Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

-

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.

பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.

இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.

மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.

இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.

இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.

”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”

“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.

”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”

இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.

”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.

1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.

அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.

இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.

ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.

படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

ண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்இந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.

ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.

”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.

அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.

நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?

வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.

இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?

”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?

இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.

அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.

து ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.  ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!

து ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.

துதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.

அப்படியா

அப்படி ஓர் இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல

பாசாங்கு செய்கிறார்கள்

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படியொரு ரகசிய உலகம்

இருக்கிறது என்பதை.

சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்

குப்பை கூளத்திலும்தான் – அங்கே

சிலர் வாழ்கிறார்கள் என்பதை

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

-என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.

அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.

வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. இது 1999 நிலைமை. இப்ப அமெரிக்கா திருந்தி இருக்கும் இல்லையா? இன்றைக்கு என்ன நிலைன்னு பார்த்து வினவு வினவுமா?

    • we don’t need general statements .when vinavu is bringing any specific problems.try to answer that.
      don’t try to hide in the phrases like “everyone commits mistake” or “there are no such things as good or bad”

      • it is obvious that people are exploiting labor here by promising them something and delivering them something else and such a thing is happening in a developed western country which is supposed to be having decent labour laws and minimum wages and civil rights for workers.

        Now why are you talking about right wing here? what is right wing?

        it is the religious right wing or the social right wing or the economic right wing?

        why are you calling it murder or mistake?

        so whose fault is it? It is a specific problem with respect to the USA,then why are you trivializing it by saying right wing/murder/mistake?

        are u saying a left wing government is not capable of enslaving its workers in collectivized industries like in the soviet union?

        • just read the sentence carefully
          that was an answer to the manithan’s argument its only 1999s situation

          “murder”-many of them thinking that murder is killing a person with a gun or sword but what about getting patents(TRIPS agreement) keeping the price of a cancer medicine in the order of 1500 dollars ,who are responsible for suicides (i call the suicides as murders of monsento but some are calling it as mistakes)

          right wing -on a simple definition peoples who are supporting state(even their mistakes )

      • what is the outcome of any issues in vinavu? you just write…you don’t take any action….you are saying problems…but, what is the solution…tell us…we will follow….

          • that is what i am asking…you simply make road roko, aarpaattam and write articles about various issues…but, all the issues still goes on…no change…then, why do we need another party for doing what other parties are doing?

            • மற்ற கட்சிகளுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம், எங்கள் கொள்கை என்ன, சமூக மாற்றத்திற்கு நாங்கள் என்ன நடைமுறையினைக் கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் நீங்கள் நேரில் தொடர்பு கொள்ளும் போது விரிவாக அறியலாம். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றிருந்தால் நீங்கள் எங்களோடு கருத்து வேறுபாடு வைத்திருப்பதாக பொருள். அது குறித்து பேசுவதற்கும் நீங்கள் நேரில் வரலாம். காத்திருக்கிறோம். நன்றி

  2. மதம், இனம், மொழி, நாடு போன்ற எந்த வேறுபாடு இருந்தாலும் இந்த முதலாளித்துவம் மட்டும் ஒரே மாதிரி இருக்கிறது….

    இந்தியா அமெரிக்காபோல் வல்லரசு ஆகிறது என்பது உண்மைதான் naan ஒரு companyல் வேலை செய்தேன்.
    அதில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கும் தடை, company பற்றி வெளியே சொல்ல தடை மீறினால் Warning Letter கொடுத்துடுவேனு மிரட்டுவாங்க. வாடா, போடானு திட்டுவாங்க, கெட்டவார்த்தையில் திட்டுவாங்க, Personal mobileயை வாங்கி செக் பண்ணுவாங்க, etc……

    இதெல்லாம் ஏதேஒரு மூலையில் நடக்கவில்லை ஒரு பிரபலமான அரசு சார்ந்த தனியார் நிறுவனதில்….

    We dont know about ‘What is fundamental right’….

    I think our Indian constitution is ”Only Written” constitution….

    • அய்யா உங்க பேச்சு எப்படி இருக்கறது தெரியமா ப்ரெட் இல்லை என்றால் கேக் சாப்பிட சொல்லுவது போல் உள்ளது.நல்ல மனநிலை.

    • ஹா ஹா ஹா இது சினிமாயில்லை…..

      உங்களுக்கு முதலாளித்துவத்தின் கொடுரம் தெரியவில்லைனு நினைக்கிren.
      அதை அனுபவிப்பவருக்குதான் தெரியும். Union is Strength னு பள்ளில் பாடம் நடத்தி, நிறைய கதை சொன்னாங்க அதை வாழ்க்கையில் கடைபிடிக்க நினைச்சா, ஒழித்துக்கட்ட எவ்வளவு குruக்குவழி இருக்கோ அத்தனையும் முயற்சிசெய்வாங்க……

      • அரசு சார்ந்தன்னு சொல்றீங்க. அப்புறம் முதளிதுவத்தின் கொடுமையினும் சொல்றீங்க.

        பொதுவா எந்த ஒரு துறையிலும் மக்கள் விரும்பிய் செல்லும் கம்பனிகள் உண்டு வேண்ட வெறுப்பாக செல்லும் கம்பனிகளும் உண்டு

        எனக்கு தெரியும் அப்படி ராஜினாமா செய்ய முடியாது என்று.

        குறைந்தது கம்பன்யை பற்றியான உண்மையை வெளியே உள்ளவர்களிடம் எடுத்து சொல்லலாம், ப்ளாக் பதிவு போடலாம் புனை பெயரில்,

        அனுபவம் பெற்று கொண்டு வேறு நிறுவனத்தில் சேரலாம், இவளவவது செய்யலாம் சினத்தை தனித்து கொள்ள.

  3. The rising population is the main reason for migrating to USA…the asians are slaves in USA no doubt…
    The Americans are enjoying life, they are paying dollars per hour by extracting from Indians…they are having a child in a family…they give more independnce to their children and they can live as they want…weeknds enjoyments in swiming pool/Casino etc..
    In India also you can find child labour in many states, especially In Sivaksi Fire works, Andhra Quarry, Gujart ( Surat ) weaving work etc….their parents receives lumpsum ampunt and sells these children to various states…many children are deprived of their basic right of education…
    By bringing such articlcles Vinavu is tring to open the eyes of Children/ Elders who are very innocent and being pushed into various types of jobs…
    The Population control will solve the problem of migrating to other places, especially to USA…NGOs and Governemen must
    come forward to educate our people..

  4. ..தமிழன் கேரளா,கர்நாடக ,மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் தாக்கப்படுகிறான் . நித்தியானந்த பிடதி ஆசிரமம் கன்னட வெறியர்களால் தாக்கப்படுகிறது. [ நித்யாவின் நடத்தையை கண்டித்தால் அது வேறு] ஆனால் தமிழன் எல்லா இனத்தவரையும் தான்கிக்கொல்கிறான் .தமிழக தலைமைச்சயலகத்தில் தெலுங்கில் பேசினால் காரியம் நிறைவேறும் [ தினமணி செய்தி ] கன்னடம் கஸ்துரி ,தெலுகு தேட்டா தமிழ் அத்வானம் தமிழர்கள் போற்றி புகழும் மகா பெரியவாள் தமிழ் நீச்ச பாசை என்றாராம் .தமிழ் இனம் கொல்லப்பட்டால் அது இயற்க்கை என்றார் பதவி இழந்த முதல்வர் . மம்தா ,மன்மோகன் தங்கள் இனத்தை விட்டுக்கொடுத்தது இல்லை புதிய சேனாதிபதி சீக்கியர் .ஆனால் நம் சிதம்பரமோ தமிழ் இனத்தை காப்பாற்ற எடுத்த முயற்சி என்ன ?? தமிழருக்கு அவர் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவர் ப்ரனாபால் வெறுக்கப்படுகிறார் . என்று தணியும் தமிழன் தாகம் ??

  5. அமெரிக்க மட்டும் சொல்லுகின்றிர் சீனாவில் அடிமை தனம் இல்லை என்று சொல்ல முடியுமா?

  6. மெக்சிகோ மக்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அதே மெக்சிகோ மக்களை விசா இல்லாமல் அனுமத்தித்து வெள்ளை அமெரிக்கன் வீட்டு கூலித்தொழிலாளியாக வைத்திருக்கும் அமெரிக்க நரி வல்லாதிக்கத்தை உலகமே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது..

  7. ரத்தம் உரிஞ்சும் கம்மூனிசக் கொசுக்கடியில் வாழ முடியாமல் கூபாவிலிருந்தும், சீனாவிலிருந்தும், வட கொரியா, வெனிசூலாவிலிருந்தும், வெளியேறி நாயைப் போல் தின்று பன்றியைப் போல் வாழத் தயாராக பல லட்சம் மக்கள் இருக்கிறார்களே! அவர்களைப் பற்றி தங்கள் மேலான கருத்து என்ன என்பதைப் பதிவு செய்யவும்.

  8. // வால்மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடிக்கும் சீமைப் பன்றிகள் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.//

    வால்மார்ட் சட்டை- அமெரிக்க ஏழை எளிய கீழ்தட்டு மக்களின் உடை
    மெக்டெனல்ட், கென்டகி சிக்கன்- லாரி ஓட்டுனர்கள், வீடு இல்லாமல் தெருக்கள் மற்றும் டிரக்குகளில் வசிப்பவர்களின் உணவு

    இந்த சீமைப்பன்றிகள்தான் அமெரிக்காவில் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளவும்….

  9. இதற்கு முன்னர் நீங்களே சீனாவைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளீர்… ஒரு முசுலீமுக்கு அல்லா எப்படியோ, அப்படி மாவோ உங்களுக்கு… அவர் நீண்ட பயணம் சென்று செஞ்சேனை கட்டி கலாச்சாரபுரட்சி நடத்தி.. கடைசியில் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று முடிந்ததைத்தான் உங்கள் முந்தய சீனக் கட்டுரை காட்டுகிறது.. தற்போது அமெரிக்க ஸ்வெட் ஷாப்பற்றி ஒரு கட்டுரை.. பின்னர் யார் தலைமையில் ஒரு நாட்டை நடத்துவது.. உமது தலைமையிலா.. அதுதான் மாவோவை பார்த்தாயிற்றே… அதற்கு அமெரிக்கா எத்தனோ மேல் என்றல்லாவா ஒரு புத்தி ஸ்வாதீனம் உள்ளவன் எண்ணுவான்.. அனாவசியமாக கோப வார்த்தைகள் பிரயோக்கியாமல் காய்தல் உவத்தல் அன்றி பேசும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க