privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!

மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!

-

செய்தி-07

மாருதி-விளம்பரம்
ஆலை திறந்த்தை அறிவிக்கும் மாருதி-சுசுகியின் விளம்பரம்

ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்களையும் நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. தொழிற்சாலையில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளது நிர்வாகம்.

மாநில அரசும் போலீஸ் படையினரையும், ரிசர்வ் போலீஸ் படையினரையும் தொழிற்சாலைக்கு அனுப்பியிருக்கிறது. குர்காவோன் நகரின் இணை காவல் துறை ஆணையர் அனில் ராவ், ‘இந்திய ரிசர்வ் போலீசின் ஒரு பேட்டாலியனும், போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்களும், போக்குவரத்து காவலர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய காவலர்கள், கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் பாதுகாப்பு என்று தொழிற்சாலையை ஒரு சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது மாருதி நிர்வாகம். எந்த கேள்வியும் கேட்காமல் போட்டதைத் தின்று விட்டு அடிமைகளாக வேலை செய்யும் கைதிகள்தான் மாருதி முதலாளிகளுக்குத் தேவை.

இன்றைய நாளிதழ்களில் ஒரு பக்கம் வண்ண விளம்பரம் கொடுத்திருக்கும் மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறது. வேலையிழந்த தொழிலாளிகள், சிறையில் வாடும் தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் துன்பத்தில் உழலும் போது கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கார் உற்பத்தி துவங்கியிருப்பது குறித்து முதலாளிகளுத்தான் எத்தனை மகிழ்ச்சி!

இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தொழிற்சாலையை தில்லியின் திகார் சிறைச்சாலைக்கு மாற்றி விடலாம்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: