privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

-

வல்லரசு முகத்தில் வழியும் மலம்கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம். இது பற்றி, அத்தி பூத்தாற் போலத் தினப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் எளிதில் கடந்து சென்று விடுகிறோம்.

உண்மை அத்தனை எளிதில் கடக்கக் கூடியதாய் இல்லை. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 40 வயதான வெள்ளையன். கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை இவரது வீட்டுக்கு வந்த கல்குவாரி முதலாளி துரையின் அடியாட்கள் இவரைச் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கல்குவாரியில் சம்மட்டி ஒன்றைத் திருடிவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தன்னுடன் வேலை செய்யும் வீரப்பன் என்பவரது சம்மட்டியை  இவர் 300 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்ததுதான் இவர் மீது சந்தேகப்படக் காரணம். இந்தச் சந்தேகத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாகத் தண்டனைதான்.

முதலாளி துரையிடம், தான் திருடவில்லை  என்று வெள்ளையன் மன்றாடியுள்ளார்; ஒரு கட்டத்தில் சம்மட்டிக்கான தொகையை வேலை பார்த்துக் கழித்துக் கொள்வதாகச் சொல்லி, தன்னை விட்டுவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.  எதையும் பொருட்படுத்தாத கல்குவாரி முதலாளி, உன்ன மாதிரி ஆட்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் பார்க்கிற மத்தவனுக்கும் புத்தி வரும் என்று சொல்லி, அங்கேயே ஒரு சட்டியைக் கொண்டுவரச் செய்து, மறைவாகச் சென்று தானே அதில் மலம் கழித்து, அதனைக் கொண்டு வந்து வெள்ளையனின் வாயில் திணித்துள்ளான்.

பிற கல்குவாரி தொழிலாளர்கள் மற்றும் வெள்ளையனின் மனைவி முன்னிலையில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. பிறகு வெள்ளையனைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  அடி தாங்காமல் மயங்கிச்  சரிந்தவரை  அடைத்து வைத்துக் கொண்டனர். இக்கொடுமைகளை  பார்த்தேயாக வேண்டும் என்று இவரது மனைவியை அடித்து உதைத்து நிர்பந்தித்துள்ளனர். இவையனைத்தையும் செல்பேசியில் படம்பிடித்தும் வைத்துள்ளான் முதலாளி துரை.  வெள்ளையனுடைய மற்றும் அவரது மாமனார் வீடுகளிலுள்ள பொருட்களைக்  கைப்பற்றிக் கொண்டு வீடுகளையும் பூட்டி வைத்துள்ளனர். வெள்ளையனின் 9 வயது மகளுக்கு இச்சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தாலே பேச்சுக் குழறுகிறது.

ஒரு சம்மட்டிக்காகவா இத்தனை வக்கிரமும், கொடூரமும் நிறைந்த வன்கொடுமை? சந்தேகத்தின் பேரிலேயே மொத்த வாழ்வையும் சீரழிக்கும் தண்டனையை கொடுக்கும் அதிகாரத்தைக் கல்குவாரி முதலாளிக்கு வழங்கியது யார்? எதற்கும் அஞ்சாமல் இத்தகைய கொடூரத்தை இழைக்கும் ஆண்டைத் திமிரை கல்குவாரி முதலாளி எங்கிருந்து பெற்றான்? 300 ரூபாயை முதலாளி முகத்தில் விட்டெறிந்துவிட்டு வேறு வேலைக்குப் போக வழியில்லாத அடிமை நிலையில் வெள்ளையனைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது எது? இத்தனை கொடூரமும் கண்முன்னே நிகழ்ந்த போதும் எதிர்க்க இயலா கையறு நிலையில் கல்குவாரியில் வேலை செய்பவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது எது? இக்கேள்விகளுக்கு மனசாட்சியுள்ள அனைவரும் விடை காண வேண்டியுள்ளது.

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலவே கொத்தடிமை முறைக்குக் காரணமான சமூகப் பொருளாதார  காரணிகளை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லாத வெறும் காகிதச் சட்டம்.  1978இல் நடத்தப்பட்ட  கணக்கெடுப்பின்படி 26 லட்சம் கொத்தடிமைகள் நாடு முழுவதும் இருந்தனர். 1995இல் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் கொத்தடிமைகள் இருந்துள்ளனர் என உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை சொல்கிறது.  இன்றைய நிலையில், தமிழ்நாட்டு கல்குவாரிகளில் மட்டும் 5.5 லட்சம் கொத்தடிமைகள் வேலை செய்கின்றனர் என தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க நிறுவனர் ஞானமணி சொல்கிறார். கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் கொத்தடிமைகளாக இருப்பவர்களில் 80% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.  விவசாயம் பொய்த்துப் போவது, குடும்பத் தேவைகளுக்காக அதிக வட்டிக்குக்  கடன் வாங்குவது, அதனை அடைக்க வேறு வழியின்றிக் கொத்தடிமைகளாக வருபவர்கள் ஒரு பக்கமெனில், பரம்பரை பரம்பரையாகவே கொத்தடிமைகளாக வேலை செய்பவர்களும் தொடர்கிறார்கள்.

திருவாக்கரையில் தாக்கப்பட்ட வெள்ளையன் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா காலத்திலிருந்தே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். வறுமை காரணமாகவும், நாடோடிகள் போலத் திரிய வேண்டியிருப்பதாலும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதால் வாரிசுகளும் கொத்தடிமைகளாக தொடரும் அவலம் நிலவுகிறது.

கல்குவாரிகள், விவசாயம், செங்கல் சூளைகள், கனிமச் சுரங்கங்கள், தீப்பெட்டி, வெடிமருந்துத் தொழிற்சாலைகள், கோவை மாநகரின் தங்கப்பட்டறைகள் போன்றவைதாம் கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துள்ள பாரம்பரிய தொழில்துறைகள். இங்கெல்லாம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகும்.

விபத்தின் காரணமாக இறப்போ, உடல் ஊனமோ  ஏற்பட்டால்  எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் கொலை வெறித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வப்போது கணக்குக் காட்டுவதற்காக கொத்தடிமை நிலையிலிருந்து சிலரை  மீட்பதாகக் காட்டிக் கொள்கிறது அரசு. ஆனால், மீட்கப்பட்டவர்களோ மீண்டும் கொத்தடிமைகளாக செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளனர். செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசே  அமைத்துக் கொடுத்த செங்கல் சூளைகளைப் பல இடங்களில் முதலாளிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.  கல்குவாரிகளிலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் சொந்தமாகக் கல்குவாரிகள் நடத்த முற்பட்டு, முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுடன்  கொத்தடிமைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் நெருங்கிய வலைப்பின்னலைப் பராமரிக்கிறார்கள். எனவே, எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும், ஓரிடத்தில் வேலையிழந்தவருக்கு வேறெங்கும் வேலை கிடைக்கவிடாமல் செய்வதும் சாத்தியமாகிறது. தட்டிக் கேட்க யாருமின்றித் தனி அரசாங்கம் நடத்தும் ஆண்டைத் திமிர்தான் தொழிலாளர்களை மிருகத்தினும் கேவலமாக நடத்த வைக்கிறது.

தமிழகத்தில்  ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லுடைப்போருக்கான குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது எங்குமே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  மேலும், கல்குவாரிகளில் 20% சட்டவிரோதமானவை என்று சொல்கிறார்  ஏ.ஐ.டி.யூ.சி துணைச் செயலாளர் கே.ரவி. இன்று இணையம், ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கான வாய்ப்பு வளர்ந்து விட்டதாகப் பலர் கருதிக்கொண்டிருந்தாலும், கொத்தடிமைக் கொடூரங்கள் அதிகரித்துத்தான் செல்கின்றன. அதிகாரிகளின் துணையுடன் முதலாளிகளின் நிலப்பிரபுத்துவ ஆண்டைத்தனம்தான் இங்கெல்லாம் ஆட்சி செய்கிறது.

திருவாக்கரை சம்பவம் போன்றவற்றில் தப்பித் தவறி மாட்டிக் கொள்ளும் சிலரும், பின்னர் முறைப்படி வெளியே வந்து விடுகிறார்கள்.

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி, கொத்தடிமைகள் அதிகமுள்ள மாநிலம் என்ற வகையிலும் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளை ஏதுமற்றவர்களாக்கி வீதியில் வீசுகின்றன. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கிராமப்புற ஏழைப்பெண்களையும், அடுக்குமாடிக் கட்டிடங்களையும் நான்கு வழிச் சாலைகளையும் கட்டி எழுப்புவதற்காக எலிப் பொந்துகள் போன்ற தகரக் கொட்டகைகளில் தங்கி வேலை செய்யும் ஒடிசா, பீகார் தொழிலாளர்களையும் நவீன கொத்தடிமைகளாகத் தினமும் உருவாக்கி வருகின்றன.

நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும், தொழிலாளர்களின் ஊதியமும் மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் பிதற்றிக் கொண்டிருக்கும் கனவான்களின் முகத்திலறைகின்றன இவ்வுண்மைகள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. எங்கோ ஒருவன் காட்டுத்தனமா நடந்தா ஏண்டா என் நாட்டின் முகம் அசிங்கமா வேனும்? இது சரின்னா…ஒரு ராஜீவ் கொலைக்காக.. மொத்த புலிகள கொன்றது சரிதானே???

  எவனோ ஒருத்தன் ஒரு திருட்டு பய வாயில ஊத்துனானாம், அதுல நாட்டு மானமே போச்சாம்… போடா டேய்…

  நேத்து துபாயில சிரியா சட்டத்துல இரண்டு பேர தலய வெட்டி கொன்னானுங்களே…. அத பத்தி எழுதி கிழிக்க வேண்டியது தானே???

  • என்ன விளக்கம் கெட்ட இந்தியனாக இருக்கின்றாய்? வல்லரசு என்றால் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், தனிநபர் சட்டத்தை கையில் எட்டுக்க அனுமதிக்காமை, மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரம் இருக்க வேண்டும். றொச்கெட் அனுப்பினால் மட்டும் சரியா?

  • நீங்க இந்தியாவுக்கு புதுசா???

   என்னமோ இது ஒரு தப்புதான் நடந்தமாதிரி பேசுரீங்க.

   எத்தனை லட்சம் பெண்கள் கற்பழிச்சு கொன்னுருக்கானுங்க சட்டத்தால ஒன்னும் புடுங்க முடியல! இதுவே உங்கேசகோதரிக்க நடந்த இப்படி பேசுவீங்களா?

   நீங்க G.H. பக்கம் போனதே இல்லைனு நினைக்கிறேன், இதுவே அரிசியல்வாதீங்க வெளிநாடு போரானுங்க ஏன் G.H. போகவேண்டியதுதானே?
   Etc., etc., etc.,

   இந்தியா ஒரு கேடு கெட்டநாடு,
   கேடு கெட்டநாடு,
   கேடு கெட்டநாடு.

   $வல்லரசு இந்தியா என்று பெயரும் வைத்தால்,
   இந்த நாய் சிரிக்கும்,
   அந்த பேய் சிரிக்கும்$

  • இந்தியா ஒரு பீத்தின்னிநாடு. இந்தியன் போன்றவர்களின் வாக்குமூலங்களே இதற்கு சாட்சி. ஏன் நண்பரே. இந்த மலந்தின்னி இந்திய திருநாட்டில்தான் தினமும் தீண்டாமை வன் கொடுமைகள் நடந்தேருகின்றன. எங்கோ எப்பொழுதோ நடைபெறும்நிகழ்வு அல்ல இவை. மலம் தின்னச் சொன்னவன் ஒரு இந்தியன்தான். அவனிடம் கேட்டுப்பாருங்கள். உங்களை விட மிகப் பெரிய நாட்டுப்பற்றாளனாக இருப்பான். (உண்மையில் அவன்தான் உண்மையான இந்தியன். அப்படிப்பட்டவனுக்குத்தான் இந்த நாடும் நாட்டுச்சட்டங்களும்.)

   மலந்தின்னி நாடு இந்தியா ஒழிக.

    • இங்கு பிரச்சனைகளைப் பேசுவதை விட இந்தியாவையும், இந்துக்களையும் திட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது…

     • கல்குவாரி முதலாளி துரையை கைது செய்து தண்டிக்க இந்திய ராணுவம் ஏன் வரவில்லை..??!!!

      • ஏன் முதல்வர் இது பற்றி சட்டமன்றத்தில் பேசவில்லை என்று நினைத்துப் பாருங்களேன்

       • ஓட்டுக்கு வேட்டு வைக்காத பிரச்சினைகளையோ, தங்கள் நலனை நேரடியாகவோ/மறைமுகமாகவோ பாதிக்காத பிரச்சினைகளையோ சட்டமன்றத்தில் யாராவது விவாதித்திருக்கிறார்களா?!!! அவர்களும் இதெல்லாம் வல்லரசாகப்போகும் இந்தியாவின் பிரச்சினை என்று தள்ளிவிட்டார்கள் போலிருக்கிறது…

   • “”முட்டாளின் மூலையிலே முன்னூரு பூ மலரும்!!!!!!!” உண்மையான தரமான மனிதனாக இருந்தால் இந்த பாரதநாட்டை விட்டு வெளியெருங்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராஃ போன்ற பர்பல இஸ்லாமியநாடுகள் உள்ளன! அவைகள் உங்களை ஆதரிக்கும்!!!! சென்று வா மகனே வென்று வா!!!!

    • வாயில் மலத்தை ஊற்றியவனை தண்டிக்க கண்டிக்க வக்கில்லை. அவனையும் அவனுக்கு ஆதரவான இந்த நாட்டையும் சமூகத்தையும் கண்டித்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இசுலாமிய நாடுகளில் குடியேற வேண்டும். அப்படித்தானே.

     புவியின் இந்த பகுதியில் பிறந்தோம். வாழ்கிறோம். எமக்கு இந்த நாட்டின் மீது மதிப்போ மரியாதையோ அக்கறை மயிரோ கிடையாது. ஏனெனில் இது செயற்கையாக உருவாக்கப் பட்டது. மகாத்துமா, நேரு போன்ற சமூக விரோதிகளால் தங்கள் சாதி இன நன்மைக்காகவும் உத்தரவாதத்துக்காகவும் உருவாக்கப் பட்டது. அந்த அடக்குமுறையாளர்களின் பிரதிநிதிகளில் ஒருவனே இந்த மலத்தில் பிறந்த அக்கிரமக்காரன். சாதி வருணாசிரம தருமங்களை செவ்வனே பாதுகாத்திருக்கிறான். அதையேதான் இந்த நாடும் அதன் சட்டங்களும் செய்கின்றன.

     வரலாற்றுப் பழிதீர்க்கும் நாள் வரும். அன்று இதே அக்கிரம பேச்சை உங்கள் வாய்களில் வைத்திருங்கள். சாட்சிகள் வேறு தேவை இருக்காது.

    • // உண்மையான தரமான மனிதனாக இருந்தால் இந்த பாரதநாட்டை விட்டு வெளியெருங்கள். //

     பல நாட்ட புடிச்சு அதுக்கு ஒரு பெர வச்சு அந்த மண்ணின் மைந்தர்களை வெளிய போக சொல்லுவது தான் ஆரிய நரி தனமான ஆர் எஸ் எஸ் கோலை செயல்.

     இதை நாங்கள் உங்களுக்கு உரைக்கும் படி சொல்கிறோம்:

     “உண்மையான தரமான மனிதனாக இருந்தால் இந்த தமிழ் நாட்டை விட்டு வெளியெருங்கள்”

     போலித் தனமான ஒரு நாட்டை பற்றி சொன்னதுக்கே இப்படி கோபம் வருது நாங்க பல நூறு ஆண்டுகளாக எங்கள் மறுக்கப் பட்ட தேசியத்துக்காக போராடிக் கொண்டு இருக்கிறோமே அப்ப நாங்க எத்தனை ஆவேசத்துடன் இருக்க வேண்டும்.

     சும்மா இந்த போலி தேச பற்று படத்த எல்லாம் ஓட்டம போய் மூட்டமுடிச்ச எல்லாம் கெட்டிட்டு வந்த இடத்துக்கு போக பாருங்க.

    • “”முட்டாளின் மூலையிலே முன்னூரு பூ மலரும்!!!!!!!”
     இது உன் மூளையில் முளைத்த முன்னூற்றி ஒன்றா?
     முட்டாளின் தலைவனாக இருப்ப்பாயோ??

   • en anne durai enna himachal pradeshkarara.. andha aal tamilan dhaane.. avan evi kitta aalum tamizhann thaane idhu anaihu tamilzhanum avamana pada vendiya vishayam..

  • “எங்கோ ஒருவன் காட்டுத்தனமா நடந்தா ஏண்டா என் நாட்டின் முகம் அசிங்கமா வேனும்? இது சரின்னா…ஒரு ராஜீவ் கொலைக்காக.. மொத்த புலிகள கொன்றது சரிதானே???”

   இந்த அயோக்கியதனத்தை செய்தவன் மயிரையாவது உன் சட்டத்தால் புடுங்க முடியுமா?அப்புரம் என்ன மயிரு வல்லரசு???

   “எவனோ ஒருத்தன் ஒரு திருட்டு பய வாயில ஊத்துனானாம், அதுல நாட்டு மானமே போச்சாம்… போடா டேய்…”

   திருட்டுபயனு தீர்மானிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்த்து. உன் வாயில திணிச்சிருந்தா என்ன பண்ணுவ நாக்கா சொலட்டிட்டு நக்குவியா?

   “நேத்து துபாயில சிரியா சட்டத்துல இரண்டு பேர தலய வெட்டி கொன்னானுங்களே…. அத பத்தி எழுதி கிழிக்க வேண்டியது தானே???”

   உன் குண்டில பீ இருக்குனா பதில் சொல்லு, அடுத்தவன் குண்டிய காமிக்காதே….

 2. இந்த காட்டுமிராண்டிக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.

  • “”முட்டாளின் மூலையிலே முன்னூரு பூ மலரும்!!!!!!!” உண்மையான தரமான மனிதனாக இருந்தால் இந்த பாரதநாட்டை விட்டு வெளியெருங்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராஃ போன்ற பர்பல இஸ்லாமியநாடுகள் உள்ளன! அவைகள் உங்களை ஆதரிக்கும்!!!! சென்று வா மகனே வென்று வா!!!!
   “/இந்த காட்டுமிராண்டிக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்// எப்ப்டி கொடுப்பது? அவர் தான் தமிழரா யுற்றே!

   • “”முட்டாளின் மூலையிலே முன்னூரு பூ மலரும்!!!!!!!”
    இது உன் மூளையில் முளைத்த முன்னூற்றி ஒன்றா?
    முட்டாளின் தலைவனாக இருப்ப்பாயோ??

    கொடுமையான செயலைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் மனிதனாக இருந்தால் போதும்.

 3. இந்த முதலாளி கண்டிப்பாகத்தண்டிக்கப்படவேண்டும், அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகவேண்டும், அவர் ஏழை, கொத்தடிமையாக வேலை செய்பவர் என்பதனால் அவர் தவறு செய்திருக்க மாட்டார், என்பது முட்டாள் தனமான வாதம்…

  கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம்…இந்த எண்ணம் வேண்டுமென்றான் தவறானதாக இருக்கலாம், ஆனால் கொத்தடிமை வேலையிலிருந்து மீண்டு வருவது, வேறு நல்ல வருமானம் உள்ள வேலைக்குச் செல்வது இக்காலத்தில் மிகவும் எளிமையானதே…வடநாட்டில் கொத்தடிமைகளாக விற்கப்பட்ட எத்தனையோ தமிழர்கள் மீண்டு வந்த கதை உண்டு…

  இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுயது அத்தொழிலாளியின் முயற்சியின்மையினையும் தான்…உழைப்பவனுக்கு வாய்ப்பும் வசதியும் தேடி வரும்.

  “வல்லரசின் முகத்தில் வழியும் மலம்” – இந்தத் தலைப்பு இதற்க்குப் பொருந்தவுமில்லை…துளியளவும் சம்பந்தமும் இல்லை…போய் அந்தாள் போலீஸ்டம் புடித்துக் கொடுப்பதை விட்டுவிட்டு வல்லரசின் முகத்தில் வழியும் மலம் என கதை எழுதுவது வெற்றுப் பிதற்றல் அல்லாது வேறென்ன?

  • தலைப்பு 100% சரியானது.கொத்தடிமை வாயில் மலம் திணிக்கலாம்,”வல்லரசின் ”முகத்தில் மட்டும் மலம் வழியக் கூடாதா என்ன?.

  • //இந்த முதலாளி கண்டிப்பாகத்தண்டிக்கப்படவேண்டும், அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகவேண்டும்//

   அரசியல்வாதி மாதிரியே பேசுரீங்க, police station போனால் நீதி கிடைச்சிடும் அப்படியா!!!
   என்னங்க குழந்தைமாதிரி பேசுரீங்க?

   //அவர் ஏழை, கொத்தடிமையாக வேலை செய்பவர் என்பதனால் அவர் தவறு செய்திருக்க மாட்டார், என்பது முட்டாள் தனமான வாதம்…//

   முதலாளியை பேருக்கு திட்டிவிட்டு கொத்தடிமையையாக இருப்பவரை சாடிபேசுரீங்க உங்கள் மனதில் உள்ள நீதி படுகேவலம்!!

   //கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம்…இந்த எண்ணம் வேண்டுமென்றான் தவறானதாக இருக்கலாம், ஆனால் கொத்தடிமை வேலையிலிருந்து மீண்டு வருவது, வேறு நல்ல வருமானம் உள்ள வேலைக்குச் செல்வது இக்காலத்தில் மிகவும் எளிமையானதே…

   இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுயது அத்தொழிலாளியின் முயற்சியின்மையினையும் தான்…உழைப்பவனுக்கு வாய்ப்பும் வசதியும் தேடி வரும்.//

   நான் 108ல் EMTஆக பணிபுரிந்தேன் கொத்தடிமையைவிட கேவலமாக.

   ( நாங்கள் 12 மணிநேரம் உணவுண்ணாமல் ஓடி வேலை செய்வதை கவனித்திருக்கலாம்)

   ‘படித்த’ நாங்கள் சாதாரண அடிப்படை உரிமைக்காக Collecter-ரிடம் மனு கொடத்து, உண்ணாவிரத போராட்டம் நடத்தி, send our mamorendam to CM cell through Fax and Labour Office-ல் Disputeபோட்டு ஒன்னும் கிழிக்க முடியவில்லை.

   எங்கள் அதிகாரிசொன்னாது ”இப்படித்தான் இருக்கும் முடிஞ்சா இரு இல்லனா போ”

   எங்களுக்கே இந்த நிலைமை! அந்த பாமரமக்கள் என்ன செய்வார்கள்?????????

   Alas!!!

   Mr. Poiiya
   கம்யூனிசத்தை எதிர்பது ok அதற்குனு அறுத்துமில்லாமலா பேசுவது?

  • இது போன்ற கொத்தடிமைமுறை கலெக்டர் ஆர்.டி.ஓ போலீஸ் ஆதரவுடன் சகஜமாக நடந்து வருகிறது.சில சம்பவம் வெளியில் வரும்போது நிவாரணம் விசாரணை என நாடகமாடிவிட்டு கொத்தடிமை கூடாரங்களுக்கு பாதிப்பில்லாமல் முடித்துவிடுவார்கள்

  • பைபா யாராவது குவாரி முதலாலியை போலீஸில் பிடித்துக்கொடுத்திருக்கிறீரா? அல்லது கேள்விப்பட்டிருகக்கறீரா? தப்பி வரும் கொத்தடிமையை டாடா சுமோ அடியாட்களிடம் போலீஸ் பிடித்துக்கொடுத்த பல சம்பவம் எனக்குத் தெரியும்

  • “இந்த முதலாளி கண்டிப்பாகத்தண்டிக்கப்படவேண்டும், அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகவேண்டும், அவர் ஏழை, கொத்தடிமையாக வேலை செய்பவர் என்பதனால் அவர் தவறு செய்திருக்க மாட்டார், என்பது முட்டாள் தனமான வாதம்…”

   உடனே காவல்துறை தMடித்து விட்டுத்தான் மறுவேலை செய்யும்? பையா நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க?

   “கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம்…இந்த எண்ணம் வேண்டுமென்றான் தவறானதாக இருக்கலாம், ஆனால் கொத்தடிமை வேலையிலிருந்து மீண்டு வருவது, வேறு நல்ல வருமானம் உள்ள வேலைக்குச் செல்வது இக்காலத்தில் மிகவும் எளிமையானதே…வடநாட்டில் கொத்தடிமைகளாக விற்கப்பட்ட எத்தனையோ தமிழர்கள் மீண்டு வந்த கதை உண்டு…”

   கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்தவர்களைப்பற்றி தெரிந்து கொண்டு எழுதுங்கள்…
   கொத்தடிமையிலிருந்து மீளாமல் சோம்பேறியாய் இருப்பதுதான் காரணம் இல்லையா?
   இது அந்த மலத்தைக் காட்டிலும் வக்கிரமானது.

   “வல்லரசின் முகத்தில் வழியும் மலம்”

   வேறென்ன, வல்லரசு யாருக்காக… இந்த அயோக்கியதனத்தை செய்தவன் மயிரையாவது உன் சட்டத்தால் புடுங்க முடியுமா?அப்புரம் என்ன மயிரு வல்லரசு..

   • indha kodumaya senjadhu oru tamizhann aana oona tamizh tamizhnnu koovura sseeman, podalanga ellam enna mayira pudungitrkaanuga puranaanooru, aga naanooru, thirukkural ellam ivanungalukka idha dhaan kathu koduthatha??? adhayum indiaaoda sethu ezhudi indiava thitradhula vinavu madhiri aalugalukku kondaatam

 4. முதலாளிகளே இப்படிதான் அவர்களை என்ன செய்தாலும் தகும். அவர்கள் எத பத்தியும் கவலைப்படமாட்டாங்க. ஒரே குறிக்கோள் லாபம் . அதற்காக கட்டின மனைவியை கூட……… எனக்கு வார்த்தை வரல. கோவம் அதிகமா வருது. முதலாளித்துவம் இல்லாத யாரும் யார்மேலேயும் அதிகாரம் செலுத்தாத, விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற, எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கிற மாதிரி யாரும் யார் கையையும் எதிர்பார்த்து வாழாமல் தன் உழைப்பை நம்பி வாழும் நிலை இங்கு வர, உழைக்காமல் இங்கு யாரும் இருக்க கூடாது அப்படி இருப்பவர்கள் கண்டிப்பாக முதியோர்களாக , குழந்தைகளாக, உணமுற்றவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக, இயல்பு நிலையில் இருந்து சற்று மாறியவர்களாக , தான் இருக்க வேண்டும். அவர்களை கண்டிப்பாக அரசு கவனித்துக்கொள்ளவேண்டும் .
  மற்றவர் உழைப்பில் வாழ்பவர் , மற்றவர் உழைப்பை சுரண்டுபவர் தண்டிக்க பட வேண்டும்

 5. இதேனுங் ! இவ்வளோ கொடுமையா இருக்கு !
  இந்த மொத்லாளிங்களுக்கு என்ன ஆண்டைங்கன்னு நினைப்பா !
  இந்த மாதிரி பன்ன்றப்ப கண்டிப்பா சாதிய வச்சி தான் இப்படி கேவலப் படுத்தி இருப்பானுங்க ! பரதேசி !
  10 ஆயிரம் 15 ஆயிரம் ரூவாக்கு வருசம் முழுசும்நாயா வேலை வாங்குறது இல்லாம இப்படி மனிசனையே அசிங்கப் படுத்துறானுங்க ! இவனுக்கல்லாம் மனுச ஜென்மமா!

  • “இந்த மொத்லாளிங்களுக்கு என்ன ஆண்டைங்கன்னு நினைப்பா !”
   அப்ப ஆண்டைங்கன்னா என்ன வேணுமின்னாலும் செய்யலாமா ?
   நீங்க ஆண்டைகளுக்கு சார்பா வரிங்களா நீங்க என்ன ஆண்டையா

 6. This article based on true incident gives me the memories after reading Hindi Stories ” KHAFAN ” ” Sava Ser Gehum..”by Famous Hindi Writer Munshi Premchand…In Khafan ( frsh and piece of cloth to be put on dead body just before cremation.”
  father and son do daily labour and spends all the money in drinking toddy…They used to ask money by telling that moher in the hosue is seriously ill and that also goes to toddy sho..One day the lady dies, they beg for money to buy kHAFAN…no body gives..father and son quarrels for buying new cloth…
  In ” Sava Ser Gehum “( one and quaret ser of wheat )…to celebrate a function a labourer askes his Zamindar some wheat..on lending basis with the promise that he will return it…or give money equivalent…But the Zamindar refuses to take back
  Gehum, and ask him to do house hold work…it never ends…the loan he had taken multiplis..and when the labourer dies
  the Zamindar asks his son to com and do the household work…
  The stories written by Munshi Premchand hundreds of years ago,is started happening in our country..
  The Home Ministry is silent on the matter even though various NGOs had raised the issue and submitted reports, photogrphs of thei living conditions with statistics etc.
  Our Tamil writer Jaykanthan had also written so many stories on the suffering of down-trodden/ labureres..
  Those Land Owners are still holding the strings of Police Personnel, as Police department is puppet in the hands of the
  Zamindars/ Land Owners…

 7. முதலாளித்துவத்தின் இந்த கீழ்த்தனமான காரியத்துக்கு (கேடுகெட்ட இந்தியா) இச்சமூகம் பொறுப்பேற்க முடியாது என்கிற ஈந்தியன், பிஜேபி காரனுங்க சட்டசபையில் பிட்டுப்படம் பார்க்கும்போது மட்டும் இந்திய நாட்டின் புனிதம் காப்பாற்றப்பட்டதோ! “ஆமாம், நான் வெறும் இந்தியன் அல்ல; ஆர்எஸ்எஸ் காரன் இந்தியன்” எனறு ஒத்துக்கிட்டு போகவேண்டியதுதானே!

 8. நாதாரி இந்தியனின் நாற்றுப்பற்று வாழ்க.
  கடைசி குடிமகனின் பாதுகாப்புக்கும் துணை நிற்கும்
  அரசே வல்லரசு.பீயை வாயில் திணிப்பதை வேடிக்கை
  பார்க்கும் அரசு அல்ல.சரியத் என்று எழுத வரவில்லை உனக்கு.
  அதை வம்புக்கு இழுக்கிறாய்.பீயை வாயில் திணிப்பவனுக்கு
  மரணதண்டனை என்று சட்டம் இருந்தால் தெரியும்,
  இனியொரு காலிப்பயல் இதை செய்ய துணிவானா என்று?

 9. Nastiest thing. More nastier is those who support this inhumane act. India is a land of filthy things in most part of its history; so are its people who wield more power.

 10. இந்திய வல்லரசில் மட்டும் தான் இப்படி நடக்கிறது.எந்த இந்தியனாலும் மறுக்க முடியுமா?உலகில் உள்ள மற்ற எந்த நாட்டிலும் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை மறுக்க முடியுமா?எவ்வளவு பிரச்னை என்றாலும் துப்பாக்கிய எடுத்து சுடுவான் கத்தியால் குத்தி கொலை செய்வான், அடிப்பான் அவ்வளவுதான்.ஒரு சிறு தொகை கடன் கொடுத்துவிட்டு தலைமுறை தலைமுறையாய் கொத்தடிமையாய் வைத்திருப்பது,ரோட்டில் கட்டி வைத்து அடிப்பது பலர் முன்னிலையில் வாயில் மலம் ஊட்டி மகிழ்வது,பெண்களை ஊருக்கு முன் வைத்து கற்பழிப்பது,டீக்கடையில் ஏனையோருக்கு முன் தனிக்குவளையில் தேநீர் குடிக்க வைத்து ரசிப்பது,செருப்பு போடாமல் தங்கள் தெருக்களில் நடக்க வைப்பது,இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு போக வைப்பது,சாதி தாண்டி திருமணம் செய்து கொண்டால் பஞ்சாயத்து வைத்து கொன்று எரிப்பது,இதெல்லாம் வேறே எங்கு நடக்க முடியும்……..கொஞ்சம் கூட அறிவில்லாமல் ஏன் இந்தியாவை இழுத்தது தப்பென்று கோருகிறீர் indian.

 11. அடங்க மறு; அத்து மீறு; திமிரி எழு; திரிப்பி அடி.

  தொழிலாளி வர்க்கம் என்றால் அவ்வளவு இலக்காரமா? வெள்ளையனை திருடன் என்று சொல்லி மாந்த சிந்தனையுடன் நடந்த அந்த கல்குவாரி முதலாலி என்ன யோக்கிய சீலனா? மனிதனின் உழைப்பை திருடுவது காட்டிலும் கேடு கெட்டது எதுவும் இல்லை.

  பொருளாதார திருட்டு, நாட்டின் வளத்தை ஆட்டையை போடுவது, தொழிலாளி உழைப்பை சுரண்டுவது இது அனைத்தையும் செய்யும் முதலாலிகளுக்கு வென்சாமரம் வீசும் இந்த நாட்டின் அதிகார வர்க்கமும் துனைபோகும் ஆலும் வர்க்கமும் உண்டாக்க நினைப்பது “இந்தியா என்னும் வல்லரசை”.

  2ஜி ஊழல், ஆதர்ஸ் ஊழல், போபர்ஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல், ராணுவ ஊழல் என்று அடுக்கி கொண்டு செல்ல கூடிய ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதலாலிகள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வாயில் எதை கரைத்து ஊத்துவது?

  இலித்தவாயன் தொழிலாளி என்றால் திருட்டு பட்டம் கட்டி மலத்தை திங்க செய்யும் இவர்களின் ஆசனவாய்வு பகுதியை தக்கை கொண்டு முடிவிட வேண்டும்.

 12. இந்த நாய் ஒரு கல்குவாரி வைத்திருக்கும் பணத்திமிரில் இவ்வளவு மோசமாக ஒரு மனிதனை நடத்தினான் என்று அவன் புகைப்படத்தை சுவரொட்டியாக அடித்து இந்த நாயை என்ன செய்யலாம் என்று வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையினர் விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதை நிறைவேற்ற எந்த ஒரு அமைப்பாவது ஒரு நடவடிக்கை எடுத்தால் தான் இந்தியாவில் மட்டும் நடக்கும் இம்மாதிரியான செயல்கள் வெளியே தெரியும் மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு விவாதங்கள் நடந்து ஒவ்வொரு தனி மனிதனின் கண்ணியமான வாழ்வுரிமையும் மதிக்கப்படும்.வினவு வினை செய்ய ஆரம்பித்தால் நான் மிகப்பெரும் பங்களிப்பை எல்லா வகையிலும் செய்ய தயாராய் இருக்கிறேன்.

 13. By doing such things, the quarry owner has done something much worse to himself than what he did to the labour.

  And all this for a small piece of tool,even if he had stolen it,why would you do such a thing?

 14. Just as the government is taking steps to bring out the wealth / treasure hidden in temples, so also the govt. must
  take strigent action to eradicate the Atrocites of Land owners/ zamindars etc.
  Severe punishment must be given to the unscrupuleous owners who employ poor and down todee people for hard lbour and taking law in thei r hands…

 15. தலித் ஒருவருக்கு திண்ணியத்தில் இது போன்ற ஒரு கொடுமை நடந்த போது பொங்கி எழுந்து பெரும் போராட்டம் நடத்திய திருமாவளவன் இதையும் கண்டிக்கவேண்டும். தலித்துக்கு நடந்தால் மட்டும் தான் கொடுமையா?யாருக்கு இது போன்ற இழிவு நடந்தாலும் எல்லோரும் பொங்கி எழ வேண்டும்.அப்போது தான் யார் மீதும் யாரும் வன்முறையை செய்ய தயங்குவான்.எந்த ரௌடியை பார்த்தும் மக்கள் பயப்படவே மாட்டார்கள்.அரசு மிரளும் வகையில் ஒரு தனி மனிதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராய் மக்கள் திரண்டால் தான் ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையோடு வாழும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.அதற்கு இது ஒரு ஆரம்பமாய் இருக்கட்டும்.அடுத்தவர் மீது கை வைக்கும் உரிமை சட்டப்படி போலிசுக்கு கூட இல்லையே.மனைவியை கணவன் அடித்தால் கூட குடும்ப வன்முறை என்று மூன்று வருஷம் சிறைக்கு அனுப்பும் வகையில் சட்டமே இப்போது இருக்கிறதே. திருடியே இருந்தாலும் ஒரு முதலாளி எப்படி ஒரு மனிதனை அடிக்க முடியும்.இதை என்னால் தாங்கவே முடியவில்லை.

  • //திருமாவளவன் இதையும் கண்டிக்கவேண்டும். // விடுதலை சிறுத்தைகளும், சிபிஎம்ன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இப்பிரச்சினையில் தலையிட்டு வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர். இப்பிரச்சினையை சட்டரீதியாக எடுத்து போராடுவது ஒரு பக்கம்.

   கொத்தடிமை பிரச்சினையின் சமூக பொருளாதார பின்னணியை புரிந்து கொள்வதும், ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் அதை அமல்படுத்தும் அரசு இயந்திரம் ஆளும் வர்க்க கருவி என்பதை புரிந்து கொள்வதுமே முக்கியமானது ஆகும்.

 16. ஒருவன் தன் மனைவியையோ குழந்தையையோ அடிப்பதை பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தவர்கள் போன் செய்தாலே போலிஸ் பத்து நிமிஷத்தில் அங்கு வந்து உடனடியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வாங்கி தரும் அமெரிக்காவில் .அப்படி சட்டங்களை மாற்ற போராட வேண்டும் இந்தியாவில்.

 17. //வல்லரசின் முகத்தில் வழியும் மலம்//

  மிகச்சரியான தலைப்பு..

  நாட்ல நடக்கர இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியாதவன் வல்லரசாய் ஒரு மயிரும் புடுங்க முடியாது…

  மலத்தை தின்றவனுக்கு இதெல்லாம் சாதாரணமாய் தான் தெரியும்…

  • //மலத்தை தின்றவனுக்கு இதெல்லாம் சாதாரணமாய் தான் தெரியும்//

   இதை ஆதரிக்கும் நாய்களுக்கு..

 18. சும்மாவா சொன்னார் பெரியார்!!!

  //mandhiravaathiApril 11, 2012 at 2:10 pm 29.2
  பிராமண பெண்களை மணந்தால் உயர் ஜாதி அந்தஸ்து கிடைக்கும்னு உங்களுக்கு யாரு சொன்னாங்க? அந்த மணமகனின் ஜாதியில் வேண்டுமானால் அவருடைய அந்தஸ்து உயரலாம். “தலித்தை மணந்த பிராமணப்பெண்ணும் தலித்தே” என்று நீதி மன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. Since our society is patriarchal, it’s the father’s caste that matters.//-mandhiravaathi

  //M.Natrayan, Tamil NaduApril 13, 2012 at 10:32 pm
  ”முட்டாளின் மூலையிலே முன்னூரு பூ மலரும்!!!!!!!” உண்மையான தரமான மனிதனாக இருந்தால் இந்த பாரதநாட்டை விட்டு வெளியெருங்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராஃ போன்ற பர்பல இஸ்லாமியநாடுகள் உள்ளன! அவைகள் உங்களை ஆதரிக்கும்!!!! சென்று வா மகனே வென்று வா!!!!

  “இந்த காட்டுமிராண்டிக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்// எப்ப்டி கொடுப்பது? அவர் தான் தமிழரா யுற்றே!//-M.Natrayan

  //நான் ஒரு பிராமணன் : ராகுல் காந்தி

  புது தில்லி, ஏப். 14 : நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில், நான் ஒரு பிராமணன் மற்றும் காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர் என்று, தன்னை சந்திக்க வந்த உத்தரப்பிரதேச உயர்ஜாதி கட்சியின் தலைவர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.//

  //மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம்.

  இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.

  இந்த செய்தியில் ஒரே ஆறுதலான விஷயம், சில தலித் அமைப்பினர் இந்த பழக்கத்திற்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் இந்தவிஷயம் வெளி உலகத்துக்கு தெரியவே வந்தது//-http://kurippugal.wordpress.com//

  தர்மம் வெல்வது எப்போது???

 19. Seriously Im ashamed to live in this damn state!!! this is truest sadism to the core… Death penalty should never be banned in countries like India.. Its such a kevalam that this atrocious incident happened near villupuram which is so to chennai and people at the helm are turning a nelsons eye towards it…
  seriously dei enna mayira da pudungareenga???this bastard durai should not be considered a human at the first instance

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க