privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

-

ரன்வீர்-சேனா-பிரம்மேஷ்வர்-சிங்
பிரம்மேஷ்வர் சிங்

இந்த ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் இது முக்கியமானது. ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.  அந்த அடையாளம் தெரியாத தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

இந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான ஆதிக்க சாதிகள்தான் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை –  ஆதிக்கத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை கொடுரமாக அடக்கி கொடுமைப்படுத்துகின்றனர். கால் வயிற்றுக் கஞ்சிக்காக எல்லா வகை உரிமைகளையும் இழந்து நடைப் பிணங்களாக இம்மக்கள் வாழும் துயரம் அளவிடற்கரியது.

இந்த சூழலில்தான் 1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க வீரத்துடன் களமிறங்கியது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் ( இந்தக் குழு பிற்பாடு பாராளுமன்றவாதத்தில் பங்கேற்று சீரழிந்து போனது) போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி வன்முறையை ஏவிவிடும் நிலப்பிரபுக்களுக்கு தக்க பாடத்தை புகட்டத் துவங்கினர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் வன்மத்துடன் பொறுமிக் கொண்டிருந்தனர்.

90களில் ஆதிக்க சாதி பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த குண்டர் படைகள் அவற்றில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது.  இப்படித்தான் பூமிகார் உள்ளிட்ட ஆதிக்கசாதி பண்ணையார்களின் ரவுடிப்படையாக ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த குண்டர் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த பதனி டோலா படுகொலையில் 21 தலித் மக்களை கொன்றனர். அதில் 11 பெண்களும், ஆறு குழந்தைகளும் அடக்கம். பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம்? குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்களாம், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்களாம் என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே அறிவித்தது.

தமிழகத்தின் கீழ்வெண்மணி படுகொலையை ஒத்த இந்த பதனி டோலா படுகொலை குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டாலும் பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் அவர்களை விடுவித்தது. படுகொலையை நேரடியாக பார்த்த சாட்சியங்களை கூட ஆதிக்க சாதி வெறிக்கு அடிபணிந்து நடக்கும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

1997 டிசம்பர் லக்ஷமன்பூர் படுகொலையில் 61 தலித் மக்கள் ரன்வீர் சேனாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 16 குழந்தைகளும், 27 பெண்களும், 18 ஆண்களும் அடக்கம். இந்த படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரம்மேஷவர் சிங் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் உண்டு. இருப்பினும் பலவற்றில் சாட்சியங்கள் இல்லை என்று இந்த கொலைகார நாய் விடுவிக்கப்பட்டிருக்கிறான். மேற்கண்ட வழக்கில் பிணையிலும் வெளிவந்திருக்கிறான்.

இந்தப் படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா குண்டர் தலைவர்களை நக்சலைட்டுகள் கொன்ற போதும், ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களை தாக்கிய போதும் ரன்வீர் சேனா தலைவன், லஷ்மன் பூர் படுகொலையை விட கொடூரமான படுகொலை நடக்கும் என்று பகிரங்கமாகவே மிரட்டியிருக்கிறான். பல ஊடகங்களிலும் அந்த செய்தி வந்துள்ளது. எனினும் இந்த நாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை

பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோவாக உலா வந்த லாலுவும் சரி, தற்போது ‘நேர்மையான’ ஆட்சியை நடத்தும் நிதீஷ் குமாரும் சரி இந்த் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான் ஆதரவாக இருந்திருக்கின்றனர். ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

இது போக ஓட்டுப்பொறுக்கும் தலித் கட்சிகளும் கூட ஆதிக்கசாதி குண்டர்களை ஆதரிக்கும் இத்தகைய கட்சிகளோடு கூடிக் குலாவியபடிதான் தலித் மக்களுக்கு துரோகமிழைத்தன. காங்கிரசு, பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இவர்கள் நேரடியாகவே ரன்வீர் சேனாவின் பாதுகாவலர்களாக இருந்தனர். தற்போது கூட கொலைகார நாய் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டதற்கு பாரதிய ஜனதா கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அதன் மாநில தலைவர் சி.பிதாகூர் இந்த கொலைகார நாயை மாபெரும் விவசாயிகள் தலைவன் என்று போற்றியதோடு இறுதி ஊர்வலத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பார்ப்பன இந்து மதம் பஞ்சமர்கள் என்று சொல்லி தலித் மக்களை ஒடுக்கியது போல பாரதீய ஜனதா அதே ஒடுக்குமுறையை ரன்வீர் சேனாவைக் கொண்டு நடத்துகிறது.

எல்லா ஒட்டுக் கட்சி தலைவர்களும் ரன்வீர் சேனா தலைவன் கொன்ற வழக்கை சி.பி.ஐ விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றன. இவை தவிர அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம் அனைத்தும் ஆதிக்க சாதிவெறியின் செல்வாக்கில்தான் இருக்கின்றன என்பதால் இந்த கொலைகார படை இதுவரை எந்த அரசு அமைப்பாலும் தண்டிக்கப்படவில்லை. ஒரு கொலைகாரனுக்கு கூட தூக்கு வாங்கித் தர முடியவில்லை.

ஆக ரன்வீர் சேனாவை அரசுகள் தடை செய்திருப்பினும் சமூக, சிவில், கட்சி அமைப்புகளால் அது அரவணைக்கப்பட்டதோடு எப்போதும் போலவே இயங்கி வந்தது. ஒவ்வொரு கொலையையும் தான்தான் செய்தோம் என பகிரங்கமாகவே ரன்வீர் சேனா அறிவித்து வந்தது. படுகொலை நடந்த கிராமங்களின் கிணறுகளில் இரத்தத்தால் ரன்வீர் சேனாவின் கொலைச்செய்தியை பொறித்து விட்டே சென்றிருக்கின்றனர். இந்த கொலைகார படை அஞ்சியது நக்சலைட் இயக்கத்தினை பார்த்து மட்டும்தான்.

ஆக இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் இன்னல்களை இங்கிருக்கும் அரசு – கட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதோடு, அவற்றை செய்யும் ஆதிக்க சாதிவெறிக்கு துணை போனதுதான் வரலாறும், யதார்த்தமும். இரத்தக் கறை படிந்த இந்த வரலாற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது நக்சல் இயக்கம்தான்.

ஆகவே அடையாளம் தெரியாத அந்த ஆறு தோழர்கள் இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்றதை நாம் மனமார பாராட்டுகிறோம். தலித் மக்களுக்கு தலித் அமைப்புகள் உள்ளிட்டு எந்த கட்சிகளும் பிரதிநிதிகள் இல்லை. நக்சல் இயக்கம் மட்டும்தான் அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை பீகாரின் இரத்தக்கறை படிந்த வரலாறு காட்டுகிறது. பதனி டோலோ படுகொலை வழக்கின் குற்றவாளிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட காலத்தில், ரன்வீர் சேனாவின் எல்லா படுகொலைகளுக்கும் தலைமை தாங்கிய பிரம்மேஷ்வர் சிங் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்பட்ட இதே காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பெருமூச்சாக இந்த கொலை நடந்திருக்கிறது.

தலைவனுக்கு நேர்ந்த கதி அனைத்து குண்டர்களுக்கும் நேரும் வரை நக்சல் இயக்கமும் ஓயப் போவதில்லை.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. மருமகா உடைத்தா மண்சட்டியும் பொன்சட்டி

  தலித் செஞ்ச நியாயம்,தர்மம் அப்படியா இந்த கீழ்தர புத்தி உங்கள மாதிரி மலம் அள்ளுபவர்களுக்கு மட்டும்தான் வரும். கடைசி வரைக்கும் பீ அள்ளிகிட்டே சாவுங்கடா…

  • ////மருமகா உடைத்தா மண்சட்டியும் பொன்சட்டி////

   இப்படி வெட்டி நாயம் பேசுற புத்தி எல்லாம் ஆதிக்க சாதி பீ திங்கிறவனுங்களுக்குத்தான்டா வரும் ..

   இப்படியே கடசி வரைக்கும் ஆதிக்க சாதி பீய திண்ணே சாவுங்கடா …

  • உன்னைப்போன்றவர்களின் இத்தகைய “புலம்பல்கள்” தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்…..

 2. இந்தியா ஒரு கேடுகெட்ட போலி ஜனநாயக நாடு. இங்குள்ள காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற எல்லாமே போலியாக இருக்கிறது, இதையெல்லாம் முட்டாள் கூட நம்பமாட்டான். தப்புசெய்தவர்களை தண்டிக்க நக்சல்பாரி வழியே சிறந்தது…

 3. Ranvir Sena has the right to resist people forcibly taking away their lands.

  Killing Brahmeshwar Singh ll make it even more difficult for the Maoist as now they ll face revenge from the Bhumihars.

  This is glory is going to be very short lived.

  • The dalit workers fought for their rights. Most of the government owned land that was supposed to be distributed to the landless peasants of these areas, were forcibly occupied by the landlords. This is because the dalits were eventually refusing to work in these upper caste land owners’ farms, owing to the atrocities.

   What justice has this system given to the 100+ dalits, including women and children killed by the Ranvir Sena?

   During the massacre, there was mother who threw her baby out of the window of the burning house locked from outside, in an attempt to save the child. The Ranvir Sena thugs threw the baby back in the fire… They were cruel beyong imagination…

   • They will be cruel,why didn’t land distribution happen there like everywhere else?

    If the workers thought they ll overhaul the landlords completely by doing armed struggle,they got hit back.

    I praise the Bhumihars who are rich and powerful and influential for hitting back.

    If the workers tried the same thing in TN also using naxalite armed struggle,they ll get the same response.

    It was not government owned land,it was all Bhumihar land for centuries. Thats why they protect it like this.

    Maoists are equally cruel and brutal but there is no media to give them sympathy .If you are ready to wage war,you have to face the consequences.

    Else you should shut up and try to make peace.

    This is not Vijaykanth cinema.

  • உங்க லாஜிக்கும் அப்படித்தான இருக்கு.. தலித்துகளுக்கு வந்தா தக்காளிச் சட்னி, ரண்வீர் சேனாவுக்கு வந்தா ரத்தம்..?!!

   உங்க நிலத்தைப் பிடுங்குனாப்பில ஏன் பதறுறீங்க.?! கவலப் படாதீங்க.. நம்மூர் தலித்துகள் அவங்களோட பஞ்சமி நிலத்தையே பறிகொடுத்துட்டு நிக்கறவங்க.. பாவம்.

   • Thala,

    Naan endha sideum edukkave illaye. Oru velai indha alavukku sandai podama irunthiruntha unneram konjam nyayam kedaichirukkum.

    Inaikki Tamizhnaatula konja nanjam dalit makkal padichu,velaikki poi,kasu sambadichu nelathai vaangura alavukku power petrirukkanga.

    Ithukku bathil aruvala thookittu ninniruntha thalai poirukkum.

 4. இங்கே பதிவு எழுதியவரு தைரியமா சந்தோசமா மகிழ்ச்சியில் கூத்தாடலாம்.அங்கே எதிர்வினையை நேரடியாக சந்திக்கப்போவது அப்பாவி எளிய மக்கள்தானே…அபத்தமான கட்டுரை…விபரங்களைத்தவிர

  • /அங்கே எதிர்வினையை சந்திக்கப்போவது அப்பாவி எளிய மக்கள்தானே/ இந்த வார்தையை சொல்லுவதர்கு உங்கலுக்கு தகுதியே இல்ல…… ஏர்க்கனவே அங்க எல்லோரும் சந்தோசமா இருந்த மாதிரியும் இப்ப தான் குடி கெட்டு போன மாதிரில இருக்கு உங்க வார்த்தை…..

  • ஏதோ இந்த வெறி நாய் கொல்லப்படவில்லை எனில் பீகாரில் தலித் மக்களெல்லாம் எந்தக் கொடுமையையும் அனுபவிக்காமல் சந்தோசமாக இருப்பார்கள் என்பது போல் கூறுகிறீர்களே? அவர்கள் நித்தம் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கொலை நிச்சயம் தலித் மக்கள் சாதி வெறியை எதிர்த்துப் போராடுவதற்குத் தூண்டுதலாக இருக்கும்.

  • அடைச்சா வாயை பொத்திக்கிட்டூ வாங்கிட்டு இருடானு வேற குரல்ல சொல்றாரு. சரி என்னதான் பண்ணனும்னு சொல்லுங்க நொந்தியன் அவர்களே?

 5. வெண்மணியில் மாபெரும் படுகொலையை நிகழ்த்திய கோபாலகிருஷ்ண நாயுடுவை அவன் தள்ளாடும் வயதில் அதாவது எழுபத்தாறு வயதில் கொன்றனர் தமிழ் நாட்டு நக்சலைட்டுகள். ரன்வீர் சேனா தலைவரும் அப்படிதான் அவன் ஆட்டம் போட்ட ஆண்டுகளில் பல நூறு தலித்களை கூட்ட கூட்டமாய் கொன்ற படங்களை பார்த்து வெறுப்புடன் கையை பிசைந்திருக்கிறேன் இப்ப அவனை அறுபத்துஒன்பதாவது வயதில் கொன்று விட்டு பெருமை வேறு அதற்கு பாராட்டு வேறு.ஒங்க பின்னாடி எல்லாம் தலித் மக்கள் எப்படி வருகிறார்கள் என்றே புரியவில்லை.

  • ஐயா அகிடி, என்னமோ இத்தனை நாளா உங்களைப்போன்று அவர்கள் கையை பிசைந்து கொண்டு உட்காந்திருந்ததைப்போல எழுதுகிறீரே. இந்த கொலைகாரப்படைக்கு எதிரான மக்கள் படை கட்டி போர் நடத்திகிட்டிருந்தாங்கையா போர். என்னற்ற தாக்குதல்களை நடத்தியும், முறியடித்தும் இருக்கிறார்கள். பெருசு இத்தனை நாளாக மாட்டலை, மாட்டினாரு, போட்டாங்க – end of story

   • அகிடி சித்தர், ரொம்ப நாளாவே பழிக்கு பழி வாங்க கொதிச்ச்ட்டிருந்தார், பஸ்ஸுக்கு காசில்லாததால ஜஸ்ட் மிஸ்ஸாயிருச்சு, இல்லேன்னா அன்னிக்கே ஆணீஈஈஈஈய புடிங்கிருப்பாரு…..

 6. ஹ்ம்ம்…. ராஜிவ் கொலைவழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தூக்கில் போடக்கூடாது என்று சொம்பு தூக்கிய இவர்கள் தற்பொழுது கொலையை கொண்டாடுகிறார்கள்…

  காட்டுமிராண்டி கம்யூனீஸ்டுகளை மக்கள் புரிந்து கொண்டுவிட்டது நல்லது…

  • ஒருவன் தன் சுயநலத்திற்காக இன்னொருவனை கொலைசெய்வதும் கொலைதான்,

   தன்மகளை கெடுக்கவந்தவனை கொலைசெய்வதும் கொலைதான், இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு…

   இதை புரிந்துக்கொள்ள கம்யூனிஸ்டாக இருக்க வேண்டியதில்லை…

  • //ராஜிவ் கொலைவழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தூக்கில் போடக்கூடாது என்று சொம்பு தூக்கிய இவர்கள் தற்பொழுது கொலையை கொண்டாடுகிறார்கள்//

   இப்படிப்பட்ட கொலையாளிகள்தான் ” புதிய ஜனநாயகத்திறக்கு ” உங்களை அலைத்துசெல்ல உள்ளார்கள்.இப்போதே இந்த புதிய ஜனநாயகத்தை தெறிந்து கொண்டீர்கள். குற்ற வாளிகளை சட்டத்திகு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். அதை விடுத்து விருப்பத்திகு யாரை வேண்டுமானாலும் யாரும் கொள்ளலாம். என்ன ஜனநாயகம் பாருங்கள்.

   இந்திய ஜனநாயகத்தை அழிக்க பார்க்கிறார்கள்!!!!! பொது மக்களே உஷார்!!!!!!!!

   • பதானி டோலா வழக்கில் சட்டம்தான் தன் கடமையை மேன்மக்களுக்காக ஆற்றிய பிறகு மக்கள் மன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆம் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகம், பிற்போக்கு வாதிகளுக்கு சர்வாதிகாரம். உங்களது போலி ஜனநாயகத்தில் சில மேன்மக்களுக்கு மாத்திரம் ஜனநாயகம், மக்களுக்கோ ரண்பீர் சேனாவின் தண்டனை.

  • சோழ மகராசா,

   மண்டையில மயிரு இல்லாமல் இருக்கலாம் .. மூளை இல்லாம இருக்ககூடாது ராசா …

   ராஜீவ் காந்தி அழித்தொழிக்கப்பட வேண்டியவன். அவனை சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி வகையறா போட்டுத் தள்ளியது. அதற்கு பலி ஆடாக 3 அப்பாவிகளை தூக்கு மேடையில் நிறுத்தி வைத்திருப்பதை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கிறார்கள்.

   அதே போல், ப்ராமேஸ்வர் சிங் என்ற கொலைவெறி நாய் அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டு வீசப்பட வேண்டியவன். அவனைக் கொன்ற வீரர்களை கம்யூனிஸ்ட்டுகள் பாராட்டுகிறார்கள் ..

   உனக்கு என்னப்பா பிரச்சனை ?.. போய் தஞ்சாவூர் சரஸ்வதி மகால்ல உக்காந்து அந்தப்புர ஆட்டம் பாத்து இரசிக்காம இங்க வந்து அரசியல் பேசிட்டு இருக்க ?..

   • ராஜீவ் காந்திய கொன்றது நாங்க தான்னு LTTE பகிரங்கம ஒத்துகிட்டு பல நாள் ஆகுது.

    இன்னும் இந்த உள்ளூர் வெட்டி பய எல்லாம் பழி போடா தயாரா இருக்காங்க.

    அப்படி இவுங்க எல்லாம் நிரபராதின்ன அணைக்கே போராட்டம் பண்ணி இருக்கணும்,

    இப்போ எல்லாம் முடிஞ்சா பின்னாடி அக்குள கைய வுட்டு அலிபாபா தங்கம் கெடைக்குமான்னு தேடிகிட்டு இருக்காங்க.

    • அது ஒரு துன்பியல் நிகழ்வுன்னுதான் சொன்னார். பகிரங்கமா ஒத்துகிட்டதாயெல்லாம் ஒரு செய்தியும் இல்ல. இடுக்குல கைய விட்டா ஈயந்தான் கிடைக்கும்.

     • http://www.youtube.com/watch?v=GLV0dl9WwA8&feature=ரேலடேத்

      இந்த videova நல்ல பாருங்க. KP, என்ன சொல்றாருன்னு கேளுங்க.

      இத விட பகிரங்கமஆ என்ன சொல்ல முடியும்.

      அதான் புலின்னு பேரு வேசிகிட்டச்சு , அமாம் பொட்டோம்ன்னு சொல்ல வேண்டியதுதானே.

      அப்படி சொல்லிட்ட வீரபாண்டியன் வெட்டி கிழிஞ்சிருமே.

      • KP புலி கிடையாது. அவர் கிலி யாகி வருசமாவுது. இதெல்லாம் ஒரு துப்பு.

        • நீ ஓபனா மூஞ்சில கரிய பூசிக்க. நீ தலைகீழ நின்னாலும் புலி செஞ்சதுக்கு ஆதாரம் கிடிக்காது. வேணுமின்னா சு.சாமி, ச.சாமிய லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டு.

         • அதான் செஞ்சதுக்குன்னு நீங்களே சொல்லிடீங்களே . தப்பு செய்யாதவனுக்கு தான் கோவம் வரும், செஞ்ச தப்ப மறைக்கிறவன் சிரிசிகிட்டு தான் இருப்பான்.

          ஆனா ஒண்ணு, இவளவு நஷ்டம் வந்த பிறகும் ஈழ தமிழன் ரத்தத்துல குளிர் காயுற உங்களுக்கு தான் என்ன ஒரு கொடிய மனசு. செ.

          • மிஸ்டேக்க புடிச்சிகிட்ட, இருக்கட்டும் அது “செஞ்சாங்கன்றதுக்கு” என திருத்தி படி

 7. வினவுக்கு ஒரு வேண்டுகோள்..

  தமிழில் வரும் மறுமொழிகள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவியுங்கள். தமிழ் தெரிந்தும், அதில் எழுத மாட்டேன் என்பது ஒரு திமிர்த்தனம் இல்லையா?

  • ஆங்கிலப் பெயரோடு வருபவர்களை அனுமதிக்கலாமா? :):)

   • ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொண்டு தமிழர்களாய் இருப்பவர்களும் உண்டு; தமிழில் பெயர் வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களாய் இருப்பவர்களும் உண்டு.

 8. @Balapuli

  ________ இல்ல புலின்னாலும் வாய்க்கு மட்டும் கொறச்சல் இல்ல

  திருத்த வேண்டியது யார எத ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க