முகப்புஉலகம்அமெரிக்காதண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

-

மான்டெக்-சிங்-அலுவாலியாஅரசுத்துறை நிறுவனங்களையும் இயற்கை மூலவளங்களையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துவரும் இந்திய ஆட்சியாளர்கள்,  இயற்கையின் கொடையான தண்ணீரையும் தனியார்மயமாக்க மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார்கள்.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை பெருமுதலாளிகளின் இலாபத்திற்கான வணிகப் பொருளாக, காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றும் அநீதியை கொள்கை அறிவிப்பாக இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது (PDF).

“தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012” என்ற 31.1.2012 தேதியிட்ட அறிவிக்கையை இந்திய நீர்வள அமைச்சகம் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமாம். இவற்றைப் பரிசீலித்து இந்த வரைவு அறிக்கை இறுதியாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீரை வியாபாரப் பண்டமாக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும் என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த நகல் அறிக்கையின் தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில், உலக வங்கியின் கைக்கூலியும் திட்டக் கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா, “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான்  தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று திமிராக அறிவித்தார். அவரது வழிகாட்டுதலில் தயாராகியுள்ள இந்த வரைவு அறிக்கையானது, விவசாயத்துக்கும் குடிமக்களுக்கும் எந்த வடிவத்திலும் தண்ணீருக்காக மானியம் அளிப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மானியம் அளிப்பது  வீண்விரயமாக்கும் செயல் என்கிறது.

“உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் இந்தியர்கள் 17 சதவீதத்தினர். ஆனால், உலகப் பரப்பில் உள்ள நீர்வள ஆதாரம் வெறும் 4 சதவீதம்தான். புவி வெப்பமடைகிறது. உயிராதாரமான நீர் பற்றாக்குறையாகி வருகிறது” என்றெல்லாம் கவலையோடு முன்னுரையாக இந்த வரைவு அறிக்கை கூறுகிறது. பின்னர் “கவலைப்படாதே சகோதரா! இதோ தீர்வு கிடைத்துவிட்டது;  இயற்கை மூலவளங்களையும் நீராதாரங்களையும் தனியார் முதலாளிகளுக்கு விற்று விடலாம்” என்கிறது.

தண்ணீர்-தனியார்மயம்-3புதிய தேசிய நீர் கொள்கையின்படி, தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். இருப்பினும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமக்களுக்கு அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவு தண்ணீரைக் கொடுக்க உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது, அரசாங்கங்கள் தனியாரிடமிருந்து தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை “இலவசத் தண்ணீர்” அல்லது “விலையில்லாத் தண்ணீர்” என்ற பெயர் வைக்கும் உரிமை மட்டுமே அரசாங்கத்திடம் இருக்கும். ஏனெனில், சேவை அளிப்பவர் என்ற பொறுப்பை அரசாங்கங்கள் படிப்படியாகக் கைவிட வேண்டும் என்கிறது இக்கொள்கை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யுமாம். மின்சாரக் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிப்பதைப் போல, தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் தண்ணீர்க் கட்டணத்தை நிர்ணயிக்குமாம்.

அப்படியானால் தண்ணீரின் விலை எவ்வளவு? நீர்த் திட்டங்களின் நிர்வாகம், விநியோகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளை முழுமையாக வசூலிக்கின்ற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று கந்துவட்டிக்காரனைப் போல கூறுகிறது இக்கொள்கை அறிக்கை. அதாவது, காசிலிருந்தால் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால், நாவறண்டு குடிமக்கள் சாக வேண்டும் என்கிறது, இந்தக் கொள்கை அறிக்கை. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் கழிவு நீரைச் சுத்திகரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டும் என்கிறது. சாதாரணக் குடிமகன் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். தண்ணீர் முதலாளியாய் இருந்தால் மானியமும் ஊக்கத்தொகையும் தரப்படுமாம்.

இந்த வரைவு அறிக்கை இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல. “தேசிய நீராதார திட்ட வரைவுக்கான பரிசீலனை  சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையை உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு2030” என்ற அமைப்பு இந்திய அரசின் திட்டக் குழுவிற்கு வழங்கியது. இந்த “நீர்ஆதாரக்குழு2030” என்ற அமைப்புக்கு கோக், பெப்சி, யுனிலீவர், கார்கில், மெக்கன்சி முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்  நிதிவழங்கும் புரவலர்களாக உள்ளன.

இந்த நீர் ஆதாரக்குழு, கடந்த 2011 அக்டோபரில் இந்திய திட்டக் கமிசனுக்கு அளித்த திசைவழி அறிக்கைதான், அப்படியே எந்த மாற்றமுமின்றி “தேசிய நீர்க் கொள்கை2012” என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகல் கொள்கை அறிக்கை தயாரிப்பதில் செல்வாக்கு செலுத்திய பெருந்தொழில் நிறுவனங்கள், இப்போது இந்த அறிக்கையை வரவேற்று ஆதரிக்கின்றன. ஃபிக்கி எனும் பெருமுதலாளிகளின் சங்கத்தின் முதுநிலை துணை இயக்குநரான ரொமித் சென், தண்ணீருக்கு முறையான விலை வைப்பதன் மூலம் தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும் என்று இந்த வரைவு அறிக்கையைப் பாராட்டுகிறார். இவையனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் கொள்ளைக்காகவே தண்ணீர் தனியார்மயமாக்கப்படுகிறது என்பதையும், ஆட்சியாளர்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருப்பதையும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஏற்கெனவே உள்ள 2002ஆம் ஆண்டின் தேசிய நீர்க் கொள்கையானது, பொது நீராதாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமையைத் தீர்மானித்திருந்தது. இதன்படி, குடிநீர், விவசாயம், நீர் மின்சாரம், சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடு என்ற வரிசையில் முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போதைய வரைவு அறிக்கையில் இத்தகைய முன்னுரிமை தீர்மானிக்கப்படவில்லை. அதாவது, குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்தாலும், தண்ணீர் இல்லாமல் விவசாயப் பயிர்கள் கருகிக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை தரப்படாமல், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கும், வாட்டர் போலோ போன்ற தண்ணீரில் நடக்கும் மேட்டுக்குடியினரின் கேளிக்கை விளையாட்டுகளுக்கும்  தண்ணீர் தாராளமாகத் தரப்படும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநிலப் பட்டியலின் 17வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை உள்ளன. புதிய வரைவுக் கொள்கையானது,  மாநில அரசின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது இந்திய அரசின் நேரடி அதிகாரத்துக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்கிறது.

1882ஆம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது புதிய கொள்கை. ஒரு ஊரில் பொதுச் சொத்தாக உள்ள ஏரியோ அல்லது வளமான நீர் நிறைந்த ஒரு விவசாயியின் கிணறோ  இருந்தால், இனிமேல் அவை அவர்களுக்குச் சொந்தமில்லை. அதனைக் கட்டுப்படுத்தி விநியோகிக்கும் பொறுப்பை ஒழுங்குமுறை ஆணையம் பறித்துக் கொள்ளும்.

குடிமக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அரசாங்கம் உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று இந்த நகல் அறிக்கை கூறினாலும், இதனை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை.  அத்தியாவசியத் தேவையான பால், மின்சாரம் போன்றவற்றைப் போலவே குடிநீர் கிடைக்கவும் உத்திரவாதம் செய்துள்ளோம், காசுள்ளவர்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டியதான் பாக்கி.

தண்ணீர்-தனியார்மயம்-2

தென்னமெரிக்காவிலுள்ள ஏழை நாடான ஈக்வடார், மனித இனம் மட்டுமின்றி இயற்கையும் உரிமைகளைப் பெற்றிருப்பதாக 2008ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதன்படி இயற்கையின் அங்கமான மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் பொதுச் சொத்தான தங்களை வணிகப் பொருளாக்குவதையோ, கழிவுகளைக் கொட்டி நாசமாக்குவதையோ எதிர்த்து தங்களது வாழும் உரிமைக்காக, தங்கள் சார்பில் மனித இனத்தைக் கொண்டு வழக்கு தொடுத்து போராட முடியும். ஈக்வடார் நாட்டின் வழியில் பொலிவியாவும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. “தாய்மண் சட்டம்” என்றழைக்கப்படும் இச்சட்டம், மனித இனத்துக்கு இணையாக இயற்கைக்கும் சமமான உரிமைகளை அளித்துள்ளது. இதனை மேலும் 12 நாடுகள் சட்டமாக்க ஆலோசித்து வருகின்றன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் வழியில் தாய்மண்ணின் உரிமைக்கான பிரகடனத்தை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று பொலிவியா முன்மொழிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இருந்துகொண்டு வல்லரசாகத் துடிக்கும் இந்திய அரசோ, தண்ணீரைத் தனியார்மயமாக்க மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். எனவே தண்ணீரை எவனுக்கும் தனியுடமையாக்கக் கூடாது. தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது. உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றாலே இத்தனியார்மயத்தை இன்றே இப்பொழுதே எதிர்த்துப் போராடி வீழ்த்த வேண்டும். பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் பெக்டெல் எனும் ஏகபோக தண்ணீர் நிறுவனத்தை விரட்டியடித்ததைப் போல, தண்ணீரைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யவரும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும் அதற்குக்கைகட்டிச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து போராட வேண்டும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விசயம்…

  முதலாளித்துவ நாடுகளைப்பார்த்து அலைவரிசை ஏலக்கொள்கையை வகுத்ததால் சாமானியர் யாருக்கும் லாபமில்லை…மக்களுக்கு பயனளிக்கும் 700மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசயையும் ரானுவமும் அரசாங்கமும் வைத்துள்ளதால் யாருக்கும் பயனில்லை…

  இப்படியே விட்டால் இவர்கள் நம் மூக்கில் மீட்டர் மட்டி ஆக்சிஜனுக்கும் காசு பிடுங்குவார்கள்…

  • டாஸ்மார்க் தண்ணீர் தரும் போதையிலிருந்து விடுபட்டாலல்லவா வாழ்வாதாரமான குடி தண்ணீரைப் பற்றி நம் மக்கள் யோசிக்கப்போகிறார்கள்?

 2. என்ன வீரன் நீங்க….. இந்தியா வல்லரசு ஆகணுமா வேண்டாமா….

   • நீங்க விஜயகாந்த், அர்ஜூன் அப்புறம் மணி மாமா படம் பாக்கரதில்லையா?என்ன

  • நல்லரசானால் போதும் சாமி…இந்த வீனாப்போன வலிமையெல்லாம் வேண்டாம்…
   நல்லரசாக நம்மை காப்பற்றிக்கொள்ளும் வலிமை இருந்தால் பொதும்….

   • என்ன நீங்க விஜயகாந்த், அர்ஜூன் அப்புறம் மணி மாமா படம் பாக்கரதில்லையா?

 3. மின் கட்டண உயர்வைப் பற்றிய கட்டுரையின் தாக்கத்தினால் ஏற்பட்ட கோபம் அடங்குவதற்கு முன் தண்ணீருக்கும் காசா? என்றதும், எதை ஊற்றி இரண்டையும் அணைப்பது என்பது புரியவில்லை. இதுவும் சரிதான் என்று இந்தியன்கள் பின்னூட்டம் இடக் கிளம்பிவிடுவார்கள். இப்போது தான் புரிகிறது. நக்ஸலைட்டுகள் ஏன் உருவாகின்றார்கள் என்று.

  • இதனால் தான் நக்சல்பாரிகள் உருவாகிறார்கள் என்று சொன்னால் அதை தடுக்க அரசு கொண்டு வரும் சிறப்பு திட்டங்களால் நக்சல்பாரிகளை ஒழிந்துவிட முடியுமா என்ன ? நக்சல்பாரிகளை படைப்பது வறுமையல்ல தமிழ் வரலாறு.

   • வறுமையினால் நக்ஸல்பாரிகள் உருவாகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை. அப்படியென்றால் இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் நக்ஸல்பாரிகளாக மாறியிருக்க வேண்டும். நமக்கான அடிப்படை உரிமை பறிக்கப்படும்போது அல்லது மறுக்கப்படும்போது பொறுமையிழந்த சாதுவான மனிதனும் வேறு வழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    • ஆம். குட்டக்குட்ட குணிந்து கொண்டிருக்கும் மக்கள் குமுறி கொந்தளிப்பார்கள்.

 4. Without water and air no one can survive..Oxygen is very mcuh essential for our lives, but in the name of development more and more trees are being cut, and also due to the shortage of water more and more agricularural lands are being converted into layouts for building aprtments…As some one has rightly said: ANATHU NILATHIL CHOLAM. KRUMBU AAKIYAVATTRAI VITAHITHEN…NASHTAM THAN VANDAHTHU…LAYOUT POTTEN AHIKA LABAHAM VANDHATHU…”
  Who is responsible for thsi?

 5. ஆற்றல், ஒளி(அலைவரிசை), உணவு, இருப்பிடம் அனைத்தையும் தனியார் மயமாக்கி ஆகிற்று. இப்பொழுது தண்ணீர், பின்னர் காற்று. இன்னும் உயிர் ஒன்றுதான் மிச்சம். அதையும் சீக்கிரம் தனியாரிடம் ஒப்படைத்து விடுங்கள் திரு. மண்மோகன் சிங்கமே. பின்னர் பிறப்பதற்கு வரி வசூலித்துக் கொள்ளலாம். வரி கட்டாதவர்களை கொன்று விடலாம். நம் நாட்டு பிரதமர் அவர்கள் கடவுளைப் போல் கருணை உள்ளம் படைத்தவர் ஆவார்.

 6. Dear Vinavu
  Perfect article with the timing precision !

  Healthcare,Education,Infrastructure,
  Public sector companies,Telecommunications,
  Electricity,Coal,Minerals,Mountains,
  Now
  Water .. ! all gone ! Is there anything left to sold out in this country ?

  I hope there is nothing balance in the basket .

  Regards
  GV

 7. இந்த மாமா பயல்கள் பத்து தலைமுறைக்கு சொத்து
  சேர்த்து வைத்திருக்கும் காலிப்பயல்கள்.இவர்களது
  வாரிசுகள் தண்ணீரை என்ன சுவாசிக்கும் காற்றை
  கூட விலை கொடுத்து வாங்குவார்கள்.ஆனால் நம்
  மற்றும் நம் எதிர்கால சந்ததியின் நிலை?
  நாத்திகவாதிகளின் கருத்து சரிதான் போலும்.
  ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் இந்த நாய்களை,
  முடிவை எடுத்து மக்கள் மீது திணிக்கும் அதிகாரம்
  உள்ளவர்களாகவும்,அறச்சீற்றம் கொள்ளும் நம்மை
  வெறும் பொருமும்,எழுதும்,ஆதங்கம் கொள்ளும்
  கூட்டமாக வைத்திருப்பானா?
  பொலிவியா! அங்கே சூடு சுரணை உள்ள
  மனிதர்கள் வாழ்கிறார்கள்.

 8. //தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. //

  ஒரு வேலை பொறுப்பில்லாத அரசாங்கம் என்று நாம் அடிக்கடி சொல்லுவதை மன்மோகனும் அலுவாலியாவும் ரூம் போட்டு யோசனை செய்து செயல்படுத்துறாங்க போல.

  அடுத்த முறை தேர்தலுக்கு கூட தேர்தல் ஆனையத்தை தனியாருக்கு கொடுத்துவிடலாம் என்று அலுவாலியா யோசனை சொல்லியிருக்காராம் என் என்றால் தேர்தல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பணயிலப்பு அதிகமாக இருக்காம். தேர்தல் ஆனையத்தை தனியார் நிறுவனம்மாக மாற்றுவதை ஊக்குவித்தால் தான் அரசின் கஜானா காப்பாத்தப் படுமாம்.

  //தண்ணீரை வியாபாரப் பண்டமாக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும் என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது//

  நாலை முதல் காலை கடன் முடித்த பிறகு யாரும் தண்ணீர் உபயோக படுத்த கூடாது. அப்படி செய்தால் அது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை உறியதாகும்.

  பொது மக்களே தண்ணீர் அதிகமாக குடித்து சிறுநீராக விரயமாக்காதீர்கள் அது தேசத்தின் மீது போர் தொடுப் பதாகும்.

  //கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த நகல் அறிக்கையின் தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில், உலக வங்கியின் கைக்கூலியும் திட்டக் கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா, “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று திமிராக அறிவித்தார்//

  அடுத்த ஆண்டு அவர் எனென் சொல்லுவார் என்று இப்போதே சொல்றேன் அப்புரம் இது முன்னாடியே சொல்லி இருந்தா என்று யாரும் நீட்டி முலங்க கூடாது “இந்தியாவில் இலவசமாக கிடைப்பது மலம் தான். இதை மாற்றியமைக்க வேண்டும்”

  //“உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் இந்தியர்கள் 17 சதவீதத்தினர். ஆனால், உலகப் பரப்பில் உள்ள நீர்வள ஆதாரம் வெறும் 4 சதவீதம்தான். புவி வெப்பமடைகிறது. உயிராதாரமான நீர் பற்றாக்குறையாகி வருகிறது” என்றெல்லாம் கவலையோடு முன்னுரையாக இந்த வரைவு அறிக்கை கூறுகிறது. பின்னர் “கவலைப்படாதே சகோதரா! இதோ தீர்வு கிடைத்துவிட்டது; இயற்கை மூலவளங்களையும் நீராதாரங்களையும் தனியார் முதலாளிகளுக்கு விற்று விடலாம்” என்கிறது.//

  உண்மை உண்மை தனியார் தான் தீர்வு சொல்ல முடியும். பின்ன உணவு, தண்ணீர், மருத்துவம் ஆகியவற்றை ஏழை மக்களுக்கு கனவாக மாற்றிவைட்டால் உலக மக்கள் தொகை பாதியாக குறைந்துவிடும், இந்தியர்களின் இப்போதய 17%’ 1% மாறிவிடும். இதை தான் பப்லிக் பிரைவேட் பாட்னர்சிப் என்று சொல்றாங்க போல.

  பரதேசி பசங்க புவி வெப்பத்துக்கு காரணமே இந்த பன்னாட தனியார் திருட்டு பசங்க தான் அவனுங்கள ஒடுக்காம வென்சாமரம் வீசுரானுங்க.

  //புதிய தேசிய நீர் கொள்கையின்படி, தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். இருப்பினும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமக்களுக்கு அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவு தண்ணீரைக் கொடுக்க உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது, அரசாங்கங்கள் தனியாரிடமிருந்து தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.//

  மக்களே நல்ல புரிந்து கொள்ளுங்கள் நீங்க உபயோக படுத்தும் தண்ணீருக்கு ஒரு தனி மீட்டர் போட்டு அதுக்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் விலை வைத்து வசுல் செய்து அதை தனியாருக்கு கப்பம் கட்டி அதற்கு மேல் அரசாங்கத்துக்கு தனியாக தண்ணீருக்கு வரி கட்ட சொல்லுவனுங்க.

  மின்சாரம் இப்ப எப்படி தட்டுபாடு உள்ளதோ அது போல தண்ணீருக்கும் ஒரு ஆர்டிபிசியல் டிமான்டை உறுவாக்கி மக்களிடம் பணத்தை சுருட்டி, கார்ப்பிர்ரேட் சொஸ்சியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று படம் போடுவானுங்க.

  //இந்தத் தண்ணீரை “இலவசத் தண்ணீர்” அல்லது “விலையில்லாத் தண்ணீர்” என்ற பெயர் வைக்கும் உரிமை மட்டுமே அரசாங்கத்திடம் இருக்கும்//

  ஐய்யா அடுத்த இலவசம் ரெடியாயிடுச்சு. அப்ப அடுத்த தேர்தல் வந்தா மிக பெரிய இலவசம் தண்ணீயா? சூப்பர் அப்பு

  விழித்துக் கொள் தோழா தண்ணீர் உன் அடிப்படை உரிமை அதை தர மறுக்கும் அரசாங்கம் நமது முதல் எதிரி இதை விட்டுவிட்டால் நாளைக்கு நமது சிறுநீருக்கும் விலை வைத்து நம்மிடமே வசுல் செய்துவிடுவான்.

  ரோட்டிக்காக பிரன்சு புரட்ச்சி, அடக்கு முறைக்காக ரூஸ்சிய புரட்ச்சி, விடுதலைக்காக கியுபா புரட்ச்சி, மக்களுக்காக சீன புரட்ச்சி. தண்ணீர்க்காக இந்திய புரட்ச்சி என்று நாளை வரலாறு சொல்லட்டும்.

  உப்புக்கு வரி விதித்தான் வெள்ளையன் ஆனால் தண்ணீருக்கே விலை வைத்தான் மன்மோகன். பொருமை கடலினும் பெரிது ஆனால் அந்த கடல் தண்ணீர் கூட நமக்கு இல்லை என்றால் ஆழி பேரலைப் போல் எழ வேண்டும்.

  ஒன்று படு; புரட்ச்சி செய். நாம் இதை பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தால் மட்டும் போதாது கலத்தில் இறங்குவோம் களை எடுப்போம்.

  • தண்ணீர் அது விவசாயப் பயன்பாட்டுக்கானாலும் சரி,குடிநீருக்கானாலும் சரி ஏகாதிபத்தியங்கள் பல வருடங்கலாகவே திட்டமிட்டு சீரழித்து வருகிறார்கள்.

   குளங்களில் கருவேலமரங்கள் – ஏகாதிபத்திய சதி
   http://www.poovulagu.net/2010/10/blog-post_30.html

 9. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, குடிநீர், வசிக்க இருப்பிடம், அடிப்படைக் கல்வி, உயிர் காக்கும் மருத்துவம் – இவையெல்லாம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் என அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது. (அரசியலமைப்பு சட்டம் வகுத்த டாக்டர். அம்பேத்கார் பிறந்த தினத்தில் இக்கட்டுரை வந்தது அவற்றை நமக்கு நினைவுபடுத்துவதற்காகவா?)
  உணவுக்கு ரேஷன் என்றாகிவிட்டது. புழு புழுத்து வீணாகப் போனாலும் போகுமேயொழிய ஏழை மக்களுக்கு மட்டும் கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் ஆட்சியாளர்களின் திமிரால் எல்லா மக்களுக்கும் உணவு இல்லையென்றாகி விட்டது.
  உடை – பணக்காரர்களுக்கு மட்டும் தான் பேஷன் ஷோவில் உடை அணிந்து நடக்கத் தெரியுமா? எங்களுக்கும் தெரியும் என்பது போல் அரை குறை ஆடையுடன் ஏழை மக்கள் உடையில்லாமல் அழைகின்றார்கள்.
  இருப்பிடம் – வெயில், மழை, குளிர் என எல்லாக் காலங்களிலும் சாலையோரத்தில் பெரும்பாலான மக்கள் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். (உச்ச நீதி மன்றம் கூட கடும் குளிரில் வாடும் மக்களின் நிலைபற்றி கவலை தெரிவித்துள்ளது. கவனிக்க கவலை மட்டும் தான் தெரிவித்துள்ளது) (கடந்த வாரம் தினசரியில் வந்த செய்தி – சாலையோரம் படுத்திருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் த்காத முறையி நடந்துகொள்ள முயன்றவனை கல்லால் தாக்கி கொன்ற மகன் கைது.)
  கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறை – ஏறக்குறைய (சிறிது தான் மீதமிருக்கிறது) தனியார்மயமாகிவிட்டது. பணம் படைத்தவனுக்கு மட்டும் தான் சிறந்த கல்வியும், உயர் நவீன ம்ருத்துவமும் என்றாகிவிட்டது.
  மிச்சமிருப்பது குடிநீர் மட்டும் தான்.

 10. மிச்சமிருப்பது குடிநீர் மட்டும் தான். குடிநீருக்கும் விலை வைத்தால் – 1). மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த திட்டம். மக்கள் தற்கொலை செய்து கொண்டு தங்களுக்கு தாங்களே பெருக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள். பாசனத்திற்கான தண்ணீருக்கு விலை, மின்சாரம் தயாரிப்பதற்கான தண்ணீருக்கு விலை என்றானால் உண்ணும் உணவிலிருந்து எல்லாமும் விலை உயரும் அபாயம். வாழ்வதற்கு வழியில்லையெனில் தற்கொலைதானே தீர்வு நம் பாவப்பட்ட ஒன்றும் தெரியாத, புரட்சி என்றால் என்னவென்று தெரியாத மக்களுக்கு. இப்படியேவிட்டால் கணவன் மனைவி உறவின்போது வெளியாகும் தண்ணீருக்கும் விலை வைத்துவிடுவார்கள்.

 11. எனக்கு சரியாக நினைவில்லை – 1980 – 85 காலக்கட்டமாக இருக்கலாம் என நினைக்கிறேன். படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு வேலை விஷயமாக திருச்சி வரை சென்றிருந்தேன். அப்போது சுவற்றில் தோழர்களின் விளம்பரத்தைப் பார்த்தேன். கழிப்பிடம் கட்டித்தரக்கோரி மறியல். திருச்சி மாநகராட்சி முன் எல்லோருமாக சென்று மலம் கழிக்கும் போராட்டம் செய்யப்போவதாக அறிந்தேன். அப்போதைய பருவத்தில் என்ன் இவர்கள் இப்படி அசிங்கமான முறையில் போராடுகிறார்கள் என் நினைத்தேன். பிறகு போராட்டத்தின் பலனாக கழிப்பிடம் கட்டித்தரப்பட்டது என அறிந்தேன்.
  ஆக இப்படி வீதியில் இறங்கி போராடினால் தான் விடிவு கிடைக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

 12. இனி கிராமக் குடிநீர்க் கிணறுகளில்/குழாய்களில் குழாயடிச் சண்டைகள் இருக்காது. ஓடையோ ஆறோ – குளமோ குட்டையோ எங்கும் இனி அவசரத்திற்குக்கூட குண்டி கழுவ முடியாது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தாலும் “யார்ரா அது” என்று மிரட்ட அங்கே தண்ணீர் ‘ஏஜெண்டுகள்’ இருப்பார்கள்.

  இது வேடிக்கை அல்ல. நிகழப்போகும் நிஜம். என்ன செய்யப் போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

  போராடுவதைத் தவிர வேறு வழியேதும் உண்டோ!

 13. சீனா போன்றநாடுகளிலேயெ தன்னீர் தனியராக்கிபட்டுவிட்டது. அனைத்தும் பொது உடைமை என்பதை விட்டுவிட்டு அனைத்து தனிஉடமையாகிவிட்டது. அமெரிக்காவைக் காட்டிலும் சீனாதான் இன்று மிகப் பெரிய முதலாலித்துவநாடாக திகள்கிறது. பிரமபுத்திரநதியின் குருக்கே அனைகட்டி அந்த தன்னீரை தனியாருக்கு கொடுத்து அவர்கலை கோடீஷ்வரராக்குகிரார்கள். ஒரே அடியாக அடிக்காமல் பயந்துகொன்டு இருக்கிரோம். வட மானிலங்கலில் ஓடும் கங்கையை காவிரியுடன் இணைத்தாள் தண்ணீருக்காக தனியாரைநம்பி இருக்க வேண்டியதில்லை.

  • இப்போது என்ன் சொல்ல வருகிறீர்கள். தெளிவாகச் சொல்லுங்கள். தண்ணீர் தனியார் மயமாக்கப்படுவது சரி என்று சொல்கிறீரா? கட்டுரையின் தாக்கத்தால் ஏற்பட்ட கோபத்தை விட இப்படிப்பட்ட நூலாம்படைகளின் பின்னூட்டங்களினால் மிகவும் கோபம் ஏற்படுகிறது வினவு அவர்களே. நாட்ராயன் அவர்களே சீனா, அமெரிக்காவோடு இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் – எத்தியோப்பியா, சோமாலியாவில் குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், அவ்வரிசையில் பாரதமாதாவும் சேர்ந்துவிடும் என்பதையும் சேர்த்து எழுதுங்கள்.

  • தண்ணீர் பிரச்சணை என்று வந்தால் உடனே கங்கை – காவேரி தான் உங்களுக்கு நினைப்புக்கு வருகிறது. முதலில் தென்னிந்திய நதிகளை இணைக்க வழி ஏற்படுமா? என்பதை யோசியுங்கள். (உலகிலேயே மிகவும் அசுத்தமான புனித கங்கையை ஏன் காவேரியுடன் இணைத்து தென்னிந்திய பாவப்பட்ட நதிகளை அசுத்தமாக்க முயல வேண்டும்?)

   மறைந்த இதயம் பேசுகிறது பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. மணியன் (அவர் ஆர்.எஸ்.எஸ். அம்பியாக இருந்தாலும்) ஓர் உண்மையை தன் இரஷ்ய பயணக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதன் சாராம்சமாவது – ஒருங்கினைந்த ரஷ்யாவில் ஒரு நாட்டில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்த இன்னொரு நாட்டிற்கு நதியை கொண்டு செல்வதற்காக ஆறு வெட்டி சென்றார்களாம். ஆறு வெட்டுவதற்கு எப்படி சம்மதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ரஷ்யர்களின் பதில் – உலகின் நீளமான ஆறு எங்கள் நாட்டில் ஓடுகிறது என்பது எங்களுக்கு பெருமைதானே என்றார்களாம்.

   மேலும் ரஷ்யர்கள் கூறியதாக அவர் எழுதியிருப்பது – கங்கையையும் தார் பாலைவனத்தையும் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அதில் விவசாயம் செய்து காண்பிக்கிறோம் என்றார்களாம்.
   நம்முடைய அரசியல்வாதிகள் கங்கை ஆற்றையும் தார் பாலைவனத்தையும் எப்படி பிளாட் போட்டு விற்பது என்று தான் கவலைப்படுவார்கள்.

 14. சகமனிதனின் தாகம் தீர்த்து புண்ணியம் தேடும் பண்பாட்டைக்கொண்ட நாட்டில் இன்று பொது இடங்களிலாகட்டும் அல்லது தனிப்பட்ட வீடுகளிலாகட்டும் பாட்டில் தண்ணீரை பயன்படுத்தும்போது சகமனிதர்களுக்கிடையே ஒரு அந்நியப் பார்வை. தண்ணீர் தனியார்மயத்தின் அவலமா? பலமா?

  • இது அவலமா? அல்லது பலமா? என்பதல்ல. இது முழுக்க முழுக்க கேவலமான ஆட்சியாளர்களின், மக்களை பிராணிகளை விட கேவலமாக நினைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் அலட்சியமே. இலவசப் பொருட்களுக்காக நம்மை ஏங்க வைத்திருக்கும் ஆட்சியாளர்களிடம் என்றாவது எங்களுக்கு சுத்தமான தண்ணீர் கொடுங்கள் என்று வீதியில் இறங்கி போராடியிருக்கிறோமா? 1 லிட்டர் பாலை விட அதிக விலைக்கு விற்கும் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிக்கும்படி நாம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். அதன் விளைவு தான் அல்லது அதன் தொடர்ச்சி தான் தண்ணீர் தனியார்மயம் என்பது.

 15. பிப்ரவரி 2012-ல் உச்சநீதி மன்றம் நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசுக்கு ஒரு பக்கம் உத்தரவிடுகிறது.. ஆனால் மத்திய அரசு, நீர் ஆதாரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை அறிவித்து கடமையிலிருந்தும் நழுவ முயல்கிறது.. நீரையும் ஏலம் விடலாம், உச்சநீதிமன்றத்துக்கும் பெப்பெப்பே.. ஒரே கல்லில் 2 மங்காயடிக்கப் பார்க்கிறது மாங்காய்சிங் கும்பல்..

 16. “முதலில் ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் மக்களை ஒருங்கிணைக்கும்
  சட்டத்தை அமுல்படுத்தட்டும்”

  உச்சநீதி மன்றம் நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசுக்கு ஒரு பக்கம் உத்தரவிடுகிறது.

  //முதலில் ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் மக்களை ஒருங்கிணைக்கும்
  சட்டத்தை அமுல்படுத்தட்டும்.

  அர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள சில பார்ப்பனர்களுக்கு ஏன் கசக்கிறது? தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.

  சின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் பல மனிதர்களுக்கு சாமி பயமும் இல்லை;
  அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் அவர்களை கோயிலுக்குள்
  சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.

  கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி-

  மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,

  அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள் -வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து

  64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.//

  • உம்மைப் போன்ற தீவிர பக்திமான்கள்தான் அர்ச்சகர் வேலைக்குத் தகுதியானவர்கள். நேக்குத் தெரியறது.. தம்ப்ராஸுக்கு தெரியலையே.. உமக்கு அங்கே பார்த்து மானப் பிரச்சனை வந்துடுத்து.. அவாளுக்கு அதையும் விட்டுட்டா வாழ்க்கையே பிரச்சினை… என்னை என்ன பண்ணச் சொல்றேள்?! நான் சொன்னா தம்ப்ராஸ் கேட்கமாட்டேளேண்ணா..

   அந்தத் தீர்ப்பு வர்றப்போ வரட்டும்..அதுக்கு மின்னாடி சர்க்கார் வருண பகவானை ஏலம் விடப் போறாளே… அந்தக் கவலை கொஞ்சமாவது இருக்கா பக்திமானான உமக்கு…!!!

 17. ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொது
  இடத்தில் கூடுகின்றனர்.

  அம்பி நீயெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

  ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

  அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

  படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங்க சாமி.

  நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.

 18. டேய் மொன்ன மோகன் சிங்கு , அள்ளுவாலியாநாயிங்களா ,

  இதா இந்த நாட்டுல ஜனங்க ரத்தம் கூட இலவசமா டொனேட் பண்ணுராங்க அதையும் எந்த வெளிநாட்டு காரனுங்க கிட்ட கான்ட்ராக்ட்டு விட்டுடுங்க அதையும் அவனுங்கெ வித்து காசாக்கட்டும். வெளிநாட்டு பொச்சியநக்கியே எல்லாத்தையும் வித்த்டுட்டா சூ கழுவ கூட ஒருநாளு தண்ணி தர மாட்டானுங்கடா !

  இதுக்கெல்லா ஒரு முடிவே இல்லியா ! இருங்கடா ஒருநாள் அந்த பார்லிமன்டுலநீங்க தயாடரிச்ச அக்னி ஏவுகணையை வுட்டு ஒரு MP கூட இல்லாம கொல்ல போறாங்க !

 19. அப்படியே இந்திய மக்களையும் எதாவது நாட்டுக்கு வித்துடுங்க…. துன்பமே இருக்காது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க