Description
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள்!
- மரணம் துரத்திய அந்த நள்ளிரவில் …
- நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி!
- மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம்!
- போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு!
- இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!
- நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு!
- கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்!
- சத்தீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல்!
- ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
- சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி!
- தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!
அதிக வேலைவாய்ப்புள்ள விவசாயத்தை அழிக்காதே என்று காவிரிக்காகவும், கதிராமங்கலம் – நெடுவாசலிலும் போராடினால் அது வளர்ச்சிக்கான போராட்டமாக இவர்கள் பார்ப்பதில்லை. குடிநீர் கெட்டுப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று நியமகிரி, தூத்துக்குடியில் போராடினால் அவை சமூகவிரோதமாம். கேன்சர், பெரும் வியாதிகளால் மரிப்பதை எடுத்துச் சொன்னால் மக்கள் முட்டாள்களாம். இந்த விழிப்புணர்வை பரப்பினால் இடதுசாரி அமைப்புகள் சமூகவிரோதிகளாம்.
உண்மையில் மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, கருப்புப் பண மோசடி, பொதுத்துறை வங்கிகளிடம் கடன் மோசடி போன்ற சமூகவிரோதச் செயல்களை கார்ப்பரேட் முதலாளிகளே செய்கிறார்கள். அவர்களிடமிருந்து பெரும் பணத்தை நன்கொடையாக பெறும் பாஜக, காங்கிரசு மற்றும் உள்ளூர் பெரிய கட்சிகள் அந்த முதலாளிகளுக்கு நேரடியாக அடியாள் வேலை பார்க்கின்றன.
அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என தூத்துக்குடி முதல் நியமகிரி வரை மக்கள் வரலாற்றை மாற்றி வருகிறார்கள். அந்தப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை தொகுத்துத் தருகிறது இந்தத் தொகுப்பு!
பன்னிரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்