Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 6

புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூன் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் -அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை
  • ஆபரேஷன் சிந்தூர்: பாசிச கும்பலின் தோல்வியும் எதிர்க்கட்சிகளின் துரோகமும்
  • அமெரிக்க அடிமை மோடியும் வேட்டைக்காடாகும் இந்தியாவும்
  • பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?
  • விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை
  • இந்தியப் பாசிச கும்பலின் சதி வலையில் நேபாளம்
  • காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்
  • காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை
  • தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!
  • மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!
  • டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க. அரசு

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 16-17 | 1993 ஜூலை 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்து பாசிசத்துக்கு ‘நீதி’த் துறை அங்கீகாரம்
  • கருவறை நிழைவுப் போராட்டம் இந்து முன்னணி காலித்தனம் பார்ப்பன அரசின் விசுவாசம்
  • புட்டபர்த்தி கொலைகள்: சாயிபாபா – போலீசு கூட்டு சதி
  • பிரதமரின் ஊழல் ரூ.1 கோடி தானா?
  • கம்பூச்சியா: வல்லரசு வல்லூறுகள் கூறுபோடும் இரையானது
  • வீதிக்கு வந்த வெட்கங்கெட்டதுகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தொழிலாளர் வெளியேற்றக் கொள்கை: விபரீத விளைவுகள்
  • ஆர்.எஸ்.எஸ்-ன் ‘தேச’த்துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம்
  • தேவாரம் கும்பலின் காட்டுமிராண்டித்தனம்
  • நாகா-குக்கி இனச் சண்டை: போராளிகளின் திசைத் தவறுகள்
  • இஸ்ரேலுடன் இந்திய உறவு இந்து – யூத பாசிச கூட்டு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-30, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 14-15 | 1993 ஜூன் 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘நீதி’த் துறையும் நிர்வாணமானது
  • ஜெயா – காங்கிரசு அரசியல் லாவணி
  • பம்பாய் மஃபியா ஆதிக்கம் தாவூத் – தாக்கரே மோதல்
  • இந்துவெறி போலீசாரின் இரண்டாவது சுற்று அடக்குமுறை
  • பிரேமதாசா: கொடூரமாக வாழ்ந்தான் குரூரமாக வீழ்ந்தான்
  • காஷ்மீரில் ராணுவத்தின் பழிவெறி – அழிவுப்போர்
  • இடைத்தேர்தல் கூத்து சேஷனின் அதிகாரத்திமிர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பாக். ஆட்சிக் கவிழ்ப்பு மீண்டும் ராணுவ ஆட்சி
  • கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்
    இந்துத்துவம்: பார்ப்பனீயமே நிரூபணம்
  • ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’ துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்

15வது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்துக் கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வேறுபாட்டை அரசே ஈடுகட்ட வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், பண்டிகைக் காலங்களில் தனியார் வண்டிகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்க அனுமதிக்கக் கூடாது, ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு நிரந்தரப்பணி அடிப்படையில் ஆட்களை எடுக்க வேண்டும், ஜெர்மனியில் இருந்து வாங்கப்படும் பேட்டரி பேருந்துகளை தனியார் இயக்க அனுமதிக்காமல் அரசே இயக்க வேண்டும், தனியார் ஆம்னிப் பேருந்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு விரோதமாக அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எட்டு அரசாணைகளை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என CITU, AITUC, TTSF ஆகிய சங்கங்கள் மே 27 அன்று உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.

உடனே தி.மு.க அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காரணத்தால் உண்ணாநிலைப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

மே 29 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 88 சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால், மேற்சொன்ன தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதத்தையும் தி.மு.க அரசு அளிக்கவில்லை. இந்த நிலையில், LPF உள்ளிட்ட 64 சங்கங்கள் தி.மு.க அரசின் பதிலுக்கு ஆதரவளித்தன. CITU, AITUC உள்ளிட்ட 24 சங்கங்கள் அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பெரும்பான்மை 64 சங்கங்கள் என்ற வகையில் பெருவாரியான தொழிலாளர்களின் கோரிக்கைகள் தோல்வியடைந்தன.

அரசின் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்காமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது என்பது அடிப்படையான விடயம்தான். இதை விரிவாக விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அரசு எவ்வாறு குயுக்தியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குகிறது என்பதை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகும்.

படிக்க: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது? | தோழர் மருது

இக்கட்டுரையின் விவாதப் பொருள், தி.மு.க அரசுக்கு ஆதரவளித்த பெரும்பாலான சங்கங்கள் எவை என்பதைப் பற்றியது. அவை லெட்டர்பேட் சங்கங்கள். அதாவது இத்தகைய சங்கங்களை அதிகாரிகள் மற்றும் அரசின் துணையோடு உருவாக்குவது, பயன்படுத்துவது என்ற அடிப்படையில் ஆளும் அரசாங்கங்களால் திட்டமிட்ட வகையில் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இப்படித்தான் துரோகம் தொடர்கிறது.

இந்த லெட்டர்பேட் சங்கங்களின் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் சிரமமில்லாத வேலைகளை ஒதுக்கி செல்லப் பிள்ளையாகப் பராமரிப்பது, அதன் மூலம் தங்களது கையாட்களாக மாற்றிக் கொள்வது என்பதுதான் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.

பகுதியளவில் CITU உள்ளிட்ட முக்கிய சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரிப்பது, இந்த லெட்டர் பேட் சங்கங்களின் வாயிலாக தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல நடிப்பது என்பது அதிகாரிகளின் முக்கியமான நடவடிக்கைகளாகும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். இவ்வாறு போக்கு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது மிகப்பெரும் சுரண்டலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், கழக ஆட்சி மலர்ந்தவுடன் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று அளித்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு எப்படித் தொழிலாளர்களை வஞ்சிப்பது என்று தீவிரமாகச் செயல்படுவதுதான் ’திராவிட மாடல்’ ஆட்சி போலும்.

இந்த ஜாடிக்கேற்ற மூடிகள்தான் தொழிலாளர் துரோக லெட்டர் பேட் தொழிற்சங்கங்கள் ஆகும்.

தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மரணப் படுக்கையில் இந்தியா! | கவிதை

மரணப் படுக்கையில் இந்தியா!

நலமில்லை;
நலமறிய
ஆவலுமில்லை;
ஏனெனில்,
உங்கள் நிலையும்
நிச்சயம்
நாறிக் கொண்டு
தான் இருக்குமென
தெரியும்;

எனினும்,
என்னைக் காப்பாற்றுமாறு
கண்ணீர் மல்க
எழுதிக் கொள்வது!

ஓட்டும் நோட்டும்
இரட்டைக்கிளவி ஆகின
சனநாயகம் மாண்டது;

சாதியும் மதமும்
சகாக்கள் ஆகின
சமத்துவம் மாய்ந்தது;

இனவெறியும்
மொழிவெறியும்
இணக்கம் ஆகின
சகோதரத்துவம்
இறந்துபோனது!

நாடாளுமன்றம்
நாடகக்
கொட்டகையானது;
நாடு, சுடுகாடானது;

நடைப் பிணமாக உள்ளேன்,
காவி நெடியில்
மூச்சு முட்டி
பிணமாவதற்குள்
காப்பாற்ற முயலுங்கள்.

இப்படிக்கு
இந்தியா!

ஜிப்ஸி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 12-13 | 1993 மே 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘ஜெ’ யின் சட்டமன்ற ரௌடித்தனம்
  • ஏப்22: லெனின் பிறந்தநாள்; மா.லெ. கட்சி நிறுவன நாள்
    மார்க்சிய – லெனினியத்தை உயர்த்திப்பிடிபோம்!
    முதலாளித்துவ மூடர்களுக்கு குழிபறிப்போம்!
  • போலீஸ் சதிராட்டமும் வீரப்பனின் வெறியாட்டமும்
  • “புழுங்கித் தவிக்கும் எங்களுக்கு போராட்டம் ஒன்றே இனிய காற்று
  • சாமியின் ‘ஜெ’ மீதான ஊழல் வழக்கு அவிழாத முடிச்சா?
  • காங்கிரசுடன் பா.ம.க. கூட்டு ‘முற்போக்குகளுக்கு’ வேட்டு
  • கோவில்பட்டி, புகளூர் படுகொலைகள்: அதிகார திமிரெடுத்த போலீசும் வாய்க்க்கொழுப்பெடுத்த ஜெயாவும்
  • பஞ்சாப் – அசாம் தரும் பாரிய படிப்பினைகள்
  • ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’ துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம்
  • பதனவாலு படுகொலைகள் இன்னுமொரு நந்தனின் கதை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 10-11 | 1993 ஏப்ரல் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாரதீய ஜனதாவுக்குப் பாய்விரிக்கும் தரகு முதலாளிகள்
  • குடிநீருக்கான கண்ணீரை போக்க வக்கற்ற ஆட்சியாளர்கள்
  • பம்பாய் குண்டு வெடிப்பு பயங்கரம்: இந்துவெறீ பாசிச அட்டூழியத்தின் எதிர்விளைவு!
  • பா.ஜ.க. – காங் – அ.தி.மு.க. இந்து வெறியர்களுக்குள் கூட்டணி காட்சிகள்?
  • ருஷ்ய அரசியல் நெருக்கடி: ஏகாதிபத்திய தயவில் யேல்ட்சினின் சதிராட்டம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மே-1 சிறீரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்
    பார்ப்பன – இந்துமதவெறி ஆதிக்கத்தை கருவறுப்போம்!
  • இந்துவெறீ போதையில் இந்தியப் போலீசுத்துறை
  • பங்கு – வங்கி மோசடி: தப்பிக்கும் தமிழகப் பார்ப்பனக் கும்பல்
  • பாரப்பரிய உரிமை பறிப்பும் ஏகாதிபத்திய கொள்ளையும்
  • தீண்டாமைக் கொடூரமும் நீதிமன்ற இழுத்தடிப்பும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மனநல ஆலோசகர்களும், அரசுக் கட்டமைப்பின் அலட்சியமும்

ளவியலில் முதுநிலை (M.Sc. Counselling Psychology) படித்துவிட்டு, ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகராகப் பணி செய்யும் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.

அவரது பணி தொடர்பாகவும், உளவியல் துறை சார்ந்த கல்வி தொடர்பாகவும் பல்வேறு விசயங்களை விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு விசயம் அதிர்ச்சிகரமாக இருந்தது.

உளவியல் சார்ந்து படிப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே அத்துறை சார்ந்து மனநல ஆலோசகர்களாக பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார்.

”பல்வேறு தரப்பட்ட மனநலப் பிரச்சினைகளோடு வருகிறார்கள். தொடர்ச்சியாக இப்படிப்பட்டவர்களை அணுகுவதால், சிகிச்சை அளிக்கும் மனநல ஆலோசகர்களும் உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கவலை, மனச்சோர்வு, அதிர்ச்சி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழலால் வேறு துறைக்குச் சென்று விடுகின்றனர்” என்று அவர் கூறினார்.

”அப்படியென்றால், அதற்கு கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் என்ன தீர்வு சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.

“அவ்வாறு உளவியல் பிரச்சினைகள் ஏற்படும்போது மனநல ஆலோசகர்கள் வேறு ஏதாவது ஒரு விசயத்தில் கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், தியானம் செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டுதல் உள்ளது” என்று நண்பர் கூறினார்.

மேற்கண்ட தீர்வுகள் எல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன. இதைச் சொல்வதற்கு ஒரு அரசு நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் இல்லை. இது எந்த வகையிலும் தீர்வளிக்கவில்லை என்பதைத்தான், 20 சதவிகித மனநல ஆலோசகர்களே அத்துறை சார்ந்து பணிபுரியும் அவலநிலை எடுத்துக் காட்டுகிறது.

அதாவது, இந்தக் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறதென்றால், நீ காசு கொடுத்து படித்துக் கொள். படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. மற்றபடி வேலை தேடுவது உன் பிரச்சினை. உளவியல் பிரச்சினை ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வதும் உன் பிரச்சினை என்று உளவியல் சார்ந்து படிப்பவர்களை வீதியில் தள்ளி விட்டுள்ளது. மேற்கொண்டு எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதில்லை.

படிக்க: கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

உண்மையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிறுவனக் கட்டமைப்பை அரசு உருவாக்கியிருக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உளவியல் ஆலோசகர்கள் சீரான மனநிலையில் சிகிச்சை அளிக்க முடியும்.

இன்றைய மறுகாலனியாக்க சூழல் காரணமாக உருவாகியிருக்கும், கொடூர சுரண்டலின் காரணமாக இன்னும் ஆழமாகியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு, இயந்திரமயமான தனித்து விடப்பட்ட வாழ்க்கை முறை, டிஜிட்டல் உலகம் ஏற்படுத்துகின்ற தொடர்ச்சியான தாக்கம், ஏகாதிபத்திய சீரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிலடங்கா மனநிலைப் பிரச்சினைகளுக்கு மனிதர்கள் ஆட்பட்டு வருகின்றனர். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பொறுத்தவரை, அவையும் இன்றைக்கு இலாபம் கொழிக்கும் கார்ப்பரேட் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

இத்தகைய அவலமான சூழலைப் பற்றி அரசுக்கு எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது. மறுகாலனியாக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவது ஒன்றே இன்றைக்கு அரசுக் கட்டமைப்பின் பணியாக மாறிப் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆலோசனை அளிக்கும் ஆலோசகர்களின் மனநிலையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினையாகும். இதற்கு இந்தக் கட்டமைப்பில் எந்தத் தீர்வும் இல்லை. மேலும் மேலும் சிக்கலை விரிவுபடுத்துகின்ற வகையில்தான் இந்தக் கட்டமைப்பே உள்ளது. அதாவது மனிதர்களின் மனநலனை மோசமாகச் சிதைத்துள்ளது.

மனிதர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கின்ற, அதைத் தன்பொறுப்பாக எடுத்துக் கொண்டு அதன் மீது முழுமையான அக்கறை செலுத்துகின்ற, மாற்றுக் கட்டமைப்பைப் பற்றி இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை நண்பருடனான சந்திப்பு உணர வைத்தது.

தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 08-09 | 1993 மார்ச் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிரிமினல்மயமாகும் தமிழகம்
  • சுடுகாட்டையும் பட்டா போட்ட பாதகர்கள்! மக்கள் போராட்டம்!
  • காங் – ஜெயா – பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்குள் ஜோடி மாற்றம்
  • பட்ஜெட்: குடிக்கக் கூழில்லை கொண்டைக்குப் பூ
  • கோஷ்டிச் சண்டை முற்றுகிறது காங்கிரசு நொறுங்குகிறது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • டெல்லி பேரணி இந்து ராஷ்டிரத்தை நோக்கி இன்னுமொரு தாக்குதல்
  • பினாமி நிலமோசடியில் பிரதமர் குடும்பம்
  • கூலி விவசாயிகளின் போர்! ஜமீன் கும்பலின் தாக்குதல்!
  • அணு உலை ஆபத்து காற்றும் நீரும் நஞ்சானது
  • யுத்தத்திற்கு பின் ஈராகின் அவலம் அமெரிக்காவின் பலமுனைத் தாக்குதல்
  • “இந்து வெறியுணர்வு மாநாடு”
  • திரிபுரா தேர்தல் தள்ளிவைப்பு பாகப்பிரிவினைத் தகராறு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஈவிரக்கமின்றி 8,000 வீடுகளை இடித்துத் தள்ளிய குஜராத் பா.ஜ.க அரசு

குஜராத்தின் சியாசத் நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் 8,000 வீடுகளை கடந்த மே இறுதியில் ஒரே இரவில் இடித்து தரைமட்டமாக்கியது பாசிச பா.ஜ.க அரசு. இது வரலாற்றில் மிகப்பெரும் இடிப்பு நடவடிக்கையாகும். இடிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.

அம்மக்கள் பல பத்தாண்டுகளாக அங்குதான் வசித்து வந்தனர். ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டைகள் வைத்திருந்த பல குடும்பங்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்பட்டன. அப்பகுதியில் வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும், இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் கூறி பாசிச பா.ஜ.க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் வீடுகளை இழந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய குடிமக்களாகி விட்டனர் என்பதையெல்லாம் பொருட்படுத்த பாசிசக் கும்பல் தயாராக இல்லை.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் இவ்வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. பா.ஜ.க அரசு வீடுகளை இடிக்கப் போவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி நடவடிக்கைக்குத் தயாரானது. மக்கள் வசிக்க மாற்று இடங்களைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றமோ, தேச பாதுகாப்பு காரணங்கள் என்பதால் தடைவிதிக்க முடியாது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் சிறுகச் சிறுக சேமித்து, பெரும் உழைப்பைக் கொட்டிக் கட்டிய அவர்களின் வீடுகள் அவர்களின் கண்முன்னே ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளப்பட்டன. “நாங்கள் இந்தியர்கள், வங்கதேசத்தவர் அல்ல. அருகில் உள்ள பராஜேடி கிராமத்தில் நான் பிறந்தேன்; என் சகோதரி மோதிபாய் மருத்துவமனையில் பிறந்தார். எனது குழந்தைகள் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள். 45 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எனது சேமிப்பு அனைத்தையும் இங்கு முதலீடு செய்தேன். எனக்குச் செல்ல இடமில்லை. என் இதயம் வலிக்கிறது. இப்போது என்னிடம் எதுவும் மிச்சமில்லை. என்வீட்டுப் பொருட்கள் திறந்த வெளியில் கிடக்கின்றன. இனி வாடகைக்கு ஒரு வீட்டைத் தேட முயல்வேன்” என்று கண்ணீர் வடிக்கிறார், பஷீர் பாய்.

படிக்க: காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்

ஆயிரக்கணக்கான மக்கள் இதேபோல துயரங்களைச் சுமந்து கொண்டு, அங்கே தெருவில் நிராதரவாக நிற்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் பாசிச கும்பல் தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது, தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சி கூறியது. அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் கார்ப்பரேட் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கப்படலாம்.

வீடுகளை இழந்து நிர்க்கதியான மக்களோ குற்றவாளிகளாக்கப்பட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். துயரங்கள் இதோடு நிற்கப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசக் கும்பலுக்கு முடிவு கட்டுவதன் மூலமே இத்துயரங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 07 | 1993 பிப்ரவரி 16-28 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆந்திரா: அரசு பயங்கரவாதத்துக்கு பதிலடி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • புலி கப்பல் மீது தாக்குதல்: ஆழ்கடல் ஆதிக்கம்
  • “கட் அவுட்” நாயகியின் ஆட்சியில் “ரேஷன்” அட்டைக்குப் பரிதவிப்பு!
  • பஞ்சாப்: பாசிசமயமானது பஞ்சாயத்துத் தேர்தல்
  • ஐ.எம்.எப். – உலக வங்கி அடுத்த தவணை அடகு வைப்பு
  • திவாலானது காங்கிரசு
  • ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிச எழுச்சி
  • கோவையில் மதக்கலவர அபாயம்! கரசேவைக் காலிகளுக்கு காவடி தூக்கும் ‘ஜெ’ போலீசு
  • இந்தியாவின் இந்துவெறியும் பாக்.-வங்கதேச எதிர்ப்பும்
  • இந்துவெறிக்கு எதிராக தெருமுனைப் போர்
    கைது! சிறை! தாக்குதல்!
  • கிசுகிசு ஏடுகள்: அரசியல் போதை வியாபாரம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 05-06 | 1993 ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காவி அங்கி நீதிபதிகள்!
  • காஷ்மீர், பஞ்சாப்: அரசு பயங்கரவாத ரத்தச் சுவடுகள்!
  • இந்து வெறியர்களின் ஆவேசத் தாக்குதல்! அடிபணியுது காங். அரசு!
  • மசூதி இடிப்புக்குப் பிறகு… நாடெங்கும் நடந்த நரவேட்டை
  • திருச்சி பாய்லர் ஆலையில் மதவெறியர்களுடன் ‘மார்க்சிஸ்டு’கள் கள்ளக்கூட்டு
  • கேள்வி – பதில்
  • தமிழகம்! இந்துவெறியர்களின் சொர்க்க பூமி! ஜெயா ஆசி!
  • சோமாலியாவை மயானமாக்கிய குற்றவாளிகள் ஏகாதிபத்தியங்களே!
  • 355, 356: மாநில அரசுகளின் கழுத்துக்கு கயிறு
  • தெருமுனையெங்கும் ராமனுக்கு தீ! பார்ப்பன – இந்துமத ஆதிக்கத்திற்கு அடி!
  • சவடாலும் சவுக்கடியும்
  • போலிக் கம்யூனிஸ்டுகள்: காங்கிரசை தூக்கி நிறுத்தும் முட்டுக்கட்டைகள்!
  • விமானிகளின் போராட்டமும்! அரசின் ஒடுக்குமுறையும்!
  • சாமி – மாமி மோதல் ஆபாச அரசியல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1992 ஜனவரி 01-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 03-04 | 1992 டிசம்பர் 16-31, 1993 ஜனவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மில் தொழிலாளர் போராட்டம்! படிப்பினைகளை மறவாதீர்! ஒற்றுமை, உறுதி குலையாதீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி: டெல்லிக்கு அத்வானி தமிழகத்துக்கு அல்லிராணி
  • அயோத்தி: நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி
  • இடிப்பு சதியில் குற்றவாளிகள் யார்? யார்?
  • சமரசம் சர்வநாசம்! கொலைவாளை எடு! கொடியோர் செயல் அறு!
  • பொன்னூர்: சாதிச் சண்டையில் குளிர்காயும் போலீசும் சுயநலமிகளும்!
  • மூடப்பழக்கத்தின் கோரப்பிடியில் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசிகள்
  • பெண் உயிருடன் எரிப்பு சாதிவெறிக் கொடுமை!
  • சவடாலும் சவுக்கடியும்
  • மக்களுக்குச் சீரழிவு! அரசுக்கு வருமானம்!
  • எதிர்ப்பு வெள்ளத்தில் தத்தளிக்கும் யேல்ட்சின்
  • மராட்டியத்தை ஆட்டுவிக்கும் மாஃபியா எம்.எல்.ஏக்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 01-02 | 1992 நவம்பர் 16-30, டிசம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்ற மோசடி
  • கொள்ளை நோயல்ல அரசின் கொலை
  • பாசிச ஆட்சியின் கோரமுகம்
  • அவதூறு வழக்கு ‘ஜெ’யின் புது ஆயுதம்
  • முஸ்லீம்கள் படுகொலை: இனவிடுதலைக்கு எதிராக புலிகளின் சீர்குலைவு
  • விளைச்சல் கண்டும் வேதனை தீரவில்லை!
  • கேள்வி – பதில்
  • ஆசிரியர் போராட்டம்: தேவை விரிந்த பார்வை
  • புஷ்ஷுக்குப் பதிலாக கிளிண்டன்: புதிய மொந்தையில் பழைய கள்ளு
  • புயல்-வெள்ளத்தில் மக்கள் சுய விளம்பரத்தில் ஜெயா
  • பெண் குழந்தை தத்து: ‘புரட்சித் தலைவி’யின் புரட்டுத் திட்டம்
  • பஞ்சாப்: அரசு பயங்கரவாதத்தின் புதிய கொலை உத்திகள்
  • போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் ‘பெல்’ நிர்வாகம்
  • சவடாலும் சவுக்கடியும்
  • நச்சுக் காளானாக நவீன நாஜிகள்
  • கருத்துக் களஞ்சியம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 20-22 | 1992 அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பிச்சை தடுப்புச் சட்டம் விபரீதமானது, குரூரமானது, வக்கிரமானது
  • நவம்பர் புரட்சி நாள்: ஏகாதிபத்தியம் வீழும்! கம்யூனிசமே வெல்லும்!
  • அரசின் மனித உரிமை கமிஷன்: பாலுக்குப் பூனை காவலா?
  • வெறிக்கூத்தாடும் தமிழகப் போலீசு
  • மேலாதிக்கத்துக்கும் பாசிசத்துக்கும் மரண அடி கொடுப்போம்!
  • உரவிலையேற்றம்: விவசாயிகளுக்குப் பேரிடி! அமெரிக்கா கோலெடுத்தால் ஆட்டம் போடும் குல்லாய்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தன்னுரிமை தேசத்துரோகமல்ல ஜனநாயக உரிமையே!
  • கேள்வி – பதில்
  • வங்கி – பங்குச் சந்தை மோசடி மறைந்துள்ள இரகசியங்கள் ஏப்பம் விடப்பட்டது பொதுத்துறை
  • சலவையாளர்களை கசக்கிப் பிழியும் ‘சகோதரர்கள்’! போலீசு உடந்தை!
  • இந்தியாவின் காட்டுமிராண்டித்தனம்
  • போராடும் தொழிலாளர்கள் மீது போலீசு வன்முறை வெறியாட்டம்
  • சிலுவையணிந்த சாத்தான் ரபேலின் ரௌடித்தனம்
  • மாநிலக் கல்லூரித் தேர்தலில் மாஃபியாக்களின் கைவரிசை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram