அன்பார்ந்த நண்பர்களே புதிய கலாச்சரத்தில் வெளியான அமெரிக்க திவால் கட்டுரையும், வினவில் வெளியான ஐ.டி துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற கட்டுரையும் இதையோட்டி நடந்த விவாதங்களும் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் வந்த முன்னுரையே இங்கே பதிவு செய்கிறோம்
முன்னுரை:
ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அமெரிக்கா, உலகமயம், ஐ.டி, கம்யூனிசம், கீழைக்காற்று, தொழிற்சங்கம், நுகர்வியம், நூல் வெளியீடு, பண்பாட்டுப் பார்வை, புதிய கலாச்சாரம், புத்தகக் கண்காட்சி, பொருளாதாரம், லேஆஃப் | குறிச்சொல்லிடப்பட்டது: அமெரிக்கா, ஐ.டி, கம்யூனிஸம், திவால், புதிய கலாச்சாரம், லேஆஃப்
இலக்கிய மொக்கைகள் !
அன்பார்ந்த நண்பர்களே! வினவில் இலக்கியவாதிகளைக் குறித்து வந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை
சிறு பத்திரிகை உலகம் என்று அறியப்படும் இலக்கியவாதிகளின் உலகம் சில்லறைச் சச்சரவுகளாலும் குழாயடிச் சண்டைகளாலும்தான் தன்னை உயிர்ப்புடன் பராமரித்துக் கொள்கிறது. சும்மாவே சொறிந்து சுகம் காண்பவன் கையில் விசிறிக் காம்பு கிடைத்ததைப் போல இத்தகைய இலக்கியவாதிகளுக்கு இப்போது இணையம் கிடைத்திருக்கிறது. முன்பெல்லாம் டீக்கடைகளிலும், மதுக்கடைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும் மட்டுமே நடைபெற்று வந்த வாய்க்கலப்புகளும் கைகலப்புகளும் இப்போது இணையத்துக்கும் இடம் பெயர்ந்திருக்கின்றன.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இலக்கிய அங்கதம், இலக்கிய அரசியல், இலக்கியப் பார்வை, கீழைக்காற்று, நூல் வெளியீடு, புத்தகக் கண்காட்சி | குறிச்சொல்லிடப்பட்டது: உயிரோசை, காலச்சுவடு, கீழைக்காற்று, சாரு நிவேதிதா, சுகுமாரன், சோல்சனிட்சின், ஜெயமோகன், புதிய கலாச்சாரம், மொக்கை
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும்
அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் சமூக விமரிசனங்கள், பண்பாட்டுப் பார்வை சார்ந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை:
ஒரு குக்கிராமத்தில் நடக்கும் சம்பவம் கூட செய்தியாக உடனுக்குடன் ஊடகங்களில் இடம் பெறும் வண்ணம் தொழில் நுட்பமும், செய்திகளுக்கான வலைப் பின்னலும் அபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால் தமக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு சமூக மனிதனாக பரிணமிப்பதற்கு இந்த வளர்ச்சியே உதவிவிடுவதில்லை. காதல், தற்கொலை, கொலை குறித்த செய்திகள் எல்லாம் மலிவான ரசனையைக் கருத்தில் கொண்டு பரபரப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சீரழிவுகள் மற்றும் தோற்றுப் போன உறவுகளின் சாட்சியங்களாக வெளிப்படும் இத்தகைய சம்பவங்கள் எதுவும் அதற்குரிய கவலையுடனோ அக்கறையுடனோ ஊடகங்களால் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒரு கள்ளக்காதல் கொலை கூட அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தானும் அத்தகையதொரு முயற்சியில் இரகசியமாய் இறங்கலாமென்ற திருட்டுத்தனமான ஆசையை வாசகனின் மனதில் ஏற்படுத்துகின்றது. மேலும் வாசிக்க »
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது உண்மைச் சம்பவம், காதல், கீழைக்காற்று, சமூக விமரிசனம், சாதி, செய்தி விமரிசனம், தற்கொலை, நுகர்வியம், நூல் வெளியீடு, பண்பாட்டுப் பார்வை, பாலியல், புத்தகக் கண்காட்சி, பெண்ணிய அரசியல் | குறிச்சொல்லிடப்பட்டது: காதல், கீழைக்காற்று, சாதி, நுகர்வுக் கலாச்சாரம, பாலியல் வன்முறை, புத்தகக் கண்காட்சி
அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்திலும் புதிய கலாச்சாரம் இதழிலும் மதம் தொடர்பாக வந்த கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை
காலமும் சூழலும் மாறினாலும், வாழ்க்கைக்கான நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மதத்தின் கவர்ச்சி மட்டும் குறைந்தபாடில்லை. தொலைக்காட்சிகளின் பிரைம் டைமில் அழுகை சீரியல்கள் ஓய்ந்ததும், பின்னிரவில் விதவிதமான மூடநம்பிக்கை வியாபாரிகள் எண்ணிறந்த அபத்தங்களை கடவுளின் பெயராலும், ஆன்மீகத்தின் துணையுடனும் விற்பனை செய்யத் தொடங்குகின்றனர். கற்கால நம்பிக்கையின் பிரச்சாரக் கருவியாகி விட்டது கணினி.
அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கண்டு வெடிப்பு, கீழைக்காற்று, செய்தி விமரிசனம், தீவிரவாதம், நூல் வெளியீடு, புத்தகக் கண்காட்சி | குறிச்சொல்லிடப்பட்டது: கீழைக்காற்று, தீவிரவாதம், புத்தகக் கண்காட்சி, ம.க.இ.க, மும்பை
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !
அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கீழைக்காற்று, சட்டக் கல்லூரி, சாதி, தலித், நூல் விமரிசனம், நூல் வெளியீடு, புதிய கலாச்சாரம், புத்தகக் கண்காட்சி, ம.க.இ.க | குறிச்சொல்லிடப்பட்டது: கீழைக்காற்று, சட்டக் கல்லூரி, சாதி, நூல் அறிமுகம், புதிய கலாச்சாரம், புத்தகக் கண்காட்சி, ம.க.இ.க