privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழ் ரத்தம் - புத்தரின் எலும்பு - ராஜபக்சேவின் பக்தி!

ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி!

-

செய்தி-02

புத்தரின் எலும்பு
தில்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தரின் எலும்புகளடங்கிய பேழை – படம் நன்றி www.thehindu.com

நேபாளத்தில் இருக்கும் லும்பினியில்தான் புத்தர் பிறந்தார் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் அவர் மறைந்த கபிலவஸ்து எங்கே இருக்கிறது என்பது இன்னும் சர்ச்சையில் இருக்கிறது.

இந்திய நேபாள எல்லைக்கு அருகில் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பிப்ரவா எனும் இடத்தில் 19ஆம் நூற்றாண்டில் நடந்த தொல்லியல் ஆய்வுகளின் போது  கண்டுபிடிக்கப்பட்ட சந்தன பேழைகள் புத்தரின் மறைவு காலத்தோடு பொருந்தி வந்ததால் இவ்விடமே கபிலவஸ்து என்று பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் கூறப்பட்டது.  ஆனால் இதே காலத்தில் நேபாளத்தின் டெராய் பகுதியில் இருக்கும் திலுராகோட் எனும் இடம்தான் கபிலவஸ்து என்று வேறு ஆய்வாளர்கள் கூறினர். அதற்கு ஆதாரமாய் தொல்லியல் புதைவிடங்களும், பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களின் குறிப்புகளும் இந்த இடத்திற்கு பொருந்தி வந்ததும் கூறப்பட்டன.

இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை 1971 இல் பிப்ரவாவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் புத்தரின் எலும்புகள் அடங்கிய பேழைகள் – புனிதக் கலசங்கள் அவர் மறைந்த சரியான தேதிக் குறிப்புடன் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கண்டு பிடிப்பு குறித்த அறிக்கையை சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்திய தொல்லியல் துறை வெளியிட்டது. எனினும் நேபாளம் இதை ஏற்கவில்லை. மற்றபடி புத்தரின் எலும்பு என்பதற்கு மாதிரி டி.என்.ஏ சோதனைகளோ, வேறு எதுவும் சாத்தியமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் இலங்கை, இந்தியாவின் நிலையை ஏற்றதோடு புத்தரின் எலும்பு துண்டுகள் அடங்கிய புனிதக் கலசத்தை1978ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு வரவழைத்து சுமார் பத்து இலட்சம் சிங்கள மக்கள் தரிசிக்க வைத்திருக்கிறது. டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் புனிதக் கலசம் தற்போது மீண்டும் இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு மற்றும் ஆறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இந்த புனிதப் பேழை புத்தரின் 2,600 வருடப் பிறப்பு கொண்டாட்டத்தின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்.

கொழும்பிலிருந்து புத்தரின் புனிதக் கலசம் மன்னாருக்கு போகும் போது இந்திய அரசு உதவியுடன் புதுப்பிக்கபட இருக்கும் திருக்கேத்தீஸ்வரன் கோவில் திட்டமும் ஆரம்பிக்கபட இருக்கிறது. இதற்காக இந்திய அரசு தொல்லியல்துறை உதவிகளுடன் 13.5 கோடி ரூபாயையும் அளிக்கிறது.

இலங்கைக்கு போர் உதவிகளோடு மதப்புனித உதவிகளையும் இந்திய அரசு செவ்வனேயும், செலவழித்தும் செய்து வருகிறது. கொழும்பில் இறங்கிய புத்தரின் புனிதக் கலசத்தை அதிபர் ராஜபக்சேவே வெறுங்காலோடு பரிவாரங்களோடு தாங்கியவாறு நடந்து வந்தார். அப்போது அவர் முகத்தில்தான் என்ன ஒரு பக்தி! இந்த பக்திதானே முள்ளி வாய்க்கால் படுகொலையை செய்திருப்பதோடு கொண்டாடவும் செய்தது. புலிகளை அழித்து சிங்கள மக்களுக்கு ‘அமைதியையை’ கொண்டு வந்த அதிபர் இப்போது புத்தரின் புனிதத்தையும் கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் ஒரு படுகொலை பூமியில் புத்தரின் எலும்பு புனிதத்தை மட்டுமல்ல அமைதியையும் அளித்து விடுமா என்ன?

இதையும் படிக்கலாம்:

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: