப்பாக்கியைக் காட்டி இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இளைஞர்கள் ஒருவனின் தந்தை போலீசில் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜனவரி 2022 இல் காஸ்கஞ்ச் போக்சோ நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். அதில் தனது மகளுக்கு நடந்த கொடூர நிகழ்வைக் குறிப்பிட்டு மூன்று பேரின் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலுக்காக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளார். அவரின் விண்ணப்பத்தைப் புகாராகப் பதிவு செய்த நீதிமன்றம் மார்ச் 21, 2022 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் போலீசுக்கு உத்தரவிட்டது.

படிக்க: கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் 15 மாதங்கள் கழித்து 2023 ஆண்டு ஜூன் மாதத்தில் விசாரணைக்காக இரண்டு இளைஞர்களை ஆஜராகும்படி இ.பி.கோ பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்வு) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் தந்தைக்கு இ.பி.கோ பிரிவுகள் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து மூன்று குற்றவாளிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி அன்று நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பகை காரணமாக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தனிப்பட்ட குடும்ப தகராறு போன்று மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க இந்த தரவுகள் போதுமானதாக இல்லை” என்று கூறினார்.

பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது. ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல் என்ற பிரிவின் கீழ் வரும் என்று பெண்கள் மீதான தன்னுடைய ’சட்ட வியாக்கியானத்தை’ கூறியுள்ளார்.

மேலும் ”பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான சட்டப்பூர்வ வரம்பை இந்த வழக்கு பூர்த்தி செய்யவில்லை. தயாரிப்புக்கும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான உண்மையான முயற்சிக்கும் இடையில் அதிக அளவிலான வேறுபாடு உள்ளது” என்று குற்றவாளிகளுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றவாளிகள் பவன் மற்றும் ஆகாஷ் மீதான முந்தைய விசாரணை நீதிமன்றத்தின் சம்மனை நீக்கி இ.பி.கோ பிரிவு 354 (ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 (மோசமான பாலியல் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

படிக்க: இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை

இந்த உத்தரவு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில மணி நேரங்களுக்குப் பின்பு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா, நீதிபதியை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தில் “இந்தியாவின் பெண்கள் என்ற அமைப்பின் சார்பாக மிகுந்த வேதனையுடனும் கவலையுடனும் எழுதுகிறேன். நீதிபதியின் விளக்கம் மிகவும் தவறானது” என்று வழக்கறிஞர் குப்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ”இந்த விஷயத்தில் நீதிபதியின் அணுகுமுறை உணர்ச்சியற்றது, பொறுப்பற்றது. அனைத்து வயது பெண்களுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூகத்திற்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 21 அன்று மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “இந்த முடிவை நான் ஆதரிக்கவில்லை. மேலும் உச்ச நீதிமன்றமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு சிவில் சமூகத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் ”இத்தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துகளால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் வெட்கக்கேடான சூழ்நிலை. அந்த ஆண்கள் செய்த செயலை எப்படி பாலியல் வன்கொடுமைக்குச் சமமான செயலாகக் கருத முடியாது? மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்க்க முயல்வதும் பாலியல் வன்கொடுமை குற்றமல்ல என்ற கூற்று மிகவும் உணர்ச்சியற்றது; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்” என்று நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

”நாட்டில் பெண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுவது மிகவும் அருவருப்பானது. இதை நாம் போக்க வேண்டும்,” என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் மாலியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமணத்திற்குப் பின்பு மனைவியின் விருப்பமின்றி கட்டாய பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றமாகாது என்கிற மோசமான தீர்ப்பை வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை அங்கீகரிக்கும் விதத்தில் சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் அமைவதானது நீதித்துறையில் பாசிச சித்தாந்தம் ஆதிக்கம் பெறுவதைக் காட்டுகிறது.

இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 பிப்ரவரி, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 6 | 1989 பிப்ரவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கோஷ்டி சண்டை வலுக்கிறது! காங்கிரஸ் முடிவு நெருங்குகிறது!
  • பெருகிவரும் பட்டினிச் சாவுகள்
  • ஏகாதிபத்திய அடிவருடித்தனம்
  • பதவியைப் பிடித்ததும் நிறம் மாறிய பச்சோந்தி கருணாநிதி!
  • முற்றுகிறது கோஷ்டிச் சண்டை நொறுங்குகிறது காங்கிரசுக் கூடாரம்
  • அசுர வளர்ச்சி பெற்று ஆதிக்கம் செலுத்தும் புதுத் தரகுமுதலாளிகள்
  • சிறை அதிகாரிகளின் பகற்கொள்ளை!
  • அநியாய வேலைநீக்கத்துக்கு எதிராக ஆர்த்தெழும் தொழிலாளர்கள்
  • இந்திய-சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்றூ உண்மைகள்: ஆக்கிரமிப்பைத் தொடங்கியது- நேருதான்!
  • ஏழை நாடுகளைச் சுடுகாடாக்க ஏகாதிபத்தியங்களின் புதிய சதி
  • நடுக்கடலில் நாடோடிகளாகத் திரியும் நச்சுக் கப்பல்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம்

நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-31 ஜனவரி, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 4-5 | 1989 ஜனவரி 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போலி ஜனநாயகத் தேர்தலைப் புறகணிப்போம்!
  • பாசிச காங்கிரசின் படுகொலை அரசியல்
  • ஆந்திர கலவரம்: பொறுக்கி அரசியல் ரௌடிகளின் காலடியில் நாடாளுமன்ற ஜனநாயகம்
  • இந்திய – சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்: நேருவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் – சதிகள்!
  • சத்வந்த்சிங்-கேஹார்சிங் தூக்குத் தண்டனை: பாசிச ராஜீவ் கும்பலின் பழிவாங்கும் வெறி
  • ஈழம்: பாசிசத் தேர்தல்களும் அமைதிப் படையின் அட்டூழியங்களும்
  • புரட்சிக்கு அறைகூவல் விடுத்த தேர்தல் புறகணிப்பு மாநாடு
  • ‘மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: காங்கிரசின் ஐந்தாம்படையாக போலிக்கம்யூனிஸ்டுகள்
  • தமிழகத் தேர்தல்: ஓட்டுக் கட்சிகளின் பஞ்சு மிட்டாய் வாக்குறுதிகள் பங்காளி கூட்டணிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கரடிபுத்தூர்: அரசின் சேவை மக்களுக்கா? முதலாளிகளுக்கா? | கோபிநயினார்

LOVE ALL NO CASTE
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

சிறப்புரை:
தோழர் கோபிநயினார்,
திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram