Wednesday, October 4, 2023
முகப்புஉலகம்அமெரிக்காகாஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

-

காஞ்சிபுரம்-தீண்டாமை
வரதராஜ பெருமாள் கோவில் : பெருமாளுக்கு மரியாதை! சூத்திரனுக்கு அவமரியாதை

“யாருங்க இந்தக் காலத்துல சாதி பாக்குறாங்க” என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை பலமுறை கேட்டிருக்கிறோம். கேவலம், கோவில் பிரசாதத்தை வழங்குவதில் கூட சாதியும், சாதித் திமிரும் கடைபிடிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவின் சமூக வாழ்வில் பல்வேறு தளங்களில் சாதி கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று. அதுவும் இறைவன் சன்னிதியிலேயே நடக்கிறது என்றால் மற்ற இடங்களில் அதன் பரிமாணங்களை உணர முடியும்.

நாடெங்கிலும் இருக்கும் இந்து மத கோயில்களில் ‘பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூசாரி ஆக முடியும்‘ என்பதில் ஆரம்பித்து பிரசாதம் செய்வதற்கு கூட பார்ப்பனர்கள்தான் தகுதி உடையவர்கள் என்று சாதி முறை அமல் படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நாட்டின் சட்டங்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு கோவில் நுழைவு உரிமை சட்டம் 1947ன் 3வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

Right of all classes of Hindus to enter and offer worship in temples – (1) Notwithstanding any law, custom or usage to the contrary, [every Hindu irrespective of the caste or sect to which he belongs] shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as [Hindus in general or any section of Hindus]; and [no Hindu] shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.

கோயில்களில் நுழையவும் வழிபாடு நடத்தவும் இந்துக்களின் அனைத்து பிரிவினருக்கும் இருக்கும் உரிமை – (1) வேறு எந்த சட்டம், பழக்கம் அல்லது நடைமுறை இதற்கு மாறாக இருந்தாலும், எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு இந்துவுக்கும், எந்த இந்து கோவிலிலும் நுழையவும் இந்துக்களில் எந்த ஒரு பிரிவினரும் வழிபாடு செய்யும் அதே முறையில் வழிபாடு நடத்தவும் உரிமை உண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவோ, நடைமுறைக்கு வந்த பிறகோ அப்படிப்பட்ட ஆலய நுழைவு அல்லது வழிபாடு செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாக கருதப்படக் கூடாது. அவர்கள் மீது வழக்கு தொடுக்கவோ, வழக்கு போடவோ கூடாது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 106ல் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.

Removal of discrimination in the distribution of prasadams and theerthams

106. Notwithstanding anything in this Act or in any text, rule or interpretation of Hindu law, or any custom or usage as part of that law or any other law or in any degree of Court, there shall be no discrimination in the distribution of any prasadam or theertham in any religious institution on grounds only of caste, sex, place of birth or any of them.

பிரசாதம் அல்லது தீர்த்தம் வழங்குவதில் பாகுபாட்டை நீக்குதல்

106. இந்த சட்டம் அல்லது வேறு எந்த உரை, விதி அல்லது இந்து சட்டத்தின் புரிதல், அல்லது அந்த சட்டத்தின் ஒரு பகுதியான வேறு எந்த பழக்கம், நடைமுறை அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இவை மாறுபட்டிருந்தாலும், எந்த ஒரு மதத் தலத்திலும் பிரசாதம் அல்லது தீர்த்தம் வினியோகம் செய்வதில் சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படக் கூடாது.

காஞ்சிபுரம் கோயில்கள் – சாதி கட்டுமானத்திற்கு ஒரு உதாரணம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த வைணவ கோவில்களில் பிரசாதம் வழங்குவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபடுவதிலும் கடைபிடிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள அந்நகரைச் சேர்ந்த திரு D மாதவன் என்பவரிடம் பேசினோம். இந்த சாதிய முறையை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார் வைணவ அடியாரான திரு மாதவன்.

2003-ம் ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கும் சுமார் 14 வைணவ கோயில்களில் பிரசாதம் (புளியோதரை, பொங்கல், சுண்டல், இட்லி, வடை, பாதுஷா, லட்டு, அக்கார வடிசல்) வழங்கும் போது பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களை உட்கார வைத்து பரிமாறும் அதே நேரத்தில் மற்ற சாதியினரை உட்கார விடாமல் மிரட்டி எழுப்பி நிற்க வைத்துதான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கோயிலில் வழிபாடு, உற்சவ நேரத்தில் பாடல்களை பாடும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஊழியர்கள் வழிபாட்டு பாடல்களை பாடுவார்கள். கடைசி 2 பாடல்களை பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கும் படி மணியக்காரர் (கோவில் மேலாளர்) உரத்த குரலில் உத்தரவு போடுவார். அப்போது யாரும் உட்கார்ந்திருக்க முடியாது. பாடல்களை பாடி முடித்து பிரசாதம் வந்தவுடன் மேனேஜர் ‘எழுந்தருளி இருங்கோ’ என்று அழைப்பார். உடனேயே பார்ப்பன சாதியினர் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். மற்றவர்கள் உட்கார அனுமதி கிடையாது. யாராவது உட்கார்ந்தால் மிரட்டி எழுந்திருக்க சொல்வார்கள்.

வரதராஜபெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் வழங்கும் போது பார்ப்பனர்களுக்கு முறையாக வரிசையாக கொடுத்து விட்டு மற்ற சாதியினரை அடித்துப் பிடித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள வைப்பார்கள்.

சாதி பாகுபாட்டை எதிர்த்து அடியார்கள் போராட்டம்

பஞ்ச சமஸ்காரம் என்ற முறையில் வைணவ அடியார்களாக தீட்சை பெற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் இராமானுஜரை பின்பற்றி பக்தி மார்க்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திரு மாதவன் மற்றும் உடன் சேர்ந்த அடியார்கள் பலர் இந்த நடைமுறையை கண்டித்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நாட்டின் சட்டத்தையும், பொதுவான மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டு பிரசாதம் வழங்கும் முறையில் பாகுபாடு, தீர்த்தம் வழங்குவதில் அலட்சியம் போன்றவற்றை தட்டிக் கேட்டார்கள்.

தமது உரிமையை நிலைநாட்ட வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பிரசாதம் வாங்க காத்திருக்க முயற்சி செய்தபோது, நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவர்களை புறக்கணித்து விட்டு போய் விட்டார்கள் கோவில் ஊழியர்கள்.

2003-ம் ஆண்டு திருக்கச்சி நம்பி திருமால் அடியார் சேவை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். காவல் துறையின் விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் கட்டத்தில் அதிகார மையங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் தலையீட்டால் குற்றச்சாட்டு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்பட்டது.

அறநிலையத் துறை ஆணையும் பின் நிகழ்வுகளும்

அதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறைக்கு இந்த விவகாரத்தைப் பற்றி புகார் அனுப்பினார்கள் வைணவ அடியார்கள் குழுவினர். அந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் கையொப்பமிட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“காஞ்சீபுரம் நகரில் உள்ள வைணவ திருக்கோயில்களில் சாதிபேதமற்ற வழிபாடு அமைதியும், பிரசாதம் தீர்த்தம் விநியோகம் நடைபெறுவதிலும் இந்து அறநிலைய ஆட்சித் துறை சட்டம் பிரிவு 106 மற்றும் அதன் விதிகளின் கீழ்ப்படியும் கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக வைதிகர் அல்லாத பாகவதர் என்னும் பிரிவினரையும் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் வழங்குதலின் போது தாங்கள் பிராமண சமூகத்தார் அல்ல என்பதற்காக கண்டிப்பாக எழுந்து நின்று பிரசாதம் பெறுமாறும் தனியாக மற்றொரு பகுதிக்கு செல்லுமாறும் வற்புறுத்துவதாக புகார்கள் வரப்பெறுகிறது. யதோத்தகாரி பெருமாள் திருக்கோயிலில் எழுந்த புகார் குறித்து தல விசாரணை செய்த உதவி ஆணையர் நேரடியாக திருக்கோயில் நிர்வாகியருக்கும் வேத பிரபந்த கோஷ்டியினருக்கும் திருக்கோயில் சம்பிரதாயப்படி முன்னுரிமை அளித்து பிரசாதம் தீர்த்தம் வினியோகம் செய்யலாமே தவிர

1. வழங்கும் விதத்திலும்

2. வழங்கும் இடத்திலும்

3. வழங்கும் முறையிலும்

எந்த வித பாகுபாடும் காட்டலாகாது என்ற தற்போதைய சட்ட நிலை எடுத்து கூறப்பட்டது. ஆனால், மேற்படி வழிபாடு மற்றும் பிரசாத விநியோகங்களில் ஆலய பழக்க வழக்கம் என்ற பெயரால் பிராமணர் அல்லாத இந்து சமூகத்தினருக்கும் பாகுபாடு பாராட்டப்படுமெனில் அந்தந்த திருக்கோயில் நிர்வாகி மற்றும் மேற்படி குற்றத்திற்கு பொறுப்பான தனியார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முகவரியில் காணும் திருக்கோயில் நிர்வாகியருக்கு உறுதியாக சுட்டிக் காட்டி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.”

இந்த அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த திரு ஞானசம்பந்தன் சுற்றறிக்கையை கீழ்க்கண்ட கோயில்களுக்கு அனுப்பினார்.

 • யதோத்தகாரி பெருமாள் திருக்கோயில்
 • கூரத்தாழ்வார் திருக்கோயில்
 • பிரவான வண்ணர் திருக்கோயில்
 • அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்
 • விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
 • தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் (வரதராஜ பெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது)

பெரும்பாலான கோவில்களில் உட்கார்ந்து பிரசாதம் வாங்குபவர்களை விரட்டுவதை நிறுத்தி விட்டார்கள்.  தீர்த்தம் கொடுப்பதிலும் பாகுபாட்டை சரி செய்து விட்டார்கள். நாட்டின் சட்டம் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்த ஆணைக்குப் பிறகும் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. வரதராஜபெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினருக்குச் சொந்தமான இரண்டு துணைக் கோயில்களில் முறையை மாற்றாமல், பார்ப்பனர்களுக்கு கோயிலின் உட்பிரகாரத்தில் வைத்தும், மற்றவர்களுக்கு வெளியில் திண்ணையில் வைத்தும் பிரசாதம் வழங்கும் பழக்கத்தை தொடர்ந்தார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆணையை அமல்படுத்த அரசு நிர்வாகத்தால் முடியவில்லை. ‘அரசு ஆணை மதிக்கப்படா விட்டால் அதை தட்டிக் கேட்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன’ என்று நீதிமன்றத்தை அணுகினார் திரு மாதவன்.

நீதிமன்ற உத்தரவும் அதற்கான மரியாதையும்

2008-ல் விமலநாதன் என்ற வக்கீலை அணுகி அவர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் தீபாவளி நேரத்தில் அக்டோபர் 30, 2008 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ கே கங்குலி மற்றும் நீதிபதி பி ஜோதிமணி ஆகியோரின் பெஞ்சுக்கு விசாரணைக்கு வந்தது. புகைப்படங்கள் மூலம் கோவிலில் நடக்கும் ஒதுக்குமுறையைய விளக்கியதும் அறநிலையத் துறையின் ஆணையை அங்கீகரித்து அதை உறுதியாக செயல்படுத்தும்படி நீதிபதிகள் உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர். கலெக்டருக்கும், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் வக்கீலே கடிதம் எழுதி அனுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஆணையர் மட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கடைசி நாள் பண்டிகையில் அனைத்து சாதியினரும் வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாளமுனி சன்னதியின் உள் மண்டபத்தில் நுழைந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ‘சூத்திரால்லாம் கோயிலுக்குள் வந்து விட்டார்கள்’ என்று பார்ப்பன சாதியினர் தகராறு செய்தனர் (வீடியோ). 1959 கோயில் நுழைவு உரிமை சட்டம் அந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.

24.1.2008 குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், அதே மாதத்தில் நக்கீரன் இதழிலும் இது பற்றிய விபரங்கள் வெளியாகின.

இவ்வளவுக்கும் பிறகும் யதோத்தகாரி கோவிலிலும், வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாள முனி சன்னதியிலும் பிரசாதம் வழங்கும் முறையிலும், கோயிலில் நுழைந்து வழிபாடு செய்வதிலும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை கற்றுத் தேர்ந்து வைணவ பஞ்ச சமஸ்காரங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், வழிபாட்டு பாடல்களை பாடும் ஊழியராக மற்ற சாதியினரை சேர்த்துக் கொள்வதில்லை. அத்தகைய தேர்ச்சி இல்லாதவர்களாக இருந்தாலும் பார்ப்பன சாதியினரை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த குழுவினர் மட்டும்தான் வழிபாடு நடக்கும் போது உள் மண்டபத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் உள்ளே நுழையவோ பாடல்களை பாடவோ அனுமதிப்பதில்லை. ‘நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை மற்றவர்கள் பாடுவது சட்டப்படி தவறு’ என்ற அவதூறையும் சொல்லி வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

பாடல் வழிபாடு முடிந்து பிரசாதம் வழங்கும் போதும் உள் மண்டபத்துக்கு அனைத்து பக்தர்களையும் அழைத்து தீர்த்தமும் பிரசாதமும் வழங்காமல் பெரும்பகுதி பிறசாதி பக்தர்களை வெளியிலேயே நிற்க வைத்து வெளியில் வந்து பிரசாதம் வழங்குகிறார்கள். உள்ளே வரத் துணியும் மற்ற சாதியினரை ‘சாமிக்கு அபச்சாரம்’ என்று உளவியல் ரீதியாக மிரட்டி சட்டத்தை கடைப்பிடிக்காமல் போக்கு காட்ட முயற்சிக்கிறார்கள். 2011 அக்டோபர் 30ம் தேதி மணவாளர் மாமுனி சன்னிதி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன்.

‘பிராமணாளுக்கு’ உள்ளே – ‘சூத்ராளுக்கு’ வெளியே

காஞ்சிபுரம்-தீண்டாமை   காஞ்சிபுரம்-தீண்டாமை   காஞ்சிபுரம்-தீண்டாமை

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மக்கள் போராட்டம்தான் ஒரே வழி

சட்டத்திலும், அறநிலையத் துறை ஆணையிலும், நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக சொல்லியிருப்பது போல ‘சாதி, பாலினம், பிறந்த இடம் இவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கோவியில் வழிபாடு நடத்த அல்லது கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படக் கூடாது’. அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து தமது வருணாசிரம சாதீய அடக்குமுறையை இன்னமும் கைப்பிடிக்கும், இந்து மத கோயில்களை தமது பிடிக்குள் வைத்திருக்கும் சிறுபான்மை பார்ப்பனர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது?

இந்தியாவின் சாதி பிரிவினை வெளிப்படையாக தெரிவதில்லை. யாரையும் பார்த்தவுடன் வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியாது. முகத்தைப் பார்த்து யாரையும் ஜாதி சொல்ல முடியாது. அமெரிக்காவின் இனப் பிரிவினை வெளிப்படையாக தெரியும் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது.  ‘இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பார்ப்பனீயம் இன்றும் இங்கே செய்து கொண்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் சொல்லுகிறார்.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் இனவெறியை கடைப்பிடித்த பெரும்பான்மை வெள்ளை இனத்தவருக்கு எதிராக தமது குடியுரிமைகளை நிலைநாட்ட 1960களில் மேற்கொண்ட போராட்டங்கள் புகழ் பெற்றவை. ஆனால் நாமோ இன்னும் இத்தகைய இழிவுகளை கண்டும் காணாமலும் சகித்துக் கொள்வது சரியா?

கறுப்பர் இன போராட்டக் குறிப்பு

காஞ்சிபுரம் கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஒதுக்குமுறையை போன்ற அடக்குமுறைக்கு ஆளான கறுப்பு இன மாணவர்கள் நடத்திய போராட்ட விபரம், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு போராடுவதற்கான வழிமுறையை காட்டுகிறது.

1960ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு வடக்கு கரோலினாவின் கிரீன்ஸ்பரோ நகரில் இருக்கும் வுல்ஸ்வோர்த் என்ற உணவு விடுதியில் நான்கு கறுப்பு இன கல்லூரி மாணவர்கள் மதிய உணவு மேசையில் உட்கார்ந்தார்கள். கறுப்பு இன மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாற மறுத்து விட்டார்கள் விடுதியினர். L வடிவத்தில் அமைந்த 66 பேர் உட்காரக் கூடிய நீண்ட மதிய உணவு மேசையின் இருக்கைகள் வெளளை இனத்தவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. கறுப்பு இனத்தவர் நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் மாலை 5.30 மணிக்கு கடை மூடப்படுவது வரை உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலும் கடைக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். 27 ஆண்களும் 4 பெண்களும் உணவு மேசைகளில் உட்கார்ந்து கொண்டு தமது கல்லூரி பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். புதன் கிழமை போராட்டக் காரர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை 300ஆக பெருகியது. சனிக்கிழமை இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 600 பேர் சேர்ந்திருந்தார்கள்.

அடுத்த திங்கள் கிழமை போராட்டம் பக்கத்து நகரங்களுக்கும் பரவியது. வியாழக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் போராட்டம் விர்ஜினியா, தெற்கு கரலினா, டென்னஸ்ஸி மாநிலங்களுக்கும் பரவியது. மாத இறுதிக்குள் தெற்கு மாநிலங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் அனைத்திலும் பரவி சுமார் 70,000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் பரவிய குடியுரிமை இயக்கத்தின் ஆரம்பமாக இந்த உள்ளிருப்பு போராட்டம் அமைந்தது.

இந்து மத கோவில்களில் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் இத்தகைய உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது மிகவும் தேவையான ஒன்று. சட்டத்தை பொறுத்தவரை ஆகம விதிகள், இறை நம்பிக்கையாளர்களின் மத உரிமை என்ற பெயரில் பார்ப்பனியத்தின் தீண்டாமையை சட்டப் பூர்வமாகவே வழங்குகிறது. இன்னொரு புறம் அப்படி பாகுபாடு காட்டக் கூடாது என்ற பிரிவுகளை மேலே பார்த்தோம். இந்த முரணை ஒழித்து அனைவருக்கும் அனைத்து உரிமை என்பதை இந்து மதத்தில் கொண்டு வரவேண்டுமானால் பல சமத்துவ போராட்டங்கள் நடத்தியாக வேண்டும். நடத்துவோம்.

_______________________________________________________

வினவு செய்தியாளர்.

இக்கட்டுரையின் சுருக்கம் புதிய கலாச்சாரம் மே 2012ல் வெளிவந்துள்ளது

________________________________________________________

 1. சின்னவாலு, பெரியவாலு, நடுவாலு, கொடுவாலு எத்தனவாலானாலும் அத்தனையும் அவாலு எல்லாம் இந்துங்குரது ரீலு போடா எல்லாமே பூணூலு…………..

  • //பெரும்பாலான கோவில்களில் உட்கார்ந்து பிரசாதம் வாங்குபவர்களை விரட்டுவதை நிறுத்தி விட்டார்கள். தீர்த்தம் கொடுப்பதிலும் பாகுபாட்டை சரி செய்து விட்டார்கள். நாட்டின் சட்டம் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது//

   அதான் அப்பு சரியாயிடுச்சே, பொறவு எதுக்கு கூப்பாடு போடற?

   • //இந்த ஆணைக்குப் பிறகும் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. வரதராஜபெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினருக்குச் சொந்தமான இரண்டு துணைக் கோயில்களில் முறையை மாற்றாமல், பார்ப்பனர்களுக்கு கோயிலின் உட்பிரகாரத்தில் வைத்தும், மற்றவர்களுக்கு வெளியில் திண்ணையில் வைத்தும் பிரசாதம் வழங்கும் பழக்கத்தை தொடர்ந்தார்கள்//

    வைணவத்தில் வடகலை பிரிவினர் இந்த பாகுபாடுகளை ஏற்பதில்லை! இன்று மேற்கண்ட வரதர் கோவிலில் நடைபெறும் எந்த விழாவின் போதும் திருகோயில் பணியாளர்கள் ( துப்புரவு செய்வோர், திருவோலக்கத்தார், வாத்யம், அடியார், மெய்க்காவல், பண்டார காவல்) உள்ளிட்ட அனைவருக்கும் ( இவர்கள் அனைவரும் பார்பனர் அல்லாதோர்) முதலில் அனைத்து பிரசாதங்களையும் வழங்கி விட்டு தான், வைதிக பற்பனருக்கே வழங்க படுகிறது! இது இந்த கோவிலில் 700 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறை வழக்கம்! தாத்தாச்சார்யர் பிரிவினரால் நிர்வகிக்கப்படும் இந்த திருகோயிலில், தென்கலை பிரிவினர் செய்த பல பித்தலாடங்களால் வடகலை-தென்கலை பிரச்னை தோன்றி, இதை போன்ற சாதீய பாகுபாடுகள் அவர்கள் சந்நிதிகளில் நடைபெறுகிறது!

  • //தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை//

   ன்னும் ஏன் யதோத்தகாரி கோயில் ( சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்) தனியார் வசம் இருக்கிறது? இந்த தனியாருக்கும் இந்த கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!

 2. நல்லவேலையாக அமெரிக்க ஆப்பிரிக்கள் காந்தியத்தை பயன்படுத்தினார்கள்

 3. யானைக்குப் பூணூல் போட்டு எல்லாப் பிரசாதத்தையும் அதுக்கே கொடுக்கணும்னு சட்டம் போட்டுடலாம்.. மேட்டர் ஓவர்..

  • அம்பி,வழக்கம் போல் எளிதில் புரியாத மாதிரி எதாவது நீட்டி முழக்கி ஒன்னும் சொல்ல முடியலையா.அது சரி அப்பட்டமான இந்த பார்ப்பன சாதி வெறிய யார்தான் நியாயப் படுத்த முடியும்.மேட்டர் ஓவர்ன்னு ஒரு தீர்வு சொல்றீங்களே.அதுலயும் யானைக்கு கூட பூணூல் போட்டால்தான் பிரசாதம் கிடைக்குமா

   • ”எழுந்தருளி இருங்கோ” என்று சொல்லும் மணியக்காரர் யானையிடம் ”எடுத்து அள்ளி முழுங்குங்கோ” என்று வேண்டிக் கொள்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பூணூல் வேண்டாம்..

    மறுபடியும் நீட்டி முழக்குறேனோ..?

    சரி, மணி ரத்தினம் பாணியில் சொல்ல டிரைப் பண்றேன்..

    யானை.., பூணூல் இருந்தா உள்ளே.., இல்லன்னா.. வெளியே.., அவாளுக்கு அந்த சான்ஸ் கொடுக்கக்கூடாது.. ஆமா.. நாலு கோவில் யானைக்கு நல்லது செய்யணும்னா பூணூல் போடறது தப்பே இல்ல..

    • பூணூல் போட்டால் பிராமணாள் பிரசாதம் யானைக்கு கூட கிடைக்குமா?
     அப்போ நானும் பூணூல் போட்டு வரேன்.. எனக்கு பிராமணாள் பொண்ண கல்யாணம் பண்ணி தருவாளா?..

     • ஓட்டோடு போனால் பிரசாதம் கிடைக்கும், பொண்ணு கொடுப்பானா என்பது சந்தேகம்தான்..!!!

 4. ஐயா , இவர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும். வரதப்பெருமாள் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பது இல்லையே. நாம் கோயிலுக்குப் போவது சாமி கும்பிட.

  • சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.இப்படி ”சூத்திர”சாதியினரை இழிவு படுத்தும் பார்ப்பன திமிரை ஒடுக்கனுமா இல்லையா.

   • அன்பு “கே”வுக்கு அப்படி சொன்னால்தான் ரொம்ப சந்தோசப்படுவாராம், அவருக்கு பெருமாளுக்கு உண்டக்கட்டி கொடுக்குறாங்களாங்கறததுதான் மேட்டர். மத்ததெல்லாம் நத்திங்….

    • கருப்பான் , உங்களுக்கு உண்டக்கட்டி தரா த தால் தானே உமக்கு இவ்வளவு கோவம். இந்த ஐயமார்கள் தம்பட்டம் எல்லாம் கோயிலோட மட்டும் தான் மச்சி. வேற எங்கயும் இவன் களை மதிக்க ஆள் இல்லை. எல்லாம் மேலே வந்துட்டோம். இவன்கள் இன்னும் குடுமி கட்டோட தட்டுல பிச்சை தான் எடுத் துட்டு இருக்காங்க. எதொ சீன் போட்டுக்றானுங்க விட்டுடுங்களேன். சாமி க்கு சமஸ்கிரிதம் மட்டும் தான் புரியும் என்றால் இந்த உலகத்தில ஐயரு பசங்க மட்டும் தான் வாழ்ந்திருபாங்க. சாமி எல்லாருக்கும் தான்.

   • // ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா” //

    நமஹா என்பது தெய்வப் பெயர்களுக்குப் பின்வரும் துதி. வேற ஏதாவது உல்டா இருந்தா சொல்லுங்கோ..

    • என்ன காரணத்தால் நமஹா சொல்லப்படுதுன்னு ஆராயுற அம்பிதான் இந்த மந்திரத்துல நமஹாவுக்கு முன் ஏன் ”சற்சூத்திராய” வருதுன்னு சொல்லணும்.இந்த அசிங்கம் புடிச்ச கருமாந்திரத்த அர்ச்சனயின்போது சொல்வதில்லைன்னு மறுக்க முடியல.இதுல மீசையில மண் ஒட்டலங்கிற மாதிரி வேற ”உல்டா” கேக்குறது கபடம்.முதல்ல இது ஒன்னும் உல்டா இல்லை.நேரடியானது எனபது தெளிவு.

     • சிவாய நமஹ என்றால் சிவனுக்கு வணக்கம்.

      சத்சூத்ராய நமஹ என்றால் சத்சூத்திரனுக்கு வணக்கம்.

      அப்படி எந்தப் பார்ப்பான் ‘சத்சூத்ரனுக்கு’ அர்ச்சனை செய்கிறான்..?!

      • ஆமாமா பார்ப்பனர்கள்தான் நம்ம நாட்டிலேயே தாழ்ந்த ஜாதி, அவாதான் பாவம் இன்னும் தெருவுல கோயிலிலே போக முடியாம கஸ்டப்படறா? அம்பி மாதிரியே?

       • தாழ்ந்த சாதி என்று ஒன்றும் இல்லை, கருப்பன்..
        தாழ்த்தப் பட்ட சாதி என்று சொல்லுங்கோ..

      • பேஷ்…பேஷ் கலக்குரேள் அம்பி………
       // ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா” /
       இந்த முழு வாக்கியத்திற்கும் அர்த்தம் செய்வேள்…….
       // “ஒரு தாய் பல தகப்பனுக்கு பிறந்த சத்சூத்ரனுக்கு வணக்கம்”//
       அதாவது பச்சையா சொன்னா தே….டியா மகன்னு சொல்லி வணக்கம் சொல்றேள்!!!??? அதையும் இந்த மானங்கெட்டவர்கள் காசு குடுத்து கேக்குராங்க.

       • // “ஒரு தாய் பல தகப்பனுக்கு பிறந்த சத்சூத்ரனுக்கு வணக்கம்”//

        சாமிக்கு பூப் போட்டாப்லயே சாமியப் பாத்து ‘சத்சூத்ரனுக்கு’ வணக்கம் சொல்றானோ..?! கொஞ்சம் நம்புறாப்ல கதை வுடுங்கப்பா..

        • அம்பி, அப்ப “ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா” இந்த முழு வாக்கியத்துக்கும் என்னதான்டா அர்த்தம்.

         • அதே அர்த்தம்தாம்லே, ஆனா அதைச் சொன்னவன், சொல்கிறவன் எல்லாம் பார்ப்பான் இல்ல.. உன்னைப் போல விவரமத்ததுகளை ஏய்க்க எவனோ ஒருத்தன்,பார்ப்பான் சொல்றான்னு அடிச்சு விட்ட கதை..

          • அண்டக்கருப்பு.. kool …
           அதாவது அவர்கள் கணக்கு படி ‘ஒரு தாய் பல தகப்பனுக்கு பிறந்தவன் சத்சூத்ரன்.
           ஆனால் பொது கணக்கு ”ஒரு தாய் வேறொரு தகப்பனுக்கு பிறந்தவன் பிராமணன்.

          • எவர்கள் கணக்குப்படி..? கிட்னியாவது இருக்கா, இல்லையா….?!

     • || ஏக மாதா பகு பிதா சர்சூத்ராய நமஹா ||
      முதலில் வடமொழி இலக்கணம் தெரிந்து கொள்ளுங்கள் . பிறகு இச்சொற்றொடரில் எத்துணைப் பிழைகள் உள்ளனவென்று காணலாம்.
      ஏக: – ஒரு ;
      மாதா – அன்னை
      முதல் இரண்டு சொற்களில் வேற்றுமை உருபுப் பிழைகள் காணப் பெறுகின்றன..
      “ஏகயாஹா மாதஹ” என்பதே சரி. அதாவது ஒரு அன்னையினுடைய என்று பொருள்.
      “ஏக: மாதா” – என்பது தவறு.

      பிறகு 3ம் மட்டும் 4ம் சொற்களைக் காண்போம்
      “பஹு”= பல
      “பிதா” = தகப்பன்
      பஹு பிதா – என்பதும் தவறு.
      “பஹூநாம் பித்ரூநாம்” என்பது சரி.
      அப்பொழுதுதான் பல தகப்பன்களுடைய என்று வரும்.

      “ச” = மேலும் என்ற சொல் இங்கே கிடைக்கவில்லை.
      “ச” வின் உபயோகம் இங்கு மிகவும் இன்றியமையாதது.

      இங்கே “அஜாயத” – பிறந்த என்ற வினைச்சொல்லும் காணவில்லை.

      “ஏகாயாஹா மாதஹ , பஹு பித்ரூநாம் ச, அஜாயத சச்சூத்ராய நமஹா “ என்பதே சரியான சொற்றொடர்.

      “ஏக மாதா பஹு பிதா சர்சூத்ராய நமஹா” – என்பது வடமொழி அறியாத, ஏதோ சில சொற்கள் மட்டும் கற்ற , ஏதோ ஒரு முழுமூடன் கற்பித்த சொற்றொடராம்.

   • அன்பு அள்ளி விடாத, இப்படில்லாம் மந்த்ரமே கிடையாது! கல்யாணத்துலயும் தான் சொல்றோம், இந்த கன்னிகையை தேவதைகள் காப்பாற்றட்டும்நு அத போய் ஒரு லூசு தாத்தாச்சாரி ப்லோக்னு வெச்சுகினு, அந்த பொண்ண தேவதைகள் போடுறாங்கன்னு எளுதுச்சு! அது சரி, நீ கொடி பிடிக்குற பாவாடைக்கும் தாடிக்கும் கூட பல சாதிகளும் சாத்திய வேற்றுமைகளும் அரேபியாவிலும் கூட உண்டுன்னு தெரியுமோ?

   • இப்பிடில்லாம் ஒரு மந்திரமும் கிடையாது மசுரும் கிடையாது! எதோ சொல்லணுமேனு சொல்ல கூடாது! இந்த லட்சனதுள்ள அம்பி எதுகிடலயாம் இத! என்னவோ போ, பொய் சொல்லியாவது நம்ம பப்பு வேகுதாணு பாக்கற நெலமைல இருக்கன்றத ஒத்துகிட்டியே, சரி தான்!

 5. பிரபந்தத்தை அவர்க்ளை தவிர வேறு யாரும் அஙுகு பாட முடியாது. அந்த தேனினும் இனிய தமிழ் பாடல்களை அந்த வைணவ பிராமணர்கள் கொலை செய்வதைக் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருக்கும்.

 6. ஐயங்கார் மக்கள் தமிழ் நன்றாக உச்சரிக்க தெரிஞ்சவுங்க தான்.

  இந்த உக்காத்தி வெக்கிறது,நிக்க வேக்கிரதுன்னு வழக்கத மாத்துன நல்ல இருக்கும்,

 7. சாதி வேற்றுமையை களைய வந்த ஆசார்யன் இராமானுசன் சன்னதியிலேயே இந்த சாதி வெறியர்கள் இத்தனை அட்டகாசங்கள் செய்கிறார்கள்.நீங்கள் குறிப்பிட்ட இத்தனை செயல்களும் மேல்கோட்டை இராமானுசர் ஜெயந்தியிலும் வருடாவருடம் தவறாமல் நடக்கிறது.இவர்கள் சாதிதான் பெரியது என்று நினைத்தால் அட்லீஸ்ட் இராமானுசரை வழிபடும் hippocrazy ஆவது விட்டுவிடுவது நல்லது.

 8. இந்த வைனவர்கள் செயல் அவர்கள் குருவாக நினைக்கும் ராமனுஜர் கொள்கைக்கு முரனானது…அவரோ காஞ்சி பூர்னர், மகாபூர்னர் போன்ற பார்ப்பனரல்லாதவரை குருவாகக்கருதினார், ஜாதி அமைப்பை எதிர்தார்…
  இந்த பைத்தியக்காரர்கள் வணங்கும் ஆழ்வார்கள் எல்லாம் பார்ப்பனர் இல்லை…
  கோவிலுக்கு செல்லும் மக்களே:
  இத்தகைய கோவில்களில் இவ்வாறு நடந்தால் உள்ளிருப்புப்போரட்டம் செய்யுங்கள்,நீங்களே பிரசாதம் செய்து எல்லாருக்கும் வழங்குங்கள்,
  இந்த மென்டல் கேசுகளிடம் இருந்து பிரசாத பக்கெட்டை பிடுங்கிக்கொள்ளுங்கள்,நீங்களே பூஜை செய்ய முற்படுங்கள்…

  முக்கியமான விசயம்: தட்ச்சினை கன்டிப்பாக கொடுக்காதீர்கள்…
  பார்ப்பன சதி ஒப்பாரி வைத்து ஒதுங்காதீர்…மோதுவீர்…

 9. // இந்த காலத்துலேயும் அதுவும் கோவிலில் இந்த அளவு தீண்டாமை பார்த்தால் ஏன் இஸ்லாம் வளராது. கொஞ்சம் சிந்திச்சு இந்து மதத்தை காப்பாத்துங்கண்ணே! இல்லேண்ணா நித்தியானந்தாவை காஞ்சிபுரத்துக்கு சேவை செய்ய அனுப்ப வேண்டி வரும். //

  இடையில் நாத்திகாள் புகுந்துட்டாளே, இஸ்லாம் எப்படி வளரும்..??!! ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை பாய்..!!!

  நித்தியைப் போன்றவர்களை நம்பி இந்துமதம் இல்லை.. அதற்கு இவர்களின் கூத்து ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை..

  • There is a custom in Andhra Pradesh that there is no relation between temples and Brahmin Preists…Here anyone who learns some Pooja Vidhi can become Priests..
   Many temples are there in AP, where non-brahmins are chanting Vishnu Sahasranama and Sree suktham and make pooja…No differences in distributing Prasadams..
   This you can see in Karnatak also…
   Tamil Nadu custosm I do not know…

 10. ஏக மாதா பகு பிதா சர்சூத்ராய நமஹா என்று ஒரு மந்திரமே இல்லன்னு பார்ப்பனர்கள் துண்ட போட்டு தாண்டுகிறார்கள்.

  அப்படி ஒரு மந்திரம் இல்லையென்றால் இந்த சுட்டியில் உள்ள விவாதம் நடந்திருக்காதே.பார்க்க;

  http://www.yarl.com/forum3/index.php?showtopic=16197&st=20

  “ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக” என்றும் மந்திரம் இருக்கிறது.

  இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

  அதற்கு என்ன அர்த்தம்னு அம்பியின் குழப்புதலை மீறி பார்க்க வேண்டும்.

  \\ http://www.indianhindunames.com/108-names-sri-sathya-sai-baba-ashtottara-shatanaamavali.htm//
  இந்த சுட்டியில் உள்ள 26 வது மந்திரம்.
  om sri sai apasthamba sutraya namaha
  அதன் அர்த்தத்தையும் அவர்களே தந்துள்ளார்கள்.
  who was born in the lineage of the sage of apasthamba

  ஆக சூத்திராய என்பதன் பொருள் ”பிறந்த” என்று ஆகிறது. அம்பி சொல்வது பொய் ஆகிறது.ஏக மாதா பகு பிதா வுக்கு என்ன அர்த்தம்னு சொல்லனுமா என்ன. ஆக மொத்தத்தில் பார்ப்பன பூசாரிகள் சூத்திர சாதியினரை இழிவு படுத்துகிறார்கள் எனபது தெளிவு.

  இந்த விளக்கத்துக்கு பின்னரும் அம்பிகள் அப்படி ஒரு மந்திரமே இல்லன்னு சாதிக்கலாம்.அதை மறுக்க ஒரே வழிதான்.அர்ச்சனை செய்யப் போகும் சூத்திர சாதியினரில் மான உணர்வு கொண்டோர் செல்போன் ல அந்த மந்திர உச்சாடனத்தை ரெக்கார்ட் செய்து கேட்டுக்கொள்ளவும்.

  • இந்த சுட்டி சரியாக ஓபன் ஆகவில்லை.ஒருவேளை மேற்கோள் குறி சேர்ந்துள்ளதால் அப்படி இருக்க கூடும். மேற்கோள் குறி நீக்கப்பட்ட இந்த சுட்டியை பயன்படுத்தவும்.

   http://www.indianhindunames.com/108-names-sri-sathya-sai-baba-ashtottara-shatanaamavali.htm

  • அன்பு அவர்களே நீங்கள் குறிப்பிட்டுள்ள அதே சுட்டியை முழுவதுமாக படித்து இப்படிப்பட்ட தவறான விளக்கங்களை கூறும் மக்களை கவனியுங்கள்.

   ஒரு விஷயத்துல நான் யாழ்ப்பாணம் தமிழர்கள ரொம்ப மதிக்கறேன்.எல்லாமே போனாலும் அவுங்க தெளிவா இருக்காங்க, வெட்டி விஷயத்துக்காக சண்டை போடறதில்லே. மதத்தையும் வரலாறையும் பற்றிய சரியான கோட்பாடு இருக்கு.

   முன்பு தென் தமிழ்நாட்டில் இருந்த அதே மென்மையான கலாசார சக்தி அவுங்க கிட்ட இருக்கு,

   ரொம்ப நன்றி,யாழ் ரொம்ப நல்ல தளம்.

   Just one more thing,if at all brahmins insult others by calling them kids of one mother & multiple fathers,then why do they pay respect to them in a ritual mantra?

   Looks like a big hole in the common sense applied here.

  • // அப்படி ஒரு மந்திரம் இல்லையென்றால் இந்த சுட்டியில் உள்ள விவாதம் நடந்திருக்காதே.பார்க்க;

   http://www.yarl.com/forum3/index.php?showtopic=16197&st=20

   “ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக” என்றும் மந்திரம் இருக்கிறது. //

   அன்புக்குரிய அன்பு,

   நீங்கள் கூட ஒரு மந்திரம் எழுதலாம். அதை பார்ப்பான் சொல்கிறான் என்று எல்லா தளங்களிலும் விவாதிக்கலாம்.

   // இந்த சுட்டியில் உள்ள 26 வது மந்திரம்.
   om sri sai apasthamba sutraya namaha
   அதன் அர்த்தத்தையும் அவர்களே தந்துள்ளார்கள்.
   who was born in the lineage of the sage of apasthamba

   ஆக சூத்திராய என்பதன் பொருள் ”பிறந்த” என்று ஆகிறது. அம்பி சொல்வது பொய் ஆகிறது.ஏக மாதா பகு பிதா வுக்கு என்ன அர்த்தம்னு சொல்லனுமா என்ன. ஆக மொத்தத்தில் பார்ப்பன பூசாரிகள் சூத்திர சாதியினரை இழிவு படுத்துகிறார்கள் எனபது தெளிவு. //

   குழப்புவது நீங்கள்தான்.

   ”சூத்ராய” (suthraaya) என்றால் ”பிறந்த” என்கிறீர்கள், “சூத்திரர்கள்” (sudra) என்ற வருணம் என்றும் கூறுகிறீர்கள், suthra, sudra என்ற பொருள் வேறுபடும் இரு வடமொழிச் சொற்களை ஒன்றாகச் சேர்த்து “பிறந்த சூத்திரர்கள்” என்று புதுசாகப் போட்டு குழப்புகிறீர்கள்.

   சாய் பாபாவின் ”பிறப்பைப்” பற்றி அவர் பக்தர் யாரோ எழுதிய துதியில் “சூத்திரர்களை” கொண்டுவந்து நுழைக்கிறீர்கள்.

   பார்ப்பான் தெய்வங்களின் பெயர்களைக் கூறி துதிக்கும் போது ‘சூத்திரர்களை’ ’துதிக்கும்’ வகையில் மந்திரம் எதுவும் சொல்வதில்லை. அப்படி சொல்லப்படும் மந்திரங்கள் எதுவும், வேத மற்றும் சைவ, வைணவ, சாக்த, கௌமார, காணபத்திய, சூரிய வழிபாடு போன்ற அறுவகைச் சமய மரபுகள் எதிலும் இல்லை.

   இதற்கு மேலும் பார்ப்பனர்கள் சூத்திரர்களை இழிவு படுத்துகிறார்கள் என்று புளுகிக் கொண்டிருந்தால் அது உங்கள் பிரச்சினை..

   // இந்த விளக்கத்துக்கு பின்னரும் அம்பிகள் அப்படி ஒரு மந்திரமே இல்லன்னு சாதிக்கலாம்.அதை மறுக்க ஒரே வழிதான்.அர்ச்சனை செய்யப் போகும் சூத்திர சாதியினரில் மான உணர்வு கொண்டோர் செல்போன் ல அந்த மந்திர உச்சாடனத்தை ரெக்கார்ட் செய்து கேட்டுக்கொள்ளவும். //

   நன்னா கேட்டுச் சொல்லுங்கோ.. suthraaya-வா, sudraaya-வா என்று.. இல்லை வேறேதாவது ஆயவா என்று.. அன்பு கொடுத்த முதல் மந்திரத்துக்கும், இப்போது கொடுக்கும் மந்திரத்துக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா என்றும் சொல்லுங்கோ…
   உங்கள் மான உணர்வு எப்படியெல்லாம் திசை திருப்பப்படுகிறது என்றும் சொன்னால் ரொம்ப நன்னாயிருக்கும்..

   • Hata off to Ambi…you have clearly differentiated the two words…SUTHRA and SUDRA…
    All Brahmin Priests are not driving away the non brahmins while giving the Prasad in our andhra Temples..I do not know about Tamilnadu temples..
    One thing is sure…only two castes ar there:- MAN & WOMAN…

 11. ஒரு பார்ப்பனர் கோவிலுக்கு சென்றால் கோவில் அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்ல மாட்டாரா ? உண்மையில் எனக்கு தெரியாததால் கேட்கிறேன்.

  • ”சூத்ராய நமஹ” – (sudraya namaha ), “சூத்திரர்களுக்கு வணக்கம்” என்று வரும் ஒரு மந்திரம் இல்லை, அப்படி ஒரு மந்திரத்தை எந்தப் பார்ப்பானும் சொல்வதில்லை என்று 101 வது முறையாக ஓதி முடிக்கிறேன்..

   • SHIVAYA NAMAH …ANA CHINTHITHU ERUPPORKKU APAYAM ORUNALUM ELLAI…
    meaning those who chant Shivaya Namah: there is no danger for them…LORD SHIVA will protect them from accidents/robbery etc.
    If we chant SUDRSAYA NAMAH: may they will come and protect us becaause this is
    Kaliyuga..right ?

    • கிருஷ்ணகுமார்,

     ’சூத்ராய நமஹ’ (sudraaya namaha) என்று தனியாகவோ, ’கலியுக தேவதா சூத்ராய நமஹ’ (kali yughe devathaa sudraaya namaha) என்று அடைமொழியுடனோ புதிதாக ஒரு மந்திரத்தை நீங்கள் உருவாக்கி ’சூத்திரர்களை’ பூப்போட்டு வணங்கினாலும், ‘சூத்திரப்’ பட்டத்தை ஏற்பார்களா என்பது சந்தேகமே. வர்ணாசிரம பாகுபாட்டை நிலை நிறுத்தும் பார்ப்பனச் சதி என்றுதான் பார்ப்பார்கள்.

     அதுபோக, ‘சூத்திரர்’ அல்லாத ‘வைசிய, சத்திரிய’ சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் உங்களை திட்டப் போகும் வார்த்தைகளை உங்களால் காது கொடுத்து கேட்க முடியாது..!!! வேண்டாம் இந்த விபரீத ஆசை..!!!

 12. எனது வாதத்திற்கு பதில் அளிப்பதாக எண்ணிக்கொண்டு இங்கு கும்மி அடிக்கும் அன்பார்ந்த பார்ப்பனர்களே இந்த விவாதத்தை படித்துவரும் பார்ப்பனர் அல்லாத அன்பர்களே,

  காக்கை கூட்டத்தில் கல்லெறிந்தாற்போல் என்ன ஒரு இரைச்சல்.ஒருவர் அப்படி ஒரு மந்திரமும் கிடையாது.மசுரும் கிடையாது ங்கிறார்,-[அந்த மந்திரம் பத்திதான் எங்களுக்கு கவலை.அக்கறை.உங்களுக்கு ஹேர் மேல்தா அக்கரயின்னா தாராளமா அதை பிடித்துக் கொள்ளவும்.எங்களுக்கு கவலையில்லை.]அம்பி நான் புளுகுவதாக கொந்தளிக்கிறார்.அம்பி மட்டைக்கு ரெண்டு கீத்தாக பொளந்து கட்டுவதாக இன்னொரு பார்ப்பனர் வந்து அம்பிக்கு முதுகு சொறிகிறார். கரிகுமார் பந்தயம் கட்ட 5000 ரூபாயோட ஆஜர் ஆகிறார்.எது சரியான வாதம் என்பதை புரிந்து கொள்ள நடந்த விவாதத்தை ஒரு முறை மீள்பார்வை செய்தாலே போதும்.

  சூத்திர சாதியினர் பேருக்கு அர்ச்சனை செய்யும்போது பார்ப்பன பூசாரிகள் அவர்களை வேசிமகன் என இழிவு படுத்தும் வகையில் ”ஏக மாதா பகு பிதா சூத்ராய நமக” என்று மந்திரம் சொல்கிறார்கள்.அதன் அர்த்தம் ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம் என்பதாகும் என்று எழுதினேன்.

  அதற்கு பதிலளித்த அம்பி நமக எனபது தெய்வத்தின் பெயருக்கு பின் வரும் துதி.எனவே நான் சொல்வது தவறு என்றார்.அப்படின்னா அந்த மந்திரத்துக்கு என்ன பொருள்ன்னு அவரையே விளக்குமாறு கேட்டேன்.அவரும் சிவாய நமக ன்னா சிவனுக்கு வணக்கம்.அந்தப்படிக்கு சூத்ராய நமக ன்னா சூத்திரனுக்கு வணக்கம் ன்னு அர்த்தம்.பார்ப்பான் எப்படி சாமிக்கு பூப் போட்டுக்கிட்டே சூத்ரன கும்புடுவான்.எனவே நான் சொல்ற மாதிரி மந்திரமே கிடையாது என்கிறார்.

  அம்பியின் இந்த வாதங்களுக்கு பதிலாக வடமொழியில் அமைந்த சாய்பாபா துதி ஒன்றை எடுத்துக் காட்டி சூத்திராய என்றால் பிறந்த என்று பொருள்படும் என நிறுவி சூத்திரனுக்கு என பொருள் கொள்ள முடியாது என எழுதினேன்.இதற்கு பதில் அளித்த அம்பி shudra shoothraya இரண்டையும் ஒன்றாக போட்டு நான் குழப்புவதாக சாமர்த்தியம் காட்டுகிறார்.

  குழப்புவதும் புளுகுவதும் யார்.பார்க்கலாம் அம்பி.சாமர்த்தியங்கள் நிரந்தரமாக வெல்வதில்லை.உண்மைக்கு சாமர்த்தியம் ஒரு போதும் ஈடாகாது.

  ஏக மாதா பகு பிதா சூத்ராய நமக இதற்கு ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம் என எப்படி பொருள் வருகிறது என்பதற்கு மனுஸ்மிரிதியை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டும்.
  சூத்திரன் யார்.மனு தர்மம் சொல்கிறது.
  யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (அத் 8. சு. 415)

  ஆகவே அந்த மந்திரத்தில் சூத்திரன் என்ற சொல் இல்லாவிட்டாலும் அந்த இழிவு அர்ச்சனை செய்ய வந்து நிற்கும் சூத்திரனைத்தான் குறிக்கிறது என்பதால் ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம் என நான் மொழி பெயர்த்ததில் தவறேதுமில்லை.அதுதான் சரியான பொருள்.

  மற்றபடி அப்படி ஒரு மந்திரமே இல்லைன்னு சாதிக்கும் வாதத்திற்கு ஏற்கனவே சொன்ன பதில்தான்.
  இந்த விளக்கத்துக்கு பின்னரும் அம்பிகள் அப்படி ஒரு மந்திரமே இல