மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை!

23
பலியான மாணவி அகிலா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர்.

அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால் வெறிபிடித்த அந்த மாணவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அகிலா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.  இறப்பதற்கு முன்னர் அவள் எழுதிய கடிதத்தில் அந்த மூன்று மிருகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் காரணமென்று எழுதியிருக்கிறாள்.

செல்பேனில் படம் பிடிப்பதை அந்த மூவர் அணி திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறது. அதற்கு அத்தை மகன் என்ற உறவுமுறை பயன்பட்டிருக்கிறது. ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடித்து அவளிடமே காட்டி இன்புறுவது எந்த அளவுக்கு விகாரமானது, இழிவானது என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வேட்டையாடும் ஆண்மையின் பெருமையாக தெரிந்திருக்கிறது. இதனால் அவர்களது குற்றச் செயல் இப்படி படம் பிடித்ததோடு மட்டும் நின்று போயிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் தமது வக்கிர நோக்கங்களுக்காக அகிலாவை மிரட்டியிருப்பார்கள்.

டிப்ளமா படித்து விட்டு ஒரு வேலை, பின்னர் திருமணம் என்று வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக முடிய வேண்டிய அவசியம் என்ன? செல்பேசி என்பது பெண்களைப் பொறுத்தவரை எப்போதும் கற்பழிக்கக் காத்திருக்கும் வில்லன்களைப் போல மாறிவிட்டதா?

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் இப்போதெல்லாம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் கூட இத்தகைய குற்றச் செய்திகள் குறைந்த பட்சம் புலனாய்வு புலிகளின் அட்டைப்படத்தை மலிவான நோக்கத்திற்காகவென்றாலும் ஆக்கிரமித்திருந்தன. தற்போது இதெல்லாம் ஒரு செய்தியா எனுமளவுக்கு குற்றங்களும் நிறைய நடக்கின்றன. அவற்றை சுவாரசியமாக்குவதற்கு ஊடகங்கள் முயல முயல அடுத்த குற்றச் செய்தி வெறுமனே தகவலாக மட்டும் மக்களிடம் முக்கியத்துவம் பெறாமல் மறைந்து விடுகிறது.

எல்லா மாணவர்களும் இப்படி செல்போனும் வக்கிரமுமாக அலையவில்லை என்றாலும் இந்த போக்கு மாணவர்களிடையே பரவிவருவது கண்கூடு. ஆரம்பத்தில் முகத்தை மட்டும் மறைவாக படமெடுப்பவர்கள் பின்பு முழு ஆபாச படமெடுக்கும் பரிணாம வளர்ச்சியை எட்டுகிறார்கள். பிறர் எடுத்த படத்த ரசித்தவன் பின்பு தானே எடுக்க முயல்கிறான். இத்தகைய வக்கிர சீரழிவுக்கு அத்தகைய மாணவர்களின் குடும்பப் பெண்களே முதல் பலி.

வரலாற்றுக் காலம் முழுவதும் வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது. மாராப்பை சரிசெய்வதை அனிச்சைச் செயலாய் செய்யும் பெண்கள் இனி வெளியிலோ, வீட்டிலோ இருக்கும் போது சுற்றுச் சூழலில் செல்பேசிகள் இல்லை என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் போல. ஆனாலும் மாணவர்களிடையே தினுசு தினுசுகா பரவி வரும் வக்கிரம் இத்தகைய கண்காணிப்பையெல்லாம் உடைத்து விடும்.

மாணவர் சங்கங்களும், மாணவர்களும் குறிப்பாக மாணவிகள் இத்தகைய கயவர்களை குறி வைத்து தனிமைப்படுத்தி தாக்குவதன் மூலம் மாணவ சமூகத்திடையே வேரூன்றி நிற்கும் இந்த வக்கிரத்தை அறுக்க முடியும். அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடும்போதே இத்தகைய பண்பாட்டு தாக்குதலையும் அதற்கு பாதை போடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் நாம் அகிலாக்களைக் காப்பாற்ற முடியும்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

23 மறுமொழிகள்

  1. இந்த மாதிரி பிரச்சினைகளில் பெண்களின் படம் மற்றும் முகவரியை போடாமல் செய்தியை மட்டும் சொல்லலாமே வினவு !

    • அகிலாவின் படமும், உண்மையான விவரங்களும் பல பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். பொதுவில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட நபர் குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கும் போது அவர்களது பெயர், அடையாளம் முதலியவற்றை மறைத்துத்தான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அந்தப் பெண் இறந்து போகும் போது உண்மையான விவரங்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன. அப்படித்தான் நாங்களும் வெளியிட்டிருக்கிறோம். அடையாளத்தை மறைத்தல் என்பது இப்போது தேவையில்லை எனும் போது உண்மையான குற்றவாளிகளை சமூகத்தின் முன் அடையாளம் காண்பிக்க வேண்டியும் இப்படி வெளியிட வேண்டியிருக்கிறது.

      • அந்த பெண் புகை படத்தோடு ஏன் குற்ற வாளிகளின் புகை படங்களை போடா வில்லை, அந்த கயவர்கள் யார் என்று உலகிற்கு காட்டினால் சாலைகளில் நடக்கும் போது நல்லுள்ளம் படைத்த யாவரேனும் ஒருவர் அந்த கயவர்களை நையா புடைப்பார்கலே, அந்த குற்றவாளிகளை நீங்களும் காப்ற்றுகிரீர்களா?

  2. வினவு நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் செய்தி மிகவும் கண்டிக்கத் தக்கது தான். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஆனால், எப்படியும் இவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்பது தான் நிஜம்.

    மேலே குறிப்பிட்டது போல மற்றவர்கள் வெளியிட்டால் நீங்களும் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லையே. நியாயமாக அந்த மூன்று பொறம்போக்குக படத்தை தான் வெளியிட்டு இருக்க வேண்டும்.

    பெண்களே! இவற்றை எல்லாம் தடுக்கவே முடியாது.. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வேறு வழி இல்லை. இது தான் கசப்பான உண்மை.

  3. some one stole my pen…… vinavu we have protest against corporates, politicians,police,rich people….. what corporates will do when some culprits like these guys do something….. think vinavu…

  4. இன்னும் எத்தனைநாள் தான் அவமானம் , அசிங்கம் என பெண் பயப்படுவதும் தற்கொலை செய்வதுமாய்..?.. இப்படி செய்பவனை நடு ரோட்டுக்கு இழுத்து வந்து அடித்தே கொல்ல பழக்குங்கள்..பெண் குழந்தைகளை ..எது அவமானம் , எது அசிங்கம என தெரியாமல் இருக்கோம் பெற்றோர் நாம். மனம் ஒன்றி பிறருக்கு தீங்கு இழைப்பது மட்டும் , அவமானப்படவேண்டியதும்.. வெட்கப்படவேண்டியதும் . என சொல்லி கொடுங்க.. இப்படியான தற்கொலை இன்னொரு கயவனை உருவாக்கும் ..

  5. // மாணவர் சங்கங்களும், மாணவர்களும் குறிப்பாக மாணவிகள் இத்தகைய கயவர்களை குறி வைத்து தனிமைப்படுத்தி தாக்குவதன் மூலம் மாணவ சமூகத்திடையே வேரூன்றி நிற்கும் இந்த வக்கிரத்தை அறுக்க முடியும். //

    முற்றிலுமாக ஆமோதிக்கிறேன். கூடவே கடுமையான சட்டங்களும் அவசியம்.

  6. After some time people will forget about this.

    Singer Mano’s son Shabir sexually blackmailed a lady by taking her nude photos.
    Today Shabir is acting as a Hero in Tamil movie.
    Can we do anything about it?

  7. அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடுவதற்கே அணி திரள மறுக்கும் மக்கள் தங்கள்தங்கள் வீட்டில் நடந்தாலும் இப்பபடித்தான் இருப்பார்களோ?

  8. போர்ன் படங்களை பார்ப்பதே குற்றம். ஆனால், இந்தியாவில் மிக மிக மலிவாக போர்ன் படங்கள் கிடைக்கின்றன (easy accessible). அவற்றை முறைபடுத்தினாலே இவை போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்.

  9. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் போல ! தொழில்நுட்பத்தை அறிவில்லா மக்களிடம் கொடுத்ததன் விளைவே இது .. ஆணாதிக்கம், பாலியல் வக்கிரம், பொறுப்பற்ற தன்மை என்பதன் உச்சக்கட்ட விளைவு .. பாலியலை பாமாயில் போல ஊடகங்களில் பருக்கி வரும் இந்திய சமூகமும் காரணமே !!! என்னத்தப் படித்து என்னத்தக் கண்டு .. படித்தவர்களில் தான் இப்போது எல்லாம் பொறுப்பின்மை பெருகி ஓடுகின்றது … !!!

    கடுமையான தண்டனை மட்டுமில்லாமல் அரசு தொழில்நுட்பதைக் கையாள அறிவுறுத்தும் பொறுப்புடையதாக இருக்கின்றது … !

  10. ஆபாச வலைத் தளங்கள் மற்றும் குறுவட்டு விற்பனையைத் தணிக்கை / தடை செய்ய இந்தியாவில் வழியில்லையா?

  11. 68 கோடி பேர் செல்போன் வெச்சிருக்கான்…. எங்கேயோ ஒருத்தன் ஏதாவது பண்ணா என்னயா பண்ண முடியும்…உனக்கு எவனாவது ரோட்ல ஒன்னுக்கு போன கூட.. போராடனும், அப்படி தானே…. அரிவாளி, முதல் தடவயே அவ போலீஸுக்கோ… இல்ல அவங்கப்பன் கிட்டயோ சொல்ல வேண்டியது தானே…. எவ்வளவோ எடத்துல பொண்னுங்க ஏமாத்தி.. பசங்க சாவரானுங்க… அது எல்லா உனக்கு தெரியாதே… போயி எங்கேயாவது………

    • எங்கேயாவது ஒரு தற்கொலை நடக்கும்போதுதானய்யா விசயம் வெளியே வருது.

      //எவ்வளவோ எடத்துல பொண்னுங்க ஏமாத்தி.. பசங்க சாவரானுங்க//

      அய்யோ இவரும் தகவல சொல்றாராம்மா!

  12. பாலியலை பாமாயில் போல ஊடகங்களில் பருக்கி வரும் இந்திய சமூகமும் காரணமே !!!கடுமையான சட்டங்களும் அவசியம்..

  13. அந்த குற்றவாளிகளின் படத்தையும் வெளியிட்டு இருக்கலாமே? எங்காவது பார்த்தால் கல்கொண்டு அடிக்கலாம்.

  14. First girls should understand one fact: they live in an indecent and vulgar society in which such incidents are taking place without any tinge of remorse. For any girl or a woman, having any sort of relations with men should have a decent limit. If anyone, in the name of relative, friends, lovers… is permitted to enter her personal space be it her home, college or any other place for that matter, her privacy and dignity will be taken for granted. On many instances girls themselves do not know what kind of males she is dealing with in her day to day life. If someone comes to her home as her aunt’s son, the first and foremost culprits are her parents who allowed them to come into the house when they are not present and that too with his friends…!

    Secondly, overlooking his innuendos and considering them as kinship privileges towards the girl who he is “going to” marry will end up with this kind of ugly developments.

    Thirdly girls should not become over emotional in the matters of love and affection with boys and blindly trusting them on whatever they do. It is quite impossible to ask mobile phone manufacturers to stop camera phones. There is nothing wrong in disbelieving boys. Keep them at distance. Respect your personal space. Do not allow any asshole to invade your personal sphere. If someone does, take it so seriously and consider it as an infringement on your dignity and self respect. Be careful when they handle camera phone in your presence. If he is good he will remain good. But who knows with which material he is made of! Taking photographs while taking bath, while sleeping, while being intimate is not possible if he is not allowed to enter your personal space. When you attain ten years of age, even your own father and brothers cease to have this right to come inside your uncomfortable space. Be careful girls! This society is still a male dominated one.

    And media should play a responsible role – while displaying the photos of culprits, they should not give any photograph of the victim. It further molests her.

    In schools from the very beginning boy students should be taught how to respect a girl or woman and girls should be taught how to approach boys at various stages of life. A sort of psychological understanding about gender along with studies of crimes against women, how innocent girls become victims of sex crimes just because they are girls etc should be taught. Getting these plonkers punished for this crime will not end the issue but not to be put aside. The law and Order agencies should be more stringent and deterrent enough in making men of this kind not repeat such things. If you consider these crimes just like robbery and petty theft by giving punishments in terms of years, the actual gravity of a crime committed against a body of a woman will not be understood forever.

  15. மிருகஙள் உறவு முறை பார்ப்பதில்லை! பாலிய்ல் கல்வி திட்டத்தில், இது போன்ற ஆண் வக்கிரஙகளை எதிர்கொள்ளும் மனப்பயிற்சியும் அளிக்கவேண்டும்! பள்ளீ பருவத்தில் பெண்களை கிண்டல் செய்யும் திரைக்காட்சிகளை தடை செய்யவேண்டும் !

Leave a Reply to தோழர் வலிப்போக்கன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க