செய்தி-53
மேலும் படங்களுக்கு – சாதீ முகிலனின் ஓவியங்கள்
தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 31 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது வழக்கமாம். காரணம், தமிழகத்தில் தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற நிலைமையை விரைவில் உருவாக்க முதல்வர் விரும்புவதால், தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியுள்ளாராம்.
இந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு அம்மாவின் அரசு கூறும் தகுதிகளில் சில:
“உள்ளுர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுக்கோயில், குடிநீர்க் கிணறு, கடைகள், ஒட்டல்கள், குளம், ஏரி, சலூன் ஆகியவற்றைச் சுதந்திரமாக அனுபவிக்கும் கிராமமாக இருக்க வேண்டும்.
இதர சமூகத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருத்தல் வேண்டும்.”
பரிசு பெறுவதற்கான தகுதிகளாக கூறப்பட்டிருப்பவற்றை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
“தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக்கிணறு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் உங்கள் ஊரில் இருக்கக் கூடாது – அப்போதுதான் பரிசு” என்று கூட சொல்லவில்லை. அவ்வாறு கூறுவதை கவனமாகத் தவிர்த்திருப்பது ஏன்?
“கூடாது” என்பதுதான் சட்டம். அதை மீறி தனிச் சுடுகாடும், தனிக்கோயிலும், தனிக்குவளையும் தமிழகமெங்கும் இருக்கின்றன. ஆனால் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
குற்றத்துக்கு தண்டனையில்லையாம். குற்றமிழைக்காதவர்களுக்கு பரிசாம்.!
லஞ்சம் வாங்கினால் தண்டனை என்பதற்குப் பதிலாக, வாங்காமலிருப்பவர்களுக்குப் பரிசு அறிவிப்பது போல,
பாலியல் வல்லுறவு குற்றத்தை தண்டிப்பதற்குப் பதிலாக, பெண்களை சமமாக நடத்தும் ஆண்களுக்குப் பரிசு அறிவிப்பது போல, தீண்டாமையை ஒழிக்க பரிசு அறிவித்திருக்கிறார் அம்மா.
தமிழகத்தில் தீண்டாமைக் குற்றங்கள் தலைவிரித்தாடுவதையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை என்பதையும் மறைப்பதற்குத்தான் இந்த பரிசு நாடகம்.
அதிக விளக்கம் தேவையில்லை.
தலித் மக்களுக்கு எதிரான கொலை, பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களிலேயே 5% குற்றவாளிகள் கூட தமிழகத்தில் தண்டிக்கப்படுவதில்லை.
திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தில் சமீபத்தில் இரு தலித் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததற்காக, தம் குழந்தைகளை ஆதிக்க சாதியினர் பள்ளிக்கே அனுப்பவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் கம்பளத்து நாயக்கர் சாதியினர், சத்துணவு சமையல் பணியாளர்களாக தலித் பெண்கள் இருப்பதால், தங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று கூறியதை ஏற்று அந்தப் பெண்களை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.
தலித் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தமக்குரிய நாற்காலியில் கூட உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.
இதுபோல நூற்றுக்கணக்கான தீண்டாமைக் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டபோதிலும், அவை எதிலும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை. ஏனென்றால் தீண்டாமையை குற்றம் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அரசு அப்படிக் கருதவில்லை என்பதே உண்மை.
அதனால் அம்மா பரிசு அறிவிக்கிறார்.
பரிசுத்தொகை கோடி ரூபாய் என்று அறிவித்தாலும், தீண்டாமை ஒழியாது. ஏனென்றால் அது ஆதிக்க மனோபாவம்.
இப்போ, அம்மாவுக்கு நாம் ஆயிரம் கோடி கொடுத்து, “இனிமேல் கட்சிக்காரங்க யாரும் காலில் விழவோ, வளையவோ நெளியவோ கூடாது”ன்னு அறிவிக்கச் சொன்னா, அது நடக்குமா?
கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்.
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
நல்ல விசயம்தான்.. ஆனால் பாராட்ட மனம் வரவில்லை.. நீரே சொல்றீர் இது மனோபாவம் என்று..வேற எப்படி டீல் பண்றதாம்.. இது என்ன பாட்டாளிவர்க சர்வாதிகாரா நாடா… பேசினாலே சிறை வாசன்னு சொல்ல… ஒரு முதலாளித்துவ நாட்ல பரிசு கிரிசு கொடுத்தான் வேல ஆகும்…
நாகராஜ் சார் வேறு எந்த நாட்டிலாவது இப்படி போய் சொல்லி பார்ப்போம் ‘மனிதனை மனிதனாய் மதித்தால் பரிசு’ ….சிரிக்கமாட்டான். இதுக்கு சட்டம் போடற நிலைமையில் நாம் இருப்பது மிக மிக கேவலம் இல்லையா?தலித்தாக பிறந்தால் தான் அந்த வலி தெரியும்,இல்லையென்றால் தலித்கள் அந்த கொடுமையை உங்களுக்கு திருப்பி செய்தால் புரிய வாய்ப்பு இருக்கிறது.வெள்ளைக்காரன் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் சாதி என்பதை சுவடில்லாமல் ஆக்கி இருப்பான். அவன் போட்டால் தான் சட்டம் அதன் உரிய மரியாதையை பெற்றது.
நம் நாட்டில் தான் வீதியில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைத் தெருக்களில் சிறு நீர், மலம் கழித்தால் கட்டணம் கிடையாது. தண்டனை கிடையாது. கட்டணக் கழிப்பிடம் என்று ஒரு கட்டடத்தைக் கட்டி அதற்கு காசு வசூலிக்கும் அநியாயம் நடக்கிறது.
பிறகு சட்டங்களும் அப்படி தானே இருக்கும். எல்லாமே தலை கீழாக செய்வது தானே நமக்கு கை வந்த கலை.
NOT A PORTION RAM ONE FOURTH OF THE POPULATION.A MEAGRE 2PERCENT BRAHMINS CLAIMS ALL THE POWERFUL POSTS FOR THE PAST 60 YEARS. OUT OF THE 18 PRIME MINISTERS SO FAR 13 WERE BRAHMINS IRRESPECTIVE OF THE PARTY.SO WHERE IS THE WRONG?
‘நான் சொல்லுரத கேக்கல, சாதி பேர செல்லி திட்டினான்னு complaint குடுத்துருவேன், ஜாக்கிரதை”-ன்னு மிரட்டுரவன பத்தியும் வினவு எழுதினா நல்லா இருக்கும்.
நான் ஆண்டிபட்டி (முன்னாள் அம்மா தொகுதியா தான்) அரசு பள்ளில தான் 6ல இருந்து 12 வரை படிச்சேன், அங்க 6,7 படிக்கிர பசங்களே சக மாணவர்களை இப்படி மிரட்டுரது, ரெம்ப சாதாரணம்…
60 வருட சுதந்திர இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் முன்னேறவில்லை, உயர்வடையவில்லை. மிகவும் உண்மையான வாக்கு.
I think something wrong in their way of life
60 வருட சுதந்திர இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் முன்னேறவில்லை, உயர்வடையவில்லை. மிகவும் உண்மையான வாக்கு.
I think something wrong in their way of life
அந்த சம்திங் என்னவென்று இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். அந்த சம்திங் என்னவென்று எங்களுக்கும் சொல்லுங்களேன்.
அந்த சம்திங்கில் இதுவும் ஒன்றாக இருக்குமோ? படித்துப் பார்த்து விட்டு விளக்கம் தாருங்களேன்.
——————————————————————————–
டெல்லி: தமிழகத்தின் மதுரை மாவட்டம் குரையூர் கிராமத்து அரசு பள்ளியில் ஆதிரதிராவிடர் வகுப்பு மாணவர்களை சேர்க்க ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், 1980 ஆம் ஆண்டு முதல் குரையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பு குழந்தைகளை அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்ப்பது இல்லை. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
—————————————————————————–
நான் என்ன நினைக்கிறேன்னா, இந்த ஆதிதிராவிட மக்கள் எதுக்கு இதுக்கெல்லாம் ஆசைப்படவேண்டும். பேசாமல் கக்கூஸ் க்ழுவி, மலம் அள்ளி, வீதியைப் பெருக்கி முன்னேறி வாழ்வில் மேன்மை அடைய முயற்சிக்காமல் ஏன் தேவையில்லாததை எல்லாம் அடைய ஆசைப்படுகிறார்கள்.
என்ன சரிதானே சார் ராம் சார். மன்னிக்கவும் அய்யா ராம் அய்யா