உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.
மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.
பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.
வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.
எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.
அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.
தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்….
இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.
இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?
_________________________________________________________________________
டாக்டர் ருத்ரன்
__________________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !
- கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !
- ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
- தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
- சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
- அடங்கமாட்டியா நித்தியானந்தா?
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா தோழர் மருதையன் !
- செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? – தோழர் மருதையன்
- கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் ! – தோழர் மருதையன்
- பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
- முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!
- சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!
- சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?
“மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை.”
“அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள்,”
இந்த அனுதாபக் கட்டுரைக்கு எப்படி பாராட்டு எழுதுவது என்று தெரியவில்லை. மொத்த கட்டுரையையும் அப்படியே மேற்கோள் காட்டி பாராட்டுவதா அல்லது வரிக்க வரி மேற்கோள்காட்டி பாராட்டுவதா எனத் தெரியவில்லை.
அருமை..அருமை…அருமை…அருமை…
பாபாவின் பக்தர்களுக்காக நானும் அனுதாபப் படுகிறேன். பாபாவின் பக்தர்கள் கெட்டவர்களும் இல்லை, முட்டாள்களும் இல்லை. அவர்கள் அறியாமையில் இருக்கும் அப்பாவிகள். இன்னொரு பாபா முளைப்பதற்குள் நாம் அவர்களை மீட்க புதிய அவதாரம் எடுக்க வேண்டும் விரைவாய்…காரல் மார்க்சாய்…ஏங்கெல்சாய்…பெரியாராய்… லெனினாய்… மாசேதுங்காய்…பகத்சிங்காய்…
//பாபாவின் பக்தர்களுக்காக நானும் அனுதாபப் படுகிறேன். பாபாவின் பக்தர்கள் கெட்டவர்களும் இல்லை, முட்டாள்களும் இல்லை. அவர்கள் அறியாமையில் இருக்கும் அப்பாவிகள்//
பாபாவின் அனைத்து பக்தர்களையும் அப்படி பார்க்கமுடியாது. எனக்கு தெரிந்தவரையில் கார்,வீடு,பங்களா,ஏன் எழுதும் பேனா முதல் அணியும் சட்டைவரையிலும் பாபாவின் உருவப்படத்தை போட்டுக்கொண்டுத்திரியும் பெரும்பண முதலைகள்,தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் பல காண்ட்ராக்ட் கொள்ளையர்களும் பக்தர்களாக வலம் வருகின்றனர்.இவர்களை அவ்வாறு கருதமுடியாது.சரக்கடித்துவிட்டு தன்நிலை மறந்து கிடக்கும் குடிமகன்மீது என்ன அனுதாபம் கொள்ளமுடியுமோ அந்தளவிற்குதான் அப்பாவி பக்தர்களை பார்க்கமுடிகிறது. எனினும் கோடிக்கணக்கானோர் இப்படி உள்ளனர் எனும்போது கவலைக்கொள்ளச்செய்கிறது.இந்த நிலமை சமூக மாற்றத்திற்கு நம் ஒவ்வொருவரையும் முன்னிலும் கூடுதலாக அர்ப்பணிக்க கோருகிறது.
//இன்னொரு பாபா முளைப்பதற்குள் நாம் அவர்களை மீட்க புதிய அவதாரம் எடுக்க வேண்டும் விரைவாய்…காரல் மார்க்சாய்…ஏங்கெல்சாய்…பெரியாராய்… லெனினாய்… மாசேதுங்காய்…பகத்சிங்காய்…//
ஆம்.நிதர்சன உண்மை
“பெரும்பண முதலைகள்,தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் பல காண்ட்ராக்ட் கொள்ளையர்களும் பக்தர்களாக வலம் வருகின்றனர்.இவர்களை அவ்வாறு கருதமுடியாது”
சரிதான்.
“கோடிக்கணக்கானோர் இப்படி உள்ளனர்” என்கிற கவலையிலிருந்துதான் நானும் பின்னூட்டம் போட்டேன். கூடுதல் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி!
சாய்பாபா கடவுள் இல்லை மனிதன் மட்டுமே, மனிதனின் முயற்சியால் இத்துணை நாள் உயிருடன் காப்பற்றபட்டிருக்கிறார்.அவரின் சித்து வேலைகள் எதுவும் அவரை உயிர் பிழைக்க வைக்கவில்லை.இப்பொழுதுதான் அன்னா கசாரேவின் “போராட்டம்” ஓய்ந்தது,அடுத்தது சாய்பாபாவின் அற்புதங்கள்,தொடர்கிறது.
மருத்துவர் ருத்திரனின் அனுதாபங்கள் நிச்சயம் பாபா சீடர்களுக்கு அவசியம்.பாபாவின்
சீடர்கள் அறிவு மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும், அன்று சாணக்கியன் புதிய மகிமைகளை உண்டாக்க கூறினான்.இன்று,நுகர்வு வெறி பரப்பப்பட்டுள்ள்து.அதற்கேற்ப புதிய அவதாரங்களை, உண்டாக்குவார்கள்.மக்களே எச்சரிக்கையாய் இருக்கவும், இத்தகைய போலி அவதாரங்கள் புதிதாய் தோன்றாமல் காத்துக்கொள்ளவும் வேண்டும்.மருத்துவர் ருத்திரன் இது போன்று தொடர்ந்து எழுதவும் வேண்டும்.
he has died before the date he has published his ending age as 96.. recently i read some where his triplet avatar stories..
பிழை :
துப்பப்படக் காத்திருந்த
‘தொண்டை லிங்கம்’
குறுக்கால் அடைத்ததாவென்று
ஒரேயொரு முறையேனும்
வாயைப்பிளந்து பார்த்துவிட்டு,
பேஸ்மேக்கரின் மாஸ்க்கை
மூஞ்சியில் அப்பியிருக்கலாம்.
மருத்துவப் பிழை!
…………………………………….. தொடர்ந்து வாசிக்க
http://puthiyapaaamaran.blogspot.com/2011/04/blog-post_25.html
மிக ரசித்தேன்..கவிதையை .அருமை..
//அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள்//
எல்லோருமல்ல சிலர்..
வகைப்படூத்தலாம் பக்தகோடிகளை..
சிலருக்கு பேஷன். சிலர் ஒதுக்கப்படுவோமமென்ற பயம்..
சிலருக்கு மந்திரத்தில் மாங்காய் கிடைக்காதா என்ற பேராசை..
ஆன்மீகவாதி என காட்டுவதே பரலோகத்துக்கான விசா..
இப்படி
வரிக்கு வரிக்கு ஆமோதிக்கிறேன்..
Excellent article Dr,
I was awaiting for a perfect neutral approach article from atleast any one paper or visual media but all played the same tune..some tunes cannot even be heard .. it is just a sound of stupidity and single side sliding.. that is they DO NOT WANT to hurt the PEOPLES SENTIMENT AND BELIEF IS VERY IMPORTANTLY FOLLOWED BY THE MEDIA AND THE LEADERS. but when it comes to the implementation of THEIR MASTERS(iMPERIALIST ) SCHEMES THEY ARE AGAINST THE MASS SENTIMENTS AND SAYING THAT WE HAVE TO SHED OUR OLD STYLE AND CHANGE ACCORDINGLY TO THE GLOBAL SCENARIOS … …
any how dr.rudrans article is bold,clear,crisp and it is in the tradition of multiple views … i am puzzled by the whole MAIN STREAM MEDIA’s attitude of playing jalra and ching chak for the few upper middle class thoughts and activities .. the main stream media is becoming dangerous and it is not heading forward …it is going back the mono culture.. mono views… but there is a sliver line….. that is the internet is giving rise to new alternate media and this is a real threat to the TRADITIONAL MEDIA MOGHULS AND SULTANS.. Vinavu has rightly published the article of Dr. Rudrans in the right time…regards
RV
சாய் பாபா – ஒரு மாறுபட்ட அனுபவம்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html
அருள்,
தலைப்பினை தந்திரமாய் தப்பாய் வைத்திருக்கிறீர்கள்! சரியான தலைப்பு
சாயிபாபா: ஒரு பக்தனின் புலம்பல்! என்று இருந்திருக்க வேண்டும்!
அப்படியே, பங்காரு அடிகளார் பற்றி ஒரு பா.ம.க பக்தனின் பாராட்டு, பீனிக்ஸ் பறவையாய் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள்! என்ற இடுகைகளை எப்போது போடுவீர்கள்?
//ஆடுகள் தங்கள் இறைச்சியை
யாரிடம் சமர்ப்பிப்பது என
துக்கம் தாங்காமல்
தவித்துத் திரிகின்றன.// — இதற்கு மேல் என்ன சொல்ல
மூட நம்பிக்கையால் பார்வையிழந்த பக்தர்களுக்காக டாக்டர் ருத்ரன் அவர்கள் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். இனி பக்தர்கள் பார்வை பெற பகுத்தறிவு கண்ணாடி அவசியம் என்பதை உணரவேண்டும்.
சாயிபாபா பற்றிய பிரபலமான பாடல் ஒன்று! சாயிபாபா பக்தர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.
http://socratesjr2007.blogspot.com/2011/04/blog-post_25.html
சாயிபாபா என்று சொல்லுவதை விட ‘வாயி’ பாபா என்று சொல்லுவதே சாலச்சிறந்ததாகும், இவன் ஒரு கடவுள் அவதாரம் என்று நம்பி இந்தியா வந்து பாபாவின் ஆசிரமத்தில் தங்கிய பாபாவின் உண்மையான முக்த்தைகண்ட வெள்ளைக்காரன் Tal brooke என்பவர் AVATARS of NIGHT என்ற புத்தகத்தை எழுதி இந்த ‘வாயி’ பாபா நார வாயை அம்பலப்படுத்தினார்.
இந்த புத்தகம் இந்தியாவில் எங்குமே கிடைக்காதபடி செய்து விட்டார் ‘வாயி’ பாபா. அப் புத்தகத்தைப்பற்றிய முன்னோட்டமாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தி.க சார்பாக சிறு மலிவு விலை வெளியீட்டை ‘புட்டபர்த்தி சாய்பாபா’ என்றி வெளியிட்டார். (இது ஒரு முன்னோட்டம்தான் ஆங்கில மூல நூலில் முழு அசிங்கத்தையும் படிக்கலாம் இணையத்தில் படிக்க : http://www.scribd.com/doc/25212271/Avatar-of-Night-The-Hidden-Side-of-Sai-Baba-by-Tal-Brooke )
அந்நூலில் இவன் ஒரு ஓரினசேர்க்கையாளன் என்றும் இந்த கெழவி வாயனின் மடத்தில் ஏகப்பட்ட கொலைகள் நடந்திருப்பதையும் அந்த சிறு வெளியீட்டில் ஒளிபட ஆதாரங்களுடன் காணலாம். இன்றும் திராவிடர் கழக புத்தக நிலையங்களில் 5ரூபாய்க்கு இந்த வெளியீடு கிடைக்கிறது. மோடி வித்தைகள் செய்யும் இந்த கிரிமினலின் முகத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்து தொங்கவிட்டவர் பகுத்தறிவுக்காக தன் வாழ்நாளை பயன்படுத்தி அதன் விளைவாக நமக்கு சில பொக்கிசங்களை அளித்த காலம்சென்ற பேரறிஞர் ஆபிரகாம் கோவூர் அவரகள் தான், ‘வாயி’ பாபாவின் மோசடிக்கு எதிராக அவர் விடுத்த ஒரு லட்சம் பரிசு சவால் மிக பிரபலமானது.(காண்க:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)
இப்படி அம்மணப்பட்டதால் ‘வாயி’பாபாவின் பக்த கேடிகளின் எண்ணிக்கை ஒன்றும் குறையவில்லை மாறாக அதிகமானதுதான் நிதர்சனம்,
காரணம்? இந்துத்துவ பார்ப்பன ஊடகங்கள்தான் , மதங்கள் என்பதே பெருபான்மையினரை சிறு குள்ளநரிக்கூட்டம் சுரண்டுவதற்கான அடிப்படையே இது எல்லா மதங்களுக்கு முள்ள ஒத்துமை, அந்தவகையில் ‘வாயி’பாபா போன்ற அவதாரங்கள் தேவைப்படுகிறார்கள் மக்களை மேலும்,மேலும் பிற்போக்கு பழமைவாதத்தில் மூழ்கவைப்பதற்கு ‘வாயி’பாபா போன்ற கேடிகள் தேவைப்படுகிறார்கள், சாயிபாபா ஒரு ஓரினபாலியில் உறவுத்துக்கொள்பவன், திருட்டுநாயி என்பதெல்லாம் இந்த பார்ப்பன ஊடகங்களுக்கு தெரியாமலுமில்லை, அவர்களை பொறுத்தவரையில் இப்படி பட்ட கல்லூளி மங்கன்கள் தேவை , இவன்கள் மூலம் இந்து மதம் அவ்வப்போது update செய்யப்படுகிறது,
ஒரு 30 வருடங்களுக்கு முன் ‘வாயி’பாபா இறந்திருந்தால் உண்மையில் பார்ப்பன இந்து மத ஊடகங்கள் அதிர்ச்சியடைந்திருக்கும், அன்னைக்கு சூழலில்
‘வாயி’பாபா தான் பிரபலம் வேறு ஆள் கிடையாது, இதையெல்லாம் முன்னாடியே யோசித்து, எதிர்காலத்தில் அவதாரங்களுக்கு தட்டுப்பாடு வரக்கூடாது என்று எண்ணி, இன்றைக்கு நிறைய அவதாரங்களை பார்ப்பன இந்து மத ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. ஒருவன் செத்தா, இன்னொருத்தன் என நிறைய அவதாரங்களை ரெடி ஸ்டாக்காக வைத்து இருக்கின்றன, இன்றைய சூழலில் ‘வாயி’பாபா பாடையில் போனதற்கு
பார்ப்பன இந்து மத ஊடகங்களுக்கு ஒரு வகையான மகிழ்ச்சியே, இனி இந்த ‘டோப்பா’ தலையனின் சிலையை வைத்தே செம்ப்ளிஆட்டு மந்தைகளை பிற்போக்கு பழமைவாதத்தில் மூழ்கவைப்பார்கள்.சுரண்டி கொழுப்பார்கள்.
ஒரு தகப்பனின் சொத்து மகனுக்கோ,மகளுக்கோ சேர்வது போல,சத்யமா செத்த
சாயிபாபாவின் சொத்து அந்த ஆளோடைய பக்தர்களுக்கு சேரவேண்டயது
முறைவழிதானே.பணக்கார பக்தர்கள் வேண்டாம் என்று சொன்னாலும்
கஞசிக்கு இல்லாத பக்தனுக்கு சேருமா? கடவுளின் பிள்ளைகள் கஞ்சிக்கு இல்லாம
சாகக்கூடாது பாருங்க!!!பக்தி முத்தி பட்னியால் செத்தாலும் பக்தியிலிருந்து
ஏழை பக்தன் விடுபட மாட்டேன்கிறானே?
well written article by Dr.Rudran.
From advani to sachin all crying for babji.Realy they know Why they are crying for him, it is all about the class where they stant in society.But the public does not know the story of they forced to cry for the stupid magician. If they understand the story, Then these bulshits will act like this.
இந்தக்கட்டுரையை எனது தளத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.
டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.
தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?
Dinamani -Editorial உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பக்தர்களைப் பெற்றிருப்பது அத்தனை சுலபம் அல்ல. அதிலும், அறிவுஜீவிகளையும் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள மெத்தப்படித்த மனிதர்களையும் பக்தர்களாக ஆட்கொள்ள முடிந்தது என்றால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியவர் சாய் பாபா.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ மேஜிக் என்றோ தள்ளிவிடவா முடியும்? பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரும், தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் சட்ட அமைச்சர் துரைமுருகனும்கூட சத்ய சாய் பாபாவின் அபிமானிகளாக மாறி இருக்கிறார்கள் என்றால் பாபாவின் பேராற்றலை சித்து விளையாட்டு என்று வர்ணிக்கவா முடியும்?
கூவத்தைச் சுத்தப்படுத்தி லண்டன் தேம்ஸ் நதிபோல மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதோ நிதியுதவி நான் தருகிறேன் என்று முன்வந்தது நாத்திகவாதியோ, பகுத்தறிவுவாதியோ அல்ல, சாய்பாபா என்கிற ஆன்மிகவாதிதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் அறக்கட்டளையிலிருந்து பொது நன்மைக்குச் செலவிட்டதைவிட, தனியார் கல்லூரிகளை நிறுவி அறக்கட்டளையின் சொத்துகளை விரிவுபடுத்த முற்படும் நேரத்தில், இந்த ஆன்மிக ஞானியின் செயல் நம்மை அவரைத் தலைவணங்கச் செய்கிறது என்பதுதானே நிஜம்?
அவர் முன்பாக உட்கார்ந்தால் மனாமைதி ஏற்படுவதாகவும் அதனால்தான் அங்கே செல்வதாகவும் கூறியவர்கள் பலர். அவர் முன்பு உட்கார்ந்திருந்த போதுதான், தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வு கண்டதாகச் சொல்லிய அரசியல் தலைவர்களும், நிர்வாகிகளும், மருத்துவர்களும், தொழிலதிபர்களும் பலர். அவரிடம் மானசீகமாக முறையிட்டு வீட்டுக்கு வந்தபோது, வேண்டிய காரியம் நடந்திருப்பதைக் கண்டேன் என்று குசேலரைப்போல மகிழ்ந்தவர்கள் பலர்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு இன்றைய அறிவியலும், பாராசைக்காலஜி ஆய்வுகளும் தெரிவிக்கும் முடிவுகள் பதிலாக அமைந்திருக்கின்றன. ஒரு மனிதர் தன் மனஒருமைப்பாட்டின் உச்சநிலை அடையும்போது- அதாவது எண்ணங்கள் இல்லாத, மனது அற்றுப்போன பரிசுத்த நிலையில் இருக்கும்போது- மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியில் ஒருவித திரவம் சுரக்கிறது. அது அதீத ஆற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. சக்தியை அலையலையாக வெளியிடுகிறது. இந்த சக்தி, அடுத்தவரின் செல்களில் மாறுதல் நிகழ்த்தும் அளவுக்கு இருக்கிறது. ஆகவே, அந்த மகான் தொட்டதால் ஒரு பக்தர் குணமானார் என்பது வெறும் கதைகள் அல்ல என்று இன்றைய பாரா சைக்காலஜி ஆய்வுகள் சொல்கின்றன.
இந்த மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கியதோடு, கடந்த அரை நூற்றாண்டு காலக்கட்டத்தில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புக்கு சொத்துகளை உருவாக்கி, அதில் பள்ளிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனை என்று மக்கள் அளித்ததை மக்களுக்காகத் திருப்பி அளித்த மகாத்மா என்கிற அளவில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே மகான்களுக்கே என்பதை மன்பதைக்கு நிரூபித்தவர்.
அவர் லிங்கம் எடுத்துக் கொடுத்ததும், மாலைகள் வரவழைத்ததும் மாயவித்தைகளா அல்லது அருள்வலியா என்பதெல்லாம் வீண் வாதங்களில் போய் முடியும். ஆசிரமத்தில் நடைபெற்ற ஒரு கொலை மற்றும் சில சம்பவங்களை வைத்து, பாபாவைக் குற்றம் சுமத்தியவர்கள்கூட, பின்னாளில் அவரது மானுடச் சேவையின் முன்பாக மண்டியிட்டுத் தலை கவிழ்ந்தார்கள். பிறரது குற்றச்சாட்டுகளுக்கும் வசைச் சொற்களுக்கும் மதிப்பளிக்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பெருமானைப் போல மக்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தார். அவதூறு பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், பயணம் தடைபடும், பாதைகள் மாற நேரும் என்பதை உணர்ந்திருந்த மகான் அவர். யாருடைய குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் கூறியதில்லை.
பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.
“உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு’ என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.
க
புட்டபர்த்தி சாய்பாபா; கடவுளின் அவதாரமா ? கபட வேடமிடும் செப்படி வித்தைக்காரனா?
சாய்பாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தும் இணையதளம்
http://www.exbaba.com
சாய்பாபாவின் மோசடிகளை யூடுயூபில் காட்சிகளாகக் காண இங்கே சொடுக்குக!
you tube : Sai Baba Tricks Completely Exposed, Satya sai baba fraud, Sai Baba’s magic trick
you tube : Sai Baba – is he cheating?
you tube : sai baba
you tube : sai baba cheat all followers
you tube : sai baba cheating proof
you tube : Cheating people by Sai Baba ( Tamil)
you tube : CHEATING SAI BABAHYPERLINK “/watch?v=yJBFbUaFbwY”
you tube : Sai Baba disgusting cheat.flv
you tube : Sai Baba Exposed – Part 1 of 4
you tube : Tv9 – Shiva Sai Baba’s magic tricks
you tube :Tv9 – Bala Sai Baba produces lingam on Maha Shivaratri – Part 5
you tube : Baba cheating with lingam
you tube : Sai Baba: Deceiving the Gullible: http://www.youtube.com/watch?v=eTPDc5c36S8
you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.
நன்றி: http://www.thippuindia.blogspot.com
புட்டர்த்தி சாய்பாபா; கடவுளின் அவதாரமா ? கபடவேடமிடும் செப்படி வித்தைக்காரனா?
சாய்பாபா கடவுளின் அவதாரமாக சொல்லிக்கொண்டு செய்யும் அற்புதங்கள் அனைத்தும் தந்திர வேலைகளே என்று பகுத்திறவு இயக்கத்தினர் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.மேலும் சாய்பாபா ஒரு கீழ்த்தரமான பாலியல் குற்றவாளி என்பதும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.தனது பாலியல் இச்சைகளுக்கு அவர் ஆசிரமம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுவர்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.சாய்பாபாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களே கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உண்டு.
இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.இக்குற்றச்சாட்டுகள் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால் (BBC) ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டு கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளன.அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ஒளிப்பட தொகுப்பை கீழ்காணும் சுட்டிகளில் காணலாம்.
http://www.youtube.com/watch?v=jjRaReI5b2Q&feature=related
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&NR=1
http://www.youtube.com/watch?v=i1cNHc6lask&NR=1http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&NR=1
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&NR=1
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&NR=1
பார்த்துவிட்டீர்களா நண்பர்களே.இப்போது சொல்லுங்கள்.சாய்பாபா கடவுளின் அவதாரமா இல்லை செப்படி வித்தையால் ஊரை,அல்ல,உலகை ஏய்க்கும் கயவனா.
இது தவிர சாய்பாபா பணத்தின் மீது பேராசை கொண்டவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.தனது பக்தர்களை தாராளமாக ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்ய தூண்டும் பாபா பக்தர்கள் தங்களது சொத்துக்களை ஆசிரமத்துக்கு தானமாக அளிப்பதையும் ஊக்குவிக்கிறார்.அவ்வாறு விசயவாடாவை சேர்ந்த ஒரு மூதாட்டி அவர் இறந்தபின் அவரது வீடு பாபாவின் ஆசிரமத்துக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது 55 -வது வயதில் உயில் எழுதி வைத்த பாவத்திற்காக உயிருடன் இருக்குபோதே வீட்டை பாபாவின் ஆசிரமத்திடம் பறி கொடுத்த பரிதாபத்தை கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
http://exposedsaibaba.blogspot.com/
ஆக கொலைக்கஞ்சா கொடியவர்களின் ஆசிரமத்தின் தலைவர்,தெருவோரத்தில் வித்தை காட்டி பிழைக்கும் செப்படி வித்தைக்காரனின் தந்திர வேலைகளை அற்புதங்கள் போன்று செய்துகாட்டி ஏய்க்கும் ஒரு மோசடி பேர்வழி, பேராசை கொண்ட ஒரு பணப்பேய் கடவுளின் அவதாரமாக இருக்க முடியுமா?
சாய்பாபாவை கடவுளின் அவதாரமாக நம்புவோரிடம் நாம் கேட்க விரும்பும் சில கேள்விகள்.
சாய்பாபா தங்கத்தாலான கடவுள் சிலையை (லிங்கம்) வாயிலிருந்து அல்லது வயிற்றிலிருந்து எடுக்கிறார்.அவரே படைத்த ஒரு பொருள் போல் அதை பக்தர்கள் என்ற பேரில் கூடியிருக்கும் ஆட்டு மந்தையிடம் காட்டி கை தட்டல் பெறுகிறார். காற்றில் கையை சுழற்றி தங்க சங்கிலி வரவழைக்கிறார்.வெறும் கையால் தங்க மோதிரத்தை தருவிக்கிறார்.இவையெல்லாம் உண்மையென்றால்,வெறும் காற்றிலிருந்தும் தனது வயிற்றிலிருந்தும் இவ்வளவு செல்வங்களை படைக்க வல்ல சாய்பாபா இப்படி தங்க கட்டிகளை படைத்து இந்தியாவின் உள்நாட்டு,வெளிநாட்டு கடன் அத்தனையும் அடைத்துவிடலாமே.ஏன் செய்யவில்லை.
தங்கத்தையே வரவழைக்க வல்லவர் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது ஏன்.
கொல்லர் பட்டறையில் தங்க நகை உருவாகும்.மனிதனின் வயிற்றில் என்ன உருவாகும்.சாய்பாபா வயிற்றில் தங்கம் உருவாகிறதென்றால் பெரும் பொருட்செலவில் கோலார் தங்க வயலில் தேடுவதற்கு பதிலாக சாய்பாபாவை வைத்து வேண்டிய அளவுக்கு தங்கத்தை தேடிகொள்ளலாமே. இந்திய அரசுக்கு இந்த யோசனையை நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை.
சாய்பாபா கடவுளின் அவதாரம் என்றால் 50 களில் துள்ளி திரிந்த அவர் கடந்த சிலபல ஆண்டுகளாக தள்ளாமையால் தடுமாறுவது ஏன்.
தனது தள்ளாமையையும் மூப்பையும் சமாளிக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து வரும் ,சமயங்களில் சக்கர நாற்காலியில் வரும் , பாபா பக்தர்களின் குறைகளை தீர்த்து விடுவார் என்பதை நம்ப முடியுமா.
எண்ணிப்பாரீர்.
நமக்கு தெரிந்த இந்த உண்மைகள் நாட்டின் முதன்மருக்கும் மாநில முதல்வர்களுக்கும் தெரியும்தானே. அப்படியிருந்தும் அவர்கள் பாபாவை பணிந்து நிற்பதேன்.இந்த கேள்விக்கு விடை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.மேற்கண்ட இந்து நாளிதழின் செய்தியிலேயே இதற்கு விடை இருக்கிறது.
அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரும்புள்ளிகளின் பட்டியல்.
1.நாட்டின் முதன்மர்.மன்மோகன்.
2.ஆந்திர முதல்வர்.
3.கர்நாடக முதல்வர்.
4.தமிழக துணை முதல்வர்.(பெரியார் இல்லாதது வசதியாக போய்விட்டது .)
5.அண்மையில் மகராட்டிர முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான்.
6.ஆந்திர ஆளுநர்.
7.பஞ்சாப் ஆளுநர்.
8.திரிபுரா ஆளுநர்.
9.டாட்டா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாட்டா.
10.டி.வி.எசு.நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்.
இப்படி பெரும்புள்ளிகள் ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏன் ஒன்று கூடவேண்டும். ஓரிரு பிரபலங்கள் போதாதா.உண்மையில் ஆட்சியில் இருப்போருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும்,பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான வேலைகளை செவ்வனே முடித்து தரும் தரகு வேலையைத்தான் பெரும்பாலான சாமியார்கள் செய்து வருகிறார்கள்.அந்தவகையில் தாங்கள் வேலைகளை சாதித்து கொள்வதற்காகவே பெரும்புள்ளிகள் மடங்களையும் ஆசிரமங்களையும் தேடி வருகின்றனர்.அப்படிப்பட்ட தரகர்களின் முன்னணி வரிசையில் உள்ளவர்கள்தான் சாய்பாபாவும் அவரது அல்லக்கைகளும்.இத்தகைய விழாக்கள் அவர்கள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பு,ஒரு சாக்கு.
அதனால்தான் பாபா போன்றோரின் குற்றவியல்,பொருளாதார,பாலியல் குற்றங்கள் மூடி மறைக்கப்பட அரசுகள் உடந்தையாக உள்ளன.ஆசிரமத்தில் கொலையே நடந்தாலும் முதல்வர்கள் தொழுது வணங்கும் பாபா மீதோ அவரது அடிவருடிகள் மீதோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு துணிவு வருமா என்று எண்ணிப்பாருங்கள்.
இப்படியான பின்னணியில்தான் சாய்பாபா அப்பழுக்கற்றவர் போல் நடித்து கடவுளின் அவதாரம் என்று நாடகமாட முடிகிறது.பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெறாதவரை பாபாக்களுக்கு கொண்டாட்டம்தான்.
சாய்பாபாவின் மோசடிகளை யூடுயூபில் காட்சிகளாகக் காண இங்கே சொடுக்குக!
you tube : Sai Baba Tricks Completely Exposed, Satya sai baba fraud, Sai Baba’s magic trick
you tube : Sai Baba – is he cheating?
you tube : sai baba
you tube : sai baba cheat all followers
you tube : sai baba cheating proof
you tube : Cheating people by Sai Baba ( Tamil)
you tube : CHEATING SAI BABAHYPERLINK “/watch?v=yJBFbUaFbwY”
you tube : Sai Baba disgusting cheat.flv
you tube : Sai Baba Exposed – Part 1 of 4
you tube : Tv9 – Shiva Sai Baba’s magic tricks
you tube :Tv9 – Bala Sai Baba produces lingam on Maha Shivaratri – Part 5
you tube : Baba cheating with lingam
you tube : Sai Baba: Deceiving the Gullible: http://www.youtube.com/watch?v=eTPDc5c36S8
you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.
சாய்பபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தும் இணையதளம்
http://www.exbaba.com
தோழமையுடன்
பி.இர.அரசெழிலன்
ஆசிரியர்: நாளைவிடியும் இருதிங்களிதழ்
திருச்சி
மின்னஞ்சல் : arasezhilan_1964@yahoo.co.in
arasezhilanpr@gmail.com
வலைப்பதிவு : http://www.naalaividiyum.blogspot.com
http://www.periyaariyal.blogspot.com
http://www.ambethkariyam.blogspot.com
http://www.thamizhpeyargal.blogspot.com
http://www.penniyakkural.blogspot.com
http://www.aravaanigal.blogspot.com
மிக அருமை….
intha ma(a)kkal ippothu adutha baba vai thedi kondirukirarkal…
[…] சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதல… […]
>>.வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று >>.சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை >>வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று >>கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.
This is not a valid point. There are so many rich people and magicians in this world. No one calls them as god. No one claims them as god.
Since spirituality is required for all people, there must be some attractions created to attract people.
We can’t confirm anything by allegations.
Don’t struck at body and mind level. They are not permanent. The source of it is
permanent. try to know your self.
If one suffers from un curable diseases, when one heals it, then that person is a god for him.
There is no use in writing books(doing something) which common people don’t understand/benefit.
SPENDING TIME ON SUBJECTS USEFUL FOR THE COMMON PEOPLE IS WISE.
Thanks
Balu
[…] சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதல… […]