Saturday, March 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் - ஒரு சித்திரம்!

இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!

-

இந்தியாவின் உற்பத்தி தளங்களின் வீழ்ச்சியும், அழிவும் !!

“இந்தியாவின் உற்பத்தி துறைகள் நிரந்தரப் பணியை துறந்துவிட்டு, தினக்கூலிகளை, தற்காலிக பணியாளர்களை வைத்து லாபம் ஈட்டுகிறது.  இது தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுடன், தொழில்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய மானேசர் வன்முறை, நிலைமை மோசமாகி வருவதற்கான அறிகுறியாகும்.”

மனேசர் மாருதி தொழிலாளி – முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர்களை விட ஊதியம் குறைந்த – சட்டப் பாதுகாப்பற்ற தற்காலிக – ஒப்பந்த தொழிலாளர்களையே பணியில் அமர்த்துகின்றனர் படம் நன்றி – http://www.thehindu.com/

வ்வொரு காலையும் இந்தியாவின் 50 மில்லியன் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் சங்கு அலறலில் பணியிடத்திற்கு சென்று, அங்கு அவர்களது  ஒரே மாதிரி பணியை பிசகில்லாமல் செய்துவிட்டு, பின் அதே சங்கின் அலறல் சத்தம் கேட்டவுடன் அன்றைய ஷிப்ட் பணியை முடித்துவிட்டு,  அடுத்த ஷிப்ட் பணி துவங்க பார்க்கின்றனர்.

இந்தியாவின் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மொத்தத்தில் 11 சதமானமே என்றாலும், அவர்களும், இந்த துறையும்தான் இந்தியாவின் பொருளாதார பெருக்கத்திற்கு அடித்தளமாக உள்ளனர்.

சமீபத்தில் மாருதி சுசுகியின் மானேசர் தொழிற்பிரிவில் தொழிலாளர்கள், நிர்வாகத்தினரிடையே நடந்த மோதலில் ஒரு மூத்த பொது மேலாளா் கொல்லப்பட்டு,பலர் காயமடைந்த வன்முறை சம்பவம், கடந்த கால தொழிற்சங்க மூர்க்கத்தனத்தை நினைவூட்டுவதாக உள்ளது என பத்திரிகைகள் எழுதுகின்றன.  ஆனால் தொழில்துறை வேலைநிறுத்தம், மற்றும் மனித வேலை நேர இழப்பு என்பது வரலாற்று ரீதியாக பார்க்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 1973-74-ல் அவசர கால பிரகடனத்திற்கு முந்தைய காலத்தில் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது.  ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன என வி.வி.கிரி தேசிய தொழில் மையம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலைக்கு எதை காரணம் காட்டுவது?  இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் ஒரு அதீத பாதுகாப்புள்ள தொழிற்கூடம்தானா?

புள்ளி விபரங்கள் வேறுமாதிரி சொல்கிறது.  இன்று தொழிலாளர்கள், நிஜ ஊதியம் என்ற அளவில் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும், மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர், வேலை பாதுகாப்பில்லை.  இருப்பினும் அவர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

20 ஆண்டுகள் பரிதாபாத்தில் கருவி (உதிரிபாகம்) உற்பத்தித் தொழிலில் இருந்த திரு பூபன் சிங் கூறுகிறார்- தொழிற்கூடங்கள் தற்போது வேலை பார்ப்பவர்கள், வேலை பார்ப்பவர்களை மேற்பார்வையிடுபவர்கள் என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது என்றார். இயற்கையாகவே தொழிலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்குமிடையே ஒரு பகையுணர்வு இருந்தே வருகிறது.  அவரது காலத்தில் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் இணைந்து இந்த இடைவெளியை இணைத்து வந்தனர்.  தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் முன் வைத்ததுடன் பணியிடத்திலும் ஒழுக்கத்தை முறைப்படுத்தினர்.

1970களின் வேலை நிறுத்தங்களை தொடர்ந்து திரு சி.பி.சந்திரசேகர் என்ற பொருளாதார நிபுணரால் தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையில், 1981-82லிருந்து 1994-95 வரையிலான 15 ஆண்டுகளில், பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் கொடுக்கப்பட்ட ஊதியஉயர்வு 40 சதமானமாக இருந்தது.  அதைத் தொடர்ந்த 15 ஆண்டுகளில் 15 சதம் குறைந்துவிட்டது என்கிறார்.

குறைந்து வரும் ஊதியங்கள்

தொழிற்சாலைகளில் வருவாய் நிகர மதிப்பிற்கு இணையான ஊதிய விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதத்திலிருந்து 11.6 ஆக குறைந்துள்ளது.  அதே நேரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளிகளின் லாபம் 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயா்ந்துள்ளதிலிருந்து, ஒன்று தெளிவாகிறது.  தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கூடிய அந்த விகிதத்தில்- முதலாளிகளின் லாபம் உயர்ந்த அந்த விகிதத்தில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் உயர வில்லை என்பதே. தற்காலிக பணியாளர்கள் பெருகிவருவது, மருத்துவ பலன்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இல்லாதது, இன்றைய நிலையை தெளிவாக்குகிறது.

19 வயது தற்காலிக பணியாளர் பாபு கூறினார். “தற்காலிக பணியாளர்களிடையே பல்வேறு வகை உள்ளது”  நிர்வாகத்தால் நியமனம் செய்யப்படும் தற்காலிக பணியளர்கள், தற்காலிக பணியாளர்கள் வருகைப் பட்டியலில் காட்டப்படும் தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் ஊதிய பட்டியலில் ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த காரர்கள் வருகைப்பட்டியலில் உள்ளவர்கள், ஆனால் ஊதிய பட்டியலில் வராதவர்கள் என பல்வேறு வகைகள் உள்ளது என்று கூறுகிறார்.

பாபு குட்டையாகவும், மெலிந்தும் ஐ ஐ டி படிக்க துடிக்கும் மாணவர் போல் அவ்வப்போது சீப்பினால் தலையை சீவி விட்டுக் கொள்வார்.  தேசிய பகுதி கணிப்பின் பிரகாரம் 2000-ல் இத்தகைய தொழிலாளர்கள் அமைப்பு சார் தொழிற்சாலையிலும், உற்பத்தி துறையிலும், கட்டுமான தொழிலிலும் பணிபுரிந்த தொழிலாளர்கள் 38 சதமானமாக இருந்தது, 2010-ல் அவர்களின் விகிதாச்சாரம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தற்போதைய வீழ்ந்து வரும் சூழலில், உற்பத்தி தொழிலில் மட்டும் 5 மில்லியன் தற்காலிக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்த தலைசுற்றுகிற சிப்ட் முறையால், ஒரு நிலையான தொழிற்சங்க நடவடிக்கை சாத்தியமற்றதாகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஊசி முதல், மாத்திரை வரை செய்யும் ஒரு மருந்து உற்பத்தி கம்பெனியில்தான் பாபு தனது முதல் வேலையை துவக்கினார். அவருக்கு அப்போது வயது 16 என்பதால், அந்த நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தது.  ஆனால் ஒப்பந்தகாரர், அவரை ஓராண்டிற்கு வருகைப்பதிவில் இல்லாத பட்டியலில் வைத்து, குறைந்த பட்ச ஊதியத்திற்கு குறைவாக மாதம்  ரூ 2400க்கு வேலை கொடுத்து, தூய்மையாக்கப்பட்ட பாட்டில்களை மெஷினில் ஏற்றி, இறக்கும் பணியை 8 மணி நேரம் பார்க்க வைத்துள்ளார்.

அதன்பின் 300 நிரந்தரத் தொழிலாளர்களையும், 1200 தற்காலிக பணியாளர்களையும் பணிக்கமர்த்தியுள்ள ஒரு எலக்டிரிக்கல் கம்பெனியில் வருகைப்பதிவில் உள்ள தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். அவர் அங்கே ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரு மெஷினில் உள்ள திருகியை இறக்கிக்கொண்டு எட்டு மணி நேரம் வேலை பார்த்து மாதம் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 4847 பெற்றார். இத்தகைய ஒப்பந்த தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும். நிரந்தர தொழிலாளி மட்டுமே உட்கார முடியும்? என்கிறார் அவர்.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சங்கம் இருக்கிறது.  ஆனால் அவர்கள் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராட மாட்டார்கள்.  “நாங்கள் ஏதாவது ஒரு சிறு நாற்காலியில் உட்கார்ந்தால், இந்த நிரந்தர தொழிலாளர்கள் எங்களை எழுப்பி விட்டு விடுவார்கள்” என்கிறார் பாபு.  இத்தகைய சூழலில் கழிப்பிடம் செல்வது போல் சென்று தனது கால்களுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வதும், மேற்பார்வையாளர் கண்டுகொள்ளாத வரையில்தான். பின்னர் அந்த பணியையும் விட்டுவிட்டு பூமா போன்ற  பல்வேறு நிறுவன பெயர்களில் காலணிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை தேடிக்கொண்டார்.

அந்த கம்பெனிக்கு அவர் ஒரு “கம்பெனி தற்காலிக ஊழியராக” எடுத்துக் கொள்ளப்பட்டார்.  ஆனால் அந்த கம்பெனியோ அதனது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்து வந்தது.  எங்களது நிலுவை ஊதியத்தை கொடுங்கள், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்றோம்.  ஆனால் அந்த கம்பெனியிடமோ எங்களது ஊதியத்தை தீா்வுசெய்ய பணமில்லை என்கிறது. சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊதியத்திற்காக போராடுகிறார்கள்.  ஒப்பந்த தொழிலாளர்களோ ஊதியம் பெறாமலேயே அதற்காக போராட வருகிறோம் என்கிறார்கள்.

ஊதியம் பெறாத தொழிலாளர்கள்

மக்களவை சமர்ப்பித்த புள்ளி விபரப்படியே “இந்தியா இங்க்” என்ற நிறுவனம் 2011-12-ல் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையோ ரூ 711 கோடி.  இதில் சம்பளப்பட்டியலில் வராதவர்கள் ஊதியமோ, தொழில் நீதிமன்றங்களின் தாவாவுக்காக செல்லாத பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள தொகையோ சேராது.  அவர்கள் எப்போதுமே தொழில் நீதிமன்றங்களை அணுகியதில்லை. ஏனென்றால் அங்கு நியாயம் கிடைக்காது என்பதால்.  பூபன்சிங் என்ற ஓய்வுபெற்ற கருவிகளை செய்பவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை பெறுவதற்காக 1997 லிருந்து போராடி வருகிறார்.  கடந்த ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் 13,527 அது தற்போது 13,642ஆக இந்த ஆண்டு உயர்ந்துவிட்டது.

இந்த நீதிமன்ற தலையீடோ, சங்கங்களோ இல்லாமல் பாபு போன்ற தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப, ஒரு புதுவகை சீர்குலைவு வழியில் நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாலை, தீயிலிருந்து பாதுகாப்பு குறித்த ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு வர அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டனர்.  கடந்த 2009 மே மாதம் லகனியில் 10 தொழிலாளர்கள் தீ விபத்தில் மாண்டனர். பலர் தீக்காயமுற்றனர். “எப்போதெல்லாம் ஆலையின் சங்கு ஒலிக்கப்படுகிறதோ, அப்போது உடன் அனைவரும் திறந்த வெளிக்கு வந்து விட வேண்டும்” என்று மேலாளர் சொன்னார்.  தொழிலாளர்கள் தங்களது தலைகளை அசைத்து, சம்மதத்தை தெரிவித்தனர்.

மறுநாள் காலை 10 மணிக்கு ஆலையின் சங்கு ஒலித்தது, அனைத்து தொழிலாளர்களும் சொன்னது போல் ஆலையின் திறந்த வெளிக்கு வந்து திரணடனர்.  ஆனால் அங்கு எந்தவித தீ விபத்து ஏதும் நடைபெறவில்லை.  மேற்பார்வையாளர் விரைந்து திறந்த வெளிக்கு வந்தார். அங்கு அனைத்து தொழிலாளர்களும் “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிட்டனர்.

இது பல மாதங்களாக தொடர்ந்தது.  “யாராவது ஒருவர் அந்த ஆலையின் சங்கை ஒலிக்கச் செய்வோம், எல்லோரும் திறந்த வெளிக்கு ஓடி வந்து விடுவோம்”, பாபு சொன்னார். நிர்வாகத்தினர் வெளியே வந்து எங்களை பார்க்கும் போது, “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிடுவோம். அந்த மேற்பார்வையாளரும் ஒன்றும் சொல்லமாட்டார்.  ஏனெனில் அவருக்கே நான்கு மாத ஊதியம் நிலுவையாக உள்ளது. மேலும் தொழிலாளர்கள் உதிரிபாகங்களை இணைக்கும் பிரிவில் பணியை மெதுவாக செய்யத் தொடங்கி, முற்றாக நிறுத்திவிட்டனர்.  அதன் பின்னரே அவர்களது ஊதியத்தின் ஒரு பகுதி மட்டுமாவது, அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பாபு போன்ற தொழிலாளர்களுக்கு இன்னும் நிர்வாகம் கொடுக்க வேண்டியது நிறையவே உள்ளது.

லக்னியில் நடந்த இந்த நிகழ்வுகள் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வல்ல. மஸ்தூர் சமாச்சார் போன்ற பிரசுரங்கள், தொழிலாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக, சிறந்த பணி நிலையை பெற தலைமையில்லா பல போராட்டங்களை நடத்தியுள்ளதை பட்டியலிட்டுள்ளது.  இத்தகைய போராட்டங்களை கலைத்திட முடியாது, ஏனென்றால், இவைகள் அனைத்தும் “தொழிற்தாவா”, “அமைதியின்மை”, “வேலைநிறுத்தம்”, “கதவடைப்பு” போன்ற எந்த வகையிலும் சேராதது.  மாருதி நிறுவனம் போல சில நேரங்களில், இத்தகைய போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதோ, வழிகாட்டுவதோ அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால், அங்கெல்லாம் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களின் கட்டுப்பாட்டிலில்லை.  காரணம், அங்கு தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.  திரு ராம்குமார், ஐசிஐசிஐ வங்கி குழுமத்தில் ஒரு இயக்குனர்.  அவரது நண்பர்தான் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் நடந்த வன்முறையில் இறந்து போன திரு அவானிஷ் தேவ்.  மானேசரில் நடந்தது ஒரு கொலை, இது ஒரு குற்றம் என்கிறார் திரு ராம்குமார்.  எந்தவித சமத்துவமின்மையும் ஒருவரை கொல்வதற்கு உரிமம் கொடுத்ததாக கொள்ள முடியாது என்கிறார் அவர்.

“இதுவரை நிர்வாகமும், தொழிற்சங்கமும் இணைந்து இருந்து வந்த இந்த தொழிற்சாலை என்ற பெரியவீட்டில் ஒரு சாரளம் உடைந்து விட்டது.  மேலும் பல கற்கள் வந்து உள்ளே விழுவதற்கு முன்பு இந்த உடைந்த சாளரம் உடன் செப்பனிடப்பட வேண்டும்” என்கிறார் தனியாக கூறும் போது.

“தொழிலதிபர்கள் தொழிற்சாலையை நடத்த தங்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரமுடியாது.  அது தங்களது தொழிலாளர்களது உரிமைமற்றும் நலத்தினை குறைத்திட முயலுமானால், அதை ஏற்க முடியாது”  என்கிறார் திரு ராம்குமார்.

ஆனால் அதே நேரத்தில், தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தினர் மீது கொண்டுள்ள சந்தேகத்தை விலக்கிக்கொண்டு, ஒரு பன்முறையற்ற தொழிற்கூடத்திற்கு உறுதி அளிக்கும் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

அத்தகைய ஒரு திட்டம் நிரந்தர தொழிலாளர்களும், தற்காலிக தொழிலாளர்களுக்கு மிடையேயான ஊதிய வேறுபாடுகள் களைவதற்கும், மற்றொருபுறம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையேயான வேறுபாடுகளை களையும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

கடந்த ஆண்டு மாருதியில் நடந்த தொடர் வேலை நிறுத்தங்களை ஒட்டி மானேசர் தொழிற் கூடத்தில் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது போராட்டங்களை முன்நடத்த வந்த தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளி, வருங்கால திட்டம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை போல செய்தியை, அந்த பகுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.  கனவானே இன்றைய நிலைமை ஒன்றும் புரியவில்லை அல்லவா.  கடந்த சில மாதங்களாகவே, தொழிலாளர்களில் சிலர் மற்ற தொழிலாளர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்து வந்தனர். அத்தகையோரை பணி நீக்கம் செய்ததன் மூலம் நிர்வாகம், ஒரு மதிப்பிடமுடியாத கருவியை தூக்கியெறிந்துவிட்டது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

_________________________________________________________
நன்றி- தி இந்து – திரு அமன்சேத்தி
தமிழில் –சித்ரகுப்தன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

  1. உலகத்தை இருள் சூழ்ந்து வருகிறது. 2012ன் உச்சத்தில் human consciousness இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அடர்த்தியாகும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது. சோலார் சிஸ்டமிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மனிதமனங்கள் கொத்துக்கொத்தாய் திரிந்து போகும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க இயலாது.

  2. கம்பெனி வேலை என்பதே பெண்களுக்கு நரக வாழ்க்கை!

    உள்ளாடைகள் தயாரிக்கும் ஜப்பான் நாட்டு கம்பெனி ‘இன்டிமேட்’ , சென்னை -கூடுவாஞ்சேரியில் உள்ளது. இதில், வேலைக்கு சேருவதற்கு படிப்பு, வயது தகுதி மட்டும் போதாது. தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த குறைபாடும் இருக்கக்கூடாது. சர்டிபிகேட்டை சரிபார்க்கும் முன், பெண்களின், கண், கை, கால்கள் இயக்கத்தை, பயிற்சிகள் மூலம் சோதிப்பார்கள். அதில் தேர்ந்தால்தான் வேலை. குறிப்பாக, கைகள் இரண்டையும் இரு நிமிடங்கள் மூடிவிட்டு திறந்தால் உள்ளங்கையில் வியர்வை இருக்கக்கூடாது. புறங்கை நடுங்க க்கூடாது. இதில் பல பெண்கள் வேலைக்கு தகுதியற்றவராகி, அழுது திரும்புவதுண்டு.

    அடுத்தக்கட்டம், பார்வைச் சோதனை, சுறுசுறுப்பு சோதனை. தாண்டி, உள்ளே சென்றால், பேப்பரைக் கொடுப்பார்கள் அதைக் கிழியாமல் தைக்க வேண்டும். பேப்பர் கிழிந்தால் வேலை கனவும் கிழிந்துவிடும். முதலில், டிரெயினிங் செக் ஷன் சென்றதும், கம்பெனியின் விதிமுறைகளைச் சொல்லுவார்கள்.. 45 நாட்கள் டிரெயினிங் என்று இருக்கும். ஆனால்,அதை இரண்டு, மூன்று நாட்களில் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால், ”தண்டச்சோறு” என்று திட்டுவார்கள். திட்டை வாங்கமுடியாமல், சில பெண்கள் நின்றுவிடுவார்கள். சிலர், அவசர கதியில் கற்க, விரல்கள் தைத்து ரணமாகும்.

    இப்படியாக, உள்ளே, புரடக் ஷன் செக் ஷனுக்கு சென்றால்,அச்சூழ்நிலைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். 8 மணிநேரம் பிளாஸ்டிக் ஸ்டூலுல உட்கார்ந்து நிமிராம வேலைபார்ப்பது கொடுமை. புரடக் ஷன் மேலய நம் கவனம் இருக்க வேண்டும் இல்லயினா, பலபேர் முன்னிலையில திட்டுவார்கள். ஒரு வரிசைக்கு 20 பேர் வீதம் இரண்டு வரிசைக்கு 5 நிரந்தர சுப்ரவைசர்கள். மெட்டிரியல்கள் வேண்டும் என்றால் கையை மட்டும் தான் உயர்த்தவேண்டும். பல வண்ண அட்டைகள் சங்கேத மொழியில் தூக்கி பிடிக்க வேண்டும். (ஊசி உடைவது, நூல் தேவைப்படுவது, சந்தேகம் கேட்பது) வாய் பேசக்கூடாது.அது, கன்வேயரில் அடுத்த நொடி வந்துவிடும். பாத்ரூம் வந்தவுடன் போகமுடியாது. 40 பேருக்கு ஒரு டோக்கன்தான். டோக்கன் வந்தால்தான், செல்லவேண்டும். அந்த சமயத்தில் தீட்டு வந்துவிட்டால் ரொம்ப மோசமாகிவிடும். ஒரு நாப்கின் மட்டும் தருவார்கள். பாத்ரூமுக்கு அடிக்கடிச் செல்லக் கூடாது.அதை ஒருவர் கண்காணிப்பார்.

    உணவு இடைவேளை 30 நிமிடங்கள். இதில் வரிசையில் சென்று, உணவினைப் பெறுவதற்கு 15 நிமிடம் சென்றுவிடும். அவசர கதியில சாப்பிடனும். புரடக் ஷன் குறைந்தப் பெண்கள் சாப்பிடக்கூட வரமாட்டர்கள். வேலைகளை முடித்தும் வந்துவிடமுடியாது. எட்டு மணிநேரம் ஒரு நொடிக்கூட சேதாரம் இல்லாம வேலையை வாங்கிவிட்டு, வெளியில் அனுப்பும்போது செக்கிங் நடக்கும். மேலிருந்து கீழ்வரை சோதனை. உடம்பே கூசும். பிறகு,வண்டியில் உட்கார்ந்தவுடன் தூக்கம். பக்கதில் இருக்கும் தோழியின் மடியே சொர்க்கமாகிவிடும். 2 மணி நேர பயணத்திற்குப் பிறகு வீடு வரும். நள்ளிரவு 12 மணி என்பதால், வீட்டிலிருப்பவர்கள் மெயின் ரோடுவரை வந்து நமக்கு காத்துக் கொண்டுஇருப்பார்கள். இப்படி, வேலைப் பார்த்தால் மாதம் ரூ 4000 சம்பளம்.

    உள்ளாடை மினுக்க கொட்டும் உழைப்பு, எங்களின் உடம்பையே கந்தலாக்கிவிடும்.

  3. இந்திய தொழிற்சாலைகள், தொழிலாளர்களின் நிலையை விளக்கும் அருமையான கட்டுரை. மொழிபெயர்த்த சித்திரகுப்தனுக்கு நன்றி.

  4. லட்சுமி அவர்க​ளைப் ​போல ஒவ்​வொரு ​தொழிலாளியும் தங்கள் அனுபவங்க​ளை பதிவு ​செய்ய ​வேண்டிய நல்ல இடம் இது. பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்க ​வேண்டும். இது தான் நம் சமூகத்​தை புரிந்து ​கொள்ளவும் உணர்வு ​பெறவும் எழுச்சி ​பெறவுமான மார்க்சிய வழிமு​றையாக இருக்க முடியும்

    • “லட்சுமி அவர்க​ளைப் ​போல ஒவ்​வொரு ​தொழிலாளியும் தங்கள் அனுபவங்க​ளை பதிவு ​செய்ய ​வேண்டிய நல்ல இடம் இது. பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்க ​வேண்டும். இது தான் நம் சமூகத்​தை புரிந்து ​கொள்ளவும் உணர்வு ​பெறவும் எழுச்சி ​பெறவுமான மார்க்சிய வழிமு​றையாக இருக்க முடியும்”

      கண்டிப்பாக. நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். அதை விடுத்து ஒருவரை ஒருவர் தாக்குவது போல் பின்னூட்டங்களால் பயன் ஏதுமில்லை

  5. “Modern Times” என்ற சார்லி சாப்ளின் படம் 1936 ல் வெளிவந்தது. அதில் தொழிலாளியின் அவஸ்தைகளை அழகாக படம் பிடித்து வாழ்ந்தும் காட்டியிருப்பார்.காலையில் தொழில்கூடத்தின் சங்கு ஊதியவுடன் செம்மெறி ஆட்டுக்கூட்டதை காட்டுவார்கள் அப்புறம் மனிதர்களை காட்டுவார்கள். காலைல இருந்து மாலை வரை நட்டுகளை tight பண்ற வேலைய மட்டுமே ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்து கொண்டிருப்பார். கால்களின் ஓய்விற்காக பாத்ரூம் சென்று சிகரட்டை குடித்துகொண்டிருப்பார் ஆனால் அங்கேயும் காமெராவை வைத்து தனது ரூமில் இருந்து கொண்டு வாட்ச்பண்ணிகொண்டிருக்கும் அதிகாரி அவரை மீண்டும் பணிக்கு செல்ல கட்டளை இடுவார். இத்தனை வருடம் ஆகியும் அதே நிலைமையில் நம் மக்கள் இருப்பது வருத்தமாக உள்ளது. இதை தொழிலாளியின் தொடர் தோல்வி என்பதா இல்லை முதலாளி வர்கத்தின் தொடர் வெற்றி என்பதா?.சாகோதரி லக்ஷிமியின் கதை பெரும் சோக கதைதான். இதே போன்று எத்தனை எத்தனை சகோதர சகோதிரிகள் உள்ளார்களோ தெரியவில்லை….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க