Friday, September 22, 2023
முகப்புசெய்திபிட்டுக்கு மண் சுமந்த 'லீலை' ஏனோ?

பிட்டுக்கு மண் சுமந்த ‘லீலை’ ஏனோ?

-

செய்தி-48

வணி மூலத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தர திருக்கோவிலில் “பிட்டுக்கு மண் சுமந்தத லீலை” நடைபெறுகிறதாம். அதன்படி இந்தக் கதையை பார்ப்பன பட்டர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். பிட்டுக்கு மண் சுமந்த கதை என்ன?

இது புராண காலத்தில் நடந்த கதை. அதாவது சோதித்தறியப்பட்ட அறிவியல் விளக்கத்துடன் அறியப்படும் வரலாற்றுக் காலம் அல்ல இது. பார்ப்பனியத்தின் புரட்டுக் காலம்தான் புராண காலம். இனி கதை.

வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடிய நேரம். அதனால் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என அரசர் ஆணையிட சிவபக்தையான பிட்டு விற்கும் வந்தியக் கிழவி தனக்கு ஆள் இல்லையே என வருத்தமடைந்தாள்.

இதையடுத்து இறைவனே கூலி ஆளாக வந்து, பிட்டு தந்தால் மண் சுமப்பதாகக் கூறி வந்தியக்கிழவி சார்பில் கூலியாளாக சென்றார். ஆனால், சரிவர வேலைசெய்யாமல் அங்கு கூலியாள் தூங்குவதைக் கண்ட அரசன், பிரம்பால் கூலியாளை முதுகில் அடித்தார்.

அப்போது அரசர் உள்ளிட்ட அனைவருக்கும் முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. இதன் பிறகே, கூலியாளாக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அரசர் இறைவனை வணங்கினார். அப்போது, வந்தியக்கிழவியை வாழ்த்திய இறைவன், மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளியதாக புராணம். (தினமணி செய்தி)

பிட்டுக்கு-மண்
எம்பெருமான் ராகுல் காந்தி சுமந்த மண்

இந்தக் கதையின் படி அரசராகவும், இறைவனாகவும் இரு பார்ப்பனப் பட்டர்கள் நடித்து சடங்கு செய்திருக்கின்றனர். அந்தக் காலத்து இறைவனை விட இந்தக் காலத்து இறைவன் காஸ்ட்டிலியாக வாழ்வதால் மண் கூடை, மண்வெட்டி இரண்டுமே தங்கமாம். தங்கள் வாழ்நாளில் இது போன்ற விவசாயக் கருவிகளை ஏறெடுத்தும் பார்க்காத பார்ப்பன பட்டர்கள் லீலை சடங்கிற்காக இவற்றை எடுத்திருக்கின்றனர். போகட்டும். நாம் சொல்ல வந்த விசயம் வேறு.

ஏழைக் கிழவிக்கு உதவ வந்த இறைவன் அதை யாருமறியாமல் செய்து முடித்து விட்டு போகவில்லை, ஏன்? தனது உதவி எல்லார் முதுகிலும் விழுந்த அடியாக உணரப்பட்டு, பாடப்பட்டு, இன்று தங்க மண்வெட்டி வரைக்கும் வந்து ‘வரலாறாக’ ஊர் உலகம் மெச்ச வேண்டும் என்று ஏன் நினைத்தார்?

இன்றும் கூட விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற தலைவர்கள் தமது பிறந்த நாட்களில் ஏழைகளுக்கென்று ஏராளம் உதவிகள் செய்து மறக்காமல் போட்டோ எடுத்து ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொள்கின்றனர். இவர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன வேறுபாடு? கடவுள் இமேஜூக்காக செய்யவில்லை என்று சொன்னால் அது வரலாற்றில் பதியப்பட்டிருக்க கூடாது.

கடவுள் இமேஜுக்காக தனது லீலையை ரிக்கார்டு செய்தார் என்றால்  விஜயகாந்தையும் கடவுள் என்று அழைக்கலாம். என்ன தவறு? அடுத்து கர்மவிதிப்படி பார்த்தாலும் இது தவறு என்பதை விளக்கலாம். வந்தியக் கிழவி போன ஜன்மத்தில் பாவம் செய்தவள் என்பதால்தான் பிட்டு விற்று பிழைத்து வந்தவள். அதனால் அவள் கஷ்டப்படும்போது கடவுள் வந்து காப்பாற்றுகிறார் என்றால் கடவுள் தான் வரைந்த கர்மவிதிச் சட்டத்தை மீறுவதாக அர்த்தம். ஏனெனில் இந்த ஜன்மத்தில் வந்தியக் கிழவியின் நற்பயன்கள் போஸ்ட் பெய்டாக அடுத்த ஜன்மத்தில்தான் கிடைக்க வேண்டும். பிரிபெய்டாக இப்போதே கொடுத்தால் இந்த கர்மவிதி ப்ளானே தப்பு என்றாகிவிடும்.

கர்மவிதியை மீறி கடவுள் உதவ வந்தார் என்றால் அவர் ஏன் ஏழைகளை எண்ணிறந்த எண்ணிக்கையில் படைக்க வேண்டும்? எல்லோரையும் அம்பானி, மிட்டல், ஜின்டால் போன்று படைக்கலாமே? அப்படிப் படைப்பதற்கு காசா, பணமா? எல்லாம் ஒரு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் விதியை மாற்றலாமே?

எம்.ஜி.ஆர் கட்டிப்பிடிக்காத கிழவிகளா? ராகுல்காந்தி போகாத குடிசைகளா? தெரசா உதவாத ஏழைகளா? இப்படி வரலாறு முழுவதும் மேன்மக்கள் தங்களை இரக்கமிக்கவர்களாக காட்டிக் கொண்டுதான் வருகிறார்கள். ஒருவேளை இவர்களது கருணையை உலகம் அறியவேண்டுமென்பதற்காகவே இந்த உலகில் ஏழைகள் இருந்தாக வேண்டும்.

கனம் கோர்ட்டார் அவர்களே கடவுள் இல்லை என்பதை இன்னுமா விளக்க வேண்டும்?

இதையும் படிக்கலாம்

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இதுபோன்ற கதைகளும் வெட்டி நியாயங்களும் மற்ற கோவில் வரலாறுகளும் காணலாம் (உங்களுக்கு தெரியாததில்ல). அடிமைகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இது போன்ற கதைகள் அமைந்துள்ளன. நந்தனார் கதையும் உடுப்பி கனகதாசர் கதையும் சான்றுகள்.

  2. // கடவுள் இமேஜுக்காக தனது லீலையை ரிக்கார்டு செய்தார் என்றால் விஜயகாந்தையும் கடவுள் என்று அழைக்கலாம். என்ன தவறு? //

    கடவுள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் படாதவரை தன் இமேஜைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. தவிர கடவுள் எப்படி இருக்கவேண்டும் நம்மிடம் கலந்துரையாட வேண்டிய அவசியமுமில்லை என்பதுதான் கடவுளின் நிலைப்பாடு.. நாம் ஒன்றும் செய்யமுடியாது..

    ’விஜய்காந்த் இல்லை’ என்று சொன்னால் ’எவன்டா சொன்னது நான் இல்லை என்று’ என்று விஜய்காந்த் பறந்து வந்து அடிப்பார்.. ’கடவுள் இல்லை’ என்று சொல்வது ஓவராகிப் போனால் கடவுள் அவர் பாணியில் எல்லார் முதுகிலயும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு ‘இருக்கேனே..!’ என்று அவ்வப்போது நினைவூட்டிவிட்டுப் போவார் போலிருக்கிறது.. கடவுளின் இந்த விளங்கிக் கொள்ள கடினமான, வித்தியாசமான பாணியே ‘லீலை’ எனப்படும்..

    என்றைக்கு சிவபெருமான் தன்னைக் காப்பியடிக்கும் பட்டர்களை பிரம்பால் உண்மையிலேயே 2 விளாசு விளாசப் போகிறாரோ தெரியவில்லை..

  3. முசுலிம்கள் புராணத்திலும் இது போன்ற கதைகள் உண்டு. அதையும் வினவு கண்டிக்குமா? ஏன் இந்து கதைகளை மட்டும் கண்டிக்கிரீர்கள்? உங்கள் செசுலரிச்ம் புல்லரிக்க வைக்கிறது.

    • தம்பி சரவணா பழைய ரிக்கார்ட். இசுலாமிய பார்பனியத்தை விமர்சித்து வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளன…

      • // இசுலாமிய பார்பனியத்தை //

        தண்ணியில் ஜாங்கிரி சுட்டால் களியாயிடும்.. கட்டாயம் எண்ணை வேண்டியிருக்கு..
        உங்க பெயரிலேயே இவ்வளவு தத்துவம் இருந்தா சிந்தனையிலும் செயலிலும் என்னா தத்துவம் இருக்கும்.. நன்னா சுத்துங்கோண்ணா..

  4. ///கனம் கோர்ட்டார் அவர்களே கடவுள் இல்லை என்பதை இன்னுமா விளக்க வேண்டும்?//
    எவ்வளவு சொன்னாலும் புரியாது!

    ஆகஸ்ட் 22 -ஆம் தேதி எழுதிய எனது பதிவு.

    ரஜினி 50 வருடத்தில் மூன்று முக்கிய கடவுளில் ஒருவராவது உறுதி!
    லிங்க் கீழே:
    http://www.nambalki.com/2012/08/50.html

    • உங்கள் சுட்டியை படித்தேன்.
      கல்லுக்கு பவர் வருவதற்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்ய வேண்டும் என்று இருந்தது. பேசாமல் சமஸ்கிருதத்திற்கு ஒரு கல் செய்து அதையே தெய்வமாக்கி விட்டால்?!!

      (சமஸ்கிருதம் தெய்வ பாஷை என்று கிளம்பிவிடாதீர்கள்)

      • I dont know if a stone will get power because of ritualistic prayers.But the person sitting infront of fire while the rituals are going on will get the feeling of that.

        I personally believe in this and there are many people who believe in this.The story is the same in temples also.

        But Tamizh baai,why are you concerned about hindu temples and all and how worship happens there,why dont you go and get the quraan and the hadith translated in tamil and used in tamil.

        • கிராமப்புற கோயில் பக்கம் நெருப்பு மூட்டி பூசை செய்பவரை விட டாஸ்மாக் சரக்கு உள்ளே போனவுடன் மக்களுக்கு வரும் தெய்வீகச் சக்தியை நீங்கள் பார்த்ததில்லையா?
          குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை சகோதரர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன். படித்துப் பார்த்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.

  5. மன்னனுக்கு பட்ட அடி அனைவருக்கும் வலிக்க காரணம், இறைவன் எல்லோர் இடத்திலும் அந்தர் ஆத்மாவாக இருப்பதற்க்கு சான்றாக அமையதானே அன்றி நீங்கள் நினைப்பதுபோல தற்கால ஸ்டன்டு போல அல்ல !!!

  6. அட பக்கியே, கடவுள் என்பது பொதுவான வார்த்தை, அல்லா , இயேசு எல்லோரும் அடக்கம் என்பது கூடவா தெரியாது.

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க