privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!

மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!

-

செய்தி-07

மாருதி-விளம்பரம்
ஆலை திறந்த்தை அறிவிக்கும் மாருதி-சுசுகியின் விளம்பரம்

ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்களையும் நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. தொழிற்சாலையில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளது நிர்வாகம்.

மாநில அரசும் போலீஸ் படையினரையும், ரிசர்வ் போலீஸ் படையினரையும் தொழிற்சாலைக்கு அனுப்பியிருக்கிறது. குர்காவோன் நகரின் இணை காவல் துறை ஆணையர் அனில் ராவ், ‘இந்திய ரிசர்வ் போலீசின் ஒரு பேட்டாலியனும், போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்களும், போக்குவரத்து காவலர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய காவலர்கள், கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் பாதுகாப்பு என்று தொழிற்சாலையை ஒரு சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது மாருதி நிர்வாகம். எந்த கேள்வியும் கேட்காமல் போட்டதைத் தின்று விட்டு அடிமைகளாக வேலை செய்யும் கைதிகள்தான் மாருதி முதலாளிகளுக்குத் தேவை.

இன்றைய நாளிதழ்களில் ஒரு பக்கம் வண்ண விளம்பரம் கொடுத்திருக்கும் மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறது. வேலையிழந்த தொழிலாளிகள், சிறையில் வாடும் தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் துன்பத்தில் உழலும் போது கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கார் உற்பத்தி துவங்கியிருப்பது குறித்து முதலாளிகளுத்தான் எத்தனை மகிழ்ச்சி!

இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தொழிற்சாலையை தில்லியின் திகார் சிறைச்சாலைக்கு மாற்றி விடலாம்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மாருதி தொழிற்சாலையில் 2500 பணியாளர்கள் பணிபுரிந்த இடத்தில் வெறும் 300 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2200 குடும்பங்களை பட்டினி போட்டுவிட்டு “மாருதி” குடும்பம்(முதலாளிகள்)மட்டும் மீண்டுவிடுவார்களாம்,வாடிக்கையாளர்களுக்காக இரவு-பகலாக உழைக்கிறார்கலாம்?????????? எப்படி!!!!!!!!!!!

  2. //இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தொழிற்சாலையை தில்லியின் திகார் சிறைச்சாலைக்கு மாற்றி விடலாம்//

    இல்லையென்றால் மாருதி மேலாளர் அவினாஷ் தேவை போட்டுத்தள்ளியதைப் போல ஒவ்வொரு ஃபாக்டரியிலும் ரெண்டு மேலாளர்களையோ, கங்காணிகளையோ போட்டுத்தள்ளுங்கள். எல்லா ஃபாக்டரிகளையும் திகார் மாதிரி மாத்திடலாம்.

    • அதானே…கொலை செய்யப்பட்டவனை பத்தி எந்த வருத்தமும் வினவுக்கு இல்லை. இன்னும் அதை போல நிறைய்ய நடக்கனுமாம்.

  3. Ram,

    For this kind of words only, you get nicely in manesar maruthi plant. Once again if you do this same kind of activity, then your group will be totally vanished by the government. Be careful!!!

  4. you cant expect that every one will blind when you kill some people. those who loss job , they deserve it. Finally your side have the heavy loss. Advice your people not to do these kind of activity , else every one will lose their job.

  5. நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். செய்தியின் ஆரம்பமே ஸ்விஃப்ட் காருக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ஆறுமாதங்களுக்கும் மேல் காத்திருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி, (அல்லது இன்னும் தாமதமாகலாம்) என்ற ரீதியில் தான் இருந்தது. ஈவிரக்கமில்லாத முதலாளித்துவம் தான்.

  6. Vinavu,

    what about the employee who lose his life. if you wont care about that employee, then why should government should care about you. your principles wont work in india. that for sure even though you will tell that revolution will happen thousand times.

Leave a Reply to Deepa பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க