Monday, September 26, 2022
முகப்பு கலை கவிதை உனக்கும் சேர்த்து தான் மே நாள்!

உனக்கும் சேர்த்து தான் மே நாள்!

-

தொழிலாளி என்றால்
வேறு யாரோ போல் நினைக்கிறாய்!

நடை, உடை, பாவனை
நவீன முகப்பூச்சு,
பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்
பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.

ஒப்பனைகள் எதுவாயினும்
உன் வர்க்கம் பார்த்து
தொழிலாளர் விடுதலை பற்றி
ஒரு துண்டறிக்கை தரவந்தால்,

வெட்டிப்பேசி, விலகி நடந்து
ஏதோ  ஒரு முதலாளி போல்
நீ என்னமாய் நடிக்கிறாய்?

கையில் கணிணி
கனமான சம்பளம்
வார இறுதியில் கும்மாளம்
வசதியான சொகுசு கார்…
அதனால், அதனால் நீ என்ன
அம்பானி வகையறாவா?

அடுத்த வேலை என்னாகுமோ?
கிடைத்த வேலை நிரந்தரமோ?
என எப்போதும் பயத்தில்
ஏ.சி. அறையில் கூலியுழைப்பால்
ஜில்லிட்டுக்  கிடக்கும் உன் இதயத்தைக் கேள்!
சொல்லும்… நீயும் ஒரு தொழிலாளிதான்!

காதலுணர்வை
வெளிப்படுத்துவதை விட மேலானது
வர்க்க உணர்வை வெளிப்படுத்துவது!
அதை வெளிப்படுத்தி
வீதியில் போராடும் தொழிலாளரை
வேறு யாரோ போலவும்,
நீ வேறு வர்க்கம் போலவும்
செங்கொடி பார்த்து முகம் சுழிக்கும்
உன் செய்கையில் ஏதும் பொருளுள்ளதா?

எந்த விலையுயர்ந்த சென்ட் அடித்தாலும்…
எத்தனை உடைகள் மாற்றினாலும்…
எவ்வளவு கசந்தாலும்… இதுதான் உண்மை.

கூலிக்கு  உழைப்பை விற்று
காலத்தை நகர்த்தும் கண்மணியே…
நிச்சயம் நீயும் ஒரு தொழிலாளிதான்!

உணர்ச்சியற்ற தோல்
தொழுநோயின் அறிகுறி..
உணர்ச்சியுடன் போராடுதலே
தொழிலாளி வர்க்கத்தின் அறிகுறி.
இதில் எது நீ அறிவாயா?

உனக்கொன்று தெரியுமா!
உலகியலின் உயர்ந்த அறிவு
பாட்டாளி வர்க்க அறிவு,
மனித குலத்தின் உயரிய உணர்ச்சி
பாட்டாளி வர்க்க உணர்ச்சி.

இளைஞனே.. உணர்ந்திடு!
தருணத்தை இப்போது தவறவிடில்
வேறெப்போது பெறுவாய் வர்க்க உணர்வு.

• துரை. சண்முகம்
______________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. மே தின வாழ்த்துக்கள்! ஏதோ ஒரு சில கணிணி இளைஞர்கள் சொல்ல வருகிறீர்கள் போலும். மொத்தமும் என்றால், எனக்கு வருத்தம். எதையும் கவலை படாத ஒரு சிலர் எல்லா வேலைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • அன்பு நண்பரே,
   நீங்கள் குறிப்பிடும் ‘ஏதோ ஒரு சில கணிணி இளைஞர்’த் தவிர, ஏனைய ஐ.டி.துறை நண்பர்களெல்லாம் சங்கமாக அணிதிரண்டு, தமது உரிமைகளுக்காக பேசத் துணிந்துவிட்டனரா என்ன?
   தொழிலாளி வர்க்க உணர்வுடனும், செங்கொடி சங்கங்களிலும் ஐக்கியமாவது இருக்கட்டும் குறைந்தபட்சம் தாம் ஒரு அமைப்பாகவாவது அவர்கள் அணிதிரண்டிருப்பார்களேயானால், அதைப்பற்றி பதிவிடுங்கள்!
   கவிஞர் துரை.சண்முகத்தின் ‘அறியாமை’குறித்து அப்பொழுது பேசுவோம்!

 2. Excellent.Today”s youth do not worry about anything.As the poet says they are toiling Mon to Friday to enjoy on holidays.They do not have sympathy for toiling fellow human beings.They talk Tanglish.They chase mirage.They are least interested in politics.At the time of elections,they believe whatever English channels are dishing out.Otherwise will the college students get permission to participate in so called cleansing rally of Anna Hazare,wear the tees given by some one and raise slogans which they do not understand.Many of them do not know who this Hazare is.If they remain like this,they may not be in a position to buy their dream homes.They should come out of their indifference.

  • பொத்தம்பொதுவாக இளைஞரை குறை சொல்லும் முதியவரே, காரணம் இல்லாமல் நாங்கள் ஹசாரே பின் செல்லவில்லை..அர்த்தம் தெரியாமல் கோஷம் இடவும் இல்லை..இளைஞரை குறை கூறி நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள்..

   • அன்னா ஹசாரே நடத்துன “போராட்டம்” பற்றி நாடே சிரிப்பா சிரிக்குது. சென்னைல கூட நீங்க நடத்துன “மாபெரும்” போராட்டம் பற்றி பதிவு ஒண்ணு இங்கே இருக்கு… இதுல துரை சண்முகம் தப்பிக்கிறாராம்- “குமுறும்” பாமரனே வேறு எங்காவது போய் இந்த யாபாரத்த பாருங்க…போங்க.

  • I differ from your views…
   After working for 5 days in IT companies, Govt. offices…the youngesters are enjoying week-ends…But our Politicians sitting some hours in a year in Parliament/Assembly and enjoying like anything..beacuase they law makers as well as law breakers..
   The youngesters must be educated to follow Anna Hazare, what is the use of blaming them when proper guidance and reasonable opportunities are not being given to them ?
   A change in the Policy Makers are required…we must educate the voters to cast vote to the youngesters who can take decision without fear and favour and will not precipitate things like the senior/very old politicians..
   week end enjoyment by the IT employees is developing our cities and night pubs/
   eat outs are most welcome…some unemployed youh are benefitted by setting up these outlets for the late comers/ those who are coming after night duty/shift etc. WE SHOULD NOT FIND FAULT WITH THE YOUNESTERS THAT IS JUST LIKE HITTING ON OUR FACE…WE HAVE ALSO PASSED THE AGE OF YOUNESTERS, IS IT NOT?

   • “anna hazare”

    Did he define who are the people(for whom they are going to work)

    we want to know whether he is fully depend on media for gathering people or he is directly going to work for people.

    we all know that the whole system is corrupted and state is against people
    will rallying with burning candles on the road on weekend is enough to change this system.

    finally we want to know whether the so called anna hazare is able to organise a non cooperation movement or bharath bandh on a single day

 3. இப்படி தேவையற்ற எண்ணங்களை விதைத்து ஐ.டி மக்களை தனித்தீவு ஆக்கிவிட்டீர்கள்..இதனால் தாங்கள் கண்ட பயன் என்ன?

  • பாமரன் ஏதோ துரை சண்முகம் எழுதி ஐ.டி மக்கள் தனித்தீவு ஆனார்களா? ஏன் இந்த மொட்ட தல மொழங்கால் முடுச்சு…..

 4. Anna Hazare started a move but the vested interests including our Home Minister tried his level best to kill the movement by creating differnces among the members of Anna Group…USA is a rich country and giving more job opportunities to the people of Inida, because they are hard workers..as a matter of fact who is enjoying…? Our politicians not the I.T.employees…they are working for 5 days a week…and they will tell proudly that their salary is XXXXXXX per annum..
  as they are being paid by US IT companies…OUR POLITICIANS WHITE COLLAR FELLOWS ARE MAKING THE LAW BY SITTING AT THE DEAD BODIES OF OUR WORKING CLASS..
  While I was working at Chennai central Govt. office 1974-1975, emergency was
  declared and when we demand lur legitimate rights of going out for 15-20 minutes for meeting urgent private work we were not allowed to go our office between office time i.e 10 am to 5.30 pm in all six days..Sunday was the only day for doing all things, attending to house chorus, helping children etc. WHAT INDIRA GANDHI GAINED BY THAT ? SHE ADOPTED THE BRITISH POLICY OF DIVIDE AND RULE..
  IN 1976 ACCOUNTS WAS SEPARATED FROM AUDIT AND C & A G OF INDIA WAS RELIEVED THE FUNCTION OF MAINTAINING ACCOUNTS AND CREATED APARALLEL POST OF CONTROLLER GENERAL OF ACCOUNTS UNDER MINISTRY OF FINANCE.
  Now the fate is even the C & A G is being questioned for finding irregularities of 2 G spectrum…
  Towards where we are going?

 5. உழைப்பை விற்று கூலி பெறுகிறார்கள் சரி. ஆனால் அதிகமாக பெறுகிறார்கள். அதனால் வர்க்க உணர்வு அடைதல் இயலாத காரியம். உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறையைப் போல பயன் முடிந்தபின் முதலாளி வர்க்கம் இவர்களை தூக்கியெறிந்து விடும். அன்றுதான் இவர்களுக்கு வர்க்க உணர்வு வரும்.

  கணினித்துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இப்படி வர்க்க உணர்வில்லாத சொரணையற்றவர் போல எழுதுகிறீர்கள். மருத்துவர்கள் நிலையும் இதுவே. அங்கு நடப்பது இன்னும் கொடுமையானது. அதைப் பற்றி ஏன் எழுதக்கூடாது.

 6. ஐடி காரர்கள் தோழர்களை வேறுபடுத்துவது இருக்கட்டும்,நீங்கள் எப்படி?
  உங்கள் கவிதையின் தோனி ஐடி காரர்களை வேறுபடுத்துவதாகவே உள்ளது…
  நான் உங்கள் தொழன் அல்ல என்பது பொன்ற தோனியில் எழுதினால் எப்படி அவன் தோழனாவான்?
  ஐடி துறையில் விதிமுறைகளுக்கு மாறாக பெண்களை நெடுநேரம் வேலை வாங்குகிறார்கள், கர்ப்பினிகளுக்கோ கேட்கவே வேண்டாம்…
  முதளாளித்துவ நாடுகளிலேயே இவர்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படுகின்றன…

  இவர்களுக்கு தோழர்கள் என்ன செய்தார்கள்? ஐடியினரின் அறியாமையைப்போக்க முயற்சியெடுஙள்…புலம்புவதை விட அது நல்ல பலனளிக்கும்…

 7. நீங்கள் எதிர்பார்ப்பது போலவே,
  ஐ.டி. துறையினரின் அறியாமையை போக்கும் பொருட்டு,
  அவர்களை இடித்துரைக்கிறதே, இக்கவிதை!
  இதில் எங்கே இருக்கிறது புலம்பல்?

  சொல்கிறேன் என்று கோவித்துக்கொள்ளாதீர்கள், //ஐடி துறையில் விதிமுறைகளுக்கு மாறாக பெண்களை நெடுநேரம் வேலை வாங்குகிறார்கள், கர்ப்பினிகளுக்கோ கேட்கவே வேண்டாம்…// இந்த புலம்பல்களெல்லாம் உங்களுடையது!

  //ஒரு துண்டறிக்கை தரவந்தால்,
  வெட்டிப்பேசி, விலகி நடந்து
  ஏதோ ஒரு முதலாளி போல்
  நீ என்னமாய் நடிக்கிறாய்?//
  இங்கே தன்னை துண்டித்து கொள்வதும், வேறுபடுத்திப்பார்ப்பதும் ஐ.டி. துறையினரா? இல்லை, துரை.சண்முகத்தின் கவிதை வரிகளா?

  சுங்குவார்சத்திரம், பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பேருந்து நிறுத்தங்களிலும், தனியார் நிறுவனங்களின் பிக்-அக் பாயிண்டு களிலும் ஐ.டி. துறையினர் பணிக்குச்செல்லும் அந்த அதிகாலை நேரத்தில் அங்கு நின்று, ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரத்துடன் அவர்களை சந்திக்கின்றனர், பு.ஜ.தொ.மு. அமைப்பைச் சேர்ந்த தோழர்கள்!

  ஐ.டி.துறையினரின் அறியாமைப் போக்க இவ்வமைப்பினர் மேற்கொள்ளும் ‘உருப்படியான’ இத்தகைய முன்முயற்சிகளின் பொழுது எதிர்கொண்ட, கண்டுணர்ந்த அனுபவங்களே, இவற்றுக்கு சாட்சி!

  //ஐடியினரின் அறியாமையைப்போக்க முயற்சியெடுஙள்…புலம்புவதை விட அது நல்ல பலனளிக்கும்…//

  ஐ.டி.துறையினரின் அறியாமையைப் போக்கும் கடமை, தோழர்களுக்கு மாத்திரமே வாய்த்தவையா,என்ன? தங்களுக்கு இல்லையா அந்த சமூகப்பொறுப்பு?

  உங்களை நீங்களே வேறுபடுத்திக்கொண்டாலும், துண்டித்துக்கொள்ள நினைத்தாலும், நாங்கள் மட்டுமல்ல இந்த கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பும் கூட, நீங்கள் அவ்வாறே நீடிக்க விட்டு வைக்கப்போவதில்லை உங்களை!

  அப்புறமென்ன தயக்கம், இப்பொழுதே வந்துவிட வேண்டியதுதானே இப்பக்கம்!

  • //ஐ.டி.துறையினரின் அறியாமையைப் போக்கும் கடமை, தோழர்களுக்கு மாத்திரமே வாய்த்தவையா,என்ன? தங்களுக்கு இல்லையா அந்த சமூகப்பொறுப்பு?//
   இயன்ற அளவு செய்து கொண்டுதான் இருக்கிறேன்…முடிந்த அளவு நண்பர்களுக்கு மூலதனம் புத்தகம் கொடுத்துள்ளேன்…
   //இந்த புலம்பல்களெல்லாம் உங்களுடையது!//
   கண்டிப்பாக புலம்பவில்லை…ஐடி நண்பர் பலரும் யூனியனைப்பற்றி தவறான கன்னோட்டத்திலே உள்ளனர்…அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தினால் தெளிவார்கள்… உதாரணம்: வினவு தளம், பேஸ் புக்

 8. Every IT person is worrying about job insecurity. They know they cannot work till their age of 58. Maximum of 15-20 yrs in the field is possible. For many of us the concern in starting IT unions is the following one – many IT giants have offices in china, phillipines and other countries with low cost for labours. If we start claiming unions, simply they will do a mass layoff and switch their majority operations to those countries. Don’t u think so?

  • யூனியன் என்றாலே வேலை நிறுத்தம் என்று நினைக்காதீர்கள்…
   நம் நாட்டு சட்டப்படியே வேலைநீக்கம் செய்தாலும், வேலை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சில உரிமைகளும், இழப்பீடும் தரப்பட வேண்டும்…
   தோழர்கள் அதை அறிவார்கள், ஐடி நண்பர்களும் அறிந்தால் நலம்…
   என் உறவினர் நடத்தி வந்த ஒரு சிறு நிறுவனத்தில் யூனியனில் பொய் புகார் அளித்த தொழிலாளியை விசாரனைக்குப்பிறகு தோழர்கள் யூனியனை விட்டு நீக்கினர்…
   யூனியன் என்பது ஒன்னும் மனமகிழ்மன்றம் இல்லை… தோழர்கள் என்றாலே வேலைநிறுத்தம் என்ற மாயத்தோற்றத்தை மீடியா உருவாக்கிஉள்ளது…. அதை நம்பாதீர்கள்…

   • What is the alternative you are suggesting to claim the job security from IT giants? Do you think they will be able to sustain their business/margins by retaining such a large chunk of highly paid people when their business is slowing down as in 2008?? Never…

    • Looks like I need to talk in your language…..
     Say for example i don’t have money, will the government allow me to rob any other person or steal just because i don’t have money?
     If the business slows down and the company needs to cut cost, they have to follow the law of our land. People losing job need to be compensated as per law / with proper notice.
     Think for yourself, how many CEOs / Vice Presidents / Presidents have lost job due to slow down?
     You have the right to complain to authorities / sue the company if it violates rules.
     And that is what comrades are trying to educate you with….They are making you aware of your rights…

 9. வல்லரசு ஆவுறதுக்கு வழி கேட்டா…நல்லரசுக்கு வழி சொல்றிங்க

 10. The IT Giants (TCS, Wipro, Infosys, Satyam, CSC, EDS, HP etc.,,) all are sucking our blood. Yes they are f**cking us.
  Once they were f**cking us in one hole. After Recession they started f**cking in all our holes.
  1.
  EDS, Emphasis- If employee is in Bench(not in project) for more than a month, from next month no salary for him. What a bullshit.
  2.
  Wipro, TCS, Infosys etc., – No Coffee vending machines, No milk, No incentive on Night stay
  3.
  All companies — doubled thier travelling chagres (Pickup, Drop)
  4.
  TCS, INFOSYS — No Salary hike in this 2012. But f**king share holders (CEO, Board members got crores of crores share divedends)
  5.
  In the name of cost cutting there is no Project party funds.
  6.
  In infosys a unit conducting CRICKET MATCH, for that emloyees have to sponsor for balls, bats, kits, its is biggest unit in Infosys, earned 1000 Billion Dollors.
  7.
  All Employees are no way to ask anf get these all, they have to shut all their holes and work. Or will be fired.

  So its it true, we are really not IT Folks , we are IT Dogs.

  • 1.EDS, Emphasis- If employee is in Bench(not in project) for more than a month, from next month no salary for him. What a bullshit.
   – Joke
   2.Wipro, TCS, Infosys etc., – No Coffee vending machines, No milk, No incentive on Night stay
   – Not true
   3.All companies — doubled thier travelling chagres (Pickup, Drop)
   – Only 10 – 20 % hike as fuel and govt fares also increased.

   4.TCS, INFOSYS — No Salary hike in this 2012. But f**king share holders (CEO, Board members got crores of crores share divedends)
   TCS is giving, only Infosys.. but giving to high performers…

   5.In the name of cost cutting there is no Project party funds.

   6.In infosys a unit conducting CRICKET MATCH, for that emloyees have to sponsor for balls, bats, kits, its is biggest unit in Infosys, earned 1000 Billion Dollors.

   – 1000 Billion dollars earned from cricket match… are your writing about ICC?

   7.All Employees are no way to ask anf get these all, they have to shut all their holes and work. Or will be fired.
   All companies have transparent policies to raise employee’s concerns / voices thru public forums, meetings, mails, employee meets etc… nobody is getting fired just because of asking questions!!!

   Definitely there are certain percentage of unskilled/unqualified employees intruded in all the companies with fake certificates, needless to say they will be fired always…

 11. தோழர் துரை.சண்முகம் கவிதை சாட்டை அடி. நானும் ஐ.டி துறையில் வேலை செய்கிற ஆள் தான். இந்த கவிதையில் உள்ள விமர்சனங்கள்,அனைத்தையும் நான் ஏற்று கொள்கிறேன்,அதே சமயம், இந்த விமர்சனம் உலகமயமாக்கலின் பின் வளர்ச்சி ஏற்பட்ட பல் வேறு துறைகளில்,அதிக வருமானம் பெரும் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தை நோக்கி வைக்க வேண்டியது.இதில் ஐ.டி துறை அதிக அளவில் உள்ளதால்,பெரிதாக பார்க்கபடுகிறது என்பதே உண்மை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க