Sunday, May 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 5

‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

ந்துமதவெறிக் கலவரங்கள் ஒரு சில மதவெறியர்களின் தூண்டுதலால், மதவெறியினால் உந்தப்பட்டவர்களால் நடப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. இல்லை. அப்படி நடப்பதில்லை. அவ்வாறு உணர்ச்சி வேகத்தில் நடந்தால் பாதிப்புகள் கூடவோ குறைவோ இரண்டு தரப்புக்கும் நேருவதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் நடக்கும், இந்து மதவெறியர்களால் நடத்தப்படும் கலவரங்களில் அவ்வாறு நடப்பதில்லை.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளுடன் பொருத்தமான நபர்கள், முறையான வேலை பிரிவினைகள் என்று பிரித்தொதுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்திட்டத்துடன் இலக்குகள் தீர்மானித்துக் கொண்டு நடத்தப்படுகின்றன.

ஆகையால்தான் ஒரு தரப்புக்கு மட்டுமே மொத்த சேதாரமும், எதிர்தரப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அனைத்து கலவரங்களிலும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் இப்போது நடக்கின்ற கலவரங்களில் அரசின் பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. அரசுகளே கலவரக்காரர்களுக்கு அரணாக இருப்பதுடன் அரசினாலேயே தூண்டிவிடப்படுவதாகவும், ஏற்பாடு செய்யப்படுவதாகவும் நடக்கிறது என்பதுதான் கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகிறது.

இந்து மத வெறியைப் பொறுத்தவரை புருஷோத்தமன் எனப்படும் இராமன்தான் கலவரக் கடவுளாகவும் வன்முறையாளனாகவும் முன்னிறுத்தப்படுகிறான். சிவன், லட்சுமி ஆகியோரின் பேரால் கலவரங்கள் எதுவும் நடந்ததாக இல்லை, துர்க்கையின் கணக்கில் மட்டும் சில குற்ற வழக்குகள் தொடர்கின்றன. அடுத்ததாக கணேசன் எனப்படும் பிள்ளையார் பெயரில் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இராமரை ஒப்பிடும்போது அதுவெல்லாம் ஒன்றுமில்லை. அதிலும் கடந்த பத்தாண்டுகளில் “இராம நவமி” அன்று இராமனுக்கு இந்து மத வெறியர்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசே முஸ்லீம்களின் உயிர்களும் உயிரற்ற உடல்களும் தான் என்கிற நிலைமை வளர்ந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் ஆன்மாவுக்கு நெருக்கமான கடவுள் இராமன்தான். ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1925ல் செப்டம்பர் 27 இல் வெற்றிக்கான நாளென்று கருதப்படுகின்ற விஜயதசமி அன்று பூசை போட்டு அவ்வமைப்பைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு 1926 இல் இராமன் பிறந்த நாளான “இராம நவமி” அன்று தான் அதற்கு ஆர்.எஸ்.எஸ், அதாவது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் என்று பெயர் சூட்டினார். ஆர். எஸ். எஸ்-இன் காவிக்கொடி இராம ராஜ்ஜியத்தின் கொடி என்று அவர்களே கூறிக்கொள்ளுகிறார்கள். அந்த காவி கொடி சிவாஜியால் பிரபலமடைந்திருக்கிறது.


படிக்க: இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!


வட மாநிலங்களில் இரண்டு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்று இராமநவமியில் முடிவடைகிறது. அந்த நாளை கலவரத்துக்கு உகந்த நாளாகக் கருதுகின்றனர். கட்டாயமாய் கலவரம் செய்கிறார்கள். இராமநவமி நாளை இந்துத்துவத்தின் பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நாளாகத் தெரிவு செய்து பெரும் கும்பலை சேர்த்து முஸ்லீம் குடியிருப்புகளின் வழியாக பேரணியாய்ச் செலுத்தி பல அட்டூழியங்களை செய்கின்றனர்.

இரண்டாவது நவராத்திரி தசராவில் முடிகிறது, அன்று ராவணனை கொளுத்துவது வெடி வெடித்து வான வேடிக்கைகள் நடத்துவது என்று இராவண வதம் என்கிற இராவண லீலா கொண்டாடுகிறார்கள். இவ்வாறு இராமனின் பெயரால் நடத்தப்படும் பேரணிகள், கொண்டாட்டங்கள் எல்லாமும் முஸ்லீம்களின் ரத்தத்தை போதுமான அளவுக்குக் குடித்திருக்கிறது.

இந்தியாவில் முதல் இராம நவமி ஊர்வலம் / கலவரம் நடந்தது 1871 இல் என்று சில குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அப்போது பெரெய்லி என்னும் இடத்தில் முஸ்லீம்களின் மீது திட்டமிட்ட கலவரம் நடத்தப்பட்டது பதிவாகி இருக்கிறது.

1967 இல் நாக்பூரிலும், 1979 இல் ஜாம்ஷெட்பூரில் இராம நவமி அன்று பெரும் கலவரங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் பலத்தை வெளிப்படுத்துவது என்பதாக அதை கூறிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். இன்றோ சாரிசாரியாக வாகன அணிவகுப்புகள் இந்து மதவெறியூட்டும் அலங்கார வாகனங்கள் என்று அரிவாள்களும் கொடுவாள்களும் சுழற்றிக்கொண்டு நடத்தப்படும் பேரணிகள் இராமநவமிக்கான “ஷோபா யாத்திரை” என்றாகி இந்த வன்முறைக்கு இராமநவமி மத அங்கீகாரம் வழங்குகிறது. அதன் பிறகு அது தொடர் நிகழ்வாகிவிட்டது.

1980 களில் இருந்து கலவரத்தை ஏற்பாடு செய்து நடத்தவும் இந்து மதவெறியை தூண்டி வளர்க்கவும் என்று தனிச்சிறப்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு பொறுப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ். மக்களை இந்து முஸ்லீமாக பிளவுபடுத்திப் பிரித்து விடுவதும் இந்து ஓட்டு வங்கியை உருவாக்குவதும் அதற்கு கலவரத்தை ஆயுதமாக, வழிமுறையாக பின்பற்றுவதும் அதன் இலட்சியமாகியது.

விஷ்வ ஹிந்து பரிஷத், தரம் ஷன்சாத் எனப்படும் எண்ணற்ற மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. “இராமஜென்ம பூமியை இராமனுக்கு மீட்டுக் கொடுப்போம்” என்பதை லட்சியமாக்கியது. ஒவ்வொரு பேரணியிலும் ஆயுதங்களை சுழற்றுவதும் தீப்பந்தங்களை ஏந்துவதும் வழிமுறையாக்கப்பட்டது. 1983 முதல் 1993 முடிய அந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து இராமன் புகழ் பாடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதற்கு எதிராக பம்பாய் குண்டு வெடிப்பும் அதற்கு எதிரான முஸ்லீம்களின் மீதான கொலை வெறி தாக்குதல்களும் நடத்தப்பட்டு கலவரங்களும் கொலைகளும் இந்தியாவின் புதிய இயல்பு நிலை ஆக்கப்பட்டது.

இப்பொழுது ஒவ்வொரு ஆண்டு இராமநவமியும் போலீசின் பாதுகாப்புடன் மக்கள் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நாளாகிவிட்டது. 2022 விவரங்களின்படி ஆறு மாநிலங்களில் அதாவது ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலைமை இருந்தது. பின்னர் 2023-இல் மகாராஷ்டிரமும் கர்நாடகமும், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகியவையும் அவற்றுடன் சேர்ந்தன. இந்த ஆண்டு 2025-ல் இராமநவமி நாளான ஏப்ரல் 6 அன்று அம்மாநிலங்களின் பல பகுதிகளில் வெளிப்படையான பதற்றம் நிலவும்படி செய்தனர்.


படிக்க: நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!


இந்தியாவின் எட்டுக்கும் மேற்பட்ட அந்த எல்லா மாநிலங்களிலும் ஏப்ரல் 6 ம் தேதியை நோக்கி மார்ச் 30 முதலாகவே ‘இராம பக்தர்களின்‘ நடமாட்டம் எல்லா இடங்களிலும் அதிகரித்திருந்தது. அவர்கள் கலவரங்களுக்கான தயாரிப்பிலும் ஒத்திகையிலும் இருந்தார்கள். ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் மக்களை பயமுறுத்துகின்றனர். மதவெறியூட்டும் முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று உரக்க கூவுகின்றனர். மதரசாக்கள் பள்ளிவாசல்கள் இலக்குகளாக கொண்டு பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு ஏறியூட்டினர்.

குஜராத்தில் “வதோதராவை எரிப்போம்“, “ரிப்பீட் 2002” போன்ற முழக்கங்களை எழுப்பினர். மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், மலாட், ஜல் காவுன் ஆகிய இடங்களில் இதே வகை கலவரங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் போலீஸ் பாதுகாப்புடன் தலைமையாக முன்னிறுத்தப்படுகின்றனர். பிகாரில் இராமநவமி யாத்திரையில் காவி கொடி ஊர்வலம் பிரணவ் குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் டி.ராஜா சிங் எம்.எல்.ஏ தலைமையில் இந்து ராஷ்டிரத்தை அமைக்க உறுதிமொழி ஏற்றனர். “நீங்கள் ஏற்கெனவே பாதி நறுக்கப்பட்டவர்கள்; மிச்சத்தையும் நறுக்குவோம்” எனக்கூறி வன்முறை வெறியூட்டினார். முஸ்லீம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

இவரே உத்தரப் பிரதேசத்தில் அவுரங்காபாதிலும் மகாராஷ்டிராவிலும் இதே போன்ற வெறியூட்டும் பேச்சுகளுடன் பொதுக் கூட்டங்களை நடத்தினார். மகாராஷ்டிரத்தில் கேபினட் அமைச்சர்களே பேரணிகளில் பங்கேற்றனர். போலீசும் முஸ்லீம் பகுதிகளில் ரைடு விட்டு பெண்களை பாலியல் ரீதியிலும் துன்புறுத்தியது. மதவெறி கூட்டம் இப்படி வீடு புகுந்து பெண்களை பாலியல் ரீதியில் சீண்டுவதெல்லாம் புதிதாக அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசம் கர்நாடகம் என எல்லா இடங்களிலும் இராமநவமி அன்று சிறிதும் பெரிதுமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

இந்த ஆண்டு 2026 தேர்தலை முன்னிட்டு குறிப்பாக மேற்கு வங்காளத்தை இலக்கு வைத்து வேலை செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வங்காளத்தில் பத்து நாட்கள் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தின் பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி இந்துக்கள் யாரும் வீட்டுக்குள் தங்காதீர். 1.5 கோடி இந்துக்களும் இராமநவமி அன்று தெருவுக்கு வர வேண்டும் நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இராமநவமி அன்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்த பா.ஜ.க அரைகூவல் விட்டிருந்தது.


படிக்க: மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.


இராமநவமி அன்று 2000 ஊர்வலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டது பா.ஜ.க தலைமை. 2017 இல் கொல்கத்தாவில் மட்டும் ஆறு பெரிய பேரணிகள், பிற 150 இடங்களில் பேரணிகள் நடந்தன. இந்த ஆண்டு 2000 பேரணிகள் அதில் 200 பேரணிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், அலங்கார வடிவமைப்புகள் கொண்ட வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டது. மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் பேரணியில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று மால்டா எம்.எல்.ஏ ஸ்ரீ ரூபா மித்ரா சவுத்ரி, மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இவ்வாறெல்லாம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. அரசும் இவற்றை கையாளும் வகையில் போலீஸ் துறையில் ஒன்பதாம் தேதி வரை போலீசாருக்கு விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து போலீசாரையும் பணிக்குக் கொண்டு வந்து ஊர்வலப் பாதை எங்கும் ’பாதுகாப்பு’ பலப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி பா.ஜ.க தலைவரின் வாய்ச்சவடாலுக்கே பாதுகாப்பு என்கிற பெயரில் போலீசு தான் முதலில் பதட்டத்தை உருவாக்குகியது. மக்களை கூடுதலாக பீதி அடையச் செய்வது போலீஸ் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

கடந்த ஆண்டு இராமநவமிக்கு மம்தா பானர்ஜி அரசு விடுமுறை அறிவித்தது இந்த ஆண்டு ஏப்ரல் ஆறு ஞாயிறு விடுமுறை நாளாக போய்விட்டது.

பா.ஜ.க சங்கப்பரிவார அமைப்புகள் 2026 தேர்தலையொட்டி திட்டமிட்டு கலவரத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்து ஓட்டு வங்கியை உருவாக்கி தமதாக்கிக் கொள்ள பா.ஜ.க இதே வழிமுறையைத்தான் எல்லா மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. பல இடங்களில் அது வெற்றியையும் பெற்று தருகிறது. மற்ற இடங்களில் ஆட்சியை பெற்றுத்தர வில்லை என்றாலும் கட்சி வளர்க்க பயன்பட்டிருக்கிறது.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி அரசு இந்து மதவெறி அமைப்புகளை ஒடுக்குவது என்றில்லாமல் தாமே இந்துக்களின் பாதுகாவலன் என்றும் தான் மட்டுமே தலைமை ஏற்க முடியும் என்று தனது தலைமையை நிலைநிறுத்திக் கொள்ளும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது. மதவாதத்தை விமர்சிக்கும் திரைப்படங்கள் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஏற்கனவே ஒரிசாவில் உள்ளதைப் போன்றதொரு பிரம்மாண்டமான ஜகன்னாதர் கோயிலை மேற்கு வங்கத்தின் டிக்கா நகரில் கட்டி முடித்திருக்கிறது. ஏப்ரல் 30 அட்சய திருதியை நாள் அன்று திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் இராமர் கோயில் திறப்பின் போது பிரதிஷ்டை பூஜை நடந்ததை போன்று ஒரு பெரிய பூஜையை ஏப்ரல் 29 அன்று நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்துத்துவத்தின் இரு வேறு வடிவங்களாக பா.ஜ.க-வும் திருணாமுல் காங்கிரஸ் செயல்படுமானால் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசத்தை தேர்தல் அரசியலில் கூட ஒரு போதும் வெல்ல முடியாது. மேற்கு வங்காளத்தில் 2000 இடங்களில் பேரணி என்று சவடால் அடித்தவர்கள் உண்மையில் 70 இடங்களில் தான் பேரணிகள் நடத்தினர்.

மொத்தத்தில் சங்கப் பரிவார இந்துத்துவக் கும்பல் இராம நவமியை ஒரு கலவர நாளாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜனவரி, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 5 | 1989 ஜனவரி 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழமக்களின் உரிமைப் போர் தொடரவேண்டும்!
  • போலீசின் அவதூறு – அடக்குமுறைகளை எதிர்த்து பிரச்சார இயக்கம்
  • ராஜீவ் – வி.பி.சிங்
    கொள்கை மாற்றமில்லை
  • புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்! துரோக சங்கங்கள் கலக்கம்!
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஊருக்கு ‘நீதி’! ஊழியருக்கு அநீதி!
  • கோர்பசேவின் முடிவு நெருங்குகிறது!
  • இறால் உரிப்புத் தொழில்: மானத்தை உரிக்கும் அவலம்
  • அமரர் எம்.ஜி.ஆரும் அரியணை எம்.ஜி.ஆரும்
  • இடஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: மேல்சாதியினுடைய பதவிவேட்டைக்கான போட்டி
  • இன்னுமொரு கதிர்வீச்சுக் களம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்

பாசிச பா.ஜ.க. கும்பலானது வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு போன்ற தேர்தல் முறைகளைப் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான கருவிகளாக மாற்றியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையை அதன் அடுத்த இலக்கில் வைத்துள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம்; தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டம்; தமிழ்நாட்டு எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொகுதி மறுவரையறை விவகாரத்தை இந்திய அளவில் விவாதப் பொருளாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இதனை மென்மேலும் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற பீதியில் ஆரம்பத்திலிருந்தே இவ்விவகாரத்தைத் தற்காப்பு நிலையிலிருந்தே அணுகி வருகிறது பா.ஜ.க. கும்பல்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம்

தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

தொகுதி மறுவரையறை என்பது குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கையாகும்.

இந்நடவடிக்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் “ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கருதுகோளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது, இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரைச் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் (60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு இது பொருந்தாது); அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இவற்றின் மூலமே இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் சமமான மதிப்பை வழங்க முடியும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. இதனை ஈடேற்றும் வகையிலேயே தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அந்தவகையில், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும். 

1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் இதுவரை நான்குமுறை எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறையும் அதற்கு முன்பு கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. 1971-இல் கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் 1973-இல் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவை தொகுதிகளே தற்போதுவரை நீடிக்கின்றன.

ஏனெனில், அச்சமயத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் தொகுதி மறுவரையறையால் அது பாதிக்கப்படக் கூடாது அல்லது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவரும் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக, 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசாங்கமானது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையிலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது.

இதே காரணத்தின் பேரில், 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசாங்கமும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையில் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது. இருப்பினும், 2002-இல் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் அதன் எல்லைகள் மட்டும் மறுநிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சமநிலையை அடையவில்லை. 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 1971-இல் 4.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகையானது 2023-இல் 7.68 கோடியாக அதிகரித்திருக்கிறது; ஆனால், 8.38 கோடியாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகை 23.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்கள், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இந்தி வளைய மாநிலங்களுக்கும் இடையில் மக்கள்தொகை வளர்ச்சியில் பாரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதானது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகவே அமையும். சான்றாக, தற்போதைய 543 தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு எட்டு மக்களவை தொகுதிகளை இழக்கும்; தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக உயர்த்தி மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய விகிதத்தின்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்கப்பட வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், மோடி அரசோ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தன்னை எதிர்க்கும் மாநிலங்களை வஞ்சித்து ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, 543 பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் 888 இருக்கைகளும், 250 பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக திட்டத்தை அம்பலப்படுத்தியது.

ஏற்கெனவே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அளவுகோலில் 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக  2011 மக்கள்தொகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சித்துவரும் மோடி அரசானது, தொகுதி மறுவரையறையிலும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்கப் பார்க்கிறது. இதன் காரணமாகவே, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

அசாமின் அனுபவம் உணர்த்துவதென்ன?

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மார்ச் 5 அன்று தமிழ்நாடு தி.மு.க அரசால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை 2056-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விகிதத்திலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில், தென்மாநில எம்.பி-க்களை கொண்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” (JAC)-விற்கான கூட்டம் மார்ச் 22 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிடமுள்ள கட்சிகள், ஆளும் அரசுகள், பிற அமைப்பினருடன் ஜனநாயகமாக விவாதிக்க வேண்டும்; 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையைத் தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், அல்லது எதிர்க்கட்சிகள் கோரும் விழுக்காட்டின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தினாலும், அது பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும். இதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஜம்மு & காஷ்மீரிலும், அசாமிலும் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்றத் தொகுதி மறுவரையறையே சாட்சி.

ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பின்னர், 2022-இல் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட்டு, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-லிருந்து 90-ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு தொகுதி மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரைக் காட்டிலும் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஜம்முவிற்கு ஆறு தொகுதிகள் அதிகரிக்கப்பட்டன. 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் புதியதாக இணைக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஐந்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 2023-இல் அசாமில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது, 14 நாடாளுமன்ற மற்றும் 126 சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், தொகுதிகளின் எல்லைகள் பா.ஜ.க. கும்பலுக்குச் சாதகமான வகையில் மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள 10 தொகுதிகள் உடைக்கப்பட்டு அவை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன; பல தொகுதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாகவும் இருக்கும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டன; இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான தொகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.

மேலும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பார்பேட்டாவில் ஆறு முதல் ஏழு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அவற்றில் பெரும்பான்மை தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இவ்வாறு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பையும் இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தும் வகையில், வாக்குவங்கியைக் காவிமயமாக்கி தொகுதி மறுவரையறை மேற்கொண்டிருப்பதன் மூலம் இனி அசாமில் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க-வால் எளிமையாக வெற்றிபெற முடியும் என்ற நிலைமையைப் பாசிச கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, தொகுதி மறுவரையறை என்பது பாசிச  கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கேற்ப தொகுதிகளைச் செப்பனிடும் பணியே ஆகும்.

பாசிசமயமாகும் தொகுதிகள்

நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச  கும்பலின் நோக்கமாகும்.

ஆகவே, தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதைக் கடந்து தொகுதிகள் பாசிசமயப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பா.ஜ.க. பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் வெற்றிபெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறையின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் அவற்றிடமிருந்து பறிக்கப்படும். இது இந்தியாவில் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பாசிச பா.ஜ.க. கும்பலின் கனவை நனவாக்குவதற்கான துலக்கமான நடவடிக்கையாகும்.

ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றிக்கொண்டு, பல்வேறு பாசிச சட்டத்திருத்தங்கள், தேர்தல் முறைகேடுகளை அமல்படுத்துவதன் மூலம், சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டி பா.ஜ.க. மட்டுமே வெற்றிபெறும் வகையில் தேர்தலை முற்றிலுமாக பாசிசமயமாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாகவே ஒரே நாடு ஒரே தேர்தலையும் தொகுதிகள் மறுவரையறையையும் பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான அடிக்கட்டுமான நடவடிக்கையாகும்.

மேலும், பாசிச பா.ஜ.க. கும்பல் தொகுதி மறுவரையறை செய்வதானது தென்மாநிலங்களுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல. இது இந்தியா முழுவதுமுள்ள பலதரப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற பாசிச நடவடிக்கையாகும்.

அதேபோல், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புல்டோசர் ராஜ்ஜியம், மசூதிகள் அபகரிப்பு போன்றவற்றின் மூலம் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரத்தை சூறையாடிவருகிறது பா.ஜ.க. கும்பல். தற்போது, தொகுதி மறுவரையறையின் மூலம் இஸ்லாமிய தொகுதிகள் என்ற ஒன்றையே இல்லாமல் செய்து அதன்மூலம் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்துவது என்ற நடைமுறையை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது. இதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு மிச்ச மீதமிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்துக்கட்டி அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கிறது.

தற்போது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் பா.ஜ.க. கும்பலானது பிற்காலத்தில் அவற்றையும் ஒழித்துக்கட்டி அம்மக்களையும் இந்துராஷ்டிரத்தின் இரண்டாந்தர குடிமக்களாக்கும். இந்த ஒடுக்குமுறையானது கிறித்தவ சிறுபான்மை மக்களுக்கும் பாசிச கும்பலுக்கு அடிபணியாத பிரிவினருக்கும் நடந்தேறும்.

அதேபோல், தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதென்பது நேரடியாக அம்மாநிலங்களில் வாழும் தேசிய இன மக்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.

ஆனால், இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காத எதிர்க்கட்சிகள், தங்களுக்கு ஜனநாயகம் வழங்கியும் தாங்கள் பாதிக்கப்படாத வகையிலும் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டுமென பா.ஜ.க-விடம் கோரிக்கை வைக்கின்றன. இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக அமையக்கூடிய தொகுதி மறுவரையறையைப் பாசிச பா.ஜ.க. நடத்தக்கூடாது என்று அறைகூவி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக, அப்பட்டமாக பா.ஜ.க. கும்பலின் பாசிச சதித்திட்டத்திற்கு மக்களைப் பலியாக்குகிறார்கள்.

தேசிய இனங்களின் கூட்டாட்சி குடியரசுக்காகப் போராடுவோம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் தற்போது பாசிச கும்பல் இதனை நடத்துவதில் உள்ள அபாயம் குறித்துப் பேசுவதுடன் நிறுத்திகொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் 1947-இல் அதிகாரமாற்றம் நடந்ததிலிருந்து இதுநாள் வரையிலும் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைகளும் அதன்மூலம் வழங்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவே இருந்து வந்துள்ளது என்பதே உண்மை.

ஏனெனில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது, மக்கள்தொகையை மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நாட்டில் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அளவுகோளாக மக்கள்தொகையை மட்டுமே தீர்மானிப்பதென்பது அப்பட்டமாகச் சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் அதன்மூலம் அந்த தேசிய இனங்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும். அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில மக்கள் இத்தகைய ஒடுக்குமுறையை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைச்சாலை என்கிறார்கள்.

இதுகுறித்து நாம் பேசுகையில்,  நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள “இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை சம எண்ணிக்கையிலான மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என்ற விதியிலிருந்து 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், இவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை மறைப்பதற்கும் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகும். மாறாக, அளவு ஏற்றத்தாழ்வின்றி அனைத்து தேசிய இனங்களும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம், மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூட அனைத்து மாநில மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடையாது. அதிலும் மக்கள்தொகை எண்ணிக்கையையே அளவுகோலாக நிர்ணயித்து பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களுக்கு தலா ஒரு சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் எத்துணை ‘மேன்மை’யானது என்பதைப் பறைசாற்றுகிறது.

ஏனெனில், இந்தியா என்பது தேசிய இனங்களுக்கும் மாநிலங்களுக்கும் அதிகாரம் வழங்குகின்ற உண்மையான கூட்டாட்சி நாடல்ல. இந்தியா ஒரு அரை-கூட்டாட்சி நாடு என்பதே அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகும். பாசிச  கும்பல் அதிகாரத்திற்கு வந்தப் பிறகு தேசிய இனங்களுக்கான பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் படிப்படியாகச் சிதைத்து வருகிறது. இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் படிப்படியாகப் பறித்து மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்றி வருகிறது.

ஆகவே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் நின்றுக்கொண்டு தேசிய இனங்களின் உரிமைகளை நம்மால் நிலைநாட்டிவிட முடியாது.

மாறாக, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தையும் உண்மையான அதிகாரத்தையும், பிரிந்து போகும் அதிகாரம் கொண்ட தேசிய சுயநிர்ணய உரிமையையும் வழங்கக்கூடிய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசிற்காக போராடுவதன் மூலமே தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜனவரி, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 4 | 1990  ஜனவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புதிய பத்தாண்டில் எதிர்கொள்ளும் கடமைகள்
  • ஆந்திரா பணயக் கைதிகள் விவகாரம்: யார் பக்கம் நியாயம்?
  • வானொலி – தொலைக்காட்சி தன்னாட்சி மூளைச் சலவை
  • ருமேனிய ஆட்சிக் கவிழ்ப்பு: அடிமை விலங்கு உடைக்கப்பட்டது! பொன்ன் விலங்கு பூட்டப்பட்டது!
  • போலிக் கம்யூனிஸ்டுகள் புதிய சித்தாந்தம்
    மீசை வைத்தால் வீரன்! மீசையை எடுத்தால் ஞானி!
  • போபால்: துயரம் தொடர்கிறது!
  • பனாமா: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு! நோரிகாவின் தேசபக்த வேடம்!
  • அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஊர்வலம் – ஆர்ப்பாட்டம்!
  • போலீசின் சதி – அவதூறுகளை எதிர்த்து பிரச்சார இயக்கம்
  • ஜே.வி.பி. இயக்கம் தரும் படிப்பினைகள்!
  • உள்ளாடை நிறுவனங்கள்: தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கும் கொடூரம்!
  • அம்பானியை அரவணைக்கும் ஜோதிபாசு
  • ஆணவமிக்க போலீசு கும்பலை அடிபணிய வைத்த போராட்டம்!
  • கைதான தோழர்கள் விடுதலை! தொடர்கிறது அடக்குமுறையின் நிழல்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்

கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு | அனைவரும் வருக! | தோழர் வெற்றிவேல் செழியன்

மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு | அனைவரும் வருக! | தோழர் வெற்றிவேல் செழியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 3 | 1989  டிசம்பர் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப் – காஷ்மீர் நெருக்கடி: புதிய ஆட்சியாளர்களிடமும் தீர்வு கிடையாது
  • தஞ்சை தியாகிகள் நினைவுத் தூண் தகர்ப்பு: புரட்சிகர இயக்கங்களை ஒடுக்க இன்னுமொரு சதி நடவடிக்கை!
  • அடிமைத்தனத்தின் மறுபெயர் திராவிடக் கட்சிகள்
  • பழைய – புதிய ஆட்சியாளர்களிடையே உடன்பாடுகள் – சமரசங்கள்
  • டாக்டர் இராஜினி திரணகம கொலை: ஈழத் தமிழ் சமுதாயத்துக்கு ஒரு சவால்!
  • வங்கதேச அகதிகள் விபச்சாரத்துக்கு விற்பனை! டெல்லி போலீசு உடந்தை!
    ஜே.வி.பி. இயக்கம் தரும் படிப்பினைகள்!
  • திருச்சி நேரு சிலை தஞ்சை நினைவுத் தூண் தகர்ப்பு: போலீசின் அவதூறு அட்டூழியங்களை எதிர்த்து பிரச்சார இயக்கம்
  • வையம்பட்டி துப்பாக்கிச் சூடு: கிரிமினல் போலீசு அதிகாரத் திமிர்!
  • டெல்கோ தொழிலாளர் போராட்டம்: தொழிற்சங்கவாதம் – ஒரு மண் குதிரை!
  • மரண வாயிலில் அமெரிக்கா!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்

இந்திய பிரதமர் மோடி வெளிநாடுகளில் மத பதற்றத்தை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

டந்த மார்ச் 30 ஆம் தேதி பிரிட்டிஷ் நாளிதழான தி டையிலி மெயில் (The Daily Mail) ”போலீசின் உளவுத்துறை அறிக்கை” என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ”பிரிட்டிஷ் இந்து அமைப்புகளும் தீவிர வலதுசாரி குழுக்களும் அவர்களுக்குள் இருக்கும் பொதுவான இஸ்லாமியர் வெறுப்பு என்ற அடிப்படையில் கூட்டணி சேருகின்றனர். இது மீண்டும் பிரிட்டனில் மத மோதல்கள் வெடிப்பதற்கான அச்சத்தைத் தோற்றுவிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போலீசு தலைவர்களின் கவுன்சில் (National Police Chiefs’ Council, NPCC) தொகுத்த ரகசிய அறிக்கையில் இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த ரகசிய அறிக்கை தேசிய சமூக பதற்றக் குழுவால் (National Community Tension Team) ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.

சவுத்போர்ட் (Southport) என்னும் இடத்தில், ஜூலை 2024-இல், மூன்று சிறுமிகள் அதிதீவிர வலது சித்தாந்தத்திற்கு ஆட்பட்ட ஆக்செல் ருடகுபானா (Axel Rudakubana) என்பவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பின்பு “ராபிட் ஸ்பிரிண்ட்” என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உள்துறை அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு முடித்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை வெளிவந்துள்ளது. ஸ்பிரிண்ட் மதிப்பாய்வில் இந்துத்துவத்தை “கவலைக்குரிய தீவிரவாதம்” (extremism of concern) என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்படுவது இதுவே முதல்முறை.

“இந்துத்துவா என்பது இந்து மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு அரசியல் இயக்கமாகும், இது இந்திய இந்துக்களின் மேலாதிக்கத்திற்கும் இந்தியாவில் ஒரு ஒற்றை இந்து ராஷ்டிரம் அல்லது அரசை நிறுவுவதற்கும் வாதிடுகிறது.


படிக்க: பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்


இங்கிலாந்தில் இந்து மற்றும் முஸ்லீம் சமுதாயங்களுக்கு இடையிலான பதற்ற நிலை தெளிவாகவே தெரிகிறது. பிரிட்டன் லெய்செஸ்டரில் (Leicester) தவறான தகவல்களால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே நடந்த கலவரம் தற்போது இதற்கான ஆதாரமாக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், NPCC அறிக்கையில், ”மிகத் தீவிர வலதுசாரி டாமி ராபின்ஸன் (ஸ்டீபன் யாக்ஸ்லி லெனான் என்பது இவரின் உண்மை பெயர்) ஏற்கெனவே சில இந்து குழுக்களைச் சந்தித்து முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களை ஊக்குவித்ததாகவும் அவரை இந்திய ஊடகங்களும், பிரிட்டனில் உள்ள இந்துக்களும் வரவேற்பதாகவும் தெரிகிறது. பிரட்டனில் உள்ள இந்து ஆதரவாளர்கள் பிரிட்டிஷ் தீவிர வலதுசாரிகளுடன் ஒன்றிப் போவதற்கான வாய்ப்புகள் எதார்த்தமாக உள்ளது. இந்த இரண்டு குழுவினருக்கும் இஸ்லாமிய வெறுப்பு என்பது ஒன்றிப்போவதற்கான அடிப்படையாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சில ஐரோப்பியத் தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள், குறிப்பாக ஜூலை 2011 இல் நார்வேயில் 77 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரீவிக் (Anders Breivik) இந்துத்துவா சித்தாந்தத்தின் அம்சங்களால் கவரப்பட்டுள்ளார் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ப்ரீவிக் தனது கொள்கை அறிக்கையில் இந்துத்துவா சித்தாந்தத்தைப் பாராட்டியுள்ளதாகவும், மோடியின் தலைமையிலான பா.ஜ.க, மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்ற மற்றொரு இந்திய தீவிரவாத குழுவை தனக்கான தகவல் ஆதாரங்களாகப் பட்டியலிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இந்துத்துவத்திற்கும் வெள்ளை மேலாதிக்கவாதிகளுக்கும் இடையிலான கூட்டணியை மிதவாத இந்துக்கள் கண்டித்துள்ளனர் என்பதையும் NPCC அறிக்கை பதிவு செய்துள்ளது.

மேலும், மோடியை ஆதரிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் பிரிட்டன் தேர்தலில் குறுக்கிடுவார்களாக உள்ளனர் என அறிக்கை கவலை தெரிவிக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை மேற்கோள்காட்டி, பத்து லட்சம் இந்து வாக்காளர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குறிவைக்கப்பட்டு தொழிலாளர் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டாம் எனவும் டோரிகளுக்கு (பழமைவாத கட்சிக்கு) வாக்கு செலுத்த வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்துள்ளனர். ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) தலைமையிலான தொழிலாளர் கட்சி இந்து விரோதியாக அன்று சித்தரிக்கப்பட்டது.


படிக்க: பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’


பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் லெய்செஸ்டர் மற்றும் பிற இங்கிலாந்து நகரங்கள் முழுவதும் இந்துக்களிடம் பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லும் தகவல்களைப் பரப்பியதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் ஆளும் கட்சியான பி.ஜே.பி-யின், ஓவர்சீஸ் ஃப்ரிண்ட்ஸ் ஆஃப் தி பி.ஜே.பி (Overseas Friends of the BJP) இங்கிலாந்து கிளை 48 இடங்களில் பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கப் பிரச்சாரம் செய்துள்ளது என அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்து தீவிரவாதிகளிடையே பிரபலமான ”ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷம், இந்துக்களுக்கும் முஸ்லீம் மற்றும் சீக்கிய சமூக மக்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்குவதாக NPCC அறிக்கை கூறுகிறது. சில பாலிவுட் படங்கள் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பிரதிபலித்து வெளியாகிறது‌. இது பிரிட்டனின் தெருக்களில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஜனவரியில், சீக்கிய குழுக்கள் சினிமா திரையரங்கு முன்பாக ”எமர்ஜென்சி” என்ற படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இப்படம் அச்சமூகத்தைத் தவறாகச் சித்தரித்திருந்தது என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் கலவரத்தைத் தூண்டி குளிர் காயும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல், வெளிநாடுகளிலும் இஸ்லாமியர்களுக்கெதிரான கலவரத்தைத் தூண்ட ஆயத்தமாகி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.  இதனுடன் தீவிர வலதுசாரிகளும் சங்கமித்துக் கொள்கின்றனர் என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை

டந்த ஒருமாத காலமாக இரு மொழிக்கொள்கை எதிர் மும்மொழிக்கொள்கை விவாதம் தேசியளவில் பேசுபொருளாகியிருக்கிறது. காரணம், இதுநாள் வரையிலும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வை சரிவர பகிர்ந்தளிக்காமல் வஞ்சித்துவந்த பாசிச மோடி அரசானது, தற்போது பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தரமுடியும் என்று அடாவடித்தனம் செய்துவருகிறது. மோடி அரசின் பாசிச சர்வாதிகாரப் போக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. மாநிலங்களுக்கான நிதியை நிறுத்துவது ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற நிலைக்குழுவே தெரிவித்தாலும் தற்போதுவரை நிதியை விடுவிக்காமல் துளியும் இரக்கமின்றி தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியுடன் விளையாடிவருகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை

பி.எம். ஸ்ரீ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதை தி.மு.க. அரசு தடுப்பதாக பா.ஜ.க. கும்பல் கதையளந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், பி.எம். ஸ்ரீ (PMSRI – Pradhan Manthri Schools for Rising India) திட்டமென்பது இந்தியா முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளை காவி-கார்ப்பரேட்மயமாக்கும் பாசிச கெடுநோக்கத்துடன் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதே உண்மையாகும். ஏற்கெனவே, கட்டடங்கள், கல்விக் கருவிகள், நவீன வசதிகள், விளையாட்டு மைதானம், தேர்ச்சி விகிதம், ஆசிரியர்-மாணவர்கள் எண்ணிக்கை என உள்கட்டமைப்பிலும் கற்பித்தலிலும் சிறந்து விளங்குகின்ற மாநில அரசுகளின் பள்ளிகளை, ஒன்றிய அரசு அபகரித்து அவற்றை “பி.எம். ஸ்ரீ பள்ளியாக” அறிவிக்கும். ஒன்றியத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி என்ற வகையில் இப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு இந்தியா முழுவதும் 14,500 பி.எம். ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதென்பது இத்திட்டத்தின் இலக்காகும்.

இப்பள்ளிகளுக்கான நிதியில் 60 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வழங்கும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும். “அருமைப் பள்ளி” (School of Excellence) என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் உள்ள அனைத்து அம்சங்களும் இப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும். இப்பள்ளிகளை முற்றிலுமாக காவி-கார்ப்பரேட்மயமாக்கிவிட்டு, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் மாநில அரசுகளின் வசம் ஒப்படைத்துவிட்டு ஒன்றிய அரசு விலகிக்கொள்ளும். இதுதான் பி.எம். ஸ்ரீ திட்டத்தின் சாரமாகும்.

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என அடாவடித்தனமாக பேசி வரும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

சான்றாக, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்வி, 9, 10 வகுப்புகளுக்கான உயர்நிலைக்கல்வி, 11,12 வகுப்புகளுக்கான மேல்நிலைக் கல்வி என 5+3+2+2 என்ற பள்ளிக்கல்வி முறை தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், பாசிச மோடி அரசோ 5+3+3+4 என்ற வகைப்பாட்டை பள்ளிக்கல்வியில் அமல்படுத்துவதன் மூலம் முன் மழலை வகுப்பு (Pre KG), கீழ் மழலை வகுப்பு (LKG), மேல் மழலை வகுப்பு (UKG) ஆகிய வகுப்புகளை கட்டாயமாக்குகிறது.

இதன்மூலம் குழந்தைகளின் மழலைத்தனத்தில் வன்முறை செலுத்துவது மட்டுமின்றி, பிஞ்சு வயதிலேயே அவர்களின் மூளையில் புராணக் குப்பைகள் திணிக்கப்படும். ஐந்தாம் வகுப்பு வரையிலும் தாய்மொழி வழிக்கல்வி இருக்கும், மொழிப்பாடமாக ஆங்கிலம் அல்லது இந்தி கற்பிக்கப்படும் என்று இத்திட்டத்தில் சொல்லப்பட்டாலும் 6-ஆம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாய மொழிப்பாடமாகவும், எட்டாம் வகுப்பிற்குப் பிறகு சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாகவும் ஆக்கப்படும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படும்.

3 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறாதவர்கள் பழைய வகுப்பிலேயே வடிகட்டப்படுவர். இத்தகைய பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பதுடன் 8-ஆம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை வழங்குவது என்ற பெயரில் அவர்கள் மீண்டும் குலத்தொழிலுக்கு தள்ளப்படுவர். 14 வயதுக்கு மேல் குழந்தைகள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லலாம் என குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் மேற்கொண்டிருப்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதனால், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை கேள்விக்குறியாகும்.

மொத்தத்தில், மாநில அரசுகளின் வசமுள்ள பள்ளிகள் ஒன்றிய அரசால் அபகரிக்கப்பட்டு, அவை தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டு, மாநில அரசுகளிடமே மீண்டும் திணிக்கப்படும். இப்பள்ளிகளின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளையும் பி.எம். ஸ்ரீ பள்ளிகளாக மாற்றும் திட்டத்தையும் மோடி அரசு முன்வைத்துள்ளது.

மறுபுறம், பி.எம். ஸ்ரீ பள்ளிகளை ‘மாதிரி’ பள்ளிகளாக மாற்றுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரத்திலுள்ள பிற பள்ளிகள் அரசால் கவனம்செலுத்தப்படாமல் கைவிடப்படும் சூழல் உருவாகும். இதன்காரணமாக அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை காரணம்காட்டி அப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தப்படும் மிகப்பெரிய சதித்திட்டமும் இத்திட்டத்தில் ஒளிந்துள்ளது. மறுபுறம், இத்திட்டத்தின் கீழ் செயல்படும் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்படும். இவ்வாறு ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.

முடக்கப்படும் நிதியும் பணியவைக்கப்படும் மாநிலங்களும்

2022-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பி.எம். ஸ்ரீ திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி அரசு, இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் நிர்பந்தித்தது. பெரும்பான்மையான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதில் கையெழுத்திட்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து கையெழுத்திடாமல் தவிர்த்தன. ஆனால், மோடி அரசோ இத்திட்டத்தை ஏற்றால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி கிடைக்கும் என சர்வாதிகாரப் போக்குடன் நடந்துக்கொண்டது.

2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநில அரசுகள் பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்கான தங்களது விருப்பத்தையும் அதற்கான நிபந்தனைகளையும் தெரிவித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதின. இதனையடுத்து 2024 ஜூலை மாதத்தில் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு “சமக்ர சிக்‌ஷா அபியான்”(National Education Mission) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பள்ளிக்கல்விக்கான நிதியை எதேச்சதிகாரமாக முடக்கியது மோடி அரசு. நிதி நெருக்கடி தாளாமல் டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநில அரசுகளும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் அம்மாநிலங்களுக்கான நிதியை மட்டும் விடுவித்துவிட்டு மேற்குவங்கத்திற்கான ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முடக்கியது.

அதேபோல், தொடர் அழுத்தத்திற்குப் பிறகும் தமிழ்நாடு, கேரள அரசுகள் பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கான 2,152 கோடி ரூபாயையும் கேரளாவிற்கான 859 கோடி ரூபாயையும் முடக்கியது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பும், மாணவர்களின் கல்வி பாதிப்படையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் ஆசிரியர் சங்கங்களும் போராடி வருகின்றனர்.

பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான நிதி தவிர்த்து சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மீதத் தொகையையேனும் விடுவிக்குமாறு தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றால் மட்டுமே சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை விடுவிக்க முடியும் என்று பாசிச திமிருடன் நடந்துகொள்கிறது மோடி அரசு. மேலும், தமிழ்நாட்டிற்கான 2,500 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் நிதியை இழக்கிறது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டிற்கான நிதியையும் வழங்க முடியாது என மிரட்டல் விடுக்கிறது மோடி அரசு.

தி.மு.க. அரசின் வரம்புக்குட்பட்ட எதிர்ப்பும் சந்தர்ப்பவாதமும்

பி.எம். ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதாக தி.மு.க. அரசு தெரிவித்தாலும் அத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய மும்மொழிக் கொள்கையையும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பையும் மட்டுமே தி.மு.க. அரசு எதிர்க்கிறது. ஆனால், கல்வியை காவி-கார்ப்பரேட்மயமாக்கி அரசு பள்ளிக் கட்டமைப்பையே ஒழித்துக்கட்டக்கூடிய இத்திட்டத்தின் பிற அம்சங்கள் குறித்தெல்லாம் தி.மு.க. அரசு வாய்திறப்பதில்லை.

மேலும், 2024 மார்ச் மாதத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்தில், பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆர்வமாக இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்று தெரிவித்திருந்தது தி.மு.க. அரசின் சந்தர்ப்பவாதத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

மேலும், பி.எம். ஸ்ரீ திட்டத்திலிருந்து “பி.எம்.” (பிரதான் மந்திரி) என்ற முன்னொட்டை நீக்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்துமாறு ஒன்றிய அரசிற்கு தி.மு.க. அரசு முன்மொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது பி.எம். ஸ்ரீ திட்டத்தை திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு முயன்றதா? என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

மற்றொருபுறம், தேசிய கல்விக் கொள்கையை காரணம்காட்டி பி.எம். ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. அரசு பள்ளிக்கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் சமக்ர சிக்‌ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) திட்டம் குறித்து மூச்சு கூட விடுவதில்லை.

சமக்ர சிக்‌ஷா அபியான் என்பது ஆசிரியர்களுக்கான சம்பளம், உள்கட்டமைப்பு வசதிகள் என பள்ளிக்கல்வித் திட்டங்களுக்குரிய அனைத்து நிதியையும் வழங்குவதற்கான ஒன்றிய அரசின் திட்டமாகும். காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி திட்டம் எனப்படும் சர்வ சிக்‌ஷா அபியான் (SSA), ராஷ்டிரிய மத்யாமிக் சிக்‌ஷா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (TE) ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து 2018-ஆம் ஆண்டில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம்)  மோடி அரசு கொண்டுவந்தது. இதன்மூலம் பள்ளிக்கல்விக்கு நிதி வழங்கிக் கொண்டிருந்த பிற திட்டங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு பள்ளிக்கல்விக்குரிய அனைத்து நிதி ஒதுக்கீட்டையும் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கொண்டுவந்தது.

2020-இல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர், எந்தவித ஆலோசனையுமின்றி 2021-ஆம் ஆண்டில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்தது மோடி அரசு. சாரம்சத்தில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டமும் அத்திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்விக்கு வழங்கப்படும் நிதியும் தேசிய கல்விக் கொள்கையையும் அதன் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதாகவே மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், இதுகுறித்து தற்போது வரையிலும் தி.மு.க. அரசு வெளியில் பேசவில்லை. 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சமக்ர சிக்‌ஷா அபியான் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டு அதற்கான வரைவு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்ட போதும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க. உள்ளிட்டு எந்த மாநில அரசுகளும் அதனை எதிர்க்கவில்லை.

மாறாக, சம்க்ர சிக்‌ஷா அபியான் நிதியைப் பெற்றுக்கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம், வானவில் மன்றம் என தேசிய கல்விக் கொள்கையிலுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் தமிழ்நாடு அரசின் திட்டத்தைப் போல பெயர் மாற்றம் செய்து அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக உள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் வேலையை சிரமேற்கொண்டு செய்து வருகிறது தி.மு.க. அரசு. தற்போது பி.எம். ஸ்ரீ திட்டத்தையும் வரம்புக்குட்பட்ட அளவிற்கே எதிர்த்து வருகிறது.

ஆனால், பாசிச மோடி அரசோ தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கான நிதியை முடக்கியிருப்பதன் மூலம் பாசிச நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கான வசதியை முடக்கி பதிலடி கொடுப்பதே ஆகும். மேலும், பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.

மறுபுறம், இதுநாள்வரை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவதாக சொல்லும் மாநில கல்விக் கொள்கையானது தேசிய கல்விக் கொள்கையின் நகலே என்பதை அக்குழுவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் ஜவகர் நேசன் அம்பலப்படுத்தியுள்ளார்.  எனவே, மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவரும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு அதன் கீழ் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இக்குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் கல்வித் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் தலையீடுகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் சமக்ர சிக்‌ஷா அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கை திணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக மாற்று கல்விக் கொள்கையை முன்வைத்து அறிவியல்பூர்வமான, முற்போக்கான மாற்று கல்விக் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவையும் உள்ளது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 நவம்பர், 1-15 டிசம்பர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 1-2 | 1989  நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தொங்குநிலை நாடாளுமன்றம்: யாருக்கு வேண்டும் நிலையான ஆட்சி?
  • ஜே.வி.பி. தலைவர்கள் மிருகத்தனமான படுகொலை! பாசிச பிரேமதாசா கும்பலின் கிரிமினல் நடவடிக்கை!
  • ஈழத் துரோகிகளின் அழிவு நெருங்குகிறது!
  • “புதிய ஜனநாயகம்” ஐந்தாம் ஆண்டுவிழா!
  • இந்திய ஜனநாயகத்தின் இன்றையவிலை ரூ.10,000 கோடி!
  • புரட்சிகர அமைப்புகளை ஒடுக்க போலீசு-காங்கிரசு கும்பலின் நடவடிக்கை!
  • 1984 தேர்தல்: சீக்கியர்கள் படுகொலை!
    1989 தேர்தல்: முஸ்லீம்கள் படுகொலை!
  • ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை!
  • தேசிய முன்னணி அரசு: பதவி வெறியர்களின் ஆட்சி! பாசிச ஆபாயம் நீடிக்கிறது!
  • தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: ஓட்டுக் கட்சிகள் பீதி! உழைக்கும் மக்கள் ஆதரவு!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!

“ஆர்.எஸ்.எஸ். பாவத்தின் குழந்தை, அது வன்முறை எனும் பாவம். நாக்பூரில் நடந்த கலவரம்தான் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்-யைத் தோற்றுவிக்கத் தூண்டுதலாக இருந்ததென அமைப்பின் ‘வரலாற்றியலாளர்கள்’ கூறத் தவறுவதே இல்லை”.

  • ஏ.ஜி.நூரானி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” புத்தகத்திலிருந்து

ன்முறையில் பிறந்து, வன்முறையினாலேயே வளர்ந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இன்று இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு நாட்டையே சூறையாடி வருகிறது. 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று அதன் நூற்றாண்டை எட்டியிருக்கும் நிலையில், தனது இந்துராஷ்டிரக் கனவை நனவாக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சியமைந்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சங்கப் பரிவார கும்பல்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்பு ஔரங்கபாத்) உள்ள குல்தாபாத்தில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இதனை இடித்து அகற்ற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படைகள் நீண்ட காலமாக இந்துமதவெறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஔரங்கசீப்பிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வதன் மூலம் அங்குள்ள மக்களிடையே இஸ்லாமிய வெறுப்பையும் விதைத்து வருகின்றன.

இந்த வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் விதமாகக் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி “சாவா” என்ற இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு திரைப்படம் ஒன்று வெளியானது. இத்திரைப்படத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியை கொடூரமாகக் கொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஔரங்கசீப்பிற்கும் மராத்திய மன்னர்களுக்கும் அதிகாரத்திற்காக நடந்த போட்டியைக் கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இஸ்லாமிய-இந்து பகையாக சித்தரித்து மதவெறியைத் தூண்டும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த சிலர் இஸ்லாமியர்களைத் தாக்கியது, படத்தைப் பார்த்த பள்ளி மாணவர்கள் “சம்பாஜிக்காக பழிவாங்குவோம்” என்று உறுதிமொழியேற்றது போன்றவை மகாராஷ்டிராவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்தன.

சாவா திரைப்படத்தின் மூலம் கிளறிவிடப்பட்ட இஸ்லாமிய வெறுப்பை அறுவடை செய்யும் விதமாக சங்கப் பரிவாரக் குண்டர்கள் வெறுப்பு பிரச்சாரங்களில் இறங்கினர். ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட காவிக் குண்டர் படைகள் தீவிரப்படுத்தின. “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததைப் போல நாக்பூரில் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம்” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தன. “எல்லோரும் ஔரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்ததன் மூலம் மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட ஆயத்தமாகிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆளும் பா.ஜ.க. அமைச்சர்கள் வெறுப்பு பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபட்டதன் மூலம் ஔரங்கசீப் கல்லறை விவகாரத்தை மகாராஷ்டிரா முழுவதும் விவாதப்பொருளாக்கினர்.

இதனையடுத்து கடந்த மார்ச் 17-ஆம் தேதி, ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தி சங்கப் பரிவார அமைப்புகள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தின. நாக்பூரின் மகால் பகுதியில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி இஸ்லாமிய மக்களை ஆத்திரமூட்டி திட்டமிட்டபடி வன்முறையைத் தொடங்கியது காவிக் கும்பல். நாக்பூரின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது காவி குண்டர்கள் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்; இரண்டு ஜே.சி.பி. வாகனங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன; இஸ்லாமியர் ஒருவர் காவிக் கும்பலால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ச் 17 அன்று காலை தொடங்கி நள்ளிரவு வரையிலும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களைக் கலவரம் செய்ய அனுமதித்துவிட்டு, கைக்கட்டி வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. அரசு. இக்கலவரத்தால் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி இந்து மக்களும் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.

ஒருபுறம் காவிக் குண்டர்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாசிச கும்பல், மற்றொருபுறம் தன்னுடைய அதிகார பலத்தின் மூலம் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

“அட்டாரோலில் மாலை தொழுகைக்குப் பிறகு சுமார் 200-250 பேர் கொண்ட கும்பல் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பத் தொடங்கியது” என்று கூறி பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையே கலவரத்திற்குப் பொறுப்பாக்கினார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதன்பிறகு, மகாராஷ்டிரா போலீசு இஸ்லாமியர்களை வேட்டையாடத் தொடங்கியது.

மார்ச் 22 நிலவரப்படி, கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 10 சிறுவர்கள் உட்பட 105 பேரைக் கைது செய்துள்ளது மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு, இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களே ஆவர். கலவரத்திலிருந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டிற்குள் அடைந்திருந்த இஸ்லாமிய இளைஞர்களைக் கூட கைது செய்தது மகாராஷ்டிரா போலீசு. கலவரத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளி எனக் கூறி சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் உள்ளூர் தலைவரான பாஹீம் கானை கைது செய்து அவர் மீது தேசத் துரோக வழக்கை பாய்ச்சியுள்ளது.

மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கான உரிய இழப்பீட்டைக் ‘கலவரக்காரர்களிடமிருந்து’ வசூலிக்கிறோம் என்று கூறி இஸ்லாமிய மக்கள் மீது புல்டோசர் பயங்கரவாதத்தை ஏவியது. மார்ச் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இஸ்லாமியத் தலைவர் பாஹீம் கானின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது.

ஒருபுறம் இஸ்லாமிய மக்களை வேட்டையாடிக்கொண்டே இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தானாக முன்வந்து சரணடைந்திருப்பதாகவும் நாடகமாடிக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு. ஆனால், கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி இஸ்லாமியர்களைக் கைது செய்யும் மகாராஷ்டிரா அரசு, “1989-இல் பாகல்பூரில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து காலிபிளவர் வயல்களில் புதைத்ததைப் போல, தற்போதும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என வெறுப்பைக் கக்கும் இந்துமதவெறிக் குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கருத்துகளை சமூக வலைத்தளங்களில் இருந்து கூட நீக்காமல் இந்து மதவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போது இக்கலவரம் தனிந்திருந்தாலும், “ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும்” என்ற பிரச்சாரத்தை நிகழ்ச்சிநிரலிலேயே வைத்துள்ளது காவிக் கும்பல். இதன்மூலம் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கி இஸ்லாமிய மக்களை இந்து மக்களின் எதிரிகளாக்கி, பெரும்பான்மை இந்து மக்களை தங்கள் பின்னால் திரட்டிக்கொள்ளத் துடிக்கிறது.

இவ்வாறு மகாராஷ்டிராவில் பாசிஸ்டுகள் தங்களது அடித்தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளத் துடிப்பதற்குப் பின்னால், குஜராத், உத்தரப்பிரதேசம் போல மகாராஷ்டிராவையும் இந்துராஷ்டிரத்திற்கான ஒரு வகைமாதிரியாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம் ஒளிந்துள்ளது. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும் இந்துத்துவத்தினுள் கரைந்து போனவர்களாகவும் இருக்கும் இச்சூழலை அதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஏனென்றால் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அம்மாநில கட்சிகளினுடன் அதானியே நேரடியாகப் பேரம் பேசியது அம்மாநில வளங்களைச் சூறையாடுவதற்கான அதானி-அம்பானி கும்பலின் வெறியைக் காட்டுகிறது. எனவே, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

மறுபுறத்தில், மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்கள் மீதான கலவரங்களை நடத்துவதன் மூலம் மோடிக்கு அடுத்து பா.ஜ.க-வின் முகமாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை முன்னிறுத்தும் திட்டம் ஆர்.எஸ்.எஸ்-யிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2002 குஜராத் இனப்படுகொலை மோடிக்கு மைல்கல்லாக அமைந்தது போல, நாக்பூர் கலவரம் தேவேந்திர பட்னாவிஸ்க்கு மைல்கல்லாக அமைய வாய்ப்பிருக்கிறது என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. இந்நிலையில், மோடி பிரதமரான பிறகு இந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக, கடந்த மார்ச் 30 அன்று நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தது விவாத பொருளாகியிருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு இடையிலான முரண்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் கை மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது.

அதேசமயம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மோடிக் கும்பலுக்கு ஏற்பட்ட இந்நெருக்கடியை, மோடி அரசு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சித்தரித்தன. ஆனால், பாசிச கும்பல் அடுத்தடுத்து தன்னுடைய பாசிசத் திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தராக்கண்ட், மேற்குவங்கம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஹோலி, நவராத்திரி, ராமநவமி உள்ளிட்ட இந்து பண்டிகைகளைப் பயன்படுத்தி கலவரம் செய்யும் திட்டத்தில் மூர்க்கமாகச் செயல்பட்டு வருகிறது பாசிச கும்பல். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அதன் நூற்றாண்டை எட்டியிருக்கும் வேளையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாக்பூர் கலவரத்தை அதற்கான எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 நவம்பர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 24 | 1989 நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஓட்டுச்சீட்டுகளைக் கிழித்தெறியுங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அணி திரளுங்கள்
  • சிகப்புபூச்சி ஆராய்ச்சி திட்டம்: ஆராய்ச்சி என்ற பெயரில் பேராசிரியரின் பகற்கொள்ளை!
  • இடது ‘கம்யூனிஸ்ட்’ கட்சியினரின் காமவெறி பயங்கரவாதம்!
  • கம்யூனிசமே வெல்லும்!
  • ஊழலுக்கு உரிமம் தரும் ஓட்டுச் சீட்டு!
  • மக்களை தீய்க்க மதவெறித் தீ! இருப்பதை உருவிக் கொள்ள வாக்குச்சீட்டு!
  • பஞ்சாயத்துராஜ்ஜியமும் மக்களுக்கு அதிகாரமும்: ஏட்டுச் சுரைக்காய் மக்களுக்கு! முழுப்பூசணிக்காய் ஆதிக்க சக்திகளுக்கு!
  • தி.மு.க அ.தி.மு.க பாசிசத்தை சுமந்துவரும் பிழைப்புவாத கும்பல்கள்
  • வாக்குச் ச்சீட்டு விலையேற்றத்தை தடுக்குமா?
  • சிறுபான்மையினர்-தாழ்த்த்பட்டோர்-பெண்கள் நலம்: ஓட்டுப் பொறுக்கிகளின் உதவாக்கரை வாக்குறுதிகள்!
  • பாசிச அபாயம் நீங்கிவிடவில்லை; தீவிரமடந்துள்ளது
  • பின்னே பள்ளி மாணாவர்களிடம் நன்கொடை வசூல்வேட்ட! தலைமை ஆசிரியர் மனோகரின் மகாத்மியங்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 23 | 1989 அக்டோபர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: பின்னோக்கி பெரும்பாய்ச்சல்!… ஏன்?
  • முதல்வர் பதவியைக் குறிவைத்து ஜெயலலிதாவும் மு.க. ஸ்டாலினும்
    வசந்தசேனையும் சோழர்குலக் கொழுந்தும்!
  • போஃபார்ஸ் பீரங்கி பேர லஞ்சஊழல்: புகையும் பீரங்கிகள் வெடிக்கும்
  • அசாமில் ரத்தக் களறி
    போடா தலைமையின் துரோகம்
    மீண்டும் ‘ரா’வின் கைவரிசை
  • ‘நீதி’பதிக்கு நேர்ந்த கதி!
  • தேர்தல் ஆதாயம் கருதி ஓட்டுக் கட்சிகள் தூண்டிவிடுகின்றன
    வடமாநிலங்களில் பரவும் மதவெறிக் கலவரங்கள்
  • நிர்வாகத்தின் சதி! சங்கங்களின் துரோகம்!
  • அரசு நிதி நிறுவனங்களில் அம்பாணியின் கொள்ளை!
  • ஐரோப்பிய தமிழ் அகதிகள் மீது புதிய நாஜிக்கள் தாக்குதல்
    துயரம் துரத்துகிறது!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜாக்டோ-ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பானது, சரண் விடுப்புத் தொகை போன்ற அவ்வப்போதைய காலச்சூழலுக்கேற்ப சில கோரிக்கைகளை இணைத்துக் கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவருவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சில அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நேரடியாக அரசு ஊழியர்களின் போராட்டப் பந்தலுக்கே சென்று அறிவித்து அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக தி.மு.க. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று மிரட்டல் விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதாரக் கோரிக்கைகள்

ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ – ஜியோ பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வருகிறது.

“புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அரசாணை எண் 243-ஐ இரத்துச் செய்ய வேண்டும்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஐந்தாயிரம் அரசுப் பள்ளிகளை மூடும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும்.

3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யூ.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை இரத்துச் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியற்றை இரத்துச் செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது, எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.”

மேற்காணும் இந்த கோரிக்கைகள் அடிப்படையானவையாகும்.

000

அரசு ஊழியர்களின் இப்போராட்டத்தை, அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் என்பதாக மட்டுமில்லாமல், இதன் மற்றொரு பரிமாணத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. அரசு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவை அரசுத்துறைகளை டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டத்தின் முன் தயாரிப்புகளாகும்.  இது உழைக்கும் மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை கை கழுவ செய்யும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையின் முக்கிய அங்கமாகும்.

மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும்
அரசு ஊழியர்களின் போராட்டமும்

“அரசு ஊழியர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் அரசுக்கும் அரசு ஊழியர்களுக்குமான பிரச்சினை. ஆனால், போராட்டம் என்ற பெயரில் சாதாரண மக்கள் பாதிப்படைகின்றனர்”; “ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவது மட்டுமன்றி, தனியாக இலஞ்சம் வாங்கிவரும் இந்த அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகின்றனர்”; “ஏற்கெனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்காத சூழலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பட்ஜெட்டில் மிகப்பெரும் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்” போன்ற பல்வேறு வாதங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. இவை ஆளும் வர்க்க ஊடகங்களால் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், அரசு ஊழியர்கள் முன்வைக்கும் இக்கோரிக்கைகள் தமிழ்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கோரிக்கைகளாகும். அரசு ஊழியர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளுமாகும்.

பணிப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு உழைக்கும் மக்களுக்கும் அடிப்படை உரிமையாகும். இது, சமூகப் பாதுகாப்பு அம்சத்துடன் ஒன்றிணைந்தது. மேலும், இவ்வுரிமைகள் உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் உயிர்த்தியாகங்களின் மூலமாக பெறப்பட்டவையாகும். இதனை மறுப்பது என்பது பெயரளவிலான ஜனநாயக முகமூடிகளைத் தூக்கிவீசிவிட்டு, அரசாங்கமே முற்றும் முழுதாக ஒரு சுரண்டல் நிறுவனமாக மாறி நிற்பதை குறிக்கிறது.

நாட்டின் மிகப்பெரும் அளவில் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் அரசுக் கட்டமைப்பாகும். தனியார் நிறுவனங்களை முறைப்படுத்துவது என்பதையும் தாண்டி முதலில் அரசானது தனது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். ஆகையால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மேலும், மருத்துவத் துறை, கல்வித் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வேளாண் துறை, பொதுப்பணித் துறை, ஆட்சி நிர்வாகத் துறை போன்ற அரசின் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்துவது போன்றவை அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளைக் கைகழுவும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.

வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நகரமயமாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் நெருக்கடிக்குத் தள்ளப்படும் சூழலில், மக்களுக்குச் சேவை வழங்குவதிலிருந்து அரசு விலகுவது, மக்கள் மீதான மறைமுகத் தாக்குதல்களாகும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் இத்துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மக்களை வேட்டையாடுவதற்கு அரசு வழிவகை செய்துக் கொடுப்பதாகும். ஆகையால், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும்.

டிஜிட்டல்மயமாக்கம் எனும் பேரழிவு!

இவை மட்டுமல்ல, அரசின் சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவது மட்டுமின்றி, அதன் பின்னே டிஜிட்டல்மயமாக்கம் என்ற சதியும் அடங்கியுள்ளது.

அதாவது, அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல்மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformating Strategy – DiTN) ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதைப்பற்றிய தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், “2021-22 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையில், விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையிலமைந்த, வெளிப்படையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மின்னாளுகையைப் படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன் மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் “டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்” செயல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான், அரசின் டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டமாகும்.

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசுத் துறைகளில் டிஜிட்டல் மயமாக்கத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற அரசின் முக்கிய சேவைத் துறைகள் ஆன்லைன்மயமாக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறை, போலீசு, ஆட்சி நிர்வாகம் போன்றவையும் வேகமாக டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு கால் செண்டர் போல இயங்குவதை நோக்கி அரசின் டிஜிட்டல்மயமாக்கத் திட்டம் அமைந்துள்ளது. இத்துடன், எல்.ஐ.சி., வங்கித்துறை போன்ற நிதிச் சேவைகள் மற்றும் வணிகங்கள் பெருமளவு டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவிட்டன.

சாதாரணமாக, கடைகளில் சில்லறை கொடுத்துப் பெறுவது சிக்கலாக இருப்பதால் “ஜி பே” செய்வது இன்று எளிதாகத் தெரிகிறது. இந்த அனுபவத்தில் இருந்து டிஜிட்டல்மயமாக்கம் நல்லது என்ற பாமரத்தனம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும், டிஜிட்டல்மயமாக்கம் அறிவியல் வளர்ச்சி, அதனை எதிர்க்கக் கூடாது என்ற கருத்தும் பொதுக்கருத்தாக நிலவுகிறது.

உண்மையில், டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதையும், கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதையும், அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிப்பதையும் எதிர்க்க வேண்டும்.

ஏனெனில், தற்போது ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் டிஜிட்டல்மயமாக்கத்தின் அடிப்படையே “பள்ளியில்லா கல்வி”, “அலுவலகம் இல்லா அரசு நிர்வாகம் – ஊழியர்கள் இல்லாத பணி முறை” போன்றவையாகும்.

மேலும், மக்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதும் அரங்கேறும். மக்களின் வங்கிக் கணக்குகள், ஆதார், பான்கார்டு போன்ற அனைத்துத் தரவுகளை இணைப்பதன் மூலமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதன் மூலமும் அனைவரையும் கண்காணிப்பது, வருமான வரி விதிப்புக்குள் அனைவரையும் கொண்டுவருவதும் நடக்கிறது. ஏற்கெனவே ஆதார் மூலமாக மக்களின் அடிப்படை தரவுகள் கார்ப்பரேட் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

அதேபோல், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இந்த டிஜிட்டமயமாக்கத்தின் விளைவாக, சைபர் குற்றங்கள் எனப்படும் இணையக் குற்றங்கள் புதிய இயல்புநிலையாகியுள்ளன. மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் வங்கிக் கணக்குக்கேற்ப விளம்பரங்களை அனுப்பியும் பல்வேறு ஆசைகளைக் காட்டியும் கொள்ளையடிக்கின்றன.

மாற்றுக் கொள்கையும் மக்கள் போராட்டங்களுமே தீர்வு!

இவ்வாறு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் இன்றைய நிலைமையை தனிப்பட்ட ஒரு பிரிவினரின் உரிமைப் பறிப்பாக மட்டுமின்றி, அரசுத் துறைகள் டிஜிட்டல்மயமாக்கும் பேராபத்தின் அங்கமாகப் பார்க்கப்பட வேண்டும். இதிலிருந்து உரிமைகளை மீட்டெடுப்பதற்கான கண்ணோட்டம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

மேலும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை கடந்த அ.தி.மு.க. அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக பெயரளவிற்குக் கூட, எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆகையால், தற்போது தி.மு.க. அரசை நிர்பந்தித்து இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்கவில்லை என்றால், அடுத்து வர இருக்கும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்றே நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அதேவேளையில், தேர்தல் ஆதாயத்திற்காக சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த உரிமைகள் நீடிப்பதற்கான அடிப்படைகள் தகர்க்கப்படுவது தவிர்க்க இயலாதது. ஏனெனில், 1950-களில் உருவாக்கப்பட்ட “மக்கள் நல அரசு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான், உழைக்கும் மக்களின் உரிமைகள் போராடிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

ஆனால், 1990-களில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையானது, “நிர்வாக சீரமைப்பு”, “எளிமையான அரசாங்கம்” போன்ற பெயர்களில் பல்வேறு கட்டங்களாக அரசுக் கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அரசுக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும், டிஜிட்டல்மயமாக்கும் மறுகட்டமைப்பு நடவடிக்கை என்பது, “அலுவலகங்கள் இல்லாத, அரசு நிர்வாகம்”, “ஊழியர்கள் இல்லாத பணி முறை” என்ற அறிவிக்கப்படாத கொள்கையைப் பின்பற்றுவதால்,  இவை, அரசு ஊழியர்களின் தற்போதைய கோரிக்கைகளை, அதன் இயல்பிலேயே காலாவதியாக்கி விடுகிறது.

இதுதான், தங்களது கொள்கை என்று வெளிப்படையாக அறிவிக்காமல், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டே, நயவஞ்சகமாக தங்களது டிஜிட்டல்மயமாக்க மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொள்வதுதான், ஆளும் வர்க்கத்தின் மூல உத்தி.

இந்த மூல உத்தியை அம்பலப்படுத்தித் தகர்த்தெறிய வேண்டுமெனில், அதற்கான மாற்றுக் கொள்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமாகவே, அரசு ஊழியர்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.


நீலன்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 22 | 1989 அக்டோபர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றமும் தட்டுப்பாடும்: இன்னுமொரு பொருளாதாரத் தாக்குதல்
  • நகரங்களை வளைத்து போடும் நில முதலைகள்
  • சொரப்பூர், போடி சாதிக்கலவரங்கள்; அபாய அறிகுறி!
  • சாதிய வெறித் தீயின் நடுவே சாதி எதிர்ப்பு பிரச்சாரம்
  • பெண் குற்றவாளிகள்: அவமானத்தின் விளிம்பில்…
  • இரகசிய உலகப் பேர்வழிகளுடன் ஓட்டுக்கட்சிகள் உறவு
  • வருமானவரி அதிகாரிகல் மீது வியாபாரிகள் – மாஃபியா தாக்குதல்
  • கம்மங்கஞ்சிக்கு உயிர்! வேலைக்குக் கற்பு
  • குதர்க்கவாதி “சோ”வின் கொலைவெறி!
  • கோட்டுசூட்டு போட்ட பகற்கொள்ளையர்கள்
  • கி.ஜெர்மனி மக்கள் தப்பியோட்டம்: சேற்றிலிருந்து புதைகுழியை நோக்கி…
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram