Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 4

கீழடி அகழாய்வு: பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்! | மீள்பதிவு

மார்ச் 2017 புதிய ஜனநாயகத்தில் வெளியாகியிருந்த இக்கட்டுரை மார்ச் 23, 2017 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. சூழல்கருதி இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

ந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க.  அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர்,  அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது. வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி  பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.  “தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மட்பாண்டங்கள் உட்புறத்தில் சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று

அதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது. தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.

மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில்  இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்–14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கு ம்பலின் வரலாற்றுத்  திரிபின் படி , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி,  தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.

வட்டவடிவிலான உலைகள்

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு – இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

காவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம்  ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக  கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது.  சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.


அழகு

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2017)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 22-23-24 | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாரதீய ஜனதா – காங். தூண்டும் கன்னடவெறி
  • காட்-டங்கல் எதிர்ப்பு இயக்கம்
  • பிளேக் சாவிற்கு அரசே பொறுப்பு
  • ஏழைநாடுகளின் வளர்ச்சிக்கு மக்கள் தொகையல்ல அந்நிய கொள்ளையே தடை
  • கரூரில் சாதிக்கலவரம் ஆதிக்கசக்திகள் ஆதாயம்
  • உத்தர்கண்ட் விவகாரம்: இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மேல்சாதியினர் போராட்டம்
  • மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
  • “கோலா”க்களின் யுத்தம் ‘சுதேசி’களின் கேலிக்கூத்து
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 20-21 | செப்டம்பர் 1-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “தடா” சட்டம் ரத்தாகுமா? முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஜனநாயக மாய்மாலம்
  • கொதிகலன் வெடித்துப் பலியான பெண் தொழிலாளர்கள்
  • விவசாயத்தை விழுங்கும் இறால் முதலாளிகள்
  • அயோத்தி: சாமியாரை வைத்து ஆதாயம் தேடும் காங்., பா.ஜ.க.
  • இலங்கையில் ஆட்சி மாற்றம்: பிறவி ஊனம்
  • ராஜீவ் கொலை ‘சதி’ வழக்கு: வெங்காயத் தோலை உரித்து வீரர்கள் கண்டதென்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • நல்வாழ்வுத் திட்டத்திற்கு மூடுவிழா செயலிழந்து கிடக்கும் அரசுகள்
  • உமையாள் மில் முதலாளிகளின் சாதிவெறி, கொலைவெறியாட்டம்
  • மேமன் கைது விவகாரம்: மோடி மஸ்தான் வித்தை
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • போலீசின் அத்துமீறலை மறைக்க இனச்சாயம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இஸ்ரேலின் போர்வெறிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு

னடா தலைமையில் அந்நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை (17.06.2025) நிறைவடைந்தது.

ஜி7 கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றனர்.

அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், ஜி7 நாடுகள் போர்வெறிப் பிடித்த இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ஜி7 தலைவர்கள் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அதேவேளையில், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஈரான் பிரதான காரணமாக உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை ‘தற்காத்துக்கொள்ள’ இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாம்!

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய்யான குற்றசாட்டை முன்வைத்து இஸ்ரேல்தான் ஈரான் மீது முதலில் தாக்குதல் தொடுத்தது. ஏழு நாட்களாக தொடரும் இப்போரில், நூற்றுக்கணக்கான ஈரானிய மக்களை இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. தன்னை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடுக்கும் தாக்குதலைக் கண்டிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், ஈரானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.


படிக்க: பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!


ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பேசுவது பொய் என்பதை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட்-டின் கருத்து அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், பாசிஸ்ட் ட்ரம்பின் கட்டளைக்கிணங்க இஸ்ரேல் போரைத் தொடர்ந்து வருகிறது.

அதேசமயம், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக பீதியூட்டும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு குறித்து கேள்வியெழுப்புவதில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேலிடம் 750 முதல் 1,110 கிலோ வரை புளூட்டோனியம் உள்ளது. இது 187 முதல் 277 அணு ஆயுதங்களை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்”  என்ற கொள்கையை இஸ்ரேல்  கொண்டுள்ளது.

எனவே, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று அமெரிக்கா – இஸ்ரேல் குற்றஞ்சுமத்துவது, தங்களுடைய போர்வெறியை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் அப்பட்டமான பொய். இந்த பொய் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஜி7 கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் அமெரிக்கா – இஸ்ரேலின் போர்வெறிக்கு துணைநிற்கின்றன.

எனவே, மத்திய கிழக்காசிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது அமெரிக்க தொடங்கியுள்ள பதிலிப் போருக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள் குரலெழுப்ப வேண்டும்.


அகதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்டு 1-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 18-19 | ஆகஸ்டு 1-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பங்குச்சந்தை ஊழலறிக்கை: நாடாளுமன்ற முறை நிர்வாணாமானது
  • ஓட்டுக் கட்சிகளின் ஓட்டாண்டி நிலை
  • நரியைப் பரியாக்கும் நவீன திரிபுவாதி நம்பூதிரி
  • பாசிச ஜெயாவின் ‘அமைதிப் பூங்கா’ வில் பெருகும் போலீசின் கொலை – ‘கற்பழிப்பு’
  • தெலுங்கு தேசம் வாரிசு போர் எம்.ஜி.ஆர். வழியில் என்.டி.ஆர்.
  • வடகொரிய அதிபர் கிம் இல் சுங்: ஒரு தேசியவாதியின் மறைவு
  • விவசாயத்தில் நவீனமயம் சிறு விவசாயிகளுக்கு சுருக்கு
  • கொங்கு வேளாள கவுண்டர்கள் மிகவு பிற்படுத்தப்பட்டவர்களா?
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 17 | ஜூலை 16-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசு – கிரிமினல் கள்ளக்கூட்டு
  • விடுதியின் அவலம் மாணவர்கள் குமுறல்
  • 69% இட ஒதுக்கீடு பிரச்சினை: யாருக்கு லாபம்?
  • தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்துக் கொலை!
    கலப்புத் திருமணம் செய்த தலித் இளைஞன் படுகொலை!
    சாதிவெறி அட்டூழியம்
  • காஷ்மீர்: பஞ்சால் தீயணைக்க முயற்சி
  • உள்நாட்டு நிர்வாகத்தில் ராணுவத் தலையீடு
  • போதை விளையும் பூமி
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 15-16 | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சேஷன் அதிகார குறைப்பு: விசுவாச தடுமாற்றம், சுருதியில் பேதம்
  • ‘மார்க்சிஸ்டு’ நிலப்பிரபுக்கள்!
  • கிரிமினல் அரசியலில் ஜெயா கும்பல் சாதனை
  • புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து ஒரு கடிதம்
  • சர்க்கரை: கசப்பு!
  • பகாசுர கம்பெனிகளின் பிடியில் சிக்கியது உலகம்
  • இறால் மீன் பண்ணைகள்: தஞ்சை பஞ்சு பூமியாகிறது
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

முருக பக்தர்கள் மாநாடு:
வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அமெரிக்க அடிமை மோடியும் வேட்டைக்காடாகும் இந்தியாவும்

பா.ஜ.க-வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மோடியை ‘விஷ்வகுரு’வாக (உலகத் தலைவர்) முன்னிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பிடித்தது; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது; ஜி20 கூட்டமைப்பிற்கான தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் இந்தியாவிற்கு கிடைத்தது போன்றவற்றை ஊதிப்பெருக்கி, இந்தியா தெற்காசிய நாடுகளின் குரலாக இருப்பது போல பா.ஜ.க. கும்பல் சித்தரித்தது.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், உலக மேலாதிக்க பயங்கரவாதியும் பாசிஸ்டுமான டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார். இது இந்தியாவில் மோடி தலைமையிலான பாசிச கும்பலுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலாக அவர் வெளியிட்டுவரும் அடாவடித்தனமான அறிவிப்புகள், பாசிச நடவடிக்கைகள் மோடி கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தனது அமெரிக்க விசுவாசத்தை மோடிக் கும்பல் காட்டிக்கொண்டிருக்கிறது.

ட்ரம்ப் கும்பலின் அடாவடித்தனங்களும் அடிபணியும் அடிமை மோடியும்

அமெரிக்காவின் அதிபராக பாசிஸ்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற உடனேயே, ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள மக்களை மிகவும் இழிவான முறையில் வெளியேற்றத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களைக் கட்டி, முகத்தில் முகமூடி அணிவித்து, போர்க் குற்றவாளிகளைப் போல இராணுவ விமானத்தில் நாடு கடத்தியது ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல். இவ்வாறு இந்தியர்கள் இழிவுபடுத்தப்படும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்கள் மீது வக்கிரத்தைக் கக்கியது.

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொந்தளிக்கச் செய்த இந்த நடவடிக்கையை, இந்தியப் பிரதமர் மோடி பெயரளவிற்குக் கூட கண்டிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ, அது அமெரிக்காவின் சட்டவிதிகள் சம்பந்தப்பட்ட விசயம் என்று துளியும் மான உணர்ச்சியின்றி பேசினார். மெக்சிகோ, கொலம்பியா போன்ற சிறிய நாடுகள் கூட தங்கள் நாட்டுக் குடிமக்கள் இழிவான முறையில் வெளியேற்றப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. ஆனால், இந்தியர்களை கண்ணியமான முறையில் அழைத்து வருவதற்காக சிறு துரும்பைக் கூட மோடிக் கும்பல் நகர்த்தவில்லை.

அதேபோல், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய மக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானின் மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டப் போவதாகப் பாசிச கும்பல் சவடாலடித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறியையும்-இந்துமத வெறியையும் தூண்டி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திகொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

போர்நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்து அரை மணி நேரத்திற்கு பிறகே இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் அந்நிய நாடுகள் தலையிடக் கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தியாவின் பெயரளவிற்கான இறையாண்மையையும் கேள்வியெழுப்பும் வகையில் ட்ரம்பின் நடவடிக்கை அமைந்தது.

இது இந்திய மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் அமெரிக்கா இவ்விவகாரத்தில் தலையிடவில்லை என்று பூசி மெழுக முயற்சித்தது மோடி அரசு. ஆனால் ட்ரம்போ பத்துக்கும் மேற்பட்ட முறை தான்தான் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ததாகவும் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று மிரட்டியவுடன் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாகவும் இழிவுபடுத்தினார்.

மேலும், அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் (ஒப்பீட்டளவில், தரமானதும் விலை மலிவானதுமாகும்) வாங்குவதை மோடி அரசு நிறுத்தியுள்ளது. ட்ரம்பின் முதலாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து, வெனிசூலா நாட்டிடமிருந்து மலிவு விலையில் கிடைத்துவந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை மோடி அரசு நிறுத்தியது. பின்னர், பைடன் பதவிக் காலத்தில் வெனிசூலாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கிவந்த நிலையில், இப்போது ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதும், அவரது அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து வெனிசூலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவிடமிருந்து பெருமளவுக்குப் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை வாங்க மோடி அரசு தீர்மானித்துள்ளது.

இவையன்றி, அமெரிக்காவின் நோக்கங்களுக்கும் வரி விதிப்புகளுக்கும் மோடி அரசைப் பணிய வைப்பதற்காக ட்ரம்ப் கும்பல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்றுவரும் நிலையில் புதிய மாணவர்களுக்கு விசா வழங்குவதை ட்ரம்ப் அரசு நிறுத்தி வைத்திருப்பது; அமெரிக்காவில் குடிமக்கள் அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஐந்து சதவிகித கலால் வரி விதிக்கப்பட்டிருப்பது; இந்தியாவில் ஒன்றுகோர்க்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று மிரட்டியிருப்பது ஆகியவை மோடி அரசை அடிபணிய வைப்பதற்கான நடவடிக்கைகளே ஆகும்.

மோடி, ட்ரம்பின் கோலுக்கு ஆடும் குரங்கு!

ட்ரம்பின் பாசிச நடவடிக்கைகளையும் வரி விதிப்புகளையும் எதிர்த்துப் பல நாடுகள் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மோடி கும்பலோ ட்ரம்ப் அதிபரான உடனேயே தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டத் தொடங்கிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், போர்பன் விஸ்கி (Bourbon whiskey), ஈதர்நெட் சுவிட்சுகள் (Ethernet Switches), ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் (Harley Davidson Bikes) போன்ற சில அமெரிக்கத் தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைப்பதாக மோடி அரசு அறிவித்தது. கூகுள் (Google) போன்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், ஆறு சதவிகித டிஜிட்டல் வரியை இரத்து செய்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வர்த்தகக் குழுவினர் முன்வைத்த “சமச்சீர் வர்த்தகம்” (Balanced Trade) இரு நாடுகளுக்கிடையில் உறுதியாகியுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு அவை இந்தியச் சந்தையில் தடையற்ற முறையில் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இது இந்தியச் சந்தையை அமெரிக்கப் பொருட்களின் குப்பைக் கிடங்காக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 2 அன்று 57 நாடுகளின் மீது பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது) விகிதத்திற்கேற்ப இந்த வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் வரை வரி விதிப்பு தொடரும் என ட்ரம்ப் அடாவடித்தனமாக அறிவித்தார். அதனடிப்படையில், இந்தியாவிற்கு 26 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ட்ரம்ப் கும்பலின் இந்த வரி விதிப்பானது அப்பட்டமாகப் பிற நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையாகும். வர்த்தகப் பற்றாக்குறையைக் களைவது என்ற பெயரில் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கச் செய்வது, பிற நாடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அமெரிக்கா உடனான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்திற்கு பணியவைப்பது என பிற நாடுகளின் சந்தையை முற்றுமுழுதாக அமெரிக்கப் பொருட்களுக்கு திறந்துவிடச் செய்வதே இதன் நோக்கமாகும். ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை சீரழிக்கக்கூடிய இந்த திட்டத்திற்குப் பிற நாடுகள் பணிந்து வருவதற்கேற்ப பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு ட்ரம்ப் கும்பல் நிறுத்தி வைத்துள்ளது.

ட்ரம்பின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, மெக்சிகோ, பிரேசில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் பதிலடி கொடுத்த நிலையில், மோடி கும்பலோ இந்த வரி விதிப்பைப் பெயரளவிற்குக் கூட எதிர்க்கவில்லை. மாறாக, ட்ரம்பின் மிரட்டலுக்குப் பணிந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், 55 சதவிகித பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்து இந்தியச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்துவிட்டுள்ளது.

மேலும், உலக நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமிட தீர்மானித்து அதற்கான பேச்சுவார்த்தையிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பல நன்மைகளைப் பயக்கப் போவதாக பா.ஜ.க. அடிவருடி ஊடகங்கள் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்தியா மறுகாலனியாவது மிகத் தீவிரமாக நடந்தேறும்.

ஏனெனில், இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், இந்தியாவில் விவசாய மானியங்கள் குறைக்கப்படுவது; விவசாய விளைப்பொருட்கள் அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்குத் திறந்துவிடப்படுவது; அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது; கட்டுப்பாடற்ற தரவு ஓட்டங்களை (Data flow) இந்தியாவில் அனுமதிப்பது உள்ளிட்டு இந்தியாவில் கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முறிக்கப்படும் “இந்தியாவின் முதுகெலும்பு”

அமெரிக்க பெட்ரோலிய கச்சா எண்ணெய், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விமானம் போன்ற அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் ஏற்கெனவே மிக மிகக் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சில முக்கிய உற்பத்திப் பொருட்கள் மீதான வரியையும் குறைத்து அத்துறைகளிலும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க வல்லரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல் இந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில் பரஸ்பர வரி விதிப்பைப் பயன்படுத்தி வருகிறது.

இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் (ICRIER) அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை விவசாயத் துறையிலேயே அதிகமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவது இதற்கான காரணமாகும். இவ்வாறான அதிக வரி விதிப்பினால், மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான், இந்திய விவசாயம் ஓரளவேனும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து இந்திய விவசாய சந்தையை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்குத் திறந்துவிடுவது; இந்தியாவில் விவசாய உள்ளீடு பொருட்களுக்கான கொஞ்சநஞ்ச மானியங்களையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் வெட்டுவது; இந்தியாவின் பொது விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவருவது; அரசு கொள்முதலை முற்றாகக் கைவிட்டு அமெரிக்க கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செயல்படுத்துமாறு அமெரிக்க வல்லரசும் அதன் அடியாளான உலக வர்த்தகக் கழகமும் இந்திய அரசைப் பல ஆண்டுகளாகவே மிரட்டி வருகின்றன.

இவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்திய விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி இந்திய ஆட்சியாளர்கள் இக்கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில், ட்ரம்பின் மிரட்டலுக்கு அஞ்சி அமெரிக்க சோளம், சோயாபீன்ஸ், பருத்தி, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. இது ஏற்கெனவே செத்துக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தைப் படுகுழிக்குத் தள்ளும் நடவடிக்கையாகும்.

அமெரிக்க விவசாயத்துறையானது பன்னாட்டு ஏகபோக வேளாண் கார்ப்பரேட்களால் கட்டுப்படுத்தப்படக்கூடியது. இந்த கார்ப்பரேட்டுகளுக்கு அமெரிக்காவில் அதிகளவிலான மானியங்கள் வழங்கப்படுவதால் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆனால், இந்திய விவசாயத்துறை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் பின்னி பிணையப்பட்டது. மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், மின்சாரம் போன்ற விவசாய உள்ளீடுகளின் மானியங்கள் வெட்டி சுருக்கப்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; இந்திய விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருவது போன்றவற்றால் இந்திய விவசாயம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் அமெரிக்க விளைப்பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறந்துவிடப்பட்டால் இந்திய விவசாயிகளால் அதனுடன் போட்டிப்போட முடியாமல் மிகப்பெரும் நட்டத்தை எதிர்கொண்டு நொடிந்து போவர்.

மேலும், இந்திய விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விளைப்பொருட்களை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்யும் சதித்திட்டமும் இதில் ஒளிந்துள்ளது. அதானி-அம்பானி கும்பலும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் அரசு கொள்முதல் ஏறக்குறைய ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது இந்த சதியை மேலும் எளிதாக்கும்.

விவசாயத்துறையை போல இந்தியாவின் பால் உற்பத்தித்துறையும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக திகழும் இந்தியாவின் பால் உற்பத்தித் துறையானது சுமார் எட்டு கோடி சிறு உற்பத்தியாளர்களைக் கொண்டது.

மறுபுறம், இந்தியாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பால் உற்பத்தித்துறை மிகப்பெரும் தொழிற்சாலை, பால் பண்ணைகளை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும். உலகளவில் அதிக மானியங்களை பெறுபனவாகவும் இவை உள்ளன. இந்நிறுவனங்கள் வைத்திருக்கும் சராசரி கால்நடைகளின் எண்ணிக்கை 337 ஆகும்.

ஆனால், இந்தியாவின் சிறு உற்பத்தியாளர்கள் சராசரியாக இரண்டு அல்லது மூன்று கால்நடைகளை மட்டுமே கொண்டுள்ளனர். பெரும்பாலும் விவசாயிகளாக உள்ள இந்த சிறு உற்பத்தியாளர்கள் கூட்டுறவுகளின் மூலம் இந்தியாவின் பால் தேவையை ஈடுகட்டுவதுடன் உலக பால் உற்பத்தியில் 22-25 சதவிகிதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் உள்ளனர். தற்போது அமெரிக்காவின் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது விவசாயத்துறையை போலவே இந்தியப் பால் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும்.

ட்ரம்ப் – மஸ்க் கும்பலுக்கு படையலிடப்படும் இந்தியா

அமெரிக்காவின் ஏகபோக பெருமுதலாளியான எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் – ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் வழங்குவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்துள்ள மோடி அரசு, இப்போது எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இணையச் சேவையில் அனுமதிப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியத் தொலைத்தொடர்புத் துறையையும் அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தியிருக்கிறது.

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றமானது, தொலைத்தொடர்புத் துறையில் வெளிப்படையான ஏலமுறையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், எவ்வித ஏல அறிவிப்புமின்றி செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் எலான் மஸ்க்-இன் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டு, எலான் மஸ்க்-இன் ஏகபோகம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க்-இன் டெஸ்லா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவும் மோடி அரசு தீர்மானித்துள்ளது.

அதேபோல, இந்தியாவில் அதிகளவிலான ஆயுதங்களை திணிப்பதற்கும் ட்ரம்ப் கும்பல் ஆயத்தமாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தின் அதிநவீன எஃப்-35 (F-35) ஸ்டெல்த் ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது. ஏறத்தாழ 968 கோடி ரூபாய் மதிப்புடைய இந்தப் போர் விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 28 லட்சம் ரூபாய் அளவிற்கு செலவாகும் நிலையில் இதனைப் பராமரிக்கவும் பல லட்ச ரூபாய் தேவைப்படும். அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனப்படும் இராணுவக் கூட்டணியில் உள்ள இந்திய அரசு, இவற்றைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய உழைக்கும் மக்களுக்குப் பயனற்ற இந்த ஆயுதங்களுக்கான விலையை இந்திய மக்கள் தங்கள் வரிகளின் மூலமே சுமந்தாக வேண்டும். இதுமட்டுமின்றி, போர்த்தந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடன் பத்தாண்டுகால இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மோடி அரசை ட்ரம்ப் நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது.

மேலும், இந்தியாவில் அணுசக்தித் துறையில் கார்ப்பரேட்களின், குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மோடி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2007-இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவின் ஹோல்டெக் இண்டெர்நேஷனல் (Holtec International) என்ற நிறுவனத்திற்கு அந்நாட்டு எரிசக்தித்துறை ஒப்புதலளித்துள்ளது.

இவ்வாறு இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கேற்ப அணுசக்திச் சட்டம் 1962 மற்றும் அணு சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம் 2010 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது, அதற்கான குழுவையும் அமைத்துள்ளது. இச்சட்டத்திருத்தங்கள், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களைக் கட்டுவது, அதற்கான இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதி, எரிபொருள் மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவற்றில் கார்ப்பரேட்டுகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அனுமதிப்பதுடன் அணுசக்தி நிலையங்களை கார்ப்பரேட்டுகள் சொந்தமாக்கிக் கொள்வதற்கும் வழிவகுக்கும். அதேபோல், அணு விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட கார்ப்பரேட்டுகள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது போபால் நச்சுவாயு படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவையெல்லாம் இந்திய நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் பாசிச கும்பலானது உலகம் முழுக்க தனது வேட்டையைத் தீவிரப்படுத்துவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடாலடியான நடவடிக்கைகளின் மூலம் சுரண்டலைத் தீவிரப்படுத்தி உடனடி பயன்களை அடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவை ஆட்சி செய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பல் அம்பானி-அதானிகளுக்காக இந்திய நாட்டை சூறையாடிவருவது ஒருபுறமெனில், ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக்குவதற்கான அடியாளாகவும் செயல்படுகிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களைப் பேரழிவிற்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் இந்திய நாட்டு மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இதனடிப்படையில், இந்துராஷ்டிர நோக்கத்துடன் இந்தியாவைச் சூறையாடிக் கொண்டிருக்கும் பாசிச கும்பலை வீழ்த்துவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 13-14 | மே 16-31, ஜூன் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘ஜெ’ உதிர்த்த ரோமங்களின் மானப்போர்
  • ஏவுகணைச் சோதனைகள்: வறூமையின் நடுவே வாண வேடிக்கை
  • அணு ஆயுதப் போருக்கான அபாயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ‘மார்வாடி’ எதிர்ப்பில் மறைக்கப்படும் உண்மைகள்
  • தென்னாப்பிரிக்கா: ஆட்சி மாறியது அரசு எந்திரம் மாறியதா?
  • மாஃபியா ஆளுகையில் மாநகரங்கள் திணறல்
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • ‘டங்கல்’ திட்டத்தால் நிலப்பிரபுகளுக்கு பாதிப்புதானே?
  • விசைத்தறி தொழிலாளர்கள் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்

பாலஸ்தீன குழந்தைகள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்

னவெறி இஸ்ரேல் பட்டினிப் போரை நடத்தி காசா மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. தற்போது காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி காசா மீது இன அழிப்பு போரைத் தொடங்கிய இஸ்ரேல், காசாவில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய நகரங்கள், தற்காலிக தங்குமிடங்கள், நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள், கருத்தரித்தல் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி 50,000-த்திற்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது.

ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தினால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல், 2025 ஜனவரி 19 அன்று காசா உடனான மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்ச் 2-ஆம் தேதியுடன் போர் நிறுத்தத்தின் ஆறு வாரக் கால முதல் கட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து இஸ்ரேலியப் பணயக் கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடரும் என்று இனவெறி இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் நயவஞ்சக திட்டத்தை அறிந்துகொண்ட ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் இனவெறி இஸ்ரேல் மார்ச் 2-ஆம் தேதி முதல் காசா மக்களுக்குத் தேவையான உணவு, சுத்தமான குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை காசாவிற்குள் செல்லவிடாமல் அனைத்து நுழைவாயில்களையும் மூடியது. ஏற்கெனவே இனவெறி தாக்குதல்களாலும், நோய்களாலும் சொல்லொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் நிறுத்தப்பட்டது அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது.

இந்நிலையில், அமெரிக்காவின் பக்கபலத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, மார்ச் 18-ஆம் தேதி அன்று அதிகாலை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ராகேப்பா வடக்கில் காசா நகரம் மற்றும் மத்தியப் பகுதியில் டெயர் அல் – பாலா பகுதிகள் மீது இனவெறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 183 குழந்தைகள் உள்பட 404-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு ஆரம்பம் மட்டுமே ஹமாஸிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் வரை எங்களின் தாக்குதல்கள் தொடரும் என்று பாசிஸ்ட் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் காசாவில் உள்ள மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள், காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களைக் குறிவைத்து படுகொலை செய்த இஸ்ரேல் தாக்குதலை புதிய உச்சத்திற்குக் கொண்டுசென்றது. குறிப்பாக, நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த காசாவின் ஒரேயொரு சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தி அதனை முற்றிலுமாக அழித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வடக்கு காசாவில் செயல்பட்டுவந்த அல் – அஹ்லி மருத்துவமனை (Al- Ahli Hospital) மீது தாக்குதல் நடத்தி அதனையும் அழித்தது. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அதனை ஹமாஸ் அமைப்பினர் இராணுவ தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அவதூறு மூலம் நியாயம் கற்பித்தது.

மேலும் இஸ்ரேலின் கொடிய குண்டு வீச்சு தாக்குதல்களால் 1,500 குழந்தைகள் கண்பார்வையை இழந்துள்ளனர். மேலும், கண்பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை தொடர்கிறது. தொடர் முற்றுகையினால் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அத்தியாவசிய சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் காசா மக்களுக்குத் தேவையான உணவுகளை தடுத்து நிறுத்தியுள்ளதால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாலஸ்தீன குழந்தைகள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization- WHO) எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 950 குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா-வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு (United Nations Relief and Works Agency for palestine Refugees – UNRWA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது இறக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே சமயத்தில் இராணுவ தாக்குதல் தொடங்கியதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய காரணங்களால் இறந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட பகுதியில் மாவு, சர்க்கரை, அரிசி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் ஆகியவையும் சந்தைகளில் தீர்ந்துவிட்டதால், பஞ்சமும் பட்டினியும் தீவிரமடைந்துள்ளது என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் ( palestinian Centre For Human Rights – PCHR ) தெரிவித்துள்ளது.

கூடுதலாக, சந்தைகளில் மீதமுள்ள சில பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் காசா மக்கள் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், உணவுப் பொருட்களைப் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூடும் இடங்களும், கள சமையலறைகளும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் (Israel Defense Force – IDF) ) குறிவைக்கப்படுகின்றன. இது பஞ்ச நெருக்கடியை மோசமாக்குகிறது என்று மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மனித உரிமைகள் மைய தகவலின்படி, இஸ்ரேலிய முற்றுகையினால் ஏற்பட்ட பட்டினியால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக தங்களின் உணவைத் தவிர்க்கும் அவலம் அரங்கேறி வருகிறது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதித்து அவர்களது குழந்தைகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளையும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியையும் குறைக்கிறது. அதிகளவிலான கருச்சிதைவு, முன்கூட்டிய குழந்தை பிறப்புகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் பிரசவம் போன்றவற்றிற்கு இது வழிவகுப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டால், கருவில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிப்பதுடன் குடல் தொற்றுகள், மெலிதல் மற்றும் தசைச் சிதைவு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், மிகை இதயத் துடிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர், இது எதிர்காலத்தில் இதய தசை செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும், வளர்ச்சி குன்றியவர்களாகவும், மன மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுபவர்களாகவும் இக்குழந்தைகள் இருக்கலாம் என்று பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் (Palestinian Centre For Human Rights- PCHR) தெரிவித்துள்ளது.

பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாததால் பால் பொடியைத் தண்ணீரில் கலந்து கொடுக்கின்றனர். சில நேரங்களில் அவையும் போதுமானதாக இல்லாததால் பட்டினியால் பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து இறக்கின்றனர். பட்டினி மற்றும் படுகாயங்களினால் பாலஸ்தீன குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிப்பதற்கு இஸ்ரேல் பட்டினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை மனிதாபிமான குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இனப்படுகொலை செயலாகும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளில் நடைபெறுகின்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட இஸ்ரேல் மே 2-ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களை காசாவிற்குள் அனுமதித்து வருகிறது. ஆனால், தினந்தோறும் 500-600 நிவாரணப் பொருள் லாரிகள் செல்ல வேண்டிய தேவை காசாவில் இருக்கும் நிலையில் வெறும் 100 லாரிகளை மட்டுமே இனவெறி இஸ்ரேல் அனுமதிக்கிறது. இந்த நிவாரணப் பொருட்களால் பாலஸ்தீன மக்களில் ஒரு சதவிகித மக்களின் தேவையைக்கூட முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுபெற்ற பேக்கரிகளுக்கு 15 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகள் கொள்ளையடித்தன. மேலும் மே 23 அன்று டெய்ர் அல்-பலாவில் வான்வழித் தாக்குதல் மூலமாக மனிதாபிமான உதவிகளைப் பாதுகாத்துவந்த ஆறு பாதுகாப்பு அதிகாரிகளைப் படுகொலை செய்தது. இது காசா மக்களுக்கான உணவைத் தடுத்து அம்மக்களைப் பட்டினி படுகொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

மே 23-ஆம் தேதி அன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் போர் முயற்சியின் அதிகாரப்பூர்வ நோக்கம் என்று முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மே 25 அன்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் காசாவின் 44 சதவிகித பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் காசாவின் 75 சதவிகித பகுதிகளை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்காக தெற்கு கடற்கரை, வடக்கு காசா நகரம் மற்றும் மத்திய காசாவின் நுரைசாட் பகுதியிலும் மூன்று வதை முகாம்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இது வடக்கு காசாவிலிருந்து வரும் மக்களை தெற்கு கடற்கரையில் உள்ள சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்து படுகொலை செய்யும் திட்டமாகும். பாசிஸ்ட் ஹிட்லர் யூதர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்திய திட்டத்தினை ஒத்ததாகும்.

“ஒரு வருடத்திற்குள் காசா முற்றிலுமாக அழிக்கப்படும். பொதுமக்கள் தெற்கில் ஒரு ‘மனிதாபிமான மண்டலத்திற்குள்’ தள்ளப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பெருமளவில் வெளியேற்றப்படுவார்கள்” என்று இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்திருப்பது காசா மீது இனவெறி இஸ்ரேல் போர் தொடுத்ததன் உண்மையான நோக்கம் அம்பலமாகியுள்ளது.

தற்போது வரை இனவெறி இஸ்ரேலின் கொடூர தாக்குதலினால் 17,000 மேற்பட்ட குழந்தைகள் உள்பட 53,900 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், இஸ்ரேலின் நரவேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் இன அழிப்புக்கு இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்தந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் விளைவாக இஸ்ரேலின் தீவிர இன அழிப்பை வேடிக்கை பார்த்துவந்த பல நாடுகள் கூட இஸ்ரேலைக் கண்டித்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளன. இந்நாடுகள் இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதை நிறுத்தும் வகையில் இந்நாடுகளில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

மறுபுறம் காசா மக்கள் மீதான இனவெறி போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் உள்பட அமெரிக்கா, நெதர்லாந்து, பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இப்போராட்டங்கள் காசா மீதான இஸ்ரேலின் இனவெறி போரைத் தடுத்துநிறுத்துவதையும் சுதந்திர பாலஸ்தீனம் அமைவதை நோக்கியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


இன்குலாப்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 11-12 | ஏப்ரல் 16-30, மே 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஏழுமலை கொலைப்பழி: ஜெயா – வை.கோ. அயோக்கிய அரசியல் கூட்டு
  • ரயில் மறியல் கறுப்புநாள் இயக்கம் அடிமைச்சானம் ‘காட்’டிற்கு எதிர்ப்பு
  • எவ்வகையில் மாறுபட்டது வை.கோ.வின் அரசியல்?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கற்பழிப்பு, கொலை, கொள்ளை பேயாட்டமிடும் ‘ஜெ’ ஆட்சி
  • முத்தாண்டிக்குப்பம் சம்பவம் முத்தாய்ப்பான ஆதாரம்
  • கைத்தறி நூல் விலையேற்றம் பரிதவிக்கும் நெசவாளர்கள்
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வேண்டும், போலீசு அமைப்பையே கலைத்திடக்கோரும் போராட்டம்!
  • நாசகார ‘டங்கலு’க்கு எதிராக இயக்கம்
  • பார்ப்பன ‘ஜெ’ பாதபூஜையில் மானமிழந்த கி.வீரமணி
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம், வாரீர்!
  • பட்ஜெட்: பாமர மக்களுக்குப் பட்டை நாமம் பகாசுர கம்பெனிகளுக்குப் பட்டுக்கம்பளம்
  • மாயாவதி விவகாரம்: சாத்தானின் மகனும் சனாதன ‘தேசிய’வாதிகளும்
  • இந்துமத வெறியர்களின் வக்கிரமும் மிரட்டலும்
  • வறட்சியின் பட்டினிச்சாவும் நிரந்தரமானது ஏன்?
  • காஷ்மீர் விவகாரம்: குறுகிய ‘தேசிய’ வெறியூட்டி குற்றங்களை மறைக்க முடியாது
  • பங்குச் சந்தை: திடீர் கவர்ச்சியின் மர்மம்
  • திண்பது நரமாமிசம் பேசுவது புலால் மறுப்பு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் நடந்து வருகிறது. போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் சிறப்பு தூதுர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழு தற்காலிக போர்நிறுத்தத்திற்கான வரைவறிக்கையை முன்வைத்துள்ளது.

60 நாட்கள் போர்நிறுத்தம் செய்வதற்கான இந்த ஒப்பந்தத்தில் பணயக் கைதிகளை விடுவிப்பது, காசாவிற்குள் மனிதாபிமான தேவைகளை அனுமதிப்பது, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், காசா மீது இன அழிப்பு போரை நடத்திவரும் அமெரிக்கா-இஸ்ரேல் போர்வெறி ஓநாய்களே அறிக்கையைத் தயாரித்திருப்பதால், முன்வைக்கப்பட்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தமானது ஒருதலைபட்சமானதாகவும் தெளிவு-உத்தரவாதமற்றதாகவும் உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தகைய தெளிவற்றத் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டுதான் இந்தாண்டு ஜனவரியில் காசா-இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறியது.

மறுபுறம், காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, காசாவை மீண்டும் கட்டியெழுப்புவது, நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்பது ஆகியவற்றுக்கு உத்தரவாதமளித்தால் அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் அமைப்பு தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், காசா மக்களையும் ஹமாஸையும் எப்போது வேண்டுமானாலும் ஒடுக்குவதற்கு சாதகமாகவே ஒப்பந்தமிடத் துடித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா கும்பல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், காசா மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு ஹாமாஸை தங்களது நோக்கத்திற்குப் பணியவைக்க முயல்கிறது. இதன் காரணமாகப் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியான நிலையை எட்டியுள்ளது.

முன்னதாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் காசா-இஸ்ரேல் இடையில் மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது “காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்” என்ற தலைப்பில் பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில், உலகம் முழுக்க நடந்த மக்கள் போராட்டங்களாலும் காசா மக்கள் மற்றும் ஹமாஸின் உறுதியாலும் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி காரணமாகவே இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு பணிந்துவந்தது என்பது தெளிவுற எழுதப்பட்டிருந்தது. மேலும், காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதற்கேற்ப போர்நிறுத்தம் அமலான பிறகு காசாவை விட்டு வெளியேறிய மக்கள் காசாவிற்கு திரும்பியதுடன், காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கின.

ஆனால், போர்நிறுத்தத்தின் முதற்கட்டம் அமலிலிருக்கும் போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அதனை கார்ப்பரேட்-கேளிக்கை நகரமாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தார். இனவெறி இஸ்ரேல் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது.

காசாவை ஏகாதிபத்தியங்களின் கெடுநோக்கத்திற்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் இந்த சதித்திட்டம் குறித்து போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் போது வாய்திறக்காமல், தங்களுடைய நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்த்துகொள்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏகாதிபத்தியங்களின் இந்த சதித்திட்டத்திற்கு ஹமாஸும் காசா மக்களும் அடிபணியாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தை மீறி காசா மீதான போரை மீண்டும் தொடங்கின. மேலும், ட்ரம்பின் திட்டத்திற்கு பணியவைப்பதற்காகவே காசா மீதான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

“காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் போர் முயற்சியின் அதிகாரப்பூர்வ நோக்கம்” என்று பாசிஸ்ட் நெதன்யாகு கடந்த மாதத்தில் முதன்முறையாக பகிரங்கமாக அறிவித்தது, ட்ரம்ப்-நெதன்யாகு பாசிச கூட்டின் நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்குகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளும் காசாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள்தான் காசாவை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய ஓநாய்களின் சதியை முறியடித்து காசாவில் விரைவில் போர்நிறுத்தம் அமலாவதற்கு துணைநிற்கும். எனவே “காசா மீதான போரை நிரந்தமாக நிறுத்து”, “காசா பாலஸ்தீன மக்களுக்கே” என உலகம் முழுவதிலுமிருந்து முழங்க வேண்டியுள்ளது.


பானு

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-31, மார்ச் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிரிமினல் ஜெயா கும்பல் நீதித் துறைக்கு சவால்
  • அம்பேத்கார் பெயரில் பேருந்து தலித்துக்களுக்கோ தடியடி!
  • மக்களை கசக்கிப் பிழிவதே தரகர்களின் தாராளமயமாக்கல்
  • புலி பீதியூட்டும் கழிசடை அரசியல்
  • பஞ்சாபில் போலீசின் பயங்கரவாத ஆட்சி
  • பஞ்சாபில் மறைக்கப்பட்ட பயங்கரவாதக் கொடூரங்கள்
  • பத்திரிகைகளை விழுங்கும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகள்
  • உ.பி: தலித்துகள் மீது சாதிவெறித் தாக்குதல்
  • தஞ்சையில் தமிழ்மக்கள் இசை விழா
  • முற்றும் காஷ்மீர் விவகாரம் சுற்றும் பிணந்திண்ணி கழுகுகள்
  • வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்வோம், வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram