‘குடும்பம்’ நாவலை எழுதிய பாஜினைக் கேட்டார்கள்? “நீங்கள் ஏன் எழுத ஆரம்பித்தீர்கள்?” அவர் சொன்னார்: “என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.” 1949 – சீன விடுதலைக்கு முன்பு சீன மக்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் தங்கள் துயரத்துக்கு முடிவு கட்டக் கடுமையாகப் போராடினார்கள்; அதே ஆண்டுகளில் இலக்கியத்தின் வழியாகப் போராட்டத்தில் பங்குகொண்டவர் பாஜின். சீன மக்கள் கடுமையான சுரண்டலின் கீழ் வாழ்ந்ததைக் கண்டு இதயம் எரிந்து இளைஞர்கள் போராடினார்கள். குடும்பம் நாவலின் வழியாக நாம் அதன் எதிரொலிகளைக் கேட்க முடியும்.
குடும்பம் – நாவல்
அந்நாளைய சீனச் சமூகத்தில் குடும்பம் என்று சொன்னால் அங்கு வேலை செய்கின்ற அடிமைகளையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது. ஆணாதிக்கம் – குடும்ப உறுப்பினரில் மூத்தவர் மூலமாகக் கோலோச்சியது. “எங்கள் வீட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள்” என்பது அந்நாளைய அந்தஸ்தின் அளவுகோல். அப்படிப்பட்ட நிலவுடமைக் குடும்பங்களும், ஆரம்ப வடிவிலான முதலாளிகளும் கலந்திருந்த காலம் அந்தக் காலம். கதைக்களித்தின் காலம் 1920-களும், 1930-களும்.
காவோ என்ற முதியவரின் கூட்டுக் குடும்பம். மூன்று மகன்கள், பேரன் பேத்திகள். பெரிய மகனுக்கு மூன்று பையன்கள் ஜூக்சின், ஜூமின், ஜூகு. வீட்டு வேலைகளுக்கு அடிமைகள். பெரிய மகன் இறந்த பிறகு பேரன் ஜூக்சினின் தலையில் வீட்டு நிர்வாகம் விழுகிறது. தன் அத்தை மகள் ’மீ’யைக் காதலிக்கிறான்; ஆனால் சர்வாதிகாரி காவோ அவனுக்கு வேறு இடத்தில் ருஜூ என்ற பெண்ணைப் பார்த்துவைக்கிறார்; அவனுக்கென்று ஒரு கம்பெனி வேலையும் ஒதுக்கித் தருகிறார். ’மீ’யும் தானும் கருத்தொருமித்துக் காதலித்ததும், திருமணம் கூடாததும் ஜூக்சினை வாழ்நாள் பூராவும் வாட்டுகின்றது.
ஜூக்சின் தன் உணர்வுகள் வடிவம் பெறுவதற்காகக் குடும்பச் சர்வாதிகாரத்தை எதிர்க்கத் துணியாதவன்; அவனுக்கு அடுத்தவன் ஜூமீன், உறவினர் வீட்டுப் பெண் குயினை நேசிக்கிறான்; இளையவன் ஜூகு வோடு சேர்ந்து மாணவருக்கான போராட்டப் பத்திரிக்கை நடத்துகிறான்; காதலுக்காகக் குடும்பத்தில் போராட வலுவில்லாமல் நிற்கும்போது, ஜூகு துணை நின்று திருமணம் நிறைவேற வழி செய்கிறான். அர சியல் ஆர்ப்பாட்டங்களில் ஜூகு, ஜூமீன் பங்கு கொள்வதை தாத்தா கண்டிக்கிறார். ஜூகுவை வீட்டுச் சிறை வைக்கும்படி உத்தரவிடுகிறார்.
ஜூகு வித்தியாசமானவன். வேலைக்காரர்கள் தங்குமிடத்தில் வைக்கோலின்
மீது படுத்துக் கதை கேட்டு அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறான். தாத்தா, சித்தி மற்றும் சித்தப்பாக்களின் உத்தரவுகளை அவன் ஒதுக்குகிறான்; அடிமைகள் சுமக்கும் பல்லக்கில் ஏற மறுக்கிறான். மிங் பெங் என்ற அடிமைப் பெண்ணைக் காதலிக்கிறான் – அவள் அவனுக்குப் பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கிறாள், ஆனால் அவளும் அவனை விரும்புகிறாள்.
கிழட்டு நண்பர் ஒருவருக்கு மிங் பெங்கை வைப்பாட்டியாக அனுப்ப ஏற்பாடு செய்கிறார் காவோ, மிங்பெங். ஜூகுவிடம் முறையிட வந்தும் பேசமுடி யாமல் போய் விடுகிறாள். ஏரியில் குதித்து ஒரேயடியாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஜூக்சின் மூலமாக மிங் பெங்குக்கு நேரவிருந்த கொடுமையை அறிந்து ஜூகு அவளைத் தேடுகிறான். அதற்குள் காவோ ரகசியமாக அவளை அடக்கமும் செய்து விடுகிறார்.
குடும்பம் நாவலின் அட்டை படம்
காதல் ஜூகுவைத் தகிக்கிறது. அதற்காக அவன் புலம்பிக் கொண்டிராமல் குடும்பத்தை விட்டு வெளியே போகிறான். வெளியிலிருந்து கொண்டே வீட்டுக்கு வந்து போகும் ஜூகு குடும்ப உறுப்பினர்களில் வேலையாட்கள், ஜூமின் – குயின் ஜோடி, ஜூக்சினின் மனைவி ருஜூ, குழந்தைகள் எல்லோருடனும் பல விதமான நட்புகளை வளர்க்கிறான்.
ஜூகு மெள்ள மெள்ள சமூகப் போராட்டங்களில் இறங்குகிறான்; நாளேட்டில் எழுதுகிறான் போராட்டங்களுக்கு உதவுகிறான். அன்றைய காலகட்டத்தில் யுத்தப் பிரபுக்கள் தெருச் சண்டை போடுகிறார்கள் – இதை எதிர்த்த சன்யாட் சென்னின் ஜனநாயக இயக்கம் சூடுபிடிக்கிறது.
பிரிட்டிஷ் – மற்றும் பிற ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் அரசியல் குறுக்கீடுகள், இவற்றுக்குச் சற்றும் சம்பந்தமில்லாதது போல நிலப்பிரபுத்துவச் சடங்கு சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள், குரூரமான அடக்குமுறைகள், பாலியல் வக்கிரங்கள், பெண் அடிமைத்தனம், அடிமை உLமையின் மிச்ச சொச்சங்கள் ஒருபுறமும், இந்தச் சீரழிவை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களின் எழுச்சி, அவற்றின் மீது அடக்குமுறை ஆகியவை எதிர்ப்புறமுமாக மோதிக் கொண்ட முப்பதுகளின் கொந்தளிப்பான சூழலின் அறிமுகத்தோடு முடிகிறது நாவல்.
குடும்பம்(family) திரைப்படத்தின் காட்சி
நாளை என்ற ஒன்று இல்லாத, நேற்று என்ற ஒன்று மட்டுமே உள்ள மீ ஜூக்சினின் கண் எதிரேயே இறந்து போகிறாள்; அவனது சித்தப்பா வேசியுடன் சுற்றுகிறார். போதைக்கு அடிமையாகிறார். தாத்தா, குடும்பம் அழிவதைக் கண்டு வெருண்டு போகிறார். அந்தத் தாத்தா அடிமைகளைப் பெண்டாளுமை செய்து வந்தவர்தான்; வேசியோடு இருப்பவர் தான்; குடும்ப விழாக்களில் பெரிசிலிருந்து சிறிசுவரை தண்ணி அடிக்க வைத்து தானும் தண்ணி அடிப்பவர்தான்; அதே விழாக்களில் நண்பர்கள் ஆட்டக்காரிகளோடு சரசமாடுவதைக் கண்டு சிரித்துக் களித்தவர்தான்.
ஒருதார மணமும் – வேசித்தனமும் ஒரே கோட்டில் இணைந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, தன் மகனை மட்டும் ஒழுக்க சீலனாக்க விரும்பும் கோமாளித் தாத்தாவுக்கு இதயம் முறிந்துபோகிறது.
சாகும் தறுவாயில் தாத்தா ஜூகுவை அழைத்து நல்லாசி கூறித் தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். ஜூமீனுக்கும் அவன் காதலுக்கு எதிராக வேறொரு அயோக்கியனின் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்திருந்ததை ரத்து செய்வதாகச் சொல்லி ஆசி கூறுகிறார். சுமார் 300 பக்கங்களுக்கு நீண்டு செல்லும் நாவல் எல்லாப் பாத்திரங்களையும் யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. பின்னாளில் குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜூகு கூட குடும்பத்தில் கூட்டணி வைத்துக் கொண்டு, எல்லோருடனும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு சம்பந்தப்படும் போதெல்லாம் அலைபாய்வதும், தன்னையே விமரிசித்துக் கொண்டு நங்கூரம் போட்டு நிலை நிற்பதும், ஒரே திசையில் தன்னை அமைத்துக் கொண்டு முன்னேறுவதும் யதார்த்தமானவை.
டிராகன் நடனம்
இந்தியா என்றால் மேலை நாட்டவருக்கு பாம்பாட்டிகள், பிச்சைக்காரர்கள், சாமிகள், சடங்குகள், சாமியார்கள்; சீனா என்றால் – இரும்புச் செருப்பைக் காலில் இட்டு வளர்ந்த பெண்கள், சடங்குகள், பாம்பைத் தின்பவர்கள். ஆனால் சீனாவின், சீனப் பணக்காரக் குடும்பங்களின் உள்ளும் புறமுமான வாழ்க்கை இப்படி ஒரிரு சொற்களில் அடங்கி விடக் கூடியதல்ல.
புத்தாண்டின் ஒன்பதாவது நாள் வீட்டு (’கோட்டை’) வளாகத்திற்குள் நடக்கும் பறக்கும் பாம்பு எரிக்கப்படும் நிகழ்ச்சியையும், காவோ இறந்து சடங்குகள் நடந்த நாட்களில் கருத்தரித்த ஜூக்சினின் மனைவி ருஜூ ஊரின் மூலைக்குத் தனியே விரட்டப்படும் வக்கிரமும், அங்கே அவள் உடலும் மனமும் நொந்து, குழந்தையைப் பெற்றுக் கொடுத்துக் கேட்பாரில்லாமல் செத்துப்போகும் கோரத்தையும் படித்தால் அச்சமூகத்தை ‘அழிந்து போ” என்றுதான் சபிக்கத் தோன்றும். ஐந்து அத்தியாயங்களை இதற்காகவே ஒதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
ஒன்பது துண்டுகளாக மூங்கில் கட்டமைப்பு, அதன்மேல் வண்ணத்தாள் ஒட்டி வடிவமைத்த பாம்புக் கூட்டுக்குள் புகுந்து நடனக்காரர்கள் ஆடுவார்கள். பேரிகை, மத்தளம் முழங்கத் தொடங்கியதும் உண்மையான பாம்பு போலவே நீண்டும். படுத்தும், சுருண்டும், புரண்டும் நெளிந்தும் நடனமாடத் தொடங்கிவிடும். அந்த மனிதப் பாம்பு வெடிச் சத்தம் எழ எழ பாம்பு கொடுரமாக ஆடும். வெடிபொருள், இரும்பு, பித்தளைக் குண்டுகள் நிரம்பிய மூங்கில் குழாய்கள் பற்ற வைக்கப்பட்டு தீப்பொறிகளைப் பாம்பின் மீது வீசுவார்கள். பறக்கும் பாம்பு பைத்தியம் பிடித்து ஆடும். வேடிக்கை பார்க்கும் மக்கள் ஆரவாரிப்பார்கள். தீப்பிழம்புகள் வீசப்பட, வீசப்பட பாம்பு எரிகிறது; நடனக்காரர்கள் அலறுகிறார்கள் தலை முதல் கால் வரை வெந்து வடிந்து அரைப் பிணமாய் அக்கலைஞர்கள் வெளியேறுகிறார்கள்….
பா ஜின்
பணம் கொடுத்து ஒரு மனிதனை எரித்துக் கொல்லலாமா? பணக்காரக் குடும்பத்தின் வக்கிரத்துக்காக இப்படி ஒரு கலையா?- ஜூகு அண்ணன் ஜூமினைக் கேள்விகளால் துளைத்தான்; நடனமாடும் ஏழைக் கலைஞர்கள் மேல் இரக்கம் தோன்றவில்லையா என்று கேட்கிறான்.
காவோ இறந்த பிறகு, ருஜூவின் மரணத்தால் கோபமும் துயரமும் ஒன்றாய் அடைந்த ஜூகு அந்நகரத்தை விட்டு பீஜிங் சென்று போராட்டத்தில் இணைய முடிவெடுக்கிறான். ஜூக்சின் தம்பியைத் தடுக்கிறான்; ஜூமின் தன் காதலி குயினோடு ஒதுங்கி விடுகிறான். புது வாழ்க்கை, புதிய நடவடிக்கை, புதிய நண்பர்களை நோக்கி ஜூகு செல்கிறான். ஒரு பழைய சமூகத்தை வெறுப்பது புதிய ஒன்றைப் படைப்பதற்காக என்று குறிப்பாக உணர்த்திவிட்டு முடிக்கிறார் பாஜின்.
இந்த நாவலில் இளைஞர்கள் பத்திரிக்கை நடத்துவது, தங்கள் முரண்பாடுகளை வெட்ட வெளிச்சமாகச் சுயவிமரிசனம் செய்து பேசுவது போன்ற இடங்களும், நாவலின் சமூக விமரிசனமும் முக்கியமான பகுதிகள்.
‘குடும்பம்’ நாவல் நிலப்பிரபுத்துவக்கூட்டுக் குடும்பம் ஏன் அழிக்கப்பட வேண்டுமென்ற நியாயத்தை உள்ளிருந்து தருகின்ற கதைப்பாத்திரங்களை முக்கியமாக வைத்திருக்கிறது. சாதி எதிர்ப்புக்கான காரணங்களை தலித் ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான அடிப்படைகளை மேல்சாதி கதாபாத்திரங்களின் வாழ்க்கை ஊடாக, அங்கிருந்து தோன்றும் ஜனநாயக மாந்தர்களின் அனுபவத்தின் ஊடாக சித்தரிப்பதற்கு இந்நாவல் ஒரு துண்டுதலை நிச்சயம் கொடுக்கும்.
– இராசவேல். புதிய கலாச்சாரம், நவம்பர் 2000.
நூல்: குடும்பம்
ஆசிரியர் : பாஜின்
தமிழாக்கம்: நாமக்கல் சுப்பிரமணியம்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று, பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பட்டவாரப்பள்ளி ஊராட்சி, மல்லசந்திரம் கிராமத்தில் பொதுப்பாதையை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அவ்வூரில் வசிக்கும் முரளி என்பவர். ஆனால், தான் அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று அடாவடித்தனம் செய்து வந்தார். இந்நிலையில், 26-11-2013-ம் தேதி நிலத்தை அளக்க வந்த நில அளவையாளரை அளக்க விடாமல் தடுத்து அராஜகம் செய்தார். இதனால், நிலத்தை அளப்பதும், ஆக்கிரமிப்பை உறுதி செய்வதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.
ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஓடை நீர் சாலையை நிரப்பிக்கொண்டு செல்கிறது.
இதனை அடுத்து 28-11-2013–ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதனைத் தொடர்ந்து 23-02-2014, 08-07-2014 ஆகிய தேதிகளில் கடிதங்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் 06-03-2015-ம் தேதி மல்லசந்திரம் அருகில் உள்ள ஒட்டப்பள்ளியில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது, தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டதன் பேரில், ஆர்.ஐ., வி.ஏ.ஓ. ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். ஆனால், உண்மையான ஆவணங்களைப் பார்க்காமல், பொதுப்பாதை இல்லை என்று கூறிவிட்டனர்.
ஆனால், சர்வே எண் 61C, 1–B ஆகிய இரு எண்களில் 8 அடி வண்டி பாதை, 100 மீட்டர் நீyத்திற்கு உள்ளது. அதன் அருகில் நீரோடை 100 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. இவற்றை எல்லாம் ஆக்கிரமித்து, சமன் செய்து அராஜகமான முறையில் முரளி முள்வேலியிட்டுள்ளார். மேற்கண்ட அனைத்து ஆதாரங்களும் FMB ஆவணத்திலும் உள்ளன. ஆனால், அந்த அதிகாரிகளோ இவற்றை எல்லாம் பார்க்காமல் முரளியிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டனர்.
மீண்டும் மாவட்ட ஆட்சியர், சாராட்சியர் ஆகியோருக்கு கொடுத்த மனுக்களை முறையாக விசாரணை செய்ய ஏற்றனர். இந்த விசாரணையினைத் தொடர்ந்து கடந்த 28-09-2015 அன்று தாசில்தார் நில ஆக்கிரமிப்பு நடந்துள்ளதை உறுதி செய்தார். மேலும், இதனை ஆக்கிரமித்து முரளி என்பவர் செங்கல் சூளை அமைத்துள்ளதையும் உறுதி செய்தார். மேற்படி நில ஆக்கிரமிப்பாளர் முரளியை இந்திய குற்றவியல்நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 133–ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சாராட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
தாசில்தாரின் பரிந்துரையின் அடிப்படையில் சாராட்சியர் 08-02-2016 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133–ன் படி பொது ஒழுங்கீனத்தை (Public Nuisances) அகற்ற உத்தரவிட்டார். இந்த பொது ஒழுங்கீனத்தை அகற்ற வேண்டிய வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பகலூர் போலீசு ஆகியோர், சாராட்சியரின் உத்தரவை மயிரளவுக்குக்கூட மதிக்காமல், முரளியை அழைத்துப் பேசி இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.
LEAD Technologies Inc. V1.01
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவழி
ஆக மொத்தத்தில், அதிகாரிகளிடம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்தும் பல ஆயிரங்களை செலவழித்தும் மீண்டும் பிரச்சனை ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது. நில ஆக்கிரமிப்பாளன் முரளியோ திமிராக சுற்றித் திரிந்தார். இது ஏதோ ஒரு ஊரில் நடக்கும் பிரச்சனை அல்ல, ஒருசில அதிகாரிகள் செய்யும் தவறுகளும் அல்ல, எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் நில ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. போலீசும் அதிகாரிகளும் சட்டத்தை அமுல்படுத்தாமல் விட்ட நிலையில் இந்த அரசிடம் மனு போடுவது வீண் வேலை என்பதை மக்கள் உணர்ந்தனர். மக்கள் அதிகாரம் மூலம் இப்பிரச்சனைக்கு முறையிட்டனர்.
ஆக்கிரமிப்பை விடுத்து, வேறொரு இடத்தில் முள்வேலியை அதிகாரிகள் அகற்றியிருக்கின்றனர்
இதனால், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மக்களைத் திரட்டி பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டும், மக்களை அணிதிரட்டும் பொருட்டும் சுவரொட்டி பிரசுரங்கள் கொண்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனை ஒட்டி ஜூலை 29, தேதி காலை 11 மணிக்கு அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர், போலீசும் அதிகாரிகளும் முன்னின்று செயல்பட்ட விவசாயி ராமசாமியை அழைத்தது. இனிமேல், “பேசுவதற்கு எதுவும் இல்லை” என்பதை அவர் தெளிவாக அறிவித்த பின்னர், “முரளி சில ஆவணங்களைக் கொடுத்துள்ளார், இவற்றை பரிசீலிக்கிறோம். 28-ம் தேதி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து, “இயன்றால் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொடுங்கள், இல்லையேல் ஒன்றும் பிரச்சனை இல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
RI, VAO அறிவிப்பு
28-ம் தேதிகாலை பாகலூர் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோர் நேரில் வந்தனர். வந்தவர்கள், முரளி கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்ததாகவும், ஆக்கிரமிப்பு அகற்றுவதாகவும் சொல்லி, பொதுவழிப்பாதையை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருக்கும் முள்வேலியை அகற்றிவிட்டு, “ஆக்கிரமிப்பு அகற்றிவிட்டோம்” என்று கூறி சென்றுவிட்டனர். இதனை ஏற்க முடியாது, திட்டமிட்ட படி மறு நாள் காலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என மீண்டும் மக்கள் அதிகாரம் உறுதியாக தெரிவித்தது.
29-ம் தேதி காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், மேற்படி அதிகாரிகள் காலை 8 மணிக்கே வந்தனர். FMB வரைப்படத்தில் உள்ளது போல அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல், அவர்கள் ஏற்கனவே அகற்றியிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருக்கும் முள்வேலியை அகற்றிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், அடுத்தக் கட்டமாக “திட்டமிட்டபடி 11 மணிக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்படும், கைது செய்ய முயற்சித்தால் சாலைமறியல் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் அதிகாரிகள் திரும்பி வந்தனர். FMB வரைப்படத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தந்தனர். இந்தப் பிரச்சனையில் இரண்டு ஊர் வி.ஏ.ஒ.கள், ஆர்.ஐ., எஸ்.ஐ. ஆகியோர், சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்றி தந்துவிட்டதாக எழுதியும் கொடுத்துவிட்டு சென்றனர். அந்த வகையில் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தற்காலிகமாக வெற்றியடைந்தது. போலீசைக் கண்டாலே அஞ்சி நடுங்கும் பின் தங்கிய கிராம மக்களிடம், மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டம் ஒரு புது உத்வேகத்தை ஊட்டியது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை அறிவிக்கும் சுவரொட்டி
மல்லசந்திரம் எனும் கிராமம், ஒசூர் வட்டத்திற்கு கர்நாடகாவின் மாலூரு வட்டத்திற்கு எல்லையில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். மொழியால் அனைவரும் தெலுங்கு பேசுபவர்கள். பல காலங்களாக ரெட்டிகளின் ஆதிக்கத்தில் இருந்த பின் தங்கிய கிராமம். 1992களில் தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பின்னர் பலரும் விவசாயத்தைக் கைவிட்டு, வேறு தொழில்களுக்கு இடம் பெயர்ந்தன. இன்று விவசாயத்தை ஒருசில வயதான விவசாயிகளே தொடர்கின்றனர். மற்ற நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
“ஆ பொத்து நிந்த ஈ பொத்து வரைக்கு மா ஜனாலுக்கி பிரஜாஸ்வாம்யமே ரா லேது. போலீசு சுசே மா ஜனாலு திகுலுபடுத்தாரு. மீரு மாத்திரமே ஈ பொத்து போலீசுனு எதிரிஞ்ஜி போராட்டம் சேஸ்தாரு. மீ போராட்டம் மஞ்சி போராட்டம்” என்று கூறி சந்தோசப்படுகின்றனர் விவசாயிகள்.
ஆம், அந்த விவசாயி சொல்வது உண்மைதான். அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. போலீசு என்றால் குலைநடுக்கம்தான். ஆதிக்கம் செய்பவர்கள் கூட, போலீசைக் கைக்குள் போட்டுக்கொள்ளத்தான் நினைப்பார்கள். இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது, எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.
[நோட்டிஸ்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
மக்களைத் திரட்டுவதும் அதிகார வர்க்கம்-போலீசு மீதான மக்களின் அச்சத்தைக் கலைப்பதும் மக்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கான ஒரு தொடக்கமல்லவா?
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு
தொடர்புக்கு: 80152 69381
"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை”
உத்தம்சிங் நூற்றாண்டு விழா: அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
இறுதியாக, மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.
“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.
உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்
ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!
உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத்த பெயர் அவன் தனக்குத் தானே தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!.
இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் -பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான். இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும் போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே குட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.
அவன் நினைவை, இலட்சியத்தைப்போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம் சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவருகிறது.
“ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம் சிங்” என்கிற திரைப்படம்
இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரெளலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுக்காரன்களையும் குண்டுகள் தீரும்வரை கடும்படி உத்திரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.
“துப்பாக்கி ரவை தீரும் வரை சுடும்படி உத்திரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.
”அரசின் உத்திரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர் தான் இன்று தேசபிதாவாகப் போற்றப்படுகிறார்.
அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழு தின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.
இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன். கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்திரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஒ டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம் சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்தியப் புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.
“துப்பாக்கி ரவை தீரும் வரை சுடும்படி உத்திரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” – ஜெனரல் டயர்
இந்து – இசுலாமிய – சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம் முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக் கொண்டான். ”மதத்தின் பெயரால் என்மக்களிடம் இருந்து என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 இல் பிரிட்டனுக்குப் பேய்ச் சேர்ந்தான்.
உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர், காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு – பரிசு பெற்று, பதவி உயர்வு பெற்று, லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஒ டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம் சிங் அவனது மாளிகையில் பணியாளாகச் சேர்ந்தான். இரகசியமாகப் பலி வாங்கினால் எஜமான் – பணியாள் தகராறாகக் கருதப்படும், அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.
அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஒ. டயரைச் சுட்டு வீழ்த்தினான்.
“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.
சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.
“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை”
பீகார், செளரிசெளராவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப்போனவன் உத்தம்சிங். காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. ”அந்தப் பையன்களைத் துக்கலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, காராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து. “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிபோ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர் மக்கள்.
அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன். தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக் கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். ”அறியாமல் – மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு துக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேசத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங். இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் துக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.
1940 மார்ச் 13ல், கேக்ஸ்டன் வளாகத்தில் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற பிறகு கைது செய்யப்படுகிறார்.
”இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அல்ல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.
உத்தம் சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வது தான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும் பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துபட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.
தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய – காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை – உரையாடல் ஆசிரியர்.
இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.
ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதேசமயம் நாட்டு விடுதலை, சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கபூர்வமான சமுதாய மாற்றத்திற்கும். நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க்கலகம் எனப்படும் முதல் இந்திய சுதத்திரப் போர், செளரி செளரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம் சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால் – தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்தது தான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.
ஆனால் ”கத்தியின்றி, இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் துக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள் தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களைப் பூசை அறைத் தெய்வங்களாக்கி ”தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.
பகத்சிங் – உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். பாசிச மத வெறியர்கள்.
காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி.
வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்துக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.
“இன்னொரு ஜாலியன் வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்து கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப் பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப் போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஓட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரைக் கொன்றனர்.
இந்த ”ஜாலியன் வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக் கமிசன் கண் துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?
சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம் பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டபூர்வமான, அதிகாரபூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை – பயங்கரவாத நிறுவனங்களால் தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு செயல் எல்லாவற்றிலும் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டு ஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்வி முறையின்றி கொல்லப்படுகிறான்.
ராஜகுரு – பகத்சிங் – சுகதேவ்.
“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரெளலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதம் துக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கை களை அடையலாம். ஆகவே, அகிம்சை வழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.
பகத்சிங், உத்தம்சிங் வழியிலே போய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்று தான் காந்தி – நேரு – ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்று ஒரு ரெளலட் சட்டம்தான் இருந்தது. இன்று ”தடா”, ”பொடா”, ”மிசா”, ”மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் ”ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள்திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்வி முறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இன விடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை – புரட்சித் தீயை அனைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.
3. குஜராத் : நாறுகிறது உன் கோமாதா! குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.
4. காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம்! துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல் வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீர் மக்களை இந்திய அரசால் வெல்ல முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
5. காஷ்மீர் : துரோகத்தின் வரலாறு
6. வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் சமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.
7. சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு விஷக் கொடுக்கு முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளுக்கு “ஸ்லீப்பர் செல்கள்” இருப்பது போல, ஆர்.எஸ்.எஸ்-க்கும் இருப்பதை சனாதன் சன்ஸ்தாவின் பயங்கரவாதச் செயல்கள் நிரூபிக்கின்றன.
8. புதிய கல்விக் கொள்கையல்ல, கல்வி மறுப்புக் கொள்கை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.
9. “மூடு டாஸ்மாக்கை” – பட்டினப்பாக்கம் மக்களின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி!
10. நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளா நாம்? கடவுளைப் பற்றிய பிரம்மசூத்திரம் தனக்கு மட்டுமே என்று சொல்லும் பார்ப்பன பூசாரிகளைப் போல, இந்திய சட்டத்திற்கு வியாக்கியானம் செய்யும் ஏகபோகத் தகுதி தமக்கு மட்டுமே உண்டென்று கூறி, சமூகத்தின் மீது ஏறி மிதிக்கிறார்கள், நீதிபதிகள்.
11. அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதை முகாம்கள் அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய இளம் குற்றவாளிகளை, தமது கேடுகெட்ட சித்திரவதைகளின் மூலம் தப்பி ஓடவோ, கிரிமினல் பாதையில் செய்யவோ தூண்டுகிறது, தமிழக அரசு.
12. கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள்! வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
சிறையில் நசீம் இக்மத்(வலது)
ஒட்டோமான் பேரரசுச் சர்வாதிகாரத்தின் கீழ் 1902-இல் துருக்கியில் பிறந்தவர் நசீம். தந்தை அரசு அதிகாரி, தாய் போலிஷ் இனத்தைச் சேர்ந்த ஓவியர். பிரெஞ்சுப் பள்ளியில் படிப்பு; கடற்படைப் பள்ளியில் மேற்படிப்பு; முதல் உலகப் போரின் கடைசிக் கட்டம் அரங்கேறிய போது நசிம் இஸ்தான்புல்லில் இருந்தார். நேசநாட்டுப் படைகள் ஒட்டோமான் பேரரசின் மீத மிச்சங்களைப் பங்குபோடத் தீவிரமாக இறங்கியிருந்தன. ஆக்கிரமிப்புப் படைகள் தலைநகரை நோக்கி நகர்ந்த சமயம் அங்காரா என்ற நகரில் துருக்கி தேசத்தின் மாற்று அரசை அறிவித்தார் ஓர் வீரர். அவர் தான் முஸ்தபா கெமால். மாபெரும் கலிபோலிச் சண்டையின் கதாநாயகன் என்றறியப்பட்ட கெமால் தேசியப் பாதுகாப்புப் படையை வேகமாகக் கட்டி எழுப்பினார். ‘நாடு அழைத்தது நான் சென்றேன்’ என்று நினைத்த வேகத்தில் தனது நண்பரோடு சேர்ந்து கொண்டு பாதுகாப்புப் படையில் சேர்ந்து விட முடிவெடுத்தார் நசீம்.
அந்த நாட்களில் கெமால் படையில் போய்ச் சேருவது எளிதான செயலுமல்ல. ரயில் பாதைகளை ஆக்கிரமிப்புப் படைகள் கைப்பற்றி விட்டதால், ஆறுகள் மூலமாகவும், கொடிய மலைக் கணவாய்கள் வழியாகப் பல நாட்கள் கடுமையாக நடந்தும் அங்காரா போகவேணடும். வழியில் இவர்களைப் போலவே ‘ஸ்பார்டகஸ்’ பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட ஒரு குழுவைச் சந்தித்தார்கள். அவர்கள்தான் நசீமுக்கு மார்க்சையும், லெனினையும் அவர்களின் புரட்சிச் சித்தாந்தங்களையும் அறிமுகம் செய்தார்கள். பலநாள் சோறு இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல் அலைந்து நடந்து போரினால் சிதைக்கப்பட்ட பல கிராமங்களின் வழியாக நசீம் பயணம் சென்றார். அந்த நிலைமையிலும் விவசாயிகள், ஏழைபாழைகள் லட்சியப் பயணிகளுக்குச் சோறு போட்டார்கள்; வழி சொல்லிக் கொடுத்தார்கள்.
மாபெரும் கலிபோலிச் சண்டையின் கதாநாயகன் என்றறியப்பட்ட கெமால் தேசியப் பாதுகாப்புப் படையை வேகமாகக் கட்டி எழுப்பினார்
அங்காராவில் இவர்கள் கெமாலைச் சந்தித்தார்கள். இவரும் நண்பரும் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டதும் ‘லட்சியத்துக்கான கவிதைகளை எழுதுங்கள்’ என்று சொன்னதோடு கெமால் அவர்களைக் கல்விப் பணிக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். அந்த நாட்களில் கல்வித் துறை எதிரிகளைச் சந்திக்கும் மற்றொரு போர்முனையாக இருந்தது. இவர்களுக்கு போலு என்ற சிறுநகரத்தில் ஆசிரியர் வேலை பணிக்கப்பட்டது, போர்முனைக்குச் செல்ல விரும்பிய நசீமுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் குறைவான கல்விப்பணியும், அதுவும் பயனற்றுப் போவதைப் பார்த்ததும் மிக விரைவிலேயே சலிப்புற்றனர்; எல்லைக் கோட்டைக் கடந்து ரசியாவுக்குச் சென்றனர்.
சோவியத்தில் கீழை நாடுகளின் தொழிலாளர்களுக்கான கம்யூனிஸ்டுப் பல்கலைக் கழகத்தில் சிலகாலம் கல்வி கற்ற நசீமும் நண்பர்களும் மாயகோவ்ஸ்கி கவிதை வட்டத்திலும், மாஸ்கோ நாடக மன்றத்திலும் பணி செய்ய ஆரம்பித்தனர். ரசியத் தங்கல் நீண்டகாலம் நீடிக்கவில்லை. துருக்கியில், கெமால் விடுதலைப் போருக்குப் பின் குடியரசை வெற்றிகரமாக நிறுவினார் நசீமும் நாடு திரும்பினார்.
திரும்பியவர். கம்யூனிசப் பத்திரிக்கை ஒன்றை அமைத்து வளர்ப்பதில் தீவிரமாக வேலை செய்தார்; அதே காரணத்தாலேயே கைது செய்யப்பட்டுச் சிறைக்கும் சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் சிறையை உடைத்து வெளியேறியவர்களோடு நசீம் மறுபடி ரசியா பயணமானார். எதிர்காலச் சமுதாயக்கனவு அவரை மறுபடி சோவியத் ரசியாவை நோக்கி இழுத்தது. மீண்டும் நாடகம், மீண்டும் கவிதை, 1928-இல் துருக்கியில் பொது மன்னிப்பு அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் துருக்கி வந்த நசீம் முற்போக்கு முகாமில் 10 ஆண்டுகள் சுறுசுறுப்பாக இயங்கினார்; பிழைதிருத்துபவராக, பத்திரிக்கையாளராக, வசனகர்த்தாவாக, மொழிபெயர்ப்பாளராகப் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதே ஐந்து கவிதை நூல்களை வெளியிட்டார்.
1938-இல் ஐரோப்பா முழுவதும் பாசிசப் பேய் உலுக்கியது; இராணுவத்திற்குள் கலகத்தைத் தூண்டினார் என்று சொல்லி 28 ஆண்டு தண்டனை விதித்து, நசீமைச் சிறையில் தள்ளியது அரசு. அவர் எழுதிய ”ஷேக் பெத்ருதீன்” கவிதைக் காப்பியத்தை இராணுவச் சிப்பாய்கள் சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.
ஷேக் பெத்ருதீன் 14-ஆம் நூற்றாண்டு விவசாயப் போராளி; ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக கிறித்தவர்கள், முசுலீம்கள், யூதர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்துப் படை திரட்டிப் போராடிய மாவீரன். அரசுக்கெதிரான போரைப் பற்றி எளியநடையில் ஒரு நாடோடிக் கதைபோல அக்காப்பியம் எழுதப்பட்டிருந்ததால் சிப்பாய்களிடம் பிரபலமாகி விட்டது.
1950 வாக்கில் உலகெங்கும் நசீமை விடுவிக்கக் கோரும் பேரியக்கம் கிளம்பியது. அமெரிக்காவின் பால்ராப்சன், சிலியின் பாப்லோ நெருடா, சீனாவின் டிங்லிங், ஜெர்மனி ஒவியர் கதே கோல்விட்ஸ் இதில் முக்கியப் பங்காற்றினார்கள். 12 ஆண்டுகள் சிறைக்குள் வதைபட்ட நசீம் விடுவிக்கப்பட்டார்; ஆனால் அவர் சிறையை விட்டு வெளியே வந்த காலகட்டத்தில், துருக்கி, நேட்டோவில் புதிதாக இணைந்த நேரம், நேட்டோவுக்காக கொரியப் போரில் பங்கேற்றது. நசீமைப் பழிதீர்த்துக் கொள்ள நேரம் பார்த்த துருக்கி அரசு கொரியப் போருக்குப் போகச் சொல்லி நசீமை மிரட்டியது. மீண்டும் நசீம் உலகின் ஒரு புரட்சிமையமான சோவியத்துக்குத் தலைமறைவாகச் சென்றார், மனைவி மற்றும் அப்போதுதான் பிறந்திருந்த மகன் இருவரையும் துருக்கியிலேயே விட்டுவிட்டு.
இப்போது மீண்டும் அரசியல் தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார் நசீம். பால் ராப்சனின் குரலில் நசீமின் பாடல்கள் உலகெங்கும் போர்முழக்கம் செய்தன.
காட்வெல், பால்ராப்சன் போல நசீமின் சர்வதேசியம், கம்யூனிசச் சர்வதேசியம் மற்றும் அவரது நினைவுகள் இதைத் தூண்டிவிட வேண்டும்; தூண்டி விடும்.
திரிபுவாதிகளின் கூடாரமாகக் குழம்பி நின்ற துருக்கி கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்தான் நசீம். ஆனால் அவரது கட்சியின் தவறான வழியை விமரிசிக்கத் தவறவில்லை. ரசியா சென்று தங்கிய பிறகு, அங்கிருந்த (ஸ்டாலினுக்குப் பிறகான காலகட்டம்) திரிபுவாதத்தை எள்ளி நகையாடி நாடகம் எழுதினார்; நாடகம் தடை செய்யப்பட்டது.
இனியும் ரசியாவில் இருக்க இயலாது என்ற நிலைமையில்தான் போலந்து நாட்டில் அரசியல் தஞ்சம் பெற முயற்சி செய்தார். அந்த நாட்களில் துருக்கித் தாய்நாடும் இல்லாமல், மனைவி – மக்களை விட்டுப் பிரிந்தும், சோவியத் பிரச்சனைகளால் மனம் துன்புற்றும், அல்லல்பட்ட நசீம் 1963-இல் மாரடைப்பால் சோவியத்தில் மரணமடைந்தார்.
நசீமுக்குச் சென்ற ஆண்டு நூற்றாண்டு; அவர் பிறந்து 100 ஆண்டுகளாகி விட்டன. இன்று அமெரிக்க உலக மேலாதிக்க வெறி – உலகெங்கும் ஆக்கிரமிப்புப் போர்வெறியோடு வேட்டை நாயாக அலைகின்றது. உலகெங்கும் அதற்கெதிரான சர்வதேச உணர்வு கொண்ட தொழிலாளர்கள், அரசியல் போராளிகள் போராடத் தொடங்கிவிட்டார்கள். ஈராக் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஒர் எடுத்துக்காட்டு. இன்றைய கட்டம் சர்வதேசக் கம்யூனிச மையம், அரசுகள் இல்லாத நிலைமை; நசீமை நினைவுகூர்ந்து அந்த லட்சியங்கள் நோக்கிய நம் பணிகளை விரைந்து வேகப்படுத்த வேண்டிய கட்டம்; காட்வெல், பால்ராப்சன் போல நசீமின் சர்வதேசியம், கம்யூனிசச் சர்வதேசியம் மற்றும் அவரது நினைவுகள் இதைத் தூண்டிவிட வேண்டும்; தூண்டி விடும். கீழே அவரது சில கவிதை களையும், கவிதைச் சிந்தனைகளையும் கொடுத்திருக்கிறோம்.
‘என்னைப் பற்றிப் பேசும் கவிதைகளை எழுத விரும்புகிறேன். எதிரே உள்ள ஒற்றை நபர் மற்றும் எதிரே உள்ள பல லட்சம் மக்களிடம் பேசுவது போன்ற கவிதைகளை எழுத விரும்புகிறேன். ஓர் ஆப்பிளைப் பற்றி, உழுது புரட்டப்பட்ட மண்ணைப் பற்றி, இருட்டுச் சிறைக்குள் சித்திரவதைப் படுத்தப்பட்டுத் திரும்பிவரும் மனிதனின் மன இயல்பு பற்றி, நல்லதொரு வாழ்க்கைக்காக மக்கள் போராடுவது பற்றி, காதலின் துன்பங்கள் பற்றி – இவை எல்லாம் பற்றி கவிதை எழுத விரும்புகிறேன். சாவைப் பற்றிய பயம் பற்றியும், சாவைக் கண்டு அஞ்சாமல் நேருக்கு நேர் நிற்பது பற்றியும் கவிதை எழுத விரும்புகிறேன்’ என்று சொன்னார் நசீம்.
– நசீமின் கவிதை இயங்கியல் இதுதான். சிறைக்குள் பனிரெண்டு ஆண்டுகள் கும்மிருட்டில் தனிச்சிறையில் தள்ளப்பட்டு உடல் வதைபட்டு இருந்தபோதிலும், அவரது உள்ளமோ, சீன மஞ்சள் நதி கடந்து செம்படை செம்மாந்து நடப்பதைக் காட்சியாகச் சித்தரித்துக் கவிதை பல எழுதியது. உலக இலக்கிய, நாடக, சினிமா அனுபவத்தில் ஊறி எழுந்ததால் அவரது காப்பியங்கள் புதிய வடிவத்தை எட்டின என்பார்கள். அதில் நாடோடிக் கதை சொல்லி உண்டு; நாவல் உண்டு; சினிமா போல் அசைவுகள் உண்டு – மற்றப்படி அச்சு வடிவம் மட்டும் கவிதை போல் இருக்கும்; கட்டமைப்போ மேலே சொன்ன எல்லா விதங்களையும் கலந்திருக்கும்.
அந்த வடிவத்தை நசீம் ‘மக்களைப் பற்றிய கலைக் களஞ்சியம்’ என்றழைத்தார். அவர்கள் – தளபதிகளல்ல – சுல்தான்கள் – விஞ்ஞானிகள் – கலைஞர்கள் அல்ல, அழகுப் பேரரசிகள் அல்ல; கொலைகாரர்களோ, கோடீசுவரர்களோ அல்ல; அவர்கள் – தொழிலாளிகள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள்; இடம் பெற்ற விசயங்களோ – பட்டறைகள், கிராமங்கள், அண்டை – அசல் ஊர்கள். அந்தப் புது வடிவத்தை ‘மனித நிலங்கள்’ (Human Landscapes) என்று அழைத்தார்; தானும் தன் கலை போலவே கவிஞனல்லாத வேறு ஒரு ஜீவியாக உருமாறிவிட்டதை வேடிக்கையாகச் சொல்வாராம்.
அந்த நாட்களில் அவர் செய்த மற்றொரு பணி: “போரும் – அமைதியும்” டால்ஸ்டாய் நாவலை துருக்கி மொழியில் மொழி பெயர்த்ததே.
அவரது பிரபலமான சொற்கள் இதோ: “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும். கலை பற்றி நான் அறிந்ததில் என்றும் மாறாத கொள்கை இது ஒன்றுதான். கலைபற்றிய பிற அம்சங்கள் (செய்முறைகள்) மாறிவிட்டன; மாறிக் கொண்டேயிருக்கின்றன; தொடர்ந்து மாறும். மாறாத ஒரே கொள்கையை அதன் அற்புத உணர்ச்சிப் பெருக்கோடு, திறமையான, பயனுள்ள, அழகு ஒளிரும் அச்சு அசலான வடிவத்தில் வெளிப்படுத்தவே நான் விரும்புகிறேன்.”
எங்கோ
ஆசியாவிலிருந்து துள்ளி ஓடிவந்து
மத்தியத் தரைக்கடலுக்குள்
எட்டிப் பார்க்கும்
பெண் குதிரைத் தலைபோல
இந்நாடு – எம்முடையது.
மணிக்கட்டில் ரத்தம் கொப்பளிக்க
இறுகிய தாடை, அழுந்திய பற்கள்
புழுதிபடிந்த வெறுங்கால்கள்
கீழே நிலம்
பட்டு விரிப்புப் போல
இந்த நரகம், இந்தச் சொர்க்கம்
எம்முடையது.
அந்நிய நாடுகளைச்
சார்ந்திருக்கும்
வாயிற் கதவுகளை இழுத்து மூடு –
அவை
என்றும் திறவுபடக் கூடாது
ஒரு மனிதனுக்கு இன்னொருத்தன்
அடிமையில்லை, இல்லை,
ஓங்கி எழும் அழைப்பு –
எம்முடையது.
ஒற்றை மரமாய் விண்ணில் சிறகு விரி!
காட்டுமரங்களாய்
ஒற்றுமைத் திரட்சி கொள்!
ஏக்கம் – அந்த ஏக்கம் – எம்முடையது.
அருமை நண்பரே,
என் இதயத்தின் ஒரு பாதி
இங்கேயிருக்கிறது;
மறுபாதி சீனாவில்
மஞ்சள் நதிநோக்கி
அலை அலையாய் நடக்கும்
செம்படையில் இருக்கிறது.
நண்பரே,
ஒவ்வொரு நாளும்
விடியலின் கருக்கில்
என் இதயம் கிரீஸில்
சர்வாதிகாரத் துப்பாக்கிப்
படையின்முன்
சுட்டு வீழ்த்தப்படுகிறது.
என் சக கைதிகள் உறங்கிக்
கிடக்கிறார்கள்;
மருத்துவமனை
வெறிச்சோடியிருக்கிறது;
என் இதயமோ –
ஒவ்வோர் இரவும்
சிதைந்து அழியும்
சாம்லிஜாவில்1 தங்கியிருக்கிறது.
நண்பரே,
உள்ளதைச் சொல்கிறேனே –
கடந்த பத்து ஆண்டுகளாக
எனது ஏழை நாட்டுக்கு
என்னால் கொடுக்க முடிந்த காணிக்கை
ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே –
நண்பரே
சிவந்த ஆப்பிள்
அதை நான்
இதயம் என்றழைக்கிறேன்.
ரத்தக் குழாய்த் தடிப்பு அல்ல;
நிகோடினும்2 காரணம் அல்ல;
சிறைத்தனிமையும் அல்ல;
அது மட்டுமே – அது மட்டுமே
நண்பரே
என் இதய வேதனைக்குக் காரணம்.
சிறைக் கம்பிகளில்
முகம் பதித்து உடல் அழுந்த
இரவை ஊன்றிப் பார்ப்பேன்
நெஞ்செலும்பு – அதிக
அழுத்தம் தாங்கிய போதும்
என் இதயம் துடிதுடிக்கும்
நெடுந்தொலைவு நட்சத்திரங்களைப் போலவே.
குறிப்புகள்: 1 – துருக்கிக் கிராமம் 2 – புகை அதிகம் பிடிப்பதனால் உடலில் சேரக்கூடிய நிகோடின் விஷம்.
Beyond the Walls
அந்தச் சுவர்
அந்தச்
சுவரோடு நிறுத்தி
அவர்கள்
நம் மக்களைச் சுட்டுக் கொன்றார்கள்
அந்தச் சுவர் நெடுகில்
ஒவ்வொரு அடிக்கல்லும்
காவியம் பல சொல்லும்
அந்தச் சுவர்
சுவரருகே கொல்லப்பட்டவரின்
ஆண் குறியை அறுத்துக்
குருதி நிணநீர் பிரித்து
மேகநோய் படர்ந்த
பண முதலைகளின்
வற்றிய எலும்புக் கூட்டுக்குக்
கொடுத்தார்கள்
– அவர்கள்
இளமை தொலையாதிருக்க
விபச்சாரிகளின் சதைகளில்
புரண்டு கிடந்த
பண முதலைகளுக்கோ
கொலைச் செய்திகள்
இசை மழை போல இருந்தன
உலகெங்கும் அவர்கள் திரட்டிய போர்த்தளவாடங்கள்
பலதரம் பலவிதம் பலரகம்
1914 ஐ விட 1939-ல்….
அதைவிடப் பின்னாளில்..
அதிநவீனம் அதிபயங்கரம்.
அவர்களின் ஆறாம் கடற்படை;
அணுக்கதிர் ஆயுதங்கள்
ஏகாதிபத்தியத் தளபதிகள்;
சி.ஐ.ஏ. உளவுப்படை;
இரண்டாம் அகிலம்;
வெடிமருந்தின் வாசம் தங்கிய
வெள்ளைக் கையுறைகளுடன்
அரசுத் தூதர்கள்;
‘மதத்தின்’
ஆழ்மண் உழுது தோண்டி
உரமிட்டு – அதன்
நச்சு மலர் பறித்து
வங்கியின் பணக்கற்றைகளில்
படைப்பை எழுதும்
தத்துவ ஞானிகள்;
ஆய்வுகளில் மூழ்கி மீண்டு
சாக்கதிரின் கண் திறக்கும்
அறிவியல் வித்தகர்கள்
இவர்கள் அத்தனைப் பேரும்தான்
அவர்கள் உலகெங்கும் குவித்த போர்த்தளவாடங்கள்.
அந்தச் சுவரே
பதாகையாய்
நெடிய
நீண்ட
அந்தச் சுவர் ஏகாதிபத்தியச்சுவர்
சிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.
விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”
”தம்பி, அரசாங்கம் என்பது என்ன? மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா? அதிகாரம் தான் இருக்க முடியுமா? இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க? மக்களாகிய நாங்கள் சொல்றோம்…. எனக்கு சாராயம் வேணாம்.. கடைய மூடு. நீ மூடாட்டி நாங்க மூடுவோம். அவ்வளவு தான்”
”சரிங்க.. உங்க கோரிக்கை நியாயமா இருக்கலாம். அதுக்காக முற்றுகை, உடைப்பு அப்படின்னு போகணுமா? அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே?”
“நீங்க இப்ப கேட்கறீங்க பார்த்தீங்களா? இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது? இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி?…. எல்லா வகையிலும் கெஞ்சிப் பார்த்தும் வேலையாகலைன்னு தான் கடைசியா வேற வழியே இல்லாம நாங்களே இறங்கியிருக்கோம்”
”அதுக்காக அதிகாரத்தை நீங்களே கையில் எடுக்கலாமா?”
“ஏன் எடுக்கக் கூடாது? அவங்க கையில இருக்கிற அதிகாரத்த பயன்படுத்தி எடுத்து டாஸ்மாக்கை மூடியிருந்தா நாங்க ஏன் எடுக்கப் போறோம்?”
சிறுதொண்ட நாயனாரின் குரலில் தொனித்த ஆத்திரத்திற்கும் கோபத்திற்கும் பின்னே ஒரு நீண்ட கதை உள்ளது. அதைப் புரிந்து கொள்ள நாம் டாஸ்மாக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் – அந்த விளைவுகளுக்கு ஒரு எடுப்பான வகைமாதிரியாக உள்ள மேலப்பாளையூரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
டாஸ்மாக்கை மூடு! ஊரை விட்டு ஓடு! – என்று 2015, ஆகஸ்டு 4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜு மற்றும் பல வழக்கறிஞர்கள், கிராம நிர்வாகிகள் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். பெண்கள் மட்டும் சம்பவத்தன்று விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.
அதற்கு காரணம் கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வும், நம்பிக்கையும் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த போராட்டம். காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் என யார் வந்தாலும் இந்த கடையை திறக்க விட மாட்டோம் என கிராம மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்போடு கடை இயங்கி வந்தாலும், இந்தப் பகுதியில் மக்களின் உறுதியான போராட்டத்தால் இன்று வரை அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இது நம்முடைய 3 மாத கால பிரச்சாரத்தின் மூலம் மக்கள், இந்த அரசை நம்பி பலனில்லை, நம்முடைய அதிகாரத்தை கையில் எடுத்ததன் வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இங்கே காந்தியவாதியான அய்யா சிறுத்தொண்ட நாயனாரின் நேர்காணல் இடம்பெறுகிறது.
உன்னதமான காலம் வரத்தான் போகிறதென்று
நம்பிக்கைக் கொள்வேன்
இறைஞ்சுவேன்
ஏனென்றால்
நாங்கள் எதையும் காணவில்லை
இன்னும்.
– டிரேஸி சாப்மன்
TRACY CHAPMAN
“Nothing Yet”
Good times and bad
Seen them both
Hope fly out the window
Fortune walk through the door
Learned not to believe
This is as good as it gets
Because we ain’t seen nothing yetHands untied
But the same shuffle once again
Running all the time
Ain’t going nowhere
It’s a new page in the same book
It’s a new game with the same rules
The lights go down
Fade to black on the set
And we ain’t seen nothing yet
Saddled with bonds
Broken and in disrepair
Forty acres to a forty-ounce
Don’t seem fair
The sirens rise and wail
Shadowed by Liberty’s torch
As the boats that brought us over
Are slowly sinking off the shore
And we ain’t seen nothing yet
This life a crime
A blessing and a curse
Chosen and unwanted
Displaced and usurped
I’d run away
But there is nowhere to go
So I’ll stand and fight
And hope and pray
That the best is yet to come
And we ain’t seen nothing yet
அமெரிக்கக் கருப்பினப் பாடகி டிரேஸி சாப்மனின் பாடல்களை அவ்வப்போது வெளியிட்டிருக்கிறோம். அவரது சமீபத்திய பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இந்தப்பாடல்.
சொற்களின் பொருளை முந்திக் கொண்டு நுழைந்து இதயத்தைப் பிசைய வல்லது சாப்மனின் குரல். அமெரிக்கக் கருப்பின மக்களின் ஏமாற்றமும் குமுறலும் அவரது குரலின் மீதே ரேகைகளாய்ப் பதிந்துள்ளன.
எனினும், இந்தப் பாடலின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு அமெரிக்க ஆங்கில வழக்கு, கருப்பின மக்களின் வாழ்க்கை அனுபவம், குறிப்பான வரலாறு ஆகியவை குறித்துத் தெரிந்திருப்பது அவசியமாக இருந்தது.
இணையத்தின் மூலம் அறிமுகமான ஒரு தோழர் – கலிபோர்னியா மாநிலத்தில் தோட்டத் தொழிலாளி – விளக்கம் தந்து உதவினார். விளக்கத்தைச் சொற்களுக்கான அடிக்குறிப்பாகத் தருவதைக் காட்டிலும் கீழ்க்கண்டவடிவத்தில் தருவது வாசகர்களுக்குப் பயனுள்ளதெனக் கருதுகிறோம்.
***
முந்நூறு ஆண்டுகள் உழைத்து முடிந்து அமெரிக்கா எனும் நாட்டை உருவாக்கிய கருப்பினம் தலைமுறை தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கனின் விடுதலைப் பிரகடனத்தில் தொடங்கி கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் வரை பலரது நம்பிக்கையூட்டும் பிரகடனங்களையும், முதலாளித்துவ அறிஞர்கள் -பாதிரிகளின் வாக்குறுதிகளையும் கேட்டுச் சலித்து விட்டனர் கருப்பின மக்கள்.
வெள்ளை நிறவெறியையும் வறுமையையும் அமெரிக்க ஜனநாயகம் ஒழித்துவிடும் என்ற நம்பிக்கையை கருப்பின மக்கள் மீது எவ்வளவுதான் முயன்று திணித்தாலும்… தப்பிப் பறக்கிறது அவர்களது நம்பிக்கை.
அடிமைமுறை ஒழிந்துவிட்டது என்று ஜம்பம் பேசும் வெள்ளை ஆளும் வர்க்கத்தின் மீதும், இதைச் சுதந்திரம் என்று நம்பும் கருப்பின நடுத்தர வர்க்கத்தின் மீதும் சாட்டையாய் இறங்குகிது சாப்மனின் குரல். ”கைகள் கட்டவிழ்ந்தாலும் ஆடுவதென்னவோ கோமாளி ஆட்டம் தான்.”
1960-களில் கருப்பர்களைக் கைதுக்கி விடுவதாக அமெரிக்கா பீற்றிக் கொண்ட காலத்தில், சினிமா மற்றும் பொழுது போக்குத்துறைகளில் அவர்கள் அனுமதிக்கபட்டார்கள். ஆனால் அங்கும் அவர்கள் முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் தான் சித்தரிக்கப்பட்டார்கள். அன்று மேடையில் கருப்பர்கள் ஆடிய “ஷஃப்லிங்” என்றொரு நடனத்தைக் குறிப்பிட்டு, இன்று ஆடிக் கொண்டிருப்பதும் அதே ஆட்டம்தான் என்ற உண்மையை ”விளக்கொளி தணியும் மேடையின்” அயர்ச்சியுடன் வெளியிடுகிறார் சாப்மன்.
”நொறுங்கிப் போன வாழ்க்கை” என்ற சொல்லின் முழுப் பரிமாணத்தையும் உணர வேண்டுமானால் அமெரிக்கக் கருப்பின மக்களின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். ”ஏழு தலை முறைகள்” என்ற அலெக்ஸ் ஹெய்லியின் வரலாற்றுப் புதினம் வாழ்க்கையின் உயிர்த் துடிப்புடன் அந்த வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது.
சுதந்திரதேவி ஏந்தி நிற்கும் தீப்பந்தத்தின் ஒளியில் இந்த அநீதியைக் காண முடியவில்லையா? ’தீச்சுடரின் நிழல்’ கருப்புச் சேரியின் மீது கவியும் போது எப்படிக் காணமுடியும்?
ஆப்பிரிக்கப் பழங்குடிச் சமூகத்தை விலங்குகளைப்போல் வேட்டையாடிக் கொண்டு வந்து; விலங்கினும் கீழாய்த் துன்புறுத்தி அமெரிக்கா என்ற சொர்க்கத்தை உருவாக்கிக்கொண்டார்கள் வெள்ளை முதலாளிகள் உருவாக்கித்தந்த கருப்பின மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் சென்னை மாநகரின் சேரிகளையொத்தவீடுகளில் வாழ்கிறார்கள். ’குற்றப் பரம்பரையாக’ மாற்றப்பட்டுச் சிறைகளில் வாடுகிறார்கள்.
300 ஆண்டுகள் உழைத்த கருப்பின விவசாயிகளுக்கு இரக்க மனம் கொண்ட வெள்ளை முதலாளிகள் சில பேர் 40 ஏக்கர் நிலமும் ஒரு கோவேறு கழுதையும் வழங்கிய ’பெருந்தன்மையை’ நினைவு கூறுகிறார் சாப்மன். முதலாளிகள் வழங்கிய நிலத்தை அமெரிக்க முதலாளித்துவம் விழுங்கி விட்டது.
இன்று எஞ்சியிருப்பது என்ன? நாற்பது அவுன்சு சரக்கு என்றழைக்கப்படும் மலிவான சாராயமும் கருப்பினச் சேரிக்குள் திடீர் திடீரென நுழைந்து ‘குற்றவாளிகளை’ அள்ளிச் செல்லும் போலீசு வண்டியின் ஊளைச் சத்தமும் பெண்களின் ஒலமும் தான்.
சுதந்திரதேவி ஏந்தி நிற்கும் தீப்பந்தத்தின் ஒளியில் இந்த அநீதியைக் காண முடியவில்லையா? ’தீச்சுடரின் நிழல்’ கருப்புச் சேரியின் மீது கவியும் போது எப்படிக் காணமுடியும்?
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.
நினைவில் படர்ந்து அலைக்கழிக்கும் வரலாற்றிலிருந்து, நினைவு திரும்பி சட்டெனத் தன்னையே ஒருமுறை ஏறு இறங்கப் பார்த்துக்கொள்கிறார். வசதியான வாழ்க்கை.
“மேலே மேலே ஏறி
முன்னேறி ஓடிவிடத் துடிக்கிறாயே
அந்த அறையை
மூடிவிட முயல்கிறாயே – முடியாது.
நம் முன்னோர்கள்
பசிதீராத ஆவிகள்.
அறை முழுவதும் அவர்களது எலும்புகள்
அந்த அறையை மூடமுடியாது”
– என்று கருப்பின மேட்டுக் குடியினரைத் தனது பாடலால் குத்திய சாப்மனுக்குத் தனது வாழ்க்கையே முள்ளாய் உறுத்துகிறது. கருப்பின வரலாற்றின் சோகம், மக்களின் அன்றாடத் துயரம் இவற்றின் பின்புலத்தில் தனது வெற்றியை எடைபோடும்போது அந்த முரண்பாடு அவரை நிலைகுலைய வைக்கிறது. நெஞ்சை அறுக்கிறது. வெள்ளை ஆதிக்கத்திற்கெதிரான அவரது விமரிசனம் உணர்ச்சிபூர்வமான சுய விமரிசனமாக மாறுகிறது.
அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை, அந்தக் கணமே போராட்டத்தின் மீதான நம்பிக்கையாக வெடித்து முளை விடுகிறது. சொல்லும் குரலும், பொருளும் உணர்ச்சியும் சாப்மனின் கிதார் ஒலியில் இசைந்து அடங்குகிறது.
“அம்மா என்ற உணர்வை உலகுக்கு உணர்த்திய தாயே” இது ஜெயலலிதாவை தினமும் கும்பிடும் அடிமை அமைச்சர்கள் வாசகம். இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா? அதுபோலத்தான் அன்னையர் தினம் கொண்டாடும் சீமாட்டிகளின் செயல்பாடும் அதை கொண்டாடும் ஊடகத் துறை நிலைப்பாடும்!
இந்த வருடம் (2016) மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக ஊடகங்கள் கொண்டாடிய வேளையில், அன்னையர் தின சிறப்பு செய்தியாக 2015-ம் ஆண்டில் தி இந்து தமிழ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையை பார்க்க நேர்ந்தது.
கொழு கொழு குழந்தையும் மொழு மொழு அம்மாவுமாக மதர் ஹார்லிக்ஸ் விளம்பரம்
தாய்மார்களின் தியாகத்தை போற்றுவதுதான் அன்னையர் தினம்; அப்படிபட்ட புனிதமான இந்தினத்தை வியாபாரமாக்கி விட்டார்கள் என்ற வருத்தத்தோடு கால் பக்க சிறப்புக் கட்டுரையையும் முக்கால் பக்கம் கொழு கொழு குழந்தையும் மொழு மொழு அம்மாவுமாக மதர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தையும் சேர்த்து கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அது கட்டுரையா விளம்பரமா என்று இனம் காண முடியாத வடிவமைப்பு!
மேலும், தாய்மையின் புனித சின்னமாக ஐஸ்வர்யா ராயை சொல்லி இருந்தார்கள். குழந்தை வளர்ப்பில் அவர் காட்டிய அக்கறையும் பொறுப்பும் ஐஸ்வர்யா ராயின் தியாகத்தை எடுத்துக் காட்டுவதாக கூறியிருந்தார்கள். தமிழகத்து தாய்மார்கள் அனைவரும் ஐஸ்வரியா ராய்யின் தாய்மை உணர்வை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த செய்தியின் கரு.
விறகடுப்புல ஊதாங்குழலோடு ஊதி ஊதி மூக்குல சளியோடு ஒழுகி ஒழுகி பச்சைக் குழந்தைக்காக பால் காய்ச்சும் வேலையெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா? கற்ப்பம் தரித்தது முதல் பிள்ளை பேறு நடக்கும் வரை நொடிக்கொருதரம் ஐஸ்வர்யாவுக்கு எத்தனை வேலைக்காரர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? எண்ணிப் பார்த்தால் கற்பனைக்கு எட்டாது நமக்கு. பிள்ளை மேல் ஆசை வரும்போது கொஞ்சுவதும், அந்தக் கொஞ்சலை மற்றவர்கள் அறியவேண்டுமென அலங்காரத்துடன் குழந்தையை கேமரா முன் தூக்கிப் பிடித்து போஸ் கொடுப்பதை தவிர அந்த குழந்தைக்கு என்ன செய்திருப்பார் ஐய்வர்யா?
குழந்தை பசிக்கி அழுதா? தூக்கத்துக்கு அழுதா? உடல் நோவுக்கு அழுதான்னு ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா?
குழந்தை பசிக்கு அழுதா? தூக்கத்துக்கு அழுதா? உடல் நோவுக்கு அழுதான்னு ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா? தூக்கத்தில எழுந்து ஒண்ணுக்கு, கக்கா போன குழந்தைக்கி ஈரத் துணி மாத்தி வேற சட்ட போட கண்ணு முழிக்குமா அந்தம்மா? குஷன் மெத்தையில ஈரம் படாத டயப்பர் கட்டி ஏசி ரூமுல சினுங்குன சத்தத்துக்கு பல வேலைக்காரர்கள் காத்திருக்க இத்தனை ஆள் ஜனத்துக்கு மத்தியில தூங்குற குழந்தைக்கி இந்த அம்மா என்னத்த தியாகம் பண்ணிச்சு? அந்த குழந்தைக்காக கண்ணு முழிச்சு வேலை செய்யுற வேலைக்கார அம்மாதான் தியாக அற்பணிப்பு உள்ளவர். ஆனா அவரையெல்லாம் ஊடகங்கள் பாக்காது! என்ன இருந்தாலும் மேக்கப்போ, கிளிசரினோ இல்லாத முகமாச்சே!
பத்திரிகையில படிச்ச ஒரு செய்தி ஞாபகத்துக்கு வருது. கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன் – அமுதா-ன்னு பாதையோர கூலி தொழிலாளி தம்பதிங்க, அவங்களோட பத்து வயசு ஆண் பிள்ளைய பாதுகாப்பா வளர்க்க தனியார் காப்பகத்துல சேத்துருக்காங்க. அந்த காப்பகத்துல ஏதோ விசப்பூச்சி கடிச்சி அவுங்க பிள்ளைய அரசு மருத்துவமனையில சேத்தும் சிகிச்சை பலனில்லாம இறந்து போயிருச்சாம்.
அரை வயிரு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு வெயில்லையும் மழையிலயும் சென்னையின் சாக்கட நாத்துல உள்ளங்காலையும் விட்டு வைக்காத கொசுக்கடியில யாருக்காக வாழ்க்கையை அற்பணித்தார்கள்?
பாதையோர வாழ்க்கை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வறுமையில கூட பிள்ளைய பாதுகாப்பான எடத்துல காசு கொடுத்து தங்க வச்சு நல்லா படிக்க வைக்க தன் சக்திக்கும் மீறி செலவழித்து, பாசத்தோடு வாழ்ந்தவங்க இன்னைக்கு பிள்ளையை பறி கொடுத்துட்டு நிக்குறாங்க.
அரை வயிரு கால் வயிறு கஞ்சி குடிச்சுட்டு வெயில்லையும் மழையிலயும் சென்னையின் சாக்கட நாத்தத்துல உள்ளங்காலையும் விட்டு வைக்காத கொசுக்கடியில பிள்ளையாவது நல்லா வரட்டுமுன்னு கனவு கண்டாங்க! இனி அவுங்களுக்கு யாரு ஆறுதல் சொல்வாங்க? இல்லாதப்பட்டவனோட பாசத்தையும், கஷ்டத்தையும் புரிஞ்சிக்கிறதுக்கு ஐஸ்வர்யா படத்த போடுறவங்களுக்கு முடியவே முடியாது.
எனக்கு தெரிஞ்சு எங்கூர்ல யசோதான்னு 12-வது படிச்சுட்டு இருந்த பொண்ண கட்டிக் கொடுத்தாங்க. அவளும் கையில பிள்ளையோட இருக்கும் போது மறுவருசமே ஆம்படையான் இன்னொருத்தியோட ஒதுங்கிட்டான். கிட்டத்த அவளும் விதவைதான். இன்னைக்கி வருசம் பத்தாச்சு. அரையேக்கர் நிலம், ஒரு பசுமாடு வச்சுகிட்டு, 5000 ரூவா சம்பளத்துக்கு பக்கத்து டவுனுல கடை வேலைக்கு போறா.
அதே டவுனுல யசோதாவோட பிள்ளை ஆங்கிலக் கல்வி படிக்குது. விடியக் காலையில எழுந்து வீட்டு வேலைய முடிச்சுட்டு, பாலை கறந்து டிப்போல கொடுத்துட்டு சமையல முடிச்சு பிள்ளைய பள்ளிக்கூடம் கெளப்பி தனக்கும் ஒரு டப்பாவுல சோத்த அடைச்சு எடுத்துட்டு பிள்ளைய சைக்கிள்ள உக்கார வச்சு மூச்சு முட்ட மிதிச்சுட்டு போகும். பொழுது சாய வீட்டுக்கு வந்து மாட்டுக்கு பசியாத்தி அந்த புள்ள சமச்சு சாப்பிட்டு பிள்ளைக்கி பாடம் சொல்லி கொடுக்கும் போதே தூங்கி விழுந்துருவா. இந்த அசதியும் களைப்பும் யாருக்காக? ஏமாத்துன ஆம்படையானையும், அவனை தட்டிக் கேக்காத சமூகத்தையும் ஒதுக்கிவெச்சுட்டு தன்னோட பிள்ளைய ஆளாக்குறதுக்கு யசோதா படுற பாட்டுல ஊசி நுனியளவாவது ஐஸ்வர்யா ராய் படுவாங்களா?
அம்பத்தஞ்சு வயசை தாண்டிய ஒரு விதவை தாய், 25 வயசு கால் நடக்கமுடியாத மாற்றுத் திறனாளி மகனை பாதுகாக்க படும் பாட்டை பக்கத்துல இருந்து பாத்துருக்கேன். பார்த்தால் எதிரிக்கும் கண்ணுல ரத்தம் வரும். கையும் காலும் செயலிழந்து உக்காந்த இடதை விட்டு நகர முடியாது. கிராமங்கரதால கழிப்பறையும் கிடையாது. தோட்டத்து கொல்லைக்கி தூக்கிட்டு போயி வெளிக்கு போக வச்சு கால் கழுவி, குளிப்பாட்டி பிறகு வீட்டுக்கு கூட்டி வந்து சாப்பாடும் ஊட்டி விடுவாங்க.
இது போக அவனுக்கு முகச் சவரமும் செய்வாங்க. பாக்குறவங்க, கடவுளே அந்த பையன கொண்டுட்டு போயிருன்னு சொல்லுவாங்க. ஆனா அந்த அம்மா, தன்னோட மகன் இப்படி இருக்கானேன்னு அழுவாங்களே தவிர இவ்வளவு சிரமப்பட்றோமேன்னு அலுத்துக்காம பராமரிச்சு அழகு பாப்பாங்க. எனக்கு அவன விட்டா வேற யாரு இருக்கான்னு சொல்லுவாங்க. தாய்மையின் சின்னம் ஐஸ்வர்யா அம்மா அவங்க புள்ளையோட கக்காவை தொட்டிருப்பாங்களாங்கறதே சந்தேகம்தான்!
எனக்கு அவன விட்டா வேற யாரு இருக்கான்னு சொல்லுவாங்க – மாதிரிப் படம்
பூங்கோதைன்னு ஒரு அம்மா, 50 வயசு ஆகுது. பொண்ணோட காதல் கல்யாணத்த போன மாசம் செஞ்சு முடிச்சாங்க. காதலை அவ்வளவு எளிதில் ஏத்துக்காத ஒரு ஆதிக்க சாதியைச் சேந்தவங்க. இந்த கல்யாணத்த எப்படி ஏத்துகிட்டாங்கன்னு வியப்பா இருந்துச்சு. ஆனா அதுக்கு காரணம் அவங்க வாழ்க்கையில அனுபவிச்ச வேதனையும் வலியும் தான்னு பிறகு தெரிஞ்சுது.
அந்த அம்மாவுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறந்த கொஞ்ச நாள்லையே வேற ஒரு பொண்ணாட தொடர்பு வச்சுகிட்டு தரிகெட்டு போய்ட்டான் புருசங்காரன். குடுமபத்த பாக்காம எல்லா வரவு செலவும் தொடர்பு வெச்சுக்கிட்ட பெண் வீட்டோட வச்சுகிட்டான். மனசு மாற மாட்டானானு காத்துருந்தவங்க ஒரு கட்டத்துல சுயமரியாதையோட முடிவெடுத்தாங்க. இனியும் அவனோட வாழ முடியாதுன்னு சொல்லி சொத்துல பங்கு கேட்டு கோர்ட்டுல கேசு போட்டாங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி புருசனும் செத்துட்டான், கேசும் முடியல. புருசனோட கூடப் பிறந்தவங்க சொத்துல பங்கு குடுக்க விரும்பாம தொந்தரவு கொடுத்தாங்க.
ஆனா விடாம போராடி போன வருச ஆரம்பத்துலதான் (2015) சொத்து இவங்க பக்கம் தீர்ப்பாச்சு. ஆனா 27 வருசமா அவங்க பட்ட அவமானமும் வறுமையும் எப்படியெல்லாம் சித்ரவதை செஞ்சுருக்கும்?ஒரு பொண்ணா நெனச்சு பாத்தா இதயம் நடுங்குது.
பொண்ண படிக்க வச்சு ஆளாக்க களை பறிச்சு, நடவு நட்டு, அறுப்பறுத்து-ன்னு சீசனுக்கு தக்க எல்லா வேலைக்கும் போவாங்க. கறவை எருமை மாடு வச்சு டீக்கடைக்கு பால் கொடுப்பாங்க. இவ்வள கஷ்டப்பட்டு வாழ்ந்த அவங்களுக்கு என்னத்த தந்துச்சு இந்த ஊரும் உறவும்? மனசுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு மகளாவது சந்தோசமா இருக்கட்டுன்னு தைரியமா பச்ச கொடி காட்டிட்டாங்க அந்தம்மா. மகளுக்காக பனாமா தீவுல கருப்பு பணத்தை சேத்து வச்சு பாடுபடும் ஐஸ்வர்யா அம்மாவும், பூங்கோதை அம்மாவும் ஒண்ணா?
மல்லிகாவுக்கு ரெண்டாவது பொண்ணுக்கு மூளை வளர்ச்சி கிடையாது, சரியா பேச வராது, நடக்கவும் முடியாது. 21 வயசாச்சு. எந்த நல்லது கெட்டதுக்கும் விட்டுட்டு போக முடியாது. 14 வயசுல வயசுக்கு வந்துருச்சு. நல்ல நெலமையில உள்ளவங்களுக்கே மாதவிடாய் கஷ்டமா இருக்கும். அந்த பொண்ணுக்கு மாத விலக்கு நாட்கள்ல நரக வேதனையா இருக்கும். கொஞ்சம் கவனம் தப்பினாலும் நாப்கீன ரத்தக் கறையோட கையல எடுத்து வச்சுக்கும். ஒரு நாள் ரெண்டு நாள் கிடையாது, ஏழு வருசமா கண்ணு முழிச்சு கைக் குழந்தையப் போல பாதுகாப்பாங்க மல்லிகா அம்மா. ஐஸ்வர்யாவாக்கு ஆயிரத்தெட்டு விதங்கள்ள உதவி செய்யுறதுக்கு ஆளுங்க, பணம் எல்லாம் இருக்கிறதையும், மல்லிகா அம்மா மாதிரி ஏதுமில்லாத அபலைப் பெண்ணுங்களையும் ஒண்ணா ஒப்பிட்டு பாக்க முடியுமா?
தாய்மையின் அற்பணிப்புக்கு அடையாளம் ஐஸ்வர்யான்னு சொல்லுறவுங்க இந்தப் பெண்களை யாருக்கு அடையாளமுன்னு சொல்வாங்க? இவர்கள் மட்டும் அல்ல நம் கற்பனைக்கும் எட்டாத அவலங்களில் எத்தனையோ தாய்மார்கள் பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள். நன்றி கொண்டாட்டம் குதுகுலம் எல்லாம் இவர்கள் வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதது.
எத்தனையோ தாய்மார்கள் தாய்ப்பால் குடுக்க கூட தெம்பில்லாத நிலையில உடம்பை உருக்கி பாலா குடுப்பத பார்த்திருக்கிறோம். பால் இல்லாத மார்பை சும்மா சப்பவிட்டு ஏக்கத்தை மட்டும் போக்கி பசியை போக்க முடியாத நிலையில் தாய்மார்கள் கண்ணீர் சிந்தி தமது ஏழ்மையை சபிக்கும் போது அன்னையர் தினமும் தந்தையர் தினமெல்லாம் அர்த்தமற்றது.
ஒரு நாளை கூட சும்மா விடமாட்டாங்க போலருக்கு. வருசம் பூராவும் எல்லா உணர்ச்சிகள் உறவுகளுக்கு சிறப்பு தினமுன்னு சொல்லி கேளிக்கை பரிசுன்னு வியாபர உலகமா மாத்திட்டாங்க. இந்த உறவுகளோட எதார்த்தம் என்ன, அதுல வறுமையோட இடம் என்ன, அதை மீறி மக்கள் எப்படி உயர்ந்த பண்போடு வாழ்றாங்கங்கறதெல்லாம் எந்த ஊடகமும் புரிஞ்சிக்கிறது இல்ல.
தாய்மையின் அற்பணிப்புக்கு அடையாளம் ஐஸ்வர்யா என்றால் இவர்கள் யார்?
அம்மா என்ற சொல்லை அர்த்தப்படுத்தும் விதமாக சுருக்கமாக கவிதை போல் எழுதி அனுப்புங்கள், சிறந்ததை வெளியிடுவோம் என்கிறது தி இந்து பத்திரிக்கை. ஆனாப் பாருங்க, இந்து பத்திரிக்கை எதிர்பார்க்கிறதை விட நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஒரு ‘கவிதையை’ சொல்லியிருக்காங்க.
வினவு தளத்துல “உதவும் கரங்கள்” சேவை நிறுவனத்தை பத்தி ஒரு கட்டுரை போட்டிருக்காங்க. அதுல அந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச வித்யாகர் சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருது. உதவும் கரங்கள் இல்லத்துல்ல இருக்கும் எய்ட்ஸ் குழந்தைங்களை ஐஸ்வர்யா ராய் பார்க்கறதுண்ணும், அத வைச்சு எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊட்டுறதுண்ணும் ஒரு திட்டம் போடுறாங்க. ராய் அம்மா உலக அழகி ஆனதுக்கு பிறகு இது மாதிரி இல்லங்களுக்கு விஜயம் செய்யுறதை ஒரு விதியா வெச்சுருக்காங்க, அழகிப் போட்டி நடத்துறவுங்க!
எய்ட்ஸ் குழந்தைங்கள தொட்டு தூக்குறதுக்கு அந்த அம்மாவுக்கு மனசு வரலை. தூக்காம இருந்தாலும் இமேஜுக்கு பிரச்சினை. கடைசியில மருத்துவருங்ககிட்ட கேட்டுகிட்டு தூக்குறதால ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுகிட்டு சென்னை வந்தாங்களாம். இத வித்யாகரே அந்த பேட்டியில சொல்லியிருப்பாரு!
“அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல, எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல, எல்லா மக்களின் வலிகளையும் அன்னை என்பவள் நன்கு அறிவாள்.
ஒரு நாள் நீ மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்.”
விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
சாராயம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நாசகார விளைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை… “அரசாங்கமே ஸ்கெட்ச்சு போட்டு மக்களுக்கு சுலோ பாய்சன் மாதிரி சாராயத்தை ஊத்தி சாவடிக்குது சார். சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்” என்கிறார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான நந்தகுமார். மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் நந்தகுமாரும் ஒருவர்.
“டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசின் நலத் திட்ட உதவிகள் எல்லாம் செய்யப்படுகின்றன என்றும், இதை மூடி விட்டால் ஏழை மக்கள் பயன்பெறும் நலத் திட்ட உதவிகளுக்கு நிதி இல்லாமல் போய் விடும் என்றும் சொல்றாங்களே?”
“என்ன சார் நலத் திட்டம்? இலவசம் குடுக்கிறதைத் தானே சொல்றீங்க? ஒரு குடும்பத்துக்கு தர்ற மிக்ஸி, கிரைண்டர், இலவச சைக்கிள் எல்லாம் கூட்டிப் பார்த்தா ஐயாயிரம் வருமா? இந்த ஐயாயிரமும் அஞ்சு வருசத்துக்கான கணக்கு. இங்க ஒவ்வொருத்தனும் கூலிய வாங்கின கையோட அப்படியே தினமும் முன்னூறு ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு மொய் வைக்கிறான். ஒரு மாசத்துக்கு ஒன்பதாயிரம் கணக்கு வருது… அப்ப வருசத்துக்கு எவ்வளவு, அஞ்சி வருசத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கங்க… அதெல்லாம் சும்மா சார்.. எங்க தாலியறுத்துட்டு இலவசம் தாங்கன்னு யாரு அழுதா?”
”அப்ப அரசாங்கம் இலவசங்கள் ஏதும் தரக் கூடாதுன்னு சொல்றீங்களா?”
“முதல்ல இலவசம்னு சொல்லாதீங்க சார்.. இதெல்லாம் அவன் அப்பன் வீட்டு காசிலேர்ந்தா தர்றான்? எல்லாம் மக்கள் காசு தானே? என் பிள்ளைக்கு நான் உழைச்சி சோறு போடறேன்… நீ எனக்கு பிச்சையும் போட வேண்டாம் – சாராயத்த ஊத்தி தாலி அறுக்கவும் வேணாம்… நாங்களே விளைய வச்ச நெல்ல குடோன்ல போட்டு புளுக்க வச்சிட்டு எங்களுக்கே இலவசம்னு தர்றான்… நாங்க என்ன பிச்சைக்காரங்களா?”
”சரி உங்க போராட்டத்தை அரசாங்கம் எப்படி எதிர் கொள்கிறது?”
“எங்களை பிரிச்சி விட்டு மோத வைக்கலாம்னு பார்க்கறான் போலீசு.. .நாங்க ஜெயில்லேர்ந்து ஜாமீன்ல வெளிய வந்த உடனே அம்பேத்கர் சிலைக்கு மாலை போடப் போனோம். சாதிப் பிரச்சினை வரும்னு சொல்லி தடுக்கறான் போலீசு… அவர் எந்த சாதியா வேணும்னாலும் இருக்கட்டுமே… அவர் ஒரு பெரிய தலைவர்… இந்த நாட்டுக்கே தலைவர்… அப்படின்னா எங்களுக்கும் தானே அவர் தலைவர்? போலீசுகாரன் வேணும்னு மக்கள் மோதிக்கணும்னு இப்படிச் செய்யறான்”
”அடுத்த கட்டமா என்ன செய்யப் போறீங்க?”
”மேலப்பாளையூர்ல டாஸ்மாக் இல்ல. இனிமே திறக்க விடவும் மாட்டோம். சுத்து வட்டாரத்திலயும் திறக்க விடமாட்டோம்… அடுத்து எங்களோட அடிப்படை பிரச்சினைகள் நிறைய தீராம இருக்கு.. அதுக்கெல்லாம் போராடனும். நீங்களே பார்த்திருப்பீங்க.. இங்க சாலை வசதி சரியில்லை.. அப்புறம் பக்கத்துல அம்பிகா சுகர் மில் காரன் விவசாயிகளோட 40 கோடி ரூபாய பாக்கி வைச்சிருக்கான்.. அதை போராடி வாங்கனும்… ஏரிகளை எல்லாம் ஆக்கிரமிச்சு வச்சிருக்கான் ரியல் எஸ்டேட்காரன், அதை மீட்கனும்… நிறைய செய்ய வேண்டி இருக்குங்க”
அக்டோபர் 2015-ல் வினவு சார்பாக அங்கே சென்று எடுக்கப்பட்ட ஆவணப்படம் “அம்மாவின் மரண தேசம்”. அதில் இடம்பெறும் நந்தகுமாரின் நேர்காணல் இந்த வீடியோவில் முழுமையாக இடம்பெறுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டத்தின் ஹஜோ கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அடிகுழாயில் குடிநீர் வருமா என்று போராடுகிறார் ஒரு முதிய பெண்!
இயற்கை தேவைக்கு அதிகமாக மழை அளிக்கிறது. அரசோ குறைந்தபட்ச தேவைக்கு கூட குடிநீர் அளிப்பதில்லை. ஆனாலும் இந்தியாவெங்கும் பெப்சியும், கோக்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும் வற்றாமல் கிடைக்கும்!
இதுதான் இன்றைய இந்தியா!
நன்றி: PTI Photo, Outlook India
————————————————————————-
அஸ்ஸாம் மழை வெள்ளம், ஆதரவுக்கு யாருமில்லை!
அஸ்ஸாம் மழை வெள்ளம், ஆதரவுக்கு யாருமில்லை!
கவுகாத்தியின் கிழக்கே ஓடும் ஒரு நதியின் தீவில் இருக்கும் கிராமம் மஜுலி. மழை வெள்ள நாட்களை எதிர்பார்த்து கட்டப்பட்ட பாரம்பரிய குடிசையில் குடிநீரை தூக்கி செல்கிறாள் ஒரு இளம்பெண்! கீழே அவள் சென்று வந்த வாழைமரப் படகு மிதக்கிறது. வாழ வைக்க அரசு கை கொடுக்கவில்லை!
இதுதான் இன்றைய இந்தியா!
நன்றி: AP Photo/Anupam Nath, Outlook India
————————————————————————-
ராம்தேவின் காலும், பா.ஜ.க-வின் வாலும் !
ராம்தேவின் காலும், பா.ஜ.க-வின் வாலும்!
மக்கள் பணத்தை சுருட்டும் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் அணிகளுக்கிடையே நடந்த கால்பந்தாட்டத்தை சாமியார் பாபா ராம்தேவ் துவக்கி வைத்தாராம்! கனரகத் துறை மற்றும் பொதுத்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சரான பாபுல் சுப்ரியோ, சிட்டுக்குருவி லேகிய சாமியார் பாபா ராம் தேவின் காலில் விழுந்து கிடக்கிறார்!
சிட்டுக்குருவி லேகிய ஐயிட்டங்களை வைத்தே பிரபலமான பாபா ராம்தேவின் வியாபார நலனும், மக்களை முட்டாளாக்கும் சாமியார்களோடு பா.ஜ.க வைத்திருக்கும் அரசியல் நலனும்……….
Made For Each Other!
நன்றி: Photo by Tribhuvan Tiwari/ Outlook
————————————————————————————–
இது மக்களைக் காக்கும் மன்றமா, மாடுகளை காக்கும் மன்றமா ?
இது மக்களைக் காக்கும் மன்றமா, மாடுகளை காக்கும் மன்றமா?
கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi
——————————————————————————-
பிரேசிலை மறைக்கும் ஒலிம்பிக்கின் மூடுதிரை !
பிரேசிலை மறைக்கும் ஒலிம்பிக்கின் மூடுதிரை!
ஊழல், வறுமை, குற்றம், போதை, குண்டு வெடிப்புகள் அனைத்தும் கொடிகட்டிப்பறக்கும் பிரேசிலில் ஒலிம்பிக்கின் உற்சாகம் என்னவாக இருக்கும்?
கேலிச்சித்திரம்: Dom Nelson, Australia நன்றி: Cartoon Movement
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.
“சமைக்கறது ஒரு கலைன்னா பந்தி பரிமார்றது – அதைவிடப் பெரிய கலை” என்ற நண்பரிடம் ”ஆமாம் இது அதைவிடப் பெரிய அரசியல்” என்றவுடன் ஆச்சரியமாகிப் போனார். ”என்னங்க சோறு திங்கறதுல கூடவா அரசியல்” என்று நான் காட்டிய புத்தகத்தை வாங்கிப் போய்ப் படித்துவிட்டு வந்த நண்பர் அதிர்ச்சியுடன் “என்னங்க இது மகா அயோக்கியத்தனமா இருக்கு உக்காந்து சோறு திங்கறதுல கூட இவ்வளவு உள் விளக்கம் பாத்துருக்கானுவ” என்று அசந்து போனார்.
ஆ. சிவசுப்பிரமணியன்
இந்த மகா கேவலத்தைத்தான் பண்பாடு, பழக்க வழக்கம் என்று தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறது தமிழகம் என்பதை வேத காலம் தொடங்கி இன்றைய விஞ்ஞான யுகம் வரை பந்தியில் உட்கார்ந்து யார் யாருடன் சாப்பிடலாம், எந்தச் சாதி, தொழில் புரிவோருடன் சமமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்பதை ஒரு சட்டதிட்டமாகக் கடைப்பிடித்து வரும் தமிழகத்து இந்து மதப் பண்பாட்டுக் கேவலத்தை தொகுப்பான நடைமுறை ஆதாரங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது “சமபந்தி அரசியல்” என்ற சிறிய நூல்.
ஆ. சிவசுப்பிரமணியன் என்பவர் எழுதியிருக்கும் இச்சிறுநூல் தமிழக சமுதாயத்தில் உணவு விசயத்தில் சமைப்பது, அதை பரிமாறுவது, முக்கியமாக உடன் இருந்து உண்பது போன்றவற்றிலெல்லாம் ஆதிக்கச் சாதிகளின் அடக்குமுறை ‘ரச’வாதம் புரிவதையும், பந்தி எனும் வரிசையிலிருந்து உழைக்கும் மக்களை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் சமூகக் கொடுமையை காலவாரியாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
இந்த சமையல் கட்டுப் பெருச்சாளிகளுக்கு எதிராக “சமபந்தி” என்பது ஒரு எதிர்ப்பாக உருவாகி எப்படி இன்றைய அரசியல் நிலைமைகளில் கேலிக்கூத்தாகச் சீரழிந்துள்ளது என்ற வரம்பிற்குள் நின்று விவரங்களை நம் பார்வைக்கு வைப்பதே இந்நூலின் சாரம். தனிக்குவளை, தனிக்கிணறு, தனிச்சுடுகாடு என்று தாழ்த்தப்பட்ட் மக்களை இழிவுபடுத்தும் ஆதிக்க சாதிப் பண்பாட்டுக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுபவர்களைப் பார்த்து நூற்றாண்டுத் திமிருடன், “இப்ப என்னாங் குற?” என்று தனது ’மெனு தர்மங்களை’ எடுத்துக் காட்டுகிறது மனுதர்மம். பந்தியில் விலக்கப்பட வேண்டியவர்கள் என்ற தலைப்பில் மனுதர்மம் பட்டியலிடுகிறது இப்படி (நூல் பக். 4):
“சாதி விட்டுத் தாழ்ந்த குலத்தில் பெண் எடுத்தவன், விதவையை மணந்து பிறந்த பிள்ளை (3:155)”
‘யானை, குதிரை, ஒட்டகம், காளை இவற்றைப் பழக்குவோன், கூலிக்குப் பிணம் தூக்கி (3:166) இப்படி நீள்கிறது பட்டியல்.
”சோறு தின்ன உட்கார்ந்தாலும் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று நமது சோற்றிலும் கை வைக்கும் இந்த ‘இந்து தர்மத்தை’ சோறு தின்னும் யாரும் விட்டு வைக்க முடியுமா?
சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?
வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பதை வரித்துக் கொள்ளத் துடிக்கும் ’சூத்திர கனவான்களை’ச் சோற்றால் அடிக்கிறான் வசிட்டன், இப்படி ”சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும் நிலையில் இறந்து போனவன் (பிராமணன்) மறுபிறப்பில் பன்றியாகப் பிறப்பான் அல்லது சூத்திரக் குடும்பத்தில் பிறப்பான்” (நூல் பக்:4). அப்படியானால் இப்போது தெருவில் திரியும் பன்றிகள் எல்லாம் பார்ப்பனர்களா என்ற சந்தேகத்தை யாரிடம் கேட்டுத் தீர்ப்பது? இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த இழிவு என்று கிறித்துவத்துக்கு மாறினாலும், அரிசியிலிருந்து அப்பத்திற்கு மாறினாலும் ஆதிக்கச்சாதியின் நற்கருணை கிடைக்காது என்பதற்கு ஒரு சம்பவம்:
“திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் உபதேசி ஒருவரும், வெள்ளாள உபதேசி ஒருவரும் ஒன்றாக மறைப் பணியாற்றச் சென்றனர். வெள்ளாள உபதேசியாரின் வீட்டிற்கு இருவரும் சென்றவுடன் நாடார் உபதேசிக்கு மாட்டுத் தொழுவத்தில் உணவு பரிமாறப்பட்டது.” (நூல் பக்17)
”சென்னை வேப்பேரி பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஆதிதிராவிட கிறித்தவர்க ளுக்கும், உயர்சாதிக் கிறித்தவர்களுக்கும் தனித்தனி நாட்களில் ’திவ்ய நற்கருணை’ வழங்கப்பட்டது” (நூல் பக். 16). சாதியப் படிநிலை பாரபட்சம் விசயத்தில் இந்துத்துவ மடப்பள்ளிகளோடு கிறித்துவ திருப்பலிகளும் “ஒன்றே தீண்டாமை வேறே மதம்” என்று ஒன்று கலந்த வரலாறு மதம் மாறுவதால் பிரச்சினை தீராது என்பதை ஆதாரங்களுடன் சொல்கிறது.
இதற்கு மாறாக, கேரளத்தில் நாராயண குரு, தமிழ் நாட்டில் இராமலிங்க அடிகள் போன்றோர் சமபந்தியை வலியுறுத்தி நடத்திக் காட்டியதையும், சமயங்கள் என்ற முறையில் சீக்கியமும், இசுலாமும் மத விழாக்களில் இதை அமுல்படுத்தியதையும் ஆசிரியர் அறியத் தருகிறார்.
விடுதலை இயக்க காலகட்டத்தில் காந்தி தீண்டப்படாத மக்களை உள் இழுக்க ‘ஹரிஜன சேவை’ ’சமபந்தி போஜனம்’ என்று வாய்ச்சவடால் அடித்தாலும் இதனால் காங்கிரசின் ஆதிக்க சாதியவாதிகளின் கடும் கண்டனம் எழவே, காந்தியின் சுயநலம் வெளிப்பட்டது. “ஒருவர் மற்றவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பதை நான் ஒரு பாவமாகக் கருதவில்லை, அதுபோல சமபந்தி போஜனத்தை ஆதரிப்பதையும் பாவமாகக் கருதவில்லை” (நூல் பக் 21) என்று தடியைத் திருப்பிப் போட்டார்.
சமபந்தி அரசியல்
காங்கிரசுடன் இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வந்த ஈ.வே.ரா. பெரியார் தலைமையில் திரண்ட சுயமரியாதை இயக்கத்தார் சமபந்தி போராட்டங்களில் அக்கறை காட்டியதையும், குறிப்பாக அன்றைய பொதுவுடமைக் கட்சி தஞ்சை மாவட்டத்தில் திட்ட மிட்ட ரீதியில் கூலி உயர்வுப் போராட்டத்துடன் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராக சமபந்தி உள்ளிட்ட பலவகைப் போராட்டத்துடன் கட்சி உறுப்பினர்கள் உணவு உண்ணும் விசயத்தில் தீண்டாமைக்கெதிராகத் தமது வாழ்க்கையிலேயே மேற்கொண்ட நடைமுறைகளையும் சுருக்கமாக அறியத் தருகிறது நூல்.
தென் மாவட்டச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான கலவரத்திற்குப் பிறகு கருணாநிதி அரசு சமத்துவபுரம் கட்டுவது போல அன்று மீனாட்சிபுரம் கலவரத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். சமபந்தி போஜனம் என்பதைச் சடங்குத்தனமாக நடத்தியதையும், அதையும் கூட அஹோபில மடாதிபதி பூரீமத் அழகியசிங்கர் ”கோயில்களில் சமபந்தி போஜனம் சரியல்ல, இதனால் கோயில் களங்கப்படுத்தப்படுகிறது” (நூல்: பக் 28) என்று விமரிசித்த செய்தியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அன்றைய காஞ்சி மட ஜகத்குரு ”பேசாமல் அனைவரும் ஸ்வயம்பாகம் (தானாக சமைத்துச் சாப்பிடுவது) மேற்கொள்வது சரி” என்று பல்லிளித்தபடியே தனது பார்ப்பனச் சாதி வெறியைக் கக்கியதையும் இந்நூல் நம் நெஞ்சில் நெருப்பாய் விதைக்கிறது.
அரசு சமபந்தி போஜன சடங்கு நடத்தினாலும், அருள் உள்ளம் கொண்டோர் மேற்கொண்டாலும் ஆதிக்கச் சாதிகளின் ஆணிவேரான பொருளாதார, அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுக்காமல் நிலைமை மாறாது என்பதேயே வரலாற்று விவரங்கள் உணர்த்துகின்றன. “ஒரே பண்பாடு ஒரே நாடு” என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.
– துரை. சண்முகம்
புதிய கலச்சாரம், செப்டம்பர் 2000
நூல் விலை: ரூ. 5.00
வெளியிட்டோர்: இளைஞர் வெளியீடு, தூத்துக்குடி – 8
நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியாசாகிபு தெரு,
எல்லிசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி : 044 – 28412367
இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
வலது, இடது வரலாறு: மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.
இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும்.
சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.
”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.
ஆனால், கட்சி மாறிய சீனிவாசன், தனது செயலுக்குச் சித்தாந்தபூர்வமான நியாயம் சொல்லுகிறார். ”மார்க்சியத்தின் மறுவடிவம் பா.ஜ.க.”
”அது எப்படி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகிறாரே” என்று நீங்கள் வியக்கலாம்.
”முடியும்” என்று சாதிக்கிறார். ”சிகப்பு வெளுத்தால் காவி” என்று கூடச் சொல்லவில்லை. “காவியும் ஒரு சிகப்பு வண்ணம்தான் – சாயல்தான் வேறு” என்று ”நிகழ்” காலத்துக்கு ஏற்ற ‘நிறப்பிரிகை”த் தத்துவம் பேசுகிறார்.
”இந்திய மண்ணில், இந்தியக் கலாச்சார மரபில், இந்தியத் தத்துவஞானத்தில் வேர்விட்டு, மார்க்சியத்தின் சிந்தனை வழியில் நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியின் அமைப்பு விதியிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. வேதங்களையோ, உபநிஷத்துக்களையோ, இதிகாசங்களையோ, புராணங்களையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ பற்றிக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எப்படிச் சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார், சீனிவாசன்.
மேலும், ”மார்க்சியம் என்பது விஞ்ஞானம். இதை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்த இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டார்கள். காங்கிரசு, திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன. மார்க்சிய சிந்தனைகளை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடிய கட்சி பா.ஜ.க. என்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன்.”
1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.
“ஒரு கம்யூனிசத் துரோகி கண்டதையும் பேசுவான். அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கொள்ளத் தேவையில்லை” என்று வெகு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும். இது ரொம்ப எளிமையான கணக்கு! பாரதீய ஜனதாவோ இந்து வெறி பாசிச – பார்ப்பன சனாதனக் கட்சி, அதில் போய் சேருகிறவன் வேறு எப்படி இருப்பான், எதிரியின் அணியில் சேருபவன் வேறென்ன பேசுவான் என்பதுதான் அந்தக் கணக்கு.
சீனிவாசன் எதிரி முகாமுக்குப் போய் விட்டதாலேயே அவர் சொன்ன கருத்துப் பற்றிக் கணக்குப் போடுவது பலருக்கு எளிதாகப் போய்விட்டது. பா.ஜ.க.வின் எதிரி முகாமாகிய ”நம்மிடையே” இருக்கும் இவர்களுடைய கருத்துக்களையும் பற்றிக் கணக்குப் போடுவது அதே பலருக்கு சிக்கலாக உள்ளது. பல சமயம் தவறாகவும் போய் விடுகிறது.
பா.ஜ.க.வையும் மார்க்சியத்தையும் இணைப்பதற்கு சீனிவாசன் பயன்படுத்தியிருக்கும் சங்கிலி, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்.” முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியாக அவர் இந்து மத வெறி பாசிச – பார்ப்பன சனாதனத்தை மார்க்சியத்திற்குள் புதைத்து மோசடி செய்ய முயலுகின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவிர, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசுவோர் பட்டியலில் சமீபத்திய அவதாரம்தான் இந்தத் துரோகி என்பது மற்றொரு உண்மை.
“இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இதுவரை மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பது சீனிவாசனின் குற்றச்சாட்டு, ”பா.ஜ.க.தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றும் சரியான கட்சி” என்பது, அவர் எடுத்திருக்கும் முடிவு.
சீனிவாசனின் முடிவில் மாறுபட்டாலும் அவரது குற்றச்சாட்டில் முற்றாக உடன்படுபவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளும், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், தலித்தியம், தமிழினம், திராவிடம், சமூகநீதி எனப் பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்கள் வெளியேயும் ஏராளம்.
உள்ளே இருப்பவர்கள் வெளியே போகும்போதெல்லாம், வெளியே இருப்பவர்களின் நிலைப்பாடுகளை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் விமர்சிக்கும் போதெல்லாம், ஏதோ முற்றிலும் புதிதாகச் சொல்லுவதைப் போல முன்வைக்கப்படுவதுதான் ”மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை” என்கிற வாய்ப்பாடு.
இவர்கள் அனைவரும் இரண்டு உண்மைகளை மறந்து விடுகின்றனர்.
முதலாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எண்பது ஆண்டு கால வரலாறு உள்ளதென்றால், இந்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற வாய்ப்பாட்டுக்கும் எண்பது ஆண்டுகால வரலாறு உண்டு.
இரண்டாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இந்த எண்பதாண்டு கால வரலாற்றில், ஒரு சில குறிப்பிட்ட, குறுகிய காலங்கள் தவிர இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தியதே ”மரபு வழி மார்க்சியம்” அல்ல; ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” தான். ஆனாலும், ”இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வகுத்து வழி நடத்தவில்லை. அது வரட்டுத்தனமாக மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றித்தான் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது” என்று விமர்சிக்கப்படுகிறது.
பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்
இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” ”மரபு வழி மார்க்சியம்” என்கிற சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் விளக்கம் தருவதில்லை. அவரவர் நிலையில் நின்று பலவாறாக விளக்கங்களும் விமர்சனங்களும் தருகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய ஆன்மீகம், அகிம்சையை, ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் காந்தியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று சிலர் சொல்லுகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
இவ்விரு பிரிவினரின் கருத்துப்படி இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்களும், அதன்பின் தலைமையேற்றவர்களும் ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியத்தை அப்படியே பின்பற்றினார்கள் என்றாகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர்கள் என்று ”அறியப்படும் அனைவரும்” மரபுவழி மார்க்சியத்தை ஆரம்ப முதலே ஏற்க மறுத்தவர்கள். உலகப் பொதுவுடைமைக் கட்சிகள் எல்லாம் இணைந்திருந்த மூன்றாவது அகிலம், அதன் மூலமாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் வழிகாட்டுதலை நிராகரித்தவர்கள்தான் அவர்கள்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறு, இங்குள்ள தேசிய முதலாளிகள் முற்போக்கானவர்கள். மூன்றாவது அகிலத்தைச் சேர்ந்த போல்ஷவிக் (ரஷ்யப் பொது வுடைமைக் கட்சி) ஏஜெண்டுகளின் மரபுவழி மார்க்சியம் இதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குப் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, விடுதலையையும் சோசலிசத்தையும் சாதிப்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று சொல்லி, அந்த திசையிலே தான் பொதுவுடைமை இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள்.
”தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்று மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் பல பிரிவு வாதாடிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர், சென்னை சிங்காரவேலர். அதுவும் 1923-லேயே, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் – மே நாள் கொண்டாடியவர்; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதுடன் அதில் நிறுவப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிங்காரவேலர்.
இந்தச் சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர். இவர் தனித்தன்மை வாய்ந்த, புரட்சியைச் சாதிக்கவல்ல, இரகசிய – சட்டவிரோத, ஆயுத பாணியாக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் ஒரு போதும் உடன்பாடு கொள்ளவில்லை.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் முன்பகுதி, காந்தியின் தலைமையிலான காங்கிரசுக்குள் பொதுவுடைமை இயக்க அமைப்புக்களை நிறுவி, விடுதலையையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அமைந்தது. அப்போது வன்முறை தவிர்த்த மார்க்சியமே காந்தியம்; புத்தரும் பொதுவுடைமையும், காந்தியமும் ஒன்றே; வழிமுறை மட்டுமே வேறானது. புத்தரின் வாரிசாகவே காந்தியம் அமைந்துள்ளது; புத்தரும் காந்தியும் போதிக்கும் அகிம்சை புரட்சியே சரியானது – இவைதான் சிங்கார வேலரின் ஆரம்பகாலப் பொதுவுடைமைக் கண்ணோட்டம்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி, பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்துக்குள்ளேயே பொதுவுடைமை கட்சியைக் கட்டி விடுதலையையும் சமதருமத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது. இதற்காக சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை சமதருமக் கட்சியை நிறுவினார். இந்தக் காலத்தில் சிங்காரவேலர் கொண்டிருந்த பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் காந்தியம் கைவிடப்பட்டிருந்தது; இருந்தாலும் அகிம்சை முறையில் விடுதலை – பொதுவுடைமையைச் சாதிக்கும் நோக்கம் நீடித்தது. சாதி – மத எதிர்ப்பு போன்ற சுயமரியாதைக் கூறுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
சிங்காரவேலர் காங்கிரசில் இருந்த போது அதற்குள்ளாகவே, பொதுவுடைமை காணும் நோக்கோடு ”இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பை நிறுவினார். பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுமாறு கம்யூனிச அகிலம் கோரியபோது அதற்குப் பதிலாக “இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி” (தொழிலாளர் விவசாயக் கட்சி)யை நிறுவினார். 1925, கான்பூரில் பொதுவுடைமையாளர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று, கட்சிக்கும் தலைவராவதற்கு முன்பு, தொழிலாளர் அரசியல் கட்சியை நிறுவினார். அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைப் போன்று இயங்கும், (ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பிரதமரான) இராம்சே மாக்டனால்டு போன்றோரின் கருத்துக்களை வழிகாட்டும் தத்துவமாக ஏற்கும் என்றார்.
காங்கிரசில் இருந்து கொண்டு அதன் மூலம் பொதுவுடைமை இயக்கத்தையும் கட்டும் சிங்காரவேலரின் முயற்சி, பொதுவுடைமை கொள்கையில் உடன்பாடு கொண்ட தொழிலாளர் தலைவர்கள் என்று திராவிட – தமிழினவாதிகளால் போற்றப்படும் திரு.வி.க., சக்கரை (செட்டியார்) பூரீராமுலு போன்றவர்களாலேயே முறியடிக்கப்பட்டது. அதுவும் கண்ணியமான முறையில் இல்லை. தொழிலாளர் போராட்டத்துக்காக காங்கிரசு கொடுத்த நிதியை சிங்காரவேலர் கையாடல் செய்தார், பதவிக்காக முறைகேடாக முயன்றார், கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார் என்கிற அவதூறு செய்து ஒதுக்கப்பட்டார்.
சிங்காரவேலரால் தலைமையேற்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள், அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களான வி.வி. கிரி, என்.எம். ஜோஷி ஆகியோரின் துரோகத்தால் தோல்வியடைந்தன. இதனால் வெறுப்புற்ற சிங்காரவேலர், அப்போது தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்த பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால், 1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இத்தோடு சிங்காரவேலரின் பொதுவுடைமை இயக்க முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தன.
ஏறக்குறைய 15 ஆண்டுகள் தனது ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” அடிப்படையில் தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவி, வளர்க்க சிங்காரவேலர் முயன்றார். அதே காலகட்டத்தில் மேற்கு இந்தியாவில் டாங்கேயும் அவரது சீடரும், காந்தி ஆசிரமவாசியுமான சத்திய பக்தாவும் அதே முயற்சியை மேற்கொண்டனர்; வட இந்தியாவில் மணிலால் என்பவர் அதே முயற்சியில் இருந்தார். 1922 டிசம்பரில், கயாவில் கூடிய இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டையொட்டி சிங்காரவேலர், டாங்கே, மணிலால் மூவரும் சந்தித்து ஒருங்கிணைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்காளத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்காரோடு நான்கு மையங்களில் இருந்து நான்கு அறிக்கைகளை முன்வைத்து காங்கிரகக்குள்ளாகவே நான்கு ”பொதுவுடைமை” அமைப்புகளைத் தனித்தனியே அமைத்தனர்.
முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பது, சட்டபூர்வ – வெளிப்படையான அமைப்பாக மட்டுமே செயல்படுவது, கம்யூனிச அகிலத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது என்பதே அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பிரதான பெரும்பான்மை நிலையாக இருந்தது. தெற்கே சிங்காரவேலரும் வடக்கே டாங்கேயும் இந்த நிலையின் பிதாமகர்களாக இருந்தனர்.
1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.
வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.
ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.
காங்கிரசு – காந்திய வழியில் தமது ஆசிரம அரசியலைத் தொடங்கிய ஜீவா, 1932-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் பகத்சிங்கின் கட்சித் தோழர்களிடம் போதனை பெற்று கம்யூனிச அரசியலை ஏற்றார். வெளியில் வந்ததும் பெரியார், சிங்காரவேலருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து ஒரு நாத்திக மாநாடும், பிறகு ஒரு ஜமீன்தாரல்லாத மாநாடும் நடத்தினார். பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.
இதனால் வெறுப்புற்ற ஜீவா, ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று கூறி வெளியேறி, சிங்காரவேலரைத் தொடர்ந்து சுயமரியாதை சமதருமக்கட்சிக்குத் தலைமையேற்று பிரச்சாரமும், மாநாடும் நடத்தினார். அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த டாங்கே சிறப்புரையாற்றினார். அவரது ஆலோசனைப்படி சுயமரியாதை – சமதருமக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசு மகாசபையிலும், காங்கிரசு சோசலிசக் கட்சியிலும் இணைந்தனர். 1936-இல் சேலத்தில் மாநாடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசு சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவா ஆனார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார். அவர்கள் உருவாக்கி இருந்த “யங் கம்யூனிஸ்டு லீக்” என்ற இளைஞர் பொதுவுடைமை அமைப்பு ஆங்கிலேயக் காலனி அரசால் தடை செய்யப்பட்ட போது, அவர்களும் காங்கிரசு சோசலிசக் கட்சியில் இணைந்தனர்.
அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.
இக்கட்சியை வலுவாகக்கட்டி, பல தொழிலாளர் அமைப்புக்களை நிறுவி, பொருளாதார போராட்டங்களை நடத்திய போது, இக்கட்சியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரசு முதல் மந்திரி இராஜாஜியும், தொழில் மந்திரி வி.வி. கிரியுமே அவற்றை ஒடுக்கினர். இருந்தாலும் காங்கிரசுக்குள் செயல்பட்டு அதன் அமைப்புப் பதவிகளைப் பிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர் ஜீவா போன்றவர்கள். இராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரோடு போட்டியிட்ட ஜீவா அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுரா காங்கிரசில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் காந்தி-நேரு குழுக்களுக்கிடையே தலைமைக்காக நடந்த மோதலின் போது ஒற்றுமையை உருவாக்கவே டாங்கே, ஜீவா போன்றவர்கள் முயன்றனர். காந்தி கும்பல் அம்மாநாட்டில் தோற்றபோதும், நிர்ப்பந்தம் – மிரட்டல் மூலமாக சுபாஷ் சந்திரபோசை விரட்டி விட்டு தலைமையைக் கைப்பற்றியது. அதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் எனக் கருதப்பட்ட அனைவரையும் காங்கிரசு சோசலிசக் கட்சியிலிருந்து விரட்டும் வேலையை அது மேற்கொண்டது.
இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் ஜோஷி தலைமையில் தனிக் கட்சியாக அமைந்தனர். அதற்கு இங்கே ஜீவா, இராமமூர்த்தி போன்றோர் தலைமையேற்றனர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் காங்கிரசின் நிலைப்பாடு எடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஷி – டாங்கே போன்ற கம்யூனிஸ்டுகள். சோவியத் ஒன்றியத்தை இட்லரின் ஜெர்மனி தாக்கிய போது கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏகாதிபத்தியப்போரை எதிர்த்துப் புரட்சியைத் தொடுப்பதற்குப் பதில், சோசலிச அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆங்கில ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தனர். இதனால் தடை நீக்கப்பட்டு வெளியே வந்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் நாடு முழுவதும் காந்திய காங்கிரசு வழிமுறைகளை நிராகரித்து, உடனடி விடுதலை கோரி, தொழிலாளர்கள், படைவீரர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் சதி இருப்பதாகக் கருதிய காங்கிரசு அமைச்சரவை பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்து அதன் அணிகளை வேட்டையாடியது. ஆனால் அதன் தலைவர்களோ, புரட்சிக்கு அவசியமான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியையும், இரகசியக் கட்சி அமைப்புகளையும் நிறுவுவதற்குப் பதிலாக, காங்கிரசு, திராவிடர் கழகப் பிரமுகர்களின் ஆதரவுடன் வெறுமனே தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1947 அதிகாரமாற்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆயதந் தாங்கிய உழவர் பேரெழுச்சியாக வளர்த்தெடுத்தனர். அதேசமயம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ரணதிவே நாட்டின் நிலைமையை மிகை மதிப்பீடு செய்து ரஷ்யப் புரட்சியை அப்படியே காப்பியடித்து, உடனடியாகவே நாடு தழுவிய முறையில் ஆயுதப் பேரெழுச்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிகாட்டுதலைக் கொடுத்தார். இந்த “அதீதப் புரட்சி” காரணமாக கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்ததோடு, டாங்கே, மோகன் குமாரமங்கலம், அஜாய் கோஷ் போன்ற துரோகிகளின் சரணடைவுக்குப் பிறகு தடைநீங்கி, இ.பொ.க. சட்டபூர்வக் கட்சியானது.
அதன்பிறகு, நாடாளுமன்ற சகதிக்குள் மூழ்கிக் கொண்டே, எந்தப்பாதையில் நகர்வது என்று குழம்பிக்கிடந்த போது, பொதுவுடைமைத் தலைவர்களுக்கு குருச்சேவின் வருகை பேருதவியாக அமைந்தது. அவர்கள் இந்திய – சீனப்போரைக் காரணமாக வைத்து ”கம்யூனிசக் கட்சி”. “மார்க்சிசக் கட்சி’ என்று இரண்டு பிரிவுகளாக இயங்கினாலும் அவர்களிடையே அடிப்படைத் திட்டத்தில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது.
1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.
காங்கிரசு, பிற்போக்குப் பெருமுதலாளிகளின் கட்சி அதனுடன் அணிசேரக் கூடாது என்பது ”மார்ச்சிஸ்ட் கட்சி”யின் நிலையாகவும், காங்கிரசு முற்போக்குத் தேசிய முதலாளிகளின் கட்சி, அதனுடன் அணிசேர்ந்தே ஆகவேண்டும் என்பது ”கம்யூனிசக் கட்சி’யின்” நிலையாகவும் இருந்தது. இந்த இருகட்சிகளுமே காங்கிரசு பற்றிய தத்தமது நிலையை தேர்தல் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதால் இதுவொன்றும் அடிப்படையான வேறுபாடு அல்ல. 1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது. 1977 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, சி.பி.ஐ. காங்கிரசுக்கு எதிராகப்போய் சி.பி.எம்.மின் நிலை எடுத்தது. இப்போது காங்கிரசுக்கு ஆதரவு என்ற சி.பி.ஐ.யின் முன்னாள் நிலையை இரண்டு கட்சிகளுமே எடுத்துள்ளன.
தமிழகத்தில், சிங்காரவேலருக்குப் பிறகு, டாங்கேயின் வழியில் ஜீவா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்றவர்கள் ஒரு பிரிவை வழி நடத்தினார்கள். நம்பூதிரிபாடு வழியில் ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், நல்லசிவம், சங்கரய்யா போன்றவர்கள் மற்றொரு பிரிவை வழிநடத்தினார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளுமே, ”மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றின, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை” என்று இந்த இரண்டு ”மார்க்சியங்களை”யும் அறியாதவர்கள்தான் சொல்ல முடியும். இவ்விருபிரிவினருமே மார்க்சிய – லெனினியப் புரட்சிவழியை நிராகரித்து, குருச்சேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ், டென்சியாபிங் வழிமுறைகளைப் பின் பற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.
தேர்தல் அரசியல்வாதிகளாகச் சீரழிந்துபோய்விட்டார்கள் என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள். இதைத்தான் ”இந்திய மரபு. இந்திய ஞான. இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் வேர் விட்டு பொதுவுடமை இயக்கத்தை வளர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ”மார்க்சிஸ்ட்கட்சி – சி.பி.எம்”காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி.ஐ.காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாக்கி, அந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இவை ஒருபுறமிருக்கட்டும். மரபு வழி மார்க்சியமே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தான் போதிக்கிறது. மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சிய – லெனினிய இயக்கம் மட்டும்தான் இந்த வழியிலே முயற்சிக்கிறது. எனவேதான், அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது.
இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.
மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
“சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது” என்பதை அழுத்தமாகத் தனது முன்னுரையிலேயே பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
உலகாயதத் தத்துவங்களுக்கும், பவுத்தத்திற்கும் எதிரான பார்ப்பனியத்தின் ஆயுதமாக பகவத்கீதை உருப்பெற்றதையும், தொடர்ந்தும் நிலை பெற்றிருப்பதையும் ஆதாரங்களுடனும், பல்வேறு ஆய்வாளர்களின் மேற்கோள்களுடனும் விவரிக்கிறார்.
அந்த வகையில், இந்திய வரலாற்றில் பார்ப்பனக் கருத்தியலின் பாத்திரத்தையும், அதன் ஆளும் வர்க்கச்சார்பையும் ஒரு கோட்டுச் சித்திரமாக வழங்குகிறது இந்நூல். பொதுவான வாசகர்கள் அறிந்திருக்க முடியாத இருட்டடிப்புச் செய்யப்பட்ட இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுகளை பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.
ராகுல்ஜி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ரோமிலா தபார் போன்ற ஆய்வாளர்கள் இந்தியச் சமூக வரலாற்றிலும் தத்துவஞான மரபிலும் களங்கமாய் நிலைத்திருக்கும் பார்ப்பன மரபை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்துள்ளனர். இவையன்றி அம்பேத்கரின் ஆய்வுகள் இத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. எனினும் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில் இந்நூல் எழுதப்படாததால், வரலாறென்பது வர்க்கங்களுக்கிடையிலான போராட்டத்தின் வரலாறாக அல்லாமல், கருத்தியல்களுக்கிடையிலான மோதல்களின் வரலாறாகவும், வரலாற்று மாந்தர்களின் வரலாறாகவுமே இந்நூலில் வடிவம் பெறுகிறது.
பவுத்தத்தையோ பிற பொருள்முதல்வாதச் சிந்தனை மரபுகளையோ கருத்தியல் ரீதியில் மோதி வெற்றி கொள்ளும் அருகதையற்ற கீதை இத்தனை நூற்றாண்டுகளாய் ஆதிக்கம் செய்ய முடிவதெப்படி என்ற கேள்விக்குத்தான் நாம் விடை தேட வேண்டும். இனக்குழுச் சமூகத்தின் அழிவிலும், அடிமைச் சமூகத்தின் தோற்றத்திலும் வேர் கொண்டிருந்த ‘அர்ச்சுனர்களி’ன் சாம்ராச்சிய ஆசை பவுத்தத்தை நிராகரித்தது. இந்த ஆசையை நியாயப்படுத்துவதற்கான ‘அறம்’ கண்ணனால் வழங்கப்பட்டது. பின்னர் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட ஆசியச் சொத்துடைமை உறவுகள் முதல் காலனிய அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் வரையிலான அனைத்திலும் வர்க்கச் சுரண்டலை மறைக்கும் கீதையின் இலக்கிய ஆற்றலை காலச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் சாதுரியமாகப் பயன்படுத்தி வருகிறது பார்ப்பனியம்.
கீதையை உயிரோடு வைத்திருப்பதில் சமூக அடித்தளம் ஆற்றும் பங்கை ஆசிரியரால் காண முடிவதில்லை. எனவே அவர் கட்டோடு வெறுக்கும் பார்ப்பனியம், எதிர்ப்போரை வெல்லும் சர்வ வல்லமை பொருந்திய தத்துவஞான சக்தியாகத் தோற்றம் பெற்று விடுகிறது. 2000 ஆண்டுகளாய் வெல்லப்பட முடியாத அந்தச் சக்தியை வெல்வதற்கு பிரிட்டிஷாரிடம் சரணடைகிறார் ஆசிரியர். முதலாவளித்துவக் கருத்தியலை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய ஒரே காரணத்துக்காகக் காலனியாதிக்கத்தையே பொற்காலமென்றும் போற்றுகிறார்.
பிராமண மதத்தை இந்து மதமாக உருவாக்கித் தந்ததற்காக சங்கராச்சாரியின் பாராட்டைப் பெற்ற பிரிட்டிஷ் ஆட்சி இந்நூலாசிரியரின் பாராட்டையும் பெறுகின்ற ’விபரீதம்’ இவ்வாறு நடந்தேறுகிறது.
“இந்து மத ஆதிக்கம் சாதியம் குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைப்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்கு உட்பட்டே இந்து மதமும் சாதியமும் இயங்குகின்றன என்பதை மறந்துவிடுகிறார்கள்” என்று நூலாசிரியரின் இந்தக் குறையை விமரிசிக்கிறது பதிப்புரை.
இது மறதியோ, விவரங்களைப் பரிசீலிக்கத் தெரியாத குறையோ அல்ல; எம்.என்.ராய்க்கு ஆசிரியர் செலுத்தும் புகழஞ்சலியிலும், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மீது அவர் வைக்கும் ’விமரிசனங்களிலும்’, விடுதலைப் பேராட்ட காலம் முதல் 1970 வரையிலான அரசியல் சூழல் குறித்த பார்வையிலும் ஆசிரியரின் இந்தக் குறை சாதாரன வாசகனைக் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் பாமரத்தனமாக வெளிப்படுகிறது.
வர்க்கப் போராட்ட அரசியலிலிருந்து பார்ப்பனிய ஒழிப்பைப் பிரித்தொதுக்கும் இந்தக் கண்ணோட்டம், இந்திய வரலாற்றிலிருந்து பகவத் கீதையைப் பிடுங்கியெறிய முடியாத சூழலையே உருவாக்கும்.
நூலாசிரியரின் பார்வை குறித்த இந்த விமரிசனங்களைப் பதிவு செய்வது அவசியமாக இருந்தபோதிலும், பார்ப்பனக் கருத்தியலைத் திரைகிழித்து, இந்திய வரலாற்றிலிருந்து இருட்படிப்புச் செய்யப்பட்ட பொருள்முதல்வாதத் தத்துவ மரபை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல் என்ற வகையில் இதனைப் படிக்க வேண்டிய நூல் என்று தயக்கமின்றிக் கூறலாம்.
மூலநூலை நாம் படிக்கவில்லையென்றாலும், ஆங்கிலச் சொற்களின் நேரடி மொழியாக்கத்தைத் தவிர்த்து நூலாசிரியரின் கூற்று நடையையும், தொனியையும் பற்றிக் கொண்டு கே.சுப்பிரமணியன் அவர்கள் செய்திருக்கும் மொழியாக்கம் வாசகர்களைப் படிக்கத் தூண்டுமென்பது திண்ணம்.
ஒப்பீட்டளவில் மலிவான விலையிலும் தரமான அச்சு மற்றும் கட்டமைப்பிலும் இந்நூலைப் பதிப்பித்துள்ள விடியல் பதிப்பகம் மற்றும் சூலூர் வெளியீட்டகத்தாரின் இம்முயற்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நூல் : இந்தியவரலாற்றில் பகவத்கீதை
ஆசிரியர் : பிரேம்நாத் பசாஸ்
வெளியீடு: விடியல் பதிப்பகம்,
சூலூர் வெளியீட்டகம்,
11, பெரியார் நகர்,
மசக்காளிபாளையம் (வடக்கு),
கோவை-15.
தற்போது இந்நூல் உள்ளிட்ட ஐந்து நூல்களை மலிவு பதிப்பாக விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விவரங்களுக்கு கீழே இணைப்பை அழுத்துக!
அமெரிக்கா நடத்திய பதிலிப் போர்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது ஆப்கன்போர்.
காலனியாக்கம், புதிய காலனியாதிக்கம், மறுகாலனியாக்கம்:
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு
“அமெரிக்கா உங்களை அழைக்கிறது. உலகின் தலைசிறந்த சுதந்திர நாடு உங்களை அழைக்கிறது. வெறுப்பு, வன்முறை, கொலை, தீமை ஆகியவற்றை நிராகரிப்பதன் மூலம் தனது அடிப்படை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்ட நாடு உங்களை அழைக்கிறது.” – ஜார்ஜ் புஷ், ஆப்கான் போருக்கு முன் ஆற்றிய உரையில்.
“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” – ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி
அமெரிக்காவின் போர் விமானங்கள் ஆப்கானுக்கு ஏந்திச் செல்வதும் மரணத்தை அல்ல. புஷ்ஷின் மொழியில் சொன்னால் அவை சுதந்திரத்தை ஏந்திச் செல்கின்றன.
ஆப்கானிஸ்தானைத் தனது வெடி குண்டுகளால் தோண்டியெறிந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. ”அமெரிக்காவிலிருந்து அன்புடன் என்று எழுதப்பட்ட உணவுப் பொட்டலங்களும், அமெரிக்காவிலிருந்து வெறுப்புடன் என்று எழுதப்படாத கொத்துக் குண்டுகளும் (Cluster Bombs) ஒரே நேரத்தில் வீசப்படுகின்றன. இரண்டின் நிறமும் மஞ்சள்.
பசியல் துடிக்கும் மக்கள், வெடி குண்டுகளை உணவுப் பொட்டலமெனக் கருதித் தொட்டவுடன் வெடித்துச் சிதறுகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. இது அமெரிக்க பயங்கரவாதத்தின் ஒரு உருவகம்.
இந்தப் போருக்கு அமெரிக்க அரசு சூட்டியுள்ள பெயர் ’நீடித்த சுதந்திரம்’. ஆக்கிரமிப்பின் மூலம் ஆப்கன் மக்களின் சுதந்திரத்தையும், கருப்புச் சட்டங்களின் மூலம் அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் பறிக்கும் நடவடிக்கைக்குப் பெயர் நீடித்த சுதந்திரம்! இந்த வக்கிரப் புத்தியின் வேர் அமெரிக்க வரலாற்றிலேயே இருக்கிறது.
இலட்சக்கணக்கான செவ்விந்திய மக்களை வெட்டிக்கொன்று நாய்களுக்குத் தீனியாகப் போட்டான் கொலம்பஸ். அவனுடன் ஐரோப்பாவிலிருந்து கசாப்புக் கத்தியைக் கொண்டு சென்ற பாதிரிகள் “கிறிஸ்துவின் புகழைக் கொண்டு செல்வதாக” அதை வருணித்துக் கொண்டனர். கொல்லப்பட்டவர்களுக்காகத் தவறாமல் ஜெபிக்கவும் செய்தனர்.
ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை இலட்சக்கணக்கில் பிடித்துச் சென்று அடிமைகளாக்கி தங்கள் சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்ட அமெரிக்கர்கள் கருப்பர்களை ”நாகரிகப்படுத்துவதாக”க் கூறிக் கொண்டார்கள்.
மெக்சிகோவை ஆக்கிரமித்து 2 கோடி மக்களைக் கொன்று குவித்த போது அதை ”தவிர்க்கவியலாத விதி” என்று வருணித்தார்கள்.
மெக்சிகோவை ஆக்கிரமித்து 2 கோடி மக்களைக் கொன்று குவித்த போது அதை ”தவிர்க்கவியலாத விதி” என்று வருணித்தார்கள்.
1917-இல் ரசியப் புரட்சியை முறியடிக்க அமெரிக்கக் கடற்படையை ஏவிய போது ”அமெரிக்க இலட்சியங்களை ரசியாவில் புகுத்துவதாக”ச் சொல்லிக் கொண்டார்கள்.
இரண்டாம் உலகப் போரில் இறங்கிய போது ”உலகை ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக ஆக்குகிறோம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
பிறகு கம்யூனிச அபாயத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் உலக மேலாதிக்கத்துக்காக நடத்திய போர்களனைத்தையும் ”அமெரிக்காவின் தேசியப் பாது காப்புக்காக” “சுதந்திரத்திற்காக” நியாயப்படுத்தினார்கள்.
இன்று அமெரிக்காவின் போர் விமானங்கள் ஆப்கானுக்கு ஏந்திச் செல்வதும் மரணத்தை அல்ல. புஷ்ஷின் மொழியில் சொன்னால் அவை சுதந்திரத்தை ஏந்திச் செல்கின்றன.
இப்படி உலகமுழுமைக்கும் அமெரிக்க சுதந்திரத்தை எடுத்துச் சென்ற வரலாறு நெடியது. உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டதைச் சாக்காக வைத்து உலக வர்த்தகக் கழகத்தின் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் சதி தொடங்கியிருக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும் பயங்கரவாதம் என முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் அந்தச் சதி. இதை எதிர்த்து முறியடிப்பதற்கு உலக மகா பயங்கரவாதி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வரலாற்றை ஒரு பறவைப் பார்வையிலாவது நாம் அறிந்து கொள்வது அவசியம்.
அமெரிக்கக் காலனியாதிக்கத்தின் துவக்கம்
உலகத்தை ”அமெரிக்க முறைப்படியான உலகமாக” (Pax Americana) மாற்ற வேண்டும் என்ற மேலாதிக்கவாத சிந்தனை 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் தோன்றிவிட்டது.
நாடுகளைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை அடிமைகளாக்கி, அவர்கள் உழைப்பிலும் மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாட்டு மக்களின் உழைப்பிலும் தான் அமெரிக்கச் செல்வம் பெருகியது.
19-ம் நூற்றாண்டில் மட்டும் அமெரிக்கா 114 போர்களை நடத்தியுள்ளது. முதல் உலகப் போர் தொடங்கு முன்பே உலகத்தை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான யுத்தத்தை ஸ்பெயின் நாட்டுடன் அமெரிக்கா தொடங்கிவிட்டது.
ஸ்பெயினின் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி 1821-இலேயே விடுதலை பெற்றது மெக்சிகோ. அந்நாட்டின் மீது மீண்டும் போர் தொடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது அமெரிக்கா.
இன்று சிலிகான் பள்ளத்தாக்கில் மின்னிக் கொண்டிருக்கும் பில் கேட்சின் சாம்ராச்சியத்தின் கீழே, லட்சக்கணக்கான மெக்சிகோ விவசாயிகளின் பிணங்கள் புதைந்திருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அங்கமான கலிபோர்னியா என்றழைக்கப்படும் இந்த மாநிலமும் நியூ மெக்சிகோ என்ற மாநிலமும் சென்ற நூற்றாண்டில் மெக்சிகோவின் பகுதிகள்.
அடுத்து பிலிப்பைன்சையும் போர்ட்டோ ரிகோவையும், ஹவாய் தீவுகளையும் ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ”பசிபிக் பெருங்கடலை அமெரிக்காவின் உள்நாட்டு ஏரியாக மாற்றுவோம்” என்று முழங்கினார்கள்.
”பிரிட்டனையும் பிரான்சையும் போலப் பிற நாடுகளைக் காலனியாக்கிக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்காமல் தன் சொந்த உழைப்பில் முன்னேறிய நாடு அமெரிக்கா” என்ற கூற்று ஒரு இரட்டைப்பொய், மேற்கண்டநாடுகளைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை அடிமைகளாக்கி, அவர்கள் உழைப்பிலும் மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க நாட்டு மக்களின் உழைப்பிலும் தான் அமெரிக்கச் செல்வம் பெருகியது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறியும் அதன் கம்யூனிச வெறுப்பும் பிரிக்க முடியாத படி பின்னிப் பிணைந்தவை.
முதல் உலகப் போருக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருள் ஏற்றுமதி செய்யும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், கடன் கொடுக்கும் நாடாகவும் வளர்ந்துவிட்டது, அமெரிக்கா.
ரசிய சோசலிசப் புரட்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பு
முதல் உலகப் போரில் அமெரிக்கா பங்கு பெறவில்லை. ஆனால், 1917 நவம்பர் ரசியப் புரட்சியை அழிக்கும் திட்டத்தில் உடனே பங்குபெற்றது.
மனிதர்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உரிய பண்டமாகவும், விருப்பம் போல வெட்டிக் கொல்லத்தக்க மிருகமாகவும் கருதிய நாடு, அத்தகைய உழைக்கும் மக்கள் ஒரு நாட்டின் அரசதிகாரத்தையே கைப்பற்றும்போது அதை வேறு எப்படி எதிர்கொண்டிருக்கும்?
பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சோசலிச ரசியாவை முற்றுகையிட்டது அமெரிக்க இராணுவம். 1920 ஜனவரி வரையில் 12,000 வீரர்கள் கொண்ட அமெரிக்கக் கடற்படை போல்ஷ்விக் அரசை வீழ்த்தவும், சோவியத் யூனியனைத் துண்டாடவும் பலவாறாக முயன்று தோற்றது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறியும் அதன் கம்யூனிச வெறுப்பும் பிரிக்க முடியாத படி பின்னிப் பிணைந்தவை.
நாஜிகளுடன் கள்ளக்கூட்டு ஜெர்மனிக்கெதிராகப் போர்!
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் – ஜப்பான் – இத்தாலியின் பாசிசக் கூட்டணி அடுக்கடுக்காக ஆக்கிரமிப்புகளைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது அதைத் தடுத்து பாசிசத்தை முறியடிப்பதற்காக அமெரிக்கா போரில் குதிக்கவில்லை.
காலனி நாடுகளின் விடுதலைக்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள இந்தப் பிணைப்பு எல்லா ஏகாதிபத்திய நாடுகளையும் – குறிப்பாக அமெரிக்காவை – அச்சுறுத்தியது.
சொல்லப்போனால் பொருளாதாரப் பெருமந்தத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இரண்டாம் உலகப்போரைப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆயுதவியாபாரம் அவற்றில் மிக முக்கியமானது.
போர்முடிந்தபின் உருவாகவிருக்கும் உலக அமைப்பில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகப் போரில் இறங்கத்தயாராக இருந்த அமெரிக்கா, பேர்ல் துறைமுகத்தின் (Pearl Harbour) மீதான தாக்குதலை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
ரசிய சோசலிசப் புரட்சியின் விளைவாகக் கம்யூனிசத்திற்கு உலகெங்கும் பெருகி வந்த செல்வாக்கு பாசிசத்திற்கெதிரான மக்களின் கோபத்தை முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பாக மாற்றிக் கொண்டிருந்தது. காலனி நாடுகளின் விடுதலையை முழங்கிய கம்யூனிசம் உலகெங்கும் நடந்த தேச விடுதலைப் போராட்டங்களின் நேச சக்தியாகியது.
காலனி நாடுகளின் விடுதலைக்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள இந்தப் பிணைப்பு எல்லா ஏகாதிபத்திய நாடுகளையும் – குறிப்பாக அமெரிக்காவை – அச்சுறுத்தியது. காலனியாதிக்கத்தைப் புதிய வடிவில் நிலைநாட்டும் முயற்சியில் அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
***
புதிய காலனியாதிக்கம்:
கம்யூனிச எதிர்ப்பு தேசிய விடுதலை எதிர்ப்பு பயங்கரவாதம்!
ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் தான் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக ஒரு வரலாற்றுப் புரட்டு நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் வீழ்ச்சி தொடங்கியவுடனேயே, ரசியாவின் செம்படை மஞ்சூரியாவில் நுழைந்தவுடனேயே ‘சரணடையைத் தயார்’ என்று தூதுவிடத் தொடங்கிவிட்டது ஜப்பான். இதன் விளைவாக போருக்குப் பிந்தைய உலக அமைப்பில் ரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதாலும், ஜப்பானைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர இயலாது என்பதாலும் அவசரமாக ஜப்பானில் தலையிட்டது அமெரிக்கா.
தனது புதிய அணு ஆயுதத்தின் திறனைச் சோதித்துப் பார்ப்பது, புதிய உலக ஆதிக்க சக்தியாகத் தனது வரவை கம்பீரமாக அறிவிப்பது ஜப்பானை தன் அணியில் கொண்டு வருவது என்ற நோக்கங்களுக்காக 2 லட்சம் அப்பாவி மக்களைக் கொலை செய்தது அமெரிக்கா
பல லட்சம் மக்களைக் கொலை செய்யத் தயங்காத அமெரிக்க அரசு, மன்னர் மீது அளவு கடந்த அன்பு காட்டியது. ஜெர்மனியுடன் சேர்ந்து உலகப் போரைத் தொடுத்து பல கோடி மக்களின் அழிவுக்குக் காரணமாயிருந்த ஜப்பானிய மன்னர் மீது ”போர்க் குற்றம் சாட்டமாட்டோம்” என்றும் மன்னராட்சி தொடர்வதை ஆதரிப்பதாகவும் அறிவித்தது அமெரிக்கா. இதன் மூலம் ஜப்பானில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளோ, கம்யூனிஸ்டுகளோ செல்வாக்கு பெறுவதைத் தடுத்து பாசிஸ்டுகளின் கையிலேயே அதிகாரம் நீடிப்பதை உறுதிசெய்து கொண்டது.
ஜப்பானை தன் அணியில் கொண்டு வருவது என்ற நோக்கங்களுக்காக 2 லட்சம் அப்பாவி மக்களைக் கொலை செய்தது அமெரிக்கா
1945-இல் தென்கொரியாவில் நுழைந்தது அமெரிக்க இராணுவம். ஜப்பானிய பாசிஸ்டுகளுக்கெதிராக உள்நாட்டுக் கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும் இணைந்து அமைத்திருந்த பாசிச எதிர்ப்பு அரசைக் கலைப்பதாக அறிவித்தது.
ஜப்பானியப் போலீசு மற்றும் ஜப்பானின் உள்நாட்டுக் கைக்கூலிகள் துணையுடன் ஒரு லட்சம் மக்கள் தென் கொரியாவில் கொலை செய்யப்பட்டனர்.
ஒரு இலட்சம் மக்களுடைய பிணங்களின் மேல் அமெரிக்க ஆதரவு பாசிசக் கும்பலின் ஆட்சி தென் கொரியாவில் நிறுவப்பட்டது. அன்று அங்கே அமைக்கப் பட்ட அமெரிக்கப் படைத்தளம் இன்றும் நீடிக்கிறது.
அடுத்து அமெரிக்காவின் கவனம் சீனத்தை நோக்கித் திரும்பியது. மாவோவின் தலைமையில் முன்னேறி வந்த சீனப் புரட்சியைத் தடுக்க, 1947-இல் 50,000 அமெரிக்கத் துருப்புகள் சீனத்தை ஆக்கிரமித்தன. சியாங் கே ஷேக்கின் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்துவதன் மூலம் ஆசியாவில் தனது சாம்ராச்சியத்தை விரிவாக்க முனைந்தது அமெரிக்கா.
ஐரோப்பாவில் மீண்டும் பாசிசம்
ஆசியாவில் கம்யூனிச அபாயத்தைக் கட்டுப்படுத்த முயல்வதற்குள் மேற்கு ஐரோப்பாவையும் அச்சுறுத்தியது கம்யூனிசம். கிரீஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான விவசாயிகள் தொழிலாளர் கூட்டணி செல்வாக்கு பெற்றிருந்தது. நாஜிப் படைகள் தோற்றுப் பின் வாங்கியவுடன் உள்ளே நுழைந்த பிரிட்டிஷ் இராணுவம், நாஜி ஆதரவுக் கும்பலை மீண்டும் ஆட்சியிலமர்த்தியது.
வாக்களியுங்கள் இல்லை அவன் உங்களை ஆளுவான் – Italian christian democrats 1948 தேர்தல் பிரச்சாரத்தில்
மக்களின் எதிர்ப்பை மீறி அந்தப் பொம்மையாட்சியைக் காப்பாற்ற பிரிட்டினால் இயலவில்லை. உடனே 1947-இல் உள்ளே நுழைந்தது அமெரிக்க இராணுவம் அந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் 1,60,000 பேரைக் கொன்று குவித்தது.
பொம்மை ஆட்சியை நிறுவி, அதன் துணையுடன் படுகொலைகள் நடத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வழிமுறையை, கிரீஸில் அமெரிக்கா கற்றுக் கொண்டது. பின்னாளில் வியத்நாமிலும், மத்திய அமெரிக்க நாடுகளிலும் இந்த அனுபவத்தைத்தான் அமெரிக்கா பிரயோகித்தது.
இத்தாலியிலும், கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு பெற்றிருந்தனர். விவசாயிகள் தொழிலாளர்களின் படை வடக்கு இத்தாலியை விடுதலை செய்து நாஜிப் படைகளைத் தன் சொந்த வலிமையால் வெளியேற்றியிருந்தது.
இந்தச் செல்வாக்கின் காரணமாக 1948-இல் நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மையாக வெற்றி பெறுவர் என்று எச்சரித்தது சி.ஐ.ஏ.
உடனே முசோலினியின் பாசிஸ்டு போலீசு படையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவப்பட்டது; தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. இத்தாலிக்கான உணவு சப்ளை துண்டிக்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டளித்தால் தொடர்ந்து என்ன நடக்கும் என்பது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. இவையனைத்தையும் மீறி கம்யூனிஸ்டுகள் ஜெயித்தால், இத்தாலியை ஆக்கிரமிக்கத் தயார் நிலையில் நின்றது அமெரிக்க இராணுவம். கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டது.
மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டளித்தால் அமெரிக்கா அவர்களை என்ன பாடுபடுத்தும் என்பதைத் தேர்தலுக்கு முன்னரே அனுபவிக்குமாறு செய்து, பிறகு தேர்தலை நடத்தினால் மக்கள் வேறு வழியின்றி ஜனநாயகத்தின் அருமையைப் புரிந்து கொள்வர் என்பது இத்தாலியில் அமெரிக்கா கண்டுபிடித்த அனுபவம். பின்னாளில் நிகராகுவாவில் சாண்டினிஸ்டா அரசைத் தேர்தலில் தோற்கடிக்க இந்த உத்திதான் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா – ஏகாதிபத்திய உலகின் தலைவன்
உலக சாம்ராச்சியம் கிட்டத்தட்ட கைக்கு வந்து விட்டதாகவே அமெரிக்க ஆளும் வர்க்கம் கருதியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே இத்தகைய அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடக் காரணமிருந்தது. ஜப்பானிய, ஜெர்மானிய சாம்ராச்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டன. போரின் காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியில் பலவீனமடைந்திருந்த பிரிட்டன் தேசிய விடுதலைப் போராட்டங்கள் காரணமாகத் தன் காலனிகளையும் இழந்து கொண்டிருந்தது.
சோவியத் ஒன்றியமோ ஹிட்லரை முறியடிப்பதற்குத் தன் மக்கள் தொகையில் 10 சதவீதத்தை – 2 கோடிப் பேரை பலி கொடுத்திருந்தது. சோவியத் ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் போரில் சீர்குலைந்து புணரமைக்க வேண்டிய நிலையில் இருந்தன.
ஆனால் உலக மேலாதிக்கத் திட்டத்துடன் பொருத்தமான தருணத்தில் போரில் நுழைந்த அமெரிக்கா போரின் காரணமாக பாதிக்கப்படவில்லை. மாறாக ஆதாயம் அடைந்தது. நாடுகளின் நாணய மதிப்பைத் தீர்மானிப்பதற்கான தங்க இருப்பைப் பொறுத்தவரை உலக நாடுகளின் தங்க இருப்பில் 68% அமெரிக்காவின் கையில் இருந்ததால் டாலர் தீர்மானிக்கும் நாணயமானது.
உலக வங்கி, காட், ஐ.எம்.எஃப் ஆகிய நிறுவனங்களையும் டாலரையும் வைத்து சோசலிச முகாம் தவிர்த்த பிற நாடுகள் அனைத்தையும் தன் குடையின் கீழ் கொண்டுவர முடியும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் கருதியது.
அனைத்துக்கும் மேலாக ’இறுதி ஆயுதம்’ என்றழைக்கப்பட்ட அணு ஆயுதம் அன்று அமெரிக்காவிடம் மட்டும் தான் இருந்தது. உலக சாம்ராச்சியம் கிட்டத்தட்ட கைக்கு வந்து விட்டதாகவே அமெரிக்க ஆளும் வர்க்கம் கருதியது.
கம்யூனிச எதிர்ப்பு மூளைச்சலவை
அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலக சமாதானத்தையும் அச்சுறுத்துகின்ற, ஹிட்லரைவிடக் கொடிய எதிரியாக சோவியத் யூனியன் சித்தரிக்கப்பட்டது.
இருந்தாலும் அமெரிக்காவின் சாம்ராச்சியக் கனவுக்குத் தடையாக நின்றது கம்யூனிசம் பெற்றிருந்த செல்வாக்கு. தம்மைப் பலிகொடுத்து ஹிட்லரை வீழ்த்திய சோவியத் ரசிய மக்கள் மீது ஐரோப்பிய அமெரிக்க மக்கள் பெரும் அன்பும் நன்றியும் கொண்டிருந்தனர். நீண்ட போருக்குப் பின் அமைதியான வாழ்க்கையை மக்கள் விரும்பினார்கள். ”பகுதியளவிற்காவது கட்டாய இராணுவச் சேவையைத் தொடரவேண்டும்” என 1945-இல் அதிபர் ட்ரூமன் அறிவித்த போது அதை எதிர்க்கத் தொடங்கினர் மக்கள்.
உலகளவில் ஆதிக்கத்திற்குத் தேவையான பிரம்மாண்டமான உலகு தழுவிய இராணுவ எந்திரத்தைக் கட்டியமைப்பதற்கும், அதற்கு வேண்டிய அளவுக்கு இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்கும் ஏற்ப அமெரிக்க மக்களின் ‘சமாதானம் விழையும் மனநிலையை’ ஒழிக்க வேண்டியிருந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலக சமாதானத்தையும் அச்சுறுத்துகின்ற, ஹிட்லரைவிடக் கொடிய எதிரியாக சோவியத் யூனியன் சித்தரிக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் ரசிய உளவாளிகளாகவும், கம்யூனிச ஆதரவுக் கருத்து கொண்டவர்கள் அமெரிக்கப் பண்பு இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ’மெக்கார்த்தியிசம்’ எனும் இந்தக் கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் 1948 முதல் 8 ஆண்டுகள் இடையறாது தொடர்ந்தது.
’மெக்கார்த்தியிசம்’ எனும் இந்தக் கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் 1948 முதல் 8 ஆண்டுகள் இடையறாது தொடர்ந்தது.
அமெரிக்காவின் அரசுத் தலைமையகத்திலேயே 205 கம்யூனிஸ்டுகள் இருப்பதாகவும், ஹாலிவுட் கம்யூனிஸ்டுகளால் நிரம்பி வழிவதாகவும் விதவிதமான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சார்லி சாப்ளின், பால் ராப்சன் உள்ளிட்ட புகழ் பெற்ற கலைஞர்களும், அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் ‘கம்யூனிஸ்டு’ குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஸ்டாலினைக் கொடிய சர்வாதிகாரியாகவும், ரசியாவை இரும்புத்திரை நாடாகவும் சித்தரிக்கும் புனைகதைகள், கட்டுரைகள் பெருகின. பிரபல ஐரோப்பிய எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் சி.ஐ.ஏ.வால் விலைக்கு வாங்கப்பட்டு ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
“அமெரிக்க மக்களிடம் தியாக உணர்வையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமானால் கம்யூனிச அபாயம் பற்றிய பீதியை மக்களின் மூளைக்குள் அடித்து இறக்கவேண்டும்” என்று அதிபர் ஐசன்ஹோவர் காலத்திய தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் ஆவணம் கூறுகிறது (NSC-68, Chomsky).
சீனப்புரட்சி – கம்யூனிசத்தின் பதிலடி
மக்களின் மூளையில் கம்யூனிச எதிர்ப்பை அடித்து இறக்குவதற்குள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தலையில் பேரிடியாய் இறங்கியது 1949 சீனப் புரட்சியின் வெற்றி.
மக்களின் மூளையில் கம்யூனிச எதிர்ப்பை அடித்து இறக்குவதற்குள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தலையில் பேரிடியாய் இறங்கியது 1949 சீனப் புரட்சியின் வெற்றி. சியாங்-கே-ஷேக்கின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முடியாமல் செஞ்சீனத்தை விட்டு வெளியேறியது அமெரிக்க இராணுவம்.
அடுத்த ஆண்டிலேயே (1950-ல்) துவங்கியது கொரியப் போர். அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சி வடகொரிய எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கு வடகொரியா கொடுத்த பதிலடியை சாக்காக வைத்து வட கொரியாவை ஆக்கிரமித்தது அமெரிக்க இராணுவம்.
ஏறத்தாழ தமிழகத்தின் அளவே உள்ள அந்தநாட்டில் அமெரிக்காவின் 20லட்சம் துருப்புகளை வடகொரியா எதிர்கொண்டது. பள்ளிகள், ஆலைகள், மருத்துவமனைகள், வீடுகள் என மொத்த நாடும் தரைமட்டமாக்கப்பட்டது. இரசாயன ஆயுதம், கிருமி ஆயுதம் அனைத்தையும் பயன்படுத்தி 30 லட்சம் மக்களைக் கொலை செய்தது அமெரிக்கப் படை.
மாவோ
வடகொரியாவின் அண்டை நாடான சீனாவையும் அப்படியே ஆக்கிரமிப்பது என்ற அமெரிக்காவின் சதியை அறிந்த சீனாவும் போரில் இறங்கியது. ”ரசியாவும் தலையிடக்கூடும் – உலகப்போர் மூளும் உலக மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரும்” என்ற அச்சத்தால் அமெரிக்கா பின்வாங்கியது. 1953-இல் போர் முடிந்த பின் சியாங் – கே – ஷேக்கின் தைவானில் ஒரு தளம் அமைத்தது அமெரிக்க இராணுவம்.
ஆசியாவில் காலூன்றுவதற்கு அமெரிக்கா முயன்று கொண்டிருக்கும் போதே ஐரோப்பாவில் செக்கோஸ்லோவாகியா அதன் பிடியிலிருந்து நழுவி சோசலிச முகாமுக்குச் சென்றது. கிரீஸில் அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சியை எதிர்த்த போராட்டங்கள் உக்கிரமாயின. இவையனைத்தையும் ”கம்யூனிச அபாயம் ரஷிய சதி” என்றே சித்தரித்தது அமெரிக்கா.
தேசிய விடுதலை, ஜனநாயகத்தின் எதிரி அமெரிக்கா
கம்யூனிசம் என்ற கொள்கை தன் இயல்பிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், அமெரிக்கா தான் இயல்பிலேயே ஜனநாயகத்தின் காவலன் என்றும் ஒரு கட்டுக்கதையை உலகெங்கும் பரப்பி ‘அறிவாளிகளை’ மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது அமெரிக்கா.
மொகமத் மொசாதே
ஆனால், மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிறுவிய நாடுகளில் தலையிட்டு மீண்டும் மன்னராட்சியை உருவாக்குவது பாராளுமன்றத்தை ஒழித்து இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவது மதச்சார்பற்ற ஆட்சியை ஒழித்து மதவெறியர்களின் ஆட்சியை உருவாக்குவது என்று வரலாறு முழுவதும் ஜனநாயக விரோதியாக மட்டுமே அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது.
ஏகாதிபத்தியச் சுரண்டலையும், அமெரிக்க அடிமைத்தனத்தையும் ஒப்புக் கொள்ளாமல் “சுதந்திரம் – ஜனநாயகம்” என்று முழங்கிய நாடுகளுக்கும், முணு முணுத்த நாடுகளுக்கும் கூட இதுதான் நேர்ந்திருக்கிறது.
1951-இல் ஈரானின் ஜனநாயகப் புரட்சி, மன்னன் ஷாவை நாட்டை விட்டு விரட்டியது. அந்நிய நிறுவனங்களுக்கு – குறிப்பாக பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் வயல்களனைத்தையும் நாட்டுடைமையாக்கியது மொகமத் மொசாதேயின் அரசு.
ஆனால் மன்னன் ஷாவின் இராணுவ அதிகாரிகளை ஒழித்துக் கட்டவும், மக்களை ஆயுத பாணியாக்கவும் மொசாதே தவறினார். இந்த விரிசலில் உள்ளே நுழைந்து இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி மீண்டும் ஷாவை மன்னனாக்கியது சி.ஐ.ஏ. இரானின் எண்ணெய் வயல்களில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்கள் விழுங்கின.
ஷாவின் உளவுப்படையான சாவக் சி.ஐ.ஏ.வாலும், இசுரேலாலும் பயிற்றுவிக்கப்பட்டது. அதன் பின் வந்த ஆண்டுகளில் நினைத்துப் பார்க்கவே முடியாத சித்திரவதைகளும் படுகொலைகளும் ஈரானில் தொடங்கின. பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளும் தேசிய விடுதலைப் போராளிகளும் தேடிப் பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் பிராந்தியத்தில் இசுரேலுக்கு அடுத்து அமெரிக்காவின் அடியாள் அரசானது ஷாவின் ஈரான்.
ஈரான் மன்னர் ஷாவுடன் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர்
1952-இல் மத்திய அமெரிக்காவின் சின்னஞ் சிறிய நாடான கவுதமாலாவில் தலையிட்டது சி.ஐ.ஏ. 1944-இல் இராணுவ சர்வாதிகாரத்தைத் துக்கியெறிந்து நிலைநாட்டப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தத் தொடங்கியது.
உடனே அரங்கேறியது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. இன்று வரை கவுதமாலாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிகளே தொடர்கின்றன. இலங்கையைக் காட்டிலும் சிறிதான இந்த நாட்டில் இராணுவ ஆட்சியால் கொலை செய்யப்பட்ட மக்கள் ஒன்றரை லட்சம் பேர்.
1959 கியூபாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது காஸ்டிரோவின் படை கவுதமாலாவைப் போலவே ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்ற கென்னடி அரசு அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக மிரட்டியது.
கியூபா மீது அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளும் மிரட்டலும் அருகாமையில் இருந்த மத்திய அமெரிக்க நாடான டொமினிக்கன் ரிபப்ளிக்கில் ராணுவ சர்வாதிகாரம் துக்கியெறியப்படுவதை நிறுத்தவில்லை.
தேசிய ஜனநாயகவாதியான ஜூவான் போஷ் அங்கு அதிபரானவுடன் வழக்கம் போல ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது சி.ஐ.ஏ. ஆனால் இராணுவத்தின் இளநிலை அதிகாரிகள் மீண்டும் போஷ்ஷின் ஆட்சியை நிறுவினர். இதைச் சகிக்க முடியாத கென்னடி அரசு 40,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பி மீண்டும் அங்கே அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சியை நிறுவியது.
”இரண்டாம் உலக போருக்கு பிந்தைய எல்லா அமெரிக்க அதிபர்களையும் ’போர்க் கிரிமினல்’ என்று நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன” – நோம் சாம்ஸ்கி (அமெரிக்க அறிஞர்)
சதியும் கொலையுமே வெளியுறவுக் கொள்கை!
1973-இல் சிலியில் சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு உலகளவில் அமெரிக்காவை அம்பலப்படுத்துவதில் பெரும்பங்காற்றியது. 1970-இல் சிலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்றார் சோசலிஸ்டு கட்சித் தலைவர் சால்வடார் அலண்டே. உடனே ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த முயன்று தோற்றது சி.ஐ.ஏ. சிலியின் செம்புச் சுரங்கங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பறித்து நாட்டுடைமையாக்கும் சட்டத்தை இயற்றினார் அலண்டே.
ஜெனரல் பினோசட் என்ற கைக்கூலியை வைத்து அலண்டேயைக் கொலை செய்து இராணுவ ஆட்சியை நிறுவியது சி.ஐ.ஏ. அடுத்த சில வாரங்களுக்குள் பல ஆயிரம் கம்யூனிஸ்டுகள் கொலை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரம் பேர் காணாமல் போயினர்.
ஆயுதம் தாங்கிய மக்கள் படை இல்லாமல், நாடாளுமன்றம் மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதற்கு, அத்தகைய நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பதற்கும் சிலி ஒரு பாடமானது.
சிலியில் அலண்டே கொலை என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சி.ஐ.ஏ. கொலை செய்த தலைவர்கள், கவிழ்த்த ஏகாதிபத்திய அரசுகள் பட்டியலிட்டு மாளாதவை.
1958-இல் இலங்கை பிரதமர் சாலமன் பண்டாரநாயகா, 1961-இல் காங்கோ பிரதமரும் விடுதலைப் போராளியுமான பாட்ரிஸ் லுமும்பா, 1967-இல் லத்தீன் அமெரிக்கப் போராளி சே குவாரா, 1969-இல் மொசாம்பிக் விடுதலை முன்னனியின் தலைவர் மாண்ட்லேன், 1973-இல் கினியாவின் ஆப்பிரிக்க சுதந்திரக் கட்சித் தலைவர் அமில்கார் கப்ரால்… இவர்கள் சி.ஐ.ஏ.வால் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களில் சிலர்.
சிலியை விஞ்சக்கூடிய கொடுரமான ஆட்சிக் கவிழ்ப்பு இந்தோனேசியாவில் நடந்தது. அங்கு ஆட்சிக்கு வந்த சுகர்னோவின் மதச்சார்பற்ற அரசு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைப் பிரகடனம் செய்தது.
இசுலாமிய மதவெறி அமைப்புகளைத் துண்டிவிட்டு இராணுவ அதிகாரி சுகார்த்தோவின் தலைமையில் 1965-இல் சி.ஐ.ஏ. ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியது. சில மாதங்களில் சுமார் 7 லட்சம் கம்யூனிஸ்டுகளும், கம்யூனிஸ்டு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். கம்யூனிசம் என்ற பேச்சே தடை செய்யப்பட்டது.
பிலிப்பைன்சில் மார்க்கோசின் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கும், தாய்லாந்தில் இராணுவ சர்வாதிகாரத்திற்கும் பக்கபலமாக நின்றது அமெரிக்கா. ஆனால் தென்கிழக்காசியாவில் அமெரிக்கத் திமிருக்கு முடிவுகட்ட வியத்நாம் காத்துக் கொண்டிருந்தது.
வியத்நாம்: அவமானத்தால் துடிக்கிறது அமெரிக்கா
தென் வியத்நாமின் பொம்மை ஆட்சியைக் காப்பாற்ற 1965-இல் அமெரிக்க இராணுவம் வியத்நாமில் இறங்கியது. இரண்டே ஆண்டுகளுக்குள் வியத்நாமில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 5 லட்சமாகியது. வியத்நாம், லாவோஸ், கம்போடியா ஆகியநாடுகளில் அமெரிக்க இராணுவம் நடத்திய அட்டூழியங்கள் உலகறிந்தவை.
ஹோசிமின் – அமெரிக்காவை புறமுதகு காட்ட வைத்த வியட்நாமின் வீரம் !
இரண்டாம் உலகப் போரில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் அளவைக் காட்டிலும் அதிகமான குண்டுகள் வியத்நாம் மீது மட்டும் போடப்பட்டன. நாபாம் தீக்குண்டுகள், குகைகளில் புகுந்து தாக்கும் ராக்கெட்டுகள், இரசாயன ஆயுதங்கள், விவசாயத்தை அழிக்கும் பயிர்க்கொல்லி மருந்துகள். என அணுகுண்டு ஒன்றைத் தவிர அனைத்தும் இந்நாட்டு மக்கள் மீது வீசப்பட்டன. சாவு எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. பல பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. அமெரிக்க மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாய இராணுவச் சேவை அமெரிக்காவெங்கும் அதிருப்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்தது. 1950-களில் செல்வாக்கு பெறத்தொடங்கிய கருப்பின சிவில் உரிமை இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதும், கருப்பின மக்கள் வியத்நாமில் காவு கொடுக்கப்படுவதும் அவர்களிடையே பெரும் எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது.
வியத்நாம் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகள், அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரிகள் நடத்திய கொலைகள், தென் ஆப்பிரிக்க நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கும் இசுரேலின் யூதவெறி அரசுக்கும் அமெரிக்கா அளித்துவந்த ஆதரவு இவையனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தன.
அனைத்துக்கும் மேலாக, வியத்நாமிய மக்களின் உறுதியும், கம்யூனிஸ்டுகளின் வீரம் செறிந்த போராட்டமும் அமெரிக்க இராணுவத்தின் தார்மீக பலத்தைக் குலைத்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் வெற்றி பெற முடியாத இந்தப் போரிலிருந்து பின்வாங்குவதைத் விர அமெரிக்க அரசுக்கு வேறு வழியின்றிப் போனது.
கருப்பின சிவில் உரிமை இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதும், கருப்பின மக்கள் வியத்நாமில் காவு கொடுக்கப்படுவதும் அவர்களிடையே பெரும் எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது.
அடுத்து அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அரசை அச்சுறுத்தின. இதற்குமுன் அமெரிக்கா இழைத்த அநீதிகள் – ஆக்கிரமிப்புகளின் போதெல்லாம் உள்நாட்டில் இத்தகைய பெரும் எதிர்ப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் சந்தித்ததில்லை. இதுவரை வெளி நாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டிருந்த துப்பாக்கி இப்போது உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் திருப்பப்பட்டதால் அமெரிக்க அரசின் ஜனநாயக வேடம் கலைந்து கொண்டிருந்தது.
மாபெரும் அமெரிக்க வல்லரசு அவமானப்பட்டு, தோற்று, தலைகுனிந்து 1975-இல் வியத்நாமிலிருந்து தப்பியோடி வந்தது.
தென்கிழக்காசியாவில் அடிவாங்கிய அமெரிக்காவை மீண்டும் செருப்பாலடித்தது ஈரானின் புரட்சி. அமெரிக்கக் கைக்கூலியான ஷாவின் அரசு 1979-இல் தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கொமெய்னியின் அரசு கம்யூனிஸ்டுகளையும், மதச்சார்பற்றவர்களையும் வேட்டையாடிக் கொலை செய்தது அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஈரான் அரசு அமெரிக்க எதிர்ப்பாளராகவே இருந்தது.
ஷாவிற்கு அடைக்கலம் கொடுத்ததுடன் ஈரானின் சொத்துக்ளை முடக்கியது அமெரிக்கா. டெஹ்ரானின் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அனைவரையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தது ஈரான். அவர்களை மீட்பதற்கு அதிபர் கார்ட்டரின் அரசு செய்த முயற்சிகள் தோற்றன. வேறு வழியின்றி ஈரான் அரசுடன் சமரசம் செய்து கொண்டு பணயக் கைதிகளை மீட்டது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் காலடியிலேயே உள்ள சின்னஞ்சிறிய மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் அமெரிக்கக் கைக்கூலி சர்வாதிகாரியான சொமோசாவின் அரசைத் துக்கியெறிந்தனர் சாண்டினிஸ்டாக்கள்.
பொருளாதாரத் தேக்கம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானிய நாடுகளின் வர்த்தகப் போட்டியைச் சமாளிக்கவியலாத நிலை, இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்ந்த தோல்விகளால் அமெரிக்க தேசியப் பெருமிதத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றுடன் 70-களின் முடிவை எதிர்கொண்டது அமெரிக்க ஆளும் வர்க்கம்.
ஏகாதிபத்தியமாகிறது ரசியா – பனிப்போர் துவக்கம்
உலக மேலாதிக்கத்துக்கான வெறித்தனமான நடவடிக்கைகளில் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்திலிருந்தே அமெரிக்கா ஈடுபட்டிருந்த இதே காலகட்டத்தில், அதனை எதிர்த்து நின்ற சோசலிச முகாமில் தோன்றிய பாரிய பின்னடைவு மிகவும் முக்கியமானது.
ஜோசப் ஸ்டாலின்
ஸ்டாலின் மறைவிற்குப் பின் அரசு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சோவியத் மெல்ல மெல்ல தானே ஒரு ஏகாதிபத்தியமாக வளரத் தொடங்கியது. சீனாவின் தலைமையிலான சோசலிச முகாம் என்பது ஒப்பளவில் சிறியதாகவே இருந்தது. ரசிய சமூக ஏகாதிபத்தியமோ உலக மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவுடன் போட்டிபோடும் இன்னொரு வல்லரசானது.
உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றுக்கு இணையாக, டாலருக்குப் பதில் ரூபிளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வர்த்தக வலைப்பின்னல்கள், இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் என்று தனது தலைமையில் இன்னொரு முகாமை ரசியா உருவாக்கியது. அமெரிக்க எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்து அவற்றைத் தனது முகாமுக்குள் இழுத்தது. ஆயுதப் போட்டியில் குறிப்பாக அணுஆயுதப் போட்டியில் இறங்கி பொருளாதாரத்தை இராணுவ மயமாக்கியது. அமெரிக்காவுக்குப் போட்டியாக உலகெங்கும் இராணுவத் தளங்களை நிறுவியது.
70-களின் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளும், அமெரிக்காவின் தோல்விகளும் ரசிய வல்லரசுக்குத் தெம்பூட்டியபோதும், பொருளாதார மேலாதிக்கத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடவியலாத பலவீனம், இராணுவச் செலவினங்கள் தோற்றுவித்த சுமை ஆகியவற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது ரசியா.
ரசிய மேலாண்மையின் நிருபணமாகவும் அதன் சரிவைத் துரிதப்படுத்தும் துவக்கமாகவும் அமைந்தது 1979-இல் ரசியா நடத்திய ஆப்கான் ஆக்கிரமிப்பு. அமெரிக்காவுக்கோ இந்த ரசிய ஆக்கிரமிப்பு என்பது வியத்நாம், ஈரான், நிகராகுவா ஆகியவற்றின் வரிசையில் ஒரு கூடுதல் தலைகுனிவானது.
பதிலிப் போர்- ரீகனின் தந்திரம்
நிகராகுவா காண்ட்ராஸ்களுக்கு தன் ஆதரவை தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் ரீகன்
“மீண்டும் உலக அரங்கில் அமெரிக்காவைத் தலை நிமிர்ந்து நிற்கச்செய்வேன்” என்று முழங்கினார் 1980-இல் பதவிக்கு வந்த ரீகன். தேங்கிக் கிடந்த பொருளாதாரத்தை இயங்கச்செய்ய தனியார்மயம், தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல், ஆயுத விற்பனையை அதிகரித்தல்; நட்சத்திரப் போர்த்திட்டம் போன்ற அதிரடி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ரசியாவின் இராணுவச் செலவினத்தை அதிகரிக்கத் தூண்டி அதனை பொருளாதாரத் தற்கொலைக்கு இழுத்து விடுதல்; உலகெங்கும் அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலங்களை உறுதிசெய்து இழந்த பெருமிதத்தை நிலைநாட்டுதல் – என அமைந்தது ரீகனின் உலக மேலாதிக்கத்திட்டம்.
ஆப்கானிஸ்தானில் ரசிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட்டுவந்த முஜாகிதீன்களைப் பயிற்றுவிக்கவும், ஆயுதம் கொடுக்கவும் பல கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டது ரீகன் அரசு. அமெரிக்கா நடத்திய பதிலிப் போர்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது ஆப்கன்போர்.
நிகராகுவாவின் சாண்டினிஸ்டா ஆட்சியைக் கவிழ்க்கவும் இதே தந்திரத்தை அமெரிக்கா கையாண்டது. ஆட்சியிலிருந்து துக்கியெறியப்பட்ட சர்வாதிகாரி சொமோசாவின் கூலிப்படைக்கு பயிற்சியும் ஆயுதமும் அளித்து இடைவிடாமல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் துண்டியது.
சாண்டினிஸ்டா அரசு அமல்படுத்திய நிலச்சீர்திருத்தம் மற்றும் பல மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக அது மக்கள் மத்தியில் பெற்று வந்த செல்வாக்கு அமெரிக்காவை அச்சுறுத்தியது. எல்சால்வடார், ஹோண்டுராஸ், கவுதமாலா போன்ற அருகாமையிலுள்ள மத்திய அமெரிக்க நாடுகளிலும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மிக மோசமான வறுமையும் அடக்குமுறையும் தலைவிரித்தாடும் போது இத்தகையதொரு ஆபத்தான முன்மாதிரி தனக்கு அருகிலேயே உருவாவதை அமெரிக்காவால் எப்படி அனுமதிக்க இயலும்? ”உடனே அறுத்தெறிய வேண்டிய புற்றுநோய் அமெரிக்கநிலப்பகுதியிலேயே உருவாகிவிட்டது” என்று அலறினார் அமைச்சர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ்.
காண்ட்ராஸ் என்ற சி.ஐ.ஏ.வின் கூலிப் படை குடியிருப்புகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு குண்டு வைத்தது. ஆங்காங்கே வீடு புகுந்து மக்களைச் சுட்டுக் கொன்றது. உள்நாட்டுப் போரைச் சமாளிக்க இராணுவச் செலவுகளை அதிகரிக்கும் நிலைக்கு நிகராகுவா தள்ளப்பட்டது. கடனுதவிகளை நிறுத்துமாறு உலக வங்கியை நிர்ப்பந்தித்து நிகராகுவா பொருளாதாரத்தின் கழுத்தை நெறித்தது அமெரிக்கா. இத்தனைக்குப் பிறகும் சாண்டினிஸ்டா ஆட்சியைக் கவிழ்க்க இயலாமலும் நேரடியாக இராணுவத்தை அனுப்ப இயலாமலும் குமுறியது ரீகன் அரசு.
லெபனானில் செருப்படி!
ஆதிக்க வெறியைத் தூண்டும் ராம்போ வகை ஹாலிவுட் படங்கள் சரம் சரமாக வெளிவரத் தொடங்கின
1983-இல் லெபனான் மீது இசுரேல் நடத்திய ஆக்கிரமிப்புக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீது இசுரேல் தொடுத்த தாக்குதலுக்கும் ஆதரவாகத் தன் படைகளை அனுப்பியது ரீகன் அரசு. அமெரிக்க இராணுவ முகாமின் மீது இசுலாமிய அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 240 அமெரிக்கத் துருப்புகள் வெடித்துச் சிதறவே பீதியடைந்து இடத்தைக் காலி செய்தது அமெரிக்கா.
மீண்டும் அமெரிக்காவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வதாகச் சவடால் அடித்த ரீகன் யாரையாவது அடித்து அமெரிக்கத் தலையை நிமிர்த்த வேண்டியிருந்தது. வெறும் ஒன்றேகால் லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட (90 சதவீதம் கருப்பின மக்கள்) மேற்கிந்தியத் தீவான கிரெனடா மீது படையெடுத்தது அமெரிக்க இராணுவம்.
வளைகுடாவிலிருந்து வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களுக்கு கிரனடாவின் ரசிய ஆதரவு அரசினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி கிரெனடா மீது குண்டு மழை பொழிந்தது. பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கொலை செய்து தனது வலிமையை நிருபித்தது அமெரிக்கா.
வேறெங்கும் நேரடி இராணுவத் தலையீடு செய்து தனது வலிமையை ரீகனால் நிரூபிக்க முடியவில்லையெனினும் ரசிய ஆதரவு நாடுகளில் தனது கூலிப்படைகள் மூலம் பதிலிப்போர் நடத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவு ரீகன் ஆட்சிக் காலத்தில் அதிகரித்தது.
எத்தியோப்பியா, நமீபியா, கென்யா, சூடான், மேற்கு சகாரா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ.வால் பயிற்றுவிக்கப் பட்ட கூலிப்படைகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டன. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுடன் கூட்டுச் சேர்ந்து அங்கோலாவிலும் மொசாம்பிக்கிலும் பதிலிப் போர் நடத்தியது அமெரிக்க அரசு.
வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க சமூகத்தில் தோற்றுவித்த ஜனநாயக உணர்வையும், வியத்நாம் தோல்வி தோற்றுவித்த அவமானத்தையும் ஒரே நேரத்தில் ஒழித்து ஆதிக்க வெறியைத் தூண்டும் ராம்போ வகை ஹாலிவுட் படங்கள் சரம் சரமாக வெளிவரத் தொடங்கின.
மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார், கவுதமாலாவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிகள் நாட்டையே கொலைக் களமாக்கிக் கொண்டிருந்தன. இராணுவ ஆட்சியை எதிர்த்த பாதிரியார்களும் கொலை செய்யப்பட்டனர். கன்னிகா ஸ்திரீகள் கற்பழிக்கப்பட்டனர். பத்திரிகை அலுவலகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. எல்லாவற்றையும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் உடனிருந்து இயக்கினர்.
சோவியத் ஒன்றியம் சிதறியது. போலி சோசலிசமும் ஒழிந்து முழுமையான முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது.
சி.ஐ.ஏ. கைக்கூலியும், பனாமாவின் சர்வாதிகாரியுமான நொரீகோ சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாமல் நிகராகுவாவின் “காண்ட்ராஸ்” கூலிப்படையுடன் போதை மருந்து – ஆயுத வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதை அறிந்தவுடன் பனாமாவின் மீது படையெடுத்து விமானத்தாக்குதல் நடத்தியது அமெரிக்க இராணுவம். தனது கையாள் மீது அமெரிக்கா எடுத்த இந்த ஒழுங்கு நடவடிக்கையில் 2000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நொரீகோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டான்.
பனாமா, கிரெனடா ஆகிய நாடுகள் மீது நடத்திய வெற்றிகரமான போர்கள், உலகெங்கும் நடத்திய எண்ணற்ற பதிலிப் போர்கள், ரசியாவுடனான ஆயுதக் குவிப்புப் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவை தலைநிமிரச் செய்ய 1980-90களில் ரீகன் செய்த இராணுவச் செலவு 2,848 பில்லியன் டாலர்கள். 1970-80களில் வியத்நாம் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்திய பத்தாண்டுகளில் ஆன இராணுவச் செலவோ 887 பில்லியன் டாலர்கள் மட்டுமே.
அமெரிக்கா பெரும் கடனாளியாவதற்கு இது வழிவகுத்த போதிலும், இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது; ஆப்கான் ஆக்கிரமிப்பு தோல்வியில் முடிந்தது; கிழக்கு ஐரோப்பா வீழ்ந்தது; சோவியத் ஒன்றியம் சிதறியது. போலி சோசலிசமும் ஒழிந்து முழுமையான முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது.
உலகின் கேள்விக்கிடமற்ற ஒற்றைத் துருவ ஆதிக்க சக்தியாக, உலக போலீசுக் காரனாக அமெரிக்கா தன்னை நிலை நாட்டிக்கொள்வதுடன் தொடங்குகின்றது – மறுகாலனியாக்கக் காலம் எனும் சமீபத்திய அத்தியாயம்.
மறுகாலனியாக்கம்!
உலக சமாதானம் என்று கூறி மறுகாலனியாதிக்கத்தை கட்டவழித்து விடும் அமெரிக்க அரசு
அமெரிக்க-சோவியத் வல்லரசுகளுக் கிடையேயான பனிப்போரும் பதிலிப் போர்களும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே, 80-களின் துவக்கத்திலிருந்தே பொருளாதார அரங்கில் ரசியா தோற்கத் தொடங்கிவிட்டது. உலகவங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள் ரசிய ஆதரவு நாடுகளில் கணிசமானவற்றைத் தம் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டன.
பன்னாட்டு நிறுவனங்களின் பூதாகார மான உலகு தழுவிய வளர்ச்சியானது உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, உழைப்புச் சந்தை, மூலதனம் ஆகிய அனைத்தையும் உலகமயமாக்கத் தொடங்கிவிட்டது. விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்தப் போக்கை மேலும் விரைவுபடுத்தியது. ஒரே உலகச் சந்தைக்கும். அதனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் உலக வர்த்தகக் கழகத்துக்குமான அடிப்படை உருவாகிவிட்டது.
ஆனால் பொருளாதார ரீதியில் உலக நாடுகளின் மீது தனிப்பெரும் மேலாண்மை செலுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை. மாறாக, கடனாளியாக இருந்தது. ஜெர்மனி (ஐரோப்பிய ஒன்றியம்), ஜப்பான் போன்ற வல்லரசுகள் பொருளாதார ரீதியில் அமெரிக்காவை விஞ்சத்தொடங்கின.
கடனாளியான நிலையில், பனிப்போர் எதிரியான ரசியாவும் வீழ்ந்துவிட்ட நிலையில் அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளைக் குறைத்திருக்க வேண்டும்; மாறாக அதிகரித்தது.
உலகின் ஏழை நாடுகளையும், தனக்குப் பணிய மறுக்கும் நாடுகளையும், பிராந்திய வல்லரசுகளையும் மிரட்டித் தாக்கிப் பணிய வைப்பது தன்னுடைய சேவைக்கு மற்ற நாடுகளிடம் குறிப்பாக ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளிடமும் நேட்டோ கூட்டாளிகளிடமும் கப்பம் வசூலிப்பது என்ற ரவுடியின் வேலையை மேற்கொள்ளத் தொடங்கியது அமெரிக்கா.
வளைகுடாப் போர் – அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம்
காபூல், ஆப்கானிஸ்தான்
1991-இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரை அறிவித்த ஜார்ஜ் புஷ் “அடுத்த அமெரிக்க நூற்றாண்டு துவங்கி விட்டது’ என்றார்.
அமெரிக்க நூற்றாண்டின் துவக்கம் இரண்டு லட்சம் ஈராக்கியர்களை உடனே கொன்றது. அங்கே வீசப்பட்ட அணு ஆயுதங்களும், பொருளாதாரத் தடையும் பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் கொன்று வருகின்றன. போர்ச் செலவை குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையில் கட்டியதுடன் ஈராக் மீது தண்டத்தொகை விதித்து வசூலித்து வருகிறது அமெரிக்க அரசு.
1991-இல் ஈராக் ஆக்கிரமிப்பு; 1992-இல் அமைதியை நிலைநாட்ட சோமாலியாவில் தலையீடு; 1992-இல் யூகோஸ்லாவியா மீது கப்பற்படை முற்றுகை; 1993-இல் போஸ்னியாவில் குண்டு வீச்சு 1994-இல் ஹெய்தியில் பொம்மையாட்சியை நிறுவுவதற்காகத் தலையீடு; 1995-இல் குரோஷியாவில் குண்டுவீச்சு 1996-இல் காங்கோவில் சர்வாதிகாரி மொபுடுவைக் காப்பாற்ற இராணுவத் தலையீடு; 1997-இல் லைபீரியாவிலும், அல்பேனியாவிலும் வெளிநாட்டவர்களைக் காப்பாற்றுவது என்ற பெயரில் தலையீடு; 1998- இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க் குற்றம் சாட்டி சூடான் மீது ஏவுகணைத் தாக்குதல்; பின்லாடனின் முகாமைத் தாக்குவது என்ற பெயரில் ஆப்கான் மீது ஏவுகணைத் தாக்குதல்; 1998 இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 1999-இல் யூகோஸ்லாவியா மீது படையெடுப்பு, அணு ஆயுதத் தாக்குதல்; 2000 ஏமனில் அமெரிக்கக் கப்பல் தாக்கப்பட்டதற்காகக் கடற்படை மிரட்டல்; 2001 மாசிடோனியாவில் அமைதி ஏற்படுத்த இராணுவத் தலையீடு; தற்போது ஆப்கானிஸ்தான்.
உலகில் எல்லா மூலைகளிலும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உலக மக்களை அச்சுறுத்துகின்றன. ஐரோப்பாவில் ஒரு லட்சம் துருப்புகள், பசிபிக் கடலில் ஒரு லட்சம் துருப்புகள், வளைகுடாவில் 25,000 துருப்புகள், இந்துமாக் கடலில் கடற்படைத்தளம், பிலிப்பைன்சில் தளம், தென் கொரியாவில் தளம், ஜப்பானில் டோக்கியோ நகரம் உள்ளிட்டு எங்கும் அமெரிக்க இராணுவத்தின் ‘பாதுகாப்பு’!
ரசியாவின் வீழ்ச்சிக்குப் பிறகுப் பிறந்திருக்கும் புதிய அமெரிக்க நூற்றாண்டில் அமெரிக்க அரசின் உலகக் கடமையையும் தொழிலையும் பற்றி சிகாகோ டிரிப்யூன் என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நாளேடு கீழ்க்கண்டவாறு பொருள்பட எழுதியது:
“ஒரு அடியாள் படையாகச் செயல்பட நாம் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் சந்தையில் (அதாவது இராணுவ வலிமையில்) நாம் பெற்றிருக்கும் ஏகபோக வலிமையை, நமது போட்டியாளர்களுக்கு (ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள்) விற்பதன் மூலம், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது நம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.”
உலகின் மிகப்பெரிய கிரிமினலும், ரவுடியும், போலீசும் – இவையனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த பயங்கரவாதியும் யார் என்பதற்கு இதைவிட வேறு விளக்கமே தேவையில்லை.
இந்த பயங்கரவாதிக்கெதிரான உலகப் போரைத் துவங்குவதொன்று தான் உலக நாடுகளும், மக்களும் நீடித்த சுதந்திரம் பெறுவதற்கான ஒரேவழி.
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2001. அமெரிக்க பயங்கரவாதம் – சிறப்பிதழ்.