Saturday, July 13, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

-

சாதி-வெறி

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது.  அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக  இப்படிப் பல்வேறு வடிவங்களில் இந்த ஆதிக்க சாதித் திமிர் தலைவிரித்தாடி வருவதற்கு சமீப காலமாக நடந்துவரும் பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம்.

* திருவண்ணாமலை நகருக்கு அருகே அமைந்துள்ள ஆடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான குமார், அவ்வூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது இரண்டு மகன்களையும் அதே கிராமத்திலேயே செயல்பட்டுவரும் மற்றொரு அரசுப் பள்ளியான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் சேர்த்தார்.  இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர், அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து விலக்காவிடில், அவ்வூராட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தமது குழந்தைகளை ஆதிதிராவிடர் பள்ளியில்தான் சேர்த்து வரும் இந்த ஐம்பது ஆண்டு கால வழக்கத்தை குமார் மீறிவிட்டதாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரும்பாலோர் பொருமி வருகின்றனர்.  அரசு அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலிருந்து நீக்க மறுத்துவிட்டது; எனினும், ஆதிக்க சாதியினர் தமது பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்க்கப் போவதாகக் கூறி, இந்த நவீன தீண்டாமையை நடைமுறைப்படுத்த முயன்றனர்.

*  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த கல்கேரி கிராமத்தில் அமைந்துள்ள கரகம்மாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் வழிபாடு செய்வதை மறுத்து, ஆதிக்க சாதியினர் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.  தாழ்த்தப்பட்டோர் இத்தீண்டாமையை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தியதையடுத்து, அக்கோவில்களில் 2009, ஜனவரி 1 முதல் தாழ்த்தப்பட்டோரும் நுழைந்து வழிபாடு நடத்தலாம் என்ற உரிமை நிலை நிறுத்தப்பட்டது.

ஆனால், ஆதிக்க சாதியினர் மிகுந்த தந்திரத்தோடு, அக்கோவில்களில் இருந்த மூல விக்கிரகங்களைத் திருடி, தமது பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் வைத்துவிட்டு, இப்புதிய கோவில்கள் தமது சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, இக்கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்குத் தடைவிதித்து, ஆலயத் தீண்டாமையைப் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

* கடலூர் நகருக்கு அருகேயுள்ள நிறமணி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபட்டனர் என்பதற்காகவே, அக்கோவில் திருவிழாவையொட்டி நடைபெறவிருந்த தீமிதி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டான் ஆதிக்க சாதிவெறியனும் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவனுமான மணிவேல்.  இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மாரியம்மன் கோவில் இருந்தாலும், அக்கோவில் ஊருக்குள் இருப்பதால், ஆதிக்க சாதியினர் இக்கோவிலைத் தமது கோவில் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, “காலனியில் தனிக்கோவில் இருக்கும்பொழுது தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் இருக்கும் கோவிலுக்கு வழிபட வருவது ஏன்?” எனக் குதர்க்கமான கேள்வியை எழுப்பி, நவீன தீண்டாமையைப் புகுத்துகின்றனர்.

* கோவை மாவட்டம் பூவலப்பருத்தி கிராமத்தில் இன்றும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாகச்  செல்லும் தாழ்த்தப்பட்டோர், தமது செருப்புகளைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இது போல, தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டக் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தேநீரை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்குவது; வெளிப்பார்வைக்கு ஒன்றாகத் தெரிந்தாலும், அடியில் பெயிண்ட் தடவப்பட்ட கிளாஸ்களில் தேநீர் தருவது போன்ற நவீன வடிவங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்ந்து வருகிறது.

* தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள கிராமங்களில் தீண்டாமை எந்தளவிற்கு மூர்க்கமாகக் கோலோச்சி வருகிறது என்பதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சித் தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.  கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான கருப்பன், மன்றத் துணைத் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் தன்னைத் தரையில் அமர வைத்துத் தீண்டாமை பாராட்டுவதாக சமீபத்தில்கூடக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

இக்குற்றச்சாட்டை விசாரிக்க வந்த மாவட்ட ஆட்சியர், கருப்பன் அக்குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவித்த கையோடு, ஊராட்சி பணத்தில் 1.16 இலட்ச ரூபாய் அளவிற்குக் கையாடல் நடந்திருப்பதாகவும், அப்பணத்தைப் பங்குபோட்டுக் கொள்ளுவதில் கருப்பனுக்கும் துணைத் தலைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை வந்ததையடுத்துதான் கருப்பன் இக்குற்றச்சாட்டைக் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

தீண்டாமைக் குற்றச்சாட்டைத் தான் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதை மறுத்துள்ள கருப்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவரும் மன்ற உறுப்பினர்களும் தன்னை நிர்பந்தப்படுத்திக் காசோலைகளில் கையெழுத்து வாங்கி வருவதால், பணக் கையாடல் விவகாரத்தில் தனக்குச் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கிறார்.  “புகார் அளித்த கருப்பன் மீதே பொருளாதாரக் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதைப் பார்த்தால், சாதிப் பாகுபாட்டை மறைப்பதற்காகவே இந்த விசாரணை நாடகம் அரங்கேறியிருக்கலாம்” என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது, இந்தியா டுடே வார இதழ்.

சாதி-வெறி
பொள்ளாச்சி நகரையடுத்துள்ள பூவலப்பருத்தி கிரிஆமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்ற தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் சாட்சியம்

தீண்டாமையின் காரணமாகவும், சுயசாதிப் பெருமை, பற்றின் காரணமாகவும் கலப்பு மணம் புரிந்து கொள்ளத் துணியும் தம்பதியினரைக் கொன்று போடுவது சாதி சமூக அமைப்பில் புதிய விசயமல்ல.  இப்படிபட்ட கௌரவக் கொலைகள் வட மாநிலங்களில்தான் நடைபெறும்; சுயமரியாதை போராட்டங்கள் நடந்த தமிழ்நாட்டில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேறாது என்ற பொதுவான நம்பிக்கையை விருத்தாசலம் நகருக்கே அருகே 2003இல் நடந்த கண்ணகி  முருகேசன் தம்பதியினரின் படுகொலை கலைத்துப் போட்டது.  தமிழகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது கண்ணகி  முருகேசன் தம்பதியினரோடு தொடங்கவுமில்லை; அவர்களோடு முடிந்துவிடவுமில்லை.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம்  கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி  இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள்.  கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?

மிகவும் நேரடியாக, வெளிப்படையாக நடத்தப்படும் கௌரவக் கொலைகள் மட்டுமின்றி, சாதி மற்றும் குடும்ப கௌரவத்திற்காகத் தூண்டப்படும் கௌரவத் தற்கொலைகள், குறிப்பாக இளம் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும் தமிழகத்தில் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.  ஜனவரி 2008 தொடங்கி ஜூன் 2010 முடிய தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 1,971.  அகால மரணமடைந்த இப்பெண்களுள் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.  2010-இல் தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 629 பெண்களுள், 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 236.  இவ்வழக்குகள் குறித்து முறையாகப் புலன் விசாரணை நடத்தினால், அவற்றுள் பல கௌரவத் தற்கொலைகளாகவும் கௌரவக் கொலைகளாகவும் இருக்கும் உண்மை அம்பலத்துக்கு வரக்கூடும்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை வக்கிர எண்ணமும், கலப்பு மணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அகமண சாதிப் பண்பாடும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களும் இக்கொலைகளை நியாயமானதாகவே பார்க்கின்றனர். அதனால்தான், கிராமப்புறங்களில் கௌரவக் கொலைகள் பலரின் கண் முன்னாலேயே அல்லது ஊர்ப் பஞ்சாயத்தின் கட்டளைப்படியே நடத்தப்படுகின்றன.

பொறியியல் கல்லூரி மாணவியான கங்கவள்ளி, தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனது காதலனை மணமுடிப்பதில் உறுதியாக இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் தனது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுப் பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார்.  இச்சம்பவம் படித்த, நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மத்தியிலும் கலப்பு மணத்திற்கு எதிரான எண்ணம் ஊறிப் போயிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

சாதி-வெறிசாதி மறுப்பு கலப்பு மணத்தை எதிர்ப்பதில் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் நடத்தும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் தொடங்கி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அவர்களின் ஒவ்வொரு சமூக உரிமையையும் எதிர்ப்பதிலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் முன்னணியில் நிற்பதை கண்டதேவி கோவில் தேரோட்டம் உள்ளிட்ட பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  நகர்ப்புறங்களில், அரசுதனியார் அலுவலகங்களில், நவீனமான ஐ.டி.துறையில் ஆதிக்க சாதிவெறி நுணுக்கமான வடிவங்களில் வெளிப்படுகிறது.

இச்சாதிவெறியைக் கொம்பு சீவிவிடும் வேலையில் ஆதிக்க சாதி சங்கங்கள் தற்பொழுது மும்மரமாக இறங்கியுள்ளன.  பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு, சமீபத்தில் நடந்த வன்னியர் சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” எனச் சாதித் திமிரெடுத்துப் பேசியிருக்கிறார்.  கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சமீபத்தில் கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியிருக்கிறது.  கலப்புத் திருமணத்தை எதிர்ப்பதற்குத் தமக்கு உரிமை உள்ளது எனப் பிரகடனம் செய்கிறது, தமிழ்நாடு பிராமணர் சங்கம்.

‘‘இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க” என ஆதிக்க சாதியினர் பேசிவருவது பகல் வேடம் என்பதை இந்த நிகழ்வுகள் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.  காலனிய ஆட்சிக் காலம் தொடங்கி தற்பொழுது வரை இந்திய சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற மாற்றங்கள்,  இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலும் ஒரு சிலர் கல்விரீதியிலும் பொருளாதாரரீதியிலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.  குறிப்பாக, தனியார்மயம்  தாராளமயத்தால் விவசாயம் சீரழிந்து போன பின்பு, வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கிச் செல்லுமாறு தாழ்த்தப்பட்டோர் விசிறியடிக்கப்பட்டிருப்பது, இனியும் பொருளாதாரத்திற்காக ஆதிக்க சாதியினரைத் தாம் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற நிலையை தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இம்மாற்றங்கள் தாழ்த்தப்பட்டோர் தமது சொந்த உழைப்பில் சம்பாதித்து நல்ல உடை உடுத்தவும், ஊருக்குள்ளேயே செருப்பணிந்து செல்லவும், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லவும், ஊர்க் கோவிலில் நுழைந்து வழிபாடவும், சம மரியாதையோடு நடத்தப்படவும், தன் சொந்த விருப்பத்தின் பேரில் சாதி மாறி காதலிக்கவும், கலப்பு மணம் புரிந்துகொள்ளவும் அவர்களைப் போராட வைத்திருக்கிறது.

நகரமயமாதல், தொழில்மயமாதல், தனியார்மயம்தாராளமயம் உள்ளிட்ட இதே ‘வளர்ச்சி’ப் போக்கு அனைத்து ஆதிக்க சாதிகள் மத்தியிலும், குறிப்பாகக் கிராமப்புற ஆதிக்க சாதிகளான ‘பிற்படுத்தப்பட்டோர்’ மத்தியிலும் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, அவர்களின் நியாயமான அரசியல் சமூக உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் ஜனநாயகப் பண்பாட்டினை அவர்களிடம் ஏற்படுத்தவில்லை.  மாறாக, இப்பொருளாதார மாற்றங்களினால் பலன் அடைந்துள்ள ஆதிக்க சாதியினைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள், கந்துவட்டி பேர்வழிகள், தனியார் பள்ளி  கல்லூரி முதலாளிகள் உள்ளிட்ட புதுப் பணக்கார கும்பல் ஓட்டுக்கட்சிகளில் உள்ளூர் தலைமையாகவோ,  சாதிக் கட்சி/ சங்கத் தலைவர்களாகவோ உருவெடுக்கின்றனர்.

சாதியைத் தள்ளிவைத்துவிட்டு ஓட்டுப் பொறுக்க முடியாது என்றவாறு தேர்தல் அரசியல் சீரழிந்துவிட்ட நிலையில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, சாதிக் கட்சிகளும், சாதி சங்கங்களும் தம் பக்கம் அணி திரட்டிக் கொள்வதும்; உழைக்கும் மக்களும் தமது சாதிக் கட்சிகள், சங்கங்களின் பின்னே கொடி பிடித்து ஓடுவதும் நடந்தேறி, இந்தக் கூட்டணி சுயசாதிப் பற்று, பெருமை, தீண்டாமை வெறிகொண்ட சாதி ஆதிக்கம், சாதிக் கலவரம் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புதிய தளத்திற்கு மூர்க்கமாக எடுத்துச் செல்லும் அபாயகரமான போக்கைத்தான் இப்பொழுது புரட்சிகர, ஜனநாயக சக்திகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

 1. காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்..அந்த செருப்பைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த பச்சைக்குழந்தைகளை மிரட்டி வைத்திருப்பது கொடுமை….

 2. ஏழைகளை ஏளனமாக பார்ப்பவர்களை கூட ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது அனால் சாதி அபிமானம் தான் எப்படி வருகிறதென்று புரியவே இல்லை. சாதிய வச்சு என்ன மயிரடா புடிங்கிநீங்க ? ஆட்டு மந்தை கூட்டம் மாதிரி சாதி கட்சி தலைவன் பொச்சுக்கு பின்னாடி கூடறீங்க உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மூளையே இல்லையாடா? என்ன பொறுத்த வரை , சாதி அபிமானம் பார்ப்பானை விட அதிகமா இருப்பது தேவன் கவுண்டன் வன்னியன் நாயக்கன் , இவனுகளுக்கு தான். இவனுங்கள எல்லாம் கொண்டு போய் முள்ளி வாய்க்கால்ல போட்டுருக்கணும்.

  • தோழர், முள்ளி வாய்க்காலில்தான் சாதிக்கொடுமை அதிகமாக உள்ளதாக கேளிவிப்பட்டேன், இவங்கள் அங்கே கற்றுக்கொண்டு வந்துவிடுவார்களே, சுடுகாட்டில்கூட சாதிபார்க்கும் கசடுகள்தானே

   • அதான் நானும் சொல்றேன் . சோத்துக்கு இல்லாம நக்கீட்டு சாகும் நிலைமையில் இருந்தாலும் சாதி பெருமையா பீத்திக்கிட்டு தான் இருப்பானுங்க, சமுதாயத்த பத்தி ஒரு அக்கறையும் காட்ட மாட்டானுங்க. இந்த புடிங்கிங்க நல்லவனா காட்டிக்க போடும் வேஷம் தான் ஆன்மிகம், மொழிப்பற்று, தேசியம் எல்லா மயிரும்.

 3. குழந்தைகள் கையில் தங்கள் செருப்புகளை தூக்கிகொண்டு செல்வதை பார்க்கும் போது,அதை தினம் பார்த்து மகிழ்பவர் உடலில் பெட்ரோல் ஊத்தி கொளுத்த வேண்டும் போல் இருக்கிறது,என்ன கொடுமையடா இது.இதை பார்த்தும் ஒன்றும் ஆகபோவதில்லை இந்தியாவில்.சென்ற வாரம் சத்யமேவ ஜெயதேவில் ஆமிர்கான் நாடெங்கும் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை அம்பலப்படுத்தினார் பலகோடி பேர் பார்த்தார்கள் தான் என்ன எதிர்வினை நடந்தது? நம் நாட்டில் தலித் பிரச்னைக்கு அவர்கள் தலைவர்களே தான் போராடவேண்டும் என்று நினைக்கும் முட்டாள் மக்கள் இருக்கும் வரை ஒன்றும் மாறாது.அவர்கள் வன்முறையில் இறங்கினால் மட்டும் தலைப்பு செய்தியில் வரும் ஆனால் அவர்கள் மீதான வன்முறையை யாரும் செய்தியாக்க விரும்புவதில்லை.தமிழகத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை மட்டுமே மிக நேர்மையாக இவ்வாறான நிகழ்வகளை கவனப்படுத்துகிறது.ஏனைய ஊடகங்களும் அவர்களை பின்பற்றினால் மாற்றம் நிகழக்கூடும்.

 4. Bigger than CERN … india is building a research centre which deals neutrini / proton particles / nuclear energy… India investing a lot of money in this project.when people in india suffer a lot but govt spending our tax money for stupid researches.
  They chosen Theni in madurai for this research, which may even destroy whole tamilnadu if anything goes wrong. ” http://tamil.oneindia.in/editor-speaks/2012/07/sail-supply-50-000-tonne-steel-cern-157573.html
  why they always choose Tamilnadu for nuclears…becoz this Aryans want to kill all dravidians like how they killed in srilanka.
  Even the french & swizz Govt operating this research in the borders thousands of kmss away from residential. but bloddy aryan indian govt doing this research in Madurai. their motto is to find something new(they say GOD) if not destry thamizhnadu.
  http://tamil.oneindia.in/editor-speaks/2012/07/sail-supply-50-000-tonne-steel-cern-157573.html

 5. நாங்கள் வாழ்வது எத்தனையாம் நூற்றாண்டில். இதைவிட முட்டாள்தனம் வேறென்ன இருக்கமுடியும்.

  • இவரு பெரிய மன்மத ராசா , இவருக்கு பொண்ணு குடுக்குறத பத்தி தான் வினவு கட்டுரை போட்டுருக்கு பாருங்க! போய் உருப்படுற வழிய பாரு தம்பி போ!

  • நீ என்ன படிச்சிருப்ப, எங்க படிச்சிருப்ப, எவ்வளோ மார்க் எடுத்திருப்ப, பாக்குறதுக்கு எப்படி இருப்ப என்பதெல்லாம் உன் பதிலிலேயே தெரியுது.நீ யாரை கல்யாணம் பண்ணினாலும் எவனும் குறுக்க வரமாட்டான்.

   • எந்த புள்ளையோ பாவம் இந்த சொம்பானிய கட்டிட்டு நாசமா போகப்போவுது. பகவானே!!!!

  • இதை நீ உன் ஒரிஜினல் அடையாளத்தோடு சொல்லி இருக்கணும் அப்ப நீ ஆண்மகன் அம்பானி பெயரில் பதுங்கி பின்னூட்டமிடும் நீ ஒரு

 6. பெரியார் சொன்ன மாதிரி ஒரு பத்து வருஷத்துக்கு போலிஸ் மற்றும் நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமே பணியில் சேர்க்க வேண்டும் அவர்கள் பணியில் அரசியல்வாதி நாய்கள் தலையிடவும் தடை செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 7. பேசாம பெரியார் சொன்னது மாதிரி இஸ்லாத்துல ஐக்கியமாயிடுங்கப்பா! அப்புறம் செருப்பை கையில தூக்கி போகச் சொல்ல எவன் நாக்காவது நீளுதான்னு பாப்போம். கசப்பாக இருந்தாலும் வேற வழி இல்லே!

  என்ன வினவு நான் சொல்றது சரிதானே!

  • ‘வீட்டுல இருக்கிற மலத்தை வெளியில போடுங்கன்னா அதுக்கு பதில் இன்னொரு மலத்தை கொண்டு வந்த்உ வைப்பீங்களா?’னு கூடத்தான் பெரியார் சொன்னார்…

 8. அம்பேத்கர் முன்வைத்த அகமணமுறையைக் கைவிடுதல், படித்து நல்ல வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைதல், தனிக்குடியிருப்புகள், இஸ்லாம் அல்லது கிருத்தவம் அல்லது பௌத்தத்துக்கோ மதம் மாறுதல் உள்ளிட்ட எந்த மாற்றமும் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை. தீண்டாமை புதிய புதிய வடிவங்களை எடுத்து வருகிறது என்பதே உண்மை.

  தீண்டாமை ஒரு பாவம் என்கிற உபதேசமும் எடுபடவில்லை. உபதேசங்களால் தீண்டாமையை ஒழித்துவிடவும் முடியவில்லை.

  தீண்டாமை ஒழிப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என பல்வேறு சட்டங்கள் வந்த போதும் தீண்டாமை ஓடி ஒளியவில்லை.

  தலித் அமைப்புகளின் அதிரடியான போராட்டங்களால் ஆதிக்கச் சாதியினர் அடக்கி வாசிக்கிறார்களேயொழிய அவர்கள் தீண்டாமையை கைவிடவில்லை. தலித் அமைப்புகள் சாதிய அடையாளத்தோடு தனித்துப் போராடுவதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்கிற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

  ‘சாதி ஒழிப்பே சமூக விடுதலை’ என்கிற புதிய முழக்கத்தை திருமா இப்போது முன்வைத்துள்ளார். அதற்கான திட்டம் என்ன என்பது இதுவரை முன்வைக்கப்படவில்லை.

  மார்ச்சிஸ்டு கட்சியினர் ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ மூலம் தீண்டாமையை ‘ஒழிக்க’ முயன்று வருகின்றனர்.

  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் முயற்சித்தாலும் மேற்கண்ட முறைகளால் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது.

  சாதி சமூகத்தின் அடித்தளத்தில் (அரை நில உடமைச் சமுதாயம்) நிலவுகிறது. சாதியின் உயிர் இந்து மதத்தில் இருக்கிறது. சாதியின் தாக்கம் இந்தியாவைப் பொருத்தவரை எல்லா மதங்களிலும் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எந்த மத்திற்குச் சென்றாலும் ஒரு தலித் தலித்தாகத்தான் பார்க்கப்படுகிறார்.

  அரை நில உடைமைச் சமூகத்தைத் தகர்க்காமல் – அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒருக்காலும் ஒழிக்கமுடியாது. சாதி இருக்கும் வரை தீண்டாமையும் நீடிக்கும்.

  இது எப்ப நடக்குறது? அதுவரை இந்தக் கொடுமைகளை நாங்கள் அனுபவிப்பதா எனக் கேட்கலாம்.

  சாதி தீண்டாமை ஒழிப்பு தனியாக நடத்தப்படக்கூடிய ஒன்றாக சுருக்கிவிடக்கூடாது. இதைத்தான் தலித் அமைப்புகள் செய்து வருகின்றன. மாறாக சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கான அதாவது புரட்சிக்கான போராட்டத்தினூடாக அக்கம் பக்கமாகவே செய்யப்பட வேண்டியவை.

  இதைத்தான் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடும் அமைப்புகள் செய்து வருகின்றன. சாதியற்றவர்கள் மதமற்றவர்கள் என்கிற புதியதொரு மக்கள் சமூகத்தை இப்பொழுதிருந்தே உருவாக்கி வருகின்றனர். இப்படி வேறு யாரும் உருவாக்கவில்லை. இப்படி உருவாகி வரும் சமூகத்தில் சாதிப்பாகுபாடோ அல்லது மதப்பாகுபாடோ பார்ப்பதில்லை. இப்புதிய சமூகக்கூட்டத்தை நோக்கி தலித்துகளும் பிற சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும் திரளும் போது – எஞ்சியுள்ள மக்கள் கூட்டமும் புரட்சிப் போராட்டதில் சங்கமிக்கும் போது அரை நில உடமைச் சமூகமும் அதோடு சேர்த்து சாதி மதக் கழிவுகளும் இம்மணில் புதைக்கப்படும்.

  இதற்குக் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். தியாகம் செய்யத்தயங்கினால் மாற்றம் எதையும் கொண்டு வரமுடியாது.

  • சாதி கொடுமைக்கு எதிர தான் நாம் போராட முடியும் , சாதி நம்பிக்கையை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது, இது கசப்பான உண்மை. என்னோட அனுபவம் அதுதான் , தனி மனிதன் ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டும் தான் சாதி ஒழிப்பு என்பது சாத்தியம் , ஆனா அது நடக்குமா ?

   • சாதி கொடுமைக்கு எதிராக மட்டுமல்ல சாதி நம்பிக்கையையும் சேர்த்தே ஒழிப்பதற்கான அனுபவ ரீதியான வழிமுறையைத்தான் நான் எனது பின்னூட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

    தனிநபர் நினைப்பதற்கே ஒரு போராட்டக்களம் தேவை. அந்தக்களத்தைத்தான் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடும் அமைப்புகள் செய்து வருகின்றன.

    ”சாதியற்றவர்கள் மதமற்றவர்கள் என்கிற புதியதொரு மக்கள் சமூகத்தை இப்பொழுதிருந்தே உருவாக்கி வருகின்றனர்”

    இத்தகைய அனுபவத்தைப் பெறாதவரை அது நடக்குமா என்கிற ஐயம்தான் எழும்.

 9. தலித் அமைப்புகள் சாதிய அடையாளத்தோடு தனித்துப் போராடுவதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்….இல்லன்னா மட்டும் உங்களோடு சேத்துப்பீங்களா பிரதர்?தலித்கள் தங்களை வளர்த்துக்கொண்டு பின்னர் ஆதிக்கம் செலுத்துவதால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.தலித்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் இவ்வாறு தான் ஒழிந்திருக்கிறது சாதி.

  • டாக்டர் அம்பேத்கர் கூறிய ஒருங்கிணை (organize) என்பதை நினைவில் கொண்டு தலித்துகள் தங்களிடையே உள்ள கட்சி, அமைப்பு, உட்பிரிவு பேதங்களைத் தாண்டி ஒன்று பட்டு தீண்டாமையை எதிர்த்துப் போராடும்போது எல்லாக் கட்சிகளும் வழிக்கு வரும்..

  • “இல்லன்னா மட்டும் உங்களோடு சேத்துப்பீங்களா பிரதர்?”

   சேர்ந்திருப்பதால்தான் எழுதுகிறேன். நான் எழுதுவது கற்பனையானதோ அல்லது எத்தேசமானதோ அல்ல. நடைமுறையில் சோதித்தறியப்பட்டவை.

   “தலித்கள் தங்களை வளர்த்துக்கொண்டு பின்னர் ஆதிக்கம் செலுத்துவதால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.தலித்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் இவ்வாறு தான் ஒழிந்திருக்கிறது சாதி.”

   தலித்துகள் ஆதிக்கம் செலுத்துவதால் சாதிய அடக்குமுறை குறைந்திருக்கலாம். ஆனால் சாதி ஒழிந்திருக்கிறது என்று நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?. இத்தகைய இடங்களில் வசிக்கும் அனைவரும் தங்கள் சாதிகளைத் துறந்து சாதியற்றவர்கள் என்கிற புதியதொரு மக்கள் கூட்டமாக மாறிவிட்டார்களா என்ன? சாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டுதான் எழுதுகிறீர்களா எனத் தெரியவில்லை.

   அடுத்து “பிரதர்” என விளித்துள்ளீர்களே! இதன் உள்ளார்ந்த பொருள் என்னவோ?

 10. இந்தியா முழுதும், ஏன் தெற்காசியா முழுதும் இப்படியான கொடுமைகள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன … !!! சாதிய வெறி குறைந்த பகுதிகளாக ஸ்ரீலங்காவின் சிங்களப் பகுதிகளும், பூட்டானும் இருக்கின்றன …. !!! அங்கும் இனவெறி இருக்கத் தான் செய்கின்றன !!!

  சாதியம் ஒழிய வேண்டும் எனில் – தீவிரமான அரசியல் சமூக மாற்றங்கள் உடனடியாக நிழந்தே ஆக வேண்டும் .. மதம் மாறி விட்டால் சாதியம் ஒழியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை .. வேண்டும் எனில் மதங்களை தூக்கி எறியுங்கள், மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள் !!!

 11. உஙக மானங்கெட்ட யிந்தியநாட்டில் மட்டும் இந்த ஜாதி ப்ரெஷினை இருக்கு… யெந்த ஒரு வலர்ந்தநாட்டிலும் இப்படி ஒன்ரு இல்லவெ இல்லை… other country split people based on race and not on religion …or caste…80% of the countries doesn’t have a concept Caste.

 12. Bigger than CERN … india is building a research centre which deals neutrini / proton particles / nuclear energy… India investing a lot of money in this project.when people in india suffer a lot but govt spending our tax money for stupid researches.
  They chosen Theni in madurai for this research, which may even destroy whole tamilnadu if anything goes wrong. ” http://tamil.oneindia.in/editor-speaks/2012/07/sail-supply-50-000-tonne-steel-cern-157573.html
  why they always choose Tamilnadu for nuclears…becoz this Aryans want to kill all dravidians like how they killed in srilanka.
  Even the french & swizz Govt operating this research in the borders thousands of kmss away from residential. but bloddy aryan indian govt doing this research in Madurai. their motto is to find something new(they say GOD) if not destry thamizhnadu.
  http://tamil.oneindia.in/editor-speaks/2012/07/sail-supply-50-000-tonne-steel-cern-157573.html

 13. Dear frnds…
  i kindly request tou to tell original name of the affected community..
  because totaly 75 communities(EXCEPT dEVENTIRA KULA VELLALARS) are called DALITH/AADIDIRAVIDAN/TALTHAPPATTOR IN TAMIL NADU,WHICH ONE IS FACE MORE THEENDAMAI FOR ABOVE 75 COMMUNITY?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க