Sunday, October 1, 2023
முகப்புயார் விபச்சாரி? 'சோவியத் சுந்தரிகளா', இந்தியா டுடேவா?
Array

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

-

vote-012இரண்டு வாரம் கடுமையான வேலைபளு காரணமாக கணினியின் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூட முடியவில்லை. இதற்குள் அழகிரி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிசயம் நடந்து விட்டது. இருந்தும் அழகிரியைப் பற்றி எழுதுவதற்கு பதில் போய் முடிதிருத்திவிட்டாவது வரலாம் என்று போனால் அங்கு ஒரு பழசான இந்தியா டுடே கிடந்தது. அதில் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் ஒரு அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வந்திருந்தது.

இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அதன் விளம்பரக் காகிதங்களை மட்டும் பார்ப்பவன் என்ற வகையில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது ( போதுமான அளவு வீட்டில் தண்ணீர் வசதி இருப்பதால் நான் காசு கொடுத்து இ.டு வாங்குவதில்லை ). ஆயினும் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பு இந்தியாடுடேவின் பாலியல் அரிப்பை மட்டும் கொண்டு வெளியிடப்பட்ட செய்தியல்ல என்பது தெளிவு. அதனால்தான் அக்கட்டுரையில் சோவியத் பற்றிய விளக்கமும் பிறகு அதன் வீழ்ச்சி குறித்தும் பேசி விட்டுப் பிற்கு தனது வழக்கமான செய்திக்கு வருகிறது.

இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப் பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை.

இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள்,  ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் கைடுலைன் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. இத்தனைக்கு மேல் தொலைபேசி எண் தேவையில்லை என்பது வேறு விசயம்.

ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போடுவதன் காரணம் என்ன?

கம்யூனிசத்தை வெறுக்கிற சமத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறும் மேல்தட்டு சிந்தனையின் விளைவுதான், தான் நிபுணத்துவம் பெற்ற  விபச்சார செய்திகளை சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் வெளியிடுகிறது இந்தியாடுடே. கம்யூனிசம் எனும் கருத்தின் மீதான பயம் சோவியத் நாடுகள் சிதறிய பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களுக்கு இருப்பதன் விளைவுதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிசத்தை சீண்டிப் பார்க்க வைக்கிறது. கூடுதலாக மேல்தட்டு மக்களின் வெள்ளைத் தோல் மோகம் பற்றி செய்தி போட வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதன் பலன், கம்யூனிசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்தியாடுடேவின் அடையாளமான பாலியல் இச்சையும் சம அளவில் கலந்த இந்த காக்டெய்ல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியாடுடே சிறப்பிதழில் சோ ராமசாமியின் கட்டுரை ஒன்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற தலைப்பில் வெளியானது. அதில் சோவும் தனது பெரியார் விரோத சிந்தனைகளை அள்ளித் தெளித்திருந்தான். “பெரியார் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தார், இப்போதோ பக்தி மாநிலமெங்கும் பரவிவிட்டது, ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார், ஆனால் இப்போது ஜாதி சங்கங்கள் பல்கிப் பெருகிவிட்டன ஆகவே பெரியார் கொள்கைகள் தோற்றுவிட்டன” என்று எழுதி  தனக்கு தரப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினான் சோ.

பக்தி பெருகி விட்டதாம், பக்தி மட்டுமா பெருகியது கொலை, கற்பழிப்பு, ஊழல் தொடங்கி பஸ் ஸ்டாண்டில் செயின் அறுப்பதுவரை எல்லாம்தான் பெருகிவிட்டது. ஜாதி சங்கங்கள் பெருகிவிட்டது யாருக்குத் தோல்வி ? இந்த கொழுப்பெடுத்த கிழவன் உட்பட நம் எல்லோருக்குமான தோல்வி இது, நிச்சயம் பெரியாரின் தோல்வியல்ல. இது சோவுக்கு பதில் சொல்லும் பதிவு அல்ல என்பதால் இதற்குமேல் நீட்ட வேண்டாம். ஆயினும் நாம் கவனிக்கவேண்டியது, ஏன் இந்தியாடுடே பெரியார் பற்றி எழுத சோவை தெரிவு செய்தது, அதன் தலைப்பை ஏன் நாயக்கர் என்று வைத்தது என்பதைத்தான்.

வி.பி. சிங் இறந்தபோதும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் வி.பி. சிங்கின் உடலை எரித்து விட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி. சிங்குக்கே இந்த கதி என்றால் பெரியாரும் சோவியத்தும் தப்பிக்க முடியுமா என்ன ?

சோவியத்தின் வீழ்ச்சி இந்தியாடுடேவுக்கு வேண்டுமானால் கொண்டாடத்தக்க செய்தியாக இருக்கலாம் நிச்சயம் அது நமக்கான நற்செய்தியல்ல. இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உருவான பல பெரும் தொழிற்சாலைகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை செய்தது சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான ஏழை மக்களுக்காக எல்லா தலைப்புக்களிலும் புத்தகங்களை மிக மிக மலிவான விலையில் ( ஏறத்தாழ இனாமாக ) வழங்கியது சோவியத். இன்றைக்கு அமெரிக்காவின் சர்வதேச ரவுடித்தனத்தை குறித்து கோபப்படுபவர்கள் சோவியத்தின் வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இதில் யாரை வெற்றிகரமானவர் என்பீர்கள்? திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் தோற்றார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள். ஆற்காடு நவாப் தோல்வியே அடையவில்லை. அவர் வாரிசுகள் இன்றும் இளவரசர்களாக வாழ்கிறார்கள். இதில் யாரை நேசிக்கிறீர்கள் தோற்றவனையா அல்லது வென்றவனையா?

லெனின், ஸ்டாலின் காலத்து சோவியத் குறித்து நினைவு கூறவும்  கற்றுக் கொள்ளவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.  நாம் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். நாம் தெரிந்து கொள்வதற்கேற்ப ‘சோவியத் சுந்தரிகள்’ இங்கே வருவதற்கான தேவையும், அதை விலாவாரியாக இந்திய டுடே என்ற பத்திரிகை மாமா எழுதுவதற்கான கடமையும் இல்லாமல் போகலாம்.

• வில்லவன்
_____________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இதில் யாரை வெற்றிகரமானவர் என்பீர்கள்? திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் தோற்றார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள். ஆற்காடு நவாப் தோல்வியே அடையவில்லை. அவர் வாரிசுகள் இன்றும் இளவரசர்களாக வாழ்கிறார்கள். இதில் யாரை நேசிக்கிறீர்கள் தோற்றவனையா அல்லது வென்றவனையா?//

  உண்மை தோல்வி வெற்றி முக்கியம் அல்ல …உணர்வு ஒன்றே முக்கியம்

 2. இந்தியா டுடே ஒரு மட்டமான இதழ் என்பதற்கு மற்றும் ஒரு சான்று! பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்து இந்த தரம் கெட்டஇதழை தவிர்த்து விட்டவன் என்று நிம்மதி பெருமூச்சு! ஆனால் உங்கள் கம்யூனிச கொள்கையை பாராட்டுகிறேன்! [obscured]

 3. இந்தியாவிற்கும் , உலகைச் சமநிலைப்படுத்தலுக்கும் சோவியத் வல்லரசின் பணிகள் குறைத்து மதிப்பிடத் தக்கவை அல்ல என்பது உண்மை. அதுபோலவே , இந்தியா டுடேவின் பக்கச்சார்ப்பான சுயசொறிதல் கட்டுரைகளின் தரமும் விபச்சாரத்தை விடக் கீழானது என்பதுவும் உண்மை…………குறிப்பாக , இ.டு அரிப்பெடுத்து எழுதிய வி.பி.சிங் பற்றிய கட்டுரை முற்றிலும் வெறுப்பை உமிழ்ந்திருந்தது.!!

  ஆனால் , அதற்காக தற்போதைக்கு புற்றீசல் போல பெருகி வரும் சோவியத் சுந்தரிகளின் ஆதிக்கம் விபச்சாரத்திலும் , இரவு வாழ்க்கையிலும் மிகமிக அதிகம் என்பதை மறுத்துவிட முடியாது……..

  இது இந்தியாவில் மட்டுமல்ல , அனேக ஆசிய நாடுகளிலும் இதே தான் நிலைமை. இதையொட்டிய பற்பல ஆய்வுகள் நாம் வசிக்கும் நாட்டிலும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும் , இங்கே யாரும் சோவியத் ஒரு முன்னாள் கம்யூனிச நாடு என்பதால் விமர்சிக்கிறார்கள் என்று குறிப்பிடுவதில்லை..இப்படி எல்லாவற்றிற்கும் , சாயம் பூசிப்பார்ப்பது என்பது ஒரு ஆபத்தான விடயமுங் கூட.

  இன்னமுஞ் சொல்லப் போனால் ஒட்டுமொத்தமாக சோவியத் என்று சொல்வதைவிட , ஜனநாயகத்துக்கு மாறிப்போன முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் என்று சொல்வதே சரியானதொன்றாகும்…ஏனென்றால் பெரும்பாலான சுந்தரிகள் கஜகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வருவதாகவே ஆய்வுகள் சொல்கின்றன……

 4. 1996 ல் அமெரிக்காவில் வாழ்கின்ற கேரளத்து பெண்குட்டியான,”மீராநாயர்”,தான் எடுத்த “காமசூத்திரா” ஹாலிவுட் படத்தைப் பற்றி ஐரோப்பாவுக்கு வந்து பேட்டியளித்தபோது,பேட்டியாளர் கேட்டார்,”நாங்கள் எடுத்து ஓய்ந்த பேய் ஓல்(ஹார்ட்கோர்) படங்கள் மாதிரி கிட்டத்தட்ட இப்படம் இருக்கிறதே?,பறந்து பட்ட இந்திய கலாச்சாரத்த இது எப்படி பிரதிபலிக்கிறது?,எங்களுக்கு என்ன புதிய விஷயம் தருகிறிர்கள்? என்று கேட்டார்”,அதற்கு மீரா,இந்தியர்களுக்கு முதலில் ஒழுங்காக “கிஸ்” அடிக்க தெரியவில்லை,இந்தப்படம் காமசூத்திராவை மீளமைக்கும் என்றார்!.ஏதோ “பிளான்” போட்டு,இன்றுவரை பலவித வெற்றிகள் அடைந்து விட்டனர்!.இதில் முதலில் “எள்லானது” மலையாளத்தான்கள்,அடுத்தது “குண்டோடு அப்பிட்டானது” இலங்கைத் தமிழனுங்க,ஏதோ திப்பு சுல்தான்,சின்ன மருதுன்னு நாமும் அப்படி,இப்படின்னு ஜகா வாங்கினு கிறோம்!,எப்போ தமிழ்நாட்டு காரங்களும்,மொத்தமா அப்பிட்டாக போறாங்களோ தெரியல!.

 5. ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் //குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.//
  நோடித்துப்போகாமல் இருக்கத்தானே இது போன்ற கட்டுரைகள் ?

 6. //இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள்.//அப்போ கேட்டின் படுகொலைகளை எல்லாம் செஞ்சது யாருங்கோ, இருப்பத்தி இரண்டாயிரம் பேரை துடிக்க துடிக்க கொன்று விட்டு ஐம்பது வருடம் கழித்து அதை ஒத்து கொண்டது யார்? போரில் எந்த நாடும் ஒழுக்கமில்லை. ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை. இன்னும் சொல்ல போனால், கேட்டின் படுகொலைகளை உலகிற்கு சொன்னதே ஹிட்லர் தான். நுனிப்புல் மேய்வது போல் ஒரு வரியில் வரலாற்றை உள்ளே நுழைக்காதீர்கள். தனி பதிவாக போடுங்கள், நிறைய விவாதிப்போம்

 7. இந்தியா டுட்ட்ட் போடும் பாலியல் தொடர்பான ‘மட்டமான’ கருத்துக் கணிப்புக்கு பிறகு வாங்குவதை நிறுத்திவிட்டேன். இன்று வரை அதை வாங்குவது இல்லை.

  ஈழப்பிரச்சினை முதல் பாலியல் க.க. வரை எல்லாமே ஒரு தலைப்பட்சமான கருத்துகள்.

  //சோவியத்தின் வீழ்ச்சி இந்தியாடுடேவுக்கு வேண்டுமானால் கொண்டாடத்தக்க செய்தியாக இருக்கலாம் நிச்சயம் அது நமக்கான நற்செய்தியல்ல. இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உருவான பல பெரும் தொழிற்சாலைகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை செய்தது சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகள்.//

  இந்த விஷயங்களில் ந்னக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லையென்றாலும், சோவியத் நட்பை இழந்தது இந்தியாவுக்கு தான் நஷ்டம்.

 8. //இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள்.//அப்போ கேட்டின் படுகொலைகளை எல்லாம் செஞ்சது யாருங்கோ, இருப்பத்தி இரண்டாயிரம் பேரை துடிக்க துடிக்க கொன்று விட்டு ஐம்பது வருடம் கழித்து அதை ஒத்து கொண்டது யார்? போரில் எந்த நாடும் ஒழுக்கமில்லை. ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை. இன்னும் சொல்ல போனால், கேட்டின் படுகொலைகளை உலகிற்கு சொன்னதே ஹிட்லர் தான். நுனிப்புல் மேய்வது போல் ஒரு வரியில் வரலாற்றை உள்ளே நுழைக்காதீர்கள். தனி பதிவாக போடுங்கள், நிறைய விவாதிப்போம்
  .

  good reply … damildumil… Rusian nna vinavukku arippu ……

 9. சோவியத் உனியன் இந்த இருபதாம் நூற்றாண்டின் மிக பெரிய தோல்வி ஆகும். சோவித் மக்கள் பெரும் தியாகங்கள் புரிந்தவர்கள். அனால் அந்நாட்டு அரசியல்வாதிகள் நம்மவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. இந்தியாவின் நல்ல நண்பனாக இருந்த ஒரே காரணத்தினால் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் நல்லவை என்று கூற முடியாது.

 10. இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே கம்யூனிசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்தியாடுடேவின் அடையாளமான பாலியல் இச்சையும் சம அளவில் கலந்த இந்த காக்டெய்ல்.

 11. //யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?//இதிலேன்ன சந்தேகம் இந்தியா டுடேதான் விபச்சாரி. விபச்சாரன் கேடுகேட்ட மாமா பையன். இந்தியா டுடே போடும் பாலியல் தொடர்பான ‘மட்டமான’ கருத்துக் கணிப்பை படிச்ச உடலுறவுக்கு முன்னாடி கனவன் மனைவி இருவரும் குத்து படம் பாருங்க அப்பாதன் மூடு வரும் பெரும்பாலன நடுத்தர குடும்ப பெண்கள் இப்புடித்தான் இருக்கங்கன்னு கருத்து கணிப்பு வேற அதற்கு பிறகு வாங்குவதை நிறுத்திவிட்டேன். இன்று வரை அதை வாங்குவது இல்லை .

 12. வில்லவன் இந்த கட்டுரையை ஏற்கனவே ஒங்க தளத்தில் படித்து விட்டேன் திருப்பூருல எல்லோரும் சவுக்கியமா 

 13. அண்ணே.. ஒரு விபச்சார வியாபாரி பிறரை விபச்சாரின்னு சொல்றது அயோக்கியதனம்தான்,,, யாராவது அமெரிக்காவைப் பத்தி பேசுவானா… ஏன்னா எல்லாம் எல்லாருக்கும் தெரியும்… ஊரரிஞ்ச பாப்பானுக்கு பூணுால் எதுக்குங்கற கதையா… ஆனா சோவியத்த பாருங்க… யான படுத்தாலும் குதிரை மட்டம்னு சொல்லிட்டுத் திரியறோமே கண்டி.. யான படுத்துறுச்சே… அது ரொம்ப முக்கயமான விசயமாச்சே…ஓரு வேளை அந்த மாதிரி யான அப்படித்தான் கொஞ்ச நாள்ல படுத்துறுமோன்னு நினைக்கத் தோணுதா இல்லையாங்கறதுதான் முக்கியமான விசயம்.. நான் சொல்றதுல இருக்கற மறைபொருள் உணர் என்பது புரியும்னு நெனக்கேன்.. என்னநாஞ்சொல்றது..
  ஆர் நாகராஜ

 14. மொத ஏழு பாரா படிக்கும் போது ‘திடுக்’-ன்னு ஆகி போச்சு. இது அவர்களின் சதி என்று திட்ட வட்டமாக முடிவு செய்யும் நேரத்தில் நல்ல வேலை ‘சோ’-வை கொண்டு வந்து கடமையை செய்து விட்டீர்கள்.

 15. வி பி சிங்கை பற்றிய இ.டுடே கட்டுரைதான் முதன் முதலில் அவர்களுடைய முகம் எல்லா சாமான்யனுக்கும் கிழிக்கப்பட்ட தருணம். அவர்கள் மட்டமானவர்கள் என கூறும் அதே வேளையில், இப்போது விபச்சாரத்தில் அவர்கள் அதிகமாக ஈடுபடுவதையும் மறுக்க முடியாது.

  சோவியத் நாடுகளின் இந்திய உதவியையும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

  அதே வேளையில் கம்யூனிச நாடு என்பதால் அதில் எல்லாமே சரியென்று தோழர்கள் வாதிடுவது அவர்களுக்கு நன்று அல்ல

 16. சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பஸ் ஒன்றை கண்ணி வெடி மூலம் தகர்த்ததில், சிறப்பு போலீஸ் அதிகாரிகள், பயணிகள் உட்பட 50 பேர் பலியாயினர். ஆறு வாரத்திற்குள் நடந்துள்ள இரண்டாவது பெரிய தாக்குதல் சம்பவம் இது.சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி நக்சலைட்கள் நடத்திய கொடூர தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 75 பேர் கொல்லப்பட்டனர். comment please Vinavu ???????

  • “இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ப.சி.க்கு வினவு குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது” அப்படீன்னு ஒரு பதிவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 17. வி. பி. சிங் பற்றிய இந்தியா டுடேயின் வரிகள் தரம் தாழ்ந்தவை என்று புரிகிறது. எனக்கு சந்தேகம் என்னவென்றால் பழைய சோவியத் நாடுகளிருந்து வந்து தொழில் செய்யும் விபச்சாரிகள் பற்றி எழுதுவதில் என்ன தவறு என்பதுதான். இதற்கும் கம்யூனிசத்திற்கும் என்ன தொடர்பு? அப்படியே தொடர்பு இருந்தாலும் கம்யூனிசத்தின் வீழ்ச்சிதான் இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ளக் கூடாதா? அல்லது அந்த நாடுகளிருந்து விபச்சாரிகள் வரவே இல்லை என்கிறிர்களா? இந்தியா டுடே அவர்கள் பற்றிய எழுதிய கட்டுரைக்கும் அவர்கள் கம்யுனிசம் பற்றிக் கொண்டுள்ள நிலைப் பாட்டுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் தியாகம் செய்த நாடு உழைத்து முன்னேறிய நாடு என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் அதற்காக இப்போது உள்ள நிலையைப் பற்றி எழுதக் கூடாதென்பது சரியல்ல. ஒன்று அப்படி விபசாரிகள் வரவே இல்லை என்று சொல்லுங்கள். அல்லது அவர்களைப் பற்றி எழுதுவது கம்யுனிசத்தை அவமதிப்பது என்று நிரூபியுங்கள். இரண்டும் இல்லையென்றால் இக்கட்டுரைக்குப் பொருளில்லை.

  • வித்தகன்,

   முதலில் இந்தியா டுடே முன்னாள் சோவியத் நாடுகளின் சமூக பொருளாதார அலசலை செய்யவில்லை. அதற்குத் தேவைப்பட்டது அங்கிருந்து பலநாடுகளுக்கு விபச்சாரம் செய்ய செல்கின்றனர் என்ற செய்தி மட்டும்தான். அதுவும் அவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள் என்பதை எதற்கு வெளியிடுகிறது? இந்தியர்களுக்கு இருக்கும் வெள்ளைத்தோல் மோகத்தை குறிவைத்து இங்கும் வெள்ளைகள் கிடைக்கின்றன என்று அதற்கு வழிவகைகளை தொலைபேசி எண் மட்டும் தவிர்த்துவிட்டு சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த மாமா வேலையை செய்யும் இந்தியாடுடே அதற்கு சோவியத் சுந்தரிகள் என்று பெயர் போடுவதற்கு காரணம் என்ன? அந்த நாடுகளில் சோவியத் கலைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்னாள் கம்யூனிச நாடுகளிலிருந்து விபச்சாரிகள் வருகிறார்கள் என்பதை கம்யூனிசத்தோடு சேர்த்து நினைவுபடுத்தவேண்டிய அவசியம் என்ன? அங்கு விலைமாதர்கள் இருப்பதையும் அவர்கள் பலநாடுகளுக்கு இந்தியாவையும் உள்ளிட்டு செல்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் இதை கம்யூனிசத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்?

   அப்படி வலிந்து பார்ப்பதன் மூலம் கம்யூனிசத்தின் கதி என்ன வென்று பாருங்கள் என்ற இழிவான முதலாளித்துவ பக்திதான் காரணம். உண்மையில் சோவியத்நாடுகளில் முதலாளித்துவம் முழுவீச்சில் அமலுக்கு வந்த பிறகுதான் இந்த போக்கு நடைபெறுகிறது. ஆகவே இதற்கு புதிய முதலாளித்துவநாடுகளின் சுந்தரிகள் என்று பெயரிடுவதுதான் சரி. இதெல்லாவற்றையும் விட இந்தியாடுடேவின் நோக்கம் முன்னர் சொன்னது போல செக்ஸ் வெறிக்கு வெள்ளை தோல் கிடைக்கும் செல்வு ஒன்றும் அதிகமில்லை என்ற மாமா வேலையைச்செய்வதுதான். இந்திய விலைமாதர்களின் பிரச்சினை என்று பார்த்தால் கூட இந்தியாடுடே கட்டியமைப்பது போல அது அவ்வ்வளு இனிமையானதாக இல்லை.

   • இந்த பதிலிலிருந்து “சோவியத்” என்ற பதம் உங்களுக்கு உறுத்துவதாகப் புரிந்து கொள்கிறேன். இந்தியா டுடே-வின் கட்டுரையைப் படித்தால் உங்கள் மறுப்பின் ஆழம் எனக்கு இன்னும் புரியலாம். மற்றபடி முன்னாள் சோவியத் நாடுகளிலிருந்து விபச்சாரம் செய்ய பல இளம் பெண்கள் இந்திய நகரங்களில் இருப்பது உண்மைதான். அதைப் பற்றிய கட்டுரை எழுதுவது தவறாக எனக்குத் தெரியவில்லை. “சோவியத் சுந்தரிகள்” என்ற பதத்தில் “அழகி பிடிபட்டாள்” என்ற வழக்கமான தமிழ் பத்திரிக்கை (அபத்தப்) போக்குதான் தென்படுகிறது.

 18. ரஷ்ய பெண்க விபச்சாரம் செய்கிறார்கள் என்று செய்தி போட்டதுக்கு திட்டும் முன் அப்பெண்கள் விபசாரம் செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்ட ரஷ்ய கம்யுனிசத்தை மொதல்ல திட்டுங்க. இவரு முடி வெட்ட கடைக்கு போனாராம் அங்க இந்தியா டுடே இருந்ததாம். எந்த சலூன்ல இந்திய டுடே வாங்கி வைக்கறாங்க?. எனக்கு தெரிஞ்சி தினகரன், தின தந்தி மட்டுமே இருக்கும்.

  • சோவியத் என்பது மாறி எப்போது ரஷ்யா என்றழைப்பபட்டதோ அப்போதே மாற்றங்கள் ஆரம்பமாகின.  நுகர்வு கலாச்சாரம், சந்தை அதன் தொடர்சியாக விபச்சாரம். சோசலிச அரசில் உழைக்க முடிந்தவர்கள் உழைப்பது கட்டாயம் அதனால் விபச்சாரம் இல்லை.

  • ‘வல்லவனுக்கு’ புல்லும் ஆயுதம். சவரம் செய்து வழித்து எறியும் காகிதத்தில் கூட அவர் நினைக்கும் செய்தி இருந்தால் ஒரு கட்டுரை வரைவார்.சோவியத் என்றாலே உறுத்தும் அரிப்பை, பார்ப்பான் பூணல் கொண்டு சொறிந்து கொள்வார். இது அனைவரும் அறிந்தது தானே?

 19. Enathu padikkum aarvathukku yegamai theeni potavai new century veliyidukal,10 rupaikellam tharamana noolkal kidaithathu. Athu oru kana kalam.

  India today oru kupai enpathil entha santhegamum illai.anal personal escorts/massage enra peyaril varum vipasara vilamparangalum atigame,delhi english paperil pala pakkam intha vilamparam irukkum,ipothu chennai paperkalilum varukirathu,thamil nadu munnerukirathu!

 20. இது ஒன்றும் புதியதில்லை, irvin wallace, ஏற்கனவே second lady  என்ற கதையில் சோவியத் அரசே ஒரு பெண்ணை அமெரிக்காவின் முதல் பெண்ணாக தயாரித்து அமெரிக்காவின் ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாக எழுதி லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்று கோடிக் கணக்கில் சம்பாதித்தார்.  அவர்களின் வாரிசுகள் எப்படி எழுதுவார்கள்.  அதற்காக நாம் சும்மா இருக்க வேண்டியதில்லை.

 21. உலகில் அனைத்து நாடுகளிலும் (அனைத்து என்றால் அனைத்து) விபச்சாரம் இருக்கிறது. எல்லா நாட்டு பெண்களும் விபச்சாரத்தில் இருக்கின்றனர் அல்லது அந்த நாட்டு பெயரில் இருக்கின்றனர். சிங்கள பெண்களையும் இந்தியர்கள் என்று சொல்வது போல. 
  சோவியத் பெண்கள் எனில் ரஷியாவை மட்டும் குறிக்காது, ஒன்றிணைந்த
  சோவியத் நாட்டிலிருந்த மற்ற நாட்டு பெண்களும் ரஷ்ஷிய பெயரை பயன்படுத்தலாம். 

  எனினும் இந்தியா டுடே படிப்பதற்கு ஏற்ற பத்திரிக்கையே இல்லை, அது பார்ப்பதுர்க்கும் துடைபதர்க்கும் ஆன காகித ஏடு.

 22. இந்தக் கட்டுரையை வினவு தோழர்களும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
  குஷ்பு கட்டுரையில் வினவு, ஒழுக்கம் பற்றி குறிப்பிட்டிருந்தது எவ்வளவு தவறு என்பைத வினவு தோழர்கள் உணர வேண்டும்.
  இந்தியா டுடேவின் பார்வையும், வினவு பார்வையும் சில சமயங்களில் ஒன்றாகவே இருக்கும அவலத்தை உணர வேண்டும்.
  ஆனால் இ.டுடோ அயோக்கியன். வி. அப்பாவி.

 23. வினவு அவர்களுக்கு,
  சாக்( பின்னூட்டம் எண் 20 ) அவர்கள் கருத்து மிக அபத்தமாக இருக்கிறது.
  சோவியத் யூனியன் இருக்கும வரை விபச்சாரம் இல்லை. அதன் பிறகுதான் தலையெடுத்தது. ஆகவே அந்த அப்பாவிப் பெண்களை விபச்சாரம செய்யத தூண்டியது முதலாளித்துவமே.
  இது வினவு அவர்களுக்குத் தெரியாததல்ல.
  ஆனால் ஒத்துவராத மறுமொழிகள் பகுதியில வரவேண்டிய கருத்தை, பொதுவான பின்னூட்டத்தில் வெளியிட்டது வினவின் தவறே.

  • //ஆகவே அந்த அப்பாவிப் பெண்களை விபச்சாரம செய்யத தூண்டியது முதலாளித்துவமே// சென்னையில சுனாமி வந்ததுக்கும் முதலாளித்துவமே காரணம்.

  • டி.வி.எஸ்

   மாற்றுக் கருத்து நிறைய வந்தால்தானே சரியான கருத்தை பேசி நிரூபிக்க முடியும். இல்லையேல் நமது கருத்தை மட்டும் பேசிவந்தால் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அறிவதோ, அவர்களுடன் விவாதிப்பதோ சாத்தியமில்லை அல்லவா?

 24. “முதலில் இந்தியா டுடே முன்னாள் சோவியத் நாடுகளின் சமூக பொருளாதார அலசலை செய்யவில்லை. அதற்குத் தேவைப்பட்டது அங்கிருந்து பலநாடுகளுக்கு விபச்சாரம் செய்ய செல்கின்றனர் என்ற செய்தி மட்டும்தான். அதுவும் அவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள் என்பதை எதற்கு வெளியிடுகிறது?”

  ஒரு இதழ் இதை தான் வெளியிட வேண்டும் என்பதற்கான வரைமுறை மற்றும் கொட்பாடுகளுகளை வினவு தான் தீர்மானிக்கிறது என்பது இது வரை தெரியாத விஷயம்.

 25. ஆமாம் வினவு போன்றவர்கள் சோவித் விண்வெளிக்கு ராக்கெட் மேல் ராக்கெட் விட்டு காசை கரியாகி கொண்டிருந்தார்கள் .. அப்போது மக்கள் மூன்று வேளையும் மூக்கை பிடிக்க தின்று இருப்பார்களா என்ன ? ஹ்ம்ம் கம்முனிச ரஷ்ய எது செய்தாலும் சரியாக இருந்திருக்கும் என்று சொல்லுவது ஒரு வகையில் மூட நமிபிகை தான்

  • Well said… People died in millions during communist rule. Now these communists shout for death of Ambika. Though I condemn the Nokia company for Ambika’s death, I equally condemn Vinavu for politicizing everything from magazine news to death of a poor lady.

 26. பல வருடஙளாகவே , சென்னையில் கல்யாணத்திற்கு முன் கெட்டுபோனவர்கள் இத்தனை சதவீதம் , போதை மருந்து உத்கொள்ளூம் பெண்கள் இத்தனை சத வீதம் என புள்ளீ விவரமாய் எழுதுமே, அப்பொதே காசு கொடுத்து வாஙகுவதை நிறுத்திவிட்டேன்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க