வேறு யாருக்கும் தெரியாமல் உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?
இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்ல இயலாது. இது ஒரு கசப்பான உண்மை. கைபேசிகள் கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமாக சிலருக்குத் தோன்றலாம்.
நுகர்வு வெறியாக நோய்வாய்ப்பட்டிருக்கும் காதலும்,காமமும் நவீன தொழில் நுட்ப புரட்சியின் உதவியால் உடலையும் உள்ளத்தையும் ரணமாக்கி வருகின்றது. ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனியத்தின் ஆணாதிக்க மனம், நவீன தொழில்நுட்பத்தை கொலை வெறியோடு பயன்படுத்துகிறது.
காதலிக்க மறுத்த வினுப்பிரியாவை ஆபாச படமாக உருமாற்றி தற்கொலை செய்ய வைத்தவனோ, காதலிக்க மறுத்த வினோதினியை ஆசிட் ஊற்றி கொலை செய்தவனோ, காதலிக்க மறுத்த சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொன்றவனோ எவரும் தொழிற்முறைக் கிரிமனல்கள் அல்ல.
தான் காதலிக்க விரும்பும் ஒரு பெண், தன்னை மறுக்க முடியாதென்றே ஒரு சராசரி ஆண் நினைக்கிறான். ஒருவேளை அவன் அரிவாள் எடுக்கவில்லை என்றாலும் இந்த ஆதிக்கத்தை விடுவதில்லை. இந்த சராசரித்தனத்தை அனைத்து தமிழ் சினிமாக்களும் ஒரு பெண்ணை துரத்தி சென்று வேட்டையாடும் (அ)சிங்கமாகவே நமது இளைஞர்களை பயிற்றுவிக்கின்றன.
நீதிபதிகள், மத சாமியார்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், அதிகாரிகள் என அதிகாரம் படைத்தோர் இத்தகைய குற்றங்களை தம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் சுதந்திரமாக செய்கின்றனர். சன் டி.வி ராஜாவோ, நீதிபதி கங்குலியோ, தெகல்காவின் தருண் தேஜ்பாலோ தண்டனை இன்றி உலவுவதற்குக் காரணம் இவர்களது குற்றங்களையெல்லாம் இந்த அரசமைப்பு அங்கீகரிக்கிறது.
பெண்கள் வாழ்த்தகுதியற்றதாகி வருகிறது இந்த சமூக அமைப்பு. ஆணாதிக்க வெறியை அறுவை சிகிச்சை செய்வதும், போலி ஜனநாயக அமைப்பை தூக்கி எறிவதும் வேற வேறு அல்ல. அந்தக் கடமையை இந்த தொகுப்பில் வரும் கதைகள் வலியுடனும், கோபத்துடனும் நினைவுபடுத்துகின்றன.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
1. ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்
2. போர்னோகிராஃபி: பாலியல் சுதந்திரமா, அடிமைத்தனமா – ?
3. ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
4. த்ரிஷா: கருத்து காய்த்ரிக்களின் அறச்சீற்றம் !
5. பாலியல் வன்முறை: பா.ஜ.க-வின் பாரதப் பண்பாடு !
6. ரோல்ஃப் ஹாரிஸ் குழந்தைகளை சிதைத்த டி.வி. பிரபலம்
7. சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக… !
8. ஐ.எம்.எஃப் – ஸ்ட்ரெளஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம் !
9. வினோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்
10. நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா ?
11. பாகிஸ்தானில் வன்புணர்வு கொடுமைக்கு கோதுமை அபராதமே தண்டனை !
12. நீங்கள் பாலியல் குற்றவாளியா ?
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
நீதிபதிகள் தங்கள் மாண்பும் கண்ணியமும் குறித்து ரொம்பவும் கொதித்து போயிருக்கிறார்கள்! மக்களுக்குப் பயம் விட்டுப் போனால் போலீசு அதிகாரம் பண்ண முடியாது, அதைப் போல நீதிபதிகள் மீதான மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போனால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று இவர்கள் பதட்டமடைந்து கிடக்கிறார்கள்.
நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள் தாம், ஒரு சார்பு, பாராபட்சம், சீரழிவுகள் இல்லாதவர்கள் அல்ல, இந்த உண்மை நீதிமன்றங்களிலேயே தொழில் புரியும் வழக்கறிஞர்களுக்குத் தெரியும். ஆகவேதான் நீதிமன்றங்களின் மாண்பையும் கண்ணியத்தையும் பற்றிப் பேசுவதற்கு, மதிப்பு, மரியாதையும் கோருவதற்கு நீதிபதிகளுக்கு தகுதி இருக்கிறதா என்று வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள்.
இத்தகைய வழக்கறிஞர்களை அடக்குவதற்கு தான் புதிய சட்டத்திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி லஞ்சம் வாங்கும் நீதிபதி மீது புகார் கொடுத்தால், நீதிமன்றத்தில் சத்தமாக வாதிட்டால் அந்த வழக்கறிஞரை விசாரணையின்றி தொழிலிருந்தே விரட்டி விடலாம். ஆங்கிலேயன் காலத்தில் கூட இப்படிபட்ட கருப்பு சட்டம் கிடையாது. இந்த அநீதியை எதிர்த்து இருமாதமாக வழக்கறிஞர்கள் வருமானம் இழந்து போராடி வருகிறார்கள். டெல்லி பார் கவுன்சில் முறைகேடாக 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து மிரட்டுகிறது. எந்த மாநிலத்திலும் இந்த சட்டம் இல்லை. எந்த மாநில வழக்கறிஞர்கள் மீதும் இந்த சஸ்பெண்ட் இல்லை.
நீதிமன்றங்களின் நெடிதுயர்ந்த பிரமாண்டக் கட்டிடங்கள், பரிவாரங்களோடு டவாலிகள் மணியடித்துக் கூவிக்கொண்டு முன் செல்ல கருப்பு அங்கிக்குள் புகுந்து கொண்டு நடந்துவரும் காலனிய காலத்து பந்தா, குண்டூசி விழும் சத்தம் கூடக் கேட்காதவாறு மிரட்டும் அமைதி இவை எதுவும் நீதிபதிகளுக்கு மிதிப்பும் மரியாதையும் கொடுத்து விடமாட்டா. சட்ட நியாயப்படியான நீதி, நேர்மை வழுவாத, நடுவு நிலையான, தீர்ப்புகளும் நன்னடத்தைகளும் தாம் சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தும்.
நீதிபதிகளின் தீர்ப்புகளும் நடத்தைகளும் அப்படி இருக்கின்றனவா? இல்லையே! ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் என்றால் குற்றம் சாட்டபட்டவர்களைத் துரத்தித் துரத்தி, தூக்குமேடை வரை விரட்டுகிறார்கள். அவர்கள் உயிரை மயிருக்கும் மதிப்பதில்லை. அதுவே, மேட்டுக்குடி ஆதிக்க சாதியினர், ஆட்சியாளர், அதிகார வர்க்கத்தினர் மீதான வழக்குகள் என்றால் குப்பையைக் கூட கிளறி மோர்ந்து பார்க்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கீழ்வெண்மணியிருந்து. மேலவளவில் வெட்டிவீசப்பட்ட தாழ்த்தப்பட்டோர், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் கொலை வழக்குகளில் நீதிபதிகளின் இறுகிய முகத்தைத்தானே காண்கிறோம்.
சுவாதி கொல்லப்பட்ட போது நீதிபதிகள் கோபப்பட்டார்கள் சரிதான். கும்பகோணத்தில் 93 பச்சிளங் குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டார்கள்; முகலிவாக்கத்தில் 61 தொழிலாளர்கள் உயிரோடு புதைக்கப்பட்டார்கள்; அவற்றுக்காக அரசுக் குற்றவாளிகள் யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? அவையும் உயிர்கள்தாமே. அவர்களுக்காக நீதிபதிகளிடம் கோபம் கொப்பளிக்கவில்லையே! அதிகாரவர்க்கப் பாசம்தானே பீறிட்டது!
வரதராசப் பெருமாள் கோவில் நிர்வாகி சங்கரராமனை வெட்டிக் கொன்ற காஞ்சி சங்கராச்சாரி வழக்கு முதல் பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை குடிபோதையில் காரை ஏற்றிக்கொன்ற சல்மான்கான் வழக்கு வரை மேட்டுக்குடி ஆதிக்க சாதிக்காரர்கள் பக்கம்தானே நீதிபதிகள் நின்றார்கள். ”எங்க அப்பாவை வரதராசப் பெருமாளே வந்து வெட்டிக் கொன்றாரா; இல்லை அவர் தன்னைத்தானே வெட்டிக் கொண்டாரா?” என்று அவரது மகன் கேட்ட கேள்விக்கு நீதிபதிகள் எவராவது பதில் சொன்னார்களா?
தான் நிச்சயம் தண்டிக்கப்படிவோம் என்று பயப்படும் குற்றவாளிகள் தாம் வழக்கைப் பல ஆண்டுகள் இழுத்தடிப்பார்கள்; இது பாமரனும் அறிந்த உண்மை. ஊழல்-குற்றவாளி ஜெயலலிதாவின் இவ்வாறான தகிடுதித்தங்களுக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும் உடந்தையாக இருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்து, ஜெயலலிதாவின் அதிகார ஆட்சியும்-உல்லாச வாழ்வும் தொடர நீதிபதிகளும் காரணமில்லையா? தண்டிக்கப்பட்டவுடன் அவரது மேல் முறையீட்டு வழக்கை நீதி, சட்ட மரபுகளுக்கு மாறாக மூன்றே மாதங்களில் விசாரித்து முடிக்கும் படி நெருக்கும் உத்திரவு போட்டதோடு, கட்டுப்பாடற்ற பிணையிலும் விடுவித்தார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. இறுதியில் நீதிபதி குமாரசாமி எங்கள் குலசாமி என்று ஜெயலலிதா கும்பலின் அடிமைகள் கும்பிடுமாறு கேவலமான தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறையிடப்பட்டதும், வழக்கை விரைந்து நடத்தி அவரை விடுவிப்பதில் அதீத அக்கறை காட்டிய உச்சநீதிமன்றம் , மேல் முறையீடு மூலம் மீண்டும் அவர் சிறைப்படக் கூடாதென்று இப்போது வழக்கை இழுத்தடிக்கிறது. ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அடாவடியாக ஏதாவது வியாக்கியானம் செய்து குற்றவாளியை விடுவிப்பது அல்லது வழக்கை மீண்டும் கர்நாடகா உயர்நீதி மன்றத்துக்கே மறுபரிசீலனைக்கு அனுப்பி இழுத்தடிப்பது; இப்படி ஒரு தனி மனிதரைக் காக்கும் முயற்சியில் நீதித்துறையே நிர்வாணமாகி நிற்கும்போது, தமிழக வழக்கறிஞர்களை ஒடுக்குவதன் மூலம் அதன் மாண்பும். கண்ணியமும், மதிப்பும் மரியாதையும் காக்கப்படுமா?
கிரானைட் கொள்ளையர் பழனிச்சாமி, தாது மணல் கொள்ளையர் வைகுண்டராஜன், ஆற்று மணல் கொள்ளையர் ஆறுமுகசாமி, படிக்காசு ஆகிய இயற்கைவளச் சூறையாடிகளையும் ஏரி, குளம், கண்மாய், அரசுப் புறம் போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ள கல்விக் கொள்ளையர்களையும் பல பத்தாண்டுகளாக நீதிபதிகள் பாதுகாத்து வருகிறார்கள்.
மதுரை கிரானைட் கொள்ளையர் பழனிச்சாமி மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்த மேலூர் நீதிபதி மகேந்திர பூபதி, உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் அப்படிச் செய்ததாகச் சொல்லவில்லையா? இதற்கென்ன, கறுப்பு அங்கிக்குள் ஒளிந்து கொண்டுள்ள குள்ளநரிகளின் பதில்?
கிரானைட் கொள்ளை மீது சகாயம் குழு விசாரணையத் தொடங்கியபோது, அக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளையும் விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு வெளிப்படையாகவே எழுதினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு நீதிபதிகளின் பதில் என்ன?
பதவி உயர்வும், ஓய்வு பெற்ற பிறகு ஆதாயம் தரும் பதவிகளைக் குறிவைத்தும் பெரும்பாலும் ஆட்சியாளருக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்குகிறார்கள். ஆட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் எதிரான வழக்குகளில் நீதி, நியாயம் கிடைப்பதற்காக சி.பி.ஐ போன்ற விசாரனை கோரினால் பெரும்பாலும் தள்ளுபடி செய்துவிடுகிறார்கள்.
மக்கள் நலனுக்காகப் பொதுநல வழக்குகள் போட்டால் மதிப்பதே கிடையாது. ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதிமன்ற உத்திரவுகளை அரசும் அதன் அதிகாரிகளும் மதிப்பதே இல்லை. அரசிடம் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டு மீண்டும் மீண்டும் தள்ளிப்போடுவது; நீதிமன்றங்கள் அவர்களை எச்சரிப்பதும், இறுதி எச்சரிக்கை விடுவதும்தானே நெடுந்தொடராக நீடிக்கின்றன.
இயற்கை வளங்களையும் பொதுச் சொத்துக்களையும் காப்பது, ஆணவக் கொலைகளையும் தாழ்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுப்பது இவை எதையும் பொது நலன்களாகவோ தமது கடமைகளாகவோ நீதிபதிகள் கருதுவதேயில்லை.
இவை குறித்தெல்லாம் எதிர்க் கட்சிகளும் மக்களும் ஊடகங்களும் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களின் வாயடைப்பதற்கு என்ன வழி? ஆய்வு, விசாரணை என்று மக்கள் அவற்றை மறக்கும் வரை அரசும் நீதிபதிகளும் இழுத்தடித்து, அதன் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள். இத்தகைய விசாரனைகளால் குற்றங்கள் தடுக்கப்பட்டனவா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா?
மக்கள் ஆத்திரம் கொண்டு கொந்தளிக்கும் அளவுக்கு எரியும் பிரச்சனைகளில் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களைப் போல நடித்து, அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சிலவற்றை “தானே முன்வந்து விசாரணை”க்குத் தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள். குடிதண்ணீர் கேட்டு மக்கள் காலிக்குடத்தோடு ஊருக்கு ஊரு சாலை மறியல் செய்கிறார்கள்; சட்டம் ஒழங்கு பிரச்சனை என்று போலீசை ஏவி, அடி த்து நொறுக்கிறார்கள்.
செங்கத்தில் ஆட்டோ ஓட்டுனரின் குடும்பமே வெறித்தனமாகத் தாக்கப்பட்டது; திருட்டுக் குற்றம் சுமத்தி மூன்று வயதுக் குழந்தையோடு நரிக்குறவர் குடும்பமே நாகர்கோவிலில் சிறையிடப்பட்டது. இது போல் நூற்றக்கணக்கில் அக்கிரமங்கள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணமான போலீசு மீது நீதிபதிகள் தாமே முன்வந்து விசாரணைக்கு எடுக்கவில்லை.
கத்தை கத்தையாகக் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நாளும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் தனியார் பொறியல் கல்லூரிகளின் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு எந்திரத்தின் எல்லா உறுப்புகளிடத்தும் முறையிட்டும் செவி சாய்க்காது விரட்டப்பட்ட எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், நாளும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் படுகொலைகளும் நடக்கின்றன. இப்படி மக்களை அப்பட்டமாக, நேரடியாகப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையையும் தாமாக விசாரணைக்கு எடுப்பதில்லை. அப்புறம் எதற்கு நீதிபதிகள் தாமே முன்வந்து விசாரணை செய்யும் அதிகாரம்?
மக்களிடம் ஓட்டுவாங்கிப் பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு இல்லாத அதிகாரம், அவர்கள் போடும் உத்தரவுகள், சட்டங்களையும் செல்லாதென்று நிராகரிக்கும் அதிகாரம், யாரையும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டித் தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்குண்டு.
நாடாளுமன்றத்தில் இரண்டில் ஒரு பங்கினர் ஓட்டுப்போட்டாலே பிரதமரையும் நீக்கிவிடலாம். இதுவரை பல முதல்வர்கள், பிரதமர்கள் அப்படிப் பதவியிழந்திருக்கிறார்கள். ஆனால், நீதிபதிகள் கொலையோ, பாலியல் அத்துமீறல்களோ ஊழலோ செய்தாலும் மூன்றில் இரண்டு பங்கினர் ஓட்டுப் போட்டால்தான் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய முடியும்! மக்களோ அவர்களின் பிரதிநிதிகளோ நீதிபதிகளை நியமித்துக் கொள்ள முடியாது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளலாம். இது என்ன ஜனநாயகம்?
மேலே கண்ட சான்றுகளைப் பரிசீலியுங்கள்! கடவுளைப் பற்றிய பிரம்ம சூத்திரம் தனக்கு மட்டுமே என்று சொல்லும் பார்ப்பனப் பூசாரிகளைப் போல் இந்திய சட்டத்தை வைத்துக் கொண்டு, அதற்கு வியாக்கியானம் செய்யும் ஏகபோகத் தகுதி, அதிகாரம் தமக்கு மட்டுமே உண்டென்று ஒட்டு மொத்த சமூகத்தின் மீது ஏறி மிதிக்கிறார்கள்.
மருத்துவருக்கு நோயாளி இன்னுமொரு நோயாளிதான்! சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு அடுக்கு மாடி வீடுகளில் மேட்டுக் குடியோடு மட்டும் போலீசு புடை சூழ வாழும் நீதிபதிகள் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
ஏழை எளிய மக்களின் துயரங்கள், பாலியல் வன்கொடுமைக்குப் பலியான பெண்களின் வலியை அவர்களால் உணர முடியாது.
ஆகவே, நாட்டின், அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரச் சிக்கல்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடிவு சொல்லும் அதிகார கொண்ட நீதிபதிகள் என்ன எல்லாத் துறைகளும் கற்று தேர்ந்த வல்லுநர்களா? மேதைகளா? அதற்கான தகுதி கொண்டவர்களா? சிந்தியுங்கள்.
நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல!
மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல!
பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி
திருச்சிக்கு வாரீர்!
நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர், திருச்சி
—- மக்கள் அதிகாரம் தமிழ்நாடு தொடர்புக்கு : 99623 66321
தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், புரட்சிகர இயக்கங்களும் மூடு டாஸ்மாக்கை என்று மதுவுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடினர். இதை தொடர்ந்து தமிழகத் தேர்தல் களத்தில் மது விலக்கு கொள்கையை அனைத்து கட்சிகளும் கையில் எடுத்தனர். இதனால் வேண்டாவெறுப்பாக தாமும் மதுவிலக்கு பற்றி பேசியே தீர வேண்டும் என்ற நெருக்கடியால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். பல்வேறு பித்தலாட்டங்களுக்கு பின் வெற்றியும் பெற்று விட்டார் அ.தி.மு.க-வின் சர்வாதிகாரி ஜெயா.
மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் கண்துடைப்புக்காக ‘முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் எனவும், விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்படும்’ எனவும் அறிவித்தார். இதை ஏதோ மாபெரும் சாதனை என்று அ.தி.மு.க-வின் அல்லக்கைகள் தம்பட்டம் அடித்து கொண்டாடினர். நேரம் குறைப்பு என்பதோ, சில கடைகளை மூடுவது என்பதோ அரசியல் ரவுடிகளும், காவல் துறையினரும் கள்ளத்தனமாக வருவாய் ஈட்டவே உதவும் என்பதை அன்றே நாம் வினவு மூலமாக அம்பலப்படுத்தினோம். சில பத்திரிக்கைகளிலும் இவை செய்திகளாக வெளிவந்தன.
இந்த உண்மையை நிரூபிக்கும் விதமானதுதான் இந்த சம்பவம். திருச்சி – உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை 6 மணி முதல் 12 மணி வரை அருகில் உள்ள பாரில் வைத்து டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு புகார் தெரிவித்தும் மது விற்கும் அ.தி.மு.க ரவுடிகளிடமே லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.
அ.தி.மு.க ரவுடிகளின் டாஸ்மாக் சரக்கு விற்பனை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதனை அறிந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் 01-08-2016 அன்று காலை 10 மணியளவில் பார் முன் கள்ளத்தனமாக குப்பை தொட்டிக்குள் மது பாட்டில்களை மூட்டை மூட்டையாக வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை புகைப்படம் எடுத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடினர். மது பாட்டில்களை கைப்பற்றிய தோழர்கள் உடனடியாக கடைமுன் திரண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசின் பித்தலாட்டத்தையும், காவல் துறையின் களவாணித் தனத்தையும் முழக்கமாக எழுப்பி அம்பலப்படுத்தினர். உடனே அங்கிருந்த மக்களை கலைந்து போக சொல்லி காவல் துறையினர் விரட்டினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “ம.க.இ.க-வினர் அவர்களே சரக்குகளை கொண்டுவந்து பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்” என்று கூறினார். ஆனால், “அது பொய் என்பதையும், காவல் துறையின் ஆதரவோடுதான் இது நடைபெறுகிறது” என்ற உண்மையையும் மக்கள் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனதால் தோழர்களை எதுவும் செய்ய முடியாமல் திகைத்தனர்.
தோழர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே, “இனி இதற்கு ஒரே தீர்வு அனைவரும் அமைப்பாக ஒன்றுபட வேண்டும், மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்க வேண்டும்” என முழக்கமிட்டு மது பாட்டில்களை மக்கள் முன் தரையில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அமைப்பாக ஒன்று சேர்ந்தால் டாஸ்மாக்கை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இது குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, “இது ஏதோ திருச்சி- உறையூரில் மட்டும் தான் என்று இல்லை. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு. மது விற்பனை மூலம் மக்களை கொன்று கல்லாக் கட்டும் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்” என போர்குணத்துடன் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் கலந்து கொண்டார்.
“என்னிடம் உள்ளதை உரித்தெடுத்து
என் தன்மானத்தைப் பறித்துச்செல்லப் பார்க்கிறார்கள்
என் உள்ளத்தை வதைத்து
வெள்ளையனுக்கு ஒத்தூதும்
குழலாக்க நினைக்கிறார்கள்
ஆனால் என் ஆன்மா விற்பனைக்கல்ல
நான் போராடப் பிறந்தவள்
அவர்களுக்கு நான் ஒரு சவால்!”
– ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த கறுப்பின போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது. இதில் முக்கியப் பங்கு டிரேஸிக்கு உண்டு.
அமெரிக்காவில் இன்று காட்டுக் கூச்சல் போடும் இசையே எங்கும் பரப்பப்பட்டுள்ளது. இதன் மத்தியில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய அக்கறையோடு பாடும் டிரேஸி சாப்மன் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசுகிறார்.
டிரேஸி சாப்மன்
பிரமாண்டமான மேடை, கண்ணைப் பறிக்கும் அலங்கார விளக்குகள், மிகையான ஒப்பனைகள், எலெக்ட்ரானிக் ஜாலங்கள் – இவைகளோடு தான் எல்லா ‘பாப்’ இசைக்குழுக்களும் பாடுகின்றன, ஆடுகின்றன; இந்த ஆட்டங்கள் டிரேஸியின் நிகழ்ச்சிகளில் இல்லை.
அதோ டிரேஸி பாடுகிறார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் டிரேஸியின் மகுடிக்குக் கட்டுப்படுகிறார்கள் – உறங்குவதற்கல்ல, சிந்திப்பதற்கு. டிரேஸியின் பாடல் லட்சக்கணக்கானவர்களை சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க வைப்பவர்களை அமெரிக்க முதலாளிகளுக்குப் பிடிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை பராமரிக்கப் போவதாகச் சொல்வார்கள். ஏதாவதொரு கெளரவப் பதவி கொடுத்து ஒரு நிறுவனத்தில் கட்டிப் போட்டு விடுவார்கள். சிறந்த இளைஞர்களை இப்படித்தான் விலைக்கு வாங்கி அடிமைகளாக்கி விடுகிறார்கள். இப்படி ‘வாய்ப்பு’ கிடைக்காமல் போனவர்கள் பிழைப்பு தேடி இசைக் கச்சேரிக்கு ஏறி இறங்கி அலைவர்கள் மக்களிடமிருந்தும், அவர்களது பிரச்சினைகளில் இருந்தும் இப்படிப் பட்டவர்கள் ரொம்பத் தொலைவு விலகிப் போய்விடுவார்கள்.
இரண்டிலுமே டிரேஸி அகப்படவில்லை.
எனக்கொரு விலை உண்டு என்று நினைக்கிறீர்கள்
இருப்பதை ஒரு விலைக்கு விற்பேன் என்று நம்புகிறீர்கள்
காசே கடவுள் மற்றது பொய் என்று அலறுகிறீர்கள்”
என்று சாடுகிறார் டிரேஸி. அவர் எப்படி வலைகளில் அகப்படாமல் தப்பினார்? அவரது வாழ்க்கைதான் அவருக்குக் கற்றுக் கொடுத்தது. அவர் வளர்ந்த ஏழை கருப்பின குடியிருப்பு அமெரிக்கச் சமுதாயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
டிரேஸியின் தாய் அவருக்கு கஷ்டம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தாள். தனது குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். சுரண்டும். ஒடுக்கும் வெள்ளை இன அடக்குமுறை பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தாள். கறுப்பினக் குடியிருப்பில் டிரேஸி தான் வாழ்ந்து அனுபவித்ததன் மூலம் அமெரிக்கா பற்றிய ஆரம்பப் பாடங்களை நேரடியாகவே கற்றுக் கொண்டார்.
“அப்படியா அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றும் தெரியாததுபோல
பாசாங்கு செய்கிறார்கள்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படி ஒரு ரகசிய உலகம் இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பை களத்திலும்தான்
சிலர் வாழ்கிறார்கள் என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்”.
அனுபவம் செறிந்த இந்தச் சொற்கள் எங்கிருந்து டிரேஸிக்குக் கிடைத்தன? அவருக்கு முன்னால் வாழ்ந்த கவிஞர்களிடம் எடுத்ததா? அகராதிகளில் முக்குளித்து அகழ்ந்தெடுத்ததா? அல்ல. அதே குப்பை அழுகல் நிறைந்த கறுப்பின மக்களின் சேரிகளில் வாழ்ந்த அனுபவமே பாடல்களாக வந்திருக்கிறது.
பள்ளிப்படிப்பு மற்றொரு தரப்பான வெள்ளையர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஏழைப்பெண் ஒருத்தியை முதன்முதலாக அங்கே அவர்கள் சந்தித்தர்கள் ஏழ்மை, நிறப்பாகுபாடு பற்றி அறியாதவர்கள் “கறுப்பர் இனத்தில் பிறந்த நீ என்ன நினைக்கிறாய்” என்ற கேள்வியைக் கேட்டார்கள். தன் இனத்துக்கு ஏற்பட்ட இழிவுகள் பற்றி, யார் இழிவு ஏற்படுத்தியதற்குக் காரணமானவர்களோ அவர்களிடமே விளக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு திகைப்பையும், அருவெறுப்பையும், எரிச்சலையும் மூட்டியது. நிறவெறி அவரது கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. “நீ நீக்ரோ, நீ நீக்ரோ!” அதுவே அடுத்த கேள்வியையும் அடிமனத்தில் விதைத் துவிட்டது “விடுதலை எப்போது?”
”நீ
ஆடம்பர மோகத்தில்
பொருளாசையில் விழுந்து
கண்ணுக்குத் தெரியாத ரத்தச்
சங்கிலிப் பிணைப்பைக்
காணத் தவறிவிட்டாய்!
அந்தஸ்தில் உயரப் பார்க்கிறாய்
ஆனால் கீழே உன்னைச் சந்தையில் விற்கிறார்கள்
இது இன்னொருவகை அடிமைத்தனம்
மனிதன் படைத்த உலகம் முழுதும் வெள்ளையர் கையில்
அதுவே உனது எசமான் – இன்றும்.”
கறுப்பின விடுதலை என்ற லட்சியத்தில் தானே தன்னைப் புடம் போட்டு எடுத்துக் கொண்ட டிரேஸிக்கு ஒரு பெரிய மனவருத்தம். டிரேஸி மட்டுமல்ல; இந்த லட்சியத்துக்காகவே கலையைப் பயன்படுத்திய பலருக்கு இதே போன்ற மனவருத்தம் உண்டு. யார் தங்களது கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்று படைத்தார்களோ, அந்தச் சகோதரர்கள் ஆடம்பர மோகத்தில் அடிமைப்பட்டு கானல் நீர் தேடி ஓடும் விலங்குகளாக அலைவதைப் பார்க்கிறார்கள்; ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இங்கே இந்தியாவில் இடஒதுக்கீட்டுச் சலுகையினால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய சிலர் கீழே உழலும் தன் சக மக்களை, அவர்களது துன்ப துயரங்களை என்றென்றைக்குமாக மறந்துவிட்டுப் புதுப் பார்ப்பனர்களாக மாறிவிடுகிறார்கள். இதுபோலவே தான் கறுப்பர் இன மக்களில் சிலர் சொந்தச் சங்கிலிப் பிணைப்பை மறப்பது மட்டமல்ல, வெள்ளை இன எஜமானர்கள் பூட்டுவது பூவிலங்கு, பொன் விலங்கென்று விளக்கவும் தொடங்கி விட்டார்கள். இந்த அவலத்தில் விளைந்ததுதான் டிரேஸி பாடல்களின் ஆதங்கம் கோபம் அழுத்தம் சோகம், விம்மல், வெடிப்பு எல்லாம்.
அமெரிக்க இசை உலகத்தில் மன எழுச்சி உணர்வுகள் ஆபாசமான, பகட்டான, பசப்புணர்ச்சியாகி விட்டது; வலுவும் பலமும் ஆரவாரமாகிவிட்டது; நகைச்சுவை உணர்வு அற்ப உணர்வாகிவிட்டது. மொத்தத்தில் – இசை முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகி விட்டது. கறுப்பின மக்களின் வாழ்க்கையும் இசையும் சீரழிக்கப்பட்டதைக் கண்டு உள்ளம் கொதிக்கும் டிரேஸி அந்தக் கனலைத் தன் பாடல் வரிகளுக்கு மாற்றிக் கொடுக்கிறார்.
ஒருநிமிடம் தமிழகத்தில் இசை ஞானியாக்கப்பட்டு வலம் வரும் இளையராஜாவை இங்கே ஒப்பிட்டு பாருங்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து, கிராமப்புறத்திலிருந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு நகருக்கு வந்தார்; பார்ப்பன. மேல்ஜாதி கோடம்பாக்கத்து ஸ்டுடியோக்கள் அவரைப் புறம் ஒதுக்கித் தள்ளின; விடாது போராடி வலுவான இசையால் காரியங்களை சாதித்தார். ஆனால் அவர் நந்தனார் பாணியில் தீக்குளியல் போட்ட பிறகே ‘சின்ன சங்கராச்சாரியாக’ அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார். அதாவது ஒருவகை சமரசம் (’சொன்னா வெட்கக் கேடு, சொல்லாட்டி மானக்கேடு!’) அவருக்கும் பிடித்திருக்கிறது. தான் வெக்கங் கெட்டுப் போனதையே ஆன்ம விடுதலையாக வருணித்து தத்துவ உபதேசமும் அளிக்கிறார்.
யார் மக்கள் கலைஞன்? இளையராஜாவா? அல்லது போராடும் டிரேஸி சாப்மானா?
தாய் வாங்கிக் கொடுத்த கிடாரை மீட்டிய இளம் விரல்கள் பள்ளி வயதிலேயே புரட்சியை இசையாக்கித் தீட்டிப் பார்த்தன:
“புரட்சி ஒலி இதோ இந்தக் கணம்
உன் காதில் விழவில்லையா?”
1982-ல் பள்ளி ஆண்டுக்குறிப்பில் இப்படி எழுதினார்கள்: “டிரேஸி சாப்மன் தன் கிடாரையே மணம்செய்துகொண்டு நீண்டகாலத்துக்கு இன்பமாக வாழ்க்கை நடத்துவார்.”
வாழ்க்கை கலை இரண்டிலும் முரண்பாடில்லாத ஒற்றுமையை அடைந்த டிரேஸிக்கு எந்த இசை அலங்காரமும் தேவைப்படவில்லை. 1939-ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த கிராமிப் பரிசுகள் மூன்றினை அவர் வென்றார். மெல்லிசைக்காரர்களின் பகட்டான கவர்ச்சி இசை போல அல்லாமல் டிரேஸியிடம் இயல்பான நாட்டுப்புற மக்கள் இசை இருக்கிறது என்று பத்திரிக்கைகள் பாராட்டின.
“என் உடமை அத்தனைக்கும்
ஒரு விலை உண்டென
பணமே வெல்லும் மற்றவை தோற்கும் என
நீங்கள் நினைக்கிறீர்கள்
போய் ஆன்மாவை விற்று
தோலை காப்பற்றிக் கொள்ளுங்கள்!
என்னுள்ளே எரியும் சுடரை நான்
காப்பாற்ற வேண்டும் – நான்
உயிர் வாழ்வது அதற்காக தான்!”
செயற்கையான இசையை குரலை மட்டுமல்ல, செயற்கையான பணத்துக்கு அடிமையான வாழ்க்கையை அவர் வெறுக்கிறார். பண அடிமை மட்டுமல்ல, எல்லாவகையான அடக்குமுறைகளையுமே அடிமைத்தனத்தையுமே அவர் எதிர்க்கிறார். சமூக விடுதலை பற்றிய அவரது சிந்தனையை அவரது விடுதலை இப்போதே பாடலில் கேட்கலாம்.
“அவர்கள் அவரைச் சிறையில் அடைத்தார்கள்
சீக்கிரம் செத்துப் போவார் என்று
பூட்டி வைத்தார்கள்.
உடல் மெலிந்து உறுதி குலைந்து பின்
சிந்தனையும் சிதறுமென நம்பினார்கள்”
சிறையில் அடைக்கப்பட்டாலும் தென் ஆப்பிரிக்க விடுதலை உணர்வை பெருந்தீயாகக் கிளப்பிய நெல்சன் மாண்டேலா தான் பாடலில் குறிப்பிடப்படுகிறார். நெல்சன் மாண்டெலாவை விடுதலை செய் என்று தொடங்கி மனித குலமே விடுதலை அடைய வேண்டும் என்று உயர்ந்த லட்சியத்தோடு முடிக்கிறார் டிரேஸி. சிறப்பான கட்டமைப்போடு அவர் பாடலை எழுதியிருக்கிறார்.
– “ஒவ்வொரு நாளும் ஒரு முட்டாள் பிறக்கிறான். தானே அரசாள முடியும் என்று நினைக்கிறான். சிறைகளை வரிசையாக எழுப்புகிறான். நியாயவான்களை இங்கிலியால் பிணைத்து உள்ளே இடைக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் பிறக்கிறான். முட்டாள்களுக்கு எதிராக நியாயத்துக்காகக் கலகம் செய்கிறான். பளிச்சிடும் வாதங்களுக்குப் பிறகு டிரேஸி பாடுகிறார்: “அந்த மனிதரை விடுதலை செய்யுங்கள்; உங்கள் மனசாட்சியை விடுதலை செய்யுங்கள்; நம் அனைவருக்கும் விடுதலை விடுதலை விடுதலை”.
அவரது பாடல்களில் சமூக விமரிசனம் இல்லாத வரிகளே இல்லை. அத்தனையும் அமெரிக்க சுரண்டல் சமுதாயத்தை திரை கிழிக்கும் கேள்விகள். இறுகி கெட்டி தட்டிப்பேன அமெரிக்க மதிப்பீடுகளை அடித்து நொறுக்கும் கேள்விகள்.
”உலகுக்கே ஊட்ட உணவிருக்கும் போதும்
குழந்தைகள் ஏன் பசியால் துடிக்கின்றன?
விட்டுக்குள்ளே பெண்கள் இருக்கும்போதும்
ஏன் அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை?”
ஏன்? ஏன்? ஏன்? – மிக மிகச் சாதாரண கேள்விகள் ஆனால் அடிப்படையான கேள்விகள்.
அமெரிக்கச் சமுதாயத்தை ஆள்கின்ற சுரண்டும் வர்க்கத்துக்கு கேள்வி எழுப்புபவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்களை ஒன்று மயக்கி விலைகொடுத்து வாங்கப் பார்க்கும்; அல்லது வெட்டிக் கொன்று விடும்; சுட்டுத் தள்ளிவிடும். முப்பதுகளில் மெக்கார்த்தியிச அடக்குமுறை இயக்கம் எழுந்து சோசலிசத்தை ஆதரித்த, கறுப்பர் விடுதலைக்குக் குரல் கொடுத்த போராளிகளை கலைஞர்களை அமெரிக்க அரசு நரவேட்டையாடியது. அன்று முன்னணியில் நின்ற கறுப்பினப் போராளிப் பாடகர் பால் ராப்சன்.
“மற்றவர்கள் பெற்றிராத நேரடி அனுபவம் கருப்பின மக்களுக்கு உண்டு. ஏகாதிபத்தியச் சுரண்டல் என்றால் என்ன என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும். அவனைப் பொறுத்த அளவில் அது எங்கோ தொலைவில் உள்ள தத்துவப் பிரச்சினை அல்ல. எந்த ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள பலகோடி காலனிய மக்களை வேலை கொடுப்பதில் பாரபட்சம் – வெள்ளையன், கறுப்பன் என்கிற பாகுபாடு – ஜனநாயக உரிமைகள் மறுப்பு என்ற முறைகள் மூலம் அடக்கி ஒடுக்கி ஆள்கிறதோ அதே முறைகளைத் தான் நீக்ரோக்கள் மீதும் காட்டுகிறது” என்று அன்று சாடினார் ராப்சன்.
அறுபதுகளில் இதேபோல வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்பி இயக்கங்களில் பங்கெடுத்தார் அமெரிக்கப் பாடகி ஜோன்பெய்ஸ். பால்ராப்சன், ஜோன்பெய்ஸ் பாரம்பரியம் டிரேஸி சாப்மனிடம் தொடருகிறது. “அரசின் எச்சில் காசு வேண்டாம், தேவை மானத்தோடு வாழ ஒரு வழி” என்ற பாடல் வரிகள் ராப்சனின் தொடர்ச்சி.
வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கேள்வி கேட்டுவிட்டுப் போகிறவர் அல்ல டிரேஸி. நெல்சன் மாண்டெலாவை விடுதலை செய்யக் கோரும் இயக்கம், மனித உரிமைகள் இயக்கம் போன்றவற்றில் நேரடியாகப் பங்கேற்றார். இந்தியாவுக்கு வந்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி அமெரிக்க வாழ்க்கையில் இனப் பாகுபாடில்லாமல் இன்றைய தலைமுறை சீரழிந்து பொறுக்கி வர்க்கமாக விட்டேற்றியாகச் சுற்றுவதைப் பார்த்து ஆளும் வர்க்கத்தின் ஒட்டாண்டித் தனத்தை மிக நுணுக்கமான சிறு விஷயங்களை விளக்கியும் அம்பலப்படுத்துகிறார். இளைஞனின் இதயத்தைத் தொட்டுக் கேட்கிறார்
“எனதருமைச் செல்வமே
உன்மேல் எனக்குக் கோபமில்லை
சிலநேரம் நான் நல்லதை நினைப்பது மட்டும்
உன் பிரச்சினையைத் தீர்ப்பதில்லை.
… …
… …
கொஞ்சநேரம் எடுத்துக்கொள்
உன் வாழ்க்கை பற்றி யோசி!
கொஞ்சநேரம் எடுத்து யோசி
வாழ்க்கையை வீசித் துர எறிவதற்கு முன்
யோசி!”
’செல்வமே’ என்று அழைக்கிறார். ’உன்னைப் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை’ என்று பீடிகை போட்டுப் பேசுகிறார். ஏன் இவ்வளவு முயற்சிகள்? சமூகத்திலிருந்து, குடும்பத்திலிருந்தே அன்னியப்பட்டுப் போய் இளைய தலைமுறை தனித்தீவுகளாக நரம்பியல் நோய் பிடித்தவர்களாக வாழ்கிறது. எப்படியாவது இதயத்தைத் தொட்டுப் பேச முடியாதா என்ற அக்கறை, ஆர்வம் அவருக்கு இருக்கிறது.
இந்த அளவிற்கு மக்கள் எதிரியை உணர முடியாதபடி அவன் சமூக கலாச்சார ரீதியில் பரப்பிவிடும் புகைமூட்டத்தில் சிக்கிக் கிடக்கிறார்கள். அதை விளக்கிய பிறகுதான் எதிரிக்கு எதிரான சண்டைக்கே தயார் செய்ய முடியும். இதை நன்றாக டிரேஸி விளங்கிக் கொண்டிருக்கிறார்.
இளையதலைமுறை இழந்துவரும் பல அற்புதக் கனவுகளையும், வாழ்க்கையையும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கிறார் டிரேஸி. பாடல்கள் பாடிப் பணம் குவிக்கும் பல இசைக் குழுக்களும், முறையான கம்பெனி காரியதரிசிகள் போல இசை அதிகாரிகளாக பல ’இசைமேதைகளும்’ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மத்தியில் புரட்சியைப் பாடும் டிரேஸியைத் தேடி புகழ் ஓடிவந்தது. முதல் இசைத்தட்டு மட்டும் 10 கோடி பிரதி விற்றது. இப்போதும் அவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்: “எனக்குப் புகழில் நாட்டம் இல்லை”
என்னை விலை பேசாதீர்கள் என்று அவரே ஒதுங்கினாலும் அவரது குரலை அடக்கிவிடத் துடிக்கும் அமெரிக்க ஆளும் கூட்டம் பல விசேஷ நபர்களை அனுப்பிப் பார்த்தது. கடுமையாக நடந்து கொண்டு வெறிநாய்களை விரட்டுவதுபோல அவர்களைத் துரத்தியடித்தார். இதுவே கலகக்காரர் டிரேஸியின் நேர்மைக்கு சாட்சி.
எளிமையான பாடலும் உண்டு கவிதைச் செறிவுள்ள பாடலும் உண்டு – இதுவே டிரேஸியின் சிறப்பம்சம். சொல்கின்ற விஷயமே அவருக்கு முக்கியம்; பிரச்சினையை யார் விளங்கிக்கொள்ள வேண்டுமோ அவர்கள் விளங்கிக்கொள்ளும் விதத்தில் அவர் பாடல்களை அமைக்கிறார்.
டிரேஸி சொற்களைத் தெளிவாக உச்சரிக்கிறார். மேற்கத்திய இசைப்பாடகர் அனேகரிடம் இல்லாத சிறப்பம்சம் இது. ’ஆரம்பத்தில் நானும் வேண்டுமென்றே தெளிவில்லாமல் பாடினேன்’ என்கிறார் டிரேஸி. மேற்கத்திய இசை என்றால் புரியாமல் கத்துவது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அது கேட்பவரது அறியாமை அல்ல; உண்மையிலேயே பாடுபவரே அப்படித்தான் நினைக்கிறார். தான் பாடுவதில் சமூக அக்கறை, கவிதை எழுச்சி, ஈடுபாடு, ஆர்வம் எதுவுமே அவருக்குக் கிடையாது. பாடுகிற விஷயத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அவருக்குத் தெரியும் பிறகு ஏன் அவர் புரியும்படி பாடப் போகிறார். அதனால்தான் அவர் வடிவத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒன்றுமில்லாத உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான வடிவம் என்ன? – சந்தை இரைச்சல்தான்.
டிரேஸி ஆரம்பத்தில் தெளிவில்லாமல் பாடியபோது அவரது தாயும் தமக்கையாரும் ’நீ பாடுவது ஒன்றுமே புரியவில்லை’ என்று சொல்வார்கள். பிறகுதான் அவர் புரிந்து கொண்டார் சொல்ல வருகிற விஷயம் மிக முக்கியமானது என்றால் அதை நாம் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
எனவே தான் டிரேஸியின் இசைப்பாடல் பால்ராப்சன், ஜோன் பெய்ஸ் போலவே தெளிவாக இருக்கிறது. மிக வலுவான செய்தி இருப்பதால்தான் ஒரு பாடலை எந்த பின்னணி இசையுமில்லாமல் தனது கிட்டாரைக் கூட மீட்டாமல் பாடியிருக்கிறார். பாடலின் பெயர்: சுவருக்குப் பின்னே (BEHIND THE WALL).
டிரேஸி சாப்மனின் இசைப் பாடல்களைக் கேட்பது ஒர் ஆழ்ந்த அனுபவம். அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ப இசையைக் குழைத்து அவர் சித்திரம் தீட்டுவதைப் பலமுறை கேட்க வேண்டும். உணர்ச்சிகளும் இசைவடிவமும் ஒன்றறக் கலந்து விடுகின்றன.
“உனது பதிலுக்குக் காத்திருக்க நேரமில்லை
நான் சொல்வதைக் கேட்கத் தயாரென்றால்
எவ்வளவு நேரமும் காத்திருப்பேன்”
என்று இதயத்தைத் தொட்டுப் பேசும் லாவகம்;
பளபளக்கும் ஆப்பிளுக்கு ஆசைப்படாதே
அது கசப்பான பழமாக இருக்கக்கூடும்
நியாய ருசிக்கு மட்டும் பசித்திரு
உண்மை உலகத்தை அடையப் பசித்திரு
ஏனெனில் உனக்கிருக்கும் சொத்து
உன் ஆன்மா மட்டுமே!”
என்று பல பாடல்களில் ஊடாடும் அடிநாதமான செய்தி.
இப்படிப் பலப்பல உணர்ச்சிகளை டிரேஸி அடுக்கடுக்காய்த் தந்து நம் சிந்தையில் தீக்கொளுத்துகிறார்.
கீழை ஜெர்மானிய மார்க்சிய இசை அறிஞர் ஐஸ்லர் கூறுவது போல ஒரு புதிய இசை அமைப்பாளனுக்கு இரண்டே இரண்டு பாத்திரங்கள் மட்டுமே உண்டு. ஒன்று: இன்றுள்ள சுரண்டும் சமூகத்தின் மேல் ஒட்டிக் கொண்டு அதன் ஜீவரசத்தை உறிஞ்சிக் கொழுத்து ஆள்பவரோடு கூட்டுச் சேர்ந்து உல்லாசமாக வாழ்வது; மற்றது: ஒரு புரட்சிப் போராளியாக வாழ்வது.
டிரேஸி சாப்மன் ஒரு அமெரிக்க கறுப்பின இசைப் போராளி. உலகின் ஆகப் பிற்போக்கின் குருபீடமான அமெரிக்காவிடமிருந்து ஜனநாயகத்தின் முணுமுணுப்பைக் கேட்டால் கூட பாட்டாளி வர்க்க அணி இன்று வரவேற்க வேண்டும்.
உலகில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் பாட்டாளி வர்க்கம் இதனைப் பயன்படுத்த வேண்டும். டிரேஸீ சாப்மன் அந்த வகையில் போராடும் – ஒடுக்கப்படும் மக்களுக்குக் கிடைத்துள்ள வலுவான போர் ஆயுதம்.
“வறுமையில் இருந்து விடுதலை, மனுவாதிகளிடமிருந்து விடுதலை, பிராமணியத்திடம் இருந்து விடுதலை” என்னும் பாசிசத்திற்கு எதிராக டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர்களின் ஒரே குரலாக ஓங்கி ஒலித்த முழக்கத்தில் இருந்து இந்நூல் தொடங்குகிறது.
இந்நூலிற்கு “WIDERSTAND” – வைடர்ஸ்டாண்ட் (விரிந்த பார்வை) என்று பெயரிட்டுள்ளனர். “வைடர்ஸ்டாண்ட்” என்னும் இந்நூல் ஜெர்மனியின், பெர்லினில் 1926-ம் ஆண்டு வெளியானது. ஜெர்மனில் ஹிட்லர் நடத்திய கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக எர்னஸ்ட் நீகிஷ் (“Ernst Nieskisch”) என்பவர் எழுதியுள்ளார்.
வைடர்ஸ்டாண்ட் நூல்
நாஜி ஜெர்மனிக்கு எதிரான எர்னஸ்ட் நீகிஷ்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தற்பொழுது இந்தியாவெங்கும் இந்து மதவெறியர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள், தலித்கள் மீதான அடக்குமுறை வெறியாட்டங்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் படுகொலைகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாசிச கொடுங்கோன்மைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் “வைடர் ஸ்டாண்ட்” என்று தங்கள் நூலுக்கும் பெயரிட்டுள்ளனர் புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவையை (PUSC) சார்ந்த மாணவர்கள்.
புதுவை பல்கலை
புத்தக வெளியீடு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 28-07-2016 வியாழன் அன்று புதுவை பல்கலையில் நடந்துள்ளது. இவ்விழாவிற்கு புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தனர் மாணவர்கள். குறிப்பிட்ட தேதியில் வரமுடியாததால் ஹைதராபாத் பல்கலைகழக பேராசிரியர் பிரகாஷ் பாபு நூலை வெளியிட்டுள்ளார். புதுவை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் அனீஷா பஷீர்கான் உடனிருந்துள்ளார்.
மொத்தமாக ஏழாயிரம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூவாயிரம் பிரதிகள் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டது. மேலும் நான்காயிரம் பிரதிகள் புதுவை பல்கலைகழக நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளது.
சிறை வைக்கப்பட்டுள்ள நூல்கள்
பூட்டப்பட்ட மாணவர் கவுன்சில் அறை
முடக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகப் பிரதிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்நூலை வெளியிடக்கூடாது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 01-08-2016 திங்கட்கிழமை நேற்று பல்கலைகழகத்தின் முன்பு பா.ஜ.கவை சார்ந்த காவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக சாலைகளின் நடுவே உள்ள “குரோட்டன்ஸ்” செடிகளுக்கு நடுவே தங்கள் கொடிகளை நட்டு அதன் அழகையே அசிங்கப்படுத்தி வைத்திருந்தனர் காவிகள். அந்த அசிங்கத்தை காண சகிக்காமல் வேகமாக சென்றுகொண்டிருந்தனர் மக்கள்.
ஏ.பி.வி.பி காலிகளின் நச்சுப் பிரச்சாரம்
கருத்துரிமைக்கு எதிரான நச்சு பிரச்சாரம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பல்கலைகழகத்தில் மைனாரிட்டியாக உள்ள காவி வெறியேறிய “குட்டி குரங்குகளான” ஏ.பி.வி.பி-யும் இந்நூலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். குரங்கு கையில் பூமாலை கிடைத்த கதையாக, கையில் ஸ்கெட்ச் பென்னும், பேப்பரும் உள்ளதால் “ Don’t Impose Communist Ideology Through Studend’s council Magazine” என்று கிறுக்கி கேண்டினில் ஒட்டியுள்ளனர். இந்நூல் வெளியீட்டுக்கு முன்னரே, இவை பிராமணியத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பேராசிரியை ராஜேஸ்வரி சேஷாத்ரி.
முடக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகப் பிரதிகள்
தற்பொழுது இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் துணைவேந்தர் அனீஷா பஷீர்கான் மீதும், நூலின் முதன்மை எடிட்டர் பேராசிரியர் மூர்த்தி மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் மிரட்டியுள்ளனர் பா.ஜ.க காலிகள்.
நெருக்கடிக்குள்ளான நிர்வாகம் மாணவர் பேரவை தலைவர் இலங்கேஸ்வரன், மற்றும் அஞ்சலி கங்காவிடம் “இந்நூல் வெளியீட்டிற்கும், நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி எழுதி தருமாறு மிரட்டியுள்ளது நிர்வாகம். அவ்வாறு எழுதி தரமுடியாது என்று கூறி மறுத்துள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அப்பல்கலையில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் கழகத்தின் தலைவரும், “வைடர் ஸ்டாண்ட்” இதழ் குழு ( Magazine Committee) உறுப்பினருமான சிவசந்திரனிடம் கேட்டபோது, “எங்கள் கருத்துரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். இந்திய இறையாண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் எழுதவில்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தற்பொழுது பா.ஜ.க-ஏ.பி.வி.பி யின் செயல்பாடு தான் கருத்துரிமைக்கு எதிராக உள்ளது. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுவோம்” என்றார்.
நிறுவனக் கொலைக்கு பலியான மாணவர்களுக்கு அஞ்சலி
மேலும், பல்கலைகழக மாணவர் பேரவை தலைவர் லங்கேஸ்வரனிடம் கேட்டபோது, ” ஏ.எஸ்.சி (ASC) மற்றும் எஸ்.எஃப்.ஐ (SFI)-ன் ஆதரவோடு தான் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். புதுவை பல்கலையில் ஒரு தலித் மாணவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதனை ஏ.பி.வி.பி மாணவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புதுவையில் உள்ள எஸ்.எஃப்.ஐ-ன் ஆதிக்க சாதி மாணவர்களும் விரும்பவில்லை. இந்த இதழை “ தலித் ஆதரவு” இதழ் என்று தான் கூறி வருகின்றனர். இந்த பொய் பிரச்சாரங்கள் எல்லாம் வரும் செப்டம்பர் மாதம் மாணவர் பேரவை தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதால் உயர்சாதியை சேர்ந்த மாணவர்களை சந்தித்து இந்நூலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர், ஏ.பி.வி.பி அமைப்பின் மாணவர்கள். தங்களுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்களை நசக்குவது தான் இவர்களின் அன்றாட நடவடிக்கையாக உள்ளது. இதன் வெளிப்பாடு தான் 01-08-2016 அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டமும், பேராசிரியர்கள் மீதான அச்சுறுத்தலும்” என்று கூறினார்.
ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா, அஜித்குமார், எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் ஆகியோரின் மரணங்கள் “நிர்வாகக் கொலை” (Institutional Murders) என்பதை இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், மராட்டியத்தில் இந்து மதவெறியர்களுக்கு எதிராக போராடிய “ மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்ற அமைப்பை நடத்திய நரேந்திர தபோல்கர், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டியத்தில் இந்து மத வெறியர்களுக்கு எதிராக போராடியவருமான கோவிந்த் பன்சாரே, மற்றும் கர்நாடகா மாநிலத்தின் முற்போக்கு எழுத்தாளரும், மொழி ஆய்வாளருமான கல்பர்க்கி போன்றவர்கள் இந்து மதவெறியர்களால் அநியாயமாக கொல்லப்பட்டதையும் அம்பலப்படுத்தி எழுதியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கைப்பற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-ன் சதித்திட்டத்தையும், காட்ஸ் ஒப்பந்தத்தையும் தோலுரித்து எழுதியுள்ளனர். அதனால்தான் வால் வெட்டப்பட்ட குரங்காக துடித்து வருகின்றனர் இந்து மதவெறி பார்ப்பன கும்பல்.
ஒருபுறம் தலித் வீட்டில் உணவருந்துவோம் என்று கூறிக்கொண்டு, தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை நடத்துவதும், திருவள்ளுவர் சிலையை தலித் என்று குப்பையில் வீசுவதும், பி.எஸ்.பி-ன் தலைவர் மாயாவதி தலித் தலைவர் என்பதால் அவரை விலைமாதாக இழிவுபடுத்துவதுமாய் இந்துமதவெறியர்களின் பார்ப்பனியத் திமிர் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டு, மகாஸ்வேதா தேவி போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பது என்று நாடகமாடி வருகிறது மோடி கும்பல்.
இவர்களின் நோக்கம், இந்தியாவை மற்றுமொரு ஹிட்லரின் தேசமாக மாற்ற வேண்டும் என்று வெறியோடு அலைந்து திரிந்து கொண்டு வருகிறார்கள். “ இந்துத்துவம்” என்ற கொடிய நோயை இந்த சமூகத்தின் மீது தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இந்நோயை அழித்தொழிக்கப்படா விட்டால், சமூகத்தின் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் காவி வெறியேறிய குரங்குகளாக, மிருகங்களாக மாற்றப்படுவோம்..இல்லையெனில் கொல்லப்படுவோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
காஷ்மீரில் புர்ஹான் வானி கொலைக்கு பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயன்படுத்தும் பெல்லட் குண்டு தாக்குதல்களை அறிந்திருப்பீர்கள். இந்தியாவில் இந்த தாக்குத்தல் குறித்த விவாதங்கள் எல்லாம், பெல்லட் துப்பாக்கியை இராணுவம் எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்தியதா, இல்லை கடைசி வழியாக பயன்படுத்துகிறதா என்று நடக்கின்றன. “ஒருபோதும் மறக்காதே பாகிஸ்தான்” எனும் பாகிஸ்தானி சிவில் குடியுரிமைக் குழுமம் ஒன்று ஓவியக் கலையின் துணை கொண்டு பெல்லட் குண்டு தாக்குதலை உணர்த்த முயற்சிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் #IndiaCan’tSee, (இந்தியா பார்க்க முடியாதது) என்ற ஹேஷ் டேக்குடன் அவர்கள் வெளியிட்ட படங்கள் வைரலாக பரவியது. இந்திய பிரபலங்களான மோடி, கிரிக்கெட்டின் விராத் கோலி, நடிகர் ஷாருக்கான் போன்றோர் பெல்லட் குண்டு தாக்குதலால் எப்படி இருப்பார்கள் என்பதை ஃபோட்டோஷாப் மூலம் அந்தப் படங்கள் சித்தரிக்கின்றது. அந்த படங்களைப் பார்ப்போரிடம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் என்று காஷ்மீர் மக்களின் துன்பத்தை எடுத்துரைக்க முயல்கிறது இந்த முயற்சி.
காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை. சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று முழு சமூகமே அங்கு கண்களை இழந்தோ காயம் பட்டோ, இல்லை காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாமலோ அழுது கொண்டிருக்கிறது.
இருப்பினும் இந்த கொலைக் குற்றத்தை அதாவது 2,012 முறை பெல்லட் துப்பாக்கிகளால் சுட்ட ( கிட்டத்தட்ட 12 இலட்சம் சிறு குண்டுகள் ) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவர் ஒரு வரியில் காயங்களுக்கு வருந்துகிறோம் என்று முடித்து விட்டார்.
கற்பனை செய்து பாருங்கள்! இந்தியாவின் பிரபலங்களுக்கு அந்த காயங்கள் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?
அன்புள்ள ஐஸ்வர்யா,
உங்கள் நான்கு வயது மகளான ஆராத்யாவை காப்பாற்றும் முயற்சியில் நீங்கள் மத்திய ரிசர்வ் படையால் தாக்கப்பட்டது எனக்குத் தெரியும். என் வாழ்வில் இதைப் போன்று காஷ்மீரில் நிறைய பார்த்து விட்டேன். இருப்பினும் இன்னும் எனது நான்கு வயது குழந்தையை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறேன். போலிசு பயன்படுத்திய ஏதோ பட்டாசுதான் தன்னைத் தாக்கியது என்றே எனது மகள் சுஹ்ரா நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த குண்டுகள், துப்பாக்கிகள், சாதாரண மக்கள் மீது ஏன் ஏவப்படுகின்றன என்று அவளால் புரிந்து கொள்ள முடியாது. ஒரு வேளை இந்தியாவில் உள்ள தாய்மார்கள் அப்படி குரல் எழுப்பியிருந்தால் காஷ்மீரில் உள்ள குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
– நசிமா ஜான், காஷ்மீர்.
***
அன்புள்ள அலியா,
நீங்கள் எனது வார்டுக்கு அருகில் இருப்பதாக அறிந்தேன். நான் உங்களது தீவிர ரசிகர் என்பதால் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நன்கு ஓய்வு எடுங்கள், மன அழுத்தத்தை கை விடுங்கள். எந்த தவறுமே செய்யாமல் நாம் ஏன் தாக்கப்பட்டோம் என்று நீங்கள் பயந்து கொண்டே சிந்திப்பது தெரிகிறது. நானும் அப்படித்தான் எனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டேன். எனது அப்பாவும் திகைத்துப் போனார்.
“எதற்காக எனது 11 வயது மகளை தாக்கினீர்கள், அவள் ஒரு பிரிவினை இயக்கத்திலும் இல்லையே” என்று அவர் கேட்டார். அந்த போலிசோ எதுவும் சொல்லவில்லை. உலகம் அமைதியாக இருந்தால் கொடூரம் தலைவிரித்தாடும் என்பதறிவேன். எனவே நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு பலமடைவோம். எது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளுங்கள், நானும அருகில்தான் இருக்கிறேன்.
– இன்ஷா முஸ்டாக், காஷ்மீர்.
***
அன்புள்ள மோடிஜி
முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக உங்கள் கண்களில் இருக்கும் பெல்லட் குண்டு துகள்களை முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மருத்துவமனையில் இருக்கும் போலிஸ் உடனே அறுவை சிகிச்சை செய்வதை தடுத்திருந்ததால் உங்களுக்கான காயம் மேலும் மோசமாகும் வாய்ப்பிருக்கிறது. போலீசார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வது அடிக்கடி நடப்பதால் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை உடனுக்குடன் அளிக்க முடியவில்லை. இங்கே ஒரு தலைமுறையே பார்வையற்றவர்களாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. இப்படி நூற்றுக்கணக்கானோரை கடந்த ஐந்து வருடங்களாக பார்த்து வருகிறோம். உங்கள் காயம் குணமடைந்து இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.
– டாக்டர் ஷாஜத் காந்தே,
ஸ்ரீநகர் எஸ்.எம்.ஹெச்.எஸ் மருத்துவமனை, கண் மருத்துவம் துறை.
***
அன்புள்ள அமிதாப்ஜி,
நீங்கள் காயமடைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நடவடிக்கைகளில் நீங்கள் நுழைந்திருக்ககூடாது. எனது மகன் கௌகர் நாசீரும் இதே தவறைச் செய்திருக்கிறான். பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறியவன், அங்கே நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பையனை போலீஸ் அடிப்பதை பார்த்து தடுக்க முயற்சித்தான். உடனே போலிசார் அவனை துப்பாக்கியால் சுட்டனர். கௌகர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியால் எனது தாய் இறந்த போனார்.
போகட்டும். அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்னமும் உங்களுக்கு காலமிருக்கிறது.
– நசீர் அகமத் தார், காஷ்மீர்.
***
அன்புள்ள கஜ்ரோல்,
உங்களை சந்திக்க இயலாமைக்கு என்னை மன்னியுங்கள். எனது 9 வயது மகள் தமன்னாவை விட்டு நான் நீங்கினால் அவள் பதட்டமடைவாள். மருத்துவமனை படுக்கையில் இருந்தாலும் அவள் பயத்துடனே இருக்கிறாள். நான் அவளை எப்படி குற்றம் சொல்ல முடியும்? பெல்லட் குண்டு தாக்கும் போது அவள் சமையலறையில் இருந்தாள். ஒரு இலக்கை சுடுவதற்கு காஷ்மீர் போலிசாருக்கு எந்த காரணமும் தேவையில்லை. எனது வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை ஒரு தாயாக உறுதி கூறுகிறேன்.
– ஷாமீமா, காஷ்மீர்.
***
அன்புள்ள சையஃப்,
நீங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை நம்பவே முடியவில்லை. எனது வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், எனது வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால் உங்களை உடன் வந்து சந்திக்க முடியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறும் இந்திய இராணுவம் என்னை ஏன் சுட்டது? நான் உயரமானவனோ அச்சுறுத்துபவனே கூட அல்ல. எனக்கு வயதே 11தான், அதுவும் வீட்டின் வெளியே சும்மா நின்றிருந்தேன். இந்திய இராணுவம் பயங்கரவாதிகளாக இல்லை என்றால் நான் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறேன், ஏன்?
– உமர் நாசீர், காஷ்மீர்
***
அன்புள்ள விராத்,
கிரிக்கெட் பயிற்சி முடித்து விட்டு திரும்பும் போது நானும் இந்திய இராணுவத்தால் எனது இடக்கண்ணில் சுடப்பட்டேன். இருப்பினும் இதற்காக கவலை கொள்ள வேண்டாம், இது உயிரழக்கச் செய்யும் குண்டு அல்ல என்று இந்தியாவால் சொல்லப்பட்டேன். ஒரு காஷ்மீரியாக இருப்பதால் வரும் பொறுமைதான் எனக்கு சக்தி தருகிறதே அன்றி, எனக்காக குரல் கொடுக்க யாருமில்லை. நீங்களும் உறுதியாக இருந்து விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களோ நானோ இனி கிரிக்கெட் பந்தை பார்த்து அடிக்க இயலாது. என்றாலும் நமக்கு உயிராவது கிடைத்திருக்கிறதே என்று இந்திய இராணுவம் கூறுகிறது.
– ஷாகில் சாகூர், காஷ்மீர்.
***
அன்புள்ள ஷாருக்
இந்திய இராணுவம் உங்களுக்கு செய்திருப்பது ஒரு சோகமான நிகழ்வு. நீங்கள் அந்தப் போராட்டக்காரர்களோடு கூட இல்லை. இப்படித்தான் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம், இராணுவத்திற்கு சந்தேகப்படும் யாரை வேண்டுமானலும் சுடுவதற்கு அதிகாரம் கொடுக்கிறது. எனது சகோதரன் ஹமீதுக்கும் இதே கொடூரம்தான் நடந்திருக்கிறது. நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விட்டு டியூஷனுக்கு திரும்பும் போதுதான் அவனும் பெல்லட் குண்டால் சுடப்பட்டான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவனை மீட்பதற்கு சிரமப்படுகிறோம். அடுத்த முறை காஷ்மீரில் ஒரு இராணுவ அதிகாரியின் பாத்திரம் குறித்து உங்களிடம் கேட்கும் போது காஷ்மீர் மக்களுக்காக பேசும் உறுதியை பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
– ஜுனாத் நாசீர்.
***
அன்புள்ள மெகபூபா முப்தி,
உங்கள் வலது கண் பார்வை பறிபோனதுக்கு மிகவும் வருந்துகிறோம். மருந்துக் கடையிலிருந்து திரும்பும் போது நானும் இராணுவத்தால் வலது கண்ணில் தாக்கப்பட்டேன். எனது பார்வை பறிபோயிருப்பதால் எதையும் பார்க்க முடியாது என்று உள்ளூர் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். நிர்ப்பந்தத்தால் உங்களை பங்களாவில் எனது குடும்ப உறுப்பினர்கள் சந்தித்தார்களே அந்த படத்தை கூட நான் பார்க்க முடியாது. இந்த வயதில் அதுவும் பார்வை பறிபோய், காயமடைந்த உங்களால் எங்களது இல்லத்திற்கு வர இயலாது என்பதை புரிந்து கொள்கிறேன். இது போல இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களான எங்களுக்காக பேச யாருமில்லை. எங்களைக் கொல்லும் உங்களது நண்பர்களை நிறுத்துமாறு கோருவீர்கள் என்று நம்புகிறேன்.
– ஐசியா
***
அன்புள்ள ஹிரித்திக்,
நலமடைந்து வருவீர்கள் என நம்புகிறேன். உங்களது “மிஷன் காஷ்மீர்” படம் பார்த்திருப்பதால் நீங்களாவது காஷ்மீரில் நடக்கும் அராஜகங்களையும், எங்களது இன்னல்களையும் கொஞ்சமாவது அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். சிகிச்சைக்கு பணமில்லாமல் எங்களது தந்தை இந்த உலகை விட்டே சென்றது போன்ற நிலைமை உங்களுக்கு இல்லை. இந்த வருட மே மாதத்தில் எனது உடலில் 40 பெல்லட் குண்டு துகள்கள் சுடப்பட்டு தங்கியிருக்கின்றன. இதுதான் உயிருக்கு இழப்பு ஏற்படுத்தாத ஆயுதமாம். எனது அண்ணனுடன் வீட்டை கவனிக்க நினைக்கும் எனக்கு வயது 13. ஆனால் தற்போது அவர்கள்தான் எனது சிகிச்சைக்காக என்ன செய்வதென்று கவலைப்படுகிறார்கள்.
அமெரிக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் பாதியை குப்பையில் கொட்டுவதாக தி கார்டியன் பத்திரிக்கையின் செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணாகின்றன. உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு அதாவது 1.6 பில்லியன் டன் உணவுபொருள்கள் வீணாகின்றன.
ஃபிளோரிடா மாகாணத்தில் வீணாக்கப்படும் காய்கறிகள்
விளைநிலங்களிலும், கிடங்குகளிலும், பொட்டலமிடுவதிலும், பகிர்ந்தளிப்பதிலும், பல் பொருள் அங்காடிகளிலும், உணவு நிறுவனங்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இப்படி விவசாயிகளின் கரங்களுக்கும் நுகர்வோரின் உணவுக் கரண்டிக்கும் இடையில் உணவுப் பொருட்கள் வீணாவதை பண்ணையிலிருந்து கரண்டிக்கு(Farm-to-Fork) என்று அழைக்கின்றனர். ஆனால் இந்த இழப்பு முன்னேறிய நாடுகளில் குறைவு.
அதிநவீன இயந்திரங்கள், தொடர்ச்சியான பெரிய நிலங்கள், இலகுவான போக்குவரத்து காரணமாக உற்பத்தியின் போது பணக்கார நாடுகளில் உணவுப் பொருள்கள் குறைவாகவே வீணாகின்றன. துண்டு துண்டான நிலங்கள், நிலபிரபுத்துவ விவசாய முறை. மோசமான போக்குவரத்து என ஏழை நாடுகளில் உணவுப் பொருள்கள் கணிசமான அளவில் வீணாகின்றன. பிறகு அமெரிக்காவின் வீணாவது எப்படி?
இவர்கள் நுகர்வின் போது அதிகமாக உணவுப் பொருள்களை வீணடிக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள்கள் அவற்றின் நேர்த்தியான வடிவம், அளவு மற்றும் நிறம் ஆகியவற்றின் (cult of perfection) அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு வீணடிக்கப்படுகின்றன.
அமெரிக்க நியூயார்க் நகரத்தில் வீணடிக்கப்படும் காய்றிகள்
இங்கே சந்தைப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் இரண்டு கட்டங்களில் வீணாகின்றது. சான்றாக மெக்டனால்ட் போன்ற உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத உருளைக்கிழங்கு சிப்ஸ் குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. இரண்டாவதாக தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்ட உணவுப் பொருள்கள் நுகர்வோர்களால் குப்பையில் வீசப்படுகின்றன.
வடக்கு கரோலினா மற்றும் புளோரிடாவிலிருந்து பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்காக அனுப்புகிறார்கள். “எங்களது வியாபாரத்தில் என்ன நடக்கிறது என்றால் ஒன்று காய்கறிகள் சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட்டு விடும்” என்கிறார் ஒரு விவசாயி. அதாவது சாமுத்ரிகா இலட்சணத்தில் இல்லாத உணவுப் பொருள்கள் நுகர்வுக்கான சந்தை மதிப்பற்றவை என்கிறார்.
ஆனால் இந்த நிலைக்கு நுகர்வோர் தான் காரணம், நுகர்வோரின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் எங்களது முதன்மையான கடமை என்று உணவு நிறுவனங்கள், மக்களின் மேல் மட்டும் பழியை தள்ளிவிடுகின்றன. உணவகங்களில் மக்கள் அப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்பதை பழக்கப்படுத்தியது யார்? மேலும் பல்வேறு உணவுப் பொருட்களை அப்படி அழகுக்காக வெட்டிக் குறைத்து கழிப்பது யார்?
இந்த நிராகரிப்பு நுகர்வில் மட்டுமல்லாது அதன் உற்பத்தியிலும் இருக்கிறது. சாமுத்ரிகா இலட்சணம் இல்லாத காய்கறிகள் அறுவடை செய்யப்படாமல் விளைநிலத்திலே அழுக விடப்படுகின்றன. இந்த காய்கறிகளை அறுவடை செய்தாலும் வியாபாரிகள் வாங்குவதில்லை. அதனால் ஏற்படும் உற்பத்திச் செலவை குறைக்க இலட்சணம் குறைந்த காய்கறிகள் தியாகம் செய்யப்படுகின்றன. மனிதர்களிடம்தான் இத்தகைய அழகு குறித்த மாயையை உருவாக்கி முகப்பூச்சு-அரிதார பொருட்களை விற்கிறார்கள் என்றால் விவசாயத்திலும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் கப்பல்கள் சிறிய வகை மீன்களை பிடித்து விட்டு கொட்டுகிறார்கள். இது கிடைத்தால் பல ஏழை நாடுகளில் ஓராண்டு மீன் குழம்பை மட்டுமே தினசரி வைக்கலாம்.
கிட்டத்தட்ட 25 விழுக்காடு உணவுப் பொருள்கள் ஒன்று அறுவடை செய்யப்படுவதில்லை அல்லது கால்நடைகளுக்கு உணவாகிறது என்கிறார் வேடி கிர்ச்சென்மன். கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்டில் விவசாயத்தில் ஈடுபடும் இவரது குடும்பத்தினர், 1930-களில் இருந்து உருளைகிழங்குகளையும் இதர காய்கறிகளையும் உற்பத்தி செய்கின்றனர்.
ஏழை நாடுகளை பொருத்தமட்டில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச கலோரி அளவு உணவு கூட கிடைக்காத அவல நிலை தான் இருக்கிறது. உணவு இறுதிநிலைக் கணக்கின் (food Balance Sheet) அடிப்படையில் தனி நபர் நுகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் முன் வரிசையில் உள்ளன.
தானிய உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதை நுகர்வதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையை நோக்கி உலக மக்கள் தள்ளப்பட்டுக் வருகிறார்கள் என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவின் உணவு உற்பத்தி 263 மில்லியன் டன் என்றாலும் இந்திய மக்களுக்கு தேவைப்படும் 230 மில்லியன் டன் உணவு கூட கிடைப்பதில்லை. உலக சராசரியை விட குறைவான கலோரிகள் உணவே இந்திய மக்களுக்கு கிடைப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிலும் வர்க்க ரீதியான பிரிவினைகளைக் கணக்கில் கொண்டால் இங்கே ஏழை மக்களின் நுகர்வு அகலபாதாளத்தில் இருக்கிறது.
அழகின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு விளைந்த நிலத்திலே உரமாக மாறிய காய்கறிகள்
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 33.3% ஆண்களும் 35.8% பெண்களும் அதீத நுகர்வின் காரணமாக உடல் பருமன் பிரச்சினைக் கொண்டவர்களாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் மக்கள் குறைவான அளவிலே நுகர்வதாகவும் அந்த புள்ளி விவரம் மேலும் கூறுகிறது.
மே மாத அறுவடைக் காலத்தில் 11 டன் ஸ்குவாஷ் காய்கறிகளை உற்பத்தி செய்த ஜான்சன், சலுகை விலைக்கு விற்க முயன்றாலும் வாங்குவதற்கு யாருமில்லை. அமெரிக்காவில் வறுமைக் கோட்டிற்கு கீழே பல இலட்சம் மக்கள் இருக்கையில் என்னால் ஏன் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை? என்று கேட்கிறார் ஜான்சன்.
உணவுப் பொருட்களின் அங்கலட்சணம் மட்டுமல்ல உணவுப் பொருட்களின் தேவையையும் கூட விவசாயிகளோ நுகர்வோர்களோ தீர்மானிக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் 5 முதல் 10 சதவீத மக்கள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் என்கிறார் வாசிங்டனில் உள்ள உலகளாவிய உணவுப்பொருள் ஆராய்ச்சி கொள்கை நிறுவனத்தின்(IFPRI) நிர்வாக இயக்குனர் ஷேங்கேன் பேன். அமெரிக்க மக்களில் 11 விழுக்காட்டினரும் குழந்தைகளில் 22 விழுக்காட்டினரும் வறுமைக் கோட்டிற்கு கிழே வாழ்கின்றனர். அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலகத்தின் அமெரிக்க சமூக மதிப்பாய்வு(ACS) அறிக்கையின் படி 27 விழுக்காடு கறுப்பின மக்களும் 38 விழுக்காடு கறுப்பினக் குழந்தைகளும் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்வதாக அதே அறிக்கை கூறுகிறது. அழகு, பழக்கம் காரணமாக உணவுப் பொருட்களை வீணாக்கும் அமெரிக்க நாடு தனது சொந்த மக்களைக் கூட பசியோடவே வைத்திருக்கிறது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 33.3% ஆண்களும் 35.8% பெண்களும் அதீத நுகர்வின் காரணமாக உடல் பருமன் பிரச்சினைக் கொண்டவர்களாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது
ஒரு சிலக் கீரைப் பொதிகளை மேம்போக்காக ஆய்வு செய்து ஒரு மோசமான கீரையின் தலையை காண்பித்து 8,000 டாலர்கள் மதிப்புள்ள ஒரு வண்டிக் கீரைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதை எதிர்த்து அமெரிக்க உணவு உறபத்தியாளர்கள், அழிந்துபட கூடிய விவசாய பொருள்களின் சட்டத்தை (PACA 1930) சில்லறை வணிகத்தின் ஜாம்பவான்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆனால் அதன் பிறகு அவர்களிடம் மீண்டும் உங்களிடம் வாங்க மாட்டார்கள் என்கிறார் கிழக்கு கடற்கரையை சேர்ந்த ஒரு நடுத்தர டிரக் நிறுவன உரிமையாளர்.
ஸேப்வே(SafeWay), வால்மார்ட் மற்றும் காஸ்ட்கோ(CostCo) உள்ளிட்ட அமெரிக்க சில்லறை வர்த்தக ஜாம்பவான்களை எதிர்த்து பெரிய உணவு உற்பத்தியாளர்களே PACA சட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறுகிறார் குறையுள்ள உற்பத்தி (Imperfect Produce) என்ற குழுவின் இணை நிறுவனரான ரோன் கிளார்க். இந்நிறுவனத்தை தொடங்கும் முன் 20 ஆண்டுகள் விவசாயிகள் மற்றும் உணவு வங்கிகளிடம் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
உணவுப் பொருள் வீணாவதை குறைப்பதென்பது ஒருபுறம் மக்களை பட்டினியில் இருந்து தடுப்பதற்கான போராட்டமாக இருக்கும் அதே நேரத்தில் மறுபுறம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பருவநிலை பாதிப்புகளை தடுக்க உதவும் என்று கூறுகிறார் போட்ஸ்டாம் தட்பவெப்ப தாக்கம் ஆராய்ச்சி நிறுவனத்தின்(PIK) அறிவியல் உதவியாளராக இருக்கும் சேரன் ஹிக். விவசாய உற்பத்தி உலகில் 20 விழுக்காடு பசுமை குடில் வாயுக்களை உற்பத்தி செய்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்.
ஆயினும் விவசாயிகளைப் பற்றியோ, மக்களின் தேவைகளைப் பற்றியோ அல்லது அறிவியலார்களின் கவலைகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்பட முதலாளிகள் தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவை இலாபம் மட்டுமே.
கருப்பு அழகின்மை, வெள்ளை அழகானது என்று விளம்பரப்படுத்துவது போல நேர்த்தியான வடிவத்தில் உணவுப் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு பல பில்லியன் டாலர்களில் அறிமுகம் செய்கின்றன உணவு நிறுவனங்கள். இதற்கு பெயர் தான் Cult of Perfection என்கிறார்கள். நம் நாட்டில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு பெண்களை திருமணம் செய்யாமல் வதைக்கும் சமூகத்தைப் போல அமெரிக்காவில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு உணவுப் பொருட்களை விரயமாக்கி ஏழைகளை பட்டினி கிடக்க வைக்கிறார்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!
ஒருபுறம் தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி மறுபுறம் உணவில்லாமல் தவிக்கும் மக்கள், ஒருபுறம் உணவுப் பொருள்கள் வடிவங்கள் காரணமாக குப்பைக்கு போகிறது மறுபுறம் குப்பையில் உணவைத் தேடும் மக்கள் என இந்த சமூக பொருளாதார உற்பத்தியின் முதலாளித்துவ சுழற்சி முறை ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதமாகி விட்டதைத்தான் இது காட்டுகிறது.
1950 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராட்டம் நடத்தி அடிமைத் தளையறுத்து, இந்தியக் குடிமக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் நினைவு கூறப்படும் ஆண்டு. இதே ஆண்டில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தின் திரவ வடிவமான கோகோ கோலாவும் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோகோ கோலா என்ற குளிர்பானத்தின் முழுப்பக்க விளம்பரத்தை சமீபத்தில் பார்த்தேன். இதனைப் பயன்படுத்த வேண்டாமென மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்
1977இல் வெளியேற்றப்பட்டு 1993இல் நரசிம்மராவ் அரசியல் புத்தம்புது காப்பியாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கோக், பெப்சி பானங்கள் இன்று இந்தியச் சந்தை முழுவதையும் அநேகமாகக் கைப்பற்றி விட்டன.
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்குளிர்பானங்களின் ஆண்டு விற்பனை 400 கோடி லிட்டர்கள். அதாவது, 2000 கோடி பாட்டில்கள்.
எனினும் உலகத்தரத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாம். ஆண்டொன்றுக்கு ஒரு அமெரிக்க குடிமகன் சராசரியாக 800 கோலா பாட்டில்களைக் காலி செய்வதாகவும் இந்தியர்கள் இவ்விசயத்தில் மிகவும் தங்கியிருப்பதாகவும் வருந்துகிறார்கள் கோக் அதிகாரிகள்.
இந்த இலட்சியத்தை எட்டும் பொருட்டுத்தான் தாமிரவருணியை கோக்கிற்கு தாரை வார்த்திருப்பதுடன், நெல்லை மாவட்டம் முழுவதிலும் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடையும் விதித்திருக்கிறது போலீசு. இந்தியாவைக் கோலா குடியரசாக்கும் இந்த இலட்சியத்தில் அதிமுக., காங். உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இந்நிலை திடீரெனத் தோன்றவில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தைக் கீழே தருகிறோம்.
அரிஜன் நவம்பர் 4, 1950 இதழில் கே.ஜி. மஷ்ருவாலா என்பவர் “கோகோ கோலா எச்சரிக்கை” என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
“அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோகோ கோலா என்ற குளிர்பானத்தின் முழுப்பக்க விளம்பரத்தை சமீபத்தில் பார்த்தேன். இதனைப் பயன்படுத்த வேண்டாமென மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்” என்ற முன்னுரையுடன் தொடங்கி கோக்கில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை அவர் பட்டியலிடுகிறார்.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
“வீட்டு உபயோகத்திற்கு சர்க்கரை கிடைப்பதில்லை; கேட்டால் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் அதே சர்க்கரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, மக்களின் சுவையுணர்வையும் சீரண உறுப்புகளையும் நாசமாக்கும் பானமாக அதை மாற்றி அதற்கு மக்களிடமிருந்து கூடுதல் காசையும் பிடுங்குகிறது கோகோ கோலா. அவர்களுக்கு மட்டும் வேண்டிய அளவுக்கு சர்க்கரை கிடைப்பது எப்படி?” என்று அரசுக்குக் கேள்வியும் எழுப்புகிறார்.
டிசம்பர் 9ஆம் தேதியிட்ட இதழில் ரூப்நாராயண் என்பவர் கோகோ கோலாவைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகிறார்.
1951 மார்ச் 17 மற்றும் 24 தேதியிட்ட இதழ்களில் ஆக்டோபஸ் என்ற புனைபெயரில் ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ள தொடர்கட்டுரை கோகோ கோலாவை உடனே வெளியேற்ற வேண்டுமென்பதைத் தீவிரமாக வலியுறுத்துகிறது. அதன் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:
“இந்தியாவை ஆக்கிரமிக்கிறது கோகோ கோலா!”
கோகோ கோலா என்ற அமெரிக்க பானம் இந்தியாவில் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு ஆலை துவங்கப்பட்டது. அடுத்து பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் போன்ற நகரங்களிலும் ஆலை தொடங்கப் போகிறார்களாம். பெரு நகரங்களிலிருந்து அதன் அருகாமைப் பகுதிகளுக்கு இவர்கள் ஊடுருவ முயற்சிப்பார்கள்.
கனடா, இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடுகளின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
அந்தப் பானத்தில் இருப்பது என்ன? தண்ணீர், சர்க்கரை, காரமல், பாஸ்பாரிக் அமிலம், வனிலா, காஃபின், கோகோ இலை மற்றும் கொட்டையின் சாறு.
பிரான்சில் பொது சுகாதாரத்திற்கான உயர்மட்டக் குழு மற்றும் தேசிய மருத்துவ அகாதமி ஆகிய நிறுவனங்கள் தெரிவித்த கருத்தின் பேரிலும் பிற ஆதாரங்களின் அடிப்படையிலும் கோகோ கோலாவைத் தடை செய்வதற்கான மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஜூலை 22, 1950 அன்று விசாரணைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது. அக்குழுவின்ஒருமனதான பேரில் இந்தப் பானம் பிரான்சில் தடை செய்யப்பட்டு விட்டது.
நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு கோகோ கோலா விளைவிக்கும் கேடு பற்றி (அரசு) சிறிதும் கவலைப்படாமலிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்தப் பானத்தில் இருப்பது என்ன? தண்ணீர், சர்க்கரை, காரமல், பாஸ்பாரிக் அமிலம், வனிலா, காஃபின், கோகோ இலை மற்றும் கொட்டையின் சாறு. 6 அவுன்சுகள் கொண்ட ஒரு பாட்டிலில் 54 மில்லி கிராம் காஃபின் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காஃபின் கலக்கப்பட்ட பானங்கள் இதய அழுத்தத்தையும் நரம்பு மண்டலப் பாதிப்பையும் ஏற்படுத்துவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் கல்லூரியின் டீன் டாக்டர் ரஸ்பி கூறுவதாவது “”காஃபின் ஒரு நஞ்சு என்பதில் ஐயமேயில்லை. இதனைப் பானமாக அருந்துபவர்கள் போதைப் பழக்கம் போல இதற்கு அடிமையாகிறார்கள். இதயத்தின் இயக்கம் மற்றும் மூளைக்கான ரத்த ஒட்டம் ஆகியவற்றில் இது நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.” மேலும், “”குழந்தைகளுக்கு இது நஞ்சு என்றும் மூளையில் பதட்டத்தை அதிகரிப்பதன் மூலம் அதன் இயல்பான இயக்கத்தையே பாதித்து விடுகிறது” என்றும் கூறுகிறார் டாக்டர் லெசின்ஸ்கி.
கோகோ கோலாவைத் தடை செய்வது தொடர்பாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் சில பகுதிகளையும் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “உலகில் பல இலட்சம் மக்கள் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு பானத்தை எப்படித் தடை செய்ய முடியுமென்று கேட்கிறீர்கள். இதுவெல்லாம் ஒரு வாதமா? கோடிக்கணக்கான சீன மக்கள் பல நூற்றாண்டுகளாக கஞ்சா அடிக்கும் பழக்கத்திலிருந்திருக்கிறார்கள். அதன் காரணமாக நம் நாட்டிலும் இதனைக் கட்டுப்பாடின்றி அனுமதித்து விட்டீர்களா என்ன?”
நாடெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் போதும் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கோக்கிற்கு வாரிக் கொடுக்கிறது அரசு
உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைப் போலவே கோகோ கோலா இந்தியப் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. பம்பாயில் உள்நாட்டு சோடா கலர் தொழிற்சாலைகளில் சுமார் 2000 பேர் வேலை செய்கிறார்கள். டெல்லியிலோ முறையாக லைசன்ஸ் பெற்ற 150 சோடா கம்பெனிகள் உள்ளன. அவை நாளொன்றுக்கு 2000 டஜன் பாட்டில்களை உற்பத்தி செய்கின்றன.
டெல்லியிலுள்ள கோகோ கோலா கம்பெனியின் உற்பத்தித் திறனோ 8 மணி நேரத்திற்கு 6000 டஜன் பாட்டில்கள். துவக்கத்தில் இதன் விற்பனை மந்தமாக இருந்தபோதிலும் இப்போது நாளொன்றுக்கு 500 டஜன் பாட்டில்கள் விற்பனையாகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு பஞ்சாபில் புதிய ஆலை தொடங்கப்படவிருக்கிறது. பம்பாயிலோ கட்டுமானப் பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கவிருக்கிறது. டெல்லியில் உள்நாட்டு பானங்களின் விற்பனை ஏற்கெனவே 50% வீழ்ச்சியடைந்து விட்டது. அவை முற்றிலுமாக அழியும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உலகப் போரைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோகோ கோலா கம்பெனியோ 45 எந்திரங்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. உள்நாட்டுக் கம்பெனிகள் பாட்டில்களை இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் கோகோ கோலா பாட்டில் இறக்குமதி செய்கிறது. அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கே அந்நியச் செலாவணி இல்லை. ஆனால் அத்தியாவசியத் தேவை என்று எந்த வகையிலும் கருத முடியாத ஒரு பொருளுக்கு அந்நியச் செலாவணி தாராளமாக அனுமதிக்கப்படுகிறதே, இது எந்த அடிப்படையில் என்பதுதான் புரியவில்லை.
டெல்லியிலுள்ள 150 உள்நாட்டுக் கம்பெனிகளுக்கும் சேர்த்து மாதமொன்றுக்கு மொத்தம் 160 மூட்டை சர்க்கரையைத்தான் அரசு வழங்குகிறது. ஆனால் கோகோ கோலாவுக்கு மட்டும் மாதம் 170 மூட்டை சர்க்கரை வழங்கப்படுகிறது. எந்திரம், பாட்டில், சர்க்கரை என ஒவ்வொன்றுக்கும் லைசென்ஸ் வாங்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அரசிடம் படாத பாடு படுகிறார்கள். கோகோ கோலாவுக்கோ எல்லாம் கேட்ட மறுகணமே கையில் வந்து விழுகிறது. உள்நாட்டுத் தொழில்களுக்கு எதிராகவும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கம் காட்டி வரும் இந்தப் பாரபட்சம்தான் சகிக்கவொண்ணாத அநீதியாகத் தெரிகிறது.”
****
இந்தியாவில் கோக் ஆலைகளின் எண்ணிக்கை 58. பெப்சி ஆலைகளின் எண்ணிக்கை 39. இந்நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.
காந்தி செத்த ஒரே வருடத்தில், இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட அதே வருடத்தில், காந்தியால் துவங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை காங்கிரசு அரசு கண்டுகொள்ளவேயில்லை. கதர், சுதேசி, சுயசார்பு போன்ற சவடால்களெல்லாம் உச்சத்தில் இருந்த பண்டித நேருவின் காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால், ப.சிதம்பரத்தின் காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கோக்கிற்கு எதிராக அரிஜன் பத்திரிகை எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் இன்று பூதாகாரமாக வடிவெடுத்து விட்டன. கோகோ கோலா டெல்லியில் மட்டும் 150 உள்நாட்டுக் கம்பெனிகளை அழித்து விடுமென்றும், சுமார் 2000 தொழிலாளர்களின் வேலையைப் பறித்து விடுமென்றும் அன்று எச்சரிக்கை செய்திருக்கிறது அரிஜன். இன்றோ, பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள். இதனால் வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனை இலட்சம் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை.
பணபலம், விளம்பர பலத்தினால் மட்டுமல்ல; சிறு கம்பெனிகளின் பாட்டில்களை வாங்கி உடைப்பது, தங்களது பானத்தைத் தவிர வேறெதையும் விற்கக் கூடாதென சிறு வணிகர்களை நிர்ப்பந்திப்பது போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும்தான் இந்தியச் சந்தையைக் கைப்பற்றியிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.
கோகோ கோலாவில் கலந்திருகும் நச்சுப் பொருட்கள் பற்றி 1950இல் அரிஜன் இதழ் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை அரசிடமிருந்து பதில் இல்லை. 2003இல் கோக் பெப்சியில் கலந்துள்ள நஞ்சுகள் மற்றும் வேதிப் பொருட்களை சோதனைச் சாலையில் ஆராய்ந்து ஆதாரபூர்வமாக வெளியிட்டது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஆய்வு மையம். கோக் ஆலையின் கழிவுகளில் காட்மியம் எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பதையறிந்து, “”குளிர்பான உற்பத்தியில் இந்த நச்சுப் பொருளுக்கு என்ன வேலை?” என்று 2004இல் கேள்வி எழுப்பியது கேரள அரசின் மாசு கட்டுப்பாட்டுத் துறை. “”கோக்கில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பற்றிய விவரங்களை பாட்டிலின் மீது அச்சிடவேண்டும்” என்று 2005இல் உத்தரவிட்டது ராஜஸ்தான் உயர்நீதி மன்றம். இவைஎதையும் கோக் மதிக்கவில்லை.
ராஜஸ்தான் உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தவில்லையென கோக்கின் மீது உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கோக்கின் சார்பில் ஆஜரான பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லி “”இப்பிரச்சினை தொடர்பாக அரசு சட்டமியற்றவுள்ளதால் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கோரினார். காங்கிரசு அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரும் இதனை வழிமொழிந்தார். கோக்கிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோக்கில் பாஸ்பாரிக் அமிலம் போன்ற மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அதனைத் தடை செய்ய வேண்டுமென சமீபத்தில் “பொதுநல வழக்குகளுக்கான மையம்’ என்ற அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்குமாறு பிப்.28, 2006 அன்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம். கோக்கில் பாஸ்பாரிக் அமிலம் இருக்கிறதென்று 1951இல் அரிஜன் பத்திரிகை எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க 2006இல் விசாரணைக் குழுவாம்!
பணபலம், விளம்பர பலத்தினால் மட்டுமல்ல; சிறு கம்பெனிகளின் பாட்டில்களை வாங்கி உடைப்பது, தங்களது பானத்தைத் தவிர வேறெதையும் விற்கக் கூடாதென சிறு வணிகர்களை நிர்ப்பந்திப்பது போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும்தான் இந்தியச் சந்தையைக் கைப்பற்றியிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.
“நாட்டில் கடுமையான சர்க்கரைப் பஞ்சம் நிலவும்போது, கோக்கிற்கு மட்டும் வேண்டிய அளவுக்கு சர்க்கரையை வாரிக் கொடுக்கிறதே அரசு, இது என்ன நீதி?” என்று 1951இல் கேள்வி எழுப்பியிருக்கிறது அரிஜன் இதழ். இன்றோ, நாடெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் போதும் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கோக்கிற்கு வாரிக் கொடுக்கிறது அரசு.
கோக் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகபட்சமாக முதலீடு செய்திருக்கிறது. இன்று இந்தியாவில் கோக் ஆலைகளின் எண்ணிக்கை 58. பெப்சி ஆலைகளின் எண்ணிக்கை 39. இந்நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.
குடிநீரையும் விவசாயத்தையும் இழந்த மக்கள் அதனை எதிர்த்துக் குரலெழுப்பவும் கூடாதென மென்னியைப் பிடிக்கிறது அரசு. “”அந்நியக் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் காட்டி வரும் பாரபட்சம் சகிக்கவொண்ணாத அநீதியாக இருக்கிறது” என்று தனது கட்டுரையை முடித்திருக்கிறார் அரிஜன் கட்டுரையாளர். அந்த அநீதிதான் இனி இந்த நாட்டின் நீதி என்று அறிவித்திருக்கிறது அரசாங்கம்.
அரிஜன் கட்டுரை எழுப்பும் கேள்விகளையும் அதற்கு இன்றைய காங்கிரசு அரசும் பிற ஓட்டுக் கட்சிகளும் அளித்து வரும் பதிலையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள், இந்த நாடே ஒரு கோலா குடியரசாகிவிட்ட உண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ?முதல் பாகம்
1991 இல் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்ளைகள் இந்தியாவில் சீர்திருத்தம் எனும் பெயரில் திறந்து விடப்பட்டன. இந்த ஜூலை மாதத்தோடு 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த 25 வருடங்களில் இக்கொள்கைளால் இந்தியா ‘வளர்ச்சி’ பெற்றுவிட்டதாக பத்திரிக்கைகள் லேகியக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதில் முன்னணியில் இருக்கும் தி இந்து ஆங்கில நாளேடு, 25வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பதற்கு ஒன்பது அம்சங்களை ஒப்பிட்டு வரைபடங்களை வெளியிட்டிருக்கின்றது.
1) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 2) விவசாயம்-தொழிற்துறை-சேவைத்துறைகளின் வளர்ச்சி, 3) போக்குவரத்து சாலைகளின் நீளம், 4) கம்பெனிகளின் எண்ணிக்கை, 5) அன்னிய நேரடி முதலீடு வரத்து, 6) அன்னிய செலவாணி கையிருப்பு, 7) தொலைபேசி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 8) கல்லூரிகளின் எண்ணிக்கை, 9) வறுமை ஒழிப்பு ஆகிய ஒன்பது அம்சங்களோடு 1991க்கு முந்தைய நிலையும் தற்போதைய நிலையும் ஒப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் தனியார்மய கொள்கைகள் வறுமையை அதிகரித்திருக்கிறதா? குறைத்திருக்கிறதா? எனும் கேள்வி முதன்மையாக வந்து நிற்கிறது. இதற்கு தி இந்து நாளேடு, 1993இல் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்கள் 45.3% பேர் என்றும் இச்சதவீதம் 2011-2012இல் 21.9% ஆக குறைந்திருக்கிறது என்றும் தனியார்மய சீர்திருத்தத்தைப் பெருமிதத்தோடு பாராட்டியிருக்கிறது.
இந்நிலையில் வினவின் வாசகர் ஒருவர் 1991இல் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகள் இந்தியாவில் என்ன நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளக்குமாறு கேட்டிருந்தார். கூடவே இப்படியொரு நிபந்தனையும் வைத்திருந்தார். “நீர்யானைகளை ஆய்வு செய்பவன் எவ்வாறு சமன மனநிலையில் இருப்பானோ அவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட கோஷங்கள் இன்றி இது இப்படி என்ற அறிவியல் ரீதியில் அமைந்தால் கூடுதல் போனஸாக இருக்கும்.” என்றார்.
சபாஷ்! சரியான போட்டி! என்ற கதையாக வாசகர் முன்வைக்கும் நீர்யானை ஆய்வுமுறையை அதாவது விருப்பு வெறுப்பற்ற சமன மனநிலை, உணர்ச்சிவசப்பட்ட கோசங்கள் இல்லாது இருப்பது, அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றை முதலில் தி இந்து ஆங்கில நாளேட்டின் வறுமை ஒழிப்புப் பிரச்சாரத்தோடு சற்று பொருத்திப் பார்த்தோம்.
இதற்காக தி இந்து ஆங்கில நாளேடு வறுமை ஒழிப்பிற்கு முன்வைக்கும் தரவுகளை வாசகர்களின் வசதிக்காக தமிழ்படுத்தி மீண்டும் வரைந்தோம்.
இந்து ஆங்கில நாளேட்டில் (24-07-2016) வெளிவந்த வரைப்படம்
தி இந்துவில் வெளிவந்த இவ்வரைபடம் டெண்டுல்கர் குழுவின் ஆய்வு முடிவை பயன்படுத்தியதாகச் சொல்கிறது. திட்டக் குழு, உலகவங்கி மற்றும் பல்வேறு பொருளாதாரக் குழுக்கள் வெவ்வேறு வறுமைக்கோடு ஆய்வை நிகழ்த்தியிருக்கின்றன. இதில் டெண்டுல்கர் குழுவின் ஆய்வு முடிவை மட்டும் ஏன் இந்து நாளேடு தனிச்சிறப்பாக பயன்படுத்தியது என்பதற்கு எந்தவிதமான தர்க்கப்பூர்வமான விளக்கமும் இல்லை.
சான்றாக வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட வறுமைக்கோடு குறித்த ஆய்வு முடிவுகளை வாசகர்கள் பார்வைக்கு வரைபடமாக வைக்கிறோம். இந்த வரைபடம் RUPEINDIA அரசியல் பொருளாதார ஆய்விதழில் வெளிவந்ததாகும்.
இந்தியா – வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் சதவீதம்
இவ்வரைபடத்தின் படி மிக அதிகபட்சமாக 2007ல் நிகழ்த்திய அர்ஜூன்-சென் குப்தா ஆய்வு, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை 78% பேர் என்றும் குறைந்தபட்ச சதவீதமாக NCAER-2008 ஆய்வறிக்கை 15.6% பேர் என்றும் கணக்கிடுகிறது.
2009 சக்சேனா அறிக்கை மற்றும் 2011இல் நிகழ்த்தப்பட்ட ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் UNDPயின் அறிக்கை, இரண்டில் ஓர் இந்தியர் வறியவர் என்கிறது. 2014இல் வெளிவந்த ரங்கராஜன் குழு அறிக்கை, மூன்றில் ஓர் இந்தியர் வறியவர் என்கிறது. இதில் எது உண்மை?
தி இந்து நாளேடு வாசகர்கள் பார்வையிலிருந்து வறுமைக்கோடு குறித்த பிற ஆய்வு முடிகளை திட்டமிட்டு மறைக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் பொழுது, தான் காட்ட வேண்டிய முடிவிற்காக பிற ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டாமல் விடுகிற இச்செயலை அறிவுத் திருட்டு (Plagiarism) என்பார்கள். இதே செயலை பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் செய்தால் அதை கருத்து விபச்சாரம் (Prestitution) என்பார்கள்.
மும்பையின் குடியிருப்பு பகுதிகள்
தி இந்து ஆங்கில நாளேடு, இத்தகைய அறிவு நாணயமற்ற செயலை செய்யும் பொழுது சமனமான மனநிலை குறித்து நம் நாட்டு அறிவுஜீவிகள் நம் வாசகர் போன்று கேள்வி எழுப்புவதில்லை! மேலும் தரவுகளைத் திரிக்கும் தி இந்துவின் தனியார்மய பிரச்சாரக் கட்டுரைகள் Tracking Progress in numbers, How economy found its root என்று ஆங்கிலத்தில் உணர்ச்சிப்பூர்வமாக கோசமிடுவதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்!
ஏரியல் பவுடருக்கு வரும் விளம்பரம் போல ஆளும் வர்க்க ஊடக செய்திகள் வெண்மையாகவும் உழைக்கும்வர்க்க ஊடக செய்திகள் அழுக்காகவும் அலர்ஜியாகவும் அறிவு ஜீவிகளுக்கு தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை பிறிதொரு பதிவில் விளக்குவோம். இப்பொழுது வறுமைக்கோடு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.
மே 30, 2016 அன்று RUPEINDIA அரசியல் பொருளாதார ஆய்விதழில் மனாலி சக்ரபர்த்தி எழுதிய கட்டுரை வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதில் உள்ள அரசியலை நயம்பட தோலுரித்து. மனாலியின் ஆய்வுக்கட்டுரை அம்சங்களை இக்கட்டுரைக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.
வறுமைக்கோடு வரையறை
1960களில் திட்டக் குழு, இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களைக் கணக்கிட ஆரம்பித்தது. 1970களின் ஆரம்பத்தில் வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதற்கான அடிப்படை முன்வைக்கப்பட்டது. இதன்படி ஊரகப் பகுதியில் தனிநபர், நாள் ஒன்றுக்கு உட்கொள்ளும் உணவு 2400 கலோரியாக இருந்தால் ஒரு மாதத்திற்கு ஆகும் செலவு வறுமையை அளவிட பயன்படுத்தப்பட்டது. இதுவே நகர்புறமாக இருந்தால் தனிநபர் நாள் ஒன்றுக்கு 2100 கலோரி உணவைப் பெறுவதற்கான ஒரு மாதச் செலவு அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. இம்முறைக்கு MPCE-Monthly Per Capita Consumer Expense என்று பெயர். இதன்படி கிராமப்புறங்களில் 49.09 ரூபாயும் நகர்புறங்களில் 56.64 ரூபாயும் வறுமைக்கோடு நிர்ணயமாக 1973-74இல் பயன்படுத்தப்பட்டது.
2014இல் வெளிவந்த ரங்கராஜன் குழு அறிக்கை, மூன்றில் ஓர் இந்தியர் வறியவர் என்கிறது. இதில் எது உண்மை?
எம்.பி.சி.இ முறையில் உள்ள குறைகள்
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது, நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் (Consumer Price Index) மாறுகிறது. மக்கள் வாங்கும் சக்தியற்றவர்களாக மாற்றப்படுகின்றனர். 73இல் வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதற்கு மக்களால் வாங்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலை அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்படியே இருப்பதில்லை. விலை மட்டுமல்ல; மக்கள் வழக்கமாக உண்ட உணவுப்பொருளும் விலைவாசி காரணமாக உணவுப் பட்டியலில் (Basket of Commodities) இருந்து விடுபடுகிறது. எலும்பிச்ச சாதம் என்ன விலை இருக்கும்? என்று சென்னையில் வசிக்கும் துப்புரவுத்தொழிலாளி வினவு கட்டுரையாளர் சரசம்மாவிடம் கேட்ட கேள்வி இங்கு நினைவிற்கு வருகிறது.
தாறுமாறான விலை உயர்வின் காரணமாக 2400 கலோரி உணவைப் பெறுவதற்கான விலையை எம்.பி.சி.இ வறுமைக்கோடு சுட்டிக்காட்டுவதில்லை. மேலும் எம்.பி.சி.இ முறை, கலோரிகளை மட்டுமே வைத்து வறுமையை அளக்க முயல்கிறது. கல்வி, பொதுசுகாதாரம், உடை, இருப்பிடம் போன்றவை ஏழ்மையை அளவிட பயன்படுத்தப்படவில்லை.
டெண்டுல்கர் குழு அறிக்கை-2009
எம்.பி.சி.இ வறுமைக்கோட்டின் மாறும் தன்மை மற்றும் தனியார்மயத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் காரணமாக பேராசிரியர் டெண்டுகல்கர் தலைமையில் வறுமைக்கோட்டைக் கணக்கிடுவதற்கு 2005 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரைகளை 2009 ஆம் ஆண்டு சமர்பித்தது. டெண்டுல்கர் குழு வறுமையைக் கணக்கிடுவதற்கு உணவு கலோரிகள் மட்டுமல்லாது மருத்துவம், கல்வி, நீண்டநாள் பயன்படுத்தும் பொருட்கள் (Durable goods) மற்றும் கேளிக்கை ஆகிய அம்சங்களைச் சேர்த்தது. இதன் நோக்கம் ஏழை ஒருவர் கல்வி கற்கச் சென்றால் அவரை ஏழையாக கருதவேண்டியதில்லை! கட்டில், பீரோ இருந்தால் அவர் ஏழையல்ல! என்பதாகும்.
இந்தியாவில் தனியார்மயம் தொழிலாளிகளை சிதறடித்து நகர்புறத்திற்கு வீசி எறிந்திருக்கிறது.
மேலும் டெண்டுல்கர் குழு நகர்ப் பகுதியில் தனிநபர் ஒரு நாளைக்கு பெற வேண்டிய 2100 கலோரி அளவுள்ள உணவை 1700 கலோரியாக குறைத்தது. ஊரகப்பகுதியில் தனிநபர் ஒரு நாளைக்கு பெற வேண்டிய 2400 கலோரி அளவை 1999 கலோரிகளாக குறைத்தது. இப்படிக் குறைப்பதற்கு இக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகத்தின் (FAO-Food and Agricultural Organization) பரிந்துரையான 1700 கலோரியை மேற்கோள் காட்டியது. ஆனால் FAOவின் 1700 கலோரி மதிப்பானது, நகர்புறத்தில் தனிநபர் ஒருவர் எளிய உடல் உழைப்பில் ஈடுபடுவதற்குத் தேவையான குறைந்தபட்ச உணவுத் தேவையாகும்.
இந்தியாவில் தனியார்மயம் தொழிலாளிகளை சிதறடித்து நகர்புறத்திற்கு வீசி எறிந்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பணியாளர்கள் கடும் வேலை உழைப்பில் உழல்பவர்கள். இவர்களுக்கு 1700 கலோரி அளவை பணக்காரன் ஆக்குவதற்கான அளவாக நிர்ணயிப்பது வக்கிரமான செயலாகும்.
மேலும் டெண்டுல்கர் குழு, முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், புராதன பழங்குடிகள், விதவைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோரை வறுமைப் பிரிவில் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை இவர்கள் ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் இருந்தால் ஏழையாக கருதவேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தை இங்கு ஊகிப்பது மிகவும் எளிது.
இப்படித்தான் டெண்டுல்கர் குழு 2005இல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 37.2% என்று பரிந்துரைத்தது. 2010இல் இந்து ஆங்கில நாளேடு இதே டெண்டுல்கர் குழு அறிக்கையை கடும் பிழையாகிப்போன ஓர் ஆய்வுமுறை (A methodology deeply flawed-The hindu, 05-02- 2010) என்று விமர்சித்தது. இன்றைக்கு இதே நாளிதழ் இந்த ஆய்வுமுறையை வைத்துக்கொண்டு தனியார்மயத்தின் சாதனைகள் என்று பிரச்சாரம் செய்கிறது என்றால் மக்களை எத்துணை பெரிய மாங்கா மடையர்களாக கருதியிருக்க வேண்டும்?
டெண்டுல்கர் குழு, பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் வறுமைக்கோட்டை 37.2%க்கு தள்ளினாலும் திறமை பத்தாது என்று ரங்கராஜன் தலைமையில் மத்திய அரசு 2012இல் அடுத்த குழுவை அமைத்தது.
டெண்டுல்கர் குழு, முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், புராதன பழங்குடிகள், விதவைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோரை வறுமைப் பிரிவில் கண்டுகொள்ளவில்லை.
ரங்கராஜன் குழு அறிக்கை-2014
ரங்கராஜன் மன்மோகன் சிங்கின் தலைமைப் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர். ரங்கராஜன் குழு தனது பரிந்துரைகளை 2014இல் சமர்பித்தது. இவர் நாளொன்றுக்கு தனிநபர் பெற வேண்டிய உணவு கலோரி அளவை நகர்புறத்திற்கு 2155 என்றும் ஊரகப் பகுதிக்கு 2090 என்றும் நிர்ணயித்தார். இது டெண்டுல்கர் குழு நிர்ணயித்த அளவை விட சற்று அதிகம் என்றாலும் ரங்கராஜன் குழு வறுமைக்கோடு எல்லையை நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் 32 ரூபாய் எனவும் நகரப்புறங்களில் 47 ரூபாய் எனவும் தீர்மானித்தது.
ரங்கராஜனின் சமார்த்தியம் எதில் இருக்கிறது என்றால் வறுமையைக் கணக்கிடுவதற்கு தனிநபர் என்பதற்குப் பதிலாக 32 ரூபாய் சம்பாதிக்கக் கூடிய நான்குபேர் ஒரு வீட்டில் இருந்தால் அவர்கள் ஏழையல்ல என்று முடிவு செய்ததாகும். ரங்கராஜனின் வறுமைக்கோடு அளவு 30% ஆக நின்றது.
இதுதவிர மாண்டேக்-சிங் அலுவாலியாவின் 28 ரூபாய் பணக்காரன் ஆன கதை மற்றும் ஏழை பத்ரி-சேசாத்ரியின் வாக்குமூலம் நம் அனைவருக்கும் ஓரளவு தெரியும் என்பதால் இதை இங்கே தவிர்த்துவிடுவோம்.
சக்சேனா குழு அறிக்கை-2009
2008இல் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மாற்று வழிகளில் வறுமைக் கோட்டை ஆராய்வதற்கு N.C. சக்சேனா தலைமையில் குழு ஒன்று அமைத்தது. சக்சேனா குழு 2009இல் தனது அறிக்கையை சமர்பித்தது. திட்டக் குழு நிர்ணயித்த குறைந்தபட்ச உணவிற்கான தொகை மிகவும் குறைவு என்று சக்சேனா குழு கருதியது. எனவே ஊரகப்பகுதியில் மாதம் ஒன்று 356 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச எல்லையை ரூ. 700 ஆக உயர்த்தியது. நகர்புறத்திற்கு குறைந்தபட்ச உணவுத் தேவைக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1000 என்று நிர்ணயித்தது. இப்படிச் செய்தால் சக்சேனா குழு ஆய்வின்படி இரண்டில் ஓர் இந்தியர் (50%) ஏழையாவார். இத்துணைக்கும் சக்சேனா குழு, உணவுக்கான கலோரி அளவை 2400 என்று வைப்பதற்குப் பதிலாக 2100 கலோரிகள் என்றே கணக்கிட்டது. குறைந்தபட்ச உணவுத் தேவை நாளொன்றுக்கு 2400 கலோரிகள் என்று வைத்தால் இந்தியாவின் 80% மக்களை ஏழைகளாக கணக்கிட வேண்டும்!
அர்ஜூன்-சென்குப்தா குழு அறிக்கை-2007
நாட்டில் 90% தொழிலாளிகள் எந்த அமைப்பையும் சாராதவர்கள். அதாவது அமைப்பு சாரா தொழிலாளிகள் (Unorganized workers). விவசாயக் கூலிகள், பாலம் கட்டுபவர்கள், தெரு வியாபாரிகள், சாலைப் பணியாளர்கள், தள்ளுவண்டிக் கடைகள் என்று இவர்களின் பட்டியல் நீள்கிறது. மொத்த தேசிய உற்பத்தியில் 50% அமைப்பு சாரா துறையில் இருந்து வருகிறது.
மொத்த தேசிய உற்பத்தியில் 50% அமைப்பு சாரா துறையில் இருந்து வருகிறது.
அமைப்புசார தொழிலாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைப்புசார நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (NCEUS-National Commission for Enterprises in Unorganized Sector), பேராசிரியர் அர்ஜூன் சென்குப்தா தலைமையில் 2004இல் வறுமையை கணக்கிட குழு ஒன்றை அமைத்தது. சென்குப்தா குழு அமைப்புசாரா தொழிலாளி ஒருவர் வறுமையில் இருப்பதை கண்டறிவதற்கு நாளொன்றுக்கு ரூ.20 ரூபாய் எனும் குறைந்தபட்ச குறீயிட்டை நிர்ணயித்தது. இந்த நிர்ணயித்தின்படி நாட்டின் 78% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்.
உலகவங்கி அறிக்கை 2011
மக்களின் வாங்கும் சக்தி வேறுபாட்டை (PPP- Power Purchase Parity) அடிப்படையாகக் கொண்டு உலகவங்கி இந்தியாவில் 2011இல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 26% பேர் என்றது. PPP யை துல்லியமாகக் கணக்கிட்டால் 2011-2012இல் வறுமைக்கோட்டின் சதவீதம் 12.4% ஆக இருக்கும் என்றும் உலக வங்கி சொல்கிறது. உலகவங்கியின் ஆய்வுமுறை இன்னதென்று தெரியாவிட்டாலும் இந்த உலகவங்கியின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் 1973 லிருந்து திட்டக் குழு எனும் பெயரில் உலகவங்கியின் சேவகர்கள் நரசிம்மராவ், அலுவாலியா, டெண்டுல்கர், ரங்கராஜன், மன்மோகன் சிங், வாஜ்பேய் என்று பலரும் பல்வேறு வறுமைக்கோடு ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
திட்டக் குழு வறுமைக்கோட்டை ஏன் கணக்கிடுகிறது?
தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்துகிற பொழுது மக்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படைக் கடமைகளான அரசின் பொதுத்திட்டங்கள் இடைஞ்சலாக இருக்கின்றன. சுதந்திர சந்தைக்கு பொது வினியோகம் காவு கொடுக்கப்படவேண்டும். பொதுசுகாதாரம் திறந்துவிடப்பட வேண்டும். சான்றாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மருத்துவமனைகள் என்பது அனைத்து தரப்பு மக்களின் சேவைக்காக இருந்தது. தனியார்மயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, இல்லாதவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி, ரேசன் கடை என்று மாற்றப்பட்டிருக்கிறது.
குடிமகன்கள் என்ற நிலையிலிருந்து மக்களை நுகர்வோர்களாக மாற்றுவது தான் திட்டக் குழுவின் வேலை! இதைச் செய்வதற்கும் அரசின் கடமைகளை கைகழுவுவதற்கும்தான் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டதேயன்றி வறுமையை ஒழிப்பதற்காக அல்ல!
ஐ.எம்.எஃப் – வாஷிங்டன்
அப்படியானால் வறுமை ஒழிப்பின் சதவீதம் என்ன?
2011-2012 உலகவங்கி அறிக்கையின் படி இந்தியாவின் வறுமைக்கோடு வெறும் 12.4% மட்டுமே. இப்பொழுது மோடியின் ஆட்சியில் திட்டக் குழுவே கிடையாது. எனில் உலகவங்கியின் டார்கெட்டை மோடி கும்பல் நிறைவேற்றிவிட்டது என்றாகிறது. இதன் அர்த்தம் அரசின் அதிகாரப்பூர்வ ஏடுகளின் படி நாட்டில் வறுமையில் வாடுபவர்கள் யாரும் இல்லை! 1991 தனியார்மய சீர்திருத்தத்தின் சாதனை இது! அப்படியானால் நாட்டின் 80% மக்கள் ஏழைகள் என்ற ஆய்வு முடிவின் கதி! நீங்கள் இதை உண்மையென்று ஏற்கலாம். அல்லது பொய்யென்று மறுக்கலாம். ஆனால் 80% மக்கள் நுகர்வோர்கள். எலுமிச்சை சாதத்தின் விலை அறியாத நுகர்வோர்கள் அவர்கள்!
– இளங்கோ
பின் குறிப்பு: 1991 தனியார்மயக் கொள்கை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் அம்சத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் ரயில் நிலையத்தில் இரண்டு முஸ்லீம் பெண்களும், கர்நாடக மாநிலம் சிக்கமங்கலூரு மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தினரும் பார்ப்பன இந்துமதவெறி பஜ்ரங்தள் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட தலித் பால்ராஜின் வீடு
தாக்குதலுக்குள்ளான முஸ்லீம் பெண்கள் சல்மா இஸ்மாயில்(30) மற்றும் சமீம் அக்தர் ஹூசைன் (35) இருவரும் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சாவூர் நகரத்தின் காண்புரா பகுதியை சேர்ந்தவர்கள். போலீசார் சூழ்ந்திருக்க பஜ்ரங்தள் கும்பலின் ஆண்கள் துணையுடன் அவ்வமைப்பின் பெண்கள் இத்தாக்குதலில் ஈடுபடும் வீடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
“நாங்கள் மந்த்சாவூர் பகுதிக்கு வரும் வழியில் பஜ்ரங்தள் உறுப்பினர்கள் எங்களை தடுத்து நாங்கள் கையில் என்ன எடுத்து செல்கிறோம் என விசாரித்தார்கள். எருமைக்கறி என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதாகவும் கூறினோம். ஆனால் அதை கேட்காமல் அவர்களுடன் வந்திருந்த பெண்களிடம் எங்களை தாக்குமாறு கூறினார்கள். தடுக்க முயன்ற போலீசாரையும் மிரட்டினார்கள்” என்கிறார் தாக்குதலுக்குள்ளான சல்மா.
பெண்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தாக்குதலுக்குள்ளான பெண்கள் மீதே, மத்திய பிரதேச அரசு கால்நடை பாதுகாப்பு சட்டம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது இச்சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து அப்பகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சிசோடியா “இப்பெண்கள் பசு மாமிசம் கடத்துவதாக பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அப்பெண்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள். குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மன்சூர் பகுதிக்கு மாட்டுக்கறியை கடத்தி வருகிறார்கள். சோதனையில் சிக்காமல் இருக்க பெண்களை பயன்படுத்துகிறார்கள். தாக்குதலுக்குள்ளான பெண்கள் வழக்கமான குற்றவாளிகள்தான்” என திமிராக பேட்டியளித்துள்ளான்.
இதே போன்று மாட்டை திருடி பின் அதை கொன்று சாப்பிட்டதாக கூறி கர்நாடக மாநிலம் சிக்கமங்லூரு மாவட்டத்தின் குண்டூர் பகுதியில் தலித் குடும்பத்தினர் பஜ்ரங்தள் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 30 – 40 பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இக்குடும்பத்தினரை கட்டி வைத்து இரும்பு மற்றும் கட்டைகளால் அடித்துள்ளனர். இதில் மாற்றுதிறனாளியான பால்ராஜ்(56) கடுமையான தாக்குதலுக்குள்ளாகி அவரது கைமுறிந்துள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்கிய பஜ்ரங்தளத்தினர் கொடுத்த வழக்கின் பேரின் பால்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தனு, முட்டப்பா, சந்தீப், ரமேஷ் ஆகியோர் மீது விலங்குகளை வதை செய்ததாக ஜெயபுரா நகர காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளனர். அதேபோல தலித் குடும்பத்தினர் கொடுத்த பதில் வழக்கில் பஜ்ரங்தள் உறுப்பினர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆம் மாட்டுக்கறி எங்கள் உணவு கலாச்சாரத்தின் பகுதி. அதை உண்பது சட்டப்படி தவறு என்றால் போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். இவர்கள் எப்படி அடிக்கலாம்“ என்கிறார்கள் அக்கிராம இளைஞர்கள். ஆட்டுக்கறி வாங்கும் அளவிற்கு எங்களிடம் வசதியில்லை. அது ரூ.400 -க்கு மேல் ஆகிறது” என்றும் மாட்டுக்கறியை காலம் காலமாக தாங்கள் உண்டு வருவதாகவும் தங்கள் யதார்த்த நிலையை விளக்குகிறார் தாக்குதலுக்குள்ளான பால்ராஜின் மனைவி சரசு. “ நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வமைப்பில் இருந்தோம். ஆனால் எங்கள் உணவு பழக்கத்தை எதிர்த்ததால் அவ்வமைப்பிலிருந்து விலகிவிட்டோம்” என்கிறார் அக்கிராம இளைஞர் குருமூர்த்தி.
மேலும் இம்மாட்டை இவர்கள் திருடவில்லை என்றும் தலித் மக்கள் வேலை செய்யும் எஸ்டேட்டின் முதலாளி இவர்களுக்கு கொடுத்த மாடு என்பதும் தெரியவந்துள்ளது. வழக்கமாக எஸ்டேட்டில் நுழையும் மேயும் மாடுகளை கட்டிப்போட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை யாரும் உரிமைகோரி வரவில்லை என்றால் அம்முதலாளி இம்மாடுகளை அங்கு வேலை செய்பவர்களிடம் ஒப்படைப்பது வாடிக்கை என்பதும் தெரியவந்துள்ளது. “சர்ச்சுகளையும் பள்ளிவாசல்களையும் தாக்கிக்கொண்டிருந்த பஜ்ரங்தளத்தினர் இப்போது தலித்துகளை குறிவைத்துள்ளனர். பெண்களும் இளைஞர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விதிகளை வகுத்து செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். வரலாற்று ரீதியாக மாட்டுக்கறி என்பது தலித்துகளின் உணவு. தலித்துகளின் உணவு கலாச்சாரத்தை கேள்வி கேட்க இவர்கள் யார்?” என்கிறார் இத்தாக்குதலுக்கு எதிராக போராடிவரும் சமூக அமைதிக்கான குழு என்ற அமைப்பின் அசோக்.
நாடெங்கிலும் மாட்டுக்கறியை முன்னிறுத்தி தலித் மற்றும் முஸ்லீம்களின் மீதான பார்ப்பன இந்து மதவெறி கும்பலின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. குஜராத்தில் தலித் மக்கள் இவ்வடக்குமுறைகளுக்கு எதிராக தீரத்துடன் போராடி வருகிறார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாயக அம்மாநில எழுத்தாளர் அம்ருத்லால் மக்வானா தனக்களிக்கப்பட்ட மாநில அரசின் விருதை திருப்பி தந்துள்ளார்.
இதனிடையே இந்து மத வெறியர்களின் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற முன்னுதாரணமிக்க போராட்டம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் காஷ்மீரிகளை வேட்டையாடி வரும் நிலையில், காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி பஞ்சாம் மாநிலம் பக்வாரா பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது சிவசேனா அமைப்பு. கடந்த வெள்ளியன்று தொழுகை நேரத்தில் பள்ளிவாசல் முன் அணிதிரண்ட இந்துமத வெறியர்கள் பள்ளிவாசல் மீது கல்லெறிந்துள்ளனர். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகவும், பாரத மாதாவுக்கு ஜெ சொல்லியும் பள்ளிவாசல் முன் கோஷமிட்டுள்ளனர்.
நிலைமை மோசமாவதை கண்டு ஆத்திரமுற்ற சீக்கியர்கள் கையில் கத்திகளுடன் இந்து மதவெறியர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் களம் இறங்கியுள்ளனர். இதே போல் ஆதி தர்மி மற்றும் வால்மீகி சாதி தலித்துகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இணைந்து கல்லெறிந்தவர்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்துள்ளனர். சீக்கியர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இந்து மத வெறியர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். விடாது துரத்தி சென்று தாக்கியதில் கோவிலுக்குள் நுழைந்து தங்களை காப்பாற்றிக்கொண்டுள்ளனர் இந்து மத வெறியர்கள்.
தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல்களில் இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்பகுதி சீக்கியர்கள்-முஸ்லீம்கள்- தலித்துக்கள் கலந்தாலோசித்து வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.
“தற்போது நீங்கள் ‘கருப்பின’ அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!”
“தற்போது நீங்கள் ‘கருப்பின’ அமெரிக்காவில் நுழைகிறீர்கள்!”
சமீபத்தில் அமெரிக்க போலீசு இரண்டு கருப்பின ஆண்களை சுட்டுக் கொன்றது, அங்கே அலையலையாக எதிர்ப்புகளையும்,போராட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது.
கேலிச்சித்திரம்: Victor Ndula, Kenya நன்றி: Cartoon Movement
—————————————————————
காஷ்மீர் முற்றுகை!
காஷ்மீர் முற்றுகை!
காஷ்மீர் மக்கள் மீது இந்தியா தொடுத்துள்ள கொடூரமான போர்! 45-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொலை1600-க்கும் மேற்பட்டோர் காயம்! இணையம், தொலைபேசிக்கு தடை!, ஊடகங்கள், செய்திகளுக்கு தடை! மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களும் கூட இராணுவத்தால் தாக்கப்படும் நிலை! மாநிலம் முழுக்க போலிசின் சோதனையும், கைதும் பிரம்மாண்ட அளவில்! நீரும் மின்சாரமும் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது! முழுமையான ஊடரங்கு சட்டம் அமலில்!
ஆனாலும் காஷ்மீர் மக்கள் “ஆசாதி – விடுதலை” என்ற முழக்கத்துடன் தெருவிற்கு வருகின்றனர்.
கார்ட்டூன் நன்றி: Rebel Politik Arun
———————————————————-
அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!
அமெரிக்காவில் ஆயுதவிற்பனை!
ஆர்லாண்டோ படுகொலையை அடுத்து துப்பாக்கிகள் எளிதாக கிடைப்பது குறித்த விவாதங்கள் வழக்கம் போல நடக்கின்றன. விற்பனையும் வழக்கம் போல !
கேலிச்சித்திரம்: எகிப்தின் Sherif Arafa நன்றி: Cartoon Movement
—————————————————-
மத்திய தரைக் கடல் – அகதிகளின் நரகம்
மத்திய தரைக் கடல் – அகதிகளின் நரகம்
விடியலைத் தேடி செல்லும் அகதிகள் கடலில் கொல்லப்படுவதால் இனி மத்திய தரைக் கடலை, மேற்குலகம் உருவாக்கிய அகதிகளின் நரகம் என அழைக்கலாம?
கார்ட்டூன் நன்றி: Miguel Villalba Sánchez (Elchicotriste),Spain நன்றி: Cartoon Movement
——————————————————–
அமெரிக்காவின் தேசியக் கொடி எது?
அமெரிக்காவின் தேசியக் கொடி எது?
அடுத்த அதிபர் ஹிலாரி கிளிண்டனா, டொனால்ட் ட்ரம்பா? கேள்விக்கு விடை விரைவில் தெரியும். ஆனால் கேள்விக்கிடமற்ற உண்மை அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம்!
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.
சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும்
– முனைவர் ச. அ. வீரபாண்டியன்.
இளையராஜா
இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம்.
மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது இசை வரலாறு என்பது தெளிவாகிறது. இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற இசை வடிவங்களை, அவை தொடர்பான இசை அறிவை, உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்வது சமூக ஆய்வுக்குத் துணை புரிவதாக அமையும்.
இந்தப்பின்னணியில் மேற்கத்திய இசையில் புகழும் செல்வாக்கும் பெற்ற ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. உலக அளவில் இன்றும் போற்றப்படுகிற இந்த இசை வடிவத்தின் சில இசைக்கூறுகள் இன்று தமிழ்நாட்டு இல்லங்களின் கதவு ஒலிகளில் (Door bells) சொகுசுக் கார் ஒலிகளில்(Car horns) வெளிப்படும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இத்தகைய புகழ் பெற்ற சிம்பொனியானது மேற்கத்திய செவ்விசையாக, (Western classical music) அடையாளம் பெற்றுள்ளது.
***
தேவாலய இசை
கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பிரெஞ்சுப் புரட்சியும், சிம்பொனி இசையும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் குறிப்பிடத்தகும் சமூக மாற்றப்போக்குகளாக ஐரோப்பாவில் தேசிய உணர்வுகளின் எழுச்சிக்கு வித்திட்ட போக்குகளாக, கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் ’லத்தீன்’ என்ற மொழியின் ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. அரசர்களுக்கும் மேலான அதிகாரத்தை செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்தனர்.
கிறித்துவச் சமயச் செல்வாக்குப் பெற்ற லத்தீன் மொழியின் ஆதிக்கத்திற்கும். அன்று செல்வாக்குடன் இருந்த தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைகளில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) எனும் இசை அறிஞர் தமது தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் மதச்சார்பற்ற (Secular கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பல்லிசைக் கருவியிசையில் (Polyphonic) ‘சான்சன்’ (Chanson) என்ற இசை வடிவத்தில் புதுமையான தாள இசைக் கூறுகளை வளர்த்தெடுத்து மேற்கத்திய இசை வரலாற்றில் இடம் பெற்றார். மதச்சார்பற்ற இசை வடிவமாக சான்சன் அடையாளம் காணப்பட்டது.
அதே போல் இத்தாலியின் கண் பார்வையற்ற இசை அறிஞர் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) தமது தாய் மொழியான இத்தாலி மொழியில் மாத்ரிகல் (madrigal) இசைக் கூறினை மதச்சார்பற்ற இசையாக வளர்த்தெடுத்தார். மாத்ரிகல் என்பது நாட்டுப்புறப் (rustic) பாடல் இசைவடிவம் ஆகும். இதே இத்தாலியும், பிரான்சும் தான் சிம்பொனி இசைத் தோற்றத்தின் மூல இசைக் கூறுகளை வழங்கிய நாடுகளாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குயிலாம் துமாசாத் (Guillame de Machaut)
மேற்கத்திய இசையில் இத்தகைய மதச்சார்பற்ற (Secular) இசையின் வளர்ச்சியானது சமூக மேல் தட்டுப்பிரிவின் ஆதிக்கத்தை எதிர்த்ததோடு இடைநிலை மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது. அதாவது பிரெஞ்சுப் புரட்சிக்கான துவக்க அறிகுறிகளாக இவை வெளிப்பட்டன. இடைக்காலம் (Middle Ages) என்ற கட்டத்திலிருந்து மறுமலர்ச்சிக் காலம் (Renaissance) என்ற கட்டத்திற்கு மாறிய காலகட்டத்தில் இத்தகைய மாற்றங்கள் இசைத் துறையில் நடந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். ஒவியம் உள்ளிட்ட பிற பண்பாட்டுத் துறைகளிலும் இத்தகைய போக்கு வெளிப்பட்டது.
16 – ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தேசியக் கூறுகளின் வளர்ச்சியும், கிறித்துவ மதத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவின் தோற்றமும் முக்கிய நிகழ்வுகளாகும். அச்சிடும் முறை வந்த பிறகு இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சிக்கு அது பெரும் துணைபுரிந்தது. 16 – ஆம் நூற்றாண்டில் தனிமனித வெளிப்பாடாகிய ’தனிக்குரல்’ (Solo Voice) இசையானது நரம்பிசைக் கருவியைத் (lute) துணையாகக் கொண்டு செல்வாக்குப் பெறத் தொடங்கியது. பாதிரிகள் பிரபுக்கள் நிலையிலிருந்து கீழ்த்தட்டு மக்களை, தனிமனிதனை முக்கியத்துவப்படுத்தும் போக்குகள் வெளிப்படத் தொடங்கின. குழலிசை, நரம்பிசை, தொடு விரலிசைக் (Keyboard) கருவிகள் இக்காலகட்டத்தில் வளர்ந்தன. இவற்றுள் லுட் (Lute) கருவி ஐரோப்பா முழுவதும் செல்வாக்கு பெற்ற இசைக் கருவியாக இருந்தது. இக்கால கட்டத்தில் தோன்றிய வயலின், வாய்ப்பாட்டு இசை அமைப்பில் துணையிசையாக மட்டுமின்றி, சில பகுதிகளில் தனித்து இசைக்கும் வகையில் கருவியிசையாகவும் செயல்பட்டது. கன்செர்ட்டோ (Concerto) என்று அடையாளப்படுத்தப்பட்ட இம்முறையே கன்செர்ட் (Concert) என்ற பின்னாளைய அரங்கிசை வடிவிற்கு முன்னோடியாக அமைந்தது.
Concerto – கான்சர்டோ
17-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் நடந்த மதப்போர்களும், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போரும் (Civil war) இரண்டு நாடுகளையும் அரசியல், பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளிலும் பலவீனப்படுத்தின. இதே காலகட்டத்தில் மேற்கத்திய இசை பிரான்சிலும் இத்தாலியிலும் வளர்ச்சி பெற்றன. மறுமலர்ச்சிக்கு (Renaissance) எதிரான போக்கு இசை ஒவியம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டு, அமைதியற்ற (restless) உணர்வுகள் வெளிப்படத் தொடங்கின.
இதனால் பரோக் (baroque) என்ற கலை, இசையிலும் ஒவியத்திலும் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கியது. இசைக் கருவிகளைத் தனித்து ஒலிக்கச் செய்யும் போக்கு செல்வாக்கு பெற்றது. ”ஓபெரா” (opera) எனும் இசை நாடக வடிவம் தோன்றி வளர ஆரம்பித்தது. இத்தாலியில் தோன்றிய இந்த இசைவடிவம் ஐரோப்பா முழுவதும் செல்வாக்குப் பெற்றது. கூட்டிசை(Harmony)யும் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றது. பண்பு மாற்றம் (Modulation) என்ற இசைத்திறனும் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றது. சொனாட்டா (Sonata) என்ற முக்கிய இசை வடிவமும் இக்காலகட்டத்தில் தான் தோன்றி வளர்ந்தது. பிற்காலத்தில் தோன்றிய சிம்பொனி இசையில் இது முக்கியப் பங்கு ஆற்றியது.
இசையின் வளர்ச்சி
18 ஆம் நூற்றாண்டு என்பது அறிவை (Reason) முதன்மைப்படுத்தி வடிவொழுங்கும் (Formalism) பகுத்தறிவும் (rationalism) செல்வாக்குப் பெற்ற காலமாகும். அப்போது வால்ட்டேர், ரூசோ, போன்றோர் அரசையும் மதத்தையும் கடுமையாக விமரிசித்தனர். செல்வாக்கும் வசதியும் பெற்ற ’பூர்ஷ்வா’ (bourgeoise) எனும் முதலாளி வர்க்கம், பொறுப்பற்ற திறமையற்ற அரசை வீழ்த்தி, தமது செல்வாக்கை நிலைநாட்டத் துடித்தது.
பூர்ஷ்வா வர்க்கத்தின் எழுச்சியும், செல்வமும் இசைகற்பித்தல், (advent of the musical amateur) தொழில் ரீதியிலின்றி இசையார்வத்தில் கச்சேரி வழங்கல் ஆகிய போக்குகளை உருவாக்கின.
பிரெஞ்சுப் புரட்சியின் நேரடித் தாக்கமாக மக்களுக்கான இசை உருவானது. புரட்சிக்காலத்தில் நடந்த கொடுமைகளும் விடுதலை முயற்சிகளும் இசையின் உள்ளடக்கத்தில் வெளிப்பட்டன. அரசர்கள் பிரபுக்கள் ஆதரவு நீங்கி பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதரவு இசைக்குக் கிட்டியது. அரசவை இசைக் கலைஞர்கள் அரசுப் பணியாளர்களானார்கள். காதல், நகைச்சுவை, பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய கட்டமைப்பினைக் (Small structure) கொண்ட ரொகோகோ (Rococo) என்ற இசை வடிவம் செவ்விசை சொனாட்டாவாக (Classic Sonata) ஜே.எஸ்.பாக் (J.S. Bach) சி.பி.இ.பாக் (C.P.E Bách) ஜே.சி.பாக் (J.C. Bach) போன்றோரால் வளர்க்கப் பெற்றது. சிம்பொனியின் படைப்பாளர்களான ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் தோன்றுவதற்கான சிம்பொனியின் காலம் துவங்கியது.
இத்தகைய முயற்சிகளின் தொகுவிளைவாக ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் கனியும் காலம் நெருங்கியது.
சிம்பொனியின் தோற்றம் கலப்புருத் (mixed origins) தோற்றமாகும். இத்தாலிய ‘ஓபெரா’ (opera) இசை நாடகத்தில் சின்போனியா (Sinfania) என்ற இசைவடிவம் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இது இசைநாடகத்திலிருந்து விடுபட்டு கச்சேரி இசை (Concert) யானது. வேகம்-தாமதம்-வேகம் (fast-slow-tast) என்ற இசைப் பண்பு இதன் தனித்தன்மையாகும். பிரான்சில் கோசெக் (Gossec) போன்றோரும், இங்கிலாந்தில் ஜே.சி. பாக் மற்றும் பாய்ச்சி (Boyce) போன்றோரும் சிம்பொனியின் தோற்றத்திற்கு பங்களித்தவர்கள் ஆவர்.
ஆனால் சிம்பொனியின் தாயகம் என்ற பெருமை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவையே சாரும். ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் சிம்பொனி இசை உருவாக்கத்திற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பிரான்ஸ் ஜோசப் (1732 – 1809) உல்ப்காங் அமெதியூ (1756 – 1791) முக்கியமானவர்கள். ஆனால் ஹைடனும், மொசார்ட்டுமே சிம்பொனி இசைக்கு முதல் முதலாக முழுமை வடிவம் (first peak of perfection) கொடுத்தவர்கள் ஆவர்.
தனி இசைச் சுரங்கள் அல்லது இசை அளவீடுகள் (measures) ஆகியவை தாள மாறுபாடு அழுத்தத்திற்கு (rhythmic syncopation) உட்படுத்தப்பட்டன. தனிச்சுர இசை (Melody), கூட்டிசை (harmony), ஒன்றுக்கும் மேற்பட்ட தனிச்சுர இசைகள் ஒரே நேரத்தில் இசைத்தல் (Counter point) போன்ற நுட்பங்கள் சிம்பொனி இசையில் பயன்படுத்தப்பட்டன.
பீத்தோவன்
1750-க்குப் பின் உருவான பியானோ இசை சிம்பொனியில் நெறிமுறைக்குட்பட்ட பிரிவுகளில் வெளிப்பட்டது. செவ்வியல் செல்வாக்குப் பெற்ற காலத்தில் முன்னர் குறிப்பிட்ட சமூக வரலாற்றுப் பின்னணியில் அன்றைய சமூக இசைத் தொழில் நுட்பங்களை அகப்படுத்தி, மனித மன உணர்வுகளைப் பிரதிபலித்த சிம்பொனி இசை வடிவம் செல்வாக்குப் பெற்றது. பிரபுக்கள். அரசர்கள் ஆதரவு என்ற நிலையிலிருந்து, பிரெஞ்சப் புரட்சியால் வலிமை பெற்ற நடுத்தர பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதரவு இசைக்குக் கிட்டியது. முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் கட்டத்தில் மக்கள் நுகரும் சந்தைப்பொருள் (commodity) நிலையை இசை அடையும் காலம் அப்போது நெருங்கியது என்று கூறலாம்.
செவ்வியல் காலம் முடிந்து, 19 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் (Romantic) காலம் தொடங்கியது. இசைச் சந்தை அறிமுகம் ஆனது. இதனால் வியாபார இசை நாடகம் (Commercial opera) வளர ஆரம்பித்தது. அரசர்கள் மற்றும் பிரபுக்களைச் சார்ந்து பின் பூர்ஷ்வா- நடுத்தர வர்க்தைச் சார்ந்து வளர்ந்த இசை, காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் தகுதியுள்ள மக்களைச் சார்ந்து வளர ஆரம்பித்தது. இசைக் கல்வி பரவலானது. பாரம்பரிய வடிவங்களும், நெறிமுறைகளும் தமது முக்கியத்துவத்தை இழந்து, புதிய பரிசோதனைகளுக்கு உள்ளாயின. தனிமனிதன் தொடர்பான இயற்கை தொடர்பான அதீதக் கற்பனைகள் கலை இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்றன. சிம்பொனி இசையிலும் இந்த மாற்றம் பிரதிபலித்தது.
மோசார்ட்
தனிமனித வெளிப்பாட்டு உணர்வுகள் தூண்டப்பட்டதால் வழக்கத்திற்கு மாறான (unusual) அதீத கற்பனைகளை உந்தியது. தனிச்சுர இசை இயக்கத்தன்மையில் புதிய இசை வண்ணங்களைப் பெற்று வளர்ந்தது. சிறந்த, புதிய கூட்டிசை உருவானது. தனியாக கருவியிசை (Solo) ஒலிப்பதும் சிறப்பு இடம் பெற்றது. கருவிகளில் இசையெழுப்புவதிலும் புதுமை ஏற்பட்டது.
செவ்வியல் கால சிம்பொனி இசை வளர்ச்சியில் மொசார்ட் பங்காற்றியது போல், சிம்பொனி இசையை கற்பனைக் காலக்கட்டத்தில் லுட்விக் வான் பீத்தோவன் வளர்த்தெடுத்தார். புதிய சமூகச்சூழலுக்கு ஏற்ற மன தைரியத்தை இவர் கொண்டிருந்ததால், மனித உரிமைகள் பற்றிய புதிய கருத்துக்களை, கலைஞரின் உயர்ந்த நிலை தொடர்பான புரட்சிகர சிந்தனையும் இவருக்கு இருந்தன. கடவுளை இவர் தனக்குச் சமமாக நினைத்ததாக இவரைப் பற்றிய ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
ஆரம்பத்தில் மொசார்ட்டைப் பின் பற்றி இசையமைத்த இவர் பின்னர் தனக்கென புதிய சமூகச் சூழலுக்கு ஏற்ற புதிய பாணியை உருவாக்கினார். கூட்டிசை வேறுபாட்டிற்கும் (Harmonic contrast) ஆழமான உணர்வை வெளிப்படுத்தவும் கூர்மையான பகைச்சுர ஒலிகளை (Sharper dissonances) இவர் பயன்படுத்தினார். பண்பு மாற்றத்தில் (modulation) புதுமையான நுட்பங்களை உருவாக்கினார். மினுவட்டின் (Minuet) பழைய வடிவத்தை நீக்கிப் புதுமையைப் புகுத்தினார். தாள இசையிலும் இவர் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். சிம்பொனி இசைக்கான இசைக் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
கான்சர்டோ இசைக்கருவிகள்
பீத்தோவன் உருவாக்கிய சிம்பொனி இசை வடிவத்தில் 4 வெவ்வேறான இசையோட்டங்கள் (Movements) இருந்தன. இதில் முதலாவது இசையோட்டம் சொனாடா (Sonata) என்னும் இசைவகையில் அமைந்தது; இரண்டாவது இசையோட்டம், வேகம் குறைவான இசையோட்டம் உடையதாக இருந்தது. இதற்கான இசை வடிவம் இசையமைப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சொனாடாவகையிலோ அல்லது வேறு வகையிலோ இருக்கும்.
மூன்றாவது இசையோட்டத்திற்கான இசை வடிவம் மினுவட் (Minuet) என்ற இசை வடிவத்தில் அமைந்து இருந்தது; நான்காவது இசையோட்டம் பெரும்பாலும் ரோண்டோ (Rondo) என்ற இசை வடிவில் வேகமாக ஒலிக்குமாறு இருந்தது. இந்த சிம்பொனி இசையில் தொடு இசை (key board), நரம்பிசை, குழலிசை, தாள இசை உள்ளிட்ட இசைக்கருவிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிம்பொனி இசை முழுவதும் எல்லா நேரத்திலும் எல்லா இசைக் கருவிகளும் ஒலிப்பதில்லை. மாறாக ஒரு சில கால இடைவெளிகளில் ஒரு சில இசைக்கருவிகளும், வெவ்வேறு சிலகால இடைவெளிகளில் அதிக எண்ணிக்கையுள்ள இசைக் கருவிகளும் ஒலிக்கும். ஒரு சிம்பொனி இசையில் இசையோட்டமானது ஒரே சீராக இல்லாமல், மெதுவாகவும், வேகமாகவும் மாறி வருவது மற்றொரு முக்கிய அம்சமாகும். ஒரே நேரத்தில் நிறைய இசைக்கருவிகள் ஒலிப்பதன் காரணமாக ஏற்படும் தொகுவிளைவு புதுமையான இசை இன்பத்தை அளிக்கும். அதேபோல் ஒரு சிம்பொனி இசையில் வெவ்வேறான இசையோட்டங்கள். அந்த இசையோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் இசை இன்பத்தில் புதிய அனுபவத்தைத் தரும்.
ஓப்ரா இசைவடிவம்
பலவகையான மனித உணர்வுகளை வெளிப்படுத்த இந்த இசைவடிவில் அதிக வாய்ப்பு இருந்தது. எனவே இது செல்வாக்கு பெற்றதில் வியப்பில்லை. மேலும் இந்த சிம்பொனி இசை வடிவமானது. கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுக்கக் துணை போனது. இத்தகைய முயற்சியில் உருவானதே சிம்பொனிக் கவிதை (Symphonic poem) ஆகும்.
இதனை முதன் முதலில் உருவாக்கியவர் பிரான்ஸ் நாட்டு பியானோ இசைக் கலைஞர் பிரான்ஸ் லிஸிட் (கி.பி. 1811 – 1886) ஆவார். நெப்போலியன் உருவாக்கிய அரசியல் தேசிய உணர்வால் (Political nationalism) ஆட்கொள்ளப்பட்ட இவர் மனிதனை அல்லது கருத்தை (idea) இசையின் மையக் கருத்தாகக் (musical theme) கொண்டு சிம்பொனிக் கவிதை என்ற புதிய இசை வடிவத்தை உருவாக்கினார்.
தேசிய உணர்வுகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்து தோன்றி வளர்தது சிம்பொனி இசை. இந்தக் காலகட்டத்தில் சேம்பர் இசை (Chamber Music), இசை நாடகம் (Opera), நையாண்டி இசை (Comic opera) போன்ற பல இசை வடிவங்களும் வளர்ந்தன. அமெரிக்காவில், ராக் (Rock), ஜாஸ் (Jazz), பாப் (Pop) போன்ற இசை வடிவங்கள் தோன்றி வளர்ந்தன.
ஹார்மோனி
தனி மனிதன், சமூகம், இயற்கை ஆகியவையே இசையின் ஊற்றுக் கண்களாகும். உழைக்கும் மக்கள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவர்கள் ஆவர். எனவே இசையின் ஊற்றுக் கண்களோடு நேரடித் தொடர்பு கொண்டவை நாட்டுப்புற இசையாகும். அழகியல் செறிவுமிக்க நாட்டுப்புற இசையானது செவ்விசை (Classical Music) உள்ளிட்ட மற்ற இசைகளின் அடிப்படையாக மட்டும் இல்லாமல், அவற்றில் ஏற்படும் புதிய இசை வகைகளின் தோற்றத்திற்கும். வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை புரிந்து வருவது ஐரோப்பிய இசை வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பொனி இசையின் தோற்றமும் வளர்ச்சியும் இதனை உறுதி செய்கிறது.
இதுதொடர்பான கூடுதலாக சில சான்றுகளை இங்கு பார்ப்போம். அங்கேரி தேசிய உணர்வினை வளர்த்த இசையறிஞர்கள் பெலா பார்டோக் (Bela Bartok கி.பி. 1881 – 1945) மற்றும் சொல்டான் கொடாலி (Zoltan Kodaly கி.பி 1882 1967) நாட்டுப்புற இசைகளைப் பெருமளவில் சேகரித்து அகப்படுத்தி, தமது இசையில் பயன்படுத்தியவர்கள் ஆவர். எனவே தேசிய உணர்வுகளின் வளர்ச்சிக்கு ஏற்ற இசை தொடர்ந்து அடித்தளமாக இருப்பது தெளிவாகிறது. பொதுவாகச் சமூகச் சூழலுடன் தொடர்புடைய இசையைப் பற்றிய ஆய்வில் நாட்டுப்புற இசையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எனவே இன்று தமிழ்நாட்டில் உள்ள சமூகத்தைப் புரிந்து கொள்ள, எந்தெந்த பிரிவு மக்களிடையே எந்தெந்த இசை வடிவங்கள் செல்வாக்குடன் உள்ளன என்பதும், அந்த இசை வடிவங்களில் உள்ள இசை அறிவும். உள்ளடக்கமும் என்னென்ன என்பதும். இவற்றின் வரலாற்றுப் பின்னணியும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேற்குறித்த சிம்பொனியின் சமூகச் சூழல் பற்றிய ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்: “சோழர் வளர்த்த வேதக் கல்வி முதலிய கட்டுரைகள்”
வெளியீடு: ஆய்வு வட்டம், சென்னை.
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லிக சாலை, சென்னை – 600 002.
தொ.பே 044 – 2841 2367
இந்தியாவில் மருத்துவ தொழிலில் ஈடுபட்டிருக்கும் அலோபதி மருத்துவர்களில் 31% பேர் பத்தாம் வகுப்பை வரை மட்டுமே படித்தவர்கள் எனவும் 57% சதவீத மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த எவ்வித தகுதியும் கிடையாது எனவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மொத்த சுகாதார ஊழியர்களில் 23.3% பேர் தான் மருத்துவ துறைக்கான தகுதிகளோடு இருக்கிறார்கள்.
இந்தியாவில் செயல்படும் பல்வேறு வகையான மருத்துவ ஊழியர்கள், அவர்களின் கல்விதகுதி, திறமை, கிராம மற்றும் நகரங்களில் செயல்படும் மருத்துவ ஊழியர் விகிதாச்சாரத்தின் ஏற்றத்தாழ்வு, மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு, மருத்துவ ஊழியர்களின் ஆண் பெண் விகிதம் உள்ளிட்ட பல வகையான ஆய்வு முடிவுகளை “இந்தியாவின் சுகாதாரத்துறை ஊழியர்கள்” (The Health Workforce in India) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். அதில் தான் மேற்கண்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மொத்த சுகாதார ஊழியர்களில் மருத்துவர்கள் 39.6%, செவிலியர்கள் 30.5%, பாரம்பரிய மற்றும் நாட்டுவைத்தியர்கள் 0.6%, டயட்டீசியன், பிசியோதெரபி உள்ளிட்ட பிற மருத்துவ ஊழியர்கள் 17%, மருந்தக ஊழியர்கள் 11.2% இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் சேர்த்து தான் சுகாதார ஊழியர்கள் என உலக சுகாதர நிறுவனம் கணக்கிடுகின்றது.
இதில் மொத்த சுகாதார ஊழியர்களில் 23.3% பேர் தான் மருத்துவ துறைக்கான தகுதிகளோடு இருக்கிறார்கள். 51.4% பேர் இடைநிலை கல்வி அதாவது 10-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்கள்; 5.8 %பேர் டிப்ளமோ முடித்திருக்கிறார்கள்; 37.4% பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள்;8.1% பேர் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள். இதில் குறிப்பாக அலோபதி மருத்துவர்களின் தகுதி மட்டும் தனியாக முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளோம்.அதாவது அலோபதி மருத்துவர்களில் தகுதியானவர்கள் 42.7% மட்டுமே. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மொத்தமாக கணக்கிட்டால் அதில் துறை சார்ந்த தகுதியுள்ளவர்கள் 29.7% மட்டுமே. அலோபதி அல்லாத பிற(ஆயுர்வேத(60.1%,யுனானி(45.8) உள்ளிட்ட) மருத்துவர்களில் 52.8% மட்டுமே தகுதியானர்கள்.
பெரும்பாண்மையான மக்கள் அதாவது 72.2% மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் 40.8% மட்டுமே சுகாதர பணியாளர்கள் செயல்படுகின்றனர்.
ஆக மொத்தத்தில் இந்தியாவில் செயல்பட்டு வரும் சுகாதார ஊழியர்களில் துறை சார்ந்த தகுதியுள்ளவர்கள் 23.3% மட்டுமே என இவ்வாய்வறிகை அதிர்ச்சியளிக்கிறது. மொத்தத்தில் மருத்துவ ஊழியர்களின் தரம் இதுவென்றால் இதில் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவர்களின் நிலை இன்னும் மோசமானது. இதைவிட கொடுமையானது தகுதியற்ற மருத்துவர்களையும் சேர்த்து கணக்கிட்டால் கூட இந்தியாவில் அதிக மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை நகரங்களைவிட மிகக் குறைவாக இருக்கிறது.
மொத்த மக்கள் தொகையில் 27.8% பேர் வசிக்கும் நகர்புறங்களில் மொத்த சுகாதார பணியாளர்களில் 59.2% செயல்படுகின்றனர். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் அதாவது 72.2% மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் 40.8% மட்டுமே சுகாதர பணியாளர்கள் செயல்படுகின்றனர். லாபத்தை நோக்காக கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தில் மக்களின் தேவையை விட செலவழிக்கும் ஆற்றல் தான் பிராதானமாக பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் எக்காலத்திலும் வறுமை சூழ்ந்த கிராமப்புறங்களில் அமைக்கமாட்டார்கள். அதே சமயத்தில் தனியார்மயத்தின் கொள்கைகளினால் அரசும் சுகாதரம் வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதும், அரசு மருத்தவமனைகளை பராமரிக்காமல் இருப்பதும் மேற்கண்ட இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கிறது. ஆக கிராமப்புற மக்கள் ஓரளவு தரமான சிகிச்சைக்காக பல நூறு கிலோ மீடடர்கள் பயணித்து நகர் பகுதிகளுக்கு வரவேண்டியிருக்கிறது. 2015-ல் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக (National Sample Survey Office (NSSO) புள்ளிவிவரப்படி கிராம்ப்புற மக்களின் மொத்த இரவு பயணங்களில் 48% சதவீத பயணங்கள் நகர்புற மருத்துவமனைகளை நோக்கியதாகவே இருப்பதாக தெரிவிக்கிறது.
ரீட்டா
இதைவிட கொடுமையானது மாதகணக்கில் ஏன் வருடக்கணக்கில் கூட மருத்துவமனை வாசலில் மருத்துவர்களின் சந்திப்புக்காக(appointment) காத்துகிடக்கிறார்கள் கிராமப்புற மக்கள். இது குறித்த கள ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது indiaspend.com. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையின் நேரம்(அப்பாயிண்ட்மென்ட்) கோரி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் பாதையோராங்களில் பல நூறு குடும்பங்கள் பல மாதங்களாக காத்திருக்கும் அவலம் தெரியவந்துள்ளது. தனது 9 மாத குழந்தையின் தீராத பிரச்சனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என 6 மாதமாத காத்திருக்கும் முகம்மது கலாமுதீனுக்கு தற்போது தான் எப்போது சந்திக்க வரவேண்டும் என்ற தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு ஆண்டு கழித்து தான் தேதி ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த 6 மாதமும் தற்காலிகமாக தங்கியிருந்ததை சேர்த்தால் ரூபாய் 60,000த்திற்கும் மேல் செலவழித்துள்ளார் கலாமுதீன்.
தனது கணவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்காக மருத்துவர் நேரம் (அப்பாயிண்ட்மென்ட்) கோரி 75 நாட்களாக எய்ம்ஸ் வாசலின் பிளாட்பாரத்தில் காத்திருக்கிறார் பீகாரிலிருந்து வந்திருக்கும் ரீட்டா. உத்திரபிரதேசத்தின் சமளி 1 வருடமாக உத்திரபிரதேசத்திற்கும் டெல்லி எய்ம்ஸ்க்கும் அலைந்துகொண்டிருக்கிறார். இப்படியாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் காத்துக் கிடக்கிறார்கள். தன்னார்வலர்கள் குறிப்பாக சீக்கியர்கள் வழங்கும் உணவில் இவர்கள் உயிர்வாழ்கிறார்கள். மறுகாலனியாக்க கொள்கைகளினால் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையே கண்டுகொள்ளாத அரசு இதை எப்படி கண்டுகொள்ளும்? கிராமப்புறங்களில் அரசு பொது மருத்துவத்தையும் சீரழித்ததன் விளைவு தான் மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு டெல்லி குளிரில் நடைபாதையில் தங்கியிருக்கிறார்கள்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் காத்துகிடக்கிறார்கள். தன்னார்வலர்கள் குறிப்பாக சீக்கியர்கள் வழங்கும் உணவில் இவர்கள் உயிர்வாழ்து கொண்டிருக்கிறார்கள்.
“நல்ல வேளையாக சிலர் வார வாரம் உணவு தருவார்கள். அதனால் நாங்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் வராத நிலையில் தினமும் 30 ரூபாய் செலவு செய்யவேண்டியிருக்கும்” என்கிறார் கலாமுதீன். 6 மாத கைக்குழந்தையை வைத்துகொண்டு தினம் 30 ரூபாய் செலவிலும், இலவச உணவிலும் மெட்ரோ நடைபாதையில் வசித்துவருகிறார்.
அதே சயமத்தில் உலகத்திலேயே மருத்துவ சுற்றுலாவில் இந்தியா வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு பல நூறு மைல் பயணத்தையும், எய்ம்ஸ்மருத்துவமனையின் பிளாட்பாரமும் கொடுத்திருக்கும் மறுகாலனியாக்கம் வசதிபடைத்தவர்களுக்கு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளின் குளுகுளு ஏசி அறைகளில் தங்கி சிகிச்சை பெறுவது பணக்கார இந்தியர்களுக்கு சாத்தியமாகியுள்ளது.
மேற்கண்ட கள ஆய்வு தற்போது வெளியாகியிருக்கும் சுகாதார ஊழியர்கள் குறித்த புள்ளிவிவரத்தின் நடைமுறை பாதிப்புகளை உணர்த்துவதாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு என்பது கிராமம் நகரம் என்று மட்டுமில்லாமல் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்கள், மாவட்டங்களிலும் காணக்கிடைக்கிறது. மேகாலயாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 28 மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அருணாச்சலபிரதேசம்(32.5) நாகாலந்து (35.6), ராஜஸ்தான் (55.1) மோடியின் குஜராத் (63.4), பீகார் 52.6%,தமிழ்நாடு (72) என தேசிய சாராசரியை விட பினதங்கியிருக்கிறது. அதே சமயத்தில் லட்சம் பேருக்கும் சண்டிகர் (280),, டெல்லி 197, பஞ்சாப் 134, மேற்குவங்கம் (101), கேரளா (99) என மருத்துவர்கள் விகிதம் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த நாட்டை எடுத்துக்கொண்டால் ஒரு லட்சம் மக்களுக்கு 80மருத்துவர்களும், 61 செவிலியர்களும் என்ற அளவில் தான் இருக்கிறது. இதுவும் தகுதியற்ற மருத்துவர்களையும் கணக்கில் சேர்த்துகொண்டால் தான். அவர்களை கழித்தால் இந்த விகிதம் இன்னும் 10 மடங்கு குறையும். இது தான் இந்திய சுகாதரத்தின் லட்சணம்.
இந்த பின்னணியில் தான் மோடி அரசு 2014-15 பட்ஜெட்டில் சுதாரத்துக்கான செலவை 20% குறைத்துள்ளது.அதாவது ரூ 30,645 கோடியிலிருந்து ரூ 24,549 கோடியாக குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என அரசு புதிய விளக்கம் கூறியது. அதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அரசின் புள்ளிவிவரப்படியே கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை மூன்று மடங்காக அதிகரித்து 200%த்தை தாண்டியுள்ளது;
திறமையில்லாத மருத்துவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு வாய்பில்லாத கிராமப்புறங்கள், பின்தங்கிய மாவட்டங்கள் என மருத்துவ துறை ஏற்றத்தாழ்வுகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்திருக்கிறது. பெரிய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கிட்னி திருடும் மையங்களாக செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத, மருத்துவர்களுக்கு மாத இலக்கு வைத்து லாப வெறியை நோக்காக கொண்ட தனியார் மருத்துவமனைகள் பெருகிவருகிறது. மருத்துவ துறை சின்னாபின்னாகியுள்ளதை தான் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து வெளிவர மருத்துவதுறைக்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.
மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள்! (கோப்புப் படம்)
டாஸ்மாக்கை மூடு! ஊரை விட்டு ஓடு! – என்று கடந்த 2015 ஆகஸ்டு 4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்பு பிணையில் விடுதலையாகினர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.
மேலப்பாளையூர் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி. காலனி ஊருக்கு வெளியே உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ வன்னியர் சங்கமோ பெரியளவில் அரசியல் ரீதியில் வளராத காரணத்தால் சொல்லிக் கொள்ளும் படியான சாதி மோதல்கள் ஏதும் இல்லை. இரண்டு சாதி மக்களின் பொருளாதய வாழ்வில் சொல்லிக் கொள்ளும் படியான ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லை. மோதல்களோ முரண்பாடுகளோ இல்லையென்றாலும் விலகியே இருந்த ஊரையும் சேரியையும் ஒன்றாக இணைத்துள்ளது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.
சிறை சென்றவர்களில் வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர். அவருக்கு எந்த அரசியல் முன் அனுபவமும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பை இந்தப் போராட்டத்திற்கு முன் அவர் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூத்த மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்த பெண்ணுக்கு 17 வயது, கூலி வேலைக்குச் செல்கிறார் –நாள் கூலி 150 ரூபாய். மூன்றாவதும், நான்காவதும் பெண்கள்; படிக்கிறார்கள். ஐந்தாவதாக ஒரு பையன், அவனும் படிக்கிறான். வேல்முருகன் கூலி வேலைக்குச் சென்று 300 ரூபாய் சம்பாதிக்கிறார் – அவரது மனைவியும் கூலி வேலைக்குச் சென்று 150 ரூபாய் சம்பாதிக்கிறார்.
வேல்முருகன் சம்பாதித்த காசு அனைத்தையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசாங்கத்துக்கு மொய்யாக வைத்து விடுவதை பல வருட வாடிக்கையாக வைத்திருப்பவர். மனைவி மற்றும் மகளின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்கிறது. வீட்டுக்கு சல்லிக் காசு கூட தராமல் போதையிலேயே சதா காலமும் மிதப்பவர் என்பதால் அவருக்கு ஊரிலும் குடும்பத்திலும் எந்த மரியாதையும் இல்லை. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றும் அவர் போதையில் தான் இருந்துள்ளார்.
டாஸ்மாக்கில் குடித்து விட்டு போதையில் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தனது ஒரே ஊர்க்காரர்களை போலீசு அரட்டி மிரட்டுவதைக் கண்டதும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
”அந்த போதையோடயே யோசிச்சி பார்த்தேன் சார்.. இந்த கருமம் பிடிச்ச குடியால வீட்லயும் மரியாதை இல்ல… ஊர்லயும் மரியாதை இல்ல.. அட, இந்தக் கடை இருக்கிறதால தானே குடிச்சி நாசமா போனோம்னு தோணிச்சி.. நேரா போயி போலீசுகாரன் கிட்ட ஒழுங்க கடைய எடுங்கன்னு கத்துனேன். நம்பளையும் தூக்கி வேனுக்குள்ள ஒக்கார வச்சிட்டாங்க. சரி உள்ற போயிட்டு வருவோமேன்னு நானும் ஒக்காந்துட்டேன்”
”சரி உள்ளே போயி போதை தெளிஞ்ச பின்னாடி எப்படி இருந்திச்சி?”
”கையெல்லாம் ஒரே நடுக்கம்… நமக்கு போதை போடலைன்னா ஸ்டெடியாவே இருக்க முடியாதே… தம்ளர்ல தண்ணி ஊத்தி குடிக்க கூட முடியலை… ரொம்ப நாளுக்கப்புறம் குடிக்காம இருந்ததாலே வயித்து வலி வந்திடுச்சி…”
“எப்படி சமாளிச்சீங்க?”
“நான் எங்க சமாளிச்சேன்… கூட இருந்தவங்க தான் வேற வழி இல்ல முருகா…. எப்படியாவது சமாளிச்சிக்கோ அப்படின்னு சொன்னாங்க… முதல்ல சாப்பாடே எறங்கல… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சேன்.. இவங்க டாஸ்மாக் போராட்டம் பத்தி தினமும் பேசுவாங்க.. அதையெல்லாம் இனிமே குடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்… தோ, உள்ள போயி இன்னி வரைக்கும் குடிக்கவே இல்ல சார். இப்பத்தான் பொண்டாட்டி மதிக்கிறா… குடிகார நாயின்னு கேவலமா பாத்த ஊர்க்காரனெல்லாம் இப்பத் தான் சார் மதிச்சி பேசறான்”
மூடப்பட்ட மேலப்பாளையூர் டாஸ்மாக் கடை
”ஜெயில், போலீசெல்லாம் பயமா இல்லையா?”
“இன்னாத்துக்கு பயம் சார்? எனக்கு இப்ப வெளிய தான் பயமா இருக்கு. பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”
“சரி… திரும்ப டாஸ்மாக் திறந்தா குடிப்பீங்களா?”
“சார்.. பக்கத்துல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி வச்சிட்டு சாப்பிடுவியான்னு கேட்டா எப்டி சார்? ஆனா நான் திரும்ப டாஸ்மாக் திறக்க விட மாட்டேன் சார்.”
”அது சரி… ஆனா அரசாங்கம் போலீசை அனுப்பி டாஸ்மாக்கை திறக்க வச்சா என்னா செய்வீங்க?”
“உயிரே போனாலும் விட மாட்டேன் சார்… போய் குறுக்கால படுத்துக்குவேன்.. போலீசு என் கழுத்தை மெறிச்சி சாவடிச்சிட்டு போயி திறக்கட்டும்.”
அக்டோபர் 2015-ல் வினவு சார்பாக அங்கே சென்று எடுக்கப்பட்ட ஆவணப்படம் “அம்மாவின் மரண தேசம்”. அதில் வேல்முருகனின் நேர்காணல் இந்த வீடியோவில் முழுமையாக இடம்பெறுகிறது.
1. தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டம்
மக்கள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து 31-07-2016 அன்று மூடும்வரை முற்றுகைப் போராட்டம் !
01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்று கட்சியினர், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர்.
15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 24-07-2016, 25-07-2016 இரு நாள்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் பிரச்சாரம் நடைபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் மக்கள் அதிகாரம், திருவாரூர்.
2. காண்டிராக்ட் சுரண்டை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! – தெருமுனைக் கூட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பாக தூசி பேருந்து நிறுத்தம் அருகில் காண்டிராக்ட் சுரண்டலை எதிர்த்து 25-07-2016 மாலை 5.30 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம்