privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்'ஏழைப்பங்காளன்' சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை!

‘ஏழைப்பங்காளன்’ சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை!

-

செய்தி-06

 

தளி-ராமச்சந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன்

ட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் மற்றும் குவாரி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு முதலாளிதான் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் என்பது அனைத்து கட்சியினரும், ஊடகங்களும் அறிந்த ஒப்புக் கொண்டிருக்கும் செய்தி. எனினும் ஜெயலலிதாவின் அடிமையும் அதிமுகவின் கம்யூனிச பிரிவான தமிழக சிபிஐயின் தலைவருமான தா.பாண்டியனும் அவரது ஜால்ராக்களும் தளி ராமச்சந்திரனை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை.

மதுரையில் சட்ட விரோதமாகவும், அரசு நிலங்களை அபகரித்தும் கிரானைட் வெட்டிய ஊழல் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மலைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு வைரம் எனப்படும் கிரானைட் கொள்ளை தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளையோ இல்லை கிரானைட் கொள்ளையோ இரண்டிலும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரவு பெருந்தலைகளே செல்வாக்கு செலுத்துகின்றன. கிருஷ்ணகிரியில் மட்டும் இந்த பெருமையை சி.பி.ஐ கட்சி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

இம்மாவட்டத்தில் அரசு நிறுவனமான டாமினுக்கு 4 குவாரிகளும், தனியாருக்கு 119 குவாரிகளும் உள்ளன. கிரானைட் வெட்டி எடுக்கப்படும் போது ஒரு சதுரமீட்டருக்கு ரூ.2,250 ரூபாய் கட்டணமாக அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்த வகையில் இங்கு மட்டும் வருடத்திற்கு 40 கோடி ரூபாய் வருவாய் தமிழக அரசிற்கு கிடைக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அரசு விதிமுறைகளுக்கு மாறாக வெட்டி எடுப்பதும், வெட்டிய கற்களுக்கு கட்டணம் செலுத்தாமலும் ஏமாற்றி வருகின்றன. இவற்றின் மதிப்ப்பு பல பத்து கோடி ரூபாய்களாகும்.

எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், அவரது மனைவி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 11 கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கல்வெட்டி திருடிச் சென்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 27,033 கன மீட்டரும், மற்றொரு புகாரில் 39 ஆயிரம் கனமீட்டர் அளவு கொண்ட கற்கள் அனுமதியின்றி சுருட்டப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தா.பாண்டியனுக்கும், சிபிஐக்கும் மாபெரும் புரவலரான ராமச்சந்திரன் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதால் அவர்கள் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மேலும் இந்த ராமச்சந்திரன் சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி இருந்திருக்கிறார். கடைசியாக எம்எல்ஏ சீட்டு கிடைக்க வில்லை என்று தா.பா கட்சிக்கு வந்திருக்கிறார். ஒரு முறை சுயேச்சையாக போட்டியிட்டே வெற்றி பெற்றிருக்கிறார். இந்த செல்வாக்கு அவரது பணவலிமை மற்றும் தொழிலின் மூலம் பலருக்கும் எலும்புத் துண்டு போடும் தாதாவின் செல்வாக்காகும். ஊரறிந்த ரவுடிகள் தமக்கென சாதி, வட்டார செல்வாக்கை உருவாக்கி கொள்வார்களில்லையா, அது போல.

எளிமைக்கு நல்லக்கண்ணுவையும் செலவுக்கு ராமச்சந்திரனையும் வைத்தும் சி.பி.ஐ கட்சி நடத்தப்படுகிறது. கொலை வழக்கு, கிரானைட் கொள்ளை என்று கிரிமினல் ரேட் எகிறிக் கொண்டே இருந்தாலும் சி.பி.ஐ கட்சி அவரை கைவிடவில்லை. இனி இவர்களை நாம் போலிக் கம்யூனிஸ்டுகள் என்று கூட அழைப்பதற்கு பதில் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிஸ்டு என்று பேரை மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.

இதையும் படிக்கலாம்:

_____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: