Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 571

கூவத்தை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம் !

0

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

acs-poster-2பேரழிவு வெள்ளத்திற்கு மூலக்காரணம் நீர்நிலைகள் மீது கார்ப்பரேட் கம்பெனிகளும் மருத்துவக் கல்விக் கொள்ளையர்களும் செய்துள்ள ஆக்கிரமிப்புகள்தான்! செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு படுநாசத்தை ஏற்படுத்திய பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், மற்றவர்கள் கொண்டுவந்த நிவாரணப்பொருட்களை வழிப்பறி செய்து தன்படத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்த பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல், இன்று ஏழைகளின் ஒண்டுக்குடித்தன குடிசைகளை குறிவைத்து அகற்றி வருகிறது. இந்தக் கொடுமைகள் போதாதென்று அந்த இடங்களில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சைதாப்பேட்டை சின்னமலை பேருந்துநிலையம் அடுத்து உள்ள நீர்பிடிப்பு இடத்தை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமி கம்பெனி என்று சொல்லப்படும் காசா கிராண்டா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது, இதற்கொரு எடுத்துக்காட்டு!

acs-banner”…. இப்போது நீர் செல்லும் இடங்களில் எல்லாம் கல்விச்சாலைகள் நிற்கின்றன. ஏரி நிறைந்த மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு இப்போது பொறியியல் கல்லூரிகள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இருக்க வேண்டிய இடத்தில் அந்த கல்லூரிகள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், நீர் வரும் பாதையில், ஆறுகள், ஏரிகள் இருந்த பகுதிகளில்தான் பெரும்பாலான கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன…..” ”……சுயநலம் மிக்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையின் காரணமாகவே இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது……” “…..இதற்கெல்லாம் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. எங்கே தவறுகள் நடக்கிறதோ அங்கே மக்கள் சக்தி மூலம் தட்டிக்கேட்டு தவறுகளை திருத்த வேண்டும்……”. இவ்வாறு சொல்லியிருக்கிறார் – உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். (ஆதாரம்; தி இந்து – தமிழ் 4.1.2016)

”……காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1200 க்குமேல் ஏரிகள் இருந்துள்ளன,. அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் ஏரிகளை திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன…..” ‘’…. ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும்போதோ தட்டிக் கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி வாய்க்கால் நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்…….” என சொல்லியிருக்கிறார் மழை வெள்ள மீட்புப் பனிக்கான அதிகாரி அமுதா, ஐ.ஏ.எஸ். (ஆதாரம்; தி இந்து- தமிழ். 4.1.2016)

நேற்றுவரை, கார்ப்பரேட் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தி பாதுகாத்து வந்த நீதிமான்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இன்று இவ்வாறு பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். காரணம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள்தான். இனி எரிமலைகள் வெடிக்கட்டும்.

*குட்டிச்சுவராகிவிட்டது இந்த அரசமைப்பு!
ஆள்வதற்குவக்கற்றுப்போய்
மக்களுக்கெதிராக அராஜகஆட்டம்போடுகிறது
அதிகாரவர்க்கம், போலீசு, அமைச்சரவை!
ஆதரித்து வக்காலத்து வாங்குகின்றன நீதிமன்றங்கள்!

ஆள அருகதையிழந்த அரசுக்கட்டமைப்பு இனி எதற்கு?
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
கார்ப்பரேட்கொள்ளையர்களின்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்!

ஆக்கிரமிப்பாளர்களின்சொத்துக்களை
பறிமுதல் செய்வோம்! தண்டிப்போம்!

தேர்தல் மாயாஜாலத்திற்கு மயங்கி
காத்திருக்க வேண்டாம்! களமிறங்குவோம்!

கூவம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள
ACS கல்லூரியை அகற்றுவோம்!

10.1.2016 காலை 11.00 கல்லூரி வாயில் – மதுரவாயல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற
தங்கள் உயிரை துச்சமெனக் கருதி களத்தில் இறங்கிய
மாணவர்களே, இளைஞர்களே, .டி ஊழியர்களே, தொழிலாளர்களே,

பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது நிவாரணமல்ல – நீதி !
உண்மையாக ஆக்கிரப்புகளை அகற்றும் போராட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.
9445112675

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு !

2

“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இதனை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்தும் புரிந்தும் வைத்திருந்ததற்கு ஆதாரமாகத் திகழ்பவைதான் தமிழகத்தின் கிராமம் தொடங்கி நகரம் வரை காணப்படும் கண்மாய்களும், ஏரிகளும், குளங்களும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஏறத்தாழ 39,000 ஏரிகளும், 3,000 கோயில் குளங்களும், 5,000 ஊருணிகளும் இருந்ததாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு தமிழகத்தில் இன்றுள்ள நவீன, பெரிய அணைக்கட்டுகளில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவைவிட அதிகம் என்று நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், வைகை அணையின் கொள்ளளவு 614 கோடி கன அடி; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364 கோடி கனஅடி.

ஏரிகளைப் பூமியின் கண்கள் என நமது முன்னோர்கள் கொண்டாடியிருக்கின்றனர். மேலும்,ரெட்டெரி, பொன்னேரி, நாங்குனேரி என ஏரிகளின்; குருங்குளம், பரம்பிக்குளம் எனக் குளங்களின்; காரைவாய்க்கால், ஆழிவாய்க்கால் என வாய்க்கால்களின்; அடையாறு, கொள்ளிடம், பவானி என ஆறுகளின் பெயர்களையே ஊர்களின் பெயர்களாக இட்டதிலிருந்தே நமது முன்னோர்கள் இவற்றுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் இவை அழிந்தால் அந்த ஊர்களும் அழியும் என்பதுதான் நமது முன்னோர்கள் மறைபொருளாக உணர்த்தியிருக்கும் செய்தி.

செம்மஞ்சேரி
சென்னையின் செயற்கையான, அராஜக வளர்ச்சி : செம்மஞ்சேரி பகுதியிலுள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

நவீன வளர்ச்சியோ இந்தக் கண்களைக் கொத்திக் குதறிக் குருடாக்கிவிட்டு, அவற்றை நரம்புகளைப் போல பிணைத்திருந்த நீர்வழித் தடங்களையும் அறுத்தெறிந்துவிட்டுதான் எழுந்து நிற்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 4,000 முதல் 6,000 ஏரிகள் காணாமல் போய்விட்டதையும் பல நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர்ந்துபோய் அழியும் நிலையில் இருப்பதையும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிலும், தனியார்மயம்-தாரளமயம் புகுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டப்பட்ட பிறகு, இந்த அழிவு மிகவும் துரிதமாக நடைபெற்றிருக்கிறது.

“தமிழ்நாட்டில் இருந்த 39,200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22% நீரை சேர்த்துவைக்கத் திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது” எனக் கூறுகிறார் சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் (International Water Management Institute) இயக்குனரான பழனிச்சாமி. சென்னையும், கடலூரும் வெள்ளக்காடானதன் காரணம் இதில்தான் புதைந்திருக்கிறது.

ஏரிகளை அழித்து உருவாக்கப்பட்ட நகர வளர்ச்சி

நீதிமன்றம், பேருந்து நிலையம், குடியிருப்புகள், விரைவுச் சாலைகள், இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள்; அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட தனியார் துறையின் திட்டங்களுக்கு கண்மாய்களும், நீர்வழித் தடங்களும் மட்டுமல்ல, சதுப்பு நிலக் காடுகளும்கூடப் பலியாகியிருக்கின்றன.

சென்னை விமான நிலையம்
அடையாறின் வெள்ள நீர் வடிநிலத்தை ஆக்கிரமிப்பு உருவாக்கியுள்ள சென்னை புதிய விமான நிலையம்.

நவீன சென்னை நீர்வழித் தடங்கள் மேல் எழுந்து நிற்பதை இவ்விதழில் பல்வேறு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியிருக்கிறோம். தமிழகத்தின் மற்ற நகரங்களும்கூட சென்னை சந்திந்திருக்கும் அபாயத்தை இன்றோ அல்லது நாளையோ எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

37 கண்மாய்கள் இருந்த மதுரை நகரில் இன்று ஏழு கண்மாய்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. அவ்வூரில் இன்று சென்னை உயர்நீதி மன்றக் கிளை இருக்கும் இடம், முன்பு உலகனேரி கண்மாயாக இருந்தது. தல்லாகுளம் கண்மாயின் அழிவின் மேல்தான் மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சேலத்தில் இருந்த அச்சுவான் ஏரி அந்நகர புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி காந்தி விளையாட்டு மைதானமாகிவிட்டது. பூலாவரி ஏரி சாக்கடையாகிவிட்டது. தாதுபாகுட்டை, கொல்லங்குட்டை உள்ளிட்ட சில ஏரிகள் தூர்ந்துபோய் காணாமல் போவிட்டன.

06-encroached-lakesவிழுப்புரம் நகரின் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை பழைய விழுப்புரத்தை ஒட்டியிருந்த கண்மாய்களைத் தூர்த்துதான் உருவாக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேந்தான் என்ற குளத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள 1,300 ஏக்கர் பரப்பைக் கொண்ட மிகப் பெரிய குளமான கோரம்பள்ளம் கடந்த 111 ஆண்டுகளாகத் தூர்வாரப்படவில்லை. “அக்குளம் தூர்வாரப்பட்டிருந்தால், அக்குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பாதையான உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி வெள்ளத்தில் மூழ்கியிருக்காது” என்கிறார் முன்னாள் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் அழகு.

1970-க்கு முன்னர் காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்புப் பெயரே உண்டு. செங்கல்பட்டு மாவட்டத்தை மேலிருந்து பறவை பார்வையில் பார்த்தால், அம்மாவட்டத்திலிருந்த ஏரிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு தாமரைத் தடாகம் போலக் காட்சியளித்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலை வேறு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 2,400 ஏரிகள் காணாமல் போவிட்டதாக செதிகள் வெளிவந்துள்ளன.

06-caption-1இவை எப்படி மாயமாகின? தமிழகத்திலுள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளுள் பாதிக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் இந்த மூன்று மாவட்டங்களில்தான் அமைந்துள்ளன என்ற உண்மையை இணைத்துப் பார்த்தால், ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் முதன்மைக் குற்றவாளிகள் யாரென்று தெரிந்துவிடும். இந்த மழை அந்த உண்மையைப் புட்டுவைத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்-காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பொறியியில் கல்லூரி வளாகத்தில் புகுந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகள் குப்புற கவிழும் அளவிற்கு, அக்கல்லூரி வளாகத்திற்குள் வெள்ளம் பாய்ந்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள போரூர் பகுதியில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர மியாட் மருத்துவமனையின் முதல் தளம் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பாந்திருக்கிறது. இவையெல்லாம் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இந்த நவீன மருத்துவமனைகளும், பொறியியல் கல்லூரிகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இல்லையென்றால் அம்மூன்று மாவட்டங்களிலும் இந்த அளவிற்கு உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்காது என்பதே.

விவசாய நசிவும் ஏரிகளின் அழிவும் – தனியார்மயத்தின் இரு பக்கங்கள்

சென்னை நகரத்திற்கு வேலை தேடி வரும் கிராமப்புற ஏழைகள் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித் தடங்களில் குடிசைப் போட்டுக் கொண்டு தங்குவதை ஆக்கிரமிப்பு எனச் சாடும் அரசும், கார்ப்பரேட் நிபுணர்களும், நடுத்தர வர்க்க கனவான்களும் கண்மாய்களும் நீர்வழித் தடங்களும் அழிக்கப்பட்டதை, ஆக்கிரமிக்கப்பட்டதை ‘வளர்ச்சி’ எனக் கூசாமல் நியாயப்படுத்துகின்றனர். கடந்த இருபதாண்டுகளில் உருவான நகர வளர்ச்சியில் 47 சதவீதம் நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் அழித்தும் எழுந்து நிற்பதாகக் கூறுகிறது, ஒரு புள்ளிவிவரம்.

திருமணிமுத்தாறு
ஆற்றைப் பாதுகாக்கும் அரசின் இலட்சணம் : சேலம் நகரின் மத்தியில் ஓடும் திருமணிமுத்தாறின் கரைகளைக் காங்கிரீட் பூசி, அதனைச் சாக்கடையாகவும் குப்பைத் தொட்டியாகவும் மாற்றிவிட்டது சேலம் மாநகராட்சி.

இந்த வளர்ச்சியைச் சாதிப்பதற்கு அரசும், தனியாரும் இயற்கையை மட்டுமல்ல, மனித உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக்கூட தயங்காமல் செததை மௌலிவாக்கம் கட்டிடம் சரிந்து விழுந்து, அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்ட போது கண்டோம். இப்பொழுது இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக சென்னையில் மட்டும் பல நூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. சாதாரண உழைக்கும் மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கம்கூட தமது உடைமைகளை இழந்து நிற்கின்றனர். கடலூரிலும், டெல்டா மாவட்டங்களிலும் பல நூறு கோடிக்கணக்கான ரூபாயில் பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது.

மௌலிவாக்கம் கட்டிட விபத்து குறித்தாவது ஒரு மோசடியான விசாரணைக் கமிசனும், ஆமை வேகத்தில் நகரும் வழக்கும் உள்ளன. ஆனால், இந்த வெள்ளச் சேதத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு, பொருள் இழப்பு குறித்து எந்த விசாரணையும் நடைபெறப் போவதில்லை. இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது நம் கண் முன்னே தெரிந்தும்கூட, இயற்கையின் மீது பழிபோட்டு அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, குற்றவாளிகள் – ரியல் எஸ்டேட்-கட்டுமான நிறுவனங்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஓட்டுக்கட்சி பிரமுகர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோர் – அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நமக்கே தெரியாமல் இப்படி நடந்துவிட்டது போலவும், ஒருவர் இன்னொருவர் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பதும் நம் கண் முன்னே தொலைக்காட்சி விவாதங்களில் நடக்கிறது. அசோசெம் என்ற தரகு முதலாளிகளின் சங்கம் திட்டமிடப்படாத வளர்ச்சிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என முராரி பாடும் அயோக்கியத்தனத்தையும் ஊடகங்கள் எவ்வித விமர்சனமின்றி பிரசுரிக்கின்றன.

06-caption-2மேலை நாடுகளைப் போல, சிங்கப்பூர், மலேசியா போல இங்கும் திட்டமிட்ட நகர வளர்ச்சி ஏன் ஏற்படவில்லை என்பதற்கு நிபுணர்களும், நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளின் இலஞ்சம், ஊழல் மற்றும் அராஜகத்தைக் காரணமாக முன்வைக்கிறார்கள். இது பிரச்சினையின் ஒரு பகுதிதானே தவிர முழுமையல்ல. இந்த திட்டமிடப்படாத, அராஜக வளர்ச்சியின் ஆணிவேர் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரப் பாதையில் உள்ளது.

இத்தனியார்மயப் பொருளாதாரக் கொள்கை பொருள் உற்பத்தி சார்ந்த வளர்ச்சியின் இடத்தில் இறக்குமதியையும்; பங்குச் சந்தை சூதாட்டம், சுற்றுலா, வங்கி, காப்பீடு, மூல வளங்களை ஏற்றுமதி செய்வது, கால்சென்டர் மற்றும் மிக முக்கியமாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் துறை வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியது. இது பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்துறையைப் பெருமளவு பாதித்தது என்றால், பாரம்பரியமிக்க இந்திய விவசாயத்தை அழிவின் எல்லைக்கே கொண்டு சென்றது. தனியார்மயம்-தாராளமயத்தின் பிறகான கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜி.டி.பி.) விவசாயத்தின் பங்கு அதளபாதாளத்திற்கு சரிந்திருப்பதும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் இந்த அழிவின் சாட்சியங்களாக உள்ளன.

விவசாயத்திற்கு மானியம் அளிப்பது, விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப ஆதார விலையை நிர்ணயிப்பது, அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசே கொள்முதல் செய்வது உள்ளிட்ட அரசின் ஆதரவு நடவடிக்கைகள் படிப்படியாக வெட்டப்பட்டதோடு, விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளைப் பராமரிப்பது, மேம்படுத்துவது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது – என விவசாயத் துறையில் இடப்படும் மூலதனம் பெயரளவு நிலைக்குச் சென்றது. கார்கள், வீடுகள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்கு, அதாவது புதுப் பணக்காரர்களாக உருவான நடுத்தர வர்க்கத்திற்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள், ஏழை-நடுத்தர விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதைப் புறக்கணித்தன.

மாதா பொறியியல் கல்லூரி
வெள்ளத்தில் மூழ்கிப் போன மாதா பொறியியல் கல்லூரியிலிருந்து மாணவர்கள் மீட்கப்படுகின்றனர்.

இன்னொருபுறத்தில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை காங்கிரீட் காடுகளாக மாற்றுவதற்கு ஏற்றவாறு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்தராத நீர்நிலைகளை பட்டா போட்டுக் கொடுக்கும் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டம் வறட்சியினால் வறண்டு நிற்கும் கண்மாகளை மட்டுமல்ல, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக்கூட ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தரகர்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வாய்ப்பை அள்ளி வழங்கியது. கண்மாய்களை அழித்து உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் லேக் வியூ, ரிவர் வியூ எனக் கவர்ச்சிகரமான முறையில் சந்தைப்படுத்தப்பட்டன. எலி வளையானாலும் சொந்த வளை என்ற ஆசை கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இந்த கவர்ச்சி விட்டிலில் மாட்டிக்கொண்ட தோடு, கண்மாய்களை அழித்த குற்றத்திலும் பங்குதாரர்கள் ஆகி, இப்பொழுது செய்த ‘பாவத்திற்கு’த் தண்டனையை அனுபவிக்கின்றனர். சென்னை மாநகரம் வெள்ளத்தால் முற்றிலுமாக சேதாரப்பட்டு நிற்கும் இந்த நிலையில்தான் இந்தச் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பொதுப் பயன்பாடு என்ற பெயரில் விவசாய நிலங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் கைப்பற்றிக் கொள்ளுவதற்கு ஏற்ப நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் விவசாயத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.

விவசாயத்தின் நசிவையும் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுவதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அது போல, தனியார்மயம்-தாராளமயம் கொண்டுவந்திருக்கும் இந்த செயற்கையான, அராஜகமான வளர்ச்சியையும், நாடாளுமன்ற அரசியல் மற்றும் ஓட்டுக்கட்சிகளின் சீரழிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. கட்சி பேதமின்றி அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், ஆற்று மணற் கொள்ளையர்களும் தலைவர்களாக வலம்வருவதன் அடிப்படையை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் பொது மராமத்து பணிகளைச் செய்வதைக் கைவிட்டதன் மூலம், இருந்ததையும் இழந்து எதையும் பெற முடியாத நிலைக்கு இந்தியாவைத் தள்ளியதாகக் குறிப்பிடுவார், பேராசான் காரல் மார்க்ஸ். காலனி ஆட்சியில் தொடங்கிய இந்த அழிவை தற்பொழுது நடக்கும் மறுகாலனிய ஆதிக்கம் முடித்துவைக்க தீவிரமாக முனைகிறது.

மக்கள் அதிகாரமே மாற்று!

மியாட் மருத்துவமனை
மணப்பாக்கம் ஏரிக்குள் கட்டப்பட்ட மியாட் மருத்துவமனையில் இறந்து போனவர்களின் சடலங்கள்.

தமிழகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், மழை நீரைச் சேமித்து வைக்கவும் இருக்கின்ற ஏரிகள், குளங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது வலுப்படத் தொடங்கியிருக்கிறது. எனினும், இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் பலரும் விவசாய நசிவைப் பற்றிப் பேசுவது கிடையாது. ஏரிகளைப் பாதுகாக்கக் கோரும் பெரும்பாலோர் சுற்றுப்புறச் சூழல் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்லது பாதிப்பால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஏரிகளின், தமிழக ஆறுகளின் பேரழிவுக்குக் காரணமான தனியார்மய வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், நீர்நிலைகளைப் பாதுகாத்துவிட முடியும் எனக் கருதுவது கனவுகளில்கூட சாத்தியமாகாது.

மேலும், முக்கிய நீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு பொது விசாரணை நடத்தி, அத்தகைய ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அரசியல் புரோக்கர்கள் உள்ளிட்ட கும்பல் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோர வேண்டும். கூவம், அடையாறை ஆக்கிரமித்திருக்கும் ஏழைகளின் குடிசைகளை அகற்றுவது நியாயம் எனும்பொழுது, ஏரிகளை ஆக்கிரமித்து எழுந்துள்ள நவீன கட்டுமானங்களையும் அகற்றக் கோருவது எவ்விதத்திலும் அநீதியாகிவிடாது. பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உரிய, நியாயமான நிவாரணமும் இழப்பீடும் கேட்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கடமைகள் இவை.

இவற்றுக்கு அப்பால், அரசு இயந்திரமும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தனியார்மயத்தின் அடியாளாக இருப்பதோடு, அவர்களே சொல்லிக்கொள்ளும் கடமைகளை ஆற்ற மறுக்கின்ற எதிர்நிலை சக்திகளாக வளர்ந்து நிற்பதைக் காண்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடும் முன் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற சொரணைகூட இல்லாத அளவிற்கு ஆளுங்கட்சியும், அதிகார வர்க்கமும் மக்கள் விரோதிகளாகச் சீரழிந்து நிற்கின்றனர். சாதாரண நிவாரண நடவடிக்கைகளைக்கூடத் திட்டமிட்டு செய்ய இயலாத திறன் அற்றதாக அதிகார வர்க்கம் இருப்பது அம்பலமாகியிருக்கிறது. நீர்நிலைகளை, மக்களின் உயிரை, உடைமைகளைப் பாதுகாக்க மறுக்கும் அரசிற்கு நம்மை ஆளுவதற்கு அருகதையே கிடையாது என்பதை இந்த அழிவின் வாயிலாக நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

ஒருபுறம் மக்கள் விரோத தனியார்மயப் பொருளா தார வளர்ச்சிப் பாதை, இன்னொருபுறம் ஆள அருகதையற்றுப் போன அரசு இயந்திரம் என்ற இரண்டு நுகத்தடிகளை நாம் சுமந்துகொண்டு நிற்கிறோம். இவற்றை நிராகரித்து, விவசாயத்தை, சிறுதொழில்களைப் பாதுகாக்கின்ற மக்கள் நலன் சார்ந்த பொருளாதார வளர்ச்சிப் பாதை; நீர்நிலைகள், ஆற்று மணல் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பேணும், பாதுகாக்கும் அதிகாரம் கொண்ட மக்கள் அமைப்புகள் என்ற மாற்று சமூக-பொருளாதார கட்ட மைவை உருவாக்கப் போராட வேண்டும் என்பதுதான் இந்த வெள்ளம் நமக்கு உணர்த்திவிட்டுச் சென்ற செய்தியாகும்.

– மு செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

0
கடலூர் வெள்ளம்
வெள்ளத்தால் பாழானது பயிர்கள் மட்டுமல்ல…

டந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் நான்காவது முறையாகப் பெரும் பாதிப்பை, இழப்பைச் சந்தித்திருக்கிறது, கடலூர் மாவட்டம். 2004-ல் சுனாமி, 2005-ல் நீலம் புயல், 2011-ல் தானே புயல், இப்பொழுது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் ஏற்பட்ட கனமழை-வெள்ளம். இக்காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக கடந்த நவம்பர் 7 தொடங்கி 10 முடிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வேலியில் மட்டும் 48 செ.மீ. மழையும், அம்மாவட்டத்தின் சிதம்பரம், சேத்தியாதோப்பு, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 30 முதல் 35 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தமிழகம் பெறும் சராசரி மழை அளவு 44 செ.மீ.தான் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கடலூர் மாவட்டத்தில் மூன்றே நாட்களில் பெதிருப்பது அசாதாரண மழை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அம்மாவட்டத்தில் இம்மழையின் காரணமாக 50 பேர் மட்டுமே இறந்து போனதாக அரசு கணக்கு காட்டுகிறது. “இதுவொரு மோசடி” என்கிறார், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன். இறந்தவர்களின் எண்ணிக்கை 160-ஐத் தொடக்கூடும் என்கிறார்கள் அம்மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.

இந்தச் சாவுகளை எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட அகால மரணங்களாக வகைப்படுத்துவது இன்னுமொரு மோசடி. அரசு கணக்கு காட்டும் அந்த ஐம்பது பேரில் சரிபாதி பேர் தாழ்த்தப்பட்டோர். மற்றொரு பாதி அன்றாடங் காச்சிகள். சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்கள் எந்தளவிற்கு புறக்கணிக்கப்பட்டு, நிர்க்கதியாய் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் “கொலைகள்” எடுத்துக் காட்டுகின்றன.

இந்த உயிரிழப்புகளுக்கு அப்பால், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட 9 வட்டங்களில் 40,000 ஹெக்டேரில் (ஏறத்தாழ ஒரு இலட்சம் ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். (23.11.2015, பக்.5) அதேசமயம், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அம்மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பு ஏறத்தாழ மூன்று இலட்சம் ஏக்கராகும் எனக் கூறுகிறார். (புதிய தலைமுறை, நேர்படப் பேசு, 12.11.2015)

கடலூர் வெள்ளம்
பண்ருட்டியை அடுத்துள்ள விசூரில் வெள்ளத்தால் வீடே சேறும் சகதியுமானது.

மேலும், வீராணம், பெருமாள் ஏரிகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும், கெடிலம் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தாலும் வயல்களில் மண் படிந்து, அவை உடனடியாகப் பயிர் செய்ய இலாயக்கற்றதாகிவிட்டன. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களிலும்; குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள பூதம்பாடி, கல்குணம், கொத்தவாச்சேரி, அந்தராசிப்பேட்டை, அரங்கமங்கலம் ஆகிய கிராமங்களிலும் 3 அடி உயரத்துக்கு வீடுகளிலும், வயல்களிலும் மணல் சேர்ந்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பயிர் இழப்பு ஒருபுறமிருக்க, மணல் குவிந்துள்ள வயல்களைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்தி அமைக்க ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் தேவைப்படும் என வேதனையோடு குறிப்பிடுகிறார்கள், விவசாயிகள்.

இதற்கு அப்பால், வெள்ளத்தால் வயல்களிலிருந்த ஆழ்துளைக் கிணறுகள், ஆயில் இன்ஜின்கள், சூரியசக்தி பம்புகள் அனைத்தும் சேதாரமாகிவிட்டன. 1,000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளும், ஒரு இலட்சம் கோழிகளும் இந்த மழை-வெள்ளத்தால் இறந்து போனதாகக் கூறுகிறார், கே.பாலகிருஷ்ணன். ஏறத்தாழ 11,000-க்கும் மேற்பட்ட குடிசைகள் வெள்ளத்தால் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாகவும், 50 படகுகள் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவற்றுள் 10 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். ஒட்டு மொத்தமாகச் சொன்னால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், பிற உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் உடைமை இழப்பின் மதிப்பு 1,000 கோடி ரூபாயைத் தொடும் எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசும், என்.எல்.சியும்தான் குற்றவாளிகள்

நியாயமான நிவாரண உதவிகளைக் கேட்கத் துணியும் மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்கியும், சால்ஜாப்பு வார்த்தைகளைச் சொல்லியும் துரத்திவிடும் அ.தி.மு.க. அரசு, மக்கள் சந்தித்துள்ள இழப்புகளுக்கு மழையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது. “மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்து தீர்த்துவிட்டதால்தான் வெள்ளம் ஏற்பட்டதாக” ஜெயா கூறிவருவது பொய்யும், புரட்டும், கயமைத்தனமும் நிறைந்தது என்பதை ஏராளமான சான்றுகள் முகத்தில் அறைந்தாற்போல எடுத்துக் கூறுகின்றன.

“பருவ மழை தொடங்குவதற்கு முன்பே கடலூர் மாவட்ட நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். அப்படியான கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முயலவேயில்லை என்பதோடு, அதிகாரிகளுக்கு மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் என்பதுகூடத் தெரியவில்லை” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.

“இரண்டாம் நாளும் நிற்காமல் மழை பெய்யும்போதே கெடிலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்; பரவனாறில் நெய்வேலி சுரங்க உபரி நீர் வெளியேறும் என்பதைக் கணித்திருக்க முடியும். குறைந்தபட்சம் அக்கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும்” என்கிறார்கள் பொதுமக்கள்.

கடலூர் வெள்ளம்
கடலூர் மாவட்டம் கல்குணம் கிராமத்தில் என்.எல்.சி வெளியேற்றிய நீரால் மண்ணோடு மண்ணாகிப் போன குடிசை

மழை வருவதற்கு எட்டு நாட்கள் முன்னதாகவே வீராணம் ஏரிப் பாசன சங்கத்தின் செயலர் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேலாக உள்ள தண்ணீரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் கொடுக்கிறார். அக்கடிதம் கண்டுகொள்ளப்படவில்லை. இக்கடிதத்திற்கு முன்னதாகவே, வீராணம் ஏரி நீரைப் பாசனத்திற்குத் திறந்துவிடுமாறு கோரிப் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இப்படி நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல வீராணம் ஏரித் தண்ணீரைப் பிடித்து வைத்திருந்த அரசு, மழை கொட்டியவுடன் 18,000 கன அடி நீரை அந்த ஏரியிலிருந்து வெளியேற்றியது. ஜெயா அரசின் முட்டாள்தனமும் அகங்காரமும் கொண்ட இந்தக் குற்றச் செயல்தான் திருநாரையூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, கீழவன்னீயூர் உள்ளிட்ட 50 கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இன்னொருபுறம் வெள்ளாற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் அள்ளூர், பூதங்குடி, ஒரத்தூர், பரதூர் உள்ளிட்ட 50 கிராமங்களை மூழ்கடித்தது. “50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும், வாழையும், வெற்றிலையும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்பேரழிவுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள்தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” எனக் குமுறுகிறார், கீழவன்னீயூரைச் சேர்ந்த விவசாயி ரவி.

வீராணம், பெருமாள் ஏரிகளிலிருந்தும், வெள்ளாற்றிலிருந்தும் உபரி நீரைத் திறந்துவிட்டதாக அதிகார வர்க்கம் கூறிவருவது மற்றுமொரு மோசடி. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பருவ மழை தொடங்கு முன்பு ஏரியில் 44 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், இந்த உத்தரவை அரசே மதிப்பதில்லை.

சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்
சி.பி.எம் கட்சியின் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஏரியில் 46 அடி வரை நீரைத் தேக்குவதை வாடிக் கையாக வைத்திருக்கிறது, அதிகார வர்க்கம். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே வீராணத்தில் 44 அடிக்குக் கூடுதலாகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை வேண்டுமென்றே வெளியேற்றாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியது, கடலூர் மாவட்ட மக்களைக் கடுமையான வெள்ளத்திற்குள் சிக்க வைத்தது.

இந்த அலட்சியம் ஒருபுறமிருக்க, வீராணம் ஏரி கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூடத் தூர்வாரப்படவில்லை. 2013-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையின்பொழுது, வீராணம் ஏரியைத் தூர்வார 40 கோடி ரூபாயை ஒதுக்குவதாக 110 விதியின் கீழ் அறிவித்தார், ஜெயா. அந்த அறிவிப்பு அவரின் மற்ற அறிவிப்புகளைப் போலவே காற்றோடு போவிட்டது. வீராணம் ஏரி முறையாகத் தூர் வாரப்பட்டிருந்தால் அந்த ஏரியில் 1,465 மில்லியன் கன அடி நீரைத் தேக்கியிருக்க முடியும். ஆனால், தூர்வாரததால் அந்த ஏரியின் கொள்ளளவு 906 கன அடியாகச் சரிந்துவிட்டது. இதனால் அந்த ஏரியில் சேமித்திருக்க வேண்டிய 500 மில்லியன் கன அடிக்கும் ( 1/2 டி.எம்.சி.) மேலான தண்ணீர் வெள்ளமாக வெளியேற்றப்பட்டது.

அழிக்கப்பட்ட அரண்களும் காகித வாக்குறுதிகளும்

கடலூர் வெள்ளம்
காட்டுமன்னார் கோவில் வட்டம் வீரந்ததம் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடிசை.

கடலூர் மாவட்டம் என்பது புவியியல்ரீதியாக இயற்கையாகவே அமைந்த வடிகால் பகுதியாகும். இதற்கேற்ப இயற்கையாகவே இம்மாவட்டத்தில் கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணை, பரவனாறு, உப்பனாறு, கொள்ளிடம் ஆகியவை வடிநீர் ஆறுகளாக அமைந்துள்ளன. மேலும், இந்த இயற்கை அமைப்பைப் புரிந்துகொண்டுதான் நமது முன்னோர்கள் மழை நீரைச் சேமிக்கவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அம்மாவட்டப் பகுதியில் வீராணம், பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்டு மூவாயிரத்துக்கும் அதிகமான ஏரி, குளங்களை அமைத்திருந்தனர். அவை ஆக்கிரமிப்புகளால் இன்று 267 ஏரி, குளங்களாகச் சுருங்கிப் போனதும்; எஞ்சியிருக்கும் அந்த ஏரி, குளங்களையும், அம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டுகளையும் தூர் வாராமலும், பராமரிக்காமலும் புதர்களும், சேறும் மண்டவிட்டிருப்பதும்தான் இந்தப் பேரழிவுக்கான முதன்மைக் காரணமேயொழிய, அதிகமாகப் பெதுவிட்ட மழை காரணமல்ல.

கடலூர் மாவட்டத்தில் வீராணத்துக்கு அடுத்த பெரிய ஏரி பெருமாள் ஏரி. அந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ள மேல்பூவானிக்குப்பம் கிராமத்தில் பெருமாள் ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்காக 20 வடிகால்கள் இருந்தன. அவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் மேல்பூவானிக்குப்பம் பகுதி வெள்ளக்காடானது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு பெரிய ஏரியான வாலாஜா ஏரியின் ஒரு பகுதி புதர் மண்டிக்கிடக்கிறது. பொதுமக்களின் முன்முயற்சியாலும், கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடியின் உதவியாலும் மீட்டெடுக்கப்பட்ட அந்த ஏரியின் இன்னொரு பகுதியில் மட்டும்தான் தற்பொழுது மழைநீர் நிரம்பியிருக்கிறது. புதர் மண்டிக் கிடக்கும் பகுதியில் சேர வேண்டிய நீர் வெள்ளமாக வெளியேறிவிட்டது.

2011 டிசம்பரில் தானே புயல் தாக்கிய பிறகு கடலூர் மாவட்டத்தை வெள்ள அபாயத்திலிருந்து மீட்கப் போவதாகக் கூறி, “புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படும்; மின்சார இணைப்புகள் தரைவழியில் உருவாக்கப்படும்; 300 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரியில் இருக்கும் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்; 120 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரி வெள்ள நீர் சேகரிப்புத் திட்டம் உருவாக்கப்படும்” என்றெல்லாம் பல்வேறு திட்டங்களை டாம்பீகமாக அறிவித்தார், ஜெயா. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவற்றுள் ஒன்றுகூட நிறைவேறவில்லை.

கடலூர் வெள்ளம்
வெள்ளநீர் சூழ்ந்துள்ள சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வைரங்குப்பம் கிராம மக்கள் ஒரு குடம் குடிநீருக்காகப் படும் துயரம்.

கடலூரை சுனாமி தாக்கியபொழுது, கெடிலம் ஆற்றின் கரையிலிருந்து 6 கி.மீ. தூரத்திற்குத் தண்ணீர் உள்ளே புகுந்தது. எனவே, முகத்துவாரத்திலிருந்து அந்தத் தொலைவுக்கு கான்கிரீட் சுவர் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் வைத்த கோரிக்கையைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்கிறார், கடலூர் அனைத்துக் குடியிருப்பு சங்கச் செயலர் மருதவாணன்.

இப்படி வெள்ள அபாயத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அரசு, விரைவுச் சாலைகள் அமைப்பதற்காக ஆறு அடி உயரத்துக்கு இருந்த கெடிலம், பெண்ணையாற்றுக் கரைகள் சாலை மட்டத்துக்கு ஏற்ப குறைக்கப்பட்டதால் வெள்ள அபாயத்துக்கு வழி வகுத்தது என்கிறார், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கு.பாலசுப்பிரமணியன்.

“வீராணம் ஏரியைத் தூர்வாரியிருந்தால் மேலும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்திருக்க முடியும்; கடலூர் மாவட்ட வடிநீர் ஆறான கொள்ளிடத்தில் ஏழு தடுப்பணைகள் கட்டியிருந்தால் ஏழு டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்திருக்க முடியும்” என்கிறார், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.

“கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணை ஆறுகளில் தடுப்பணைகளை உருவாக்கியிருந்தால், பெரிய வடிகால் ஆறான கொள்ளிடத்தில் கதவணைகளைக் கட்டியிருந்தால் பல டி.எம்.சி. தண்ணீரையும் சேமித்திருக்க முடியும். வெள்ள அபாயத்தையும், மக்களின் இழப்புகளையும் மட்டுப்படுத்தியிருக்க முடியும்” என்கிறார் காவிரி டெல்டா பாசன விவசாயிகள்-விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.வி.கண்ணன்.

தமிழக அரசு இந்த நீர் மேலாண்மை யில் அக்கறை செலுத்தாததால், கடலூர் மாவட்டத்தில் சேமித்திருக்கக்கூடிய 51 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகம் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் மக்களைச் சிக்கவைத்து, அவர்களின் உயிரையும் உடைமைகளையும் பறித்த குற்றத்துக்கு இணையானது இது.

மு ரஹீம்

***
கடலூர் நகரம் வெள்ளக்காடானது ஏன்?

கடலூர் வெள்ளம்
கடலூர் – நாகை கடற்பகுதியில் இயற்கை அரணாக அமைந்திருந்த மணற்குன்றுகளை அழித்து உருவாக்கப்பட்ட சிப்காட் தொழில் வளாகத்தின் ஒரு பகுதி.

நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது கடலூரின் பெய்த மழையின் அளவு குறைவுதான் (11 செ.மீ.). ஆனாலும், கடலூர் நகரம் வெள்ளக்காடானதற்கு அந்நகரின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள உப்பனாற்று முகத்துவாரமும், கெடிலம் ஆற்று முகத்துவாரமும் கடந்த ஆறாண்டுகளாக தூர் வாரப்படாததுதான் காரணம். இந்த இரண்டு முகத்துவாரங்கள்தான் 108 கடலோர கிராமங்களுக்கு வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. இந்த இரண்டு முகத்துவாரங்களும் அரசால் தூர்வாரப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதால், இவற்றின் வழியாகக் கடலுக்குள் செல்ல வேண்டிய வெள்ள நீர், கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் கடலூருக்குள்ளும், கடலோர கிராமங்களுக்குள்ளும் புகுந்துவிட்டது. மேலும், கடலூர் நகரில் இருந்த 21 குளங்களில் தற்பொழுது எஞ்சியிருப்பது 3 குளங்கள் மட்டும்தான். மற்ற குளங்களும் அந்நகரில் 21 கி.மீ. தூரத்திற்கு அமைந்திருந்த வடிகால்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப்பட்டுவிட்டன. இவையெல்லாம் சேர்ந்துதான் கடலூர் நகரை வெள்ளத்திற்குள் மூழ்கடித்துவிட்டது.

இவை ஒருபுறமிருக்க, கடலூர் தொடங்கி நாகை வரை கடலோரமாக 57 இடங்களில் 15 மீட்டர் உயரத்தில் மணற்குன்றுகள் இயற்கையாகவே அமைந்திருந்தன. இந்த மணற்குன்றுகள் கடலூர் பகுதியைப் புயலில் இருந்த தடுக்கும் இயற்கை அரணாக விளங்கின. கடலூர் நகரில் சிப்காட் வளாகத்தை அமைப்பதற்காக இந்த மணற்குன்றுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டன. ‘தொழில் வளர்ச்சி’ க்காக அரசே முன்நின்று செய்த இந்த அழிவு, கடலூரை அடிக்கடி புயல் தாக்கும் களமாக மாற்றிவிட்டது.
***

சுரங்கங்கள் தப்பித்தன, கிராமங்கள் மாண்டன!

கடலூர் வெள்ளம்
ஆறுதல் நாடகத்தை நடத்த பெரிய காட்டுப் பாளையத்திற்கு வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடியை முற்றுகையிடும் கிராம மக்கள்.

அந்த மூன்று நாட்களில் நெய்வேலியில் மட்டும் 48 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலக்கரி சுரங்கங்களில் தேங்கிய தண்ணீரை பரவனாற்றில் திறந்துவிட்டது, என்.எல்.சி. நிர்வாகம். இதனால் பூதம்பாடி, அந்திராசம்பேட்டை, ஓணாண்குப்பம், காடாம்புலியூர், மேல்பாதி, கீழ்பாதி உள்ளிட்ட பல கிராமங்களில் வீடுகளிலும் வயல்களிலும் வெள்ளம் புகுந்து தனித்தனி தீவுகளாக மாறின. மின்சாரம் இன்றி, குடிநீர் இன்றி, தங்க இடமின்றி, வெளியேற வழியின்றி அக்கிராம மக்கள் அடைந்த துன்பமும், சந்தித்த அபாயமும் சொல்லி மாளமுடியாது. நீரை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை விடுத்து, பரவனாறு செல்லும் வழியாக உள்ள கிராம மக்களை அப்புறப்படுத்தி வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க என்.எல்.சி. நிர்வாகமும் அக்கறை கொள்ளவில்லை; தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

“நெய்வேலி சுரங்கத் தண்ணீர் நிலக்கரி கசடுடன் சென்று பரவனாறு மேடாகிவிட்டது. இதனைச் சுத்தம் செய்யச் சொன்னது யார் காதிலும் விழவில்லை” என்கிறார்கள் பாதிக்கப்பட்ட கிராம மக்கள். என்.எல்.சி. வெளியேற்றிய நீரால், போரினால் நிர்மூலமாக்கப்பட்ட ஊர் போல பூதம்பாடி கிராமம் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். “என்.எல்.சி. நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ பரவனாற்றில் வடிகால் பாலங்கள் கட்டிக் கொடுத்திருந்தால், இந்தப் பிரச்சினை வந்திருக்காது. இனிமேலாவது அதைச் செய்யணும்” எனக் குமுறுகிறார்கள், அக்கிராம மக்கள்.

பொதுமக்களுக்குத் தெரிந்துள்ள இந்த எளிய தீர்வுகள் மெத்தபடித்த அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது தற்செயலானதா?

***

இது கொலைக் குற்றமாகாதா?

கடலூர் வெள்ளமா
பெரிய காட்டுப்பாளையத்தில் பத்து உயிர்கள் வெள்ளத்திற்குப் பலியான பிறகு, அங்குள்ள ஓடையை அவசர அவசரமாகத் தூர் வாருகிறது அரசு : பாவத்திற்கு பரிகாரமா?

பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் கடந்த 9-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீரமணி என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் மாண்டு போனார்கள்.

பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை ஒட்டி இருக்கும் இந்தப் பகுதி ஒரு நீர்வழிப் புறம்போக்காகும். கல்வராயன் மலையில் தொடங்கி விழுப்புரம் வரை பெய்யும் ஒட்டுமொத்த மழைநீரும் பெரிய ஓடை, சின்ன ஓடை வழியாகச் சென்று கெடிலம் ஆற்றில் சேருகிறது. இந்த ஓடை புறம்போக்கில் 10 குடும்பத்தினர்தான் வசித்து வருகிறார்கள். அனைவரும் ஏழைகள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள்.

காட்டாற்றின் ஓட்டத்தைத் திசை திருப்பி ஆக்கிரமிக்கப்பட்ட மேட்டிலும், கரையிலும் காலனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது அரசாங்கம். ஆற்றுப் பாதையும் காலனி வீடுகள் அமைந்திருந்த தெருவும் கிட்டதட்ட ஒரே மட்டத்தில் அமைந்துள்ளன. வீட்டையே மூழ்கடிக்கும் அளவிற்கு வந்த வெள்ளம் 10 பேரை விழுங்கிச் சென்றுவிட்டது.

நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் தங்கி இருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கி இருந்தால், இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி.இதழ். (22.11.15, பக்.39) இத்துணை ஆண்டுகளாக அதனைச் செய்ய மறுத்துவந்த தமிழக அரசு, இப்பொழுது தனது பாவத்தைக் கழுவ வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீரமணிக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு, ஆற்றுப் பாதையைத் தூர்வாரிக் கொண்டிருக்கிறது.

***

இதுவா மக்கள் நல அரசு?

நீர்நிலைகளைப் பாதுகாக்கவில்லை, ஏரி, முகத்துவாரங்களைத் தூர்வாரவில்லை என்பதை மட்டுமல்ல; வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு உதவக்கூடிய சில எளிய, அத்தியவாசியமான தேவைகளைக்கூட அரசும் அதிகார வர்க்கமும் செய்ய மறந்துவிட்டன, மறுத்துவிட்டன எனப் பொதுமக்கள் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்கள்.

“இவ்வளவு பெரிய புயல் வரும்பொழுது மின்சாரம் துண்டிக்கப்படும்னு எல்லோருக்கும் தெரியும். அதற்கு மாற்றாக மொபைல் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செதிருக்க வேண்டும். ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால், மெழுகுவர்த்திகளையாவது வாங்கி ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். அதனைச் செய்யாததால் 5 ரூபாய் மெழுகுவர்த்தி 75 ரூபாய்க்கு விற்றது. முன்கூட்டியே டாங்கர்களில் குடிநீரைச் சேமித்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போன்று பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே கலெக்ட் செய்து விநியோகித்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களைக் கொண்டுபோ தங்க வைக்க தனி மையங்கள் அமைத்திருக்க வேண்டும். அவை இல்லாததால், மக்கள் பள்ளிக்கூடங்களில்தான் தங்க வைக்கப்பட்டார்கள் ” என அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், இவை அனைத்தும் எங்களுக்கு தானே” புயல் கற்றுக்கொடுத்த பாடம் எனக் குறிப்பிட்டுச் சொல்லவும் தவறவில்லை.
______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!

0

புதிய கல்விக் கொள்கை – 2015 :
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!

“எண்ணென்ப ஏனை யெழுத்தன்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.

ஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக்கொள்கை-2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது.

வரும் டிசம்பர்-15- இல் மோடி அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ( General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது. ஏற்கனவே, 90-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத் தையும் தொழில்துறையையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது; கோடிக்கணக்கான தொழிலாளிகள் உதிரிகளாகிப் போனது; சிறு-குறுந்தொழில்கள் பேரளவில் அழிந்துபோனது; மென்பொருள் பணியாளர்கள் கூட நடுத்தெருவில் நிற்பது என “காட்”டின் காட்டாட்சி வாரிச்சுருட்டிய பேரழிவு வகை – தொகையற்றது.

தற்பொழுது மோடி அரசு கையெழுத்திடப்போகும் ஒப்பந்தம், சேவைத்துறையைச் சூறையாட அனுமதிக்கப் போகிறது. இதன்படி நாட்டின் அடிப்படை ஆதாரங்களான தண்ணீர், உணவு, கல்வி, கனிமவளம், இயற்கைச் சூழல் போன்றவைகள் நாட்டின் உடைமை மற்றும் உரிமை என்ற நிலையில் இருந்து விற்றுத் தீர்க்கும் நுகர்வுப் பண்டங்களாக அறிவிக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதிய கல்விக் கொள்கை – 2015, இந்தியக் கல்விக் கட்டமைப்பை நிர்மூலமாக்கி, மனிதவளச் சுரண்டலுக்கு உலகளாவிய அளவில் சட்டப்பூர்வ வடிவம் கொடுக்கவிருக்கிறது. கூடவே, மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவ கும்பல், தன் பங்கிற்கு புதிய கல்விக்கொள்கையில் கலாச்சார பாசிசத்தையும், பார்ப்பனிய மேலாண்மையையும் புகுத்த எத்தனித்திருக்கிறது.

கல்வி கடைச்சரக்கல்ல
கல்வியை முழுமையாகக் கடைச்சரக்காக மாற்றும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாதெனக் கோரி பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் (கோப்புப் படம்)

குறிப்பாக, இடைநிலை பள்ளிக் கல்வியில் (Secondary School Education) இருந்தே தொழிற்கல்வி புகுத்தப்பட வேண்டுமென அறிவிக்கிறது புதியக் கல்விக் கொள்கை. இதுவரை நம்நாட்டில் பின்தங்கிய பொருளாதார மற்றும் பார்ப்பனியத்தின் கொடூர சாதிய அடக்குமுறை பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி பொதுக்கல்வியாக வழங்கப்படும் வாய்ப்பு இருந்து வருகிறது. இத்தகைய வாய்ப்பு நீண்ட நெடுங்காலமாக பார்ப்பனியத்திற்கு எதிராக இடையறாது போராடிப் பெற்ற உரிமையாகும். ஆனால், புதிய கல்விக் கொள்கையோ மாணவர்களின் வறுமையைச் சுரண்டி, எட்டாம் வகுப்பிலேயே தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியைப் புகுத்துவதன் மூலம் உழைப்புச்சந்தைக்கேற்ற கூலிகளை ஒருபக்கம் உறுதிப்படுத்திக்கொண்டே, மறுபக்கம் பார்ப்பனியத்தின் வருணாசிரம தர்மத்தில் மக்களை மேலும் சிக்க வைக்கிறது. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்தின் மனிதவளச் சுரண்டலுக்கு உவப்பானதாக இருக்கிறது.

சான்றாக, மேக் – இன் இந்தியா திட்டத்தின் கீழ் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாராளமாக கூலிகளை அமர்த்தும் வேலையைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்படும் தொழிற்கல்வி செய்து கொடுக்கும். இதை முன்னிட்டே, குழந்தைகள் தங்கள் பாரம்பரியத் தொழிலைச் செய்ய அனுமதிக்கும் பொருட்டு குழந்தைத் தொழிலாளர் சட்டம் திருத்தப்படும் மசோதாவை இங்கு நாம் அவசியம் பொருத்திப்பார்க்க வேண்டும்.

தொழிற்கல்வி திட்டமென்று நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பான பள்ளிக் கல்வியையே நிர்மூலமாக்கிவிட்டால் இந்திய உயர் கல்வியின் நிலை என்னவாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை, உயர் கல்வி குறித்து முன் வைக்கும் 33 வகையான கருத்துகள் பேரழிவுக்கு கட்டியம் கூறுபவை.

கல்வியைப் பண்டமாகவும் மாணவர்களை நுகர்வோராகவும் கருதுகிற புதிய கல்விக் கொள்கை, கல்விக் கட்டமைப்பின் அங்கத்தினராக கார்ப்பரேட்டுகளையும், பன்னாட்டு கம்பெனிகளையும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையும் தனியார் முதலாளிகளையும் வரையறுக்கிறது. கல்வியை ‘வினியோகம்’ செய்கிற செயல் எந்திரமாக கார்ப்பரேட்டுகளின் சேவையையும் (Corporate social responsibility) தனியார்-பொது பங்களிப்பையும் (Public & Private Partnership) முன்வைக்கிறது.

இதன்படி, இனி நாட்டில் உள்ள அனைத்து கல்லுரிகளும் பல்கலைக்கழகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, நிதி தன்னாட்சி (Financial autonomous) நிறுவனங்களாக அறிவிக்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படும். நிதி தன்னாட்சியானது கல்லூரிகளே மாணவர்களிடமிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் வசூலித்துக்கொள்ள வழிவகை செகிறது. மேலும், கல்வியை விநியோகம் செய்வதில் தடை ஏதும் வராமல் இருக்க! மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கற்பித்தல் மற்றும் பாடத்திட்டங்களைக் கைப்பற்றி மையப்படுத்துகிறது.

கல்விக்குள் வாணிப சுதந்திரத்தை உறுதி செய்ய பாடத்திட்டம் அனைத்தும், CBCS (Choice based Credit System) ஆக மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி கல்விச் சந்தைக்குள் நுழைகிற நுகர்வோர், பரிந்துரைக்கப்பட்ட பாடங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பது என்பது தங்கள் கையிருப்பிற்கேற்ப நுகர முடியும் என்பதாக அமையவிருக்கிறது. இதற்காகவே புதிய கல்விக் கொள்கை, கல்வியை நுகரும் நுகர்வோர் கல்வி நிறுவனங்களுக்குள் எந்த ஆண்டிலிருந்தும் நுழையவோ நிறுத்திக் கொள்ளவோ முடியும் என்கிறது. இந்த வகையில் CBCS பாடத்திட்டம் கல்வியை அளக்கின்ற நிறுத்தல், முகத்தல், அளத்தல் அளவையாக இருக்கும்!

சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளர் என்ன பொருள் வாங்குகிறார் என்பதை ஆராய்ச்சி செய்கிற பொழுது, ஒரு கம்பெனி தன் வியாபாரத்தின் மீதான இலாபத்தைத் திருப்பிக்கொள்ள முடியும். இதைத்தான் பிக் டேட்டா – Big Data என்கிறார்கள். இன்றைக்கு Big Data என்பது வென்ச்சர் மூலதன (Venture Capital) நிறுவனங்களின் ஆதாரமாக இருக்கிறது. இந்தியக் கல்வி சந்தையில் பிக்டேட்டா – Big Data விற்கான வாய்ப்புகளை ஏகாதிபத்தியங்கள் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும்படி, புதிய கல்விக் கொள்கையானது மாணவர்-ஆசிரியர்-கல்வி நிறுவனம் என்ற கட்டமைப்பைத் தகர்த்து, அதற்குப் பதிலாக “மூக்ஸ்” (Massive Online Open Course) எனப்படும் மாபெரும் திறந்தவெளி இணைய பாடத்திட்டங்களை முன்வைக்கிறது.

அடிப்படைக் கல்வி கட்டமைப்புகளின் மீது பாரமுகமாக இருக்கிற அரசு (சான்றாக இரண்டு இலட்சத்திற்கும் மேலான அரசுப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன), மூக்ஸ் போன்ற இணைய திட்டங்களின் மீது முனைப்புக்காட்டுவது என்பது கல்வியில் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் அரசின் ஆர்வம் காரணமாக அல்ல. மாறாக, பன்னாட்டு கம்பெனிகளின் இலாபவெறிக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதும் ஏகாதிபத்தியங்களின் பிடியில் நாட்டு அமைப்புகளை சரணடையச் செய்கிற வேலையேயாகும்.

கல்வியை பாதுகாப்போம்
கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோராகவும் மாற்றும் காட்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து அனைத்திந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பேரணி.

இதற்காகவே மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இருக்கிறது என்பதும், இதை நேரடியாக இயக்குபவர்கள் Ed&Ex, Coursera போன்ற பன்னாட்டு கம்பெனிகள் என்பதும், பிக்கி போன்ற முதலாளித்துவ கூட்டமைப்புகள் மூக்ஸை மூலதனமாகப் பார்ப்பதும், இந்திய கல்வி அமைப்பு எத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகவிருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட வல்லது.

இதுமட்டுமல்ல, DTH (நேரடி அலை வரிசை) வாயிலாக பெண்களுக்கான கல்வி அவர்கள் வீட்டுக்கே வரும் என்றும் இது பாதுகாப்பானது என்றும் சொல்வதன் மூலம், புதியக் கல்விக் கொள்கையானது, தொழில்நுட்பத்தின் உதவியோடு பெண்களை ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பார்ப்பனிய- நிலவுடமைச் சமூகத்தின் கோரப்பிடியில் தள்ளுகிறது.

இணைய பாடத் திட்டங்கள் என்கிற பொழுது புதிய கல்விக்கொள்கை ஆசிரியருக்கான பணிப் பாதுகாப்பை ஒழிக்கிறது. மாணவர்கள்-நுகர்வோர் என்றாகிவிட்ட பிறகு, இனி ஆசான்களின் பணி கார்ப்பரேட் கம்பெனியில் ஹெச்.ஆரைப் போன்று அடிமைகளிடம் வேலை வாங்கும் கங்காணிகளாக இருக்க வேண்டியதுதான். இந்த வகையில் புதிய கல்விக் கொள்கை ஆசிரியர்களுக்கான நிரந்தரப்பணியை ஒழித்து, ‘புரோபேசனரி” கட்டத்தை ஐந்து வருடங்களாகவும் பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் முன்வைக்கிறது. டிஜிட்டல் இந்தியா, மூக்ஸ் போன்ற திட்டங்கள் இதை துரிதப்படுத்துகிற அதே வேளையில், புதிய கல்விக் கொள்கை ‘இந்தியாவில் கற்பித்தல்’ (Teach In India) மூலமாக வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களையும் பல்கலைக்கழகங்களையும் இறக்குமதி செய்வதற்கு ‘கியான் திட்டத்தை (Global Initiative of Academic Network-& கல்விசார் வலைப்பின்னல்களுக்கான உலகளாவிய முன்முயற்சி)’ செயல்படுத்த முனைகிறது. புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை வருங்காலத்தில் ஆசிரியர்கள் இந்தியாவில் அருகிவரும் உயிரினமாக இருப்பார்கள் என்பதே இதன் சாரம்!

இந்திய உயர்கல்வியானது தற்பொழுது வரை நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சாதி மற்றும் பொருளாதார ரீதியாக மறுக்கப்பட்ட, மூடுண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை இதை மேலும் சுருக்கி, உயர் கல்வியிலிருந்து மக்களை கீழ்கண்ட வழிகள் மூலம் அணுகமுடியாதபடி தடுத்து வைக்கிறது.

  • கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் இரத்து செய்யப்படுவதுடன், இடஒதுக்கீடும் இரத்து செய்யப்படுகிறது. 1% கல்வியில் சிறந்தவர்கள் மற்றும் 1% பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை என அறிவிக்கிறது. இத்தகைய உதவித் தொகைகளும் கார்ப்பேரட் பொறுப்புணர்வின் (Corporate Social responsiblity) கீழ் வரவைக்கப்படுவதன் மூலம் பெரு முதலாளிகளிடம் கையேந்த வைக்கிறது! நாட்டின் எரிசக்தி வளங்களைக் கையகப்படுத்தியிருக்கும் அம்பானி போன்ற முதலாளிகள் தாங்கள் கொள்ளையடித்த இலாபத்தில் CSR என்பதன் பேரில் அற்பத் தொகையைக் கூட தனது மருத்துவமனையிலேயே முதலீடு செய்வதைப் பொருத்திப் பார்த்தால், CSR சுட்டிக்காட்டும் இந்த அரசு எப்படி ஓர் தேர்ந்தெடுத்த தரகனாகச் செயல்படுகிறது என்பது எளிதில் தெரியும்.
  • ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தனியாரிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறுகிறது புதிய கல்விக் கொள்கை. இதற்கு வசதியாக ஆட்சிமன்றக் குழுவில் கார்ப்பேரட்டுகளின் பங்களிப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. ஏற்கனவே எல்லா ஐ.ஐ.டி.க்களும் அப்படித்தான் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது!
  • அனைத்து சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு இனி தனியாரிடமிருந்து பெறப்பட வேண்டுமென்கிற புதிய கல்விக்கொள்கையின் சரத்து மோடி அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதுவரை ஆராய்ச்சித் திட்டங்களில் உருவாக்கப்பட்ட “கிளினிக்கல் டிரையல்ஸ்” தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் அணுக முடியாத வண்ணம் அறிவுசார் சொத்துரிமை (Intellectual property rights) விதிகளின்படி அமல்படுத்தப்பட இருக்கிறது. உலக மேல்நிலை வல்லரசான அமெரிக்காவிலேயே மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் காரணமாக, செனட்டில் இதற்காக தரகு வேலை பார்த்த Elsevier என்ற பன்னாட்டு அறிவியல் பதிப்பகம் பின்வாங்க நேர்ந்தது நினைவிருக்கலாம். ஆனால், இங்கோ வளர்ச்சி, விகாஸ் எனும் பெயரில் அப்பட்டமான வேசைத்தனமே IPRIப் பொறுத்தவரை மோடி அரசால் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

இவ்விதம் புதியக் கல்விக் கொள்கை, ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை மறுகாலனியாக்குவதைத் துரிதப்படுத்துவது மட்டுமல்ல, மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவ கும்பலுக்கும் கலாச்சார பாசிசத்தையும் பார்ப்பன மேலாண்மையையும் அமல்படுத்துவதற்கு எந்திரமாக அமைந்திருக்கிறது.

கலாச்சார ஒருங்கிணைப்பு என்பதன் பெயரில் இந்துத்துவக் காலிகள் புதிய கல்விக் கொள்கையில் செத்த மொழிகளை மீட்டெடுக்கும் ஆய்வு நிறுவனங்களை அமைப்பது, பார்ப்பனியக் கலாச்சாரத்தை இந்தியக் கலாச்சாரமாக நிலைநிறுத்தும் இந்தியவியல் (Indology) ஆய்வுகளை மேற்கொள்வது உட்பட பல பரிந்துரைகள் புதியக் கல்விக் கொள்கையில் நிறைந்திருக்கின்றன.

சகல திசைகளிலும் இந்தியக் கல்விக் கட்டமைப்பைப் பித்தெறியும் புதியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிற பொழுது, இதை எதிர்க்கிற உரிமையை நாடாளுமன்றத்திடம் இருந்தும் இந்திய நீதி சட்ட இறையாண்மையிலிருந்தும் WTO&GATS முற்றிலும் பறித்து விடுகிறது.

காட்ஸ் ஒப்பந்தத்தின்படி, கல்விப்புலத்தில் உருவாகும் பிரச்சினைகள் அதற்கென அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை தீர்ப்பாயங்களிலே மட்டுமே தீர்த்துக்கொள்ள முடியும். இதில் மாணவர்கள், தொழிலாளிகள், சமூக ஜனநாயகக் குரல்கள் முடிவெடுக்கும் அங்கத்தினராக இருக்க முடியாது!

இப்படிப்பட்ட ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் என்ற வீரிய ‘ஒட்டுரக’த்தின் அப்பட்டமான வெளிப்பாடாகத்தான் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.

ஆக, ஏகாதிபத்திய நலனையும், பார்ப்பனிய மேலாதிக்க நலனையும் பிரதிபலிக்கும் ‘புதிய கல்விக் கொள்கையை‘ வீழ்த்தி, சுயசார்புள்ள, உண்மை தேசப்பற்றாளர்களை உருவாக்கும் மக்களின் நலனுக்கான புதிய கல்விக் கொள்கையைப் படைக்க வேண்டுமானால், WTO&GATS ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டியது அவசியம்.

– பரிதி
______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

47
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!

காமாட்சி ஆட்சி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையிலும் இருக்கிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவனான்டி மண்ணில் ஜீன்ஸ் பேண்டுகளின் அட்டகாசம் அதிகரித்தபடியால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் திருக்கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாகவே ஒரு வழக்கை பதிவு செய்தார்.

கிரானைடும், ஸ்டிக்கரும், பீஃப் கானமும் ஆட்டம் போடும் தமிழ்த்தாய் ஊரில் தாமாகவே வழக்கு போடுவதற்கு எத்தனையோ இருக்கையில் இற்றுப் போகும் அழுக்கு பேண்டு குறித்து ஒரு நீதியரசர் ஏன் இத்தனை அற ஆவேசம் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ இந்த மட்டிலாவது இந்த மண்ணில் அறம் சீவித்திருக்கிறதே என்று காரப் பணியாரம் சுவைத்துக் கொண்டு கவிதை ஏரியாவில் இலக்கியம் பூசும் சில வார்த்தை செதுக்கர்கள் சிலாகிக்கிறார்கள்.

அந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 26-ம் தேதி வைத்தியநாதன் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார். அதில், தமிழக இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றெல்லாம் தாலிபான் முல்லாக்களுக்கு போட்டியாக உத்தரவிட்டார்.

ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?

நீதியரசரே பொங்கி விட்டால் திருக்கோவில்களில் வெண் பொங்கலை மட்டும் படையல் செய்யும் இந்து அறநிலையத் துறையும் பொங்கினார்கள். அந்த பொங்கலை ஒரு சுற்றறிக்கையின் மூலம் அனுப்பியதோடு நீதியரசர் அய்யா அருளிய உடை உத்தரவுகளை கோவில்களில் அமல்படுத்துமாறு உத்தரவிட்டார்கள்.

அனைத்து சாதி மாணவரும் அர்ச்சகராக வேண்டுமென்ற ‘சாதா’ பிரச்சினைகளில் கும்பகர்ணணாய் உறையும் அறநிலையத் துறை, குட்டைப் பாவாடை போன்ற ஸ்பெசல் சாதா பிரச்சினைகளில் உசேன் போல்ட்டாய் ஓடுகிறது.

இதன்படி 2016 ஜனவரி புத்தாண்டு ஒன்றாம் தேதி முதல் திருக்கோவில்களில் காக்கிச் சட்டை போலீசார் கண்கொத்திப் பாம்பாக சீறிக் கொண்டு ஜீன்ஸ் – லெக்கின்ஸ் – குட்டைப் பாவாடை பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறார்கள். சிம்புவையும், யுவராஜையும் தனிப்படை போட்டும் மோப்பம் கூட பிடிக்க இயலாத இந்த அப்பாவிகள் கோவில் யானைக்கு போட்டியாக முகப்பு கோபுரத்தின் முன்பு முட்டி போட்டவாறு இடுப்புக்கு கீழே உற்று நோக்கி வருகிறார்கள். யானையைக் கண்டு குஷியாகும் குழந்தைகள் இந்த பூனைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆமாம் ஐயா! மழலைகளுக்கும் சேத்துத்தானே அந்த உடைக் கட்டுப்பாடு!

மழை வெள்ளத்தில் உடையும் உடமைகளும் அடித்துச் செல்லப்பட்டு தெருவும் திணறலுமாக குடி மக்கள் சோர்ந்திருந்தாலும், கோவில்களில் வஸ்திரங்களை முறைப்படுத்துவதிலும், மதுக்கூடங்களில் சப்ளைகளை ஒழுங்குபடுத்தவதிலும் கோமளவல்லியை விஞ்ச யாருண்டு?

கூடவே கோமளவல்லிக்கு மயிலறகு கொண்டு காற்றாட்டுவதில் தினமணியின் ஆசிரியர்வாள் வைத்தி அவர்களையும் யாரும் விஞ்ச முடியாது. ஒன்றாம் தேதி வஸ்திர சட்ட சாஸ்திரம் அமலுக்கு வந்தது என்றால் இரண்டாம் தேதி வைத்தி மாமாவின் அர்த்த சாஸ்திரம் தலையங்கத்தில் “அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு” என்று சீறிப் பாய்ந்தது.

மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?
மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?

மலையாள தேசத்தில் வெட்டி கட்டிய ஆம்படையான்களும், பாரம்பரிய உடை உடுத்திய பெண்மணிகளும் மட்டும்தான் குருவாயூர் முதல், பத்மநாபா வரையிலான மூர்த்திகளின் இல்லத்தில் அனுமதிக்கப்படுவதை சுட்டிக் காட்டும் வைத்தி சார்வாள், திருப்பதியிலும் அங்கனமே வஸ்திர சாஸ்திரம் முன் தேதியிட்டு அமலுக்கு இருப்பதை குத்திக் காட்டுகிறார். இவ்வண்ணம் மலையாள தேசத்தில் இருக்கும் மாந்தீரகங்களையும் அவர் நியாயப்படுத்துவாரா என்று யாரும் புத்தி கெட்டு கேட்கக் கூடாது. ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் மலையாள நம்பூதிரி மாந்திரீகவாதிகள் நிரம்பி வழிகிறார்கள்.

கேரளாவில் பைஜாமாவுக்கு கூட அனுமதியில்லை என்று புல்லரிக்கும் மாமா சார், அந்தபடிக்கு மோடிஜியின் – பைஜாமா அல்லது குர்தா அல்லது லெக்கன்ஸ் (லெக்கின்ஸின் ஆண்பால் பதம்) – போன்றவைகளுக்கும் அனுமதியிருக்காதே என்று லீகல் பாயிண்டை அம்மாவுக்கு பாடிய லோலாயியில் மறந்து விட்டார். சரிடே சார்வாளுக்கு நினைவூட்டியை பழுது பார்க்கும் கோட்டக்கல் ஆர்யவைத்தியசாலாவின் லேகியத்தை பரிந்துரை செய்!

இறைவழிபாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் உண்டு என அவாள் சார் இளைய தலைமுறையின் மனக்கிலேசத்திற்கு மருந்து போடுகிறார். சரிப்பா, மற்ற மதங்களில் பிறப்பால் ஒருவர் பாதிரியாரோ, முல்லாவா, குருவாகவோ மாறுவதற்கு தடையில்லையே, அது ஏன் இங்கில்லை என்று கேட்டால் ஆகமம், ஆப்பம், ஆம்லேட்டு என்று உச்சாடனம் செய்கிறார்.

இங்கேயும் அப்படி ஒரு புல்சேவை போட்டிருக்கிறார். அதாகப்பட்டது, மற்ற மதங்களில் ஆகமவிதிமுறைகள் இல்லையாம். காரணம் அவர்களது ஆலயங்கள் அனைத்தும் மக்கள் ஒன்று கூடி பிரார்த்திக்கும் வழிபாட்டுத் தலம் மட்டும்தானாம். இந்து மதத்தில் மட்டும் இவை பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றனவாம். இதற்கு மேல் கிரகம், ஈர்ப்பு சக்தி, பரிகாரம், என்று சுற்றுகிறார். அதாவது கோவிலில் சட்டை போடாமல் நுழைந்தால் ஒரு சக்தி நம்மேல் ஏறிவிடுமாம்.

உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!
உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!

முதலில் கோவில்கள் என்ற கட்டமைப்பே வேதங்களை வேதவாக்காக கொண்ட ஆரிய சனாதான இந்து வருண சாதி சமயத்தில் கிடையாது. திருக்கோவில்களை கட்டி தீர்த்தங்கரர்களை பிரதிஷ்டை செய்த சமணர்களே இந்தியாவின் இந்து மதக் கோவில்களுக்கு காப்புரிமை பெற்றவர்கள். கோவிலே திருட்டு என்றான பிறகு சக்தி, ஈர்ப்பு என்ற புராணம் எதற்கு வைத்தி ஐயா?

எழுச்சிக்கும், நீடித்த சக்திக்கும் சேலம் சிவராஜ் வைத்தியக் கவிராயரின் சிட்டுக்குருவி தங்க பஸ்ப லேகியங்கள் கொலுவிருக்கும் போது ஆலயங்களின் பவர் எதற்கு? சரி, மேலாடை அணியாமல் சென்றால் ஆலயத்தின் கிரக காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்க முடியும் என்று அனுபவத்தின் மூலம் பாடம் எடுக்கும் வைத்தி வாள்சார் ஒரு முக்கியமான லீகல் பாயிண்டை மறந்து விட்டார்.

அதாவது கீழாடையும் அணியாமல் சென்றால் இந்த கிரக காந்த சக்தி இன்னும் வலுவாக உடலினுள் முழுமையாக இறங்கும் அல்லவா? ஒரு சில குஞ்சாமணிகள் உள்ளாடை அணியாமல் ஒரு மாமாங்கம் கோவில் சென்றால் பேண்டுக்கு மேல் ஜட்டியைப் போட்டு சீறிப்பாயும் அமெரிக்க சூப்பர்மேன் சக்தி கிடைக்குமல்லவா என்று கொளுத்திப் போடுகிறார்கள்.

இன்னும் சில ஷகிலா பக்தர்கள், மலையாள பாரம்பரியப்படி முண்டும், ரவிக்கையும் உடுத்திய பெண்களை மட்டும் அனுமதித்தால் என்னவென்று கேட்கிறார்கள். வைத்திசார்வாள் இதற்கெல்லாம் இளைய தலைமுறை சமஸ் போன்ற தத்துவாதிகளிடம் கலந்தாலோசித்து எழுத வேண்டும். இன்னும் சில வாயாடிகள் திருக்கோவில் கோபுரங்களில் இருக்கும் டிரஸ் இல்லாத கோடுகளை அதாவது அம்மணக்குண்டி சிலைகளைக் காட்டி இதுக்கெல்லாம் நீதிபதி ஐயா எப்போதையா டிரஸ் போடுவார் என்று கேட்கிறார்கள்.

கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?
கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?

ஆனாலும் வைத்திசார்வாளை ஏதோ புளிச்ச தயிர் சாதப் பார்ட்டி என்று ஏமாந்து விடாதீர்கள். இப்படி ஏட்டிக்கு போட்டியாக கேட்கப்படும் கேள்விகள், கேலிகள், பழிப்புகள் அனைத்தும் திராவிட அரசியலின் சதி என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக முதலிலேயே சொல்லி விடுகிறார்.  இவர்களின் பிரச்சாரத்தால் கோவில்களில் குறைந்த கூட்டம் இப்போது கூடியிருக்கிறது என்று கூத்தாடும் ஐயர்வாள் ஆசிரியர் சார், இருப்பினும் ஆலயம் தொழுவதில் மற்ற மதத்தினரிடம் இருக்கும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதைப் பார்த்து வேதனையும் படுகிறார்.

அதுதான் இறைநாடி வரும் இளைய தலைமுறை டி சர்ட், ஜீன்ஸ், ஷார்ட், லெக்கின்ஸ், ஸகின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற கிறித்தவ நாட்டு உடைகளை உடுத்தி வருவதாம். இதனால் பாவாடை, தாவணி, சேலை, வேட்டி போன்ற பாரம்பரிய ஆடைகள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறதாம். இத்தகைய பாரம்பரிய வஸ்திரங்களின் மேல் வைத்திஜி கொண்டிருக்கும் மரியாதையையும், மதிப்பையும், பெருமிதத்தையும் பார்த்தால் நிச்சயம் அவர் கோவணமோ, லங்கோடோதான் கட்டியிருப்பார். ஆதாரம் வேண்டுவோருக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்று வைத்திசார்வாள் அதிசயமாய் எழுதியிருக்கிறார். என்ன அதிலும் நிலைய உள் குத்துக்கள் இருக்கலாம். அரபு – சமஸ்கிருதம், புர்கா – பாரம்பரியம், கண்டிப்பான தொழுகை – கண்டிப்பான விரதம் போன்றவைகளை அவர் யோசித்திருக்க கூடும். இருப்பினும் ஒரு சுலைமான் மதரசாவில் படித்து மவுல்வியாக ஆனாலும், ஒரு சுடலையாண்டி வேதப் பாடசாலையில் படித்து அர்ச்சகராக ஆக முடியாது என்பதால் அவர் இஸ்லாமியர்களை மனம் திறந்து பாராட்டும் பாவத்தை செய்பவராக கருத முடியாது.

கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!
கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!

மேலாடையில்லாமல் வந்தால் யாரெல்லாம் பூணூல், யாரெல்லாம் பூணாத ஆள் என்று கண்டுபிடிப்பதற்கு தோதாக இருக்குமென்று நாத்திக ராட்சசர்கள் தீவிர பிரச்சாரம் செய்து புளுகுகிறார்கள் என்று கோபப்படுகிறார் வைத்தி. பின்னே தினமணி ஆபிசோ இல்லை டி.-சி.எஸ் மேலாளர் அறையோ இல்லை செட்டிநாட்டு வித்யாஷ்ரமம் பள்ளி கிரிக்கெட் அணியோ ஒவ்வொரு முறையும் தோளைத் தடவிப் பாத்து யாரெல்லாம் நூல் பார்ட்டி என்று கண்டுபிடிக்கும் அவஸ்தை யாருக்கய்யா புரியும்?

இறுதியாக  வைத்தி சார் ஜி அவர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் ஒரு சிறு கோரிக்கையை வைத்து சாஸ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார். அதன்படி கோவில்களில் செல்லிடப் பேசியை தடை செய்யவும், மீறினால் பறிமுதல் செய்து அபராதம் போடுவதையும் உடை கட்டுப்பாட்டுடன் சேர்த்து செய்தால் கலியுகத்தில் தர்மம் தழைத்து, அதர்மம் வீழ்வது உறுதி என்கிறார் தினமணியின் தீதும் பிறர் தர வாய்ப்பேயில்லாத ஆசிரியர் ஜி அவர்கள்.

ஆமாமய்யா, இனி தேவநாதன் ஜிக்கள், கருவறையில் பலான காட்சிகளை படம் பிடித்து சி.டிக்களாக விற்றுத் தீர்ந்து அதுவும் கீதை விற்பனையை முறியடித்த வேதனைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லையல்லவா?

இதுவும் போக வைத்தியின் அர்த்தசாஸ்திரத்தில் ஏகப்பட்ட கோரிக்கைகள் உண்டு.

தேவதாசி முறையை மீட்டு வந்தால் தேவலோக இந்திர சபையில் நடக்கும் ஆட்டங்கள் இங்கேயும் நடக்கலாம். கடவுளும் உள்ளம் மகிழலாம். மாமிச உணவைத் தின்னுவதால் வரும்  வன்முறைக் குணங்களை மட்டறுக்க கோபுரத்தின் கீழேயே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேனரைப் போட்டு வருவோர் எவரும் மட்டனோ சிக்கனோ மீனோ இல்லாத வயிறைக் கொண்டிருக்கிறாரா என்று ஸ்கேன் செய்து அனுப்பலாம். கூடவே மல ஜலங்களை காலி செய்யாமல் வரும் பக்தர்களுக்கு இனிமா கொடுத்து வெறும் வயிற்றோடு அனுப்பலாம்.

பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?
பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?

அன்றாடம், வாரம், மாதம் என்று கோவில்களுக்கு வருகை தருவோருக்கு              பாயிண்ட் போட்டு மயிலாப்பூர் கிரி கடை கிஃப்ட் கூப்பன் கொடுக்கலாம். கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா, பாபா ராம் தேவ் யோகா,  டபுள்ஸ்ரீ ரவி சங்கரின் கார்ப்பரேட் யோகா, இராம கோபாலனின் சீற்றம், ஜக்கியின்  ஈஷா யோகா அனைத்திற்கும் நிரந்தர கடைகளை ஏற்படுத்தலாம்.

எல்லாம் சரிதான் வைத்திஜி சார்! ஒன்றைத் தவிர!!

ஏற்கனவே ஆன்ட்ராய்டு ஆப் மூலம் பக்தி ஆப், யோகா ஆப், விரத ஆப்புனு போய்க் கொண்டிருக்கும் ஃபுல் தமிழகத்தை இப்படி ஜீன்ஸ், லெக்கின்ஸ் தடை போட்டால் வவ்வாலும், ஐயரும் மட்டும் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு யார் வருவார்? ஜனவரி புத்தாண்டு கிறித்தவ புத்தாண்டு, அன்று நள்ளிரவு கோவில்களை திறக்காதீர்கள், அதிகாலைதான் இந்துப் பண்பாடு, அன்று கோவிலுக்கு போகாதீர்கள் என்று இந்து முன்னணியும், இதர பரிவாரங்களும் கரடியாக கத்தி என்ன?

புத்தாண்டை கொண்டாடுவோரும், நள்ளிரவு 12 மணிக்கு கோவிலுக்கு செல்வோரும் இந்துக்கள் இல்லை என அறிவித்தால் என்ன ஆகும்? இது சிறுபான்மை இந்துக்கள் வாழும் நாடாகிவிடாதா?

ஜாக்கி ஜட்டியும், லீவைஸ் ஜீன்சும், நாயுடு ஹால் லெக்கின்ஸும் போடுபவர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்றால் பிறகு யார் வர வேண்டும்? நாகா சாமியார்களா? மல்டிபிளக்சிலும், ஹைப்பர் மார்க்கெட்டிலும், மேல் படிப்பிலும் இதுதான் உடை, இதுதான் நடை என்றான பிறகு கோவிலுக்கு மட்டும் என்னய்யா தடை? டாஸ்மாக்கிற்கு போகும் வழியில் வரும் பெருமாள் கோவில் முன்பு, பல்சரை நிறுத்தி பவ்யமாய் கன்னத்தில் ரெண்டு தட்டி, வாயில் ஒரு முத்தம் கொடுத்து செல்லும் பக்தர்கள் வாழும் நாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் வந்தால் முதலுக்கே மோசமென்று இந்த வைத்திக்கு யாரய்யா பாடம் எடுப்பார்கள்?

மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!
மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!

அமெரிக்காவில் மாடுகளை மேய்க்கும் கௌபாய்களும், கடுமுழைப்பு தொழிலாளிகளும் தார்பாய்களை கிழித்து தைத்த பேண்டுகளில் பிரச்சினையே இல்லாமல் வேலை செய்தார்கள். ஜீன்சின் தல புராணம் இவ்வாறு இருக்கையில் நம்மூர் கழனிகளில் வேட்டி, மடிசார், அங்கவஸ்திரத்துடன் இறங்கும் மக்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லை பாதாளச் சாக்கடைகளில் ராம்ராஜ் பாரம்பரிய காட்டன் வேட்டியுடன் இறங்கும் துப்பரவு தொழிலாளிகளைத்தான் பார்க்க முடியுமா?

பேண்டும், சுடிதாரும், லெக்கின்சும் வந்த பிறகுதான் அதிக பெண்கள் இந்தக் கால்களால் நாலு இடங்களில் நடக்க முடியும் என்பதைக் கண்டிருக்கிறார்கள். ஆலயத்திற்கும், சமையலறைக்கும் மட்டுமென்றால் சேலையே போதும்தான். ஆனால் உங்கள் குடமுழுக்கிற்கும், தேர்த்திருவிழா கூட்டத்திற்கும் ஒழுங்கு படுத்த வரும் பெண் போலிசு, பேண்டு போடக்கூடாது என்றால் மோடியிடம் சொல்லி இராணுவத்திற்கும் சேலையையே கட்டாய உடையாக்கலாமே?

temple dress code (1)ஆக உங்களது தூய வெள்ளை வேட்டியும், தூய மடிசார் சேலையும் எங்கள் உழைப்பாளிகளின் அன்றாட ஆடையாகாத போது கைலி கட்டினால் அனுமதி இல்லை என்றாகும் போது என்ன நடக்கும்?

ஏற்கனவே வைத்திவாள் கவலைப்படும் இறை வழிபாட்டு அலட்சியம் ஒரு மாபெரும் புறக்கணிப்பாய் முடியும். இளைய தலைமுறை இனி எந்நாளும் கோவிகளுக்கு வரமாட்டார்கள் என்றாகும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் அனுமதிக்கப்படும் பிரைவேட் கோவில்கள் உருவாகும். நாட்டார் தெய்வ வழிபாடும், கோவில்களும் வளரும்.

பிறகு இராம கோபாலனும், வைத்தியும் கரடியாய் கத்துவதைக் காணுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

____________________

 

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

1

“ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது நின்றும், நீடித்தும் பெருமழை தரக்கூடியது” என வரையறுக்கிறது வானிலை அறிவியல். “இதனைப் பாமர மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் கனமழை பெய்யும் என்று தாம் அறிவித்ததாகவும், கனமழை என்ற வார்த்தையைத் தமது துறை சாதாரணமாகப் பயன்படுத்துவதில்லை” என்றும் விளக்கம் அளித்தார், வானிலை இயக்குநர் ரமணன்.

ஜெயா வக்கிரம்
ஏ.சி வேனுக்குள் அமர்ந்து கொண்டு சென்னை – ஆர்.கே. நகர் தொகுதியைப் பார்வையிடும் ஜெயா: இது அக்கறையா? வக்கிரமா?

இதற்கு அப்பால், “புவி வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, வடகிழக்குப் பருவ மழையின் தன்மை மாறிவிட்டதாகவும், கடந்த பத்தாண்டுகளில் அப்பருவ மழை பெய்யும் காலஅளவு குறைந்துவிட்டதோடு, ஓரிரு நாட்களில் புயல் மூலம் பெருமழையைப் பொழியும்படி அதன் போக்கு காணப்படுவதாகவும்” சுற்றுச்சூழல் நிபுணர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஜெயா அரசு இவற்றுள் ஒன்றைக்கூடப் புரிந்து கொள்ளவுமில்லை; காதில் போட்டுக் கொள்ளவுமில்லை என்பதோடு, இப்பருவ மழையை எதிர்கொள்வதிலும் ஏரிகளிலிருந்து நீரைத் திறந்துவிடுவதிலும் அலட்சியமாகவும் ஆணவமாகவும் நடந்துகொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 207 பேரை (அரசின் கணக்குப்படியே) பலியிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்.20 போல் தமிழகத்தில் தொடங்கும். இந்த முறை எட்டு நாட்கள் தாமதமாக அக்.28-ல் பருவ மழை தொடங்குமென அறிவித்தது, வானிலை ஆய்வு மையம். இந்த நேரத்தில் தலைநகரில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஜெயா, கோடநாட்டில், தனது எஸ்டேட் பங்களாவில் 28 நாட்கள் ஓய்வில் இருந்தார்.

தமிழகக் கடலோர மாவட்டங்களைப் புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பிறகும்கூட மலையில் இருந்து கீழே இறங்காத ஜெயா, தீபாவளிப் பண்டிகையைத் தனது போயசு பங்களாவில் கொண்டாடுவதற்காக, தீபாவளிக்கு முதல்நாள் சென்னைக்கு வந்தார்.

சுத்தம் செய்யப்படும் சாலைகள்.
“மகாராணி” ஆர்.கே. நகருக்குச் செல்ல முடிவு செய்தவுடனேயே, அவர் செல்லும் வழி குப்பை, கூளம், தூசு தும்பின்றி சுத்தம் செய்யப்பட்டது.

காற்றழுத்த தாழ்வின் காரணமாக அடைமழை பெய்து சென்னையிலும், கடலூரிலும், காஞ்சிபுரத்திலும், தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்த பிறகு, நவம்பர் 12 அன்று கோட்டைக்குச் சென்று ஒரேயொரு மணி நேரம் அதிகாரிகளோடு உட்கார்ந்து இருந்துவிட்டு வந்ததை, வெள்ள நிவாரண ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அறிவிக்கச் செய்தார்.

அதற்கும் ஒரு வாரம் கழித்துத் தன்னைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இரண்டு தெருக்களைக் கால்விரல் நுனிகூட நனையாமல், ஏ.சி. வேனில் அமர்ந்தபடியே எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். டிசம்பர் 3 அன்று ஹெலிகாப்டரில் இருந்தபடியே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்ட அதிசயம், “மேலிருந்து பார்த்தால் எங்க அவதி தெரியுமா மேடம்?” என “பார்ப்பன தினமலர்”கூட நக்கல் அடிக்கும் அளவிற்கு நடந்தது.

இவற்றின் மூலம் தனக்கு நிகரான ஆணவமும் அலட்சியமும் நிறைந்த ஆட்சியாளர்கள் முன்பும் இருந்தது கிடையாது, இனியும் வரப்போவது கிடையாது எனச் சவால் விட்டிருக்கிறார், ஜெயா.

இது அதீதமான மதிப்பீடு என்று கருதுபவர்கள், வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, உறவினர்களை இழந்து வேதனையாலும், எதிர்காலம் குறித்த அச்சத்தாலும் கதறிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, வாக்காளப் பெருமக்களே” என ஜெயா அழைத்ததை நினைவில் கொள்ள வேண்டும். “இப்படி மழை கொட்டித் தீர்க்கும்பொழுது அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?” எனத் தமக்குத் தாமே சமாதானம் செய்து கொள்ளும் அப்பாவிகளும் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  • ஆணவத்திலும் அலட்சியத்திலும் அம்மா எட்டடி பாந்தால், அவரது குட்டிகள் பதினாறு அடி பாய்கின்றன.
  • இந்தத் தகவல்-தொழில்நுட்ப காலத்தில் நேரடியாக ஆர்.கே.நகர் சென்று வெள்ளச் சேதத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு இல்லை.
  • கடலூரில் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.
  • மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு செய்தார்களே தவிர, 20 செ.மீ., 30 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று சொல்லவில்லை.
  • மழை பெய்வதற்கு முன்பே எங்களை ஆயில் மோட்டாரைத் தூக்கிக்கொண்டு போய் தண்ணீரை உறிஞ்சச் சொல்கிறீர்களா?
  • அம்மாவின் திறமையால் இத்துணை பாதிப்போடு நின்றுவிட்டது. இதற்காக சென்னை, கடலூர் மக்கள் அம்மாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

– இவையெல்லாம் அ.தி.மு.க. தலைவியை நத்திப் பிழைக்கும் நாஞ்சில் சம்பத்தும், சி.ஆர். சரசுவதியும் தொலைக்காட்சி விவாதங்களில், பாதிப்புக்குள்ளான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களே என்ற கூச்சமோ, அச்சமோ இன்றி உதிர்த்த வார்த்தைகள். வார்த்தைகளில் மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத்தின் உடல் மொழியிலும் ஆணவமும் அலட்சியமும் நிறைந்திருந்தது.

நிவாரணம் என்ற பெயரில் நடந்த அசிங்கம்

ஸ்டிக்கர் ஆட்சி
“ஸ்டிக்கர் ஆட்சி” : நிவாரணப் பொருட்களில் ‘அம்மா’ படத்தை ஒட்டும் வக்கிரக் கூத்து.

பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்ல மறுக்கும் ஜெயா அரசு, “நிவாரண நடவடிக்கைகளைப் பாருங்கள் – கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு ஆறு அமைச்சர்கள்; ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி என அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்தையும் அம்மா செய்கிறார்” எனக் கூறித் தப்பித்துக் கொள்கிறது.

“டிசம்பர் 1-ஆம் தேதி இரவில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கை செய்யாமல் திறந்துவிட்டார்கள்; முறையான எச்சரிக்கை செய்திருந்தால், குறைந்தபட்சம் ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான சான்றிதழ்களைக் காப்பாற்றிக் கொண்டு மேடான பகுதிக்குச் சென்றிருப்போம்” எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், சென்னை நகரவாசிகள்.

“டிசம்பர் 1-க்குச் சற்று முன்பாக அடுத்த இரு தினங்களில் சென்னையில் 500 மி.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று பி.பி.சி. சேவை எச்சரித்தது. அதன் பின்னரும் மழை வெள்ள நீர் சூழும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு உணவு, உறைவிடத்தை வழங்க அரசு தவறிவிட்டது” எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி. (9.12.15).

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் வீட்டை இழந்துவிட்டு அநாதரவாக நின்ற மக்களிடம் அரிசியையும் பருப்பையும் கொடுத்து சமைத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள், அதிகாரிகள்.

“வக்கத்து நிக்கிறோம். மூவாயிரத்து ஐநூறு ரூவா நிவாரண உதவி கொடுக்குது அரசாங்கம். அதுவும் எல்லாருக்கும் கிடைக்கல. ரேசன் கார்டு இல்லாட்டினா இல்லங்குறாங்க அதிகாரிங்க. வூட்டையே வெள்ளம் அடிச்சிட்டுப் போயிட்டு. ரேசன் கார்டுக்கு எங்கயா போவோம்?” எனக் குமுறுகிறார்கள் வெள்ளம் துடைத்துப் போட்ட பூதம்பாடி கிராம மக்கள். (இந்து, நவ.29, பக்.9)

சிதம்பரம் அருகே நிவாரண உதவிகள் கேட்டும், குடிதண்ணீர் கேட்டும் சாலை மறியல் செய்த தாழ்த்தப்பட்டோர் மீது போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு பெண்ணின் முதுகெலும்பு உடைந்து போனது; கொடுங்காயம் அடைந்த பாக்கியராஜ் என்ற மாற்றுத் திறனாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவசர ஊர்திகள்
ஜெயாவின் மூஞ்சி போட்ட பேனர்களைக் கட்டுவதற்காகப் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ அவசர ஊர்திகள்.

“ஆங்காங்கே பிரசவ வலி, காய்ச்சல்னு ஏகப்பட்ட வேதனைகள். அவசர உதவிக்கு கூப்பிடுங்கனு மாவட்ட நிர்வாகம் கொடுத்த நம்பருக்குக் கூப்பிட்டா, வந்து பாக்குறோம்னு சொல்லிட்டு ஃபோனை வெச்சிடுறாங்க” எனக் கூறுகிறார், கடலூர் தவளை நகரைச் சேர்ந்த நடராசன். (ஜூ.வி.9.12.15)

அமைச்சர் கோகுல இந்திரா சென்னையின் அரும்பாக்கம் பகுதியில் நடைபெறும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வந்தபொழுது, அங்குள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த முதியவர், “பத்து நாளா வீட்டுக்கள் புகுந்த வெள்ள நீரோடு வாழ்ந்துகிட்டிருப்பதாக”ப் புகார் தெரிவித்தார். அதற்கு அமைச்சர், “தண்ணீர் எடுக்க மோட்டார் வாகனம் வந்ததே” எனப் ‘பொறுப்பாக’ப் பதில் அளிக்க, “அந்த வாகனம் தெருமுனையோட திரும்பிப் போயிடுச்சு” என அந்த முதியவர் நிலைமையை அமைச்சருக்குப் புரிய வைத்தார்.

இந்திரா காந்தி தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் காட்டி அமைச்சர் கேள்வி கேட்க, கவுன்சிலர், “போன ஆட்சியில எதுவும் செய்யல மேடம். நாம வந்துதான் இந்த மழைநீர் வெளியேற வடிகால் அமைச்சிருக்கோம்” என்று தூர்ந்துபோன துளையைக் காட்ட, அருகில் நின்றிருந்த அப்பகுதி மக்கள், “அதில் தண்ணீர் போகவே மாட்டேங்குது” என உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிவாரண உதவிகளுக்காகக் காத்துக்கிடந்த வேளையிலும், நிவாரணப் பொருட்களில் அம்மா படத்தை ஒட்டித்தான் கொடுக்க வேண்டும், அவற்றை அம்மாவின் படத்தை முன்னே வைத்து அமைச்சர்களின் கையால்தான் வழங்க வேண்டும் என்பதற்காக அவ்வுதவிகளை உடனடியாக வழங்காமல் தாமதப்படுத்தியிருக்கிறது, அ.தி.மு.க. கும்பல்.

02-amma-stickersகுறிப்பாக, மூன்று கப்பல்களில் வந்த நிவாரணப் பொருட்களில் அம்மா படத்தை ஒட்ட முடியாது என்பதற்காகவே அப்பொருட்களைப் பெற்று விநியோகிப்பதைத் தாமதப்படுத்தியிருக்கிறது, தமிழக அரசு. “இதனால் ஒருநாள் முழுக்க தேவையில்லாமல் காத்திருக்க வேண்டியிருந்ததாக” கடற்படை குற்றஞ்சுமத்துகிறது.

“நாங்கள் எங்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும்; எந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று சரிவர வழிகாட்டுதல்கள் இல்லை” என மீட்பு பணிக்கு வந்த இராணுவ மீட்புக் குழுவே குற்றஞ்சுமத்தும் அளவிற்கு ‘பொறுப்போடு’ நடந்துகொண்டிருக்கிறது, அம்மா அரசு.

இவற்றுக்கெல்லாம் மேலாக, சென்னையில் பல இடங்களில் நிவாரண உதவிகளைச் செய்த தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அடித்துப் பிடுங்கும் அராஜகமும் ரவுடித்தனமும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தலைமையில் நடந்தது.

இந்த அட்டூழியங்களைப் பார்த்து நொந்துபோன தனது நண்பர் தனபால், “எல்லாம் முடிந்த பின் வந்து பார்வையிடும் கடவுளாக மட்டுமே அவர்கள் காட்சியளிக்கின்றனர். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள், இழிபிறவிகள் ஆனோம்” என்று முகநூலில் பதிவிட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார், மறைந்த அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ். (தினமலர், 4.12.2015, பக்.2)

திட்டங்கள்: பலன் யாருக்கு, பாதிப்பு யாருக்கு?

“இது எதிர்பாராமல் பெய்த மழை” என வாய்கூசாமல் சொல்லும் ஜெயாதான், சட்டசபையில் சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக 110-ம் விதியின் கீழ் அறிவித்தார். இதோடு அமைச்சர்கள் தெரிவித்துள்ள திட்டங்களையெல்லாம் கணக்கில் கொண்டால் சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மட்டும் இந்த ஆட்சியில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு வருகிறது என்கிறார், தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின். சென்னை முழுவதும் இருக்கக்கூடிய கழிவு நீர் குழாய்களை அகற்றி, பெரிதுபடுத்தி புதிய குழாய்கள் பதிக்க 1,500 கோடி ஒதுக்கி 2 ஆண்டு ஆகிறது. அது என்ன ஆனது எனக் கேள்வி எழுப்புகிறார், மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சவுந்திரராஜன். இவையெல்லாம் காகித அறிவிப்புகளா அல்லது ஒதுக்கப்பட்ட பணம் வேறு வழியில் கரைந்து போனதா என்ற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை.

கடலூர் ஆர்ப்பாட்டம்
“அ.தி.மு.க.விற்கு ஓட்டுப் போடுவோம்” என்று சத்தியம் வாங்கிக் கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கும் அ.தி.மு.க-வின் கயமைத்தனத்தை கண்டித்து கடலூரில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னையில் மட்டும்தான் என்றில்லை, வெள்ளக்காடான பகுதிகள் ஒவ்வொன்றிலும் நீர் மேலாண்மை குறித்து அம்மா ஆட்சியின் அறிவிப்புகளும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் பல்லிளித்து நிற்கின்றன.

  • வேதாரண்யத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் ஏரி 640 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் எனக் கடந்த ஆண்டு 110-ஆம் விதியின் கீழ் அறிவித்தார், ஜெயா. இந்த அறிவிப்பு காற்றோடு போனதால், வெள்ளப்பள்ளம் ஏரியில் சேமித்திருக்க வேண்டிய நீர் உபரியாக வெளியேறி, 3,000 ஏக்கர் நிலத்தை மூழ்கடித்துவிட்டது. இதனால் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
  • சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கு அருகேயுள்ள நேமத்தில் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் அளவிற்கு 80 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. ஆனால், இத்தேக்கம் திறப்புவிழா காண்பதற்கு முன்பே, அதன் மதகுகளிலும் கரைகளிலும் விரிசல் விட்டு நின்றதால், மழை நீரைத் தேக்க இயலாமல் அந்த ஏரியில் சேமிக்க வேண்டிய நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்டது.
  • நீர்வள-நிலவளத் திட்டத்தின் கீழ் 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 364 ஏரிகள் சீரமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது, அம்மா அரசு. அப்படிச் சீரமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஏரிகள் அனைத்தும் இந்த வெள்ளத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் உடைந்து போ நிற்கின்றன. (இந்து, டிச.8)
  • செம்பரம்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தும் திட்டத்தில் 30 சதவீதப் பணிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால், டிசம்பர் 1 அன்று நள்ளிரவில் அந்த ஏரியிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்துகூட இவ்வளவு தண்ணீரை ஒரே சமயத்தில் வெளியேற்ற மாட்டார்கள். செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் குடியிருப்புகளின் வழியேதான் கடலுக்குள் செல்லும் எனத் தெரிந்தும் இவ்வளவு தண்ணீரைத் திறந்துவிட்டது கொலைக்குற்றத்துக்கு ஒப்பானது.
  • பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஏனோதானோவென்று கட்டப்பட்டதால், வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கும் திறன் இன்றி உடைந்துபோனது.

05-jaya-govt-plansதமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் மதுராந்தகம் ஏரியைத் தூர்வாருவேன் என ஜெயா அளித்த வாக்குறுதி காற்றோடு போனதால், அந்த ஏரியிலிருந்து பல ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

  • ஆரணியாறு, திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு மற்றும் காஞ்சிபுரத்திலுள்ள நீர்நிலைகளைச் சீர்படுத்த தலா இரண்டே கால் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அப்பணிகள் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகளை செப்டம்பருக்கு முன்பு முடிக்கத் திட்டமிட்டிருந்தால், சென்னை இந்தளவிற்கு மிதந்திருக்காது.
  • தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் கால்வாயைக் கூவத்தில் இணைப்பது, வீராங்கல் ஓடையை பக்கிங்காம் கால்வாயுடன் இணைப்பது மற்றும் புதிய மழைநீர் வடிகால்களை உருவாக்குவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றுக்காக 1,448 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவை 25 சதவீதம் முடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பணிகளை தி.மு.க.வைத் தொடர்ந்து பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகளில் முடித்திருந்தால் இந்தளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனக் குற்றஞ்சாட்டுகிறார், சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
    இக்குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், வேளச்சேரி, தரமணி பகுதிகளில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை எனக் கூறுகிறார், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்.
  • மாநகராட்சியின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டரில் இருந்து 426 சதுர கிலோமீட்டராக அதிகரித்த பிறகு, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பணிகள் இதுவரை எந்தப் பகுதியிலும் முடிந்தபாடில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள், சென்னை புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள். (தினகரன்,21.11.2015, பக்.15)

நாலரை ஆண்டுகால அம்மா ஆட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது. இந்த அலட்சியத்தால் சென்னையில் மட்டும் கடலுக்குள் அனுப்பிவிட்டு இழந்த நீரின் அளவு 10 டி.எம்.சி. (1000 கோடி கன அடி) எனக் கூறப்படுகிறது. இதற்கு இணையான வெள்ளம் சென்னை நகரமெங்கும் தேங்கி நிற்கிறது. அ.தி.மு.க. தலைவியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏன் நடைமுறைக்கு வரவில்லை; திட்டங்கள் ஏன் மந்தமாக நடைபெறுகின்றன; நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏன் பல்லிளித்துவிட்டன என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அரசு பதில் சொல்ல மறுக்கிறது; வெள்ளம் குறித்து விவாதங்களை நடத்தும் தொலைக்காட்சிகளும் இந்தக் குறிப்பான விவரங்களுக்குள் செல்ல மறுக்கின்றன. அ.தி.மு.க. அரசின் இந்த அலட்சியம் முதன்மையாக விவாதிக்கப்பட்டிருந்தால், அம்மா ஆட்சி என்பது கமிசன் ஆட்சி என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கும்.

இது மொட்டையான குற்றச்சாட்டு அல்ல. அ.தி.மு.க.வின் கீழுள்ள சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால்களை அமைப்பதற்கு 22 காண்டிராக்டுகளும், ரோடு போடுவதற்கு 21 காண்டிராக்டுகளும் வெளிப்படைத் தன்மையின்றி மேஜை தீர்மானங்களாக (ஜெயா அறிவிக்கும் 110 விதி திட்டங்கள் போல) கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மண்டல நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளராக இருந்த அதிகாரி கடந்த மே 31 அன்று ஓய்வு பெற்றதால், அதற்கு முன்பே இலஞ்சத்திற்கு ஆசைப்பட்டு கூவம் சீரமைப்புப் பணிக்காக 60 கோடி ரூபாய் பெறுமான டெண்டரை முடித்திருக்கிறார். இந்தப் பணம் முழுவதும் வீணாகிவிட்டதாகவும், இதில் முக்கிய பிரமுகரின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் எழுதுகிறது, தினகரன். (23.11.2015, பக்.15)

வெள்ள நிவாரணப் பணிகள் போன்ற அவசர கால உதவிகளுக்காக அரசால் செலவிடப்படும் தொகை தணிக்கை செய்யப்படாது என்பதால், 23,000 பேர் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கணக்கு எழுதிவிட்டு, 15,000 பேரை மட்டும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஈடுபடுத்துவதாகவும்; 2,000 ரூபாய் கூலியாகக் கொடுக்க வேண்டிய பணியாளர்களுக்கு ஐநூறு ரூபாயும், பிரியாணி பொட்டலமும், குவார்ட்டர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்துவிட்டு மீதியை கமிசனாக அடித்துக் கொள்வதாகவும்; தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் பணிகளைக்கூட மாநகராட்சி செயதது போல கணக்குக் காட்டுவதாகவும் தினகரன் நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இவையெல்லாம், “ஒரு நல்ல வறட்சியை அனைவரும் வரவேற்கிறார்கள்” எனப் பத்திரிகையாளர் சாய்நாத் குறிப்பிட்டதை நினைவுபடுத்துகின்றன. வறட்சிக்குப் பொருந்துவது அ.தி.மு.க.வின் வெள்ள நிவாரணத்துக்குப் பொருந்தாதா?

மு திப்பு

______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

அடையாற்றின் கரையில் இரு துருவங்கள் !

1
ஆற்றின் கரையில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனை
miot-mgr-nagar-report-8
மியாட் மருத்துவமனையில் அருகில் அடையாறு

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் அடையாறை ஆக்கிரமித்து வானளாவ எழுந்து நிற்கும் மியாட் மருத்துவமனை 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை படுகொலை செய்த சுவடின்றி பளபளப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய மாநில அரசுகளின் சுண்டு விரல் கூட அதன் மீது படவில்லை.

மருத்துவமனை எதிர்கரையில் சென்னையின் மனித உழைப்பு சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் எம்.ஜி.ஆர் நகர் இருக்கிறது. சென்னை பூந்தமல்லி போரூர் – பரங்கிமலையை இணைக்கும் இந்த சாலையில்தான் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் இருக்கிறது. அதனாலேயே இந்த வட்டாரத்தில் அவர் மற்றும் அவரது தாயர் பெயரிலான நகர்கள், தெருக்கள் ஏராளம்.

miot-mgr-nagar-report-7
ஆதார் அட்டையுடன் டோக்கனுக்காக காத்திருக்கும் மக்கள்

அந்த விதிப்படி அடையாற்றின் கரையில் இருக்கும் இப்பகுதியும் எம்.ஜி.ஆர் நகரென்றே அழைக்கப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்ட  தினக்கூலிகள் வாழும் பகுதி இது. ஆற்றின் கரையான மண்மேடுதான் அவர்கள் வாழும் தெரு. எலி பொந்துகள் போல 300-க்கும் மேற்பட்ட வீடுகள். 10 X 12 அடிகள் கொண்ட சிமெண்ட் கொட்டைகைகள். ஒற்றைக்கல் செங்கல் வரிசைச்சுவர்தான் அதன் கட்டுமானம். புற்றீசல் போல அதில் அடைந்துவிட்டு விடியற்கலையில் பிழைப்பு தேடி எல்லா திசைகளிலும் ஓடுகின்றனர் இம்மக்கள்.

இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர்  திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னரே  பிழைக்க வந்தவர்கள். ஊரிலிருந்து கொண்டு வந்த மண்வெட்டியும் கடப்பாரையும் தான் இவர்கள் வைத்திருக்கும் ஒரே சொத்து. அது தான் பிழைப்பையும் தேடித் தந்தது. “இங்கு எழுந்து நிற்கும் எல்லா கட்டிடங்களும்  எங்கள் தாய் தகப்பன் கட்டியதுதான். இப்போது நாங்களும் அதே கல் மண்ணை தான் சுமக்கிறோம். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள் போல வாழ்கிறோம்.” என்று தாங்கள் கதையை மறக்க முடியாத துன்பியல் கனவு போல கூறுகின்றனர்.

மாரியம்மா

மாரியம்மாள்
மாரியம்மாள்

இவருடைய கணவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். மூன்று குழந்தைகள். …”மூத்த பொண்ணுக்கு இப்பதான் தலப்பெரசவம் ஆச்சு…மூணு மாச கைக்கொழந்த சார், இன்னும் பேருகூட வெக்கல…இப்பக்கி மாதவன்னு கூப்புடுறோம்…நாங்க ஒழுங்கா தூங்கி சாப்பிட்டு 2 மாதம் ஆச்சி..ஏதோ உசுரோடு இருக்கிறோம். போன மாசம் மொதோ வெள்ளத்துக்கு உசிரோட தப்பிச்சோம். ரெண்டாவது மழைக்கு சாமானெல்லாம் ஓட்டுமேல ஏத்திட்டு, அந்த டெலிபோன் கம்பெனி கட்டடத்துக்குள்ள தங்கிகிட்டோம்…வழக்கமா இப்படித்தான் தண்ணி ஏறும், அப்பால ரெண்டு நாள்ல வடிஞ்சுறும்….சரி மழதான் வுட்டுறுச்சேன்னு அடுத்த நாள் சாமானெல்லாத்தையும் எறக்கி வெச்சுட்டோம்…. மொதோ டைம் வெள்ளம் வந்தப்ப அதிகாரிங்க  வந்து காலி பண்ணச் சொன்னாங்க….1-ம் தேதி நைட்டு வெள்ளம் வரப்போறதப் பத்தி யாருமே எங்களுக்கு சொல்லலை. ராத்திரி 3 மணிக்கு திடீர்னு இடுப்பளவுக்கு தண்ணி ஏறுது. பசங்கெல்லாம் அலறுதுங்க! என்ன நடக்குதுன்னே எங்களுக்கு தெரியல.

வெள்ளம் வெள்ளம்னு மேட்டை நோக்கி பசங்கள தூக்கிட்டு ஓடுனோம். பக்கத்தில் கம்பெனிகாரங்க காம்பவுன்ட் கட்டல. அதனால அதுவுள்ள ஓடி தப்பிச்சோம். இல்லைனா மொத்த 1000 பேரும் சமாதி ஆயிருப்போம்….பொழச்சா போதும்னு கைப்புள்ளய தூக்கிகிட்டு பொருளெல்லாத்தையும் வுட்டுட்டு ஓடுனேங்க…எங்கோ ஒரு எடத்துல தடுமாறி விழுந்ததுல, கட்டவெரலுக்கு மேல ஒரு வெட்டு…என்னன்னு கூட பாக்க முடியல…ரெண்டு நாளக்கி அப்பறந்தான் புண்ணாகி போனத பாத்தப்ப தையல் போடச் சொன்னாங்க….உசுரு பொழச்சதே போதும், நம்மெல்லாம் தண்ணிலதான் வாழுறோம் இதுல தையல் வேறயான்னு போடல..ஒரு ஊசி மட்டும் போட்டுகிட்டேன்….ரெண்டாவது புள்ளக்கி கிட்னி ப்ராப்ளம் இருக்கு; அதுக்கு வைத்தியம் பண்ணி அப்பறம் கல்யாணம் பண்ணனும்னு கொஞ்ச கொஞ்சமா சேத்து வெச்சது, இப்ப உசுரத் தவிர ஒன்னுமே எங்ககிட்ட இல்ல”

பாஸ்டர் ரூசோ…கடந்த 15 ஆண்டுகளாக கிறித்தவ மத குருவாய் பணிபுரிகிறார். படிப்பறிவு உள்ளதால் டோக்கன் கொடுக்க வருபவர்களிடம் சிலருக்காக சிபாரிசு செய்து கொண்டிருந்தார்.  …” 15 வருசமா இங்க சர்ச் வெச்சுருக்கேன் சார், இன்னொரு சர்ச் ஒன்னும் இருக்குது…வீடு சக்தி நகர்ல ஒரு பிளாட்ல இருக்குது….சர்ச்சுக்குள்ள வெச்சுருந்த எல்லாமே போச்சு சார்…க்ளீன் பண்ணுறதுக்கே பத்தாயிரம் ரூபாய் ஆயிடுச்சு…”

நிவாரணப் பணியெல்லாம் எப்படி நடக்குது இங்க?

… “இங்க அரசாங்கம் செய்த ஒரே வேலை என்னான்னா 15 நாளைக்கி அம்மா உணவகத்திலேருந்து 3 வேளையும் சாப்பாடு கொடுத்தாங்க, மத்த எல்லா உதவியும் தன்னார்வக் குழுக்கள் எல்லாருமா சேந்து கொடுத்ததுதான்!”

இங்க உள்ளவங்க எதிர்காலமெல்லாம் என்னவாகும்?

“சார்! இங்க உள்ளவங்க இப்ப ரெண்டு விதமான மனக்குழப்பத்துல இருக்காங்க! ஒன்னு இங்க உள்ள வீட்ட செலவு பண்ணி புதுப்பிக்கிறதா இல்லயா? ரெண்டாவது அரசாங்கம் மாற்று வீடு தருவேன்னு சொல்லுதே, அது கெடைக்குமா, கெடைக்காதா?? மத்தபடி அவுங்ககிட்ட இப்ப எதுவுமே இல்ல…..

சார்…கேக்குறோமுன்னு தப்பா நெனைக்காதீங்க? ஆக்கிரமிப்பு கட்டிடத்த இடிக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லையா?

“…சார் நீங்க சொல்லுறது சரிதான் ஆனா அது எதிரே உள்ள அமிர்தானந்தமயி பள்ளிக்கோ அல்லது மியாட்டுக்கோ பொருந்துமான்னு சொல்லமுடியுமா?

ஏழுமலை-கலா தம்பதி

miot-mgr-nagar-report-25இவர்களுடைய வீடு ஆற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது…இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன்….கொத்தனார் வேலை பார்க்கிறார்….வெள்ளம் வந்த நாள் முதல் வேலைக்குச் செல்ல முடியவில்லை…இவர்களின் தற்போதைய வீடு மூடப்பட்டு கிடக்கின்ற டெலிபோன் கம்பெனியின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம். தனது தங்கை குடும்பத்துடன் மேலும் நான்கு குடும்பங்களுடன் அங்கே தங்கியுள்ளனர்.

வெள்ளம் குறித்துக் கேட்ட போது “சார், வூடு மொத்தமும் காலி, ஒன்னுகூட இல்ல, நல்லவேளையா கெளம்புறப்ப ரேசன் கார்டையும், ஓட்டர் ஐ.டி-யையும் எடுத்துகிட்டோம், கட்டிருக்குற இந்தத் துணிய விட்டா வேற எதுவும் இல்ல…..ரெண்டாவது மழ பேஞ்சப்ப பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல இருந்தோம்….பார்த்தா அடுத்த நாள் அங்கயும் தண்ணி ஏற ஆரம்பிச்சுடுச்சு, கழுத்தளவு தண்ணில பையன தலையிலயும், பொண்ண வலது தோள்பட்டையில ஏந்தி புடிச்சுகிட்டே தவழ்ந்து தவழ்ந்து டிரேட் சென்டர் பின்னாடி கேட்டு வழியா கண்டோன்மெண்ட்டு பள்ளிகூடத்துக்கு போயிட்டோம்…

சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணுறீங்க?

“தனியாரு ஆளுங்க வந்து 10 கிலோ அரிசியும் உப்பும் கொடுத்தாங்க, தெனமும் கஞ்சி தான்…புள்ளங்க வேற வெறும் கஞ்சி தானான்னு பொலம்புதுங்க. கையில அஞ்சு பத்து இருந்தா கொஞ்சம் வெங்காயம் தக்காளி வாங்கி தொக்கு பண்ணலாம்; அதுக்கும் வழியில்ல! இதுல இவனுக்கு வேற அம்மை போட்டிருக்கு; இத்தன கஷ்டத்துலயும் மாரியாத்தா எங்கள விட்டுப்போக மாட்டேங்குது….காலையிலேருந்து ஒரு வாழைப்பழம் கேக்குறான்; அதக்கூட வாங்கித்தர முடியுமா கெடக்குறோம்; நானும் காசு கேக்காத ஆள் பாக்கியில்ல! ஆனா ஒரு 10 ரூவா கூட கெடக்கல! இந்த நோவுல அவனுக்கு ஒரு இளநீர் கூட வாங்கித்தர முடியல!

எப்படி இவனுக்கு அம்மை போட்டிச்சு?

miot-mgr-nagar-report-1
அம்மை நோயுடன் சிறுவன்

“ இவுங்க அக்காகிட்டேருந்து ஒட்டிகிச்சு சார்… இன்னும் 10, 15 பேத்துக்கு இங்க அம்ம போட்ருக்கு சார்.

டோக்கன் குடுக்குறாங்களே வாங்கிட்டீங்களா?

“அதெல்லாம் வாங்கியாச்சு சார், என்ன பிரயோஜனம், செம்மஞ்சேரின்னு சொல்லுறாங்க! அங்க இத விட மோசம் சார்! அப்பால அது ரொம்பப் பள்ளம் சார்! இங்கேயே இருந்து 25 வருசத்துக்கும் மேல பழகிட்டோம்….வேலைக்கி போறதுக்கும் மத்த எல்லாத்துக்கும் இதுதான் வசதியா இருக்கு, இதுல திடீர்னு எடத்த காலி பண்ணச் சொன்னா எப்புடி சார்??…ஏற்கனவே சேத்து வெச்ச எல்லாமே போச்சுங்குற கவல! இதுல இத வேற இடிக்கபோறேங்குறாங்க! இதயெல்லாம் நெனச்சா கஞ்சி கூட உள்ள எறங்க மாட்டேங்குது!….

4, 5 வருசத்துக்கு முன்னாடி செம்மஞ்சேரில ஒரு புரோக்கர் நல்ல எடமா இருக்கு வாங்கிக்கங்கன்னு சொன்னான்; அத நம்பி ஒரு லட்சம் கிட்ட் பணத்தப் பொரட்டி ஒரு எடத்த வாங்கிப் போட்ருந்தோம்; இப்போ அந்த எடத்தயும் கெவர்மெண்ட் புடுங்கிகிச்சு சார்! மூத்த பொண்ண எப்படியோ கஷ்டப்பட்டு கட்டிக் கொடுத்துட்டோம்; சின்னப்புள்ளக்கி என்னத்த பண்ணப் போறோம்னே தெரியல! வேல வேற எங்கயும் கெடக்கல! கெடச்சா கூட அங்கயே தங்கனும்கிறான், இந்த நெலமையில எல்லாத்தயும் வுட்டுட்டு நான் மட்டும் எப்படி வேலக்கி போறது! வூட்டுக்காரம்மா வேற பொலம்பிகிட்டே இருக்குது! நமக்குத் தெரிஞ்ச எல்லாத்து கிட்டயும் சொல்லி வெச்சுருக்கேன்! பார்ப்போம் சார்!              “ என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்….

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ண மூர்த்தி “செக்கியூரிட்டி வேலை பார்க்கிறேன். வெள்ளத்தில் நாங்கள் தப்பிச்சுட்டோம். இப்போது புல்டோசோருகிட்ட மாட்டிக் கிட்டோம். எங்கள வெளியே வாறி கொட்டப் போறாங்களாம். கரையை கட்டபோகிறோம், காவாய் வெட்ட போகிறோம்னு எங்களை காலி செய்ய சொல்றாங்க. நந்தம்பக்கம் ஐ.டி.பி.எல் -லிருந்து மியாட், அம்மா அமிர்தானந்தமயி அகாடமி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டி.எல்.எப் என எல்லாரும் காவாயில் கட்டிருக்காங்க, காம்பவுண்ட்  போட்டிருக்காங்க. அவங்களுக்கு ஒரு  நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

ஆக்கிரமிப்பெல்லாம் இடிச்சிட்டா தண்ணீர் தாராளாமா ஓடும்; அப்புறம் எந்த பாதிப்பும் இருக்காதுன்னு கவர்மெண்ட் சொல்லுதே?

….”சார் அப்பெல்லாம் ஆறு அந்தப் பாறையா இருக்குற எடத்துல மட்டுந்தான் இருந்துச்சு… நாங்கெல்லாம் கோடையில காத்தோட்டமா இருக்கும்னு போயி படுத்துக்குவோம்….இந்த கத்திப்பரா பாலம் கட்டுனப்ப தான் இங்க இருந்த மண்ணெல்லாத்தையும் எடுத்து இந்த ஆத்தையே அகலமாக்கிட்டாங்க! அதுக்கு முன்னாடியெல்லாம் இந்த ஆறு குறுகலாகத்தான் இருந்துச்சு….இப்ப வெள்ளம் வந்து வீடெல்லாம் இடிஞ்சதுனால இவுங்களுக்கு இன்னும் வசதியாப் போச்சு…அப்பால அந்த பாழடஞ்ச டெலிபோன் கம்பெனிய இப்போ யாரோ அதிமுக விஐபி வாங்கியிருக்காராம்…அதனால தான் ரொம்ப சீக்கிரமா காலி பண்ணப் பாக்குறாங்க! கூடிய சீக்கிரமே இங்க எதவாது கம்பெனியோ, கட்டிடமோ வரலாம்”

சித்ரா
சித்ரா

சித்ரா

“ஓடி விளையாடும் வயசுல இங்க வந்தோம். இப்போ கல்யாணமாகி அதே வயசுல எங்களுக்கு குழந்தைங்க இருக்காங்க. நாங்க யாரும் ஓசியில் இங்கு இல்லை.  ஊர்  தலைவருங்கதான் இந்த இடத்தை மடக்கி எங்களுக்கு வித்தாங்க. குருவி சேர்க்குற மாதிரி சேர்த்து 20, 30 வருசத்தில் ஓலை வீட்டை சிமெண்ட் வீடா மாத்துனோம். இப்போது  எல்லாத்தையும் வெள்ளத்துக்கு வாரி கொடுத்துட்டோம். இப்போ எங்களையும் காலி பண்ணுங்கனு சொல்றாங்க. கட்டின துணியோட நாங்க எங்க போறது?

வாடகை வீட்டில் வசிப்பவர்

வாடகை வீட்டில் இருந்த எங்களுக்கு வழி தெரியல. சொந்த வீட்டுக்காரங்க டோக்கன் வாங்க அடிச்சிக்கிறாங்க. எங்களை எங்க தூக்கி போடப்போறாங்கனு தெரியலை. தெரியாத இடத்தில் நாங்க எப்படி போய் பிழைக்கிறது? கல்லு மண் தூக்குற வேலையை அங்க போய் யாருகிட்ட கேக்குறது. குழந்தைகள் படிப்புக்கு என்ன பண்றது, அவங்களுக்கு நோய் நொடி வந்தால் எங்க ஓடுறது. அவசரத்துக்கு பணம் யாரிடம் கேட்பதுன்னு ஒண்ணும் புரியவில்லை.

கண்ணன்,  நடக்க இயலாத மாற்றுத் திறனாளி

கண்ணன்
கண்ணன்

“20- வருசத்திற்கு முன்னாடி  கர்நாடகாவில் கள்ளுக்கடையில் வேலை செய்தேன். எங்க சித்தி வந்து “நம்ம ஊருக்கு வந்துருடா அது தருமவானுங்க ஊரு”-னு சொல்லி கூப்டுச்சி. அப்ப இங்க வந்தேன். எங்க பசங்க மியாட் ஆஸ்பிட்டல்ல, டிரேட் சென்டர்ல கூட்டிப் பெருக்குற வேலை வாட்ச்மேன் வேலை செய்யுறாங்க. இந்த வெள்ளத்துல எங்க உயிர் மட்டும் தான் பாக்கி. அதையும் இப்ப மவராசனுங்க புடுங்கி வெளியேத்திருவாங்க போல. இடத்த காலி செய்ய சொல்றாங்க.

சிறுவன் வல்லரசு உறவினர்களுடன்
சிறுவன் வல்லரசு உறவினர்களுடன்

வல்லரசு, 10 வது படிக்கும் சிறுவன்

“பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல். “போட்” வருதுனு சொன்னாங்க, எங்க பக்கம் ஒரு “போட்” கூட வரல. எல்லாரும் ஐ.டி.பி. எல் பங்களா பக்கம்  மட்டும்தான் சார் போனாங்க. பணக்காரங்களுக்கு மட்டும்தான் “போட்” குடுப்பாங்களா சார் எங்களுக்கில்லையா?

குழந்தைகளேல்லாம் அழுதுது சார். எங்க அப்பா எங்கள மரத்துல கயிறு கட்டி  அத புடிச்சி இழுத்து இழுத்து எங்கள காப்பாத்துனாரு சார். அவரு கட்டியிருந்த லுங்கி கூட தண்ணியில அடிச்சிருச்சு. துணியில்லாம நின்னுனு எங்கள காப்பாத்துனாரு.”

வல்லரசு பேசி முடிக்கும் போது அவனது கண்களில் கண்ணீர் தளும்பியது.

கரையில் அமைந்துள்ள அமிர்தாயினி அகாடமி
அடையாறின் கரையில் ஆக்கரமிப்புடன் எழுந்து நிறந்கும் அமிர்தாயினி அகாடமி

miot-mgr-nagar-report-10

miot-mgr-nagar-report-11

miot-mgr-nagar-report-12

ஆற்றின் கரையில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனை
ஆற்றின் கரையை ஆக்கிரமித்துள்ள மியாட் மருத்துவமனை
தேவி
தேவி
கரையின் மறுபுறத்திலுள்ள மேட்டுக்குடி பகுதி
கரையின் மறுபுறத்திலுள்ள மேட்டுக்குடி பகுதி

miot-mgr-nagar-report-15– வினவு செய்தியாளர்கள்

ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

0

அதிகாரத்தைக் கையிலெடு, ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறி! – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

1. சென்னை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக,

“முடங்கிப்போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!”

என்கிற முழக்கத்தின் கீழ் பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில், குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா தலைமை தாங்கினார்.

ndlf-chennai-demo-against-encroachments-01அவர் தனது தலைமையுரையில், “இந்த அரசுக்கட்டமைப்பு ஆளத் தகுதியிழந்து விட்டது என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தாக வரலாறு உண்டு.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா

அதையொத்த செயலாகத் தான் இந்த அரசு மழை வெள்ள பாதிப்பில் மக்கள் மாண்டு கொண்டிருந்த போது செய்தது. மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது. இந்த வக்கிரம் பிடித்த, ஆளத் தகுதியிழந்து விட்ட அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

மழை வெள்ளத்தில் மக்கள் தங்கள் உயிருக்காகவும் உடைமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருந்த போது, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தான் உதவி செய்தார்கள். அரசு செயலற்று முடங்கிப் போய் கிடந்தது. கலெக்டர், தாசில்தார், DRO, PRO இந்த வெங்காயமெல்லாம் ஒன்றும் செய்யாமல் செயலற்றுத்தான் கிடந்தது.

இந்தப் பேரிடருக்குக் காரணமே அரசு பின்பற்றி வரும் தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் தான். ஒவ்வொரு துறையும் தோற்றுப் போய் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவது தான் நாம் செய்ய வேண்டிய முதல் பணி. அதற்கு உழைக்கும் ஓரணியில் திரள வேண்டும்” என அறைகூவி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் தனது கண்டன உரையில், “மழை வெள்ளத்தைக் காட்டிலும் மிகக் கொடூரமானது அரசு என்பதை ஜெயா நிரூபித்துக் காட்டியுள்ளார். ஈழ மக்கள் படுகொலைச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அன்றைக்கு கூறியதைப் போலவே, மழை வெள்ளம் வந்ததால் மக்கள் செத்தார்கள் என்று ஆணவமாகப் பேசினார் ஜெயலலிதா. மழை வெள்ளத்தால் மக்கள் செத்துக் கொண்டிருந்த போது, மக்களைப் பார்த்து வாக்காள பெருமக்களே என்று அழைத்தது ஆணவத்தின் வெளிப்பாடே!

ndlf-chennai-demo-against-encroachments-08
மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசும்போது, 8-ம் வகுப்புப் பாடத்தில் வேலை மற்றும் காலம் குறித்த பாடத்தை படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இவர்தான் மக்களுக்கான முதல்வரா?

அரசே பல இடங்களில் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையே ஆற்றை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டிருக்கிறது. இது போல பல இடங்களில் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. மறுபுறத்தில் மியாட் மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை உள்ளிட்ட உயர்ரக சிகிச்சை தருவதாக மக்களிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்டு, காசு கொடுத்தால் கல்வியளிக்கும் ´கல்வி வள்ளல்களின்’ கல்லூரிகளும் ஏரி குளங்களை ஆக்கிரமித்துத் தான் கட்டப்பட்டிருக்கின்றன. ஜேப்பியார், ஏ.சி சன்முகம், போன்ற கல்வி முதலாளிகளின் ஆக்கிரமித்ததன் விளைவாகவே ஏரித் தண்ணீர் வீடுகளில் புகுந்துள்ளது.

இங்கு குமணன் சாவடியில் உள்ள பகவதி திரையரங்கத்துக்கு முன்னால் உள்ள குளத்தைக் காணவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சினிமாவில் நகைச்சுவைக்காக வடிவேலு கிணறைக் காணவில்லை என்று கூறுவதைப் போல இங்கு உண்மையிலேயே ஒரு குளத்தையே காணவில்லை என 11-வது வார்டு மக்கள் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டால், “எங்களுக்குச் சுரணை இல்லை, பணம் சம்பாதிப்பது மட்டும் தான் எங்கள் நோக்கம்” என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள் அதிகாரிகள். ஆணவப் பாசிச வக்கிர ஜெயா அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் இதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.

ஜெயலலிதா மட்டுமின்றி கட்சி பேதமின்றி அனைவருமே ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளனர். இதை மறைத்து கூட்டணி லாவணி பாடிக்கொண்டு திரிகின்றனர் ஓட்டுக்கட்சிகள். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் பிரச்சனை தீரப்போவதில்லை. காரணம் அரசு உழைக்கும் மக்களுக்கு எதிரானது. எனவே ஆளத் தகுதியிழந்து விட்ட அரசைத் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்” எனக் கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941

2. புதுச்சேரி

முடங்கிப் போய், ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புக்களைத் தகர்த்தெறிவோம்!

  • நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்து இயற்கைப் பேரழிவிற்குக் காரணமானவர்கள் தனியார் மட்டுமல்ல. மத்திய – மாநில அரசுகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகார வர்க்கத்தினரும், செயலிழந்து ஆள அருகதையற்றுப் போன தமிழக ஜெயா அரசும், புதுச்சேரி என். ஆர். அரசும் தான்!
  • ஜெயலலிதா அரசோ, என்.ஆர். அரசோ அல்லது வேறு எந்தக் கட்சியோ ஆக்கிரமிப்புக்களை அகற்றுவார்கள் என நம்புவது மூடநம்பிக்கையே!
  • போராடும் நாம், போராடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நாமே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மக்கள் அதிகாரத்தை நிறுவி, அதன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஒரே வழி!

ndlf-puduvai-demo-against-encroachments-2கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், மக்கள் உயிரிழந்து, வீடிழந்து, உடைமைகளை இழந்து பெருந்துயரத்திற்கு ஆளானார்கள். தலைமுறைகளாக உழைத்துச் சேர்த்த சேமிப்பு அனைத்தும் வெள்ளத்திலே பறிகொடுத்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப் பட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற இந்த ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கதினரும் வரவில்லை. முன் பின் முகம் தெரியாத சக மனிதர்கள் தான் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினர். அரசோ, வெள்ளத்தை ஏற்படுத்தி மக்களை நடைப்பிணங்களாக மாற்றி விட்டு தவறை மறைக்க நிவாரணம் என்ற பெயரில் வாய்க்கரிசி போட வந்தது.

இந்த கனமழைக்கும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்திற்கும், காரணமே ஆட்சியாளர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், செயல்படாத ஆளும் அருகதையற்றுப் போன இந்த அரசும் தான். இவர்கள் தான், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றவர்கள். ஆனால், இவர்களே, ஆறுகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்களை கார்ப்பரேட் – ஐடி பயங்கரவாதிகளும், கல்விக் கொள்ளையர்களும், மணல் மாஃபியாக்களும், ரியல் எஸ்டேட் கிரிமினல்களும், கொலைகார மருத்துவமனைகளும் ஆக்கிரமிக்க துணை நின்றவர்கள். இவர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என்று நம்பி மனு கொடுப்பதும், மன்றாடுவதும் பயனில்லை. இவர்கள் மக்களை ஆளத்தகுதியற்றவர்கள். இந்த அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புக்களும் செயலிழந்து, இற்றுப் போய் மக்களுக்கு எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டது. எனவே மக்களாகிய நாமே நமது அதிகாரத்தை நிலைநாட்டுவோம். ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து புதுச்சேரி பேருந்து நிலையப் பகுதியான சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ndlf-puduvai-demo-against-encroachments-4ஆர்ப்பாட்டத்திற்கான பிரசுரத்தை படித்த ஒருவர், “நமது பகுதியில் இது போன்ற ஒரு அருமையான பிரசுரத்தைப் போட்டு மக்களிடம் தருகிறீர்களா?” என்று கேட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகம் நின்று கவனிக்கும் வகையில் அமைந்த பழைய பேருந்து நிலையம் அருகே நடத்த திட்டமிட்டு போலிசு அனுமதி கோரியிருந்தோம். கடிதத்தை வாங்கிய போது எதுவும் சொல்லாத போலிசு, நிகழ்ச்சி நடத்த இரண்டு நாட்கள் முன், “நீங்கள் கேட்ட இடத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய கடிதம் கொடுத்துள்ளதால், வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தது. அதனால், அருகாமை மக்கள் கூடும் பகுதியான சுதேசி மில் அருகில் நடத்துவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக போலிசு அதிகாரியை நேரில் சென்று பேசப் போன போது, நாம் கேட்காமலேயே, இடத்தை மாற்றியதற்கான காரணமாக, “நீங்கள் 50 பேர் என்று சொல்லிவிட்டு, 200, 300 பேர் வருவீர்கள். அந்த இடம் போதாது போக்குவரத்து பாதிக்கப்படும்” என வலிய வந்து சொன்னார். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் 300 பேருக்கு மேல் சாதாரணமாகக் கூட முடியும் என்று சொல்லியும், மழுப்பலான பதில் சொன்னார். ஆனால், நாம் கடிதம் கொடுத்த பிறகு தான் திராவிடர் கழகத்தினர் கடிதம் கொடுத்ததும், நமது பிரச்சாரத்தின் வீச்சை முடக்க, போலிசு செய்த வேலை தான் இடத்தை மாற்றியது என்பதும் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், நமது ஆர்ப்பாட்ட இடத்திற்கு கூடுதல் போலிசைக் குவித்து, பயமுறுத்தும் வேலையையும் செய்தது.

ndlf-puduvai-demo-against-encroachments-3இந்த ஆர்ப்பாட்டத்தை, புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை ஏற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் விளக்கவுரையாற்றினார்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில், “மக்களுக்காகத் தான் இருக்கிறேன். மக்களின் முதல்வர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஆட்சியில் இருக்கும் ஜெயா அரசு, சாதாரண உழைக்கும் மக்களின் உயிரையும் வாழ்க்கையையும் பறித்துள்ளது. சிறுகச் சிறுக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்தவற்றையெல்லாம் பறிகொடுத்து நிர்க்கதியாக்க விட்டுள்ளது. அதனால், நாம் இந்த அரசை, கொலைபாதக, ஆணவ, ஆபாச- வக்கிர, பித்தலாட்ட, செயல்படாத, பார்ப்பன – பாசிச ஜெயா அரசு என்று சொல்கிறோம்.

தமிழகத்தின் ஜெயா மட்டுமல்ல, புதுச்சேரி என். ஆரும் இதில் சளைத்தவர் அல்ல. இங்கும் கூட ஆறு, ஏரி, குளங்கள், கால்வாய்களின் மேல் தான் பல தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், புதுச்சேரி அரியாங்குப்பம் பைபாஸ் சாலைக்காக, மக்களை வெளியேற்றி, அவர்களை சுண்ணாம்பாறு வடிகால் பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்தியதால், அந்த வெள்ளத்தினால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினர். இந்த லட்சணத்தில் அந்தக் குடியிருப்புக்குப் பெயர். என். ஆர். நகர்.

மேலும், சென்னையில் VGN ரியல் எஸ்டேட் கும்பல் அடையாறை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட உயர்தர அடுக்கு மாடிக் குடியிருப்பை திறந்து வைத்ததே கவர்னர் ரோசையா தான். உண்மை நிலைமைகள் இப்படி இருக்க, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் மாற்று இடம் கேட்டும் இந்த ஆட்சியாளர்களிடமும், அதிகார வர்க்கத்தினரிடமும் மனு கொடுப்பதும், கோரிக்கை வைத்து முறையிடுவதும் மூடநம்பிக்கை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களாகிய நாமே அதிகாரத்தைக் கையில் எடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதும், மாற்று இடங்களைத் தீர்மானிக்கவும் வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

விளக்கவுரையில் தோழர்.லோகநாதன், “ஒப்பீட்டளவில், சென்னை, கடலூரை விட புதுச்சேரியில் பாதிப்புகள் குறைவு. அதனால், இங்கு ஏன் இந்த விசயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று மக்கள் நினைக்கலாம்.” ஆனால் தமிழகத்தில் உள்ளதைப் போன்ற நீர்நிலை, நீர்வழித்தட ஆக்கிரமிப்புக்கள் இங்கும் தான் உள்ளது. சங்கராபரணி ஆற்றை ஆக்கிரமித்துள்ள அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் ஆச்சாரியா பள்ளி, கல்லூரிகள், பத்துக்கண்ணு கால்வாயைக் களவாண்ட போகோ லேண்ட் தீம் பார்க், ஊசுடு ஏரிக்கரை ஆக்கிரமிப்பில் உள்ள, ஜெகத்ரட்சகனின் லெட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, குளத்தையும், கால்வாயையும் விழுங்கிய என்.ஆர். காங்கிரசு பிரமுகர் சுகுமாறனின் மணக்குள விநாயகர் கல்லூரி, முதல்வர் ரங்கசாமியின் தொகுதிக்குள்ளேயே கதிர்காமம் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்திராகாந்தி மருத்துவமனை.” என்று பட்டியலிட்டார். “ஆகவே, இன்றைய தமிழகத்தின் நிலை நாளை புதுச்சேரியிலும் நிகழலாம். ஏனெனில் தமிழகத்தைப் போன்ற ஆட்சி தான் இங்கும் உள்ளது.” என்று பேச வேண்டிய அவசியத்தை விளக்கினார்.

ndlf-puduvai-demo-against-encroachments-1மேலும், “இங்கு பாதிப்புக்குள்ளான, நடேசன் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதி மக்கள் முதல் பொதுவாக அனைவருமே, அடித்தட்டு மக்கள் அடையாற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கருதுகிறார்கள். ஊடகங்களும் இதை தான் சொல்கின்றன. இவர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், மியாட்டும், குளோபல் போன்ற உயர்ரக மருத்துவமனைகளும், கார்ப்பரேட் – ஐடி கம்பெனிகளும், எஸ்.ஆர்.எம்., வேல்ஸ், வேல்டெக், ஜேபியார் கல்வி – பல்கலைக் கழக முதலாளிகளும், யார்? ஒண்டக் குடிசை போட்டு வாழ்வையே இழந்து நிற்கும் உழைக்கும் அடித்தட்டு மக்களா? தான் உட்கார்ந்து திண்ண ஊரையே அடித்து உலையில் போடும் இந்தக் கொள்ளையர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“பின் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள விஞ்ஞான வசதிகள் இருந்தும், அதைப் பயன்படுத்தி மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாமல், அதை அலட்சியம் செய்து மக்களை நிர்க்கதியாக்கியது. அதனால் தான் சொல்கிறோம். இந்த அரசு ஆளும் அருகதை அற்றுப் போய்விட்டது என்று. ஒருபுறம், மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத அரசு, மறுபுறம் வாழ்விழந்து உயிர்வாழ நிவாரணம் கேட்டுப் போராடினால் போலிசை வைத்து அடிக்கிறது. அதனால் தான் சொல்கிறோம். இந்த அரசு மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்று.”

“வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவி ஏரிகளையும் குளங்களையும், கால்வாய்களையும் பட்டா போட்டு விற்று, சென்னையை வீங்க வைத்ததால் தான் இந்த நிலை. ஆனால், இதை மறைத்து, மூன்றே நாளில் மூன்று மாதத்து மழை பெய்து விட்டதால் தான் காரணம் என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஜெயா. உண்மையில் இதற்கு முன் 2005-ல் ஒரே நாளில், 270 மிமீ-ம், 1976-ல் 450 மிமீ-ம், 1969-ல் 270 மிமீ.ம் மழை பெய்துள்ளது. அப்போதெல்லாம் வராத வெள்ளம் இப்போது மட்டும் வந்ததற்குக் காரணமே, அலட்சியத்துடனும், செயல்படாமலும் இருந்த ஜெயா அரசுதான்.” என்று உண்மை நிலையை தோலுரித்துக் காட்டினார்.

“ஆகவே, இந்த கனமழை, பெரு வெள்ளத்திற்குக் காரணமே, கார்ப்பரேட், கல்வி முதலைகளின் லாபவெறிக்காக, இயற்கையைச் சூறையாடி, நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்தது இந்த ஆட்சியாளர்களும், ஐ.ஏஸ். – ஐபிஎஸ். அதிகாரிகளும், ஆளும் அருகதையற்றுப் போன அரசும் தான்.” எனவே, இந்த ஆளும் அருகதையற்றுப் போன அரசை அகற்றி, அதிகாரத்தை மக்களே கையில் எடுத்து, ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!” என்று ,மக்களை அறைகூவி அழைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், “இப்படி விசயங்களைப் பேசிவிட்டுப் போவதால் நிலைமைகள் மாறிவிடப் போவதில்லை. செயல் வடிவம் கொடுக்கும் போது மாற்றங்கள் ஏற்படும் எனவே, பேசிய விசயங்களை செயலாக்கும் வகையில் முன்னுதாரணமாக, வருகின்ற 11.01.2016 அன்று எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புக்களான, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் உள்ள ஒரு ஆக்கிரமிப்பை மக்களே தமது அதிகாரத்தின் மூலம், அகற்ற உள்ளோம். இப்போராட்டத்தில் கலந்து கொள்ள உழைக்கும் மக்கள் திரளாக வர வேண்டும்.” என்று தொடர்பு எண்ணுடன் அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த செய்தி வாயிலாக மீண்டும் மக்களை அழைக்கின்றோம்.

தொடர்புக்கு,

தோழர். த. பழனிசாமி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்பு எண்: 9597789801

3. திருச்சி

முடங்கிப்போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் நடந்த ஆர்ப்பாட்டம்

காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் ராமசாமி தலைமை வகித்தார். தோழர் கோபி (ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர்), தோழர் பழனிச்சாமி (அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலர்) கண்டன உரையாற்றினர்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், “சமீபத்திய மழை வெள்ளம் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களை நீரில் மூழ்கடித்து நடுத்தெருவுக்குத் தள்ளியது. ஆயிரக்கணக்கான மக்களை காவுகொண்டது. இதற்கு நீர்வழித்தடங்களான ஏரிகள், ஆறுகள், குளங்கள் மீதான ஆக்கிரமிப்பும், ஆற்று மணல் கொள்ளயர்களும்தான் காரணம்.

ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் குடிசைகளையும், சாதாரண வீடுகளையும் மட்டும் குறிவைத்து இடித்து விட்டு கொக்கரிக்கிறது ஜெயா அரசு. பொத்தேரியை ஆக்கிரமித்த எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பச்சைமுத்துவின் புதிய தலைமுறை ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தியது. போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, வேல்ஸ் பல்கலைக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம், ஜே.பி.ஆர் பனிமலர், சத்தியபாமா ஆகிய கல்வி நிறுவனங்கள் ஏரிகள், ஆறுகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டன. இதெல்லாம் அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஏன்? அவை இவர்களின் அனுமதியோடுதான் கட்டப்பட்டிருக்கின்றன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் ஏரியின் மீதுதான் கட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளர்கள் கார்ப்பரேட்டுகளா? மக்களா? உலகத் தரம் வாய்ந்த மியாட், குளோபல் ஆகிய மருத்துவமனைகளும் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளன. குளோபல் மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெள்ள ஆய்வு என்ற பெயரில் தனது ஆக்கிரமிப்புகளை காப்பாற்றிக் கொண்டார்.

நாகிரெட்டி தோட்டப் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என துரத்தியபோது, மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை விரட்டியடித்துள்ளனர். எங்கள் வீடுகளை இடிப்பதற்கு முன்பு மியாட், குளோபல் மருத்துவமனைகளை இடி என்ற போராட்டம் நடத்தினர். அதிகாரிகளிடமோ, கவர்னரிடமோ மனு கொடுத்து பயன் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர். மாற்று இடத்தில் வீடு கட்டித்தரச் சொல்லி போராடுகின்றனர். ரேஸ் கோர்ஸ் மைதானம் 1000 ஏக்கர், கோல்ஃப் மைதானம் 800 ஏக்கரையும் இடம் காட்டியுள்ளனர்.

நிவாரணம் எது? அரசு கொடுக்கும் 5,000 10,000 அல்ல. கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், அதிகாரவர்க்கம், ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து தண்டிப்பதுதான் உண்மையான நிவாரணமாகும். இதுதான் நமது பாரம்பரிய நீர்நிலைகளையும், நமது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். இதற்கு மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்” என்ற தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் குத்புதீன் (சு.ப.தொ.பா.ச_ நன்றி கூறினார். கூட்டத்தின் இடைஇடையே மக்கள் கலை இலக்கிய மையக் கலைக்குழுவின் புரட்சிகரப் பாடல்கள் இடம்பெற்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

தோழர் சாய்பாபாவை விடுதலை செய்! – ம.க.இ.க

5

தோழர் சாய்பாபாவை விடுதலை செய்!

  • புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும்
    90 சதம் ஊனமுற்றவருமான டில்லி பேராசிரியர்
    தோழர் சாய்பாபாவுக்கு பிணை ரத்து!
  • அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
    நாக்பூர் உயர் நீதிமன்றத்தின் பாசிச உத்தரவு!
  • காவிப் பாசிசத்தை எதிர்த்துப்போராடுவோம்!
    சாய்பாபாவின் விடுதலைக்குக் குரல் கொடுப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

United Protest against the Re-arrest of Dr. GN Saibaba and the charge of contempt of court against Arundhati Roy

Date: Saturday, 2nd January 2016
Time: 12 noon onwards
Venue: Jantar Mantar, New Delhi

பேராசிரியர் சாய்பாபா
பேராசிரியர் சாய்பாபா (கோப்புப் படம்)

Dr. GN Saibaba, an English professor at Ram Lal Anand College of Delhi University, a democratic rights activist and a fierce critic of the regimes of exploitation and injustice, has yet again been subjected to the same life-threatening ordeal to which he was forced into after his abduction and arrest in May 2014. The prison condition had pushed him into life-threatening ailments and paralysed his left hand. It was only after sustained protests all over the country that the Division Bench of Chief Justice Mohit Shah and Justice B S Shukre granted him interim bail in June 2015. This meant he could avail necessary medical treatment. Now, when the treatment was on going, Dr. Saibaba has been ordered back into the same prison from which he was freed by the previous Bombay High Court order.

The growing intolerance of the state against voices that speak for the people is yet again exhibited by the current court order as it has initiated criminal proceedings for contempt against author Arundhati Roy. This was done citing her article in the magazine Outlook in May 2015 demanding release of Dr. Saibaba and for questioning judicial discrimination by citing the cases of granting bail to convicted mass murderers Babu Bajrangi and Maya Kodnani! In this time of growing fascism, it is imperative for all of us to rise against such measures of state repression. The only answer to growing repression is mass resistance. Let’s not keep silent. Let’s raise our voice in unison that we shall not let the State bury the voice of reason and compassion.

COMMITTEE FOR THE DEFENCE AND RELEASE OF DR. GN SAIBABA & DUTA in association with Aahwan, AISA, AISF, BAPSA, Bhor, BSCEM, Collective, CPIML (Liberation), CPIML (New Democracy), CPIML (New Proletariat), Disha, DSF, DSU, DTF, IFTU,IMK, JNUSU, JSM, JTSA, KNS, KYS, LSM, Marxwadi Vichar Manch, Morcha, NSI,Nowruz, Pachhas, PDFI, PMAP, RIB, Samajwadi Janparishad, Sangwari, Sanhati, SFI, TNM & others.

சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை

0

“உங்க ஃபிளாட் ஏரிக்குப் பக்கத்துலேயே இருக்கு. தண்ணிப் பிரச்சினையே இருக்காது என பில்டர் சொன்னதை நம்பி, பெரும் ஆசையுடன் லேக் வியூ ஏரியாவில் வீடு வாங்கினேன். அதன் ஆபத்தை இப்போது அனுபவிக்கிறேன்.”
– சென்னையின் புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கம் லேக் வியூ ஏரியா வாசியான அரவிந்தின் புலம்பல் இது. வழக்கமாக மழைக் காலங்களில் சென்னையின் கூவம், அடையாறு கரையோரங்களில் கேட்கப்படும் கதறலை இந்த மழைக் காலத்தில் மேட்டுக்குடியினர் வசிக்கும் பெரும்பாக்கத்திலும், வேளச்சேரியிலும், மேற்கு தாம்பரத்திலும், பழைய மகாபலிபுரம் சாலையிலும் கேட்க முடிந்தது.

மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனி
படகு விட்டு காப்பாற்ற வேண்டிய அளவி்ற்கு மூழ்கிப்போன மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனி (இடது).

50, 60 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட அரவிந்தின் வீடு ஏறக்குறைய வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அரவிந்தும், அவரது பிளாட்டில் வசிக்கும் மற்றவர்களும் ஒரு படகை வாடகைக்குப் பிடித்து வெளியேறித் தப்பித்துள்ளனர்.

அடைமழைக் காலங்களில் சென்னையில் கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட 150 இடங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையானது. ஆனால், இந்த மழையின்போது சென்னை மாநகரின் 15 மண்டலங்களும், அதன் புறநகர்ப் பகுதிகளான சோழிங்கநல்லூர், பனையூர்குப்பம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பலவும் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தனி தீவுகளாகின.

சைதாப்பேட்டை அடையாற்றின் ஓரத்தில் அழிந்துபோன ஒண்டுக் குடியிருப்புகள்
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கையின்றித் திறந்து விட்டதால், சைதாப்பேட்டை அடையாற்றின் ஓரத்தில் அழிந்துபோன ஒண்டுக் குடியிருப்புகள்

மேற்கு தாம்பரம், பெரும்பாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறடி உயரத்திற்கு ஏரி நீர் புகுந்தது. இந்தப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் தளத்திலும், “வில்லா” போன்ற தனி பங்களா வீடுகளிலும் வசித்தவர்கள் முதல்மாடிக்குச் சென்று உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

இந்த மழையால் வட சென்னையில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் பேர் ஏறத்தாழ அகதி நிலைக்குத் தள்ளப்பட்டதாக செதிகள் வெளிவந்துள்ளன. சென்னை – வில்லிவாக்கத்திலுள்ள சிட்கோ நகர் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏறத்தாழ 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டையும் இந்த வெள்ளத்திற்குத் தப்பவில்லை. இந்தப் பொருள் இழப்புகளுக்கு அப்பால், நாற்பது பேர் நவம்பர் இரண்டாவது வாரத்தில் பெய்த மழைக்குப் பலியாகியுள்ளனர்.

பழைய பெருங்களத்தூர்
வெள்ளத்தால் வீதிக்கு வந்த மக்களைத் தங்க வைக்க போதிய மையங்கள் ஏற்பாடு செய்யப்படாததால் அவர்கள் தெருவில் தஞ்சமடைய நேரிட்ட அவலம். (பழைய பெருங்களத்தூர்)

இது போன்ற மழைப் பொழிவு சென்னைக்குப் புதிது அல்ல. இந்தாண்டு நவம்பர் 9,10,11 தினங்களில் பெய்த மழையை (235 மி.மீ) விட அதிகமான மழை, 2005-அக்டோபர் 27-ம் தேதி ஒரே நாளில் 270 மி.மீ. பெய்திருக்கிறது. அதைவிட அதிகமாக 1969-ல் 280 மி.மீ. மழையும், 1976 நவம்பரில் 450 மி.மீ. மழையும் பெய்திருக்கிறது. எனவே, மூன்றே நாளில் கொட்டித் தீர்த்த மழையினால் சென்னை வெள்ளக்காடானது என ஜெயாவும் அவரது அடிவருடிகளும் கூறுவதற்குப் பின்னே, அ.தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தை, அதன் குற்றங்களை மறைத்துக் கொள்ளும் தந்திரம்தான் மறைந்திருக்கிறது.

“சென்னை நகரில் போடப்பட்டுள்ள 1,860 கி.மீ. தூரமுள்ள மழைநீர் வடிகால் கால்வாகளிலிருந்து 6,000 டன் கொண்ட சேறு மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதால், இந்த முறை பருவ மழையை எளிதாகச் சமாளித்துவிடுவோம்” என அறிவித்தது, சென்னை மாநகராட்சி (தினகரன், 17.11.2015). அது வடிகட்டிய பொய் என்பதை இந்த மழை அம்பலப்படுத்திவிட்டது.

அமைந்தகரை
ஆட்டோக்களில் (அமைந்தகரை) தஞ்சமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள்

அ.தி.மு.க. அரசின் இத்தகைய அலட்சியம் ஒருபுறமிருக்க, 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த சென்னை கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் 471 சதுர கிலோமீட்டராக வீங்கிப் போனதன் எதிர்விளைவாகத்தான் வெள்ளக் காடானது என்பதை இப்பொழுது மறுப்பவர்கள் யாரும் இல்லை.

“கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும், அரசுக் கட்டிடங்களும், விரைவுச் சாலைகளும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களே இராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு சென்னை மிதந்தது ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்கும்” என துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் குறிப்பிட்டார்.

ஏரிகள் அழிந்தன, சென்னை மிதந்தது

கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், ஊரப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும்; செம்பரம்பாக்கம், போரூர் ஏரி, மாம்பலம், நந்தனம் வடிகால் பகுதி நீரும்; மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உபரி நீரும்; வடசென்னை ஏரிப்பகுதிகளிலிருந்து வரும் உபரி நீரும் இணைந்து கால்வாகள் மூலம் அடையாறு ஆற்றை வந்தடைந்து கடலில் கலக்கும் விதமாக முந்தைய காலங்களில் நீர்வழித் தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் பகுதிகளிலிருந்து கால்வாய் வழித்தடங்கள் மூலம் வெள்ள நீர் தேங்காமல் ஆற்றை வந்தடையும் வகையில் இருந்தன (தின, 25.11., பக்.6). இந்தக் கட்டுமானத்தை அறுத்தெறிந்து, குற்றுயிரும் குலைஉயிருமாக்கிவிட்டது, சென்னையின் ‘வளர்ச்சி’.

அரசு, ரியல் எஸ்டேட்-கட்டுமான நிறுவனங்கள், தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் உற்பத்திசார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள், மத்திய மற்றும் உயர் வருவா பிரிவைச் சேர்ந்த புதுப் பணக்கார கும்பல் – இவர்கள்தான் சென்னையின் இரத்த நாளங்களாக இருந்த நீர்வழித் தடங்களை அழித்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

“1906-ம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டில் இந்த எண்ணிக்கை 43 நீர்ப்பிடிப்பு நிலைகளாகச் சுருங்கி, 90 சதவீத நீர்ப்பிடிப்பு நிலைகள் களவாடப்பட்டுவிட்டதாக”க் குறிப்பிடுகிறது ஓர் ஆய்வறிக்கை.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு
கழிவுநீர் கலந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள்.

பழைய சென்னையின் அடையாளங்களான மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி, சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை “லாங் டேங்க்” என்றழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்டமான ஏரியின் அழிவில்தான் உருவாகியிருக்கின்றன. இந்த ஏரி சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரை குதிரை லாட வடிவில் நீண்டிருந்ததோடு, அந்தந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதற்கு 1909-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழில் ஆதாரங்கள் உள்ளன.

1970-80 காலக்கட்டத்தில் உருவான முகப்பேர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும், 1990-களில் தனியார்மயம் புகுத்தப்பட்டபின் உருவான வேளச்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் பல்வேறு நீர் ஆதாரங்களை அழித்தும், ஆக்கிரமித்தும்தான் எழுந்து நிற்கின்றன. அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து 6,000 வீடுகளை அரசே கட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு “ஏரி ஸ்கீம்” என்ற நாமகரணத்தையும் சூட்டியிருக்கிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதியான வரதராஜபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்களை மீட்டு வர, கையில் மேப்புடன் வந்த பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வெள்ளத்தில் நீந்தி அந்தப் பகுதியை ஆராய்ய்ந்த பின்னர் இப்படிச் சொன்னார்கள்: “மேப்ல இருக்கிற மாதிரி ஆறோ, ஏரியோ தெரியல. எல்லாம் என்க்ரோச்மெண்ட் (ஆக்கிரமிப்பு), சந்து, வீடு, கால்வாய், டிரான்ஸ்பார்மர், டிரைனேஜ் இப்படித்தான் இருக்குது.” இதுதான் சென்னையின் இன்றைய நிலைமை. அரசிடம் உள்ள மேப்பில் ஏரியாக இருப்பது, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பாக, வில்லாக்களாக, மால்களாக, ஐ.டி. பார்க்குகளாக, புறவழிச்சாலைகளாக, மேம்பாலங்களாக உருமாறி நிற்கின்றன.

நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு முக்கியமானது. அவை தங்களது பரப்பளவைப் போல சுற்றுப்பகுதியில் பத்து மடங்கு பரப்பளவுக்கு நிலத்தடி நீரை வற்றாமல் பாதுகாக்கின்றன. வலசை செல்லும் பறவைகளுக்கு இனப்பெருக்க பூமியாகவும், ஏராளமான நீர்த் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் வசிக்கும் பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாந்த பகுதி இவை. நன்னீர் சதுப்பு நிலம் என்பது அரிதினும் அரிதானது. அப்படிபட்ட நன்னீர் சதுப்பு நிலமான பள்ளிக்கரணையை அரசும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஐ.டி. நிறுவனங்களும் கூறு போட்டு, அதன் பெரும்பகுதியை நாசப்படுத்திவிட்டன. (பார்க்க: பெட்டிச் செய்தி)

வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரிகளின் உபரி நீர் வீரங்கால் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குச் செல்லும். இந்த ஓடையின் பெரும்பகுதி இன்று காணாமல் போவிட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒருபுறம் நீரைச் சேமித்து வைத்துக் கொண்டு, மறுபுறம் உபரி நீரை சிறிது சிறிதாக ஒக்கியம் மடு வழியாக வெளியேற்றுகிறது. இப்படி வெளியேறும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. இந்த ஒக்கியம் மடுவை அடைத்து தனியார் பொறியியல் கல்லூரி கட்டிடங்களை எழுப்பி வைத்திருக்கிறது.

பொழிச்சலூர்
குட்டை போலத் தேங்கி நிற்கும் வெள்ள நீருக்குள்ளேயே வசிக்க வேண்டிய கட்டாயத்தில் பொழிச்சலூர் பகுதி மக்கள்.

389.47 ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருந்த வேளச்சேரி ஏரி புதிய குடியிருப்புகளாலும், ஃபீனிக்ஸ் (Phoenix Mall) மாலாலும், ரானே கம்பெனி, உணவு விடுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களாலும், 100 அடி சாலையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 85.8 ஹெக்டேராகச் சுருங்கிவிட்டது. 100.92 ஹெக்டேரில் விரிந்துகிடந்த ஆதம்பாக்கம் ஏரி 13.68 ஹெக்டேராகச் சுருங்கிக் கிடக்கிறது. இதன் எதிர்விளைவாகத்தான் படகு விடுமளவிற்கும், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் அளவிற்கும் வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

“அடையாறின் வெள்ள நீர் வடிநிலத்தின் மீதுதான் புதிய விமான நிலையம் எழுந்து நிற்கிறது. கோயம்பேடு வடிநிலப் பகுதி கோயம்பேடு பேருந்து நிலையமாகவும், கோயம்பேடு மார்க்கெட்டாகவும் உருமாறி நிற்கிறது. பக்கங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துதான் பறக்கும் ரயில் நிலையங்களும், அந்த ரயில் ஓடுவதற்கான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனால் அடையாறு முகத்துவாரத்திலிருந்து கோவளம் முகத்துவாரம் வரையிலான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயின் அகலம் 25 மீட்டரிலிருந்து 10 மீட்டராகக் குறுகிப் போனது.”

“தேசிய நெடுஞ்சாலை 45-ஐயும், தேசிய நெடுஞ்சாலை 4-ஐயும் இணைக்கும் சாலை கிழக்கில் வடியும் மழைநீரைத் தடுத்து அண்ணா நகர், போரூர், வானகரம், மதுரவாயில், முகப்பேர், அம்பத்தூர் போன்ற பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகள் நிரம்பிய பின் வெளியேறக்கூடிய உபரிநீர் கால்வாய்கள் மாயமாகிவிட்டன. விருகம்பாக்கம், பாடி, வில்லிவாக்கம் ஏரிகளுக்கான முக்கிய வெள்ளநீர் வடிநிலப் பகுதிகள் தூர்ந்து போய்க்கிடக்கின்றன” என சென்னையை வெள்ளக்காடாக்கிய காரணிகளைப் பட்டியல் இடுகிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.

“தற்பொழுது 471 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சென்னையை 1,171 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நகரமாகவும், அதன்பிறகு 8,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நகரமாகவும் வளர்ப்பதற்கான திட்டங்களை அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக”க் கூறும் தெற்காசிய நீர் ஆராய்ய்ச்சி நிறுவனத் தலைவர் ஜனகராஜன், “சென்னை மாஸ்டர் பிளான் இரண்டில் நீர் ஆதாரங்களைக் காப்பதற்கு எந்தத் திட்டமும் கிடையாது” என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். சென்னை நகர மக்கள் எதிர்காலத்தில் எத்தகைய பேரபாயத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவரது கூற்று எடுத்துக் காட்டுகிறது.

மழைநீர் வடியாமல் போனது ஏன்?

அம்பத்தூர் தொழிற்பேட்டை
வெள்ளக்காடான அம்பத்தூர் தொழிற்பேட்டையி்ன ஒரு பகுதி

சென்னையிலிருந்த நீர்நிலைகளுள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டதால், வெள்ளம், வறட்சி என்ற இரண்டு துயர்களை மாறிமாறிச் சுமந்து தீர வேண்டிய நிலையில் அந்நகர மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மழைக் காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கக்கூடிய நீர்நிலைகளை ‘வளர்ச்சிக்காக’ப் பலி கொடுத்துவிட்ட பிறகு, வெள்ள நீரைக் கடலுக்குள் கொண்டுபோய் சேர்ப்பதில் மட்டும்தான் அரசும், நிபுணர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காகவே சென்னையில் 1,860 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. “மழை நீரைச் சேமித்துவைக்க முடியாமல் அதனைக் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிட்டு, பிறகு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நாம் தீட்டிக் கொண்டிருக்கிறோம். எத்தகைய முட்டாள்தனம் இது” எனத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நிபுணர் ஒருவர் குத்திக் காட்டினார்.

“சென்னையிலுள்ள மழை நீர் வடிகால்களை ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு சுற்றும், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது சுற்றும் தூர்வார வேண்டும். வடிகாலின் மேற்பகுதியில் உள்ள நுண்துளைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த வடிகால்கள் வழியாகச் செல்லும் மழை நீர் சென்னையில் உள்ள 8 பிரதான கால்வாய்களில் போய்ச் சேர வேண்டும். மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அடையாறு, கூவம் உள்ளிட்டு இந்த எட்டு கால்வாய்களையும் மழைக் காலத்திற்கு முன்பு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் எம்.பி.விஜயகுமார் (குமுதம் ரிப்போர்டர், 01.12.2015). இவற்றுள் ஒன்றைக்கூட சென்னை மாநகராட்சி உருப்படியாகச் செய்யவில்லை என்பதை இந்த மழை எடுத்துக்காட்டிவிட்டது. சென்னையில் மழைநீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் 16 கால்வாய்களைத் தூர்வாரி பத்தாண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகிறது, தினமணி (24.11.2015)

“மழைநீர் வடிகால்களைத் தூர் வாராதது மட்டுமல்ல, அவை முறையாகவே கட்டப்படவில்லை” என்கிறார் பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புப் பொறியாளர் அ.வீரப்பன். “மழைநீர் வடிகால்கள் திட்டமின்றியும் தரக்குறைவாகவும் கட்டப்பட்டுள்ளன; அவ்வடிகால்கள் தானே ஓடக்கூடிய வாட்டத்துடன் கட்டப்படவில்லை; அவ்வடிகால்கள் அருகிலுள்ள கால்வாகள், கூவம், ஓட்டேரி நல்லா போன்ற கால்வாகள், சிற்றாறுகளுடன் இணைக்கப்படவில்லை” என அவர் மழைநீர் வடிகால்களின் தரத்தைப் புட்டு வைத்திருக்கிறார். (ஜூ.வி.29.11.15)

“மழைநீர் வடிகால்கள் அமைக்கும் முன்பு, அந்தப் பகுதியில் பருவ மழை காலத்தில் பெய்யும் மழையின் அளவு, மழைநீர் வடிகால் கால்வாயில் இணைக்கப்படும் வழித்தடம் மற்றும் எவ்வாறு அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பணிகளைச் செய்ய சென்னை மாநகராட்சியில் தனியாகப் பொறியாளர் குழு இருந்தது. இப்போது அந்தக் குழுவே இல்லை. அதனால்தான், தன் வாட்டத்தில் மழை நீர் வடிந்துவிடும் சாலைகளோ, தெருக்களோ, வடிகால்களோ அமைக்கப்படுவது இல்லை. கடமைக்காக, ஒப்பந்தம் கிடைத்துவிட்டது என்பதற்காக எதையோ செகிறார்கள். அதன் விளைவை – மழைநீர் வெள்ளமாகச் சாலைகளில் தேங்குவது; மழைநீரோடு கழிவு நீரும், மனிதக் கழிவுகளும் சேர்ந்து ஓடுவது – இப்போது மக்கள் அனுபவிக்கிறார்கள்” என்கிறார், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் ராமாராவ். (ஜூ.வி.29.11.15)

மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் புதிதாக அமைப்பதற்கும், பழையதைப் பராமரிப்பதற்கும் சென்னை மாநகராட்சி கடந்த மூன்றாண்டுகளில் கிட்டதட்ட 800 கோடி ரூபாய்யைச் செலவிட்டிருப்பதாக எழுதுகிறது, தினமணி (24.11.2015). மழைநீர் வடிகால்கள் முறையாக கட்டப்படுவதில்லை, முறையாக பராமரிக்கப்படவில்லை எனும்பொழுது, இந்தப் பணம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காண்டிராக்டர்கள் கூட்டணியின் பாக்கெட்டுகளைத் தவிர, வேறு எங்கு சென்றிருக்க முடியும்?

மழைநீர் வடிகால்கள் மட்டுமல்ல, சென்னையில் நீர் வழிந்தோடும் போக்குக்கு ஏற்ப சாலைகளும் அமைக்கப்படுவதில்லை. அதனால்தான் தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில்கூட மழைநீர் பெருமளவு தேங்குகிறது. “நீரோட்டத்தைக் கணக்கிட்டு குறிப்பிட்ட சாலையின் உயரத்தை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது என உத்தரவிட்டு, அதனை அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், இன்னும் 10, 15 ஆண்டுகளில் சென்னையின் புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கோயில்கள், மாநகராட்சி கட்டிடம், உயர்நீதி மன்றம், சாந்தோம் தேவாலயம் போன்றவை மழை நீர் தேங்கும் இடங்களாகிவிடும்” என எச்சரிக்கிறார், சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத் தலைவர் கோ.வெங்கடாசலம்.

முறையாகவும், தரமாகவும் கட்டப்படாத மழைநீர் வடிகால்களும், மழைநீரைக் கடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சென்னையின் 16 கால்வாய்களும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாத அவலம், நீர் வழிந்தோடும் போக்குக்கு ஏற்ப அமைக்கப்படாத சாலைகள் என்ற இந்த பலவீனமான அடிக்கட்டுமானத்தின் மேல்தான் பிரம்மாண்டமான மால்கள், மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், ஐ.டி. பூங்காக்கள், நூற்றுக்கணக்கான ஃபிளாட்டுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் சென்னையெங்கும் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கொளத்தூர், விநாயகபுரம், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் 50 இலட்சம் முதல் 75 இலட்சம் சதுர அடி வரையில் குடியிருப்புகளும், வணிகக் கட்டிடங்களும் கழிவு நீர், மழை நீர் வெளியேற்றும் கட்டுமானம் இன்றி உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த நவீனக் கட்டுமானங்கள் தமது கழிவு நீரைத் தாமே சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ப நிபந்தனைகளை விதிக்க அரசு மறுத்து வருகிறது. இத்தகைய நவீன கட்டுமானங்களுள் பெரும்பாலானவை நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, தமது மழை நீரையும், கழிவு நீரையும் வெளியேற்ற இந்தப் பலவீனமான கட்டுமானத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த நிலைமைகள்தான் மழைக் காலங்களில் சென்னையை ஒரு மாநரகமாக மாற்றுகின்றன.

– மு குப்பன்

***

ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

  • எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை சாராய உடையார் போன்ற கிரிமினல் கும்பல்கள் துணிந்து ஆக்கிரமித்துக் கொள்வதற்கு கால்கோள் நாட்டப்பட்டது. குறிப்பாக, சென்னையின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான 800 ஏக்கர் பரப்பு கொண்டிருந்த போரூர் ஏரியின் பெரும் பகுதியை, சாராய உடையார் குடும்பத்துக்குச் சோந்தமான ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்த்துக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். அவர் மறைந்த பிறகு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட எம்,ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆட்சியில் பொதுச்சொத்துக்களை ஆக்கிரமிக்கும் இந்தக் கொள்ளை அதன் உச்சத்தைத் தொட்டது.
    இந்த மழைக் காலத்திற்கு முன்பு போரூர் ஏரியின் 17 ஏக்கர் பரப்பை ஆக்கிரமிக்க முயன்ற ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் திருட்டுத்தனத்தைப் பொதுமக்கள் எதிர்த்து நின்று முறியடித்தனர்.
  • தமிழகத்தில் இந்து மதவெறிக் கும்பலுக்குப் பல்லக்குத் தூக்கிவரும் பச்சமுத்து நடத்திவரும் எஸ்.ஆர்.ஆம். குழுமக் கல்லூரிகள் பொத்தேரி முதலான பல ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஏரித் திருடனுக்குச் சொந்தமான “புதிய தலைமுறை” தொலைக்காட்சியோ சென்னை வெள்ளக் காடானதற்கு யார் காரணம் என்ற விவாதத்தை நடத்தியது.
  • இந்து மதவெறிக் கும்பலின் இன்னொரு அடிவருடியான ஏ.சி.சண்முகத்துக்குச் சோந்தமான சென்னை-மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
  • எம்.ஜி.ஆருக்கு கூஜா தூக்கி பிழைத்துவந்த மறைந்த திரைப்பட நடிகர் ஐசரிவேலன் மகன் ஐசரி கணேஷுக்குச் சோந்தமான வேல் பல்கலைக்கழகம் பல்லாவரம் ஏரியை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.
  • பெரும்பாக்கம் ஏரியையும் அதைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துதான் குளோபல் மருத்துவமனை மற்றும் விப்ரோ, ஹெச்.சி.எல். உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டிடங்களும், மேட்டுக்குடியினர் வசிக்கும் வில்லா வகையிலான வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
  • பெரும்பாக்கம் ஏரி அருகில் இந்தியா புல்ஸ் என்ற பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கிறது. பெரும்பாக்கம் ஏரி நிரம்பினால் அதன் உபரி நீர் இந்தியா புல்ஸ் குடியிருப்பு வழியாகத்தான் வெளியேற வேண்டும். ஆனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய நிறுவனம் அக்குடியிருப்பைச் சுற்றி சுவர் எழுப்பியதால், வெள்ள நீர் மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டது. இந்த இடங்களில் எல்லாம் 6 அடி முதல் 10 அடி வரை வெள்ள நீர் தேங்கியிருந்தது.
  • வேளச்சேரியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான போனிக்ஸ் மால் 10 ஏக்கர் அளவிற்கு ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு 100 ஏக்கர் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. ஜெயா-சசி கும்பல் வாங்கியிருக்கும் லுக்ஸ் திரையரங்குகள் இந்த மாலில்தான் அமைந்துள்ளன.
  • பன்னாட்டு கார் கம்பெனியான ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை இரண்டு குளங்களையும், மஹிந்திரா சிட்டி மூன்று குளங்களையும் தூர்த்து அமைந்துள்ளன.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஹுண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.
  • 2006 வரை விளைநிலங்களாகவும் ஏரிகளாகவும், நீர்பிடிப்புப் பகுதியாகவும் இருந்த ஒரகடம் இன்று டெம்லர், பென்ஸ், ரெனோ நிசான் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
  • நிர்வாகத்தின் அலட்சியத்தால் 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துபோன மியாட் மருத்துவமனை மணப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

தனியாருக்குப் பட்டா போடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

250 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீருக்கான வடிகாலான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 50 சதுர கிலோமீட்டர் பரப்புக்குத் தண்ணீருடன் பரந்து கிடந்தது. ஆனால், இன்று அச்சதுப்பு நிலம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் வெறும் 4.3 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிக் கிடக்கிறது. இச்சதுப்பு நிலத்தை இரண்டு கூறாகப் பிளந்துகொண்டு இரண்டு முக்கிய சாலைகள் – சோழிங்கநல்லூர்-பல்லாவரம் இணைப்புச் சாலை மற்றும் வேளச்சேரி-தாம்பரம் சாலை – அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சின்னச் சின்ன மதகுகள் மழை நீரை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் போதுமானவையாக அமையவில்லை. இந்த சாலைகள் அமைக்கப்பட்டதால் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு, அது ரியல் எஸ்டேட் முதலைகளின் ஆக்கிரமிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள்தான் “சென்னை ஒன்” என்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா, சி.டி.எஸ். நிறுவனக் கட்டிடம், காமாட்சி மருத்துவமனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் மீது கட்டுமானங்களை அமைப்பதால் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடும் பணிகளைச் செய்யும் மைய அரசு நிறுவனமான தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இச்சதுப்பு நிலத்தின் விளிம்பில்தான் அமைந்திருக்கிறது. இச்சதுப்பு நிலத்தின் வடபகுதியை சென்னை மாநகராட்சி குப்பைக் கூளங்களைக் கொட்டித் தூர்த்துவிட்டது. இதனால் சதுப்பு நிலத்தின் 80 ஹெக்டேர் பரப்பளவு பாழ்பட்டுப் போய்விட்டது.

______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!

4

புலிகேசி 30% இனாமை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு குளிர்பானங்களான “அக்கமாலா”, “கப்சி”யை உள்ளூரில் அறிமுகப்படுத்தும் பொழுது “விளம்பரப்படுத்தினால் நம் ஊர் மக்கள் ஆட்டு மூத்திரத்தையும் சுத்த இளநீர் என்று ஒருகை பார்த்து விடுவார்கள்” என்று உற்சாகமாக கூறுவார்.

அமேசான்
எருவாட்டி விற்க பன்னாட்டு நிறுவனம் “அமேசான்”

ஆனால் நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் விளம்பரப்படுத்தவெல்லாம் தேவையில்லை. மூத்திரம் என்ன? சாணியே கூட விற்கலாம் என்றளவிற்கு வந்துவிட்டது.

E-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் எருவாட்டி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம். இதுபற்றிய செய்தி 29-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வந்திருக்கிறது.

இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.

மோடி இலண்டன் பயணத்திற்கும் துருக்கியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கும் செல்வதற்கு முன்பாகத்தான் 15க்கும் மேற்பட்ட துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்திருந்தார். அவற்றுள் பாதுகாப்பு, கட்டுமானம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பண்பலை வானொலி, தனியார்வங்கிகள் மற்றும் உற்பத்தி துறை ஆகியவை அடங்கும்.

உற்பத்தித் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மேக்-இன்-இந்தியா திட்டத்திற்கு முரணாக இருக்கிறதே என்று விகாஸ் தூத் போன்றவர்கள் ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரையெல்லாம் எழுதினார்கள்.

ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் சாணி விற்பனையில் அமேசான் இறங்கியிருப்பதைப் பார்க்கும் பொழுது புலிகேசியை விட மோடி எவ்வளவு சமயோசிதமாக சிந்தித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

சாணியும் இங்கே கிடைக்கிறது. உமியும் இங்கே கிடைக்கிறது. இரண்டையும் பயன்படுத்தி எருவாட்டி தயாரிப்பில் அமேசான் ஈடுபடுவதன் மூலமாக அதுவும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் ஒரு கச்சிதமான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல. சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதா (GST Bill- Goods and Services Tax Bill) வரவிருக்கிறது. இது பொருள்களுக்கு விதிக்கப்படும் மறைமுகவரியை ஒழுங்குபடுத்துவதுடன் இதுவரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை தளர்த்தி நாடெங்கிலும் மையப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறையைக் கொண்டுவரப்போகிறது.

சில்லறை வணிகம்
இந்திய சில்லறை வணிகத்தை கைப்பற்ற பன்னாட்டு மூலதனம்

இதன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாடுகள் போடும் சாணி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட போகிறது. அதாவது சாணியின் மீது இனி எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது.

மாநிலத்தின் சுயாட்சி என்பது சாணியளவுக்கும் கீழே போய்விட்டது. இதைத்தான் நாம் அரசுக்கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

நிலைமை இப்படியிருக்க நம்மூர் அரசியல்வாதிகள் அடுத்த ஆட்சி, மக்கள் நல கூட்டியக்கம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொற்கால ஆட்சி, ஊழலற்ற ஆட்சி என்று சொல்பவர்களிடம் நாம் கேட்க வேண்டிய எளிய கேள்வி. உன்னால் தமிழ்நாட்டின் சாணியை ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற துப்பிருக்கிறதா? என்பதுதான்.

ஏனெனில் எருவாட்டி, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படப் போகிறது. இதனால் எருவாட்டியை வாங்குகிற ஆன்லைன் நுகர்வோர்கள் இணைய சேவை வரியை மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு வழங்குவார்களே தவிர, சாணிக்கும் மாநிலத்திற்கும் நுகர்வோருக்கும் மத்தியில் அதனை விற்பனை செய்யும் அமேசானைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

இதை போகிற போக்கில் படிக்கிறவர்கள் எருவாட்டி கூடவா இந்தியர்களுக்கு உருவாக்கத் தெரியாது என்று கேட்கலாம். இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது என்று சொல்லித்தான் வெள்ளைக்காரன் ஆட்சி புரிய சொல்லிக்கொடுத்தானாம். உங்களுக்கு சாணி தட்டவும் தெரியாது என்று அமேசான் சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

என்னதான் இருந்தாலும் சாணி-ஆன்லைன்வர்த்தகம்-அமேசான் ஒன்றும் புரியவில்லையே மன்னா? என்கிறீர்களா? கொஞ்சம் உள்ளே என்னதான் இருக்கிறதென்று பார்ப்போம்.

செய்தி ஒளிபரப்புத் துறை
ஒளிபரப்புத் துறையையும் விட்டு வைக்கப் போவதில்லை.

ஆன்லைன் வர்த்தகம் என்பது தொழில் நுட்பத்தால் விளைந்த மகசூல் அல்ல. மாறாக மடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவம் மூச்சுவிடுவதற்கு கண்டுபிடித்த உத்தி. தரகு முதலாளித்துவத்தின் அழுகி நாறும் வடிவம் தான் ஆன்லைன் வர்த்தகம். இங்கு உற்பத்தியாளன் என்று யாரும் கிடையாது. நுகர்வோரையும் விற்பவரையும் இணையத்தில் இணைத்துவிட்டு, கமிசன் தொகை மூலமாக மட்டுமே கொள்ளையிடும் முறைதான் ஆன்லைன் வர்த்தகம்.

இதை இரு எடுத்துக்காட்டுகள் மூலமாக பார்ப்போம். நம்மூர் விவசாயி நிலத்திலே கத்தரிக்காய் போட்டு சந்தைக்கு கொண்டு வந்து கத்தரிக்காய் விற்பதன் மூலம் என்ன செய்கிறார்? அதற்குண்டான பணத்தை பெற்றுக்கொண்டு தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்குகிறார். ஆக இங்கு இருக்கும் தொடர்பு பண்டம்-பணம்-பண்டம் என்பதாகும். பணத்தின் பயன்மதிப்பு பண்டமாக இருக்கிறது.

ஆனால் அமேசான் என்ன செய்கிறது? இந்தியாவில் பணத்தைக்கொண்டு வந்து முதலீடு செய்கிறது. முதலீடு என்றால் எத்தகைய முதலீடு? இந்தியாவில் உள்ள சிறுவணிகர்களுக்கு கந்துவட்டிக்கு கடன் கொடுக்கிறது. 2011 வரை இப்படி அமேசான் 6.4 கோடி டாலர்களை மூன்றிலிருந்து ஆறுமாதக் கடனாக 1,000 டாலர் முதல் 6 லட்சம் டாலர் வரை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 30,000 சிறுவணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் அமேசான் பிடிக்குள் வந்துவிட்டிருக்கின்றன.

“ஸ்னாப்-டீல்” என்ற மற்றொரு ஆன்லைன் சந்தை நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 1.5 லட்சம் வியாபாரிகள் சிக்கியிருக்கிறார்கள். சுதந்திர பொருளாதாரம் என்று மேதைகள் விடுகிற கதை முதலாளித்துவ ஏகபோகமின்றி வேறில்லை என்பதற்கு பதினோரு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐனூற்றி அறுபத்து ஆறுவது சான்று இது. சரி இருக்கட்டும்.

அதாவது அமேசான் வியாபாரத்தை பண்டத்திலிருந்து அல்ல பணத்திலிருந்து தொடங்குகிறது. இத்தகைய உறவு பணம்-பண்டம்-பணம் என்பதாக இருக்கிறது. அதாவது பணத்தை வைத்துக்கொண்டு பணம் பார்ப்பதற்காக பண்டத்தை (சாணியை) வாங்கி பணம் உருவாக்கும் உறவு முறை. முதலாளித்துவம் இப்படித்தான் தன்னளவில் ஆரம்பித்தது. இப்பொழுது கதை அதுவும் அல்ல.

உலகப்பொருளாதாரமே ஒட்டுமொத்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் மேலும் மேலும் உலகமயமாக்கப்படுகிறது. எஞ்சியிருக்கிற இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதரங்களையும் கசக்கி பிழிந்து காசு பார்த்துவிட்டு ஓடிவிட துடிக்கும் வெட்டுக்கிளி மூலதனம் தான் இன்றைய உலகம்.

சனிப்பிணம் தனியே போகாது என்பதற்கேற்ப அனைத்து மக்களையும் கோழிகளாய் தனது பாடையில் சேர்த்துக் கட்டிக்கொண்டு போக எத்தனிக்கும் முதலாளித்துவம் இது.

மேக் இன் இந்தியா
“மேக் இன் இந்தியா” – சாணி விற்க வெளிநாட்டு கம்பெனி

ஏற்கனவே அமேசான் உலக வல்லாதிக்கமான அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 2 லட்சம் பேரின் வேலையைப் பறித்திருக்கிறது. வால்மார்ட்டிற்கு எதிராக அமெரிக்க மக்களே கருப்பு வெள்ளியை அனுசரித்திருக்கிறார்கள். சீனாவின் சந்தை சீட்டுக்கட்டாய் சரிந்த பொழுது அலிபாபா வெறும் 500 கோடி டாலர்களுக்கு ஸ்னாப்-டீலின் பங்குகளை இந்தியாவில் வாங்க பேரம் பேசியது.

நிற்க இடமில்லாமல் தவிக்கிற ஏகபோக முதலாளித்துவம் இந்தியாவில் ஏகாதிபத்தியமாய், கோதுமை நாகங்களாக சுற்றி வளைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் சில்லறை விற்பனை துறை தற்பொழுது 56,000 கோடி டாலரிலிருந்து 2016-ல் 1.3 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்று கணக்கு போடப்படுகிறது. சிறு வியாபாரிகளை துரத்தி விட்டு இந்த சந்தையை கைப்பற்ற அமேசான் முதலான ‘சாணி விற்கும்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.

மாறாக இந்த ஆன்லைன் வர்த்தகம் தோற்றுவித்திருக்கும் புற சூழ்நிலையில், மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் எந்தவொரு விதமான சாதக சூழ்நிலையும் இல்லை.

மேலிருந்து கீழாக பார்க்கிற பொழுது, எப்பொழுதெல்லாம் பொருளாதார தேக்கம் ஏற்படுகிறதோ அப்பொழுதிருந்தே முதலாளிகள் மூலதனத்தை பாதுகாக்க பல்வேறு திருட்டுத்தனங்களை புரிகின்றனர். 2008 பொருளாதார பெருங்குமிழி வெடித்த பொழுது, முதலாளிகள் ஒன்று தங்களது நிறுவனங்களின் பங்குகளை தாங்களே வாங்கி குவித்தனர்; அல்லது தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனிகளை சூறையாடினர். இதனால் ஏகபோகம் மேலும் இறுகிப்போனது. இதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் தோற்றுவாய்க்கும் வீழ்ச்சிக்கும் கட்டியம் கூறுவதாக இருக்கிறதென்று சொல்கிறார்கள் பொருளாதாரவாதிகள்.

27-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த கட்டுரை ஆன்லைன் வர்த்தகத்தின் குமிழி பெருவெடிப்பை எடுத்துக்காட்டும் சமிக்ஞைகளை தெளிவாக காட்டியிருப்பதை தேர்ந்த வாசகர் இனம் கண்டுகொள்ள முடியும்.

Merger and Acquisition (இணைத்தலும், கையகப்படுத்தலும்) என்ற பெயரில் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய கும்பலும் நடத்தும் ஊழிக்கூத்துகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன்படி

வால்மார்ட்
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் படையெடுப்பு
  • பியூச்சர் குழுமமும், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
  • Gap and Aeropostale போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கின்றன. Gap and Aeropostale அரவிந்த் பிராண்டுகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
  • அமேசான் சாணி விற்பதோடு செங்கல் வியாபாரத்திலும் இறங்கியிருக்கிறது.
  • ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா நுவாவும் மதுரா கார்மென்ட்சும் இனைக்கப்பட்டு பாண்டலூன் பேசன் கம்பெனியாக மாற்றப்பட்டிருக்கிறது.
  • கூடவே ஆதித்யா பிர்லா குழுமம் ஜூபிலியண்ட் தொழிற்குழுமத்தை வாங்கியிருக்கிறது.
  • ஸ்வீடன் நாட்டு பன்னாட்டு நிறுவனமான Hennes and Mauritz (ஹென்னஸ் மவுரிட்ஸ்) இந்தியாவெங்கும் 50 கிளைகளை திறக்கப்போகின்றது.
  • ஏற்கனவே ஸ்வீடன் நாட்டின் ஐக்கியா (IKEA) ஹைதராபாத்தில் மிகப்பெரும் சேகரிக்கும் கிடங்கிற்கான நிலத்தை வாங்கியிருக்கிறது. சில்லறை வணிகத்தில் ஈடுபட உ.பி மாநிலத்தோடு புரிந்து உணர்வு ஒப்பந்தங்களும் போட்டிருக்கிறது.
  • “பிளிப்-கார்ட்” மற்றும் “ஸ்னாப்-டீலு”க்கு போட்டியாக அம்பானி மற்றும் பிர்லா குழுமம் சூப்பர் மார்கெட்டிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு வந்திருக்கின்றனர்.

மேற்கண்ட அனைத்துவிதமான எடுத்துக்காட்டுகள் பல்வேறு கம்பெனிகளை இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மறுகாலனியாதிக்கத்தின் சுருக்குக் கண்ணி மிகத் தீவிரமடைவதை எடுத்துக்காட்டுகின்றன. நாட்டின் சிறுவணிகம் துரிதமாக அழிக்கப்பட்டு ஏகபோகமாக எவ்வாறு சாணியைக் கூட விட்டுவைப்பதில்லை என்பதற்கு தெளிவான சான்றுகளாக இருக்கின்றன.

இதையே கீழிருந்து மேல் நோக்கி பார்க்கும் பொழுது ஆன் லைன் வர்த்தகம் தொழிலாளிகளின் நிலைமைகளை மோசமாக்கி இருண்டகாலத்திற்கு கொண்டு போகிறது. சான்றாக, ஆன்லைன் வர்த்தகம் வெற்றி பெறவேண்டுமானால் மிகக் கேவலமான முறையில் தொழிலாளிகள் சுரண்டப்பட்டால் அன்றி சாத்தியமில்லை.

ஏற்கனவே “பிளிப்-கார்ட்”டின் டெலிவரி செய்யும் 400 லாரி ஓட்டுனர்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த ஓட்டுனர்களின் சம்பளம் 21,000 ரூபாய் மட்டுமே. லாரிக்குத் தேவையான எரிபொருள் 6,000 இதிலிருந்தே செலவிட வேண்டும்.

அமேசான் கம்பெனி பொருட்களை டெலிவரி செய்யும் 4800 மோட்டார் சைக்கிள் தொழிலாளிகளும் பல்வேறுவிதமாக கசக்கிப்                                                                     பிழியப்படுகின்றனர்.

பன்னாட்டு கம்பெனிகளின் கிடங்குகள் என்பது மாட்டுக்கொட்டகையை விட மிகவும் கேவலமாக இருப்பதாக சொல்கிறார்கள். இங்கிருந்துதான் செல்போன் ஆர்டர் செய்தாலும் டிவி ஆர்டர் செய்தாலும் பொருட்களை ஏற்றி இறக்கி டெலிவரி செய்யும் வேலையாட்கள் மிக மோசமாக சுரண்டப்படுகிறார்கள். இவர்களின் வேலை அமைப்பு என்பது 8,500 ரூபாய் சம்பளம், ஐந்து நாள் வேலை, பத்து-12 மணி நேர வேலை என்பதாகவும், கிடங்கில் பொருட்களை வகை பிரிப்பதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 150-லிருந்து 200ஆகவும் இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

மேலும் அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகளோடு இந்திய தரகுமுதலாளிவர்க்கமும் பார்ப்பனிய சாதியும் எவ்வாறு இறுக்கமாக பிணைந்திருக்கின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும்.

சான்றாக, டெல்லியில் உள்ள அமேசான் பொருட்கள் வைக்கும் கிடங்கில் (Warehouse) 1600 தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். இதில் 300 லிருந்து 400 பேர் அமேசான் செல்லர் சர்வீசஸ் எனும் ஒப்பந்த நிறுவனம் மூலம் அமர்த்தப்படுகிறார்கள். மீதியுள்ள தொழிலாளிகள் இந்திய தரகு ஒப்பந்த நிறுவனமான ஓம் எண்டர்பிரைசஸ் மூலமாகவும் சிப்பி மூலமாகவும் பணியமர்த்தப்படுகின்றனர். இதில் ஓம் எண்டர்பிரைசஸ் நடுத்தரவர்க்கம் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் “மைன்த்ரா” (Myntra) எனும் பன்னாட்டு கம்பெனிக்கும் “பிளிக்-கார்ட்” கம்பெனிக்கும் ஆள்பிடிக்கும் வேலையை சேர்த்தே செய்து தருகிறது. இதில் அமேசான் கம்பெனிக்கு தேவையான துப்புரவுத் தொழிலாளிகள் 70 பேர் ஸ்பைப்பி நிறுவனம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஏகாதிபத்தியம் இங்குள்ள பார்ப்பனிய சாதியமைப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஒட்டச் சுரண்டுகிறது. இதுவன்றி 1.3 லட்சம் கோடி டாலர் ஆன்லைன் வர்த்தகம் சாத்தியமில்லை.

இது தான் மேக் இன் இந்தியா. ஏகபோகத்தை இறுதியாக உறுதி செய்வதுதான் இதன் நிகழ்ச்சி நிரல். தோற்று வீழ்ந்து போன்ற இந்த அரசுக் கட்டமைப்பு வேறு எப்படியும் இருக்க இயலாது என்பதற்கு இது வகைமாதிரி. இனி நாம் செய்ய வேண்டியது, இதை அகற்றிவிட்டு மக்கள் அதிகாரத்தை எப்படி நிறுவப்போகிறோம் என்பதே.

– இளங்கோ

இது தொடர்பான செய்திகள்

 

சென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் !

3
ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.

முடங்கிப் போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்! மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சமீபத்திய மழை-வெள்ளம் நமது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் அடித்துச் சென்று விட்டது. கொலை பாதக, ஆணவ, ஆபாச-வக்கிர, பித்தலாட்ட-செயல்படாத, பார்ப்பன-பாசிச ஜெயலலிதா அரசியன் அலட்சியத்தால் முன்னறிவிப்பின்றியும், ஒரே நேரத்திலும் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாறில் வெள்ளப் பெருக்கெடுத்து பல்லாயிரம் வீடுகளை மூழ்கடித்தது. இலட்சக் கணக்கான மக்களை நடுத்தெருவுக்குத் தள்ளியது. அம்பத்தூர், கிண்டி, மறைமலைநகர் தொழிற்பேட்டைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பறித்தது, இந்தப் பெருவெள்ளம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றின் மீதான ஆக்கிரமிப்பின் காரணமாக வெள்ளநீரால் இந்த அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டன. கடலூர், விழுப்புரம் மாவடங்களிலும் புதுச்சேரியிலும் ஆற்றுமணல் கொள்ளையர்கள் ஆளும்கட்சி கிரிமினல்களோடு சேர்ந்து மணல் கொள்ளைக்காக ஆறுகளின் பாதையை மறித்தும், மடைமாற்றியும் விட்டதால் அந்தப் பிராந்தியமே வெள்ளக்காடாகிப் போனதுடன், பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளில் மணல்மூடி வாழ்வாதாரமே பறிபோனது.

“நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்ற கோபக்குரல் ஒலிக்கத் துவங்கியுள்ள இந்த சூழலில் கூட ஆளும் வர்க்கம் நயவஞ்சகமாகத்தான் செயல்பட்டு வருகிறது. ‘ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் காஞ்சிபுரம் கலெக்டர்’, ‘ஆக்கிரமிப்புகளைத் தகர்க்கும் ஆக்ஷன் ஐ.ஏ.எஸ் ஸ்டார்ஸ்’ என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ‘இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும், ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி தூள் தூளாகும்’ என பரபரப்பூட்டுகின்றன ஊடகங்கள்.

ஆனால், நடந்து கொண்டிருப்பது ஆக்கிரமிப்புகள் அகற்றல் அல்ல, அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வழித்தடங்களிலும் உள்ள குடிசைகளையும் சாதாரண வீடுகளையும் மட்டும் குறிவைத்து இடித்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் என கொக்கரிக்கிறார்கள், அதிகாரிகள். ‘வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுவதற்குத் தயாராக இருங்கள். பெரும்பாக்கம், கண்ணகி நகர் போகணும்’ எனத் துரத்துகிறார்கள்.

உண்மையான ஆக்கிரமிப்பு எது? யார் ஆக்கிரமிப்பாளர்கள்?

எது ஆக்கிரமிப்பு? யார் ஆக்கிரமிப்பாளர்கள்?

மழைநீரைச் சேமித்து வைக்கும் ஏரிகள்-குளங்களையும், வெள்ளம் வழிந்தோடும் வடிகால்களையும் முழுமையாக ஆக்கிரமித்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள், தனியார் மருத்துவ-பொறியியல் கல்லூரிகள், நட்சத்திர மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், மாபெரும் ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்புகள், விமான நிலையம் உள்ளிட்ட மத்திய, மாநிர அரசு நிறுவனங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகளை செய்துள்ளன.

ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.
ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகள் பலவும் ஏரிகளையும், வடிகால்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. தங்கள் கம்பெனிக்குள் வெள்ளம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏரிகளை உடைத்து, தண்ணீரை மடைமாற்றி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தனர் இவர்கள்.

பொத்தேரியை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தைக் கட்டிய பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சியோ, யார் ஆக்கிரமிப்பாளர்கள் என விவாதம் நடத்துகிறது.

பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், குன்றத்தூர் மாதா கல்லூரி, போரூர் ராமச்சந்திரா கல்லூரி, மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஜேப்பியாரின் பனிமலர், சத்தியபாமா, ஆவடி வேல்டெக், செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி போன்ற பல கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏரிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான்.

இதெல்லாம் காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் கஜலட்சுமி அம்மாவின் கண்களுக்குத் தெரியாதது ஏன்? இவர்களுக்கெல்லாம் பட்டா கொடுத்து, கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததும் அதிகாரிகள்தானே.

திருவள்ளூர் மாவட்டத்தில்

  • ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் ஏரியை தூர்த்து கட்டப்பட்டவைதான்.
  • நெற்குன்றம் அருகே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி வருகின்றன 1000 உயர்தர குடியிருப்புகள் ஏரியின் மீதுதான் இருக்கின்றன.
  • திருநின்றவூரில், குடிசைமாற்று வாரியமே ஏரிக்குள்தான் வீடுகட்டி கொடுத்தது.
  • பள்ளிக் கரணை ஏரிக்குள் மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தண்ணீரில் மூழ்கும் போது ஆக்கிரமிப்பு என்கிறது அரசு. இதுதான் அரசின் லட்சணம்.

இப்போது சொல்லுங்கள் யார் உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள்? மக்கள்? அல்லது கார்ப்பரேட்டுகளும், மத்திய-மாநில அரசுகளும், ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுமா?

‘நெற்றிக்கண்ணை’ மறைப்பது எது?

உலகத்தரத்தில் அமைந்த உயிர்காக்கும் மருத்துவமனைகள் என சொல்லிக் கொண்டே மியாட்டும், குளோபல் மருத்துவமனையும் நீரில் மூழ்கியது ஏன்? உயிரைக் காப்பாற்றுகிறோம் எனப் பொய் சொல்லிப் பணம் பறித்துக் கொண்டு, அனாதைப் பிணமாக எறிந்து விட்டு ஓடிய இந்த அயோக்கியர்கள்தான் உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள்.

  • இத்தனை பேரைக் கொன்ற பின்னரும் மருத்துவமனையை நடத்திக் கொண்டிருக்கிறார் மியாட் மோகன்தாஸ்.
  • குளோபல் மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவோ, வெள்ள ஆய்வு என்ற பெயரில் சென்னைக்கு வந்து தன்னுடைய ஆக்கிரமிப்புகளை காப்பாற்றிக் கொண்டார்.
  • அமைந்தகரையில் இருக்கின்ற ஸ்கைவாக் வணிகவளாகம் கூவம் நதியை கபளீகரம் செய்தது என்றால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஐ.டி கம்பெனிகளும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் ஏப்பம் விட்டு விட்டனர்.
  • கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டியுள்ள நாகிரெட்டி தோட்டம் அருகில் அடையாறை ஆக்கிரமித்த வி.ஜி.என் என்கிற ரியல் எஸ்டேட் கும்பல் 1000 குடியிருப்புகளைக் கட்டி தலா ஒரு கோடிக்கு விற்றுள்ளனர். இந்தக் குடியிருப்பைத் திறந்து வைத்தவர் கவர்னர் ரோசையா.
  • எத்தனை பேர் வெள்ளத்தில் மூழ்கினார்கள், எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடத் தெரியாத மர்மத்தீவாக நின்ற டி.எல்.எஃப் வளாகமே ஆக்கிரமிப்புதானே

இந்த ஆக்கிரமிப்பாளர்களில் எவன் மயிரையாவது அசைக்கும் தைரியம் இருக்கிறதா அதிகாரிகளுக்கு? இதையெல்லாம் இடிப்பாளர்களா? கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளை இடிக்காமல் இவர்களைத் தடுப்பது எது? குடிசைகளை மட்டும் பார்க்கின்ற இவர்களது நெற்றிக்கண்ணால் மோகன்தாஸ்களை பார்க்க முடியாமல் மறைப்பது எது?

இடிக்க வரும் அதிகாரிகளை விரட்டியடி!

கிண்டி அருகில் நாகிரெட்டி தோட்டம் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அதிகாரிகள் துரத்த வந்தபோது, மக்கள் தைரியமாக எதிர்கொண்டனர். “எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா” என துரத்தினர்.

ரோசையா திறந்து வைத்த குடியிருப்புகளுக்கும், இன்னபிற ஆக்கிரமிப்புகளுக்கும் அதிகாரவர்க்கம் முழுபாதுகாப்பு தருவதை அம்பலப்படுத்துகின்ற மக்கள் போராட்டங்கள் அடுத்தடுத்த குடியிருப்புகளுக்கு பரவி வருகின்றன. ஈமு கோழி, தங்கக்காசு என எல்லா மோசடிகளுக்கும் சினிமாக்காரர்கள் காசு வாங்கிக் கொண்டு விளம்பரத்துக்கு வருவார்கள். கடைசியில் மோசடி அம்பலமானால், எங்களுக்கு எதுவுமே தெரியாது என நழுவிவிடுவார்கள். இதைப் போலத்தான் கவர்னர் கதையும் இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை இடிக்கச் சொல்லி அவரிடம்தான் நாம் மனு கொடுக்க வேண்டுமாம். மனு கொடுத்து பிரயோசனமில்லை என்பதால் சாலைக்கு வந்து விட்டனர், நாகிரெட்டி தோட்டத்து மக்கள்.

மாற்று இடம் காட்டிய மக்கள்!

வாழவழியின்றி, சகிக்க முடியாத சாக்கடைகளின் ஓரத்தில் ஒண்டுக் குடிசை போட்டவர்களை எல்லாம், ஆக்கிரமிப்பாளர்கள் என பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் குப்பை போலத் தூக்கி எறிவதுதான் அதிகாரவர்க்கம் நமக்கு செய்யும் ஒரே சேவை.

நாகிரெட்டித் தோட்டம் பகுதியில் உள்ளவர்களை, ‘பெரும்பாக்கத்துக்குப் போங்க’ என விரட்டினர் அதிகாரிகள். “எங்க போகணும்னு நாங்க சொல்றோம். சென்னையில அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் ரேஸ்கோர்சை இராமசாமி செட்டியாருக்கு அற்ப விலைக்கு குத்தகை கொடுத்திருக்கு அரசு. அந்த இடம் சும்மாதான இருக்குது. 800 ஏக்கர்ல கோல்ஃப் மைதானம் சும்மாதான கிடக்குது. அங்க இடம் ஒதுக்கு… போறோம்” என மாற்று இடங்களையும் காட்டினார்கள். இதுதான் நம் எல்லோருக்கும் முன்னுதாரணம்.

நமக்கான நிவாரணம் எது?

அரசு கொடுக்கும் 5 ஆயிரம், 10 ஆயிரமோ, எங்கோ கண்காணாத தூரத்தில் தரும் புறாக்கூடு வீடுகளோ அல்ல நமக்கான நிவாரணம். பெருவெள்ளம் ஏற்படக் காரணமான கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், அதிகாரவர்க்கத்தினர், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள் ஆகியோர்களிடமிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்களுக்கு வழங்குவதும், அவர்களைக் கைது செய்து தண்டிப்பதும், நகருக்குள்ளேயை சும்மா கிடக்கும் அரசு இடங்களில் வீடு கட்டித் தருவதும்தான் நமக்கான நிவாரணம். இதுதான் நமது பாரம்பரிய நீர்நிலைகளையும், நமது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும்.

  • நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்து, இயற்கைப் பேரழிவிற்குக் காரணமானவர்கள் தனியார்மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகளும், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் அதிகார வர்க்கத்தினரும், செயலிழந்து ஆள அருகதையற்றுப் போன ஜெயலலிதா அரசும்தான்!
  • ஜெயலலிதா அரசோ அல்லது வேறு எந்த அரசோ எந்தக் கட்சியோ ஆட்சிக்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என நம்புவது மூடநம்பிக்கையே!
  • போராடும் நாம், போராடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மக்கள் அதிகாரத்தை நிறுவி, அதன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஒரே வழி!

முடங்கிப் போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!

ஆர்ப்பாட்டம்

நேரம் : 02-01-2016 மாலை 5 மணி
இடம் : குமணன்சாவடி, பூந்தமல்லி

அனைவரும் வருக

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்-திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு)-வேலூர் மாவட்டங்கள்,
88075 32859, 94453 89536 94453 68009 99943 86941

floods-pp-poster

‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!

0

ந்த மழையும் வெள்ளமும் ஜெயலலிதா அரசைப் பற்றி இதுகாறும் நாம் அறிந்திராத பரிமாணம் எதையாவது காட்டியிருக்கின்றதா? இல்லை. ஜெ.அரசு என்று அழைக்கப்படும் இந்தக் கொள்ளைக்கூட்டம், ஆபாசம், வக்கிரம், ஆணவம், பித்தலாட்டம், செயலின்மை ஆகிய அனைத்தையும் தனது பிறவிக் குணங்களாகவே கொண்டிருந்த போதிலும், இதனைக் காணத்தவறியவர்களுக்கும் காண மறுத்தவர்களுக்கும் அதன் கோர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. சினிமா நடனத்தின் ஆபாசத்தை மேலும் விகாரமாகக் காட்டும் மழைக்காட்சியைப் போன்றது இது.

02-flood-victimsநடிப்புக்காகக் கூட கருணையைக் கண்களில் வரவழைக்க இயலாத அம்மா”, பருவ மழையின் சீற்றம் தொடங்கிய பின்னர் வேறு வழியின்றி மலையிலிருந்து இறங்கினார். மூன்று மாத மழை ஒரே நாளில் பெய்து விட்டதாகக் கூறி, கடலூர் மக்களைக் காட்டாற்று வெள்ளத்துக்குக் காவு கொடுத்த தனது அரசின் தடித்தனத்தை நியாயப்படுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் அலட்சியம் செய்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் விமரிசனத்துக்குப் பயந்து, கண்ணாடிக் கூண்டு வண்டிக்குள்ளிருந்தபடி விஜயம் செய்தார். டிசம்பர் துவக்கத்தில் சென்னையே மூழ்கிய பின்னரும், போயஸ் தோட்டத்தை விட்டு அசைய மறுத்தார். மோடியின் விளம்பர விஜயம் பற்றி அறிந்தவுடனே பீதியுற்று, ஹெலிகாப்டரில் பறந்தார். “பத்து இலட்சத்து மூவாயிரத்து மூணு தயிர்சாதம், மூவாயிரத்து நாலு சாம்பார் சாதம்” என்று அதிகாரவர்க்கம் எழுதிக் கொடுத்த புள்ளி விவரத்தை வெள்ள நிவாரணம் என்ற பெயரில் வாசித்தார் -இதுதான் ஜெயலலிதா.

எதைத் திருடுவது என்பதை மட்டுமே ஒவ்வொரு நொடியும் சிந்திக்கும் கும்பலாக ஒரு கட்சி; மக்கள் மீது அக்கறையோ, பொறுப்போ, நிர்வாகத் திறமையோ, அறிவோ, சுயமரியாதையோ இல்லாத, அடிமைத்தனத்தையும் களவாணித்தனத்தையும் மட்டுமே தமது முழுமுதல் தகுதியாகக் கொண்ட அமைச்சர்கள்; அம்மா ஆணையிடும் குற்றச்செயல்களைக் கூச்சமில்லாமல் செய்து முடிக்கும் கூலிப்படையாக சிறப்பு ஆலோசகர்கள், தலைமைச் செயலர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட விசுவாச அதிகார வர்க்கம்; இந்தக் கேவலங்கள் அனைத்தையும் சீவிச் சிங்காரிக்கவும், குற்றங்களை நியாயப்படுத்தவும், திசை திருப்பவும் தொழில் முறையில் பயிற்சி பெற்ற, பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்கள் – இதுதான் ஜெயலலிதா ஆட்சி.

இதுதான் தமிழக மக்களுக்கு எதிரான பேரிடர். இந்தப் பேரிடர் அகற்றப்படாமல் நீடிப்பதன் விளைவுதான் வெள்ளப் பேரழிவு. செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைச் சிறிதுச் சிறிதாக வெளியேற்ற வேண்டுமென்ற பொறியாளரின் எச்சரிக்கையைப் பொதுப்பணித்துறை செயலரும், தலைமைச் செயலரும் ஐந்து நாட்கள் கிடப்பில் போட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிசம்பர் முதல் நாள் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரித் திறக்கப்பட்டுஒரு இலட்சம் கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சுனாமியைப் போல எழுந்து வந்து இலட்சக்கணக்கான வீடுகளை மூழ்கடித்து, நூற்றுக்கணக்கான மக்களைக் கொலை செய்தது. அவர்கள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய வாழ்க்கையை கண நேரத்தில் அழித்து அநாதைகளாக்கியது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதும், உணவு – தண்ணீர் வழங்கிக் காப்பாற்றியதும், நிவாரணம் வழங்கியதும் மக்களேயன்றி, இந்த அரசு அல்ல. பேரழிவைப் பரிசாகத் தந்திருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை, தோற்று நிலைகுலைந்துவிட்ட ஒரு அரசமைப்பு, இவற்றால் சீரழிக்கப்பட்ட மக்கள் மீது பிணந்தின்னிகளைப் போல மொய்க்கும் அ.தி.மு.க. கும்பல் – இதுதான் வெள்ளச் சேதத்தின் வழியே விளக்கம் பெறும் அரசியல். அழிவிலிருந்து மீட்கும் முயற்சியாக மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களின் மீது “அசிங்கத்தை ஒட்டு” என்று மிரட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். அழிவைக் காட்டிலும் கொடியது இந்த அவமானம். தமிழ் மக்களின் தலையில் ஒட்டிக் கொண்டுவிட்ட அவமானத்தை, தமிழ்ச் சமூகத்தை மறித்து நிற்கும் இந்தப் பேரிடரைத் துடைத்தெறிவதற்கான வாய்ப்பை இந்த வெள்ளப் பேரழிவு வழங்கியிருக்கிறது.

______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2015 வெளியீடு !

1

puka desember wrapper 5
ஹா
லிவுட் திரைப்படமான “டாப் கன்” ஓடிய திரையரங்குகள் அருகே ஆளெடுப்பு அலுவலகங்களை திறந்தது, அமெரிக்க இராணுவம். பதிலுக்கு அப்படத் தயாரிப்புக்கு இராணுவத்தின் பிரம்மாண்டமான தளவாடங்கள், படை வீரர்கள் திறந்து விடப்பட்டனர். இப்படி காசு கொடுத்தும், படம் காட்டியும் செய்யவில்லை என்றால் ஈராக்கிலோ, ஆப்கானிலோ சாவதற்கு ஏழை அமெரிக்கர்கள் கிடைக்க மாட்டார்கள்.

செவ்விந்தியர்களை ஒழித்து தோன்றிய அமெரிக்க ஏகாதிபத்தியம் களத்தில் செய்வதை ‘கலையில்’ செய்கிறது ஹாலிவுட்.

உலக அளவில் பயங்கரவாதிகள், கம்யூனிஸ்டுகள், வேற்று கிரக வில்லன்களை ஒழிக்கும் அமெரிக்க ஹீரோக்களின் பலம் கிராபிக்ஸினை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கையின் விதிகளிலிருந்து ஆக்சன் ஹீரோக்கள் அஸ்திரங்களை உருவிக் கொள்கிறார்கள்.

இதே காலத்தில் வால் வீதியில் முதலாளித்துவம் ஒழிக என்ற மக்கள் முழக்கம் எழும்பியதையும் ஹாலிவுட் படைப்பாளிகள் கவனிக்கத் தவறவில்லை. அதையும் காசாக்குவதோடு இனி கதையில் பழைய டைப் வில்லன்களை தேறமாட்டார்கள் என முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளுமே ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்.

ஒருக்கால் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்க்காமல் கொஞ்சம் அனுதாபத்துடனாவது சொல்ல முடியுமா? நிச்சயம் ஹாலிவுட்டின் மூளை அப்படி சிந்திக்காது. மீறினால் கலை கொலை செய்யப்படும்.

ஆஸ்கர் விருதையே அரிதான விருதாக தமிழ் சினிமாக்களின் படைப்பாளிகள் ஏங்குவதை பார்த்திருப்போம். கூடவே இவர்களின் கண்ணோட்டத்தையும், கலையோட்டத்தையும் கூட ஹாலிவுட்டே தீர்மானிக்கிறது. காபி ஷாப்பில் காதல், பிட்சா கடையில் ஏழ்மை, ஐ.டி துறையில் குடும்பம், அமெரிக்காவில் பாடலென இவர்களின் உள்ளாடை கூட அமெரிக்காவின் தேசியக் கொடிதான்.

ஹாலிவுட்டின் இரகசிய விதிகளையும், பகிரங்க சாகசங்களையும், கலை அபத்தத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!
  2. BODY OF LIES (2008): ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!
  3. The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
  4. The Whistleblower (2010): அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!
  5. The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!
  6. உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
  7. Salt of the Earth (1954) : மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!
  8. ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

0

puthiya-jananayagam-december-2015

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்

2. ‘அம்மா’ : தமிழகத்தின் பேரிடர்!

3. கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம்
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை.

4. சென்னை : இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.

5. ஆபாசம், அராஜகம், ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களை சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடத்தி வருகிறது.

6. தமிழக வெள்ளம் : இயற்கை பேரிடர் அல்ல, தனியார்மயம் உருவாக்கிய அழிவு!
தனியார்மயப் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், விவசாய அழிவைத் தடுத்து நிறுத்தாமல், ஏரிகளைக் காப்பாற்றவும் முடியாது, வெள்ள அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

7. “மூடு டாஸ்மாக்கை” கூட்டு நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு விளக்கம்
தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கக் கோரி கட்சித் தலைவர்களைச் சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன் வினவு இணையதளம் வாயிலாக அளித்த பதில் சுருக்கித் தரப்படுகிறது.

8. பணமா, பார்ப்பன பாசமா?

9. புதிய கல்விக் கொள்கை – 2015 பல்கலைக் கழகங்கள் இறக்குமதி! மாணவர்கள் ஏற்றுமதி!!
புதிய கல்விக் கொள்கை – 2015 கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோனாகவும் மாற்றுவதோடு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பையும் ஒழிக்கிறது.

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.