விருத்தாசலத்தில் சேவா பாரதியின் “யோகா” பயிற்சிக்கு எதிர்ப்பு
மோடியின் பாசிச கோமாளி அரசு, மருத்துவ துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது மட்டுமில்லாமல் மருத்துவத்திற்கான மானியத்தை குறைத்து அதற்கு மாற்றாக ஒரு வருடத்திற்கு ஒரு நோயை தேர்வு செய்து அதற்கு மருத்துவத்திற்கு பதில் யோகா செய்து நோய்கள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதாக அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவா பாரதி அமைப்பு 21-08-2016 முதல் 31-08-2016 வரை சர்க்கரை நோய் இல்லாத பாரதம் உருவாக்குவோம் என்ற பெயரில் யோகா பயிற்சி நடத்தப்படும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
சேவா பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளில் ஒன்று. ரத்த தானம், இலவசக் கல்வி, மருத்துவ முகாம் போன்றவற்றின் பெயரில் ஒரு பகுதியில் ஊடுறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நேரடியான இயக்கம் இது.
இதைக் கண்ட மக்கள் அதிகார பகுதி தோழர்கள் 22-08-2016 அன்று, தமிழ்நாடு மார்க்ஸிட் கட்சி (TMP), CPML மக்கள் விடுதலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ்வாதி கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் அதிகாரத்தின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
மனுவில், “இந்த சேவாபாரதி என்பது இந்துத்துவா கொள்கையை பரப்பக் ஊடிய அமைப்பு. இந்த அமைப்பு சமூக சேவை என்ற பெயரில் மக்களிடையே சென்று மதங்களுக்கு எதிராக வன்முறையை தூண்டக் கூடிய அமைப்பு. இந்த அமைப்பு அரசு ஆண்கள் ஏல்நிலைப் பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி அளிக்க அனுமதித்தது சட்ட விரோதமானது. மேலும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. இது போன்ற மதவாத அமைப்புகளை பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனுமதிப்பது கல்விச் சூழலை கெடுக்கும்.” என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
“யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்” என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். “யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்” என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்
ஹோவ்னஜம் ஹீரோஜித்
”எனக்கு இந்த அமைப்பு முறையின் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது. இருப்பதெல்லாம் உயிர் பயம் ஒன்று தான். சென்ற மாதம் நான் நீதிமன்றத்திலிருந்து திரும்பும் போது போலீஸ் கமாண்டோ பிரிவு ஒன்று என்னை வழிமறித்துப் பிடித்தது. நான் வேலை பார்த்த அதே மேற்கு இம்பால் காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஐந்தாறு மணிநேரம் கொட்டடியில் வைத்து எனக்கு எந்ததெந்த தீவிரவாதக் குழுக்களோடு தொடர்பு உள்ளதென்று விசாரித்தார்கள். எனக்கு அவமானத்தில் உடலெல்லாம் பற்றியெறிந்தது… நான் அவர்களிடம் ‘அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் இதே இடத்தில் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்று சொன்னேன்”
– ஹோவ்னஜம் ஹீரோஜித், மணிபூர் போலீஸ் கமாண்டோ.
ஹீரோஜித்தின் வாழ்க்கை நம்மிடம் ஒரே சமயத்தில் கலவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது. மணிப்பூர் மாநில காவல் துறையின் இழிபுகழ் பெற்ற தீவிரவாத தடுப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய ஹீரோஜித், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் நூற்றுக்கும் அதிகமானவரகளை போலி மோதல்களில் கொன்று குவித்த ‘பெருமை’ கொண்ட ஹீரோஜித், ஒரு கட்டத்தில் வேண்டாத சுமையான போது அவரது எஜமானர்களால் கைவிடப்பட்டார். மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.
’கதையின்’ சுவாரசியம் என்னவென்றால், தற்போது ஹீரோஜித்தை முறைத்துப் பார்ப்பது ‘தீவிரவாதிகளின்’ துப்பாக்கிகள் அல்ல – முன்பு அவரே பெருமிதத்துடன் சுமந்து திரிந்த போலீஸ் துப்பாக்கிகள் தாம் அவை.
மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.
ஹீரோஜித் துப்பாக்கிகளின் பின்னிருந்து முன்னுக்கு வந்த கதையை – குறி பார்ப்பவரில் இருந்து குறி பார்க்கப்படுவராக மாறிய கதையை – நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கொலையாளியின் உளவியலைப் புரிந்து கொள்வது அல்ல நம் நோக்கம் – மாறாக, கொலைகளின் மீதும், கொலைகள் உண்டாக்கும் அச்சத்தின் மீதும், அந்த அச்சம் வழங்கும் அதிகாரத்தின், அதிகாரம் வழங்கும் திமிரின் மீதும் ஒரு மாபெரும் அமைப்பு நிலை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மொத்த நாட்டையும் மக்களையும் அவ்வாறானதொரு அமைப்பே ஆள்கிறது எனும் போது, ஹீரோஜித்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் மேலும் அதிகரிக்கிறது.
1981-ம் ஆண்டு ஒரு பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்த ஹீரோஜித், மணிபூரின் இந்து மைத்தாய் இனத்தைச் சேர்ந்தவர். ஹீரோஜித்தின் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த சில ஏக்கர் விவசாய நிலம் முப்போகம் நெல் விளையும் பூமி. நெல் வயல் போக எஞ்சிய நிலத்தில் மூங்கிலும் காய்கறிகளும் வெள்ளாமை செய்தனர். அவரது தந்தை விவசாயம் தவிர அரசு பொது சுகாதாரத் துறையில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வந்தார்.
ஹீரோஜித்தின் விடலைப் பருவ வாழ்க்கையின் அக்கம் பக்கமாகவே வடகிழகு மாநிலங்களின் தேசிய இனப் பிரச்சினைகள் சீர்குலைந்த நிகழ்வும் நடந்தேறியது. மலைகளாலும், பர்மிய எல்லைக் கோடாலும் சூழப்பட்ட மணிபூரின் சமதளப் பகுதியில் இந்து மைத்தாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாகவும் மலைப் பிரதேசங்களில் நாகா மற்றும் குக்கி பழங்குடி இனத்தவர்களும் வாழ்ந்தனர்.
நாகா பழங்குடியினர் தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை
வரலாற்று ரீதியில் சுயேச்சயான ஆளுகையின் கீழ் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலையை தக்கவைத்திருந்த நாகா பழங்குடியினர், தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய யூனியன் அரசுடன் நாகா பழங்குடியினர் நடத்தி வந்த ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1960-களில் ஒரு புதிய வேகத்தில் முன்னேறியது. உலகெங்கிலும் புரட்சிகர முகாம் மேல் கை எடுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் நடந்த நக்சல்பாரி பேரெழுச்சி வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்காக போராடி வந்த இயக்கங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
பெயரளவிற்கு கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் எனத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட தேசிய இன விடுதலைப் போராட்டக் குழுக்கள், தங்களது லட்சியமாக ‘சோசலிசத்தை’ அறிவித்துக் கொண்டன. இந்நிலையில் அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகள் வரை வடகிழக்கின் போராளி இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இழுபறி நிலை நீடித்து வந்தது. இறுதியில் வெற்றிகரமாக போராளிக் குழுக்களுக்குள் ஊடுறுவிய இந்திய உளவுத்துறை அவற்றை ஒன்றுக்கு எதிராக ஒன்றாகத் திருப்பி விட்டது.
எண்பதுகளில் நாகாக்களுக்கு எதிராக குக்கி பழங்குடியினரையும் மைத்தாய் இனத்தவரையும் நிறுத்துவதில் இந்திய உளவுத்துறை வெற்றி பெற்றது. பத்தே ஆண்டுகளில் தேசிய இன விடுதலைப் போராட்டம் எனப்பட்டது, மற்ற இனத்தவருக்கு எதிரானதாக மடைமாறி பின் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதாக சீரழிந்து போனது. இன்றைய தேதியில் மைத்தாய் இனத்தவர்கள் மத்தியில் மட்டும் சுமார் 26 ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. நாகா குக்கி இனங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட இயக்கங்களும் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. ஒரு தேசிய இனப் போராட்டத்தில் தலையிட்டு இத்தகைய உள் சண்டைகளை உருவாக்குவதில் ஈழம், காஷ்மீரிலும் இந்திய உளவுத் துறை வெற்றி பெற்றதும் இப்படித்தான்.
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்
நாகா தேசிய விடுதலைக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தின் வலுவான பின்புலத்தோடு செயல்பட்ட மைத்தாய் குழுக்கள் தொன்னூறுகளின் துவக்கத்தில் விறுவிறுப்பாக செயல்பட்ட காலத்தில் தான் விடலை வயதில் இருந்த ஹீரோஜித்தின் உலக கண்ணோட்டம் உருப்பெறத் துவங்கியிருந்தது. ஹீரோஜித்தின் தந்தை அரசு வேலையில் இருந்ததாலும், அவரது குடும்பத்திடம் வளமான விவசாய நிலம் இருந்ததும் பல்வேறு மைத்தாய் குழுக்களின் கண்களை உறுத்தியது. ஹீரோஜித்தின் வீட்டுக் கதவுகளை நிதி வசூலுக்காக அடிக்கடி மைத்தாய் போராளிகள் தட்டத் துவங்கினர்.
தனது பதினேழாவது வயதில் ஒரு நாள் வசூலுக்காக வந்த குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹீரோஜித், நிதி வசூலுக்காக தனது குடும்பத்தை தொல்லை செய்வதை நிறுத்தினால் தானே இயக்கத்தில் சேர்வதாக முன்வந்திருக்கிறார். பதறிப் போன குடும்பத்தினர் தலையிட்டு ஹீரோஜித்தை மீட்டிருக்கிறார்கள் – எனினும், தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொடியனுக்கு பாடம் புகட்ட நினைத்த மைத்தாய் போராளிகள் ஹீரோஜித்தை அடித்துத் துவைத்திருக்கிறார்கள்.
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்.
பன்னிரண்டாம் வகுப்பு தேறிய பின் கீழ்நிலைக் காவலராக பணிக்குச் சேர்ந்த ஹீரோஜித் தனது இருபத்தியோராம் வயதில் – 2002 டிசம்பரில் – தனது கொலைக்கணக்கைத் துவங்கினார். அதுவரை அரசியல் ஸ்திரத்தன்மையற்று ஊசலாடிக் கொண்டிருந்த நிலை மாறி அதே ஆண்டு மார்ச் மாதம் ஒக்ராம் இபோபி சிங்முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். தொன்னூறுகளோடு தேசிய இன போராளிக் குழுக்களையும் அவற்றின் லட்சியங்களையும் சமாதிகட்டி விட்டிருந்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அடுத்து அவசரமான தேவையாக இருந்தது “அமைதி”. எனவே, ஆயுதக் குழுக்களை கட்டுக்குள் வைக்கவும், கட்டுமீறிச் செயல்படுகிறவர்களை ஒழித்துக்கட்டவுமான தேவை அந்த சமயத்தில் எழுந்திருந்தது.
மேற்கு அயர்லாந்து போலீசிடம் எதிர்-பயங்கரவாத போர்த் தந்திரங்களில் (Counter-terrorism strategy) பயிற்சி பெற்றவரும், காஷ்மீர் போலீசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான யும்னம் ஜோய்குமாரை மணிபூர் மாநில பணிக்கு கோரிப் பெற்றார் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருந்த இபோபி சிங். புலனாய்வு செய்வது, விசாரணை அறிக்கை தயாரிப்பது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவது போன்ற வழக்கமான நடைமுறைகளின் மேல் நம்பிக்கையற்றவரான ஜோய்குமார், சந்தேகத்திற்குரிய யாரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்கிற சித்தாந்தம் கொண்டவர்.
Dr. நிமாய்சந்த் லுவாங், பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினர்கள் முன்னாள் DGP ஜாய்க்குமார் மற்றும் மூத்த அரசியல்வாதி ஒக்ரம் ஜாய்
சுருங்கச் சொன்னால், கும்பல் கும்பலாக மக்களைக் கொன்று குவித்து விட்டால் எப்படியும் அந்த உயிர்களில் ஒன்றாவது ’பயங்கரவாதியாக’ இருப்பது நிச்சயம் – ஒருவேளை இல்லாவிட்டாலும் பழுதில்லை, கொலைகள் விளைவிக்கும் அச்சம் மக்களை அரசுக்கு எதிராக செயல்பட விடாமல் தடுக்கும் என்பதே ஜோய்குமார் மேலை நாடுகளில் கற்ற, காஷ்மீரில் சோதித்துப் பார்த்த “தீவிரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளின் சாராம்சம். மாநில போலீசில் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோய்குமார் துடிப்பான காவலர்களைக் கொண்டு அதிரடிப்படை ஒன்றை அமைக்கிறார் – ஹீரோஜித் எந்தத் தயக்கமும் இன்றி அதில் சேர்கிறார். அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்.
“எனக்கு என்ன தேவையோ அதை நான் செய்யத் துவங்கிவிட்டேன்” – தனது முதல் கொலைகளை செய்து முடித்தபின் ஒரு ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும், அப்போது தனக்கு இப்படியாகத் தோன்றியதாகவும் குறிப்பிடுகிறார் ஹீரோஜித்.
அதன்பின் ஹீரோஜித் செய்த போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கையை சரியாகச் சொல்லத் திணறுகிறார். எண்ணிக்கையை நினைவு வைக்க முடியாத நிலையில், அதற்கெனத் தனியே ஒரு இரகசிய கையேட்டைப் பராமரித்துள்ளார். அவரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை நினைவுபடுத்திச் சொல்லுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
”எப்படியும் நூற்றுக்கும் மேல் தான் இருக்க வேண்டும்” என்கிறார்
புதிதாக ஒரு உயிரைப் பறித்த நாளில் வீடு திரும்பும் ஹீரோஜித் உள்ளே நுழையும் முன் மனைவியை அழைப்பார். தனது உடைகளை வீட்டுக்கு வெளியே களைந்து விட்டு தலை முழுகிய பின் தான் வீட்டினுள் நுழைவார். தனது கணவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான் என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்ளும் போது, கொலைகளின் எண்ணிக்கை நூறைக் கடந்திருந்தன. போலி மோதல் ஒன்றை அரங்கேற்ற போலீசுக்குத் தேவைப்பட்டதெல்லாம் வெறும் சந்தேகம் மட்டும் தான்.
அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்
முகமது ஆசாத் கான் என்ற ‘தீவிரவாதியை’ ஹீரோஜித்தின் அதிரடிப்படைக் குழு வளைத்துப் பிடித்த போது அவனது வயது 12 – பிடித்த இடம் அவனது வீடு – ‘தீவிரவாதி’ பிடிபட்ட போது ஈடுபட்டிருந்த காரியம் – அவனது தாயின் மடியில் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆசாத் கானின் குடும்பத்தினரின் கண்ணீரும் கதறலும் ஹீரோஜித்தையும் அவரோடு உடன் சென்ற போலீசாரையும் கடுகளவும் அசைக்கவில்லை. அந்தப் பையனை வீட்டிலிருந்து தர தரவென இழுத்து வந்த அரசின் ’வீரர்கள்’, அவன் குடும்பத்தார் பரிதவிப்போடு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனை அருகிலிருந்து வயலில் ஓட விட்டு முதுகில் சுட்டுக் கொன்றனர்.
“எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது.. சரியாக குறிபார்ப்பேன் என்பதைக் கடந்து, எனது வேலையை மிகச் சரியாக செய்வேன் என்று எனது அதிகாரிகளுக்குத் தெரியும்” மனசாட்சியோ, ’வீரர்களுக்கு’ நியாயவுணர்ச்சியோ மனதின் எந்த மூலையிலும் எட்டிப் பார்த்து விடக்கூடாது என்பதே அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. உத்தரவை எந்தக் கேள்விகளும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் வீதிகளில் உரிமை கேட்டுப் போராடிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கையாண்ட விதத்தைப் படித்தவர்களுக்கு உள்ளம் பதறியிருக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து, அவர்கள் கையிலிருக்கும் குச்சிகளைப் பிடுங்கியெறிந்து விட்டு அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று ஊருக்கு வெளியே அவர்களுக்குப் பழக்கமில்லாத இடத்தில் விட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் போலீசின் மனசாட்சியும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஆசாத் கானைச் சுட்டுக் கொன்ற மணிபூர் போலீசின் மனசாட்சியும் வல்லுறவுக்கு ஆளான தில்லியைச் சேர்ந்த இளம்பெண் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை சொருகிக் கொன்றவனின் மனசாட்சியும் வேறு வேறு அல்ல.
ஹீரோஜித்தின் மனசாட்சியை உலுக்கப் போகும் சம்பவம் 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் காலை உணவுக்காக ஹீரோஜித் அமர்ந்திருந்த போது சக போலீஸ்காரர் தோயாமாவிடமிருந்து வயர்லெஸ் தகவல் ஒன்று கிடைக்கிறது. பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையின் அருகே அடையாளம் தெரியாதவர்களால் போலீஸ் ரோந்துப் படை ஒன்று தாக்கப்பட்டதாக அறிந்த ஹீரோஜித் உடனே அங்கு விரைகிறார்.
போலி என்கவுண்ட்ரில் கொல்லப்பட்ட சஞ்சித்
“நான் அங்கே சென்ற போது தொயாமா 22 வயது பையன் ஒருத்தனை இழுத்து வந்தார். அவன் பெயர் சஞ்சித். நாங்கள் அவனிடம் விசாரித்துப் பார்த்தோம். அமைதியாக இருந்தான். அவன் தான் சுட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்த நேரம் பார்த்து அவனது செல்பேசி அழைத்தது. நான் தான் அதை எடுத்தேன்… செல்பேசியில் அழைத்தவர் சஞ்சித்தை விட்டு விடுமாறும்.. தேவைப்பட்டால் காசு வேண்டுமானாலும் கொடுத்து விடுவதாகவும் சொன்னார்.. எனக்கு இது ஒன்றே போதுமான ஆதாரமாக இருந்தது”
சஞ்சித்தை பக்கத்திலிருந்த மருந்துக் கடைக்குள் அழைத்து சென்று தனது கைத்துப்பாக்கியால் ஆறு முறை சுட்டுக் கொன்றார் ஹீரோஜித்.
“நான் எனது மேலதிகாரி அகோய்ம் ஜகலஜீத்திடம் சஞ்சித் பிடிபட்ட தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அவர் தீர்த்துக் கட்டிவிடுமாறு கூறினார். போலீஸ் தேடுதல் வேட்டையைக் கேள்விப்பட்டு வந்த மீடியாக்கள் சுற்றிலும் இருக்கிறார்களே என்றேன். அதற்கு, டி.ஜி.பி அனுமதி வாங்குவதையும் முதல்வருக்கு தகவல் அளிக்க வேண்டியதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. மீடியாவையும் சமாளித்துக் கொள்ளலாம்.. நீ சீக்கிரம் அவனை முடிக்கிற வழியைப் பார் என்று தெரிவித்தார்” என்கிறார் ஹீரோஜித்.
போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூர் தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின்படி மொத்தம் 1,528 போலி மோதல் கொலைகளை மணிபூர் போலீசார் அரங்கேற்றியுள்ளனர். சஞ்சித்தின் கொலையும் அந்த எண்ணிக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்க வேண்டிய ஒன்று தான் – ஆனால், தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது கேமராவில் பதிவு செய்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவற்றை வெளியிட்டார்.
சஞ்சித் மருந்துக் கடைக்குள் நின்று கொண்டிருந்த ரோந்துப் படையினரின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், திருப்பி தாக்கியதில் இறந்து விட்டாரென்றும் போலீசு அதிகாரிகள் எழுதிய விசாரணை அறிக்கையின் மை காய்வதற்குள் பத்திரிகையாளர் வெளியிட்ட புகைப்படங்கள் தெகல்காவில் வெளியாகியிருந்தது. அந்தப் புகைப்படங்களில், சஞ்சித் அமைதியாக போலீசாருடன் நடந்து வருவதும், போலீசார் விசாரிக்கும் போது பொறுமையாக பதில் சொல்வதும், பின்னர் அவனைத் தரதரவென இழுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குள் செல்வதும், சற்று நேரம் கழித்து பிணமாக இரண்டு கால்களையும் பிடித்து இழுத்து வந்து வாகனம் ஒன்றினுள் வீசுவதும் தெளிவாக பதிவாகியிருந்தது.
போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூரி தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர்
ஏதுமறியாத இளைஞன் ஒருவன் பச்சையாக படுகொலை செய்யப்பட்டது ஆவணப் பூர்வமாக வெளியானதைக் கண்ட மனசாட்சியுள்ளவர்கள் திகைத்துப் போனார்கள் – மணிப்பூர் மக்களோ கொந்தளித்து எழுந்தனர். அடுத்த வந்த சில வாரங்களுக்கு போராட்டங்களால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்து போனது. போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் மாநில அரசு நிர்வாகம் திணறியது. உடனடியாக இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்ட மாநில அரசு, ஹீரோஜித்தைக் கை கழுவியது. அவரைத் தற்காலிக இடைநீக்கம் செய்த போலீசு, தற்போது கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளது.
ஹீரோஜித் போலீசாக வேலை பார்த்த நாட்களில் மிகவும் நேர்மையானவர். கை நீட்டி லஞ்சம் வாங்காதவர். இடைநீக்கம் செய்யப்படுவதற்கு ஒருவருடம் முன்பு சிறந்த போலீசுக்கான மாநில அரசின் விருதை வாங்கியவர். அவரைப் பொறுத்தவரை போலீசு வேலை என்பது சம்பளத்திற்கானதல்ல – அது ஒரு கவுரவம். சீருடையைப் பார்த்து ஒதுங்கிப் போகும் மக்களின் அச்சம் ஹீரோஜித்திடம் ஒரு போதையை ஏற்படுத்தியது – அந்த போதையைத் தவிற பிற வஸ்துக்களை வாழ்நாளில் தொட்டே பாராத ’நல்லவர்’ ஹீரோஜித். குடியோ, புகையோ, பெண்கள் சகவாசமோ இல்லாத அவருக்கு லஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் இல்லை.
போலீசு வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின் தண்ணீரைப் பிரிந்த மீனாக துடித்திருக்கிறார் ஹீரோஜித்
சீருடையில்லாத வாழ்க்கை ஒருபுறம், தான் மிகவும் நேசித்த காவல்துறை ஒரு சிக்கல் என்று வந்த போது பல்லி வாலைத் துண்டிப்பது போல் கைகழுவி விட்டது இன்னொரு புறம், அடுத்து சொந்தக்காரர்கள் மத்தியில் கண்ணியமான போலீசுக்காரனாக அறியப்பட்டதெல்லாம் இப்போது சாயம் வெளுத்துப் போய் வெறும் சீருடைக் கொலையாளியாக இழிந்து போன நிலை, தனது கணவன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஈவிரக்கமின்றித் தீர்த்துக் கட்டிய கொலைகாரன் என்பதை அறிந்த அவர் மனைவியின் அதிர்ச்சி – இவையத்தனையும் ஒரு சேர ஹீரோஜித்தை உளவியல் சித்ரவதைக்குள்ளாக்கியதில் அவர் மன அழுத்த நோயில் வீழ்கிறார்.
ஹீரோஜித் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில்
சதா காலமும் தன்னை சுற்றிச்சுழலும் பழைய வாழ்க்கையின் நினைவுகளும், அவரால் பறிக்கப்பட்ட உயிர்களும், அவரைக் கண்டு அஞ்சிய விழிகளும் ஹீரோஜித்தின் தனிமையை உலுக்கியெடுத்திருக்க வேண்டும். வெகு சீக்கிரமாகவே அவர் போதைக்கு அடிமையானார்.
”நான் எப்போதும் புகைத்ததில்லை. ஆனால், தூக்கமற்ற இரவுகளைக் கழிக்க வேறு வழியின்றி போதை மருந்துகளை நாடினேன்”
உறக்கத்துக்காக போதை மருந்துகளை நாடிய ஹீரோஜித், ஒருகட்டத்தில் அவற்றுக்கு முழுமையாக அடிமையாகிவிட்ட நிலையில் தான் துறை விசாரணைகளின் உக்கிரமும் அதிகரிக்கிறது. அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதும், பல மணி நேரங்கள் விசாரணைக் கைதிகளோடு அமர வைக்கப்படுவதும், பின்னர் “எந்த இயக்கத்தோடு உனக்கு தொடர்புள்ளது” என்ற ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப பல பணி நேரங்கள் கேட்பதுமாக நடந்த விசாரணை நடவடிக்கைகள் ஹீரோஜித்தை உளவியல் ரீதியில் சித்தரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
என்றாலும், இன்றைக்கும் தான் செய்த கொலைகள் தவறானவை என்றோ, தனது செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்றோ ஹீரோஜித் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை இறந்தவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே. மேலும், தனது முந்தைய போலீசு வாழ்க்கையை இன்னும் நேசிக்கிறார். அந்த வேலை அளித்த அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மக்களிடம் உண்டாக்கிய அச்சத்தையும் அந்த அச்சம் வழங்கிய சமூக அந்தஸ்த்தையும் நினைத்து மருகுகிறார். எனினும், தான் உயிராக நேசித்த போலீசைக் காட்டிக் கொடுப்பதற்கு ஹீரோஜித் தயங்கி வந்த சமயத்தில் தான் வண்டியின் அச்சு உடையத் தேவையான கடைசி மயிலறகை போலீசார் அதன் மேல் தூக்கிப் போட்டனர்.
அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது
ஹீரோஜித்துடன் அதிரடிப்படையில் வேலை பார்த்த நண்பர்களைக் கொண்ட குழு ஒன்று அவரது வீட்டை சோதனையிட்டது. மனைவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கிரிமினலைப் போல் அவரை இழுத்துச் செல்கிறார்கள். விசாரணை முடிந்து திரும்பிய ஹீரோஜித், மனதிற்குள் புழுங்குகிறார். அவர் முன் இருந்தது இரண்டே வாய்ப்புகள் தான் – ஒன்று, அமைதியாக இருந்து சஞ்சித் மரணத்திற்கான பழி அனைத்தையும் ஏற்றுக் கொள்வது; அல்லது, உண்மையை வெளியிடுவதன் மூலம் சஞ்சித் மட்டுமின்றி நடந்த கொலைகள் அத்தனையும் உத்தரவின் படி தான் நடந்தது என்பதை நிரூபித்து அதிகபட்ச தண்டனையில் இருந்து தப்பிப்பது. உடனடியாக பப்லு என்கிற வழக்கறிஞரைத் தொடர்பு கொள்கிறார். போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் சார்பாக சில நீதிமன்ற வழக்குகளை கையாண்டு வரும் பப்லு, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.
2013-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இரகசிய இடம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து உண்மைகளையும் வெளியிட்டார் ஹீரோஜித். முதன் முறையாக போலி மோதல் கொலைகள் எப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றன, அதிகாரிகள் கொல்லப்பட வேண்டியவர்களை எப்படி தீர்மானிக்கின்றனர், கொலைக்கான உத்தரவுகள் யாரால் பிறப்பிக்கப்படுகின்றன, கொலை நடந்த பின் எழுதப்படும் கதைகளை உருவாக்குவது யார், ஊடகங்களின் மூலம் அந்தக் கதைகளை எப்படி பரப்புகின்றனர், ,நீதிமன்றத்தை சமாளிப்பது, மற்றும் இன்னபிற அரசு நடைமுறைகள் என – அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது.
வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த படை வீரர்களைக் குவித்து போராடும் மக்களை அடக்கும் உத்தி ஒரு கட்டத்தில் பலனளிக்காததோடு, இந்திய ஆளும் வர்க்ங்களுக்கு கசப்பான அனுபவங்களான போதுதான் ஒடுக்கப்படும் அதே மக்கள் பிரிவிலிருந்து, அதே தேசிய இனத்திலிருந்து ஹீரோஜித், ஜோய்குமார் போன்றவர்களை தெரிவு செய்கிறது ஆளும் கும்பல். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை இயந்திரத்தின் பாகங்களாக ஹீரோஜித் போன்று ‘பாதிக்கப்பட்ட’ உள்ளூர்வாசிகளே பங்குபெறும் போது அடக்குமுறையின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கிறது
இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்?
ஹீரோஜித் வெளியிட்ட உண்மைகளை இந்தியா வழக்கம் போல கடந்து சென்றாலும், வடகிழக்கு மாநிலங்களில் அது உண்டாக்கிய அதிரவலைகளோ இன்றளவும், அடங்கவில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் மாத்திரம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கா விட்டால், ஹீரோஜித்துக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்காது என்கிற எதார்த்தத்தையும் சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். தான் செய்த கொலையொன்று படம் பிடிக்கப்பட்டு அம்பலப்பட்ட பின்னும் தனது போலீசு புத்தியை மாற்றிக் கொள்ள முன்வராத ஹீரோஜித், தான் வழிபட்ட போலீசு இயந்திரம் தனக்கே எதிராக திரும்பிய பின் தான் விழித்துக் கொள்கிறார்.
எனில், இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்? மணிப்பூர் என்கிற சின்னஞ்சிறிய மாநிலம் ஒன்றில் மட்டும் சுமார் அயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல்களிலும், கொட்டடிச் சித்திரவதைகளிலும் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்? ஹீரோஜித் பேசி விட்டார்.. தண்டகாரன்யத்திலும், காஷ்மீரிலும் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிரக்கணக்கான படை வீரர்களிடம் இது போல் எத்தனை கதைகள் இருக்கும்? அவர்களால் பறிக்கப்பட்ட அப்பாவி உயிர்கள் எழுப்பும் பேச இயலாக் கேள்களுக்கு பதில் சொல்வது யார்?
உரிமை கோரிப் போராடும் மக்களை சித்திரவதை செய்து ஒடுக்கும் போலீஸ்காரர்கள் தங்கள் அந்திமக் காலத்தைக் குறித்து சிந்திக்கட்டும்; சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை வதைத்து விட்டு உங்களால் நிம்மதியாகக் கண் மூட முடியுமா? ஒரு நாள் விழித்துக் கொள்ளப் போகும் மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
அடுத்த முறை லத்தியை ஓங்கும் முன் ஹீரோஜித்தை நினைத்துப் பாருங்கள்
”அப்பா, நீ ஒரு கொலைகாரனா என்று கேட்கப் போகும் எனது மகனுக்கு நான் என்ன பதிலைச் சொல்லப் போகிறேன்? – என்கிறார் ஹீரோஜித்
மக்கள் கலை இலக்கியக் கழக்தின் துவக்க காலத்திலிருந்து செயல்பட்டு வந்த தோழர் மணிவண்ணன் திங்கள் 22.08.2016 அன்று அதிகாலையில் காலமானார்.
தோழர் மணிவண்ணன்
ம.க.இ.க, கோவைக் கிளை துவங்கப்பட்ட 1983-84-ம் ஆண்டிலிருந்து துடிப்புடன் செயல்பட்ட தோழர், சென்ற ஆண்டு 2015 வரை அக்கிளையின் செயலராக பணியாற்றினார். சென்ற ஆண்டிலிருந்து ம.க.இ.க தோழர் மணிவண்ணன், மக்கள் அதிகாரத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.
65 வயதான அவருக்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. பிறகு நுரையீரலில் ஒரு கட்டி அறியப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நோய்களெல்லாம் கட்டுக்குள் வந்த போது முழங்காலில் வலி வந்து பிறகு அதை சற்று தாமதமாக டி.பி என்று மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். அதற்கு மருத்துவம் பார்த்த போது திடீரென்று அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை முன்னதாகவே மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இம்மாதங்களில் அவரது மருத்துவத்திற்காக தோழர்கள் பெரு முயற்சி எடுத்தனர். சென்னையில் சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்காகவெல்லாம் அவர் வந்து சென்றார். இந்நிலையில்தான் அவர் நோய்வாய்ப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மரிப்பதற்கு முந்தைய கணங்கள் வரை சுயநினைவோடு இருந்தார். இறுதியில் அவருக்கு டயாலிசிஸ் நடக்கும் போது மரணமடைந்தார்.
இறப்பதற்கு முந்தைய நாட்களில் சிகிச்சைக்காக அவர் சென்னை வந்த போது அவரை சந்தித்தோம். முழங்காலில் வலி என்பதைத் தாண்டி அவருக்கு வேறு குறைகள் இல்லை. மருத்துவரிடம் பேசும் போது தற்செயலாக சில அறிகுறிகளை சொன்னார். ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று தோழர்கள் கேட்ட போது அவரிடம் விடையில்லை. மருத்துவம் குறித்து என்ன மாதிரி நடைமுறைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோழர்கள் ஒரு தாளில் எழுதி அவரிடமும் உடன் வந்த தோழரிடமும் விளக்கினர். ஒரு வேளை இந்த நேரங்களில் அவரது அமைதிக்கு காரணம் தன்னால் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமமாக இருக்குமோ என்று அவர் யோசித்திருக்கவும் கூடும். அதுதான் தோழர் மணி வண்ணன்.
பேசிக் கொண்டிருந்து போது கடைசியாக மக்கள் அதிகாரம் நடத்திய கூட்டத்திற்கு தன்னால் செல்ல முடியவில்லை என்று குறைபட்டார். கோவை ம.க.இ.க கிளை வேலை, புதிய கலாச்சாரம் விற்பனை குறித்து பகிர்ந்து கொண்டார். எமது அமைப்புக்களில் இருந்து சொந்த வாழ்க்கை நலன்களுக்காக வெளியேறிய ஒரிருவர் அவதூறு செய்வது குறித்து அறிவீர்களா என்று நம்மிடம் கேட்டார். குப்பைகளை உற்பத்தி செய்வோரைக் கண்டால் பலரும் முகம் சுளிக்கவே செய்வர். அவற்றையெல்லாம் பொதுவானவர்களோ இல்லை நம்மை தீவிரமாக எதிர்ப்போர் கூட சட்டை செய்வதில்லை என்ற போது சிரித்தார். தொழிலாளி வர்க்கத்திலுருந்து வந்த அவரிடம் எப்போதும் பொறுமையும், அர்ப்பணிப்பும் கூடவே பயணித்தது.
கோவை சாய்பா காலனி டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் தோழர் மணிவண்ணன்.
மக்கள் அதிகாரம் அறிவித்த “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்திற்காக 2015-ம் ஆண்டில் சிறை சென்றார். கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர், தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர். வந்த போலீசோ கடையை நொறுக்கி, பாட்டில்களை தீ வைத்தாலும் ஓடாமல் அங்கேயே எங்களுக்காக நிற்கிறீர்களே என்று வியந்தார்கள்.
கோவை மத்திய சிறையில் ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறை அதிகாரிகளோ, “தோழர் மணிவண்ணன், இம்முறையோடு நீங்கள் 25-ஆவது முறையாக சிறைக்கு வருகிறீர்கள், எனவே எங்களுக்கு விருந்து வைக்க வேண்டும்” என்றார்களாம். தோழரோ வேடிக்கையாக சிறை வைத்த நீங்கள்தான் விருந்து தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆம், நண்பர்களே தோழர் மணிவண்ணன் கிட்டத்தட்ட 25 முறை சிறைக்கு சென்றிருக்கிறார்.
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
கோவை பகுதி என்பது தமிழகத்தில் ஒரு குட்டி காஷ்மீர் போல. இது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். கோவை குண்டு வெடிப்பை ஒட்டி இந்து மதவெறியர்கள் அங்கே பெரும் கலவரம் நடத்திய பிறகு அந்நகரத்தில் எந்த உரிமையும் யாருக்குமில்லை எனலாம். குறிப்பாக சுவரொட்டி ஒட்ட தடை, கூட்டம் நடத்த தடை, பேருந்திலோ – மக்கள் கூடுமிடங்களிலோ பிரச்சாரம் செய்யத் தடை என்பது தற்போது வரை அமலில் இருக்கிறது. இதை மீறும் போது போலீசு தேடிவந்து கைது செய்யும், சிறையிலடைக்கும்.
ம.க.இ.க மற்றும் அதன் தோழமை இயக்கங்களின் போராட்டங்களுக்காக மற்ற கிளைகள் – பகுதிகள் தமது பிரச்சார திட்டங்களை போடும் போது, கோவை தோழர்களோ அதற்காக சிறைக்கு செல்லும் நாட்களையும் சேர்த்து போட்டுக் கொள்ளவேண்டும். அப்படித்தான் தோழர் மணிவண்ணன் 25 முறை சிறைக்கு சென்று பல மாதங்களை கழித்துள்ளார்.
திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம்.
இந்த பிரச்சார இயக்கங்களுக்கான வேலைகளை திட்டமிடும் போது இதனால் கைது செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது…….அதனால்………என்ற தயக்கமோ, சுணக்கமோ அவரிடத்தில் இல்லை. அப்பகுதி தோழர்களிடத்திலும் அது இல்லை. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் கலவரம் நடத்திய நாட்களிலேயே கூட தோழர்கள் எதிர்ப்பியக்கத்தை வீச்சாக நடத்தினர். கோவையில் புரட்சிகர அமைப்புக்களின் தொடர்ச்சியை இத்தகைய தோழர்களின் போராட்ட உறுதியே இன்று வரை காப்பாற்றிவருகிறது என்றால் அது மிகையல்ல.
திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம். மண்ணின் மைந்தர் என்பதற்கும் மேலாக அவர் ஒவ்வொரு வீட்டோடும், குடும்பத்தோடும் அன்போடு ஐக்கியமானார். ஒண்டிப்புதூரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் எல்லா ஆண்டுகளிலும் அவர் சென்றிருப்பார். நிதி வசூலாகட்டும், கூட்டங்களுக்கு அழைப்பதாகட்டும் மக்களை உரிமையோடு அழைப்பார், தேவைப்பட்டால் விமரிசிப்பார்.
கால்டுவெல் பிறந்தநாள் கருத்தரங்கத்தில் பேசும் போது
தனது உடல் நலன் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இந்த கடைசி ஆண்டுகள் தவிர முந்தைய காலத்தில் அவர் அனேக தருணங்களில் மருத்துவமனைக்கோ, மருத்துவர்களையோ சந்தித்து அபூர்வம். பல நேரங்களில் “அஞ்சால்” அலுப்பு மருந்துதான் அவரது சர்வரோக நிவாரணி. இதை தோழர்கள் கேலி செய்தாலும், விமரிசனம் செய்தாலும், தனது உடல் நலம் குறித்து அவர் கவலைப்பட்டதில்லை.
அவரது அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ஒரு உள்ளூர் நண்பர், இவரிடம் குறையேதும் இல்லை, ஒரு சின்ன கெட்ட பெயர் கூட மக்களிடத்தில் இல்லை என்று வியந்தார். அந்த அளவுக்கு மக்களோடு இரண்டறக் கலந்து ஒரு எளிமையான கம்யூனிஸ்டாக நேசிக்கப்பட்டார். இதை தோழர் மருதையன் தனது இறுதி உரையில் விரிவாக விளக்கினார்.
கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர்
ஒண்டிப்புதூர் பகுதி முழுவதும் அவரது மரண அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு, அவர் வாழ்ந்த தெருவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. பகுதி வாழ் மக்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். அவரோடு பணியாற்றிய இளந்தோழர்கள் குறிப்பாக பெண் தோழர்கள் கடைசி வரை அழுது கொண்டே இருந்தனர். தோழரது உறவினர்களோ தமது குடும்ப உறுப்பினர் கட்சி கட்சி என்று சீரழிந்து போனானே என்று வழக்கமான புலம்பலுக்கு பதிலாக அவரது பணி குறித்து மற்ற தோழர்கள் பேசும் போது மரியாதையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்படி தனது குடும்ப உறுப்பினர்களிடமும் அவர் நேசத்திற்குரியவராக இருந்தார். ஒரே நகரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் அவரது காலம் தோழர்களோடும், மக்களோடும்தான் அதிகம் பயணித்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார்.
இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் கூட கலந்து கொண்டனர். கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர். மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்தனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார். தோழர் மணிவண்ணன் எப்படி ஒரு இயல்பான கம்யூனிஸ்டாக வாழ்ந்தார் என்பதை எடுத்துரைத்தார்.
பிறகு தோழர்கள் வீர வணக்கம் செலுத்தி முழக்கமிட அவரது உடலைத் தாங்கிய வாகனம் மெதுவாக ஊர்வலமாக புறப்ப்ட்டு மின்தகன மைதானத்திற்கு வந்தது. தோழர்களின் அழுகை, அஞ்சலி, முழக்கங்களுக்கு மத்தியில் தோழர் மணிவண்ணன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.
The regime of Modi is going to achieve its long term goal. Yes, at any cost the versatile Indian culture will be converted into monocultured, Hindu-Hindi-(H)India. The recent moves of the ruling BJP proves this quick phase change, without a doubt.
It is a well known fact that, for the past two years various hindutva activities are imposed with the help of its state authority. Starting from the change of name boards of various departments of IITs from English to sanskritized Hindi, Teachers day into “Guru Utsav”, steps towards changing official language as Hindi-Sankrit in all central government offices, celebrating and promoting the international Yoga day as a launch vehicle for Sanskrit imposition, promoting RSS ideologues as chairpersons or HOD’s of various educational and research institutes etc. Particularly, for the past six months the BJP government’s move towards this sankritization of Indian education system is faster than ever.
In mid February 2016 the MHRD constituted a committee, headed by retired IAS officer N.Gopalsamy which submitted its document with ten years perspective plan to prepare a vision and roadmap document along with action plans for development of Sanskrit in India. The committee also suggested promoting Sanskrit as a scientific lingua franca from Kindergartens to research level. Following this, in the first week of April 2016 the HRD Ministry dispatched an advisory notice to all Indian Institutes of Technology (IITs) to consider the idea of offering Sanskrit as an elective course to their students. It also advised the IITs to create posts and appoint teachers for the above purpose with the approval of their respective Board of Governors.
Immediately following the above announcement, on May of 2016, the ruling BJP government proposed to form of the vedic education board (Veda Vidya), that will be set be up under the Maharshi Sandipani Rashtriya Veda Vidya Pratishthan (MSRVVP), a Vedic education organization that operates out of Ujjain. This will be the country’s first Vedic education board. According to reports, this will be a fully-funded autonomous body under the HRD ministry that will conduct programmes to promote Vedas. To set up the board, a five-member government panel has suggested an initial fund of Rs 6 Crore. The proposed Vedic education board will function much like the Central Board of Secondary Education, the report added. “Ved Vidya” is practised at various gurukuls and ved pathshalas across the country. The government’s proposal will bring these under the ambit of a Central board, which could eventually cater around 50,000 students, the report claims.
As we mentioned in our previous talk given by Dr. Anil Sadgopal on “Recolonization of India: Circle is closing Faster through New-Education Policy dictated by WTO-GATS!”, the hindutva and corporates will join together for the fastest recolonization of India. Now, the new education policy (NEP-2015) has changed into the brand new draft on National education policy (NEP-2016) evidently confirms our previous statements, the ways of infiltrating hindutva ideology with the aid of multinational corporates (The full report on draft of NEP-2016 is available with us).
Aforementioned points are the moves suggested by N.Gopalsamy committee within a short period of six months. By imposing Sanskrit as one of the primary teaching language, the minds of school or college leaving students will be as like as RSS ideologues. This will further help to institutionalize the concept of Hindu nationalism. Other than this, there is no easier way to achieve their monocultured Hindu-Hindi-(H)India, the ultimate aim is Hindu Rashtra, the longtime dream of Swayam Sevaks.
Already, most of the Indian people are enslaved by English mania with imperialistic degenerative culture. The ruling BJP government imposing vedic culture and Sanskrit for further enslavement with the establishment of its long term goal for Akant Bharath. To validate their moves, the BJP, RSS and all Hindutva outfits are claiming that, our ancient society was made out of one and only vedic culture. But in reality ours is multifaceted culture were many of our ancestors practiced lokayata (nothing but ancient Indian materialism) an anti-Vedic philosophy called Nashtika which includes Charvaka, Ajivika, Buddhism and Jainism.
It’s high time to join hands together with, students-youths, democratic progressive forces and working classes to fight against these atrocious derogative moves of current ruling government. Otherwise the multifaceted Indian education system will be in the hands of forces which dictate monocultured Hindu Rashtra where the fundamental humanity will cease to survive.
Old Wine In New Bottle
IMPOSING SANSKRIT, VEDAS and YOGA
Another step towards Hindu Rashtra
A Talk By V. Anaimuthu
V.Anaimuthu is a longtime writer and political activist, working for the liberation of the oppressed in our country through his works on social justice, rationalism and Marxism. Joining the Self-Respect movement in 1944, he has closely worked with Periyar. He has written many books such as “Annihilation of Untouchability and the Four Varna System”, “A Fine Feast for Thinkers” and after an enormous effort, brought out the collection “Thoughts of Periyar EVR”. He is also publishing two magazines Sinthanaiyalan (“Thinker”) and Periyar Era.
Venue : HSB 352 Date & Time : 23rd August, 5.30 pm
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
இதுவரை ”புதிய கலாச்சாரம்” வாசகர் களுக்கு ”அறிவுச் சோதனைப் போட்டி” எதையும் நாம் நடத்தியதில்லை. இப்போது ஒரு சிறு ஆவல். அதையும் செய்து பார்த்து விடுவோமே! கீழே தரப்படும் மேற்கோள்கள் யாருடையது என்று வாசகர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!
வேத கலாச்சாரம்
”பல்வேறு மன்னர்கள் ஆட்சி நடத்திய நாடுகளாகத் தான் இந்திய உபகண்டம் இருந்தது. ஆனால், இந்த உபகண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையே ஏதோ ஒருவிதமான இணைப்பும் – பிணைப்பும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் மொழிகளுக்கிடையிலான தொடர்புகள், இலக்கியங்கள் – இதிகாசங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள ஆன்மீகப் பிணைப்புகள், ஆச்சாரங்கள் அனுஷ்டானங்களில் காணப்படுகிற ஒருமைப்பாடுகள், மத நம்பிக்கையினாலும் – கடவுள் வழிபாட்டினாலும் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, உறவுகள் – இவைகளினால் ஏற்பட்ட இந்தியா என்ற இந்தியர் என்ற உணர்வு ஆழமாகவே வேரூன்றியுள்ளது”.
”வேதங்கள், உபநிடதங்கள் இந்திய உபகண்டத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மக்களின் உணர்வைப் பற்றிக் கொண்டிருந்த தத்துவங்கள்”
”இந்தியா வேதங்களின் நாடு என்றும் இந்தியாவின் ஆரம்பகால கலாச்சாரம் வேத கலாச்சாரம் என்றும் தான் உலகில் அறியப்படுகிறது. வேதங்களையும் வேத கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் ஆரியர்கள் தான் பிரதான பங்குவகித்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இதனை ஆரியர் கலாச்சாரம் என்றும் கூறுவர்”
நால்வருண முறையும் சாதீய முறையும் நிலவிய காலத்தில் தான், ”இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும் பங்காற்றின”.
”சமூக விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை அறியும் தாகத்தால் இந்திய வேதங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து ஆராய்கின்றனர். அயல்நாடுகளில் தங்கள் மொழியில் இவைகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பண்டைக்கால கலாச்சாரத்தைப் போற்றுகின்றனர். இந்தியர்களான நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆரியக் கலாச்சாரம்” என்றும் அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததினால் வேதக்கலாச்சாரம் என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்”.
இந்தியாவில் ஆரியர்களின் வருகை
”இந்தியக் கலாச்சாரத்தில் ஆரியர்களால் இயற்றப்பட்ட வேதங்களும் இதிகாசங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை இந்தக் கலாச்சாரம்தான் இந்திய மக்களின் கலாச்சாரமாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது”.
”வேதங்கள், உபநிஷத்துகள், பல்வேறு விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதப்பட்ட நூல்கள், புராண இதிகாசங்கள், காவிய நாடக இலக்கிய நூல்கள் – இவைகள் மூலமாக மனித சமுதாயத்தின் கலாச்சார வளர்ச்சிக்கு விலை மதிக்க முடியாத பங்கு செலுத்த ஆரிய சமூகத்தினால் முடிந்தது”.
”ஒட்டுமொத்தமாக ஆரியர்களுக்கும், வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை”.
”பொதுவாக இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்தை உருவாக்கியதிலும் வேதங்களுக்கும் ஆரியர்களுக்கும் பங்குண்டு என்பது தானே உண்மை”“.
இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களது ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நீங்கள் கருதினால் அது தவறாகும். இவை ”இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி” என்ற பெயரில் இயங்கிவரும் சங்கரன் நம்பூதிரிகள் மற்றும் அவரது சீடர்களின் ஆய்வு முடிவுகள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா?
”வேதங்கள், உபநிஷதங்கள் முதலிய பாரதீய கலாச்சாரப் பொக்கிஷங்களும் மார்க்சிய – லெனியத்தின் புரட்சிகரத்தத்து வமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப்பி டிக்கின்ற இந்திய மார்க்சியம்”. ”நான்பிரதி நிதித்துவப்படுத்துகிற மார்க்சியம் – லெனினியம் தான் உண்மையான பாரதீயத் தத்துவம் என்று கூட உரிமை பாராட்டுவேன்” என்கிறார் சங்கரன் நம்பூதிரி. இதை அவரது சீடர்கள் நியாயப்படுத்தி உரையும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களின் தத்துவப்படியான ஆய்வு முடிவுகள் ”இந்துத்துவத்”தோடு இசைந்து நிற்பதில் வியப்பில்லை.
சங்கரன் நம்பூதிரி
உண்மையில் இந்த சங்கரன் நம்பூதிரி, அதே கேரளத்தின் ஆதிசங்கரனின் இன்னொரு அவதாரமாக தன்னை அடையாளங் காட்டிக் கொள்கிறார். சாங்கியம், சாருவாகம், பெளத்தம் ஆகிய பொருள்முதல்வாதத் தத்துவங்களால் தாக்கப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது வருணாசிரம சாதிய அடிப்படையிலான பார்ப்பன சனாதன மதம், அதை மீண்டும் உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்காற்றியவனே ஆதிசங்கரன். எப்படி? பல்வேறு தத்துவத் திருட்டு – தத்துவப் புரட்டு பித்தலாட்டம் மோசடி, சூழ்ச்சி – சதி உருட்டல் மிரட்டல், ஆதிக்க சக்திகளின் துணையோடு அராஜக வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி!
இப்போது, அதே வேலையை பகிரங்கமான வகுப்புவாத, பாசிச முறைகளைக் கொண்டு செய்து முடிக்க ஒருபுறம் ஆர். எஸ்.எஸ். பார்ப்பனர்கள் முயலுகிறார்கள். மறுபுறம் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் கம்யூனிசத்தின் பேரால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் புகுந்து கொண்டு நயவஞ்சகம் – துரோகம், தத்துவ – வரலாற்றுப் புரட்டு ஆகிய மறைமுக வழிகளில் பார்ப்பன சனாதன மதத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்; பார்ப்பன நலன் காக்கப் பாடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் இத்திருப்பணிக்கு தலைமையேற்றிருப்பவர் திருவாளர் பி.ஆர். பரமேசுவரன். இதற்காகவே அவரது பொறுப்பில் ”மார்க்சிஸ்ட்” என்ற ஒரு தத்துவ மாத இதழே நடத்தப்படுகிறது. இவர்களின் தத்துவ – வரலாற்றுப் புரட்டுகளைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நாம் வேறெங்கும் போய்த் தேடத்தேவை இல்லை. சங்கரன் நம்பூதிரியின் பார்ப்பனிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் – சொற்பொழிவுகளின் மொழி பெயர்ப்புகளையும், அவற்றுக்கு பரமேசுவரன் தரும் பொழிப்புரைகளையும் மட்டுமே பெரும்பாலும் தாங்கி வரும் அந்த ”மார்க்சிஸ்ட்” மாதப் பத்திரிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே போதும். முன்னுக்குப் பின் முரணாகவும், சந்தர்ப்பவாதமாகவும், யாவரும் அறிந்த உண்மைகளையே மூடி மறைத்துப் பொய்களையே எழுதுவதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இங்கே சில சான்றுகளைப் பாருங்கள்.
நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அமைப்பில் பார்ப்பனர்கள் வகித்து வரும் ஆதிக்கம் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்ட பட்டவர்த்தனமான உண்மை. நாட்டின் பிரதமர், குடியர சுத்தலைவர், சமீபகாலம் வரை துணைத் தலைவர், இராணுவத் தளபதிகள், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிகள், உளவுத்துறை இயக்குநர்கள் தேர்தல் கமிசன் தலைவர், மத்திய – மாநில அமைச்சரக தலைமைச் செயலர்கள், காங்கிரசின் கீழ் பெரும்பாலான மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய – மாநிலஅமைச்சர்கள்- பார்ப்பனர்களே! மத்திய ரிசர்வ் வங்கி உட்பட பெரும்பாலான அரசுடமை வங்கிகள், பங்குச் சந்தை உட்பட அனைத்து அரசு நிதி நிறுவனக் கட்டுப்பாடு அமைப்புகளின் தலைவர்கள் உலகவங்கி-ஐ.எம்.எஃப் போன்ற ஏகாதிபத்திய உலக நிதிநிறுவனங்கள், பல தேசங்கடந்த – பன்னாட்டுத் தொழில் – வங்கிக் கழகங்கள், இந்திய அரசு – தனியார்துறை தரகு அதிகார முதலாளிகளது நிறுவனங்கள் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் – பார்ப்பனர்கள். அரசியல், பொருளாதாரத் துறையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நபர்கள் காலில் விழுந்து வணங்கவும், அவர்களுக்கு சகல வித ஆலோசனைகள் வழங்கவும் தகுதி பெற்றவர்களாக விளங்கும் சங்கராச்சாரிகள் ஜீயர்கள் உட்பட மடாதிபதிகளாகவும், சாதுக்கள் சன்னியாசிகளாகவும் இருந்து வருபவர்கள் உட்பட சமூக அமைப்பில் உயர்நிலை வகிப்பவர்கள் – பார்ப்பனர்கள். வானொளி, வானொலி, பத்திரிக்கை மற்றும் கல்வி- கலாச்சாரத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் – பார்ப்பனர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கமின்றி இந்த நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும்? இத்தனையும் தெரிந்திருந்தும் பி.ஆர். பரமேசுவரன் கேட்கிறார்:
”பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் இன்று வைத்துக் கொண்டுள்ள எந்த வித ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது? அவர்களுக்கு எதிராக என்ன கோரிக்கை வைப்பது? பார்ப்பன எதிர்ப்பு என்ற சாதி வெறிப் பிரச்சாரம் ஒன்றுதான் செய்யமுடியும். இதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும்” (மார்க்சிஸ்ட் மே, 93 பக் 63)
நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கமின்றி ஆதிக்க நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும் ?
இப்படிக் கேள்விகள் கேட்கும் இதே நபர்தான் இதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ”சி.பி.ஐ.(எம்) பிராமண ஆதிக்கத்தை மட்டுமின்றி எல்லாவிதமான மேல்சாதி ஆதிக்கத்தையும் உறுதியாக எதிர்த்துவரும் கட்சி” (மார்க்சிஸ்ட் மார்ச், 93 பக் 63). என்று பிரகடனம் செய்தார். ஆனால் இந்தப் பிரகடனம் வெறும் பித்தலாட்டமே என்பதை அடுத்து வரும் வரிகளில் இந்த நபர் காட்டிவிட்டார். அதாவது ”பார்ப்பனிய எதிர்ப்புக்” கொள்கையைத் தனது கட்சி ஏன் ஏற்க முடியாது என்பதற்கு பின்வரும் காரணத்தை எழுதுகிறார். ”சி.பி.ஐ. (எம்) பிராமண ஆதிக்கத்தை மட்டுமின்றி எல்லாவிதமான மேல் சாதி ஆதிக்கத்தையும் உறுதியாக எதிர்த்து வரும் கட்சி, பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் பார்ப்பனரல்லாத மேல் சாதியினர் அவர்களுக்குக் கீழே உள்ள கீழ் சாதியினரை கேவலமாக நடத்துவதைப் பற்றி மெளனமாக இருக்கிறார்கள். பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் ஒட்டு மொத்த சாதீய முறையை எதிர்ப்பதில்லை. அதற்கு அடிப்படையாக உள்ள நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்ப்பதில்லை. இந்திய நாட்டில் சாதீய முறைக்கு முக்கிய காரணம் நிலப்பிரபுத்துவ முறை என்ற உண்மையையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. பார்ப்பனரல்லாத மேல் சாதியினர்தான் பார்ப்பன எதிர்ப்பு பேசி வருகின்றனர். இந்திய நாட்டின் சாதீய முறை என்பது ஒரு சாதிக்கு மேல் ஒரு சாதி, அதே போல் ஒவ்வொரு சாதிக்கும் கீழ் இன்னொரு சாதி என்பது தான். இது ஒட்டு மொத்தமாக மாற்றப்பட வேண்டியது. இது நிலப்பிரபுத்துவ ஒழிப்போடு இரண்டற இணைந்தது. அதனால் சி.பி.ஐ (எம்) சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையையும் எதிர்த்து போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்தி வருகிறது.
”பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பாகவே இருந்துள்ளது என்பது தான் தமிழ்நாட்டின் அண்மைக்கால வரலாறு. தத்துவத்தை நடைமுறையில் இருந்து பிரிக்கமுடியாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஒரு தத்துவத்தை ஒரு கட்சி முன்வைத்தால் அதன் நடைமுறை பார்ப்பன எதிர்ப்பாகவே அமையும். ஒரு சாதியினருக்கெதிரான வெறுப்புணர்வைத் துண்டுவதாகவே அமைகிறது. இது சாதி ஆதிக்க எதிர்ப்புக்கு எந்த வகையிலும் பயன்படாது. ஆகவே சி.பி.ஐ (எம்) பார்ப்பனிய எதிர்ப்பு என்பதையும் ஒரு கொள்கையாக ஏற்பது சரியாக இருக்கமுடியாது. சாதி ஒடுக்குமுறை எப்பகுதியில் இருந்து வந்தாலும் அதனை எதிர்ப்பது தான் சி.பி.ஐ (எம்) நிலைப்பாடு. (மார்க்சிஸ்ட் மார்ச் 93 பக் 63)
கீழ்வெண்மணியில் 42 தாழ்த்தப் பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு, பார்ப்பனன் அல்லாதவன். ஆனால் அவனைத் தண்டிக்க சி.பி.ஐ (எம்) என்ன செய்தது?
இங்கே பார்ப்பனிய எதிர்ப்பாளர்களைப் பற்றியும், தமது கட்சி நடைமுறை பற்றியும் பரமேசுவரன் கூறுவது பச்சைப் பொய்தான். பார்ப்பனிய எதிர்ப்பில் வீரமணி போன்ற சில திராவிட இனவாதிகளின் அணுகுமுறையையே அனைத்து அமைப்புகளுக்குமானதென பரமேசுவரன் புளுகுகிறார். வேறு சில பெரியாரிய, அம்பேத்காரிய அமைப்புகளும், மார்க்சிய – லெனினிய அமைப்புகளும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை உடையனவாக உள்ளன. இவை பார்ப்பனரல்லாத மேல்சாதி அமைப்புகள் அல்ல; இவை நிலப்பிரபுத்துவத்துக்கும் சாதீய முறைக்கும் உள்ள உறவை அங்கீகரித்தும், இரண்டையும் எதிர்த்துப் போராடும் கொள்கை உடையவைதாம். அதேசமயம் சி.பி.ஐ (எம்) சாதிய முறை, நிலப்பிரபுத்துவம் ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராடுவதாகக் கூறுவது அண்டப் புளுகுதான். அதன் சாதி எதிர்ப்புக்குச் சான்றாகக் கூறுவதெல்லாம் 1946-50 காலகட்ட தஞ்சை விவசாய சங்க இயக்கம் மட்டும்தான். நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக்கு ஆதாரமாகக் கூறுவதெல்லாம் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தச்சட்டங்கள் தாம். கீழ்வெண்மணியில் 42 தாழ்த்தப் பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு, பார்ப்பனன் அல்லாதவன். ஆனால் அவனைத் தண்டிக்க சி.பி.ஐ (எம்) என்ன செய்தது?
சரி! பிற அமைப்புகளின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைதான் பார்ப்பன எதிர்ப்பு சாதி வெறியாகிவிட்டது. அதற்காக பார்ப்பனிய எதிர்ப்பு ”தத்துவமே” தவறாகிவிடுமா? பார்ப்பனியத்தை எதிர்க்காமல், “பிராமண ஆதிக்கத்தை” எப்படி எதிர்த்துப்போராட முடியும். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தத்துவத்தை பார்ப்பன எதிர்ப்பு என்ற நடைமுறையில் இருந்து பிரிக்க முடியாது என்கிறார் பரமேசுவரன். “இந்துத்துவ எதிர்ப்பும்” கூட இந்து மதத்தினர் அனைவருக்கும் எதிராகி விடாதா? அதோடு “இந்துத்துவம்” என்பதே பார்ப்பன – பனியா தத்துவம் என்று மேற்சொன்ன அமைப்புகள் மட்டுமல்ல சி.பி.ஐ (எம்) ஏற்றுக் கொண்ட சோவியத் ஆய்வாளர்களே கூறுகிறார்களே இதனால் இந்துத்துவ தத்துவத்தை எதிர்க்கும் கொள்கையை சி.பி.ஐ (எம்) ஏற்காதா?
உண்மை என்னவென்றால், பார்ப்பன ஆதிக்கத்தையும் அதன் அடிப்படையான பார்ப்பனியத்தையும் காப்பதுதான் சி.பி.ஐ (எம்) கட்சியின் நோக்கம். அதனால்தான் பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் என்று எதுவுமே கிடையாது என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் சாதிவெறியைத் துண்டுபவர்கள் என்றும் சாதிக்கிறார் பரமேசுவரன். “ஆரிய எதிர்ப்பைப் போலவே பார்ப்பன எதிர்ப்பும் தமிழ்நாட்டில் இன்று எடுபடக்கூடியதாக இல்லை. சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. அந்தஸ்தும் இறங்கிவிட்டது. இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்த நிலை இப்போது இல்லை. அன்று பொருளாதாரத்திலும் உயர் உத்தியோகத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராய் இருந்தனர். அதுதான் அன்று பிராமண எதிர்ப்பின் அடிப்படையாக இருந்தது. அந்நிலை மாறிவிட்டது” (“மார்க்சிஸ்ட் அக், 93 பக்.58)
“அன்றைய நான்கு வருணமுறையும் சிதைந்து விட்டது. இன்று பிராமணர்கள் புரோகிதர்களாக மட்டும் இல்லை. அன்றைய ஆதிக்க நிலையிலும் இல்லை. இன்று அவர்களும், பல்வேறு வர்க்கத்தினராகப் பிரிந்துள்ளனர். அவர்களில் முதலாளிகளும், தொழிலாளிகளும் உள்ளனர். கோடீஸ்வரர்களும் பிச்சைக்காரர்களும் உள்ளனர். இப்போது அவர்களை ஒரு சாதி என்ற முறையில் ஆதிக்கம் செலுத்துவோர் என்று கூறுவது இன்றைய எதார்த்த நிலை அல்ல. “பார்ப்பனியம், பார்ப்பனிய ஆதிக்கம் என்று கூறி வெறுப்புணர்வைத் துண்டுவது உழைப்பாளிகளிடையில் சாதி உணர்வை, வெறியைத் தூண்டி பிளவுபடுத்துவதாகவே உள்ளது. இது முதலாளித்துவத்திற்குச் சாதகமானது.” (மார்க்சிஸ்ட்மே 93 பக்: 63).
பொருளியல்-வாழ்வியல் நிர்பந்தங்களுக்காக உழைப்பாளிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டாலும், அரசியல், சமூக, கலாச்சாரரீதியில் மாறாதவர்கள் இந்தச் சிறுபிரிவினர்.
“சமுதாய வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் இந்த மாறுதல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆரிய திராவிட இனவாதத்தை இப்போதும் பேசிவருவதும் உழைத்து வாழும் வர்க்கமாக மாறிவிட்ட பிராமண சாதியினரை சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக இனமாகப் பார்ப்பதும் சமூக மாறுதல், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானப் பார்வைக்குப் பொருந்தாதது. அதன் காரணமாக பகுத்தறிவிற்கும் மாறுபட்டது. இந்தப் பார்வை இன்றைய சமுதாயத்தின் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக சாதி, மத இனபேதமின்றி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுக்கக்கூடியது. மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது” (மார்க்சிஸ்ட் ஜூன் 93 பக் 63).
மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பார்ப்பன சாதியினர். சி.பி.ஐ (எம்) வாதப்படியே அவர்களில் உழைக்கும் மக்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டவர்கள் எவ்வளவு பேர்? ஒரு வாதத்திற்குக் கேட்கிறோம்! நமது பார்ப்பனிய எதிர்ப்பு இந்த ஒரு சிறு பிரிவினரோடு சாதி, மத, இனபேதமின்றி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுத்து விடும் அதனால் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து விடும் அப்படித்தானே? வெறுப்புணர்வைத் தூண்டி உழைப்பாளிகளிடையில் சாதி உணர்வை, வெறியைத் தூண்டி பிளவு படுத்தி, முதலாளித்துவத்துக்குச் சாதகமாகி விடும். அப்படித்தானே உழைப்பாளிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்ட இந்தச் சிறுபிரிவினரான பார்ப்பனர்களே கூட பார்ப்பனியம், பார்ப்பனீய ஆதிக்கம் போன்ற அரசியல், சமூக, பண்பாட்டு அநீதி – கொடுமைகளுக்கு எதிராக பிற உழைக்கும் மக்களோடு ஒன்றுபட வேண்டும்; அப்படி இல்லாமல் தமக்குக் கூலி உயர்வு போன்ற பொருளாதார நலன்களைப் பெறுவதற்காக மட்டும் முதலாளிகளை எதிர்த்து பிற உழைக்கும் மக்களோடு ஒன்றுபட்டு என்ன பலன்?
பொருளியல்-வாழ்வியல் நிர்பந்தங்களுக்காக உழைப்பாளிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டாலும், அரசியல், சமூக, கலாச்சாரரீதியில் மாறாதவர்கள் இந்தச் சிறுபிரிவினர். இவர்கள் தாம் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச ”இந்துத்துவம்” மற்றும் சங்கரன் நம்பூதிரி – போலிப் பொதுவுடமைத் தத்துவம் ஆகிய இரண்டுக்குமே சமூக அடிப்படையாக, ஆதரவாக உள்ளவர்கள். எனவே தான் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. சி.பி.ஐ (எம்). அதற்குப் பதிலாக “சி.பி.ஐ. (எம்) சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையும் எதிர்த்த போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்திவருகிறது” என்று புளுகுகிறார் பரமேசுவரன்.
கணசக்தி
இப்படி எழுதிய இரண்டே மாதத்தில் அந்தப் பரமேசுவரனே பின்வருமாறு எழுதுகிறார். “நீண்ட காலத்திற்கு முன்னால் தோன்றிய சாதிமுறை மக்களின் சமூக வாழ்க்கையில் பெரும் அளவு மாறிவருகிறது. ஆனால் பல காரணங்களால் சாதீய உணர்வு இன்னும் ஆழமாக உள்ளது. ஒரு கருத்து தோன்றிய சமூகச் சூழ்நிலை மாறினாலும், அக்கருத்து மேலும் சில காலம் வரை நீடித்திருக்கும் என்று மார்க்சீய விஞ்ஞானம் போதிப்பது சரியானது என்பதை இது நிரூபிக்கிறது. பல சாதிகளாக இருந்த மக்கள் இன்று உழைத்து வாழும் வர்க்கமாக மாறி வருகிறது. உழைக்கும் வர்க்கம் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. இந்த உணர்வை வளர்ப்பதுதான் சாதீயப் பாகு பாடுகளையும், உணர்வுகளையும் முற்றாக ஒழிக்க முடியும். இதுதான் மார்க்சிஸ்டுகளின் வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படை”. (மார்க்சிஸ்ட் ஜூன் 93 பக்:64).
பார்த்தீர்களா இந்த போலிகளின் பித்தலாட்டத்தை முன்பு “சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையையும் எதிர்த்த போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்திவருவதாகக் கூறினார் பரமேசுவரன். இரண்டே மாதங்களில் சாதிமுறை மக்களின் சமூக வாழ்க்கையில் பெரும் அளவு மாறுவதாகவும் இப்போது சாதிமுறை போய் சாதி உணர்வுதான் நீடித்திருப்பதாகவும் எழுதுகிறார். எனவே சாதி, நிலப்பிரபுத்துவ முறைகளை எதிர்த்தபோராட்டம் பற்றி முச்சுவிடவில்லை. உழைக்கும் வர்க்கம் என்று வளர்ந்து வரும் உணர்வை வளர்ப்பதுதான் சாதிபாகுபாடுகளையும், சாதி உணர்வையும் முற்றாக ஒழிக்க ஒரே வழி என்கிறார். எப்படி பத்திரிக்கையில் எழுதியே இரண்டே மாதத்தில் சாதிமுறையை மாற்றி விடுகிறார்கள் பாருங்கள் இதே பரமேசுவரன். அடுத்த பத்தாவது மாதம் எழுதுகிறார். “வர்க்கரீதியாக மக்களை ஒன்றுபடுத்துவதுதான் சாதீய ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வழி. இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றாமல் சாதிப் பாகுபாடுகளை முழுமையாக ஒழிக்க முடியாது. அதற்கு வர்க்கப் போராட்டமும் வர்க்கப் புரட்சியும் தான் ஒரே வழி. வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” (மார்க்சிஸ்ட் மார்ச் 94 பக்: 46)
சாதிமுறைக்கு எதிரான போராட்டம், சாதி உணர்வை அகற்ற உழைக்கும் வர்க்கம் என்ற உணர்வை வளர்ப்பது சாதிபேதமின்றி உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவது – இவை தான் சி.பி.ஐ.(எம்)மின் நடைமுறை என்று பீற்றிக் கொள்கிறார்கள். இதை அக்கட்சியினர் எப்படிச் செய்கிறார்கள் என்பதற்கு அதே பரமேசுவரனின் வாக்கு மூலத்தைப் பாருங்கள்!
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
மே. வங்கத்தில் சி.பி.ஐ (எம்) கட்சி நடத்தும் வங்காளி நாளிதழ் கணசக்தி. அதில் லாட்டரி பங்குச் சந்தை மணமகள் தேவை விளம்பரங்கள் வெளியிடுகின்றனர். சாதிக்கேற்ற மணமக்கள் தேவை விளம்பரம் வெளியிட்டு வருவதோடு, அக்கட்சித்தலைவர் ஒருவரின் மகனுக்கு அதே சாதி மணமகள் தேவை என்றும் விளம்பரம் வந்தது. இதை “புதிய ஜனநாயகம்” எடு அம்பலப்படுத்தியதையும் சாதி விவகாரத்தையும் குறிப்பிடாமல் கேட்கப்பட்ட கேள்விக்கு அது செய்திப்பத்திரிக்கை அதிக மக்கள் படிக்கவும், மக்கள் தேவைக்கும் அப்படி விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி சமாளித்தார் பரமேசுவரன். மீண்டும் ஒரு வாசகி, “சாதி, மதம், இனம் சம்பந்தமான விளம்பரம் நமது இதழில் வருவது சரியானதா?” என்று கேட்டார்.
அதற்கு ”கணசக்தியில் வெளியிடப்படுகிற விளம்பரங்கள் சாதி, மதத்தைப் பற்றிய விளம்பரம் அல்ல. மணமக்கள் தேவை பற்றிய விளம்பரங்கள் தான். அதில் வரும் வார்த்தைகளும் கருத்துக்களும் விளம்பரதாரரின் கருத்துக்கள் தான். பத்திரிக்கையின் கருத்து அல்ல. இந்நிலை மாற சமுதாயத்தில் பெரும்மாறுதல் ஏற்படவேண்டும். இத்தகைய விளம்பரங்களை வெளியிடாமல் இருப்பதனாலேயே அந்த மாறுதல் ஏற்படாது. இத்தகைய விளம்பரங்கள் மக்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களை ஒன்று திரட்டித் தான் அந்த மாறுதலை ஏற்படுத்த முடியும்.”
“இத்தகைய விளம்பரங்கள் இடம் பெறும் கணசக்தி நாளிதழில் சாதி, மத முட நம்பிக்கைகளுக்கெதிரான தத்துவ விளக்கக் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுதான் கனசக்தி ஆற்றிவரும் பிரதான பணியாகும்” (மார்க்சிஸ்ட்” டிசம், 93 பக். 62).
ஆக, நடைமுறை வாழ்க்கையில் சாதி அமைப்பைக் காப்பதோடு, அதற்கு ஆதரவும் அளிப்பார்கள். அதே சமயம் காகிதத்தில் சாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகத் தத்துவ விளக்கங்கள் தருவார்கள். இதுதான் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி. இப்படி இவர்கள் சாதிமுறை எதிர்ப்பு நாடகமாடுவதே பார்ப்பனியத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் காப்பதற்காகத்தான். இவர்கள் நன்கு அறிந்தே இந்தப் பித்தலாட்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் பத்திரிக்கையின் வெள்ளிவிழா
இன்றைய சமுதாயத்தில் பார்ப்பன ஆதிக்கமே கிடையாது; பார்ப்பன எதிர்ப்புக்கு அடிப்படையே இல்லாமல் போய் விட்டது. பார்ப்பனீய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது சாதிவெறியைத் துண்டி உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தக் கூடியதாக உள்ளது. பார்ப்பனர்களின் எந்தவித ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது? அவர்களுக்கு எதிராக என்ன கோரிக்கை வைப்பது? – இப்படி முடிவுகளும் கேள்விகளும் வைக்கிறார் சி.பி.ஐ.(எம்)கட்சியின் குட்டிச் சித்தாந்தத் தலைவர் பரமேசுவரன்.
ஆனால் இதே நபர், அதே மார்க்சிஸ்ட் பத்திரிக்கையில் ”ஆர்.எஸ்.எஸ். – தத்துவமும் வரலாறும்” என்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் குறித்து பின்வரும் முடிவுகளை பரமேசுவரன் வைக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆரிய இனவாதத்தின் பிரதிநிதிகள். ஆரிய இனவாதம் பேசிய ஜெர்மானிய இனவெறியன் பாசிஸ்ட் இட்லரைப் போற்றுபவர்கள். இந்தியாவை இந்து நாடு என்று அவர்கள் கூறுவதன் பொருள் ஆரிய நாடு என்பது தான். ஆரியர்கள் தான் இந்துக்கள் என்பதே அவர்களின் தத்துவம். இந்து மதவெறியர்கள் ஆரிய இன வெறியர்களாகவும் உள்ளனர். “நாகரீக உலகம் முழுவதும் வெறுத்து ஒதுக்கும் சாதீய முறையை ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களின் கூட்டாளிகளும் துக்கிப்பிடிக்கின்றனர். இந்து மதத்தோடு இணைந்தது சாதீய முறை. இந்து மதத்தின் பழையவாதங்களை உயர்த்திப் பிடிப்போர் சாதிய முறையை மட்டும் விட்டுவிடுவார்களா? ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமதவாத அமைப்புகள் இந்திய நாட்டில் நிறுவ முயற்சிப்பது இந்து மதஆதிக்கம் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.சில் இன்று ஆதிக்கம் செலுத்துகின்ற மேல் ஜாதி ஆதிக்கத்தை நாட்டின் மீது திணிப்பதே அவர்களின் நோக்கம். சிதைந்து வரும் சாதியத்திற்கு புத்துயிருட்டுவதும் வருணாசிரம முறையை புணரமைப்பதும் தான் அவர்களின் லட்சியம்” இந்தியாவின் பொது மொழி இப்போதைக்கு இந்தி, பின்னர் சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழி என்பது இவர்களின் கொள்கை; அதற்காக அனைத்து மாநில மொழிகளும் சமஸ்கிருத எழுத்துக்களில் எழுத வேண்டும் என்பவர்கள் இவர்கள் நவீன உலகிலும், இந்தியாவிலும் வாழும் மனிதர்களாகத் தெரியவில்லை. பிராமண ஆதிக்கம் நிலவிய உப நிடதங்களின் காலத்தில் வாழும் பிராமணர்களாகவே தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.
ஆக, சி.பி.ஐ.(எம்)யின் கணிப்பின் படியே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் இந்துமத வெறி பார்ப்பன பாசிச சக்திகள்தாம்.
ஆக, சி.பி.ஐ.(எம்)யின் கணிப்பின் படியே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் இந்துமத வெறி பார்ப்பன பாசிச சக்திகள்தாம். அதன் இந்து மதவெறி என்பது ஆரிய இன மொழி வெறி பார்ப்பன சனாதன வருணாசிரம சாதீய முறையை மீட்பதுதான் அவர்களது இலட்சியம். இந்தச் சக்தி நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. இதன் நேரடிக் கூட்டுச் சக்திகளாக ஜெயலலிதா கட்சியும், சிவசேனாவும். இதன் மறைமுக கூட்டாளியாக-துணைபோகும் சக்தியாக ஆளும் காங்கிரசும் உள்ளன. சி.பி.ஐ. (எம்) தலைமையின் கூற்றுப்படியே இதற்கு ஏகாதிபத்தியத் துண்டுதலும் ஆதரவும் உள்ளது. இந்து ராஷ்டிரம், இந்துத்துவம் என்பது பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் தான் என்பதையும், இவற்றுக்கு எதிரான போராட்டம் அவசியமானது என்பதையும் இவை காட்டவில்லையா?
ஆனால், இந்து ராஷ்டிரம் இந்துத்துவமும், பார்ப்பனியம் – பார்ப்பன ஆதிக்கமும் வேறு வேறானவை என்று சித்தரிக்கிறது சி.பி.ஐ (எம்) தலைமை. பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் என்பவை அர்த்த மற்றவை. அவற்றுக்கு எதிரான போராட்டம் அடிப்படை அற்றவை என்று கூறும் அதே சமயம் இந்து ராஷ்டிரம் – இந்துத்துவத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதாகப் பீற்றிக் கொள்கிறது.
இப்படி இரட்டை வேடம் போட்டு கபடநாடகமாடுவதன் மூலம் ஒருபுறம் தன்னைப் புரட்சிகரமான தலைமையாக காட்டிக்கொள்கிறது. மறுபுறம் பார்ப்பனியம் பார்ப்பன நலன் காக்கும் பணியையும் செய்கிறது. ஆகவே, பார்ப்பன சனாதன- இந்து மதவெறிப் பாசிசத்தை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்பனர்களைவிட உண்மையில் இந்த போலி மார்க்சிஸ்டுகள் தான் மிகவும் அபாயகரமானவர்கள்.
காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது.
இரண்டு இலட்சம் காஷ்மீரிகள் கலந்து கொண்டதாகச் சொல்லப்படும் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலம்
புர்ஹானி வானி கொல்லப்பட்ட மறுநாள் தொடங்கி கடந்த இருபது நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பத்து மாவட்டங்களை ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ் கொண்டுவந்து, மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்த பிறகும்; தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்களை அனைத்தையும் முடக்கிய பிறகும்; காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை விதித்து, அவற்றை முடக்கிய பிறகும்; ஏறக்குறைய ஐம்பது காஷ்மீரிகளை சிறிய ரக குண்டுகளால் (pellet guns) சுட்டுக் கொன்ற பிறகும்; இக்குண்டுகளால் தாக்கப்பட்டோரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கண்பார்வையை இழந்து, குருடர்களாக ஆக்கப்பட்ட பிறகும்; ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தி, அவர்களை முடமாக்கிய பிறகும்; பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய காஷ்மீர் மக்களின் போராட்டம் தணிந்துவிடவில்லை.
புர்ஹான் வானி
இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின் குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளில் உள்ள கற்கள் வலிமையானவை என்பதை காஷ்மீர் பள்ளத்தாக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி வருகிறது. ஒப்பீட்டுரீதியாகச் சொன்னால், பாலஸ்தீன மக்கள் யூத இனவெறி இசுரேலிய அரசுக்கு எதிராக நடத்திய இன்டிஃபதா போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை காஷ்மீரத்து இளைஞர்கள் இந்து பாசிச இந்திய அரசுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள்.
புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கிலும் ஊர்வலத்திலும் தடையை மீறி இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபொழுதில், இரண்டொரு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் முதல்வர் பதவியில் இருந்தபொழுதே மரணமடைந்தத முஃப்தி முகம்மது சயீதின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஐயாயிரம்தான்; மலைக்கும் மடுவுக்குமான இந்த வேறுபாடு காஷ்மீர் மக்களின் அரசியல் உணர்வை பிரதிபலிக்கிறது.
* * *
இந்திய அரசாலும், காஷ்மீரத்துக்கு வெளியே உள்ள, குறிப்பாக, வட இந்திய மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த தேசியவாதிகளாலும் தீவிரவாதி, பயங்கரவாதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன், பாக். கைக்கூலி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட இளைஞன் மீது காஷ்மீரத்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அன்பையும் பெருமதிப்பையும் பொழிகிறார்கள் என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிவுள்ள எவனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், காஷ்மீர் மக்கள் நடத்திவரும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் துக்ளக் சோ,இப்போது நடக்கும் இந்தப் போராட்டத்திற்குக்கூட, போராட்டக்காரர்களுக்கு நாளொன்றுக்குத் தலா ஐநூறு ரூபாய் தரப்படுவதாகவும், காஷ்மீருக்குத் தேவை அறுவை சிகிச்சைதான் என்றும்கூறிமக்கள்போராட்டத்தைகொச்சைப்படுத்தியிருப்பதுடன்அரசு பயங்கரவாதத்திற்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார்.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
“ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்; ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை எந்த அளவிற்கு நீதியானதோ, நியாயமானதோ, அது போலத்தான், “காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக் கோருவதிலும் அரசியல் நியாயம் உள்ளது. 1947- இல் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒத்துக்கொண்டதோடு, அதனை ஐ.நா.மன்றத்திலும் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தது இந்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு முசுலீம்கள் இந்திய அரசிடம் புதிதாக எதையும் கோரவில்லை. “நீங்களே ஒப்புக்கொண்டபடி பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்ற வரலாற்று நியாயத்தைத்தான் கோருகிறார்கள்.
“உலகிலேயே காஷ்மீர் பள்ளத்தாக்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்ட பகுதி” என்கிறார், மனித உரிமை பற்றிய சர்வதேச தீர்ப்பாயம் என்ற அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரும் சமூகவியல் பேராசிரியருமான சட்டர்ஜி. இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், அவர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய். இதற்கு அப்பால், பொது பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் எனப் பலவாறான ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் அம்மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
போலீசோ, இராணுவமோ ஒருவரைச் சந்தேகித்தாலே போதும், அவரை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது, பொது பாதுகாப்புச் சட்டம். நினைத்த நேரத்தில் யாரையும் சுட்டுக் கொல்லவும், யாருடைய வீடு புகுந்து தேடவும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடி அழிக்கவும் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியிருப்பதோடு, அவர்கள் நடத்திய மோதல் படுகொலை போலியாக இருந்தால்கூட, அதற்காக அரசுப் படையினர் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாதபடி சட்டப் பாதுகாப்பையும் அளித்திருக்கிறது, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்.
காஷ்மீரில் 1989 தொடங்கி 2011 முடியவுள்ள இருபது ஆண்டுகளில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடும் என்கிறது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. 1989 ஜனவரி தொடங்கி 2016 ஜூன் முடியவுள்ள இருபத்தேழு ஆண்டுகளில் 94,391 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 22,816 பெண்கள் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுள்ளனர். 10,193 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறது காஷ்மீர் ஊடக சேவையகம். காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் அரசுப் படையினரின் நிர்பந்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருப்பதை ஐந்தாண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மனித உரிமை ஆணையமே அம்பலப்படுத்தியது. காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மட்டுமல்ல, இந்தச் சட்டவிரோத அத்துமீறல்களுக்கும்கூட அவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த நகரப்புறத்து நடுத்தர வர்க்கம், காஷ்மீரத்துப் பெண்கள் மீது அரசுப் படையினர் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காமல், மௌனமாக அங்கீகரிப்பதை; ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டிக்கவும், எதிர்த்துப் போராடவும் தயங்காத தமிழகம், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் நடந்துகொள்வதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.
* * *
புர்ஹான் வானி தனது 16-ஆவது வயதில் ஏன் தீவிரவாதியானான்? புர்ஹானின் வயதையொத்த காஷ்மீரத்து இளைஞர்கள் புர்ஹானை ஏன் ஆராதிக்கிறார்கள்? குண்டடிபட்டுச் செத்துப்போவோம் அல்லது கண்களை இழந்து வாழ்நாள் முழுக்க குருடனாய்த் திரிவோம் அல்லது தனிக் கொட்டடிச் சிறையில் அடைக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும், அதையெல்லாம் ஒரு பொட்டாகக் கருதாமல், கையில் கற்களோடு தெருவில் இறங்கி இராணுவத்தோடு ஏன் மோதத் துணிகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான காரணங்களை காஷ்மீரில் இந்திய அரசுதான் ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனை பாகிஸ்தானில் தேடி பயனில்லை.
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
காஷ்மீரில் 1989-ல் வெடித்த ஆயுதப்போராட்டம் அடுத்த பத்தாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பிறகு, அங்கே அமைதி திரும்பி விட்டதாகவும், காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களது எடுபிடிகளும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 2002, 2008 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அமைதிக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன. ஆனால், இந்த அமைதி காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை எந்தவிதத்திலும் மழுங்கடித்துவிடவில்லை என்பதை 2008-லும், 2010-லும் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.
2008-இல் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு, அந்த ஆண்டு வரவிருந்த தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது.
இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய்.
இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து காஷ்மீர் முசுலீம்கள் போராடியதையடுத்து, காங்கிரசு கூட்டணி அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக ஊதிப் பெருக்கிய ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கும்பல், காஷ்மீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை ஏவிவிட்டது.
இந்தத் தடையைஎதிர்த்து”ஜம்மு-காஷ்மீர் பகுதியை, ஆசாத் காஷ்மீரோடு இணைக்கும் சாலைகளைத் திறந்துவிட வேண்டும்; அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” ஆகிய மூன்று அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து காஷ்மீர்பள்ளத்தாக்குமக்கள்நடத்தியபோராட்டத்தை ஒடுக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2010-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து வந்த டுஃபாயில் மட்டூ என்ற சிறுவன் அரசுப் படையினரால் அநியாயமாக, தெருநாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 120 பேர் கொல்லப்பட்டதோடு, அப்போரட்டத்தில் கலந்துகொண்டு, அரசுப் படைகளின் மீது கல்லெறிந்த ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களும், 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் ஒருமுறை போலீசு நிலையத்தின் வாசலை மிதித்துவிட்டாலே, அதோடு வாழ்க்கையே முடிந்துவிடும். குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், போலீசார் கூப்பிடும்போதெல்லாம், அது இரவோ, பகலோ மறுக்காமல் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். போலீசு நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்புகளை, அடி உதை உள்ளிட்ட சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
காஷ்மீரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நிலைமை, காஷ்மீரிகளுக்கு இரண்டு வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்று, அவர்கள் போலீசின்-இராணுவத்தின் ஆள்காட்டிகளாக மாற வேண்டும் அல்லது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்குத் தனது அண்ணனைப் பறிகொடுத்த, அரசுப் படைகளின் சித்திரவதைகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளான புர்ஹான் வானி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். போராளிஅமைப்புகளிலிருந்துவிலகி, போலீசிடம்சரணடைந்தாலும், அவ்வாறுசரணடையும்இளைஞர்கள்அமைதியாக வாழ்வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்பதற்கு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குரு ஓர்எடுத்துக்காட்டு.
* * *
தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதைச் சட்டவிரோதமாகத் தடை செய்த மாநில அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சிறீநகரில் பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாஜ்பாயி ஆட்சியின் போதும், அதன் பிறகு வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போதும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள், குழுக்கள் குறித்துப் பிரமாதமாகப் பேசப்பட்டாலும், அவைகளில் ஒன்றுகூட காஷ்மீர் மக்களின் மையமான அரசியல் கோரிக்கையான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேச மறுத்தன. குறைந்தபட்சம், காஷ்மீர் மக்களுக்கு அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட உத்தரவாதம் செய்ய மறுத்தன. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது அமைக்கப்பட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா மோகன், முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைய ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட மூவர் குழு, காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒப்புக்குச் சப்பாணியான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அளித்தது. அதனை வெளியிடக்கூட காங்கிரசு அரசுமறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்யும்காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பதிலாக, சிறிய இரக இரும்புக் குண்டுகள் அல்லது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதையே பெரிய சலுகையைப் போல அறிவித்தது. இந்த துப்பாக்கியால் ஒருமுறை சுடும்பொழுது ஐநூறுக்கும் குறையாத குண்டுகள் மழை போல ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதால், அவர்களின் தலை தொடங்கி பாதம் முடிய உடம்பின் எந்தப் பகுதியும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, சல்லடைக் கண் போலாகிவிடும். நிரந்தர ஊனமாக்கி நடைபிணமாக்கி விடும். உலகிலேயே இந்தக் கேடுகெட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி வரும் நாடுகள் இரண்டுதான். ஒன்று யுத இனவெறி கொண்ட இசுரேல், மற்றொன்று பார்ப்பன தேசிய வெறி கொண்ட இந்தியா.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது இருக்கட்டும்; அம்மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காகித அளவில் நீடிப்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.
காங்கிரசு அப்பிரிவைக் கொல்லைப்புற வழியில் நீர்த்துப் போகச் செய்தது என்றால், இந்து மதவெறிக்கும்பலோ அப்பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது. முந்தைய காங்கிரசு அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு, அதன் பரிந்துரைகள்,ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட கண்துடைப்பு நடவடிக்கைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவை அனைத்தையும் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் சலுகையாக ஊதிப் பெருக்கி எதிர்த்தது.
காஷ்மீர் இளைஞர்களுக்கு வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிடுவேன் என மார்தட்டினார் மோடி.முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுதே, காஷ்மீரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உதான் திட்டம், உயர் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளும், நிதியுதவிகளும் அறிவிக்கப்பட்டன. காங்கிரசு உருவாக்கிய திட்டத்தைத்தான் மோடி அரசு புதிய மொந்தையில் காஷமீருக்கு அளித்தது. 2013-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் உதான் திட்டம், கடந்த மூன்றாண்டுகளில் 6,621 காஷ்மீரிகளுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது.
வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற மோடியின் வாய்ப்பந்தல் படுதோல்வி அடைந்துவிட்டதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உண்மையில், இராணுவ ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது, காஷ்மீரில் இந்து மதவெறியைத் தூண்டி வளர்த்துவிடுவது ஆகியவற்றில்தான் மோடி அரசு அக்கறை கொண்டிருக்கிறது. அமர்நாத் யாத்திரையைத் தேச பக்த யாத்திரை போலச் சித்தரிப்பது, கிராம பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் கைக்கூலிப் படைகளை உருவாக்கியிருப்பது ஆகியவற்றோடு, இராணுவ வீரர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்குவது, காஷ்மீரிலிருந்து வெளியேறச் சென்றுள்ள பண்டிட் பார்ப்பனர்களுக்காகத் தனிக் குடியிருப்புகளை உருவாக்கி, அவர்களை அங்கு குடியமர்த்துவது என்ற திட்டங்களைச் செயல்படுத்த முயன்று வருகிறது, மோடி அரசு.
அதே நேரத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதியான புர்ஹான் வானி, தான் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது இயக்கம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது. யாத்திரை செல்வது அவர்களின் உரிமை, தங்களது மதக் கடமையை நிறைவேற்றுவதை நாங்கள் மட்டுமல்ல, எதுவும் தடுக்காது” என குறிப்பிட்டுள்ளார். அதே அறிக்கையில், “காஷ்மீர் பண்டிட்டுகள், தமது சொந்த ஊருக்குத் திரும்புவதோடு, காஷ்மீர் முசுலீம்களுக்கு அருகிலேயே பழையபடி வசிக்கலாம்; அதற்கு மாறாக, இசுரேலில் யூதர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் முயற்சியை எதிர்க்கவே செய்வோம்” என்று எச்சரித்திருக்கிறார்.
இந்த இளைஞனை நாட்டிற்கு எதிரான ஒரு பெருந்தீமை போலச் சித்தரித்துக் கொன்று போட்டுவிட்டது, மோடி அரசு. அதனைக் கண்டித்தும், தங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடத் துணிந்த காஷ்மீர் மக்களின் மீது கொடிய “பெல்லட்” தாக்குதலை நடத்தி, கிட்டதட்ட 50 பேரைச் சாகடித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண் பார்வையைப் பறித்துக் குருடாக்கி, ஆயிரக்கணக்கானோரைக் கொடுங்காயப்படுத்தி, இந்து தேசிய அரசு பயங்கரவாதம் தனது இரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அரியானாவில் தீ வைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை வெறியாட்டத்தை நடத்திய ஜாட் சாதிவெறியர்கள் மீதும், முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகள் மீதும் காட்டப்படாத வன்மம், காஷ்மீர் முசுலீம்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.
அரசுப் படைகள் நடத்திய தாக்குதலால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் தலைவர் சுதர்சன் கே.குமார், “இந்த அளவிற்கு கண்களும் பார்வையும் பாதிக்கப்பட்டவர்களைச் சமீபத்தில் நான் எங்குமே பார்த்ததில்லை. ஒரு யுத்தத்தில்தான் இத்தகைய இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்” எனக் குறிப்பிடுகிறார்.
காஷ்மீரி மக்கள் மீது ஒரு அநீதியான போரைமோடி அரசு நடத்தி வருவதை அந்த மருத்துவரின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தப் போர் முடிவின்றி நடந்து வருகிறது. சமீபத்தில் மோடி அரசு மேலும் பத்தாயிரம் சிப்பாய்களை காஷ்மீரில் இறக்கிவிட்டிருக்கிறது. துருப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் காஷ்மீர் மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்துவிட முடியாது. பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அங்கீகரிப்பது மட்டும்தான், காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நியாயமான,சாத்தியமான வழி. அதற்கு முகங்கொடுக்காமல், நெருப்புக் கோழி மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வது போல, தேசிய ஒருமைப்பாடு என்ற பார்ப்பனிய கண் கொண்டே காஷ்மீர் பிரச்சினையை அணுகுவதும், தீர்க்க முயலுவதும் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவும் என்பதோடு, அது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் நம்பிக்கை துரோகமும் அநீதியுமாகும்.
சமஸ்கிருதத்தை முதன்மையான மொழியாக முன்னிறுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. அதன் தலைவராக என்.கோபால்சாமியை (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், தே.மு.கூ-வின் முந்தைய ஆட்சியில் கலாச்சாரத்துறை, உள்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்) நியமித்திருந்தனர்.
சி.பி.எஸ்.இ.-க்கு இணையான வேதக் கல்வி வாரியம் என்ற அமைப்பை உருவாக்கிய நரேந்திர மோடி.
இக்கமிட்டி தனது அறிக்கையை பிப்ரவரி மாதம் 17ம் தேதி ”சமஸ்கிருத வளர்ச்சிக்கான நோக்கு மற்றும் திட்டவரைவு – பத்தாண்டு கால முன்னோக்குத் திட்டம்” (Vision and Roadmap for the Development of Sanskrit – Ten year Perspective Plan) என்ற தலைப்பிலான அறிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்தது. இதில் சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் வளர்ப்பதற்கும், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குமான வழிமுறைகளையும் திட்டங்களையும் தொகுத்தளித்துள்ளது.
இக்கமிட்டியின் நோக்கம்:
1. தற்போது நடைமுறையிலுள்ள சமஸ்கிருத மற்றும் வேதக் கல்வியை ஆய்வு செய்வது.
2. பள்ளிக்கல்வியிலும் உயர் கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும் சமஸ்கிருத பாடத்தின் தன்மையில் என்னென்ன வழிகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்று ஆராய்வது.
3. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சமஸ்கிருத மொழி வளர்ச்சி அடைவதற்கான தொலைநோக்குத் திட்டம் மற்றும் செயல் திட்டங்களைப் பரிந்துரைப்பது.
4. நவீன தொழில்நுட்பம் மற்றும் வழிகளின் துணையோடு சமஸ்கிருத கல்வியைப் பரப்புவதற்கான வழிகளைப் பரிந்துரை செய்வது.
கமிட்டி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் சிலர்:
1. என். கோபால்சாமி: முன்னாள் தேர்தல் ஆணையர். 1992-2004 காலத்தில் கலாச்சாரத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவின் அங்கமான விவேகானந்தா கல்விச் சங்கத்தின் (Vivekanandha Educational Society) தலைவராக உள்ளார். விவேகானந்தா கல்விச் சங்கம் சென்னையை சுற்றிய பகுதிகளில் சுமார் 20 பள்ளிகளை நடத்தி வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ்-இன் கல்விப் பிரிவான வித்யா பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்பாகும். மேலும் இவர் ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் எனும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதே / வெளிக்கொணர்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். சமஸ்கிருத வளர்ச்சி அறக்கட்டளையின்(Sanskrit Promotion Foundation) அறங்காவலர் (Trustee). வேதங்கள் மற்றும் பழைய இந்து இலக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ – UNESCO) 50 மில்லியன் டாலர் (300 கோடி ரூபாய்கள்) தொகையை வழங்கியது. உதவித் தொகை பெறுவதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மைய அரசால் அமைக்கப்பட்ட சமஸ்கிருத வளர்ச்சிக்கான குழுவின் உறுப்பினர்கள் (இடமிருந்து) முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, டி.சி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமதுரை, முனைவர் பிபேக் தேப்ராய், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் வேத் பிரகாஷ், சிறீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வ.குடும்ப சாஸ்திரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் முனைவர் அனில் சகஸ்ரபுத்தே, நரேந்திர மோடியின் யோகா குரு நாகேந்திரா.
2. வ.குடும்ப சாஸ்திரி: ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். சமஸ்கிருத ஆய்வுகளுக்கான சர்வதேச சங்கம் (International Association of Sanskrit Studies) அமைப்பின் தலைவராக உள்ளார். தேசிய சமஸ்கிருத நிறுவனம் (ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான்) என்ற அமைப்பின் முன்னாள் துணைவேந்தர்.
3. ராமதுரை: தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation – NSDC), மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை (National Skill Development Agency – NSDA) ஆகியவற்றின் தலைவர். டி.சி.எஸ் (Tata Consultancy Services) என்ற ஐ.டி. நிறுவனத்தின் துணைத்தலைவர்.
4. முனைவர் பிபேக் தேப்ராய்: நிதி ஆயோக்(NITI AAYOG)-கின் உறுப்பினர். விவேகானந்தா சர்வதேசஅறக்கட்டளை (Vivekananda International Foundation – VIF) பொருளாதார ஆய்வு மையத்தின் (Centre for Economic Studies) புலத்தலைவர் (Dean).விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை (VIF) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு சிந்தனைக் குழாமாகும்; இந்த சிந்தனைக்குழாம், விவேகானந்தா கேந்திரத்தின் வழிகாட்டலின் கீழ் இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத்துறை நிபுணர்கள், தூதரக அதிகாரிகள், தொழிலதிபர்கள், கொடையாளிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டது
5. நாகேந்திரா: மோடியின் யோகா குருவான நாகேந்திரா என்பவரின் மாமா, கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர். ஸ்வாமி விவேகானந்தா யோக அனுசந்தான சம்ஸ்தான் (Swami Vivekananda Yoga Anusandhana Samsthaan – SVYASA) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். வியாஸா (VYASA) என்பது விவேகானந்தா யோக அனுசந்தான சம்ஸ்தான் (Vivekananda Yoga Anusanthana Samsthana) என்ற பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோயிலில் பதிவு பெற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். வியாஸாவின் (VYASA) அலுவலகங்கள் பெங்களூருவில் (Eknath Bhavan in Bengaluru city) உள்ளது. தங்கும் விடுதியுடன் கூடிய கல்வி வளாகம் (Residential Campus – Prashanthi Kutiram) பெங்களூரிவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் விவேகானந்தா கேந்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
மத்திய அரசின் பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாகத் திணித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி.
6. சாமு கிருஷ்ண சாஸ்திரி: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மொழி ஆலோசகர். சமஸ்கிருத பாரதி அமைப்பின் பொதுச்செயலாளர். இவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மானிய மற்றும் உதவிக்குழு (Grant and Aid Committee) உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (Central Board of Secondary Education – CBSE) கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலிலும் (NCERT), மாநிலக் கல்விக்குழுக்களிலும் சமஸ்கிருதக் கல்வி தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
7. பேராசிரியர் வேத் பிரகாஷ்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் (Chairman)
8. முனைவர் அனில் சகஸ்ரபுத்தே: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) தலைவர்
சமஸ்கிருத வளர்ச்சி அறக்கட்டளை (Sanskrit Promotion Foundation), என்ற அமைப்பில் பொறுப்பு வகிப்பவர்கள்தான் இக்கமிட்டி அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
கமிட்டியின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
சமஸ்கிருதம் இந்தியாவின் ஆன்மா மற்றும் அறிவு. இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கியங்கள், அறிவியல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, மருத்துவம், கணிதவியல், மேலாண்மை, விவசாயம், வாணிபம், வானவியல் என அனைத்துத் துறைகளின் அறிவையும் உள்ளடக்கிய அறிவுத் தொகுப்பாகும் என்ற அடிப்படையிலேயே இவ்வறிக்கை ஆரம்பிக்கிறது.
கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளுள் சில:
சமஸ்கிருத மேம்பாட்டிற்கான திட்டங்கள் மற்றும் வழிமுறைகளாக பள்ளிக்கல்வி, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சி என அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதத்தை பாடமாக்குவது, குறிப்பாக 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்குவது, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சமஸ்கிருத ஆசிரியரை நியமிப்பது, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.இ.ஆர் (Indian Institute of Scientific Education Research – IISER), மத்திய பல்கலைக்கழகங்கள், என்.ஐ.டி. (National Institute of Technology – NIT), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் சமஸ்கிருதத்திற்கான தனிப்பிரிவுகள் துவங்குவது
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), இந்திய தத்துவஞான ஆராய்ச்சிக் கழகம் (ICPR), இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் (ICHR), இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ICSSR), இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU), போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்திற்கான தனிப்பிரிவை உருவாக்கி, அதன் வாயிலாக சமஸ்கிருதத்தை வளர்ப்பது, அதற்காக நிதி ஒதுக்குவது, இந்தியா முழுமைக்கும் உள்ள சமஸ்கிருத மற்றும் வேதக் கல்வியை நிர்வகிப்பது, சான்றிதழ் வழங்குவது, பாடத்திட்டத்தை தயாரிப்பது என மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ – CBSE) போன்ற ஒரு நிறுவனத்தை ”வேத மற்றும் சமஸ்கிருத இடைநிலைக் கல்விக்கான மத்திய கல்வி வாரியம்” (Central Board of Veda and Sanskrit Secondary Education) ஒன்றை உருவாக்குவது, சமஸ்கிருத மற்றும் வேத பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, தேர்வு நடத்துவதற்கு உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி சந்திபனி ராஷ்டிரிய வேத சமஸ்கிருத வித்யா பரிஷத் நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்குவது, சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பது, சமஸ்கிருத பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (என்.ஜி.ஓ-க்களுடன் சேர்ந்து) நவீன முறைகளைக் கொண்டு எளிமையாக்குவது, பாடங்களை மின்னணு (electronic) வடிவில் மாற்றுவது (வீடியோ, ஆடியோ, டிஜிட்டல்), பாரிய இணையவெளி திறந்தநிலை கல்வி (Massive Onlne Open Cources – MOOCS) வாயிலாக சமஸ்கிருத கல்வியை வழங்குவது, குருகுல முறையைக் கடைப்பிடிப்பது, குரு-சிஷ்ய உறவுகளைப்பற்றி சொல்லிக் கொடுப்பது, பி.எட்., (B.Ed) மற்றும் எம்.எட்., (M.Ed)பட்டயப் படிப்புகளை சமஸ்கிருதத்தில் வழங்குவது என ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை மோடி அரசு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
வேதக் கல்வி வாரியம் அமைக்கும் மைய அரசின் முடிவைக் கண்டித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விருத்தாசலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
1. ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி.வரை சமஸ்கிருதத் திணிப்பு
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மனிதவள மேம்பாட்டு ஆணையம் அனைத்து ஐ.ஐ.டி.க்களுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியது. அனைத்து ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் சமஸ்கிருதத்தை ஒரு விருப்பப் பாடமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டுமென்று அந்த அறிக்கை கூறுகிறது. ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடம் படிப்பதற்கான காரணமாக ”சமஸ்கிருத நூல்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்” என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரை கோபால்சாமி அறிக்கையில் பக்கம் 15-ல் உள்ளது.
வரும் கல்வியாண்டு (2016-17) முதல் மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும். மேலும், வரும் ஆண்டுகளில் 8-ம் வகுப்பிற்கு மேல் 12-ம் வகுப்புவரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்” என்று ஏற்கெனவே ஸ்மிருதி இரானி கூறியிருக்கிறார். இந்தக் கருத்தே கோபால்சாமி அறிக்கையின் பரிந்துரையாக பக்கம் 10-11ல் உள்ளது.
2. வேதக்கல்விக்கு தனி கல்வி வாரியம்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சூழ்ச்சி
வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) போன்ற அமைப்பை உருவாக்க பாபா ராம்தேவ் மார்ச் மாதம் ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் மோடி தலைமையில் நடைபெற்ற அவ்வறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் கல்வி வாரியம் துவங்குவதற்கு பதிலாக அரசே வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மே மாதம் இறுதி வாக்கில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த வாரியம் சி.பி.எஸ்.இ போன்றே இயங்கும் என்று கூறியது.
வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) தொடர்பான பரிந்துரை கோபால்சாமி அறிக்கையில் பக்கம் 21ல் உள்ளது.
3. எங்கும், எதிலும் சமஸ்கிருதம்-வேத கலாச்சாரம்
ஜூன் மாதம் 8-ம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்தியை அரசு அலுவலகங்களில் பயன்பாட்டு மொழியாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்தி வழக்கு மொழியாக இல்லை. இந்தியை வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் வழக்கு மொழியாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனக் கூறியிருந்தார். மேலும் இந்தியை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்வதாக ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கூறியிருந்தனர்.
ஆரிய-பார்ப்பன கட்டுக்கதைகளே அறிவியல் தத்துவங்களாய்; ‘அவாளே’ அறிவியல் அறிஞர்களாய்…:
இவர்கள் முன்னிறுத்தும் இந்தி மொழி, உழைக்கும் மக்கள் பேசுகின்ற இந்தி கிடையாது. இது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியாகும். மேலும் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்துமே சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமல்லாது, இந்தியிலும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்விப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், அந்த மாணவர் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற நிர்வாக நடைமுறையை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். மீண்டும் இப்போது சமஸ்கிருதம், ஐ.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைகிறது. இனி, ஐ.ஐ.டி.யில் விண்ணப்பிப்பதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை கூட உருவாகலாம். ஏற்கனவே கல்விக் கட்டணத்தை 8 லட்சமாக உயர்த்தியதன் மூலம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஐ.ஐ.டி.யில் படிக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது; தற்போது சமஸ்கிருதமும் ஒரு அளவுகோலாகச் சேர வாய்ப்புள்ளது.
3. புதிய கல்விக் கொள்கை 2016 (NEP 2016): இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை
மத்திய மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையும் (NEP 2016) மேற்கொண்ட நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள பொருத்தமான சில பகுதிகள்:
6.13.19 மக்களின் வாழ்க்கை, சடங்குகள், விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் பிரிக்க இயலா வண்ணம் சமஸ்கிருத மொழி இணைந்துள்ளது; இந்தியாவின் வளமான கலாச்சார, தத்துவ, கலை மற்றும் அறிவியல் மரபுகளை அறிந்து கொள்ளும் ஒரு சாதனமாக சமஸ்கிருதம் உள்ளது; ஆகையால் சமஸ்கிருதக் கல்வியை (ஆய்வை) மிக அழுத்தமாக வலியுறுத்த வேண்டியுள்ளது
6.13.20 பிற இந்திய மொழிகளின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் சமஸ்கிருதத்திற்குரிய சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் கலாச்சார ஒற்றுமைக்கு சமஸ்கிருதம் ஆற்றியுள்ள தனிச்சிறப்பான பங்கினையும் கருத்தில் கொண்டு, பள்ளி – கல்லூரிகளில் சமஸ்கிருதம் கற்பித்தலுக்கான வசதிகள் மிகவும் தாராளமாக வழங்கப்படும்.
6.13.21 சில மாநிலங்களில் சமஸ்கிருதம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் ஏற்கனவே கட்டாயப் பாடமாக கற்றுத் தரப்படுகிறது. தொடக்க அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் பொருத்தமான கட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு தனிப்பாடமாக அறிமுகப்படுத்தலாம். சமஸ்கிருதத்தை இடைநிலைக் கல்வியில் கூடுதல் விருப்பப் பாடமாகவும், மேல்நிலைக் கல்வி அளவில் பொருத்தமான தேர்வுப் பாடமாகவும் விருப்பப்படும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் திறந்தநிலைப் பாடமாகவும் சமஸ்கிருதக் கல்வி வடிவமைக்கப்பட வேண்டும்.
(புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வெளியிட்டுள்ள “தமிழையும் தமிழின அடையாளங்களையும் துடைத்தொழிக்கப் படையெடுத்து வரும் ஆரிய – பார்ப்பனியத்தை முறியடிப்போம்!” – என்ற பிரசுரத்திலிருந்து…)
_____________________________ புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________
மகாராஷ்டிராவில் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிவந்த மருத்துவரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர், கடந்த 2013 ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து முடிந்த ஒன்றரைஆண்டுக்குள்ளேயே மகாராஷ்டிராவில் சிவசேனாவின் இனவெறியையும், ஆர்.எஸ். எஸ். கும்பலின் மதவெறியையும் எதிர்த்துவந்த வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரேயும் அவரது மனைவியும் 2015 பிப்ரவரி 20 அன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுடப்பட்டனர். இதில் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று கர்நாடகாவில் சாதிவெறியையும் இந்து மதவெறியையும் அம்பலப்படுத்தி வந்த முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி, தனது வீட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட மூவரும் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை விமர்சித்து வந்தவர்கள் என்பதோடு, இம்மூவரின் படுகொலைகளும் ஒரேவகையான துப்பாக்கியைக் கொண்டு ஒரேவிதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஒத்த தன்மைகளின் அடிப்படையில் இப்படுகொலைகளை வாதிக்கப்பட்டபோதும், நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கை விசாரித்துவந்த மகாராஷ்டிர போலீசு, விசாரணையை ஒப்புக்காக நடத்திக் கொண்டு வழக்கை இழுத்தடித்து வந்தது. இச்சூழலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கேதான் திரோட்கர், இவ்வழக்கை சி.பி.ஐ. மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2014 ஆண்டு மே மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டது. இந்நிலையில், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக, “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவரைக் கைது செய்தது மகாராஷ்டிர போலீசு.
கோவிந்த் பன்சாரே
போலீசின் விசாரணையில் சமீர் கெய்க்வாட் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தாவின் பங்கு உறுதி செய்யப்பட்டதோடு, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜன்ஜாகிருதி சமிதி ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விரேந்திர சிங் தவாடே என்ற காது- மருத்துவருக்கும் இப்படுகொலைகளில் பங்கிருப்பதை, அவரது மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் புலனாய்வு செய்து சி.பி.ஐ. உறுதி செய்தது. மேலும், கோவா சர்ச் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இண்டெர்போல் போலீசால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த சரங் அகோல்கர் என்பவருடன் இணைந்து தபோல்கர் கொலை குறித்துத் திட்டமிட்டதும்; நாட்டுத் துப்பாக்கித் தயாரிப்பு மையம் ஒன்றை உருவாக்குவது குறித்தும், வெளிநாட்டுத் துப்பாக்கிகளை அசாமிலிருந்து வாங்குவது குறித்தும், அதற்கான நிதியுதவியைச் சட்டரீதியாகவோ, சட்டவிரோதமாகவோ திரட்டுவது குறித்தும் அகோல்கருடன் மின்னஞ்சல் மூலம் தவாடே திட்டமிட்டு வந்ததும் அம்பலமானது.
கல்புர்கி
இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஜெயந்த் பாலாஜி அதாவலே என்ற மனோவசியக்காரரால் புனேயில் 1999 ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா. கலாச்சார, சமூக சேவை அமைப்பாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., கொலை, கலவரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத, பயங்கரவாத நட வடிக்கைகளைச் செய்து முடிப்பதற்காக, தனக்குச் சம்பந்தமேயில்லாத அமைப்பு களைப் போல உருவாக்கி வைத்திருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளின் வரிசையில் சனாதன் சன்ஸ்தாவும் ஒன்று.
உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தங்களது புரவலர்களாகவும் இரகசிய உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் சனாதன் சன்ஸ்தாவின் வேலையே நாடெங்கும் சதிச் செயல்களைத் திட்டமிட்டு அரங்கேற்றுவதுதான். 2008 ஆண்டு பன்வெல் மற்றும் தானேயில் மூன்று திரையரங்குகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், 2009 கோவாவில் நடத்தப்பட்ட சர்ச் குண்டு வெடிப்புகள், வெடி குண்டுகளை எடுத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக அக்குண்டுகள் மட்கவோனில் வெடித்தது உள்ளிட்டுப் பல்வேறு தீவிரவாத செயல்களில் சனாதன் சன்ஸ்தா ஈடுபட்டிருக்கிறது.
மூவர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நரேந்திர சிங் தவாடே.
இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யக் கோரி கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் அப்போதைய காங்கிரசு கூட்டணி தலைமையிலான மைய அரசுக்குக் கடிதம் எழுதின. ‘‘தடை செய்யும் அளவிற்கு குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதையும் மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்று கூறி சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்ய மறுத்துவிட்டது காங்கிரசு அரசு.
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும், அதன் மீதான தடையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பதில் அதீத அக்கறை காட்டிய காங்கிரசு அரசு, முசுலீம் மாணவர் அமைப்பான சிமி தொடங்கி மாவோயிஸ்டுகள் வரையிலான இயக்கங் களைத் தடை செய்வதற்குத் தயக்கமே காட்டாத காங் கிரசு அரசு, சனாதன் சன்ஸ்தாவிற்கு விலக்கு அளித்த்தற்குக் காரணம் அதனின் மென்மையான இந்துத்துவா அரசியல்தான்.
காங்கிரசிற்கு மாற்றாக வந்திருப்பதோ பகிரங்க மான இந்துத்துவா ஆட்சி. ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் காரணமாக முந்தைய காங்கிரசு ஆட்சியில் இந்து பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட அரைகுறை நடவடிக்கைகள்கூட, மோடி பதவியேற்ற பிறகு நீதிமன்றங்களின் துணையோடு ரத்து செய்யப்படுகின்றன.
சமீர் கெய்க்வாட்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்துள்ள தேசியப் புலனாய்வுக் கழக அதிகாரிகள், அவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான இராணுவ அதிகாரி புரோகித்தின் மீது மகாராஷ்டிராவின் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பெற்ற குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது. குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதோடு, முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான குஜராத் போலீசு அதிகாரி வன்சாராவுக்குப் பிணை வழங்கப்பட்டுவிட்டது. அதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி மோடி அரசால் சன்மானமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
தனக்கு எதிரான கருத்துக்களை அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்குப் பார்ப்பனக் கும்பல் என்றுமே தயாராக இருந்தது இல்லை. பார்ப்பனியத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை, அதனை அம்பலப்படுத்து பவர்களைக் கொலை செய்வதுதான் அதனின் வரலாறாக இருந்திருக்கிறது. இப்பார்ப்பன பயங்கரத்திற்கு சார்வாகன் தொடங்கி கல்புர்கி வரை பலியாகியிருப்பதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இந்துத்துவாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்கு கொஞ்சநெஞ்ச இடமிருப்பதையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று மோடி ஆட்சி கருதுவதை சென்னை ஐ.ஐ.டி. பெரியார்- படிப்பு வட்டம் தடை, ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. அதனால் மோடி கும்பலுக்கு சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் தேவை. இந்நிலையில் சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யும் பேச்சுக்கே மோடி அரசில் இடமிருக்காது.
கபாலி படம் குறித்து வினவில் விமரிசனமும், இரு கட்டுரைகளும் வெளியாகின. இணையத்தில் சில சாதி வெறியர்கள் இப்படத்திற்கு குறிப்பாக இயக்குநர் ரஞ்சித்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டியும், தினமணி போன்ற பார்ப்பனிய ஊடகங்களின் கருத்தை வைத்தும் சிலர் கபாலியை தலித் போராளி படமாக சித்தரிக்கிறார்கள். இது தொடர்பாக வாசகர்கள் இருவர் தெரிவித்த கருத்துக்களும் அதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதிலையும் இங்கே பதிவு செய்கிறோம். நேரமிருந்தால் இது குறித்து முழுமையாக எழுதுகிறோம். நன்றி.
– வினவு
கபாலி விமர்சனம் படித்தேன். வினவில் இப்படியொரு அபத்தமான விமர்சனம் வருமென்று நான் நினைக்கவில்லை. அவ்வளவு மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டால் பிறகு ஏன் அதற்கு விமர்சனமெழுத வேண்டும்? இதுவரை அப்படி எழுதியதேயில்லையே?
கபாலியாயை வெறும் கபாலியாக மட்டுமே பார்ப்பதற்கு வினவெதற்கு? அதற்கு செஞ்கிஸ்கான்கள் போதும். சில காட்சிகள் தவிர இப்படத்தின் பல காட்சிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற விசயத்தைக் காண்பதற்கு வினவு தவறிவிட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன்.
படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான். தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’? ரஜினியின் படத்தை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்துப் பார்ப்பது ரஜினியின் ரசிகர்கள்தான். பொதுவான ரசிகர்களல்ல. ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது. ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன்.
படம் வெளிவந்த நாள் அதிகாலை 8.00 மணிக்கெல்லாம் அலைபேசிக்குள் படம் வந்துவிட்டது. நெரிசல் இல்லாதபோதும் படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களல்லாத சினிமா ரசிகர்களுக்கு கபாலி பிடித்துள்ளது என்பதுதான் இதற்குக் காரணம். ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன?
கபாலி சொல்லும் பதில் அல்லது பஞ்ச் வசனங்களுக்கான கேள்விகளைக் கேட்டவர்கள் காந்தியிலிருந்து மாம்பழம் ஊடாக மதயானைக்கூட்டம் வரையிலும் இருப்பவர்கள்தான் என்பது வினவிற்குப் புரியவில்லையா?
– குருசாமி மயில்வாகனன்.
__________
இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:
குருசாமி மயில்வாகனன்,
கபாலி மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டு ஏன் விமரிசனம் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.அது மோசமான படமென்பது உங்களது கருத்தில்லை என்றால் அது ஏன் நல்ல படமென்றுதான் நீங்கள் விவாதிக்க வேண்டும். மாறாக ஏன் எழுதுகிறீர்கள் என்றால் அது மொக்கை படமென்பதை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அடுத்து உங்களைப் பொறுத்த வரை கபாலி மிக நல்லபடம் என்பது அடுத்த வரிகளிலேயே வருகிறது. அதுதான் உங்களது உண்மையான கருத்தென்றால் முதல் வரிகள் தவறு.
அடுத்து இந்த படம் மரண மொக்கை என்பதையோ, மட்டமான மொக்கை என்பதையோ நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. படமே அப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் விமரிசனமும் உணர்த்துகிறது.தமிழ் சினிமாவில் எல்லா போலீஸ் ஸ்டேசன் காட்சிகளிலும் அம்பேத்கர் படம் தவறாமல் இருக்கும். இது வரை உங்களது கண்ணுக்கு ஏன் அது தட்டுப்படவில்லை? கபாலியை விட பல போலிஸ் படங்களில் அதிக முறை அம்பேத்கர் படமாக வந்து போகிறார்.ஆகவே இப்படியெல்லாம் அபத்தமாக குறியீடு ஆய்வு செய்யாதீர்கள்.
ரஜினி ரசிகர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை கபாலி டிக்கெட்டே முதல் நாட்களில் கிடைக்கவில்லை. எல்லாம் ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விற்கப்பட்டதால் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இது வினவின் கட்டுரையிலேயே வருகிறது. ஐ.டி நிறுவனங்களில் வசூல் செய்தவர்கள் சசிகலா கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகிறது என்று ரசிகர்களையெல்லாம் ஆதிக்கசாதியாக்கி விட்டீர்கள். உண்மையில் ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களுக்கு தலித் ரசிகர்கள் அதிகம். பா.ம.க ரஜினி படப்பெட்டியை எடுத்து படத்தை ரலீஸ் செய்ய தடை ஏற்படுத்தியது, பா.ம.க பகுதிகளில் விஜயகாந்த் வெற்றி பெற்றது எல்லாம் அப்படித்தான்.
வில்லேஜ் தீமில் அம்பேத்கர் படமுண்டா என்று அப்பாவியாக கேட்டிருக்கீர்கள். பாராளுமன்றத்திலேயே அம்பேத்கர் உண்டு. அதற்கு மோடி மாலை போட்ட போட்டோவும் உண்டு. உடனே பா.ஜ.க வில் அம்பேத்கர் இருப்பதால் அது தலித் கட்சி என்று அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
மற்றபடி உங்களைப் போன்றவர்கள் அர்த்தமற்ற இந்த குறியீடுகளை வைத்து கபாலி படம் எனும் தேவர் சாதி வெறி கும்பல் வழிப்பறி செய்த கொள்ளையை, ரஜனி எனும் பா.ஜ.கவின் பிராண்ட் அம்பாசிடரின் இமேஜை ஆதரிக்கிறீர்கள். இல்லையேல் அத்தகைய தலித் போராளி படமான கபாலியை எதற்காக்க தேவர் சாதி வெறி சசிகலா கும்பல் வெளியிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவு தேவர் சாதி சசிகலா கும்பல் புத்திசாலி அல்ல என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்நாட்டில் அடிமைகளாக வாழ்வதும் புத்திசாலிகளாக இல்லை என்ற காரணத்திலாகி விடும். சாதி ஒடுக்குமுறை என்பது அறிவார்ந்து அல்ல, பொருளாதாரத்தை சார்ந்து சமூக ரீதியாக ஒடுக்குவது. நேரமிருப்பின் காபாலி அக்கப்போர்களை வெளுத்து வாங்கும் வண்ணம் எழுதும் எண்ணமுண்டு.
இறுதியில் காபாலி எனும் முன்னாள் தொழிற்சங்க தலைவர் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவனாக உலா வந்து 1 கோடி ரூபாய் பென்ஸ் காரில் வந்து சோபாவில் தேய்ந்து போன வசனங்களைப் பேசினால் உங்களைப் போன்றவர்கள் ரஜினி ரசிகர்களா மாறுகிறீர்கள் என்றால் உண்மையான ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல். அவர்களை திருத்த முடியும். மற்றவர்களை சிரமம்.
உங்கள் நிலை குறித்து பரிதாபப்படுகிறோம். நன்றி
பின் குறிப்பு:
//தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’?//
மயில் வாகனன், கபாலியில் மறைந்திருக்கும் பல்வேறு கம்ப சூத்திரங்களை கண்டிபிடித்து விட்டு மேற்க்ண்ட வரியின் சூட்சுமம் புரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. முடிந்தால் கட்டுரையை மீண்டும் படித்து விட்டு அந்த வரி நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் வேறு மாதரி இருப்பதையும், அது தரும் பொருள் என்னவென்பதையும் கண்டுபிடியுங்கள். இல்லையேல் கபாலி காய்ச்சலிருந்து நீங்கள் இன்னமும் விடுபடவில்லை என்றாகிவிடும்.
____________________
மயில்வாகனனுக்கு அளிக்கப்பட்ட வினவு பதில் குறித்து வாசகர் சுகதேவ் விமரிசக்கிறார்:
அம்பேத்கர் படத்தை போலீஸ் நிலையங்களில் காட்டும் போது எழாத எதிர்ப்பு கபாலியில் காட்டிய போது ஏன் எழுகிறது? ‘எனக்கு ஒரு கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம். டாங்கு டக்கர டொய்’; ‘கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு; காலத்தின் கையில் அது இருக்கு’ என்பவை தான் தனது திரைப்படங்களில் ரஜினிகாந்த் பேசி வந்த ‘அரசியல்’. அவற்றிலிருந்து நகர்ந்து கபாலியில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும்.
கபாலியில் ரஜினி பேசிய வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரஜினியினுடையவை அல்ல. அவை கபாலியினுடையவை. அதனால் தான் ஒரு புத்திசாலி ரசிகனால் கபாலியுடன் ஒன்றுபட முடியவில்லை. தலித் அதிகாரம் பெறுவது தொடர்பான ஒரு கனவின்பம், கபாலி. இதனை கற்பனாவாதம் என்று எளிதில் நிராகரிக்கலாம். ஆனால் இப்படம் பார்ப்பவருக்கு வழங்கும் தற்காலிக கர்வம் முக்கியமானது. இதனை தினமணி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நபர்களால் எக்காரணம் கொண்டும் புரிந்து கொள்ள இயலாது. நீங்களும் அந்த ஜீப்பில் ஏறிக் கொள்வது எதற்காக?
இப்படத்தை மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்திருப்பது தெரியவில்லையா? தேவர்சாதி வெறி தயவில் தலித் விடுதலையா? என்று கேட்பது ஒரு மாய நியாயம். கபாலி அல்ல; ஜோக்கர் படத்தை கூட மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்ய முன்வரலாம். காரணம் மக்களுடைய கோபாக்கினையின் எல்லையை புரிந்து கொண்டுள்ளது ஆளும்வர்க்கம். கோவன் கைது செய்யப்பட்டதை பா.ஜ.க எதிர்த்தது. இதை எப்படி புரிந்து கொள்வது? ‘மோடிக்கு பூங்கொத்து கொடுக்கும் ஜெயா’ படம், பாடல் காட்சிகளில் இருந்ததால் பாடலை ஏற்க முடியவில்லை என்று தமிழிசை விளக்கினார். ஆனால், அதன் பிறகும், முரளிதரர் ராவ் ஒரு பேட்டியில், கோவன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பேட்டி கொடுத்தார்.
பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்து சென்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய நினைக்கவில்லை. காரணம், எந்த பெரிய நெருக்கடியையும் அரசு உணரவில்லை. கபாலியை ஸ்பான்ஸர் செய்வதிலும் மன்னார்குடி மாபியாக்களுக்கு இந்த உத்தி தான் இருக்க முடியும். எனவே அதனை விமர்சிக்கின்ற அதே நேரம் இப்படத்தை தனியாக அலசுவதும் தேவையாகிறது. கபாலி விமர்சனத்தில் இந்த இரண்டாம் கடமையை செய்வதில் நேர்மைத் திறம் வெளிப்படவில்லை.
– சுகதேவ்.
______________
இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:
சுகதேவ்,
மெய்நிகர் உலகின் மாயைகள் மெய்யுலகில் இல்லை என்பதை புரிய வைப்பது சிரமம். கபாலி படத்திற்காக ஆதிக்க சாதி சங்கங்கள் எவையும் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமோ, மறியலோ, திரையரங்க முற்றுகையோ ஒன்று கூட நடத்தவில்லை. காரணம் இந்தபடம் தலித் படமோ, தமிழர் படமோ, மலேசியாவில் பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் படமோ இல்லை. இல்லவே இல்லை. இது ஒரு அப்பட்டமான மசாலா. இதை இயக்குநர் ரஞ்சித்தே பல நேர்காணல்களில் கூறுகிறார்.
இணையத்தில் சில சாதிவெறியர்கள் எதிர்ப்பதை வைத்து படமே தலித் போராளி படம் என்று கருதுவது சகிக்க முடியாத பிழை. இணையத்தில் அப்படி சிலர் எதிரப்பு தெரிவிப்பது என்பது இதுதான் என்றில்லை, பல்வேறு விசயங்களில் நடக்கிறது. மெய்யுலகத்தில் ‘கலப்பு மணங்கள்’ குறித்து ராமதாஸ் முன்வைத்து பேசும் சாதி வெறி கருத்துக்களே தமிழகத்தின் ஆதிக்க சாதி அல்லது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களது கருத்து. நிலைமை இப்படி இருக்க கபாலி படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இது வரை ஓடியது என்றால் ராமதாஸ் மற்றும் தமிழக ‘பெரும்பான்மை’ மக்கள் திருந்தி விட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
கபாலியில் ரஜினி பேசியது அரசியல் வசனங்கள் என்று ஏதாவது ஒன்றையாவது தாங்கள் சொன்னால் விவாதிப்பது பலனளிக்கும். ரிக்ஷாக்காரனாக, விவசாயியாக எம்.ஜி.ஆர் பேசாதா வசனமா, லியாகத் அலிகான் உதவியுடன் விஜயகாந்த் பேசாதா புரட்சியா?……அதனால்தான் கபாலி படம் துக்ளக் சோவிற்கும் பிடித்திருக்கிறது.
கபாலி படத்தை வைத்துத்தான் தினமணியை இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாறாக தினமணியின் பார்ப்பனிய திமிரை கண்டித்து வினவில் மட்டுமே ஏராளமான கட்டுரைகள் உண்டு. இன்றைக்கும் கபாலியை வியந்தோதுவார் நாளைக்கே தினமணி வைத்தியுடன் நட்புறவு கொண்டு நடுப் பக்க கட்டுரை எழுதுகிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதுவார்கள். மாறாக தலித் மக்கள் அசைவம் உண்பதால்தான் ரேப் செய்கிறார்கள் எனும் வைத்தியை கண்டித்து இணையத்தின் காபாலி ஆதரவு முற்போக்காளர்கள் எவர் எழுதியிருக்கிறார்கள?
மேலும் ஒரு விசயத்தை சரியான முறையில் நாங்கள் விமரிசிப்பதையும், தவறான முறையில் மற்றவர் விமரிசிப்பதையும் இணை வைத்து பேசுவது கண்டனத்திற்குரியது. அழகிப் போட்டியை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமும், இடது சாரிகளின் நோக்கமும் ஒன்றா? இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியைத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், முசுலீம் மதவெறி அமைப்புக்களும் ஒன்றா? எங்கள் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் சாதி வெறியர்களின் முதுகில் அமர்ந்து கொண்டு சிலர் பேசும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இல்லை வினவு எப்படி தலித் விரோத ஆதிக்க சாதி வெறி பத்திரிகை என்று நிருபியுங்கள், விவாதிக்க காத்திருக்கிறோம்.
கோவன் கைதை பா.ஜ.க எதிர்த்தது என்பது கலப்படமில்லாத முழுப்பொய். ஆரம்பத்தில் எதிர்ப்பதாக பேசிய தமிழிசைக்கு கண்டனங்கள் குவிந்த பிறகு அவர் தனது எதிர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார் (அதாவது முதலமைச்சரை இழிவு படுத்தி கோவன் பாடியது தனது கவனத்திற்கு வரவில்லை என்றார்). மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க டி.வி நிலையை விவாத வித்வான்கள் வினவு மற்றும் ம.க.இ.கவை தடை செய்ய வேண்டும் என்று எழுதி பேசியிருக்கிறார்கள். அடுத்து பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்துச் சென்றிருக்க முடியும் என்பது உங்களது தவறான பார்வை. இதற்கு பா.ஜ.க தயவு இருப்பதால்தான் நீங்கள் சுதந்திரமாக எழுதி பேசி உலாவுகிறீர்கள் என்றே நேரடியாக சொல்லலாம்.
உங்களது வாதப்படி சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் கூட பா.ஜ.கவின் கருணை என்று விளக்கமளிக்கலாம். மோடி நினைத்திருந்தால் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை நாடு கடத்தியிருக்கலாம் என்று கூட நீங்கள் மதிப்பிடலாம். ஆனால் அந்த தடை நீக்கம் என்பது தமிழகத்தில் எழுந்த மாபெரும் எதிர்ப்பின் விளைவு அல்லது வேறு வழியில்லாத நிலை என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. முழு இந்தியாவும் பல்வேறு அமைப்புக்களும் அதற்காக்க குரல் கொடுத்தன, போராடின. புரட்சிகர அமைப்புக்களும் தீவிரமாக போராடின.
எல்லா சமூக மாற்றங்களும், போராட்டங்களும் ஆளும் வர்க்கங்களின் கருணையால் நடப்பதில்லை. உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணம். ஊத்திக் கொடுத்த உத்தமி பாட்டை பாடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் பிணையில் விடுதலையாகி அங்கேயே அதே பாட்டை வரிமாறாமல் பாடினாரே அது ஏன்? ஜெயாவின் கருணையா இல்லை அந்த பாசிஸ்டை அஞ்சாமல் எதிர்க்கும் புரட்சிகர அமைப்புக்களின் நெஞ்சுரமா? இல்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு முற்போக்காளர், பத்திரிகையாளர், பத்திரிகை, மற்ற கட்சிகள் யாராவது ஜெயலலிதாவை ஒரு பாசிஸ்டு என்று எழுதவோ, ஒரு வாரம் தமிழகத்தில் இயக்கமோ நடத்தவோ சொல்லுங்கள் பார்ப்போம்!
இன்றைக்கும் தமிழகத்தில் ஜெயாவை எதிர்ப்பதில் அஞ்சாமல் செயல்படும் ஒரே இயக்கம் எதிர்க்கட்சி எமது அமைப்புக்கள் மட்டுமே. இதில் நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்பதை பெருமையாக சொல்லவில்லை. மற்றவர்கள் கோழைகளாக இருக்கிறார்களே என்று வருத்தத்துடனே பதிவு செய்கிறோம்.
கபாலி ஏன் ஒரு தலித் படம், ஆதிக்க சாதி எதிர்ப்பு படம் என்பதற்கு காத்திரமான ஒரு விமரினத்தையோ, கருத்தையோ இது வரை யாரும் எழுதி நாங்கள் பார்க்கவில்லை. அனைத்துமே ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே முன்வைக்கின்றன. இரண்டாவதாக இயக்குநர் ரஞ்சித் பேசும் சில அரை குறை முற்போக்கு கருத்துக்களை வைத்து கபாலியை முன்வைக்கிறார்கள். நாங்கள் கேட்பது கபாலி படத்தில் எங்கே தலித்துக்களின் வாழ்வோ, வசனமோ, குறியீடோ இருக்கிறது என்பது மட்டுமே!
கபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறார். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சயம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி!
பின்குறிப்பு: இந்தியாவில் சாதி ஒழிப்பு எனும் சமூக மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ்-தான் செய்ய முடியும் என்று எழுதிய திருவாளர் சமஸ் – தி இந்துவின் ஆசிரியர்களுள் ஒருவர் – கபாலி படத்தை ஆதிக்க சாதி எதிர்ப்பு படமாக உணர்கிறார், வாழ்த்துகிறார்!
குஜராத் மாநிலத்தில், உனா என்ற சிறு நகரில் இந்து மதவெறிக் கும்பலொன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நான்கு அப்பாவிகளைக் கட்டி வைத்துக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம், இந்து மதம் எனச் சொல்லப்படும் சனாதன தர்மத்தின் கொடுங்கோன்மையை, உயர்சாதி வன்மத்தை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதேபொழுதில், குஜராத் தாழத்தப்பட்ட மக்கள் இந்துத்துவக் கும்பலை, ஆதிக்க சாதிவெறியை அதன் பிடரியைப் பிடித்து உலுக்கி வருகிறார்கள். அவர்கள் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக குஜராத்தில் நடத்திவரும் போராட்டங்கள், இந்து மதவெறிக் கும்பலை ஆப்பசைத்த குரங்கு நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதோடு, மோடியின் குஜராத் குறித்து பார்ப்பனக் கும்பல் சித்தரித்த உன்னதங்களின் போலித்தனத்தை, மோசடித்தனத்தைத் தோலுரித்தும் காட்டிவிட்டன.
சக மனிதன் என்ற இரக்கமோ, கருணையோயின்றி இந்து மதவெறிக் கும்பலால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நான்கு அப்பாவிகள் தாக்கப்படும் கொடூரம்.
உ.பி.யில் அக்லக்கைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.இன் கோமாதா அரசியல்தான், குஜராத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது பாய்ந்து குதறியது. பசு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பழி சுமத்தி அக்லக்கைக் கொலை செய்த இந்து மதவெறிக் கும்பல், பசு மாட்டைக் கொன்று அதன் தோலை உரித்ததாகக் காரணம் கற்பித்துத் தாழ்த்தப்பட்டோர் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது.
“கௌ ரக்ஷக் தள்” என்ற சிவசேனாவைச் சேர்ந்த குண்டர் படையால் தாக்கப்பட்ட அசோக் சர்வைய்யா, வஸ்ரம் சர்வைய்யா, ரமேஷ் சர்வைய்யா, பேச்சர் சர்வைய்யா ஆகிய நால்வரும் சமர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். செத்த மாடுகளின் தோலை உரிப்பதை, இச்சாதியினரின் குலத்தொழிலாக விதித்திருக்கிறது, பார்ப்பன இந்து மதம். இன்னொருபுறத்திலோ, மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதையே காரணமாகக் காட்டி மிருகத்தனமான தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.
குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில், உனா வட்டத்தில் அமைந்துள்ள மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்த அந்நால்வரும் கடந்த ஜூலை 11 அன்று, அருகிலுள்ள கிராமத்திலிருந்து செத்த மாட்டைத் தமது கிராமத்திற்கு எடுத்துவந்து அதன் தோலை உரித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கு வந்த சிவசேனா இந்து மதவெறிக் கும்பல், அந்நால்வரும் பசு மாட்டைக் கொன்று அதன் தோலை உரிப்பதாகக் கூறி அங்கேயே அந்நால்வரையும் தாக்கியது. அந்நால்வரையும் காப்பாற்ற, வேறுவழியின்றி, அவர்களின் உறவினர்கள் தமது சாதியையும், தமது குலத் தொழிலையும், செத்த மாட்டின் தோலைத்தான் அவர்கள் உரித்ததையும் சொல்லிச்சொல்லிக் கதறிய பிறகும், அக்கும்பல் அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், அந்நால்வரையும் தமது காரில் தூக்கிப் போட்டு, அருகிலுள்ள உனா நகருக்குக் கடத்திச் சென்றது. அங்கு நடுத்தெருவில், போலீசு நிலையத்திற்கு அருகில், பலரும் கூடிநின்று வேடிக்கை பார்க்க, அந்நால்வரையும் அரை நிர்வாணமாக்கி, அவர்களைக் காரோடு சேர்த்துக் கட்டிப் போட்டு, இரும்புக் கம்பிகளாலும் தடிகளாலும் தாக்கியிருக்கிறது.
இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட (இடமிருந்து) வஸ்ரம் சர்வய்யா, அசோக் சர்வய்யா மற்றும் ரமேஷ் சர்வய்யா.
அந்நால்வரில் ஒருவன் 17 வயதான சிறுவன்; இரும்புக் கம்பியால் விழும் அடியின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் கதறிய ஒவ்வொரு முறையும், அடி இன்னும் பலமாக, இன்னும் வீச்சாக உடம்பில் இறங்கியிருக்கிறது. இந்தக் கொடூரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்கூட அதனைத் தடுக்க முன்வரவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக நின்ற போலீசு இந்த அட்டூழியத்தைத் தடுக்க முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, அந்த அப்பாவிகளைத் தாக்குவதற்கு தமது லத்திக் கம்புகளையும் கொடுத்து உதவியது.
அந்த இந்து மதவெறிக் கும்பல், அதோடு அடங்கிவிடாமல், சமூகத்தையே அச்சுறுத்தும் நோக்கில் தாக்குதலை முழுமையாகப் படம் பிடித்து, இணையத்தில் பதிவேற்றமும் செய்து வெளியிட்டது.
குஜராத் இந்து மதவெறி அரசுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோர் நடத்திய பொது வேலைநிறுத்தம் சௌராஷ்டிர பகுதியில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. அப்பகுதியில் பெரும் போலீசு படையைக் குவித்த பிறகும், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டு எவையும் இயங்கவில்லை. இவ்வேலைநிறுத்தத்தின்பொழுது போர்பந்தர் நகரில் போலீசுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே நடந்த மோதலில் 12-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், இரண்டு போலீசு வாகனங்களும் எரிக்கப்பட்டதாகவும்; ராஜ்கோட், சுரேந்திரநகர், ஆம்ரேலி, ஜுனாகத், அகமதாபாத், தோராஜி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பும் பின்பும் நடைபெற்றுவரும் போராட்டங்களால் நகரத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட மனோஜ்பாய்
ஆம்ரேலி நகரில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்பொழுது போலீசுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் பங்கஜ்ஆ ம்ரேலியா என்ற தலைமைக்காவலர் இறந்துபோனார். அகமதாபாத் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தைக் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி ஒடுக்கியது போலீசு. மெஹ்ஸானா மாவட்டத்திலுள்ள காதி நகரில் நடந்த போராட்டம் காரணமாக அந்நகரப் பேருந்து நிலையம் இழுத்து மூடப்பட்டது. அங்கு மட்டுமின்றி, போர்பந்தர், ஜாம்நகர், ஜுனாகத் ஆகிய நகரங்களிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் 4,000-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் திரண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழவு வீடுகளில் பாடப்படும் ஒப்பாரிப் பாடலின் ராகத்தில், “ஹாய்ரே மோடி, ஹாய் ஹாய்ரே மோடி” எனக் கிண்டலும், நக்கலும் நிறைந்த தொனியில் முழக்கங்களை இட்டு, யாராலும் எதிர்க்கமுடியாத, வல்லமை பொருந்தியவராக ஏத்திவிடப்பட்ட மோடியின் பிம்பத்தைப் பொத்தலாக்கிவிட்டனர், தாழ்த்தப்பட்ட மக்கள்.
இப்போராட்டங்களுக்கு அப்பால், சுரேந்திரநகர் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செத்துப்போன மாடுகளைக் கொண்டுவந்துபோட்டு, “உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக்கொள்” என முழக்கமிட்டு நடத்திய போராட்டம், இன்று ஒரு மாபெரும் இயக்கமாகவே குஜராத் மாநிலமெங்கும் நடந்துவருகிறது.
நாதுபாய் பர்மர், மகேஷ்பாய் ரதோட்என்ற இரண்டு சமூக ஆர்வலர்களும், இறந்த மாடுகளை விற்றுவரும் ஹீராபாய் சௌதா என்ற உள்ளூர் வணிகரும் கிராமம் கிராமமாகச் சென்று, உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உனாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தை, அதன் கொடூரத்தைக் கைபேசி மூலம் காட்டி, இந்தத் தருணத்தில் வலுவான எதிர்ப்பைக் காட்டவில்லையென்றால், பிறகு நம்மால் எழுந்து நிற்கவே முடியாது என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு உணர்வூட்டி, செத்த மாடுகளை எடுத்து அடக்கம் செய்ய மறுக்கும் போராட்டத்திற்கு அணிதிரட்டியுள்ளனர்.
அவர்கள் மூவரும் உருவாக்கிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாய் மாறி, குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கும்பலை, அதிகார வர்க்கத்தை, செத்த மாட்டை எடுத்துப் போடுவதைத் தீட்டாகப் பார்த்துவரும் ஆதிக்க சாதிக் கும்பலைச் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாறத் தொடங்கியதையடுத்து, ஜூலை 18 அன்று கோண்டால் மாவட்ட அலுவலகங்களின் முன்பாக 30 செத்த மாடுகளைக் கொண்டுவந்து போட்டு, 250-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் அணி திரண்டு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். காந்தி நகர், மெஹ்ஸானா, அகமதாபாத் ஆகிய மாவட்ட அலுவலங்களின் முன்பும், நகர, கிராமத் தெருக்களிலும் அப்புறப்படுத்தாத செத்த மாடுகள் குவியத் தொடங்கின.
சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செத்துப்போன மாடுகளைக் கொண்டுவந்து போட்டு, “உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக் கொள்” என முழக்கமிட்டு நடத்திய போராட்டம்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காண்பது என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்த சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ.200/- தர ஏற்பாடு செய்வதாகவும், மாடுகளின் தோலை உரிக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி, அத்தீண்டாமைத் தொழிலை நைச்சியமாக தாழ்த்தப்பட்டோரின் தலையிலேயே சுமத்த முயன்றார். “செத்த மாடுகளை அப்புறப்படுத்த முன்வரும் ஒவ்வொரு அதிகாரிக்கும், ஒரு மாட்டுக்கு 500 ரூபாய் நாங்கள் தருகிறோம்” எனப் பதிலடி கொடுத்து, அதிகார வர்க்கத்தின் மூக்கை அறுத்தனர், தாழ்த்தப்பட்ட மக்கள்.
உயர் அதிகாரிகள் வந்துபோகும் நகரத் தெருக்களில் கிடந்த செத்த மாடுகளை ஜே.சி.பி. இயந்திரங்களை வைத்து அப்புறப்படுத்துவதற்கே திணறிப் போய் நிற்கும் மாவட்ட நிர்வாகம், கிராமப்புறங்களைக் கண்டுகொள்ளவேயில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் வேலையைத் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தி வந்த ஆதிக்க சாதி கும்பல், இன்று அத்தீண்டாமை தன் மீதே சுமத்தப்பட்டிருப்பதைக் கண்டு, பீதியடைந்து நிற்கிறது.
* * *
தாழ்த்தப்பட்ட மக்களை இப்படியொரு கலகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளியது உனாவில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. மோடியின் குஜராத் எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியைச் சாதித்ததோ, அதற்கு இணையாக சமூக ஒடுக்குமுறைகளின் களமாகவும் விளங்குகிறது.
உனா தாக்குதல் சம்பவம் குறித்து வாயைத் திறக்காத மோடியின் மௌனம், தாழ்த்தப்பட்டோர் மீது அவருக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் அதாவது இந்துத்துவத்தின் உண்மையான உணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இந்தியாவிலேயே குஜராத்தான் முதல் மாநிலமாக இருந்திருக்கிறது.
குஜராத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இயங்கிவரும் நவ்சர்ஜன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டில், 1,569 கிராமங்களில், 98,000 பேரிடம் நடத்திய ஆய்வுகளின்படி, குஜராத்தில் 98 வகையான தீண்டாமைக் குற்றங்கள் கடைப்பிடிக்கப்படுவதை ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு விதிக்கப்பட்ட குலத் தொழிலையே செய்ய வேண்டிய நிலையில் கட்டாயமாக இருத்தப்பட்டிருப்பதையும், சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்தான் கக்கூஸைக் கழுவுமாறு நிர்பந்திக்கப்படுவதையும்; குஜராத்தின் 54 சதவீதப் பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியாக அமர்த்தப்படும் தீண்டாமை நிலவுவதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்திய அளவில் பதியப்படும் தீண்டாமைக் குற்றங்களில் 23.8 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். குஜராத்திலோ குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைவிட மிகக்குறைவாக, 6 சதவீதமாக (2015-ல்) உள்ளது. இது, 2013-ல் 2.5 சதவீதமாகவும், 2014-ல் 3.5 சதவீதமாகவும் இருந்தது.
தேசிய சராசரியைவிடத் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம், அந்த மாநிலமும் அதன் அரசும் நீண்ட காலமாகவே ஆதிக்க சாதிவெறியர்களின் சொர்க்க பூமியாக இருந்துவருவதுதான். பா.ஜ.க.வின் ஆட்சி இந்த நிலைமையை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.
அக்டோபர் 2012-ல் சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள தாங்கத் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டோருக்கும், பர்வாத் எனும் மேல்சாதியினருக்கும் நடந்த மோதலை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்த விசாரணை அறிக்கையைக்கூட வெளியிட மறுத்துவரும் குஜராத் அரசு, அதற்கு, “அறிக்கையை வெளியிடுவது தேசத்தின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும்” என்ற புளுகுணித்தனமான காரணத்தைக் கூறி வருகிறது.
உனாவில் நடந்த இந்து மதவெறிக் கும்பலின் தாக்குதலைக் கண்டித்து குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.
இத்துப்பாக்கிச் சூடு நடந்தபொழுது, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து வெறும் 12 கி.மீ. தூரத்தில்தான் நரேந்திர மோடி இருந்தார். ஆனாலும், அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வரவில்லை. உனா சம்பவத்திற்கும் மௌனம்தான் அவரது எதிர்வினையாக இருக்கிறது.
முசுலீம் தீவிரவாதிகள் கொஞ்சம் பலமாகக் குசுவிட்டால்கூட, அதனைக் கண்டித்து டுவிட்டரிலும், முகநூலிலும் வரிந்துகட்டிக் கொண்டு எழுதும் கருத்து கந்தசாமியான மோடி, உனா சம்பவத்தை வாயளவில் கூட கண்டிக்க மறுப்பதற்குப் பொருள் இல்லாமல் இல்லை. அவரது இந்த மௌனம் தாழ்த்தப்பட்டோர் மீது அவருக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும், அதாவது இந்துத்துவத்தின் உண்மையான உணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.
* * *
இந்த அடக்குமுறையும் நீதி மறுக்கப்படும் சமூக நிலைமையும்தான் தாழ்த்தப்பட்டோரைக் கலகத்தில் இறங்க வைத்திருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரை விஷத்தையும், திராவகத்தையும் குடித்து உயிரை விடும் நிலைக்குத் தள்ளி, அவர்களுள் இரண்டு பேரின் உயிரை அநியாயமாகப் பறித்திருக்கிறது. பா.ஜ.க வோ, மற்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது நடக்கும் தாக்குதல்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதன் மூலம், தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.
உனாவில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக நின்ற இரண்டு போலீசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கணக்குக்காட்டும் நடவடிக்கைகள்கூட, தாழ்த்தப்பட்ட மக்கள் போராடத் தொடங்கிய பிறகு, பத்து பன்னிரெண்டு தாழ்த்தப்பட்டோர் விஷம் அருந்தி சாகத் துணிந்த பிறகு, இத்தாக்குதலுக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் வலுத்து இந்து மதவெறிக் கும்பல் சந்தி சிரித்துப் போன பிறகுதான் எடுக்கப்பட்டன.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதாலேயே பா.ஜ.க. அரசு நீதி வழங்கிவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? தாழ்த்தப்பட்ட மாணவர் ரோஹித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய விவகாரத்தில்கூட, அவர் தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் ஹைதராபத் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த அப்பா ராவ், மைய அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா உள்ளிட்ட சிலர் மீது வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்தது என்ன?
போராட்டத்தின் வீச்சு தணிந்த பிறகு, மீண்டும் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அப்பாராவ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக மீண்டும் மாணவர்கள் போராடியபொழுது, மாணவர்கள் மீதும், பேராசிரியர்கள் மீதும் போலீசு தாக்குதலும், வழக்கும் பாய்ந்தது. இதே போன்று உனா தாக்குதல் தொடர்பான வழக்கிலும் முதுகில் குத்த பா.ஜ.க. தயங்காது.
மற்ற மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதல்கள் நடைபெறுவதை மறுக்க முடியாதுதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ் சாதிப் படிநிலையை, ஆதிக்க சாதியினரின் சிறப்புரிமைகளை, கருவறை தீண்டாமை தொடங்கி சமூகத் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து இழிவுகளையும் கொள்கைரீதியாகவே ஆதரிக்கும் அமைப்புகளாக உள்ளன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசு இறைச்சி உண்பதற்குத் தடை உள்ளிட்டு இதற்கு அநேக உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களிடம் கருவாகி, மகாராஷ்டிராவின் பேஷ்வா மன்னர்கள் உள்ளிட்ட வட இந்திய பிற்போக்கு நிலப்பிரபுத்துவ மன்னர் பரம்பரைகளால் ஆதரிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கை வருண வியவ்ஸ்தா எனப்படும், வருண வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாதுகாப்பதுதான்
1980-களுக்குப் பின்னர், தனது ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்திற்காகவும், முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களில் காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும்தான் தாழ்த்தப்பட்டோரையும், பழங்குடியின மக்களையும் ஆர்.எஸ்.எஸ், இந்துவாக அடையாளப்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கியது. எனினும் அவர்களை ஆதிக்க சாதி இந்துக்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். என்றுமே கருதியதில்லை. மகாராஷ்டிராவில் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிராக சிவசேனா நடத்திய கலவரம் தொடங்கி இன்று உனாவில் நான்கு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்டது வரை இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
தாழ்த்தப்பட்டோரும் முசுலீம்களும் இந்து தேசத்தில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.−இன் கருத்து. அவர்கள் அதனை மீறும்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து ஒற்றுமை பசப்பல்கள் மறைந்து அதன் உண்மை முகம் தெரியவருகிறது.
ரோஹித் வெமுலாவின் தற்கொலையையடுத்து நாடெங்கும் இந்து மதவெறிக் கும்பலுக்கு மாணவர்களும் அறிவுத்துறையினரும் நடத்திய போராட்டத்தையும், இன்று குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோர் நடத்தி வரும் போராட்டங்களும் இலக்கில் ஒன்றாக இருந்தாலும், முந்தையதைவிட குஜராத்தில் நடைபெறும் போராட்டம் அதிமுக்கியத்துவம் உடையதாகும்.
மற்ற வட இந்திய மாநிலங்களைவிட, குஜராத்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் இரும்புக் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. 1980-களில் இட ஒதுக்கீடுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஆதிக்க சாதியினரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்டோரை இலக்காக வைத்து நடத்திய கலவரங்களும்; 2002-இல் மோடியின் தலைமையில் நடத்தப்பட்ட முசுலீம் இனப்படுகொலையும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பிடியை இன்னும் வலுவாக்கியிருக்கின்றன.
அப்படிப்பட்ட மாநிலத்தில், அம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் மிகக் குறைவாக இருக்கும் (7.1 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர், உட்சாதிப் பிரிவுகளைக் கடந்து இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவதும், செத்த மாடுகளை அப்புறப்படுத்த மறுத்து கலகத்தில் இறங்கியிருப்பதும் அசாதாரணமான ஒன்று.
உழவுக்குப் பயன்படாத காளைகளையும், பால் வற்றிப் போன பசுக்களையும் கொல்லக்கூடாது; அதன் கறியை உண்ணக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் ஃபத்வா, பொருளாதாரரீதியில் தற்கொலைக்கு ஒப்பானது. மாடு வளர்ப்பதைத் துணைத் தொழிலாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு எதிரானது.
எனவே, ஆர்.எஸ்.எஸ்.-இன் பசு பாதுகாப்பு என்ற பார்ப்பன-பாசிச அரசியலுக்கு எதிராக இன்று குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், ஏதோ அவர்களின் பிரச்சினைக்காக நடப்பதைப் போலச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அது கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளின் நலனையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனாலும், இப்போராட்டத்தை அவர்கள் மட்டுமே நடத்தும் நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பால் பலன் அடைந்து வரும் சாதி இந்துக்களும், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்க்க மறுத்து, ஒதுங்கி நிற்கிறார்கள். இந்த மனசாட்சியற்ற பாராமுகமும், மறைமுக ஆதரவும்தான் பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு பலம் சேர்க்கிறது.
அலகாபாத்தில் பெய்த கனமழையினால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஒருவர் கையில் குழந்தை மற்றொரு கையில் மரப்படுக்கை என நடந்து செல்லும் காட்சி.
மழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கிய போது குறிப்பாக சென்னை – கடலூர் மக்கள் பட்ட அவதிகளையும், செம்பரபாக்கம் புகழ் அம்மாவின் அலட்சிய நிர்வாகத்தினையும் பார்த்தோம். இது இந்தியாவின் பல மாநிலங்களில் வருடம் தோறும் நடக்கின்ற துயரமாக மாறி வருகிறது. இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டுநிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றப்படும் இந்தியாவில் அவர்களது நலனுக்காக மக்களின் வாழ்வாதாரங்கள் பலி கொடுக்கப்பட்டு வளர்ச்சி எனும் மாயையை முன்னிறுத்துகிறார்கள்.
விளைவு எல்லா நகரங்களிலும் எந்த வசதிகளும் இல்லாத சேரிகளில் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். நடுத்தர வர்க்கமும் ஓரளவு பாதிக்கப்படுகிறது. கனிம வளங்கள், சுற்றுலா பகுதிகளிலும் இந்த அழிவு பெரும் பாதிப்புகளை தோற்றுவித்திருக்கிறது. மும்பை முதல் அஸ்ஸாம் வரை இந்தியா முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனது. அரசு நிர்வாகமோ செயலிழந்து போயிருக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம் நமது மக்கள் எத்தகைய அபாயங்களில் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது.
அஸ்ஸாம் காம்ருப் மாவட்டத்தின் ராஜபரி கிராமத்தை சேர்ந்த வயதானவர், மூழ்கிய நிலையில் இருக்கும் மின் டிரான்ஸ்பாரின் அருகில் வெள்ளத்தைக் கடந்து செல்ல படகை பயன்படுத்துகிறார்.அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாயோங் கிராமப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் வெள்ள நிவாரணப்பொருளை பெறுவதற்கு படகின் மூலம் செல்கின்றனர்.அஸ்ஸாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள பாணிகாட்டியில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தங்களுக்கான உணவை இரயில் தண்டவாளத்தின் அருகே சமைக்கின்றனர்.அஸ்ஸாம் மோரிகோன் மாவட்டத்தை சேர்ந்த சில்டூபியில் வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியதால் மூதாட்டியை பாதுக்காப்பான இடத்திற்கு தூக்கிக் கொண்டு செல்கினறனர்அஸ்ஸாம் சில்டூபி கிராமத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் காலநடைகளுடன் பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர். அஸ்ஸாமில் தொடர்ந்து கொட்டித்தீர்த்த பருவ மழை வெள்ளத்தினால் 12 லட்சம் மக்கள் தங்களின் வெள்ளம் புகுந்த வீட்டில் வசிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர்.பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தால் மூழ்கிய சாலையை மக்கள் கடந்து செல்லும் காட்சி.பீகார் கதிகர் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளோடு பாதுக்காப்பான இடத்திற்கு படகில் செல்கின்றனர்.அஸ்ஸாம் மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கெட் வழங்கும் போது அதைப் பெற முயற்சிக்கும் குழந்தைகள். ஒரு வாரம் பெய்த கன மழையினால் 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.மோரிகோன் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு குடும்பத்தினர் வாழை-கட்டுமரத்தை பயன்படுத்தி மீன்பிடி வலைகளைத் தாண்டி பாதுக்காப்பான இடத்திற்கு செல்கின்றனர்ஹரியானா ஃபாரிதாபாத்தில் தண்ணீர் மூழ்கிய சாலையில் ஆட்டோவை தள்ளிச் செல்லும் இருவர்.குஜராத் வால்சத் நகரத்தில் மூழ்கிய வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்த மக்கள்.அஸ்ஸாம் மாநிலம் இந்திய-பூட்டான் எல்லையருகே உள்ள சிராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கின்றனர்அஸ்ஸாம் மாநிலம் கசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் காணப்படும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்.சாவித்திரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாராஷ்டிரா, மும்பைக்கு தெற்கே மாகாத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒன்று சரிந்தது.அலகாபாத் – கங்கை வெள்ளத்தில் ஒருவர் தனது குழந்தையையும், ஒரு மரக்கட்டிலையும் எடுத்து செல்கிறார்.உத்திரப்பிரதேசம் அலகாபாத்- கங்கை நதி வெள்ளத்தில் மூழ்கிய கோயில்அஸ்ஸாம் கவுகாத்தி – மழை வெள்ளத்தில் நடந்து செல்லும் பானிப்பூரி விற்பவர்கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அலகாபாத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குடிசைகள்
ஒன்றுமே தெரியாதது போல
பாசங்கு செய்கிறார்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படி ஒரு இரகசிய உலகம்
இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பைக் கூளத்திலும் தான் – அங்கே
சிலர் வாழ்கிறார்கள் எனபதை
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
இந்தச் சேரி வாழ்க்கை
ஒரு நரகம்
அரசின் கடைக்கண் பார்வைகூட
எங்கள்மீது பட்டதில்லை
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நான்
மனப்பூர்வமாக மரியாதை செலுத்தவேண்டும்
என்னை அவமரியாதை செய்ததற்காக.
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம்
உண்மைதான்!
என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன்
பணப்பெட்டிச் சாவியோ
முதலாளிகள் கையில், அரசின் கையில்
நானோ அவர்கள் தயவில்
நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
உண்மைதான்
நகரத்தில் குற்றம் பெருகித்தான் விட்டது.
கொஞ்சம் விரிசல்கள் இருந்தபோதும்
அமைப்பு நன்றாகவே இயங்குகிறதாம்
எனில், நாங்கள்?
நாங்கள் அந்த விரிசலில் விழுந்துவிட்டோமாம்
கைதூக்கிவிட அவர்கள் முயன்றபோதும்
நாங்கள்
மேலேறிவர மறுக்கிறோமாம்.
ஓ…! அவர்கள் மாபெரும் சிந்தனையாளர்கள் தான்!
எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்
மானத்தோடு வாழ வழிவேண்டும்
கையேந்தி வாழ்வது வாழ்க்கையல்ல
கடவுளை நம்பினேன்
அன்றாடம் உழைத்தேன்
வாழ்க்கைக்கு ஏதேனும்
உத்திரவாதம் உண்டென்று
நினைத்தேன், நம்பினேன்.
நேற்றிரவு
இன்னொரு உறக்கம் பிடிக்காத இரவு
நாளைக்கு என்ன
என்ற கவலையிலேயே
நான் உறங்கிப் போனேன்.
கனவு கண்டேன்
உறைய வைக்கும்
நீலஓளி என்னைத் திணறடித்தது
அலறி எழுந்தேன்
ஒருவேளை… ஒருவேளை…
நான் இறந்து கொண்டிருக்கிறேனோ?
– டிரேஸி சாப்மன்
ஆடியோ மட்டும்…
டிரேசி சாப்மெனின் இந்த பாடலை வைத்து (சேரி மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினை) கல்லூரி மாணவர் ஒருவர் தயாரித்த வீடியோ – யூடியூபில் பார்க்க இங்கே சொடுக்கவும்
இன்றைய காஷ்மீரின் இருண்ட பக்கத்தை வலிமையான தனது கேலிச்சித்திரங்களில் உணர்த்துகிறார் கிரேட்டர் காஷ்மீர் தினசரியில் பணிபுரியும் சுஹைல் நக்ஷ்பந்தி.
சுஹைல் நக்ஷ்பந்தி சமீபத்தில் வரைந்த கார்ட்டூன் ஒன்றில், முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, பேலட் குண்டுகளால் முகம் சிதைக்கப்பட்ட இளஞ்சிறார்களை இருண்ட எதிர்காலத்திற்கு வரவேற்கிறார்.
மற்றொரு கார்ட்டூனில் காஷ்மீரை ஆளும் கட்சிகள் மாறி மாறி மக்கள் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதை தோலுரிக்கிறார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வைத்து 2010-ம் ஆண்டு முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவை கேள்வி கேட்கிறார், மெகபூபா முஃப்தி. 2016-ல் அதே கேள்வியை ஓமர் அப்துல்லா, முதலமைச்சர் மெகபூபாவைப் பார்த்து கேட்கிறார்.
பொதுவில் எத்தகைய போர்க்களங்களிலும் ஆம்புலன்ஸ்களை அனுமதிப்பார்கள். காஷ்மீரில் மட்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், வண்டிகளும் பாதுகாப்பு படைகளால் தாக்கப்படுகின்றனர். சில சமயம் காயமடைந்த மக்களை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ்களைக் கூட இராணுவம் அனுமதிப்பதில்லை என்கிறார் சுஹைல்.
சமூகவலைத்தளங்களில் அதிவேகத்தில் பரவிய கார்ட்டூன் ஒன்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் “இன்சனியாத், ஜம்ஹூரியாத்” எனும் மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக கவித்துவ முழக்கங்களை அம்பலப்படுத்துகிறார் இந்த ஓவியர். ஒரு புறம் மக்களை ஒடுக்கியும் வதைத்தும் வருபவர்கள் மறுபுறம் இப்படி ஜனநாயகம் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை இடித்துரைக்கிறார்.
முதலமைச்சர் மகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் காஷ்மீர் குறித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அணுகுமுறையை மைய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள். கூண்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்கள் “சுதந்திரம், சுதந்திரம் என்று பேசும் போது இவர்கள் வாஜ்பாயி அணுகுமுறை என்று ஓட்டைகளை அடைக்க முயற்சிப்பதை அம்பலப்படுத்துகிறது மற்றொரு கேலிச்சித்திரம்.
காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில் அங்கே சென்று வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய காலாவதியான வார்த்தைகளால் பற்றி எறியும் காஷ்மீர் தணியாது என்கிறது மற்றொரு கேலிச்சித்திரம்.
மக்களின் உயிரைப் போக்காது என்று நியாயப்படுத்தப்பட்ட பேலட் துப்பாக்கிகளால் பல நூறுபேர்களின் முகங்களும், பார்வையும், வாழ்க்கையும் சிதைக்கப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படைகள் அத்துப்பாக்கியை பயன்படுத்துவதில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அவர் காஷ்மீரை விட்டு சென்ற இரு தினங்களிலேயே பேலட் துப்பாக்கிகள் போராடும் மக்களை குறிபார்த்து சுட்டன. ராஜ்நாத் சிங்கின் முகத்தில் கரி.
உலகமெங்கும் தடை செய்யப்பட்ட பெலட் துப்பாக்கிகள் பொதுவில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் வேட்டைக்காரர்கள் மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் காஷ்மீர் மக்களை விலங்குகளாக கருதி இந்த துப்பாக்கியை பயன்படுத்துவதைப் பார்க்கும் போது காஷ்மீரே ஒரு காடு என்றே அரசுகள் கருதுகிறது என்கிறார் சுஹைல்.
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இக்கட்டுரை. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டிலிருந்து இதனைத் தொகுத்துத் தருகிறோம்.
================================
ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.
அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து; மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.
ஐ.நா. மன்ற சமரச அதிகாரி சர் ஓவன் டிக்சனின் மேற்பார்வையில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக். பிரதமர் லியாகத் அலி கான் (இடது) மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இடையே ஜூலை 20, 1950 அன்று நடந்த பேச்சுவார்த்தை. (கோப்புப் படம்)
1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.
ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.
காஷ்மீரின் இந்து மன்னர் ஆட்சியாலும், இந்திய அரசாலும் 11 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா
ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா. காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. “எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.
1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.
மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.
காஷ்மீர் இந்து மன்னன் ஹரி சிங்.
காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.
மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: “காஷ்மீர் – உண்மையில் நடந்தது என்ன?” என்ற நூலில் பக்கம் 12-24, ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950-இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்.)
இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.
அதன் பின்னர் நேரு முதல் இன்றைய மோடி வரையிலான எல்லா பிரதமர்களும், எல்லா அரசுகளும் காஷ்மீர் மக்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி வருகின்றனர் என்பதுதான் வரலாறு. 1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.
_____________________________ புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________
‘வழக்கறிஞர்கள் போதையில் திரிகிறார்கள், நீதிபதியிடம் கைநீட்டி பேசுகிறார்கள், சத்தம் போட்டு வாதாடுகிறார்கள், கண் புருவத்தை உயர்த்தி பார்க்கிறார்கள்’ என தலைமை நீதியரசர்கள் ஒன்று கூடி தனிச்சட்டம் போட்டு அனைத்து வழக்கறிஞர்களின் உரிமையை பறிக்க முயல்வதை எதிர்த்து கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு வகையான போரட்டங்களை நடத்தி வருகிறார்கள்..
கடந்த கால வரலாற்றில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இந்த நீதியரசர்கள் வழங்கியுள்ள அநீதியான தீர்ப்புகளும், வழக்கை தள்ளி வைத்தே மக்களின் தாலி அறுத்த கதைகளும் வழிநெடுக உள்ளன. கும்பகோணம் தீ விபத்தில் கருகிய மழலை மொட்டுகளுக்கு இதுவரை நீதி இல்லை, கிரானைட் மணல் கொள்ளைக்கு இதுவரை நீதி இல்லை.
சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் இந்த அநீதியரசர்கள் கையில் ஏற்கனவே வரம்புக்கு மீறி அதிகாரம் உள்ளது. ஒரு மாநில முதல்வரை விட உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அதீத அதிகாரம் உள்ளதை நாடே அறியும்.
இந்த லட்சணத்தில் கருப்பு போக்கிரிகளை எதிர்த்து பேச கருப்பு காளைகளான வழக்கறிஞர்களுக்கு தான் ஓரளவு உரிமை உள்ளது. அதனையும் பறிக்கும் வகையில் தனிச்சட்டம் போட்டு பறிப்பதை இனியும் அனுமதிப்பது ஆபத்தானது. ஏனெனில் இது வழக்கறிஞர் நீதிபதிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் பிரச்சனையாகும். இச்சட்ட திருத்தம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் நீதிபதிகள் கையில் கொடுத்து சுதந்திரமான சர்வாதிகாரியாய் வலம் வரச்செய்யவே உதவும். இந்த மோசமான நடவடிக்கயை எந்த ஓட்டு கட்சிகளும் கேட்க துணிவில்லாத இந்த சூழலில் மக்கள் அதிகாரம் களத்தில் இறங்கி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி என மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கமாக முன்னெடுத்து திருச்சியில் 12-08-2016 அன்று பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் “நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளாக நாம்?” என்ற முழக்கத்தை மையமாக வைத்து இயக்கத்தை துவங்கினோம். இதன் மூலம் இதுவரையிலும் முதலாளித்துவ ஊடகங்களால் யோக்கியர்கள், மாண்பிற்குரியவர்கள் என்று போற்றப்பட்டு வந்த நீதியரசர்களின் பித்தலாட்டங்களும், ஆண்டைத்தனமும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது.
நாம் பிரச்சாரத்தை துவங்கிய நாள் முதல் இந்த பொதுக்கூட்டதிற்கான இடத்தின் அனுமதியை பெற காவல்துறையிடம் பட்ட பாடு பெரும்பாடாகும். முதலில் புத்தூர் நான்கு வழிச்சாலையில் கூட்டம் நடத்த மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டோம், ஆனால் அவர்கள் அங்கு நடத்த அனுமதி மறுத்தனர். தீவிரமான 8 நாடகள் விவாதத்திற்கு பிறகு தான் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில், உரிய நாளில் நடத்த அனுமதி தரப்பட்டது.
காவல்துறை ஆணையர் அலுவலகமே ஒரு வார காலமாக இந்த ஒற்றை கோரிக்கையை திரும்ப திரும்ப கூடி மக்கள் அதிகாரத்தின் பொதுக்கூட்டத்தை எப்படி முடக்குவது என்று கூட்டம் போட்டு பரிசீலித்தார்களாம்,. அவர்கள் கூடியது போதாது என்று நம்மையும் கூப்பிட்டு அவர்கள் போட்ட அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. ஏட்டையா துவங்கி மாநகர காவல்துறை ஆணையர் வரை அனைவரும் சொன்ன பதில் ”எங்களுக்கு மேலே உள்ளவர்கள் தான் செய்வார்கள். இது நீதி துறைக்கு எதிரான பிரச்சனை இதில் உங்களுக்கு அனுமதி தந்தா எங்களுக்குத்தான் தலை உருளும். ஆகவே கூட்டத்தை ரத்து செய்யுங்க, இடத்தை மாத்துங்க, பத்து நிமிடம் பேசுங்க, பேசாம கைதாகுங்க, நான்கு இடத்துல கைதாகுங்க” என நமது விவாதத்தின் பதில்களுக்கு மாற்றி மாற்றி பேசினர். ஆனால் நாம் பொதுக்கூட்டத்தை திட்டமிட்ட நாளன்று திட்டமிட்ட இடத்தில் நடத்தவே முடிவு செய்தோம் .
காவல் துறையின் அணுகுமுறை ‘அனுமதி வழங்கினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்’ என்ற வகையில் தான் இருந்தது, ஆனால் அதை அவர்கள் நம்மிடம் சொல்லிக்கொள்ளவில்லை. மேலும், நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு பொதுக்கூட்டத்தை நடத்த விடவேக்கூடாது என காவல்துறையினரை எச்சரித்துள்ளது. இதை காவல் துறையினரே நம்மிடம் வலிந்து கூறினர்.
மேலும் கூட்டம் நடத்துவதை பற்றி மறு பரிசீலனை செய்ய மேலதிகாரிகளுடன் பேச திட்டமிடப்பட்டது. ஆனால் நாம் நமது திட்டத்தில் உறுதியாகவே இருந்தோம். எப்படியாவது காவல்துறையினர் பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட வேண்டுமென்று விடாப்பிடியாக திரிந்தனர். அந்த வகையில் முதலில் பொதுக்கூட்டதில் பேசவுள்ள பேச்சாளர்களின் தகவல்களை மட்டும் கேட்டறிந்த காவல் துறை, பிற்பாடு 32 கேள்விகள் அடங்கிய ஒரு கோப்பினை கொடுத்து அதற்கு பதில் அளிக்கச் சொன்னது. அதில் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் அனைத்து தோழர்களின் பெயர், முகவரியை இணைக்குமாறு குறிப்பிட்டு இருந்தது. அதற்கு நாம் பதில் அளிக்க மறுத்தோம்.
அதையே காரணம்காட்டி பொதுக்கூட்டத்திற்கு முந்தைய நாளான 11-08-2016 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு, கூட்டத்திற்கான அனுமதி ரத்து என காவல் துறை அறிவித்தது. கமிஷனரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலை இடுகிறது என்றால் இப்படிபட்ட நீதிபதிகள் கையில் மொத்த அதிகாரமும் போனால் மக்களின் நிலை என்பது மிக மோசமான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழவேண்டிய சூழல் தான் ஏற்படும்.
அந்த வகையில் தான், உடனே நாம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினோம் அதில் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும், திட்டமிட்ட நாளில் திட்டமிட்ட இடத்தில் கூடி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தோம், இதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேட்டி அளித்தார்.
உடனே காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தோழர்களை கைது செய்தனர். மேலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையென்றும் மீறினால் கைது செய்வோம் என்றும் மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் அனைவரும் ஒன்றுகூடி திட்டமிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதற்கு முன்பே காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். கூடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் எதிர்ப்புற சாலையில் கூடி பறை முழக்கத்தோடு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆயிரக்கணக்கில் நம் தோழர்கள் இருந்ததால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மக்கள் மத்தியில் பேச ஆரம்பித்தார். காவல்துறையினர் முடித்துக்கொள்ளுங்கள் என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். பத்திரிகைகளுக்கு தோழர் ராஜு பேட்டி கொடுத்ததை தொடர்ந்து நீதிபதிகளுக்கு எதிராகவும், வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டுகொண்டே கைதானோம். நான்கு மண்டபங்களில் தனிதனியாக தோழர்களை அடைத்து வைத்தனர். இதில் மொத்தமாக 900 தோழர்கள் கைதாகி இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைதையும் சேர்த்தால் 1050 அளவில் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஒவ்வொரு மண்டபத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்து அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக சமூக அமைப்பு எவ்வாறு செயலிழந்து இருக்கிறதென்றும், அதன் ஒரு பகுதியான நீதிமன்றம் எந்த வகையில் மக்களுக்கு எதிராக உள்ளதென்றும், நீதிபதிகளின் சர்வாதிகாரத்தன்மையை அம்பலப்படுத்தியும், வழக்கறிஞர் பிரச்சனை மக்களுக்கான பிரச்சனை என்றும் இன்னும் போராட்டத்தை தீவிரமாக நடத்த வேண்டுமென்பதையும் மையமாக பேசினர். நிகழ்ச்சிகளினூடே ம.க.இ.க மையக்கலை குழுவினரால் வழக்கறிஞர் போரட்டத்தை ஆதரித்து பாடல்கள் பாடப்பட்டன. அதில் ”தமிழக வழக்கறிஞர் போராட்டம் வெல்க” ”உஸ்ஸ்சு… ஜட்ஜூ…. வர்றாரு… உஸ்ஸ்சு…” என்ற புதிய பாடல்களை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தோழர் கோவன் அவர்கள் பாடினார். சில மண்டபங்களில் சென்னை தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மேலும் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த சி.பி.ஐ வழக்கறிஞர் சிவா, நாம் தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் பிரபு, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ம.பா.சின்னத்துரை ஆகியோர் பேசினர். இறுதியாக போராட்டம் செய்து கொண்டு இருக்கும் வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் அனைத்து மண்டபத்திலும் வந்து நம் தோழர்களிடம் பேசினர். மேலும் வழக்கறிஞர்கள் பிரச்சனையை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று அதற்காக போரடிகொண்டிருப்பதற்கு மக்கள் அதிகாரத்திற்கும், புரட்சிகரஅமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தும், தொடர்ந்து ஆதரவு தரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.